வசம்-22 (Final)

by ஸ்ரீ
16 comments 1.4K views
A+A-
Reset

இரவின் நிசப்தம் அழகிய இசையாகிப் போனது காதலர்களுக்கு. படகில் அகத்தியன் படுத்திருக்க அவனது வெற்று மார்பில் தலை சாய்த்து விரல் கோர்த்திருந்தாள் நாச்சியார்.

அவ்வளவு பேச்சுக்கள் அகத்தியன் இதுவரை யார் பேசியும் இவ்வளவு நேரம் கேட்டிருக்க மட்டான் நிச்சயமாய். ஆனால் இப்போது கேட்பதற்கான காரணம் பேசுவது அவனின் உயிர்.

ஆம் இங்கு வந்த சில மணி நேரங்களில் அவனின் மொத்தமும் நாச்சியார் என்றாகிப் போனாள். அதற்கு காரணமும் அவள் தான்.

ஆரம்பத்தில் தள்ளி நின்றவளும் நேற்று வரை கூட தயங்கி பயந்தவளும் இன்று அவனை விட்டு அரை அடி கூட நகர்ந்திருக்கவில்லை.

அத்தனை பேச்சுக்களும் அவனது இறுகிய பிடிக்குள் இருந்து கொண்டு தான். இடையிடையே அவனது வன்மையான முத்தங்களும் அழுத்தங்களும் கூட பெண்ணவளால் சுகமாய் தாங்கிக் கொள்ளப் பட்டது.

உதட்டில் எரிச்சல் அடங்க எவ்வளவு நாட்கள் தேவைப்படுமோ தெரியவில்லை. இருந்தும் தன்னவனை விலக்க மனதில்லை அவளுக்கு.

உலகின் மிகப் பாதுகாப்பான இடம் அவன் தான் என்பது தான் அவளின் முழு நம்பிக்கை.

உலகிற்கு அடங்காதவனாய் இருப்பவனின் மென்மை பக்கங்கள் அவளிடம் அவளுக்காக மட்டுமே வெளிப்படுவதன் அழகு அவனை பேராண்மை உடையவனாய் காட்டியது அவளுக்கு.

பொதுவாகவே எதிலாவது சிக்கித் தொலைந்து அழுது கரைந்து வந்த பின்னான வாழ்க்கை என்பது அற்புதமானதாய் இருக்கும் அல்லவா!

நாச்சியார் அதைத் தான் அனுபவிக்கத் தொடங்கியிருந்தாள். அத்தனை பேரும் அவளை அப்படிப்பட்டவள் இப்படிபட்டவள் என்று குறை கூறி தள்ளி வைத்த போது எப்படியிருந்தாலும் அவள் எனக்கானவள் என்று நின்ற கணவனை தன் குற்றவுணர்ச்சி மறைந்த பின் இன்னுமின்னும் பிடிக்க ஆரம்பித்திருந்தது.

“சுண்டைக்கா.. கரைக்குத் திரும்பிரலாம் டி.. உன்னை ரொம்ப இம்சை பண்றேன்..”

“பரவால்ல இருக்கலாம்..”, என்றவள் இன்னுமாய் அவனோடு ஒன்றிக் கொண்டாள்.

“நானுமே இப்படி ஒரு வாழ்க்கையை நினைக்கல டி..”,என்றவன் அவளது உச்சந்தலையில் முத்தம் வைத்தான்.

“ஒண்ணு சொல்லுவீங்களா?”

“என்ன?”

“எல்லாம் தெரிஞ்சும் எப்படி கட்டிகிட்டீங்க?”

“…”

“இல்ல பழைய எண்ணம் எதுவும் எனக்கு இப்போ சுத்தமா இல்ல.. ஏன் என்னை உங்களுக்குப் பிடிக்கும்னு தெரிஞ்சுக்கணும்..”, என்றவள் அவன் மீது தாடை பதித்த படி ஏறிட்டாள்.

“தெருக்கார பிள்ளையை சைட் அடிக்காத யோக்கியன் எவானாவது இருப்பானா ஊர்ல?”, என்றதில் சிரித்தாள் நாச்சியார்.

“அப்படி தான் எனக்கு நீ.. சலிக்காம சைட் அடிச்சுருக்கேன். ஆனா நீ குனிஞ்ச தலை நிமிர கூட மாட்ட.. உன் ப்ரெண்டுங்க இரண்டு பேர் உன்னைப் பார்க்க வரும்போதெல்லாம் என்னைப் பார்த்துட்டா போடுற சீனு இருக்கே..”

“அப்போ எல்லாரையும் பாத்துருக்கீங்க?”

“பொம்பள பிள்ளைங்களே சைட் அடிக்கும் போது எனக்கு என்ன டி?”, என்றதில் அவனை அடித்தாள்.

“அவங்களைக் கவனிச்சதெல்லாம் இல்ல. இந்த பிள்ளைக எல்லாம் பாக்குது இவ என்னைக்காவது நம்மளைப் பார்க்குறாளா பாருனு தோணும்.”

“..”

“நீ வந்த பிறவு உன் அய்யா அடிச்ச கூத்தெல்லாம் என் காதுக்கு வந்தது. யோசிச்சு பார்த்தா நமக்கு பிடிச்ச பிள்ளை ஏன் எங்கேயோ போய் கஸ்டபடணும்னு நினைச்சு வந்து பொண்ணு கேட்டுட்டேன்.”

“ஆனா உன்னால இந்த வாழ்க்கையை எவ்வளவு சீக்கிரம் ஏத்துக்க முடியும்னு தான் எனக்கு ஒரே யோசனை. உன்னை சாதாரணமாக்குறதுக்கு உண்மையில் நான் ஒரு மெனக்கெடலும் பண்ணல..”

“..”

“அப்படியிருந்தே நீ என்னோட ஒட்டிக்கிட்டது எனக்கு ரொம்ப ஆச்சரியம் தான் டி.”

“இதுக்கு அப்பறம் இதைக் கேட்கவே மாட்டேன். இப்போ மட்டும் பதில் சொல்றீங்களா?”

“என்ன கேளு பாப்போம்?”

“இதே மாதிரி எப்பவும் என்னைப் பார்த்துப்பீங்களா?”

“இனி வாழறதுக்கு இருக்குற ஒரே காரணம் எனக்கு உன்னைப் பார்த்துக்குறது மட்டும் தான். போதுமா?”, என்றதில் மொத்தமாய் கணவனிடம் சரணடைந்திருந்தாள் நாச்சியார்.

காலை சூரிய உதயத்தைப் பார்த்து விட்டு கரைக்குத் திரும்பியவர்கள் வீட்டிற்கு வந்த போது மனம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது.

“என்ன நேரமாவுதுல? பொறுமையா கூட்டிட்டு வர்ற.. காலேஜுக்கு போ வேணாமா அவ..”

“இன்னைக்கு அவ லீவ் தான் மா. நீயும் பொறுமையாவே வேலையை பாரு. ரொம்ப தூக்கம் வருது.”, என்றவன் மனைவியோடு மாடிக்கு வந்திருந்தான்.

ஒருவருக்கு மற்றவரின் தேவை அதிகமாகவே இருக்க அகத்தியனின் வன்மையில் மொத்தமாய் தன்னை தொலைத்துப் போனாள் நாச்சியார்.

உடலெங்கும் காதல் காயங்கள் மகுடங்களாய் வீற்றிருக்க மன்னவன் செய்த மாயங்களில் கிறங்கிப் போனாள் மெல்லிடையாள்.

“சின்ன பிள்ளைனு இரக்கமே இல்ல..”, என்றவள் சிரிக்காமல் கூற,

“அந்த சின்னப் பிள்ளை ராத்திரியெல்லாம் பேசின பேச்சோட பலன் தான் இது.”

“நீங்க தான பேசு பேசுனு சொன்னீங்க..”

“ஆமா அங்கே பேச மட்டும் தான முடியும் அதான் சொன்னேன்.”, என்றவன் உதடு மடித்து சிரிப்பை அடக்கினான்.

“இனி என்னை பேசச் சொல்லுங்க… அப்பறம் இருக்கு..”

“பேசாம இருந்துருவியா டி நீ..”, என்றவன் அழுத்தமாய் இடுப்பில் கிள்ளி வைத்தான்.

உடலெல்லாம் அப்படி ஒரு சோர்வு நாச்சியாருக்கு இருந்தும் கணவனை விட்டு விழி நகர்த்தாதவளாய் அவனது கை வளைவிலேயே தன்னை இறுக்கிக் கொண்டாள்.

மதிய நேரத்தில் தான் நாச்சியார் கண் விழித்திருக்க அகத்தியன் அப்போதும் நல்ல உறக்கத்தில் இருந்தான்.

குளித்து உடை மாற்றி கீழே சென்ற நேரம் மேகலை உறங்கிக் கொண்டிருக்க சத்தமில்லாமல் தானே தட்டில் உணவை வைத்து சமையலறையிலேயே அமர்ந்து உண்ண ஆரம்பித்தாள்.

சில நொடிகளில் குரல் கொடுத்த படி மேகலை உள்ளே எட்டிப் பார்த்தார்.

“தூங்கிட்டு இருந்தீங்களே அத்த.. எழுப்பிட்டனோ?”

“அதெல்லாம் இல்ல. என்னை கூப்பிட மாட்டியா நீ.. இப்படி தனியா சாப்பிட்டு கிடக்க..”, என்றபடி அவளருகில் அமர்ந்தார்.

“ராத்திரி போட்ல கூட்டிட்டு போனாங்க அத்த.. ரொம்ப நல்லாயிருந்தது.”

“ஆத்தீ! நீங்க தனியாவா போனீங்க.. இந்த பய இருக்கானே.”

“இல்ல அத்த அவங்க ப்ரெண்ட் ஒருத்தங்க தான் கூட்டிட்டு போனாங்க..”

“நல்ல பிள்ளைக.. இந்தா இன்னும் கொஞ்சம் வைச்சுக்கோ..”

“ரொம்ப பசி..”, என்றவள் அவர் வைத்த உணவையும் உண்ண ஆரம்பிக்க மேகலை மருமகளைத் தான் மனநிறைவோடு பார்த்திருந்தார்.

“என்ன அத்த அப்படி பாக்குறீங்க?”

“என்னவோ டி நீ வந்த பிறவு மனசு ரொம்ப நிம்மதியா இருக்கு. வீட்டுக்கு பொம்பளை பிள்ளை தனி அழகு தான்.

உன்னைய மாதிரியே பேத்தியை பெத்து குடு நான் வளர்த்து கொடுக்கேன்..”, என்றதில் புன்னகைத்தாள் நாச்சியார்.

அடுத்த ஒரு மாதத்தில் தனது இளங்கலையை வெற்றிகரமாய் முடித்திருந்தவள் கையோடு முதுகலைக்கும் சேர்ந்திருந்தாள்.

மகளைப் பார்க்க வந்த போது வள்ளி இதெல்லாம் எதற்கு ஒழுங்காக பிள்ளையைப் பெற்று வீட்டைக் கவனி என்று கூற மருமகனின் பார்வையில் தன்னால் பேச்சை நிறுத்திக் கொள்ள வேண்டியதாகிப் போனது.

அதே கல்லூரியில் தான் முதுகலையும் சேர்ந்திருந்தாள். ஆனால் எவ்வித மன சங்கடங்களும் இன்றி கணவன் சிந்தை மொத்தத்தையும் நிறைத்த வண்ணம் ஒவ்வொரு நாளையும் கடந்தாள்.

முதுகலை சேர்ந்த இரண்டாம் மாதத்திலேயே நாச்சியார் கருவுற்றிருக்க விஷயம் தெரிந்த நொடி முதல், கணவனின் முதல் குழந்தையாகிப் போனாள்.

வாந்தி வந்தால் அழுகை மசக்கை படுத்தினால் அழுகை கால் வீங்கினால் அழுகை என அழுது சிணுங்கி கணவனைத் தன்னோடு வைத்துக் கொள்ள என்னென்ன உண்டோ அத்தனை அநியாயங்களையும் செய்தாள்.

ஒன்பதாம் மாதம் தான் வளைகாப்பு வேண்டும் என அடம் பிடித்தவளோ இவள் ஆனால் வள்ளியும் முருகனும் தங்களுக்குள் வறுத்தெடுத்தது என்னவோ அகத்தியனைத் தான்.

அப்படியல்லவா பேசி வைத்தான் அவன் மனைவிக்காக. மூன்றே மாதத்தில் தாய் வீட்டில் இருக்க மாட்டேன் என போனில் அழுது கரைந்தவளை யார் பேச்சையும் கேட்காது தன்னோடு அழைத்து வந்திருந்தான் அகத்தியன்.

நாச்சியாருக்கு கணவன் தான் அனைத்தும் எனில் அகத்தியனுக்கோ மனைவி தான் தாய் குழந்தை நண்பன் அனைத்துமாகி போயிருந்தாள்.

யாருமே அறிந்திடாத அகத்தியன் அவளது நாச்சியாரிடத்தில் மட்டும் வெளிப்படுவான். காலை கண் விழித்தது முதல் அவனுக்கான அனைத்தும் நாச்சியாரின் மூலம் தான் வரும்.

அகத்தியன் காபி குடித்து முடிக்கும் வரை அவனை விட்டு நகராமல் அமர்ந்திருப்பாள் நாச்சியார்.

எந்த வேலை எந்த நிலையாயினும் கணவனை கண்டு விட்டால் அடுத்த நொடி அவன் முன் சென்று நின்று விடுவாள்.

அவனது கோபம் அனைத்தையும் அவளது ஒற்றை அணைப்பு சரி செய்து விடும். அவனின் இந்த வாழ்க்கையே மனைவியவளுக்காக தான் என்பது தான் அவனின் ஒரே எண்ணம்.

அவன் தொலைத்ததாய் நினைத்த அன்பை அள்ளி அள்ளி கொடுக்கும் மனைவி தான் அவனின் உலகமே.

சில வருடங்களுக்குப் பிறகு,

“நாச்சி எவ்வளவு நேரம் உனக்காக காத்துக் கிடக்கணும்?”, என்று பேச்சியம்மாள் போனில் கத்திக் கொண்டிருக்க இங்கு நாச்சியாரோ கணவனின் கையில் சிக்கியிருந்த புடவையை வாங்கும் வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

“நீங்க கோவிலுக்கு போங்க பேச்சி நான் நேரா வந்துரேன்.”, என்றவள் வேகமாய் அழைப்பைத் துண்டித்து விட்டு கணவனிடம் கெஞ்சினாள்.

“ஏங்க நேரமாகுது. ப்ளீஸ்ங்க..”

“நானும் அதையே தான் சொல்றேன் சுண்டைக்கா.. நேரமாவுது வா சீக்கிரம்…”, என்றவன் நினைத்ததை சாதித்து அதன் பின்னே புடவையை கட்டி விட்டு மனைவியைக் கிளப்பியிருந்தான்.

“இரண்டு பிள்ளைக்கு அம்மா மாதிரியே இல்ல டி நீ..”, என்றவன் அவனது விருப்பமான மனைவியின் குட்டித் தொப்பையை கிள்ளி வைத்தான்.

“ஏற்கனவே பேச்சி சாமியாடுவா.. இன்னுமும் லேட் ஆனா அவ்வளவு தான். வாங்க போலாம்.”, என்ற நேரம் அவர்களின் மகனும் மகளும் பாட்டி மேகலையோடு தயாராய் நின்றிருந்தனர்.

“ப்பா.. புது ட்ரெஸ் எப்படியிருக்கு..”, என்று ஓடி வந்த மகளை கையில் தூக்கிச் சுற்றியவன் மகனின் கைப் பிடித்து காருக்கு நடந்தான்.

“ஆனாலும் புதுசா கல்யாணமான நினைப்புலேயே அலைங்க இரண்டு பேரும்..”, என்ற மேகலை மருமகளைத் திட்டினாலும்  அவளது முகம் வழித்து திருஷ்டி சுத்திக் கொண்டார்.

“என்னை ஏன் திட்டுறீங்க.. உங்க பிள்ளையை போய் கேளுங்க அத்த..”

“அவனையே நீ தான டி முந்தானையில முடிஞ்சு வைச்சுருக்க..”

“இப்படி தான் இந்த ஊரே நம்பிட்டு கிடக்கு.”

“உன் வீட்டு விசேசத்துக்கு நான் ஊருக்கு முன்ன கிளம்பி உட்காந்துருக்கேன். இதெல்லாம் எங்கேயாவது நடக்குமா?”, என்ற படி மேகலை குழந்தைகளோடு காரின் பின் பக்கம் ஏறிக் கொள்ள நாச்சியார் முன்னிருக்கையில் கணவனோடு அமர்ந்து கொண்டாள்.

பேச்சியம்மாளின் மகள் பெரியவளாகியிருக்க விசேசம் முடித்து இன்று குலதெய்வ கோவிலில் பொங்கல் வைப்பதாய் வள்ளி வேண்டியிருக்க அதற்கு தான் அனைவருமாய் கிளம்பியிருந்தனர்.

ஓரிடத்தில் காரை நிறுத்தி விட்டு அங்கிருந்து சற்று உள்ளே ஆற்றங்கரை அருகில் இருக்கும் கோவிலது. மேகலை பேரன் பேத்தியோடு முன்னே நடக்க நாச்சியார் கணவனோடு நடக்க ஆரம்பித்தாள்.

பாதை கல்லும் முரடுமாய் இருக்க அவள் அணிந்து வந்திருந்த ஹீல்ஸ் செருப்பு நடக்க விடாமல் கால் வலியைக் கொடுத்தது.

அதோடு இரு முறை இடறியும் விட அகத்தியன் அவளை நிறுத்தியிருந்தான்.

“வரும்போதே சொன்னேன் இந்த செருப்பை போடாதனு கேட்டியா? கழட்டு..”

“கால் சுடும்ங்க.. நான் சமாளிச்சுக்குறேன்..”

“நீ கிழிச்ச கழட்டு டி..”, என்றதில் நாச்சியார் செருப்பைக் கழட்ட அகத்தியன் தனது செருப்பை அவள் முன் நீட்டியிருந்தான்.

“ஐயோ வேண்டாம் உங்களுக்கு கால் சுடப் போவுது..”

“அதுக்கும் சேர்த்து ராத்திரி கவனிச்சு விட்டுரு..”

“ஐயே ச்ச.. கோவில்ல வைச்சு என்ன பேசுறீங்க..”

“இரண்டு பிள்ளையே வந்தாச்சு இன்னுமும் ஐயே நொய்யேனு.. வாடி மூடிகிட்டு..”, என்றவன் தனது இடது கையில் அவளது செருப்பை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

மருமகன் மட்டுமல்லாது எம் எல்ஏ விற்கான மரியாதையாய் அங்கிருந்தவர்கள் எல்லாம் அவனைக் கண்டதும் அருகில் வந்து வரவேற்க அவனோ சர்வ சாதாரணமாய் மனைவியின் செருப்பைக் கையில் வைத்த படி அனைவருக்கும் தலையசைத்து நகர்ந்தான்.

பேச்சியம்மாள் தங்கையை முறைக்க வேகமாய் செருப்பை வாங்கி ஓரமாய் போட்டு விட்டு அவனுக்கு கை கழுவ தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள் நாச்சியார்.

பொங்கல் வைத்து முடித்து அனைவருக்குமாய் உணவு பரிமாற ஆண்கள் அமர்ந்திருந்த வரிசையில் தன்னருகில் மனைவியையும் அமர்த்திக் கொண்டான் அகத்தியன்.

“மாப்பிள்ள நீங்க சாப்பிடுங்க.. அவ அப்பறம் சாப்பிடுவா..”

“உங்க மக தான.. பசியில் ஏற்கனவே அரை மயக்கத்தில் இருக்கா. நீங்க வைங்க..”, என்றதில் யாருக்கும் எதுவும் கூற முடியவில்லை.

அன்றிலிருந்து இன்று வரை அகத்தியன் மனைவியோடு உணவு உண்ணும் நேரங்களில் முதல் வாய் உணவு அவளுக்குத் தான் இருக்கும்.

உணவை முடித்து நாச்சியார் தாயோடும் தமக்கையோடும் அமர பேச்சியம்மாள் அவளிடம்,

“உன் பிள்ளைக கூட தானா சாப்பிடவும் நடக்கவும் பழகியாச்சு நீ என்ன டி இன்னும் கொஞ்சிட்டு கிடக்க..”

“அப்படியே பழக்கி விட்டாங்க பேச்சி..”

“உன் மாமியார் ஒண்ணும் சொல்றது இல்லையா டி?”

“அவங்க இன்னும் மோசம் மா..”, என்றவள் சிரித்த நேரம் மேகலை அவளருகில் வந்து தன் கையிலிருந்த பொட்டலத்தை நீட்டினார்.

“இந்தா டி சவ்வு மிட்டாய் கேப்பியே.. மொத்தமா தின்னு வைக்காத.”, என்று கொடுத்து விட்டு பெண்களைப் பார்த்து புன்னகைத்துச் சென்றார்.

“உன் புருசன் ஊருக்குள்ளே இருக்குறதுக்கு எப்படி இதெல்லாம் பண்ணுதாரோ?”, என்ற நேரம் முருகனும் வந்து அவர்களோடு அமர்ந்தார்.

“நீ அப்பா செல்லம்.. நான் என் புருசன் செல்லம். அதனால இதெல்லாம் பண்ணுதாங்க..”

“அப்பா எனக்கு இதெல்லாம் பண்ணி நீ பார்த்தியா?”

“ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி பேச்சி.. என் இருபது வயசில் இருந்து அவங்க தான் என்னை வளர்க்குறாங்க.

எனக்கு என்ன ட்ரெஸ் நல்லாயிருக்கும்னு கூட எனக்கு தெரியாது. அவங்க தான் வாங்கித் தருவாங்க.

எனக்கும் இப்படி இருந்தே பழகிப் போச்சு. அதை மாத்தனும் தோணலை. அவங்க மாத்தவும் நினைக்கலை.”

“இந்த அழகுல நீ என்னத்தனு தொழில் பண்ண போற?”, என்ற தந்தையைப் பார்த்து பதிலுக்கு புன்னகைத்து வைத்தாள்.

ஆம் அவள் எம்காம் முடித்த கையோடு அகத்தியன் கட்டாயமாய் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்று கூறிவிட அவன் சொன்னால் கடலில் கூட குதிக்கத் தயாராய் இருப்பவளுக்கு இதில் என்ன மாற்று கருத்து இருந்து விடப் போகிறது.

“நாச்சியார் எக்ஸ்போர்ட்ஸ்” கூடிய விரைவிலேயே ஆரம்பிக்க போகிறது. அதன் மொத்தமும் நாச்சியாரின் பொறுப்பு தான்.

பெயருக்கு அவளை வைத்து விட்டு அகத்தியன் பின் நிற்பதாய் அல்லாமல் மொத்தத்தையும் நீ தான் செய்யப் போகிறாய் என்று கூறியதோடு அதற்கான அத்தனையையும் அவளுக்கு கற்றுக் கொடுத்திருந்தான்.

ஊரும் உலகமும் சுற்றமும் அறிந்த அகத்தியன் இன்றும் மூர்க்கன் முரடன் தான் ஆனால் மனைவியவளுக்கு அகத்தியன் என்பவன் கடவுளை விடவும் உயர்ந்தவன்.

அவள் அழுதாலும் சிரித்தாலும் தவித்தாலும் கோபமாய் இருந்தாலும் தூங்கி எழுந்தாலும் உறங்கச் சென்றாலும் அத்தனைக்கும் தேவை அவள் கணவன் தான்.

பெற்றவனை விட ஒரு படி மேலாய் தன்னை பாதுகாத்து அன்பு செலுத்தி காதலித்து கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொள்பவன் அவளின் அகத்தியன்.

இப்போதும் கொஞ்சலெல்லாம் அவனுக்கு வராது அதே அதட்டல் பேச்சு தான். ஆனால் அதன் காதல், கொண்டவளுக்கு மட்டுமே புரியும்.

அன்றைய இரவும் மனைவியளை கொண்டாடித் தீர்ப்பதான கூடலை நிகழ்த்தியவனின் முகத்தைத் துடைத்து விட்டவளாய் தனது நெற்றியைச் சுட்டிக் காட்ட முகம் மலர அழுத்தமாய் இதழ் பதித்தான் அகத்தியன்.

“ஒருத்தி இதெல்லாம் எனக்கு பயம்னு ஒரு காலத்துல அழுதா டி..”, என்றவன் சிரிக்க அவனை அடித்தவள்,

“உண்மையாவே பயம் மட்டுமில்ல அசிங்கமா நினைச்சுருக்கேன் அதையும் சேர்த்து பிடிக்க வைச்சது நீங்க தான்..”, என்றவள் கணவனின் மார்பில் தலை சாய்த்துக் கொண்டாள்.

“காலையிலே என்னவோ ஒரே பேச்சு வார்த்தையா இருந்துதே என்னவாம் உங்க அக்காளுக்கு?”

“வேற என்ன எப்பவும் போல தான், என் பிள்ளைங்களே வளர்ந்துருச்சாம். என்னை என் புருசன் தான் பாத்துகிடுதாராம்.”

“அதுல அவுகளுக்கு எங்க வலிக்குதாம்?”

“அவ வாய் விட்டு கேட்டுட்டா மத்தவங்க கேட்கலை அவ்வளவு தான்..”, என்றவள் புன்னகைக்க அவளது தலையை கோதிய வண்ணம்,

“அந்தளவு புருசன் பாத்துகிடுதானா உன்னை?”

“ம்ம்.. கத்த மட்டாரு திட்ட மாட்டாரு.. கெட்ட வார்த்தை பேச மாட்டாரு.. எனக்காகவே குடிக்க மாட்டாரு என்னை குட்டி பாப்பா மாதிரி பாத்துகிடுவாரு.

மொத்ததுல புருசன் மட்டும் போதும் வேற எதுவுமே வேணாம்.”, என்றவளை மொத்தமாய் ன் வசம் ஆக்கிரமித்துக் கொண்டான் அவளின் அன்புக் கணவன்.

எத்தனை உயரம் பறந்தாலும் தாங்கிப் பிடிக்க கணவன் இருக்கும் தைரியத்தில் மேலும் மேலும் உயரப் பறக்கிறாள். கீழே விழும் நிலை வந்தாலும் அதற்குள் கணவனின் கரம் அவளைத் தாங்கிப் பிடிக்க நீண்டிருக்கும் என்ற பெரும் நம்பிக்கையோடு அவன் வசம் தன்னை மொத்தமாய் ஒப்படைத்து விட்டிருந்தாள் நாச்சியார்.

மனிதப் பிறப்பில் தவறுகள் இயற்கை

அது தரும் பாடங்களை ஏற்று

வாழ்க்கையின் அடுத்த கட்டம்

நகர “வா என் வசம்” என்றழைக்கும்

ஓர் உறவு மட்டுமே அனைவரும் வேண்டுவது.

அந்த ஒரு உறவு வானத்தையே வசப்படுத்திக்

கொடுக்கும் நிச்சயமாய்

************முற்றும்***********

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

16 comments

suganyavel August 20, 2026 - 3:59 pm

Wow super💕 story💕

😍😍

ஸ்ரீ August 20, 2026 - 4:00 pm

Thank you ka..😍😍😍

Kavi Natarajan August 20, 2026 - 4:10 pm

Super story sri ma💞💞💞💞💞💞💞💞💞

😍😍

ஸ்ரீ August 20, 2026 - 4:26 pm

Thank you ka..😍😍

MalarMurugan August 20, 2026 - 4:56 pm

நாச்சியார் அகத்தியன் காதல் நம்பிக்கை எல்லாம் அழகு 😍😍😘😘😘
அவனோட அன்பு மொத்தமும் அவளுக்கானது 😍😍😍🤗🤗🤗🤗
அவள் எப்பவும் அவன் வசம் தான் 😍😍
மேகலை நல்ல மாமியார் 🤗🤗🤗🤗

😍😍

ஸ்ரீ August 20, 2026 - 4:58 pm

Thank you ma..😍😍

Fathima.ar August 20, 2026 - 5:06 pm

Morattu hero ku oru sambavam illa..
State level player ku oru match illa
.
Feel good story kaaga ivlo soft aah irunthirukka koodathu..

Nice novel

Keep it up

😍😍

ஸ்ரீ August 20, 2026 - 5:47 pm

Vetti bandha kaatama vitruvom nu than ka.. thank you..😍😍

Superb story 👏 sis.

Raji Vijay August 20, 2026 - 6:26 pm

Agathiyan and meghalai rendu perum thaan semma. 🥰🥰

😍😍

ஸ்ரீ August 20, 2026 - 6:33 pm

Thank you sis..😍😍

Kiruthika M August 20, 2026 - 6:50 pm

Akka biggest fan of your writing ❤️ kindle la book padichitu rmba naal aprm thedi site kandupudichitan 😭💖Nachiyar and agathiyan feel good pair story super 😍

😍😍

ஸ்ரீ August 20, 2026 - 7:03 pm

Aww thank you so much ma..😍😍😍

SME August 20, 2026 - 8:02 pm

ஶ்ரீ மா அகத்தியன் மாதிரி புருஷன் அமையுறதெல்லாம் வரம் ❤️❤️❤️❤️எப்பொழுதும் சொல்றதுதான் அருமையான கதை மா 💞💞💞. வாழ்த்துக்கள் டா 💞💕💕💞

😍😍

ஸ்ரீ August 20, 2026 - 8:06 pm

Akka thank you so much…😍😍😍

srichitra August 20, 2026 - 10:45 pm

Super story Sri ma. அகத்தியன் மற்றும் மேகலை மாதிரி இருப்பவர் கள் அரிது. இந்த கதையில் இவர்கள் தான் மேன்மையான வர்கள்.. வாழ்த்துக்கள் மா.

Mathy August 22, 2026 - 9:32 am

அழகான நிறைவான பீல் குட் ஸ்டோரி 💝💝💝💝💝💝

அகத்தியன் நாச்சியார் 🥰🥰🥰
அகி நாச்சியார் மேல வச்ச நம்பிக்கையும் காதலும் தான் அவளோட எல்லா கஷ்டத்துல இருந்தும் வெளிய கொண்டு வந்து அவளை உயர்த்தி இருக்கு…. ❤️❤️❤️
அகத்திக்கு அவனோட எல்லாமா நாச்சியாரோட காதல் 💜💜💜

மேகலை யாருக்கும் கிடைக்காத அருமையான மாமியார் 😍😍😍😍
முருகன் வள்ளி அவங்க நம்பிக்கையை ஒரு தடவை உடைச்சதால பொண்ணுக்கு தேவையான நேரத்துல நம்பிக்கை வைக்க முடியல… அவங்கள சொல்லியும் குற்றமில்லை….
கடைசில புரிஞ்சுக்கிட்டாங்க….

நாச்சியை குழந்தையா தாங்குறதுக்கு புருஷனும் மாமியாரும் இருக்க கடைசி வரை இப்படியே இருக்கட்டும் ❣️❣️❣️

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode