83
வீட்டிற்கு வந்தவனை ஆளாளுக்கு பிடித்து உலுக்க அதற்குமேல் பொறுக்கமாட்டாமல் வாய் திறந்தான்..
“ஹே எல்லாரும் கொஞ்சம் வாய மூடுங்க..அடுத்தவன மாட்டி விடுறதுல அப்படி ஒரு சந்தோஷம்..ம்ம்ம் இப்போ என்ன கல்யாணம் தான பண்ணிக்குறேன்..
சம்மந்தப்பட்டவள்ட்ட கேட்டுருக்கேன்..ஓ.கே சொன்னா பாக்கலாம்” என்று கூற அனைவரும் மொத்தமாய் வாயடைத்து நின்றனர்..
“அடப்பாவி ஏன்டா விரைப்பாவே திரிஞ்சுட்டு இருக்கியேனு பாத்தா இவ்ளோ வேலை பண்ணிருக்க??
அநியாயமா உனக்கு போய் சப்போர்ட் பண்ணி பேசினேனேடா..”என ஹரிஷ் தலையில் அடித்து கொண்டான்..
“தம்பி பாக்குறப்போலா மிரட்டிட்டே இருக்கீங்கனு பாத்தா இது எப்போ நடந்தது??எங்ககிட்ட சொல்லிருக்கலாம்ல??”
“அண்ணி இப்போதான் அவகிட்டயே சொல்லிட்டு வரேன்..ரொம்ப நாளா நினைச்ச விஷயம்லா இல்ல அண்ணி..
பட் கல்யாணபேச்சு எடுத்தாலே ஏனோ அவ மட்டும் தான் எனக்கு செட் ஆவானு தோணுச்சு..
மத்தபடி இன்னைக்கு அவள பாத்த அப்பறம்தான் முடிவு பண்ணேன்..
நாம எல்லாரும் ஜாலியா பேசி சிரிச்சு இருக்கும்போது அவ மட்டும் தன் இழப்பை நினைச்சு வருத்தபட்டு இருக்குறத பாத்தப்போ ரொம்ப ஒரு மாதிரி ஆய்டுச்சு..
கிட்டதட்ட ஷாலினி நிலைமைல தான் அவளும் இருக்கா..
அதுக்காக பாவப்பட்டு இரக்கப்பட்டுலா கல்யாணம் பண்ணல..அவ இழந்த சந்தோஷத்தை திரும்ப குடுக்கனும்னு தோணுது..
அதான் கல்யாணம் பண்ணிக்குறியாநு கேட்டுருக்கேன்..பட் அவ முடியாதுனு சொன்னாலும் நோ ப்ராப்ளம்..
எப்பவுமே ஒரு ப்ரெண்ட்டா அவ கூட இருப்பேன்..பாக்கலாம் என்ன சொல்றானு” என மென்னகைக்க..
அனைவருக்குமே அவன் பேச்சு நிறைவாய் இருந்தது..நிச்சயம் இவர்கள் திருமணபந்தத்தில் இணைந்தால் ஒருவருக்கொருவர் துணையாய் வாழ்க்கை அழகாய் அமையும் என்று தோன்றியது..
மறுநாள் காலையில் விழிக்கும் போதே மொபைலில் மேசெஜ் டோன் கேட்க யாராய் இருக்கும் என எண்ணியவாறே தமிழ் மொபைலை பார்க்க நிர்பயா தான் அனுப்பியிருந்தாள்..
“சார் நீங்க நேத்து என்கிட்ட பேசின விஷயமா உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் உங்களுக்கு எப்போ ப்ரீ டைமோ எனக்கு மெசேஜ் பண்ணுங்க நா வரேன்..”என்றிருந்தது..
அவளின் பதில் நிச்சயம் அவனுக்கு சாதகமானதாக இருக்கப் போவதில்லை என்று தோன்றியது..
சரி போய் பார்ப்போம் என்றெண்ணி இடத்தையும் நேரத்தையும் மெசேஜ் அனுப்பிவிட்டு தன் வேலையை கவனிக்கச் சென்றான்..
மதிய உணவு இடைவெளியில் இருவருக்கும் வர ஏதுவானதாய் ஒரு பார்க்கில் அவளுக்காக காத்திருந்தான்..
அடுத்த சில நொடிகளில் உள்ளே நுழைந்தவளின் முகம் தூக்கமின்மையாலும் அழுகையாலும் வீங்கியிருப்பது தெரிந்தது..
வந்தவள் அதே பெஞ்சின் மறு ஓரத்தில் அமர்ந்தாள்..
“ம்ம் இரண்டு மூணு லிட்டர் எக்ஸ்ட்ராவா அழுதுருப்ப போல??அவ்ளோ மோசமா நா எதுவும் பேசலனு நம்புறேன்..
சரி சொல்லு என்ன பேசனும்னு ப்ரிப்பேர் பண்ணிட்டு வந்துருக்க??”
அவளோ தான் பயந்ததை போலவே கேள்வி கேட்கிறானே எப்படி சமாளிப்பது என வேகமாய் சிந்தித்து கொண்டிருந்தாள்..
“இங்க பாருங்க சார்..சாரி..செல்வா நீங்க பேசினது உங்களுக்கு வேணா சாதாரண விஷயமா இருக்கலாம் பட் உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு விஷயத்தை எதிர்பாக்கல..
நீங்க ஒரு ஏசிபி அண்ட் நல்லவராவும் இருந்தீங்க அதனாலதான் உங்ககிட்ட ஹெல்ப் கேட்டு வந்தேன்..
அண்ட் ஷாலினி அக்கா ப்ரெண்ட்லியா பேசினாங்க மனசுக்கு ஆறுதலா இருந்தது அதனால தான் அவங்க நேத்து கூப்ட்டு என்னால மறுக்கமுடில..
பட் அவங்க இப்படி ஒரு எண்ணத்தோட தான் என்ன கூப்டுருக்காங்கனு தெரிஞ்சுருந்தா சத்தியமா வந்துருக்க மாட்டேன்..
நீங்களும் சராசரி ஆம்பள தான் ப்ரூவ் பண்ணிட்டீங்க ஒரு பொண்ணு சகஜமா பேச ஆரம்பிச்சா நீங்க என்ன சொன்னாலும் கேப்பானு நினைச்சுட்டீங்கள.” என்று அவள்போக்கில் பேச கைநீட்டி அவளை நிறுத்த மூச்சு வாங்க அவனை ஏறிட்டாள்..அவள்புறமாய் நகர்ந்து அமர்ந்தவன்..
“டயலாக்ஸ்லா ரொம்ப நல்லாயிருக்கு பட் அக்டிடிங் தான் ரொம்ப சொதப்பல்..
நெக்ஸ்ட் டைம் பெட்டரா ட்ரை பண்ணு ஓ.கே..எனி டைம் எதுவாயிருந்தாலும் கால் பண்ணு..
அஸ் அ ப்ரெண்ட் நா உனக்காக எப்பவுமே இருக்கேன் டேக் கேர்..ஒரு வேளை மனசு மாறினா சீக்கிரமா சொல்லிடு புரியுதா..பை..”என எழுந்து இரண்டடி நடந்தவன் திரும்பி,
“சொல்ல மறந்துட்டேன் செல்வா நல்லாயிருக்கு யாரும் இதுவர என்ன அப்படி கூப்டதில்ல..பை” என கண்ணடித்து சென்றான்..
அப்படியே தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள்..தன் இயலாமையை எண்ணி அவளுக்கே அவள்மேல் கோபம் வந்தது…
இதன்பின் எக்காரணம் கொண்டும் அவனை தொடர்பு கொள்ளகூடடாது என முடிவெடுத்தாள்..
அவன் சம்மந்தப்பட்ட அனைவரையும் தவிர்க்க முடிவெடுத்தாள்..அதன் விளைவு எப்படியிருக்கும் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை..
இப்படியாய் இருபது நாட்கள் கடந்திருக்க அத்தனை நாட்களில் இரண்டு முறை தமிழ் அவளை அழைத்திருந்தும் அவள் அழைப்பை ஏற்கவில்லை..
மெசேஜிற்கும் பதில் அனுப்பாமல் தவிர்த்தாள்..
விஷயமறிந்த ஷாலினி அவனும் வந்திருந்த நேரம் பார்த்து நிர்பயாவை அழைத்தாள்..
அழைப்பு நிற்கும் நேரம் அதை அட்டெண்ட் செய்தவள் இறுக்கமாய் ஷாலினி கேட்கும் அனைத்திற்கும் ஒருவரி பதிலில் கத்தரித்தவாறு பேசிக் கொண்டிருந்தாள்..
அவளுக்கு தெரியும் ஷாலினியை அவமதித்தால் அது தமிழின் காதுக்குச் சென்றால் அதற்குப்பின் தமிழ் அவளை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான் என்று..
ஆனால் அவள் பேசுவதை அவனே நேரிய் கேட்டுக் கொண்டிருப்பதை பாவம் அவள் அறியவில்லை..ஓர் எல்லைக்கு மேல் தன்னை கட்டுபடுத்த முடியாமல் கத்த ஆரம்பித்திருந்தாள்..
“ஏன் அக்கா எல்லாருமா சேர்ந்து என்னை இப்படி சித்திரவதை செய்றீங்க..
உங்களுக்கும் உங்க அண்ணாவுக்கும் நா என்ன பாவம் பண்ணேன்..கேக்க ஆளில்லனு தான என்னை இப்படி கஷ்டப்படுத்தி பாக்குறீங்க??
நா தான் எனக்கு ஒத்துவராதுனு அன்னைக்கே சொல்லிட்டனே விட்ற வேண்டியதுதான..
திரும்ப திரும்ப இப்டி பேசி என்னையும் என்ன பெத்தவங்க போன இடத்துக்கே போக வச்சுறாதீங்க உங்கள கெஞ்சி கேக்குறேன் என்ன விட்டுருங்க இதுக்கு மேல என்ன கான்டாக்ட் பண்ணணும்னு நினைச்சீங்க நா என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது..”என இணைப்பை துண்டித்துவிட்டாள்..
இங்கு அனைத்தையும் கேட்டது மட்டுமில்லாது ஷாலினியின் முகமும் வாடியிருப்பதை கண்டவன் கோபத்தின் உச்சியிலிருந்தான்…
வெறிப் பிடித்தவனாய் அவளைத் தேடிச் சென்றான்..
கோபத்தை அடக்க வழிதெரியாமல் அதை வண்டியின் வேகத்தில் காட்டினான்..
அவள் வீட்டிற்கு சென்றவன் காலிங் பெல் அடிக்க. அவளது ரூம் மேட் ஒருத்தி வந்து கதவை திறந்தாள்..
“நிர்பயா இருக்காளா??நா அவ ப்ரெண்ட்..”
“ஓ..ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க சார் வர சொல்றேன்..”
யாராய் இருக்கும் என வெளியே வந்தவள் அவன் முகத்திலிருந்த கோபத்தை கண்டு ஒரு நொடி அதிர்ந்து தான் போனாள்..
“உன்கூட பேசனும் வா என்கூட..”
“எங்க??….”
அவன் முறைப்பில் அதோடு பேச்சை நிறுத்தி விட்டு மற்றவர்களின் கவனம் தன் மேல் இருப்பதை உணர்ந்து அமைதியாய் சென்று தன் ஹேண்ட் பேக்கை எடுத்து கொண்டு அவனோடு சென்றாள்..
நேராயாய் தன் வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தி இறங்கி பதட்டமாய் அவனை பார்த்தவளை பொருட்படுத்தாது சென்று கதவை திறந்து அவளை உள்ளே இழுத்துச் சென்றான்..கதவை பூட்டி விட்டு திரும்பியவன்,
“ஏய் என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல..பாக்க ஊமைகொட்டான் மாதிரி இருந்துட்டு ஷாலுகிட்ட அந்த பேச்சு பேசுற??
என்ன பாத்தா என்ன பொறுக்கி மாதிரி தெரியுதா?சித்ரவதை பண்றேன் அது இதுனு சொல்ற??
கல்யாணம் பண்ண போறவங்களுக்கு முக்கியமா இருக்க வேண்டியது நம்பிக்கை தான்..
அது உனக்கு என்மேல நிறையவே இருக்குனு எனக்கு தெரியும் அதனாலதான் கல்யாணப் பேச்சையே எடுத்தேன்..
நீ என்னனா ரொம்ப ஓவரா பேசிட்டு இருக்க..ஷாலினி பத்தி என்ன தெரியும் உனக்கு..”
“எங்க ஊர் பக்கத்துல சின்ன கிராமம் அவங்களோடது..ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பம் இவ ஒரே பொண்ணு..
படிப்பு செலவுக்காக கந்துவட்டி வாங்கி அவளை படிக்க வச்சாங்க..கந்துவட்டிகாரங்களோட கொடுமைய பத்தி உனக்கு என்ன தெரியும்???
பணம் பணம்னு கடைசி சொட்டு இரத்தம் வரை உறிஞ்சி எடுக்குற அட்டை பூச்சிங்க..
அதுவும் வயசு பொண்ணு இருக்குற வீட்ல யோசிச்சு பாரு..அப்படி அவனுஙக கொடுமை தாங்காம ஊரைவிட்டு கிளம்ப கடன்காரங்க கண்ல பட்டுட்டாங்க..
அப்படி ஓடி வரும்போது ஒரு லாரில அடிபட்டு அவ கண்ணு முன்னாடியே ரெண்டு பேரும்..
அப்பவும் அந்த நாய்ங்க சும்மா இல்ல கண்ல பட்ட இவளை தூக்கிட்டு போய் நாசம் பண்ண பாத்தாங்க நானும் ஹரிஷும் அப்போதான் லீவ்க்காக ஊருக்கு போய்ருந்தப்போ ஏதோ சத்தம் கேக்குதேனு பாக்கப் போனா நிலைமையை உணர்ந்து அவனுங்கள விரட்டி இவள கூப்டு விஷயம் தெரிஞ்சு அவங்க அப்பா அம்மாவுக்கு கடைசி காரியத்தை பண்ணி…
அவ துடிச்ச துடிப்பு இன்னமும் எங்களுக்கு நியாபகம் இருக்கு..ஆனா எல்லாமே ஒரே வாரம்தான்..
அதுக்கப்பறம் அவளே வந்து அவ விட்ட படிப்ப கன்டிநியூ பண்ண ஹெல்ப் பண்ண முடியுமாநு கேட்டா..
படிச்சு நல்ல நிலைமைக்கு வந்து நிச்சயம் என்ன மாதிரி கஷ்டபடுறவங்களுக்கு எதாவது பண்ணணும்னு சொன்னா..
அதே வெறியோட படிச்சா..இப்போ ஐ ஏ எஸ் பாஸ் பண்ணி போஸ்டிங்காக வெயிட் பண்ணிட்டு இருக்கா..
அவகிட்ட நீ அந்த பேச்சு பேசுற..கஷ்டம் வாழ்க்கைல எல்லாருக்கும்தான் வரும் அதுக்காக அதை மட்டுமே தான் கட்டி அழுவேன்னா யாருமே வாழமுடியாது அத புரிஞ்சுக்கோ…
இத பாரு இப்போ சொல்றேன் கல்யாணம்னு பண்ணா அது உன்னை மட்டும் தான் எத்தனை வருஷம் ஆனாலும் சரி..
நீ உன்னை தப்பானவளா காட்டினா உன்னை விட்டுருவேனு தான இப்படி பண்ண இனி நீயே நினைச்சாலும் நா உன்னை விட்டு போறதாயில்ல..
ஆனத பாத்துக்கோ என கத்திவிட்டு சோபாவில் விழுந்தமர்ந்தவன் கண்மூடி இருக்க,
கண்களில் வழிந்த நீரை துடைத்தவாறே அவள் பேச ஆரம்பித்தாள்..
“அவங்க எல்லாத்தையும் எதிர்த்து வந்ததுக்கு காரணம் நீங்களும் உங்க ப்ரெண்டும் தான்..
சரியான நேரத்துல அவங்களுக்கு போய் உதவி பண்ணீங்க..ஆனா எனக்கு அப்படி யாரையுமே கடவுள் அனுப்பலையே..ஏன் செல்வா..”
நிதானதமாய் கண் திறந்தவன், ” என்ன சொல்ற??”என ஊடுருலாய் ஒரு பார்வையை அவள்மேல் செலுத்த, விரக்தி புன்னகையோடு சென்று அவனுக்கு எதிர்புரமாய் சுவரில் சாய்ந்தவாறு காலைகளை சுருட்டி அமர்ந்தாள்..
ஷாலினி அக்கா மாதிரி நா கஷ்டப்பட்ட பேக்கவுண்ட்ல இருந்துலா வரல..அப்பா சின்னதா ப்ஸினஸ் பண்ணிட்டு இருந்தாரு..
அப்பாவும் அம்மாவும் காதலிச்சு கல்யாணம் பண்ணவங்க அதனால ஒருத்தருக் கொருத்தர் ரொம்பவே சப்போர்ட்டிவ்வாவும் அன்பாவும் இருப்பாங்க..
பான் வித் சில்வர் ஸ்பூன் இல்லனாலும் என்ன அவங்க ராணி மாதிரி தான் பாத்துகிட்டாங்க..
கஷ்டம்னா என்னனு தெரியாமதான் வளர்த்தாங்க..வாழ்க்கை ரொம்பவே அழகா போய்ட்டுருந்த நேரம்..
12வது முடிச்சு காலேஜ் சேரணும்னு சொன்னப்போ மும்பைலயே ஒன் ஆவ் த பெஸ்ட் காலேஜ்ல என்ன சேர்த்தாரு எங்கப்பா..
பை நேச்சரே நா கொஞ்சம் சைலண்ட் தான் அதனாலேயே எனக்கு ப்ரெண்ட்ஸ் ரொம்ப கம்மி..
காலேஜ் புது இடம் அட்மாஸ்பியர் ரொம்பவே பயமாதான் இருந்தது..
இருந்தும் எதையும் வெளிக்காட்டிக்காம நல்லா படிச்சேன்..முதல் ரெண்டு வருஷமும் நாதான் யூனிவர்சிட்டி பர்ஸ்ட்..
யாரும் அவங்களா வந்து பேசினா பேசுவேன் அதுகூட பொண்ணுங்ககிட்ட தான்..
இந்தளவு இருந்த நா பேசுற ஒரே ஆண் அப்பாவோட ப்ஸினஸ் பார்ட்னர் அங்கிளோட பையன்..
அவன் என்ன விட ஒரு வயசு பெரியவன்..என்னோட 16 வயசுல இருந்து அவங்க பேமிலிய எங்களுக்கு தெரியும்..
அப்படியிருந்தும் அவன்கிட்ட ரொம்ப க்ளோஸா பேசினதெல்லாம் இல்ல..
அவன் பேசினா திரும்ப பதில் பேசுவேன் அவ்ளோ தான் அப்படியிருக்கும் போது நா காலேஜ் முடிச்ச டைம்ல அவனோட அப்பா அவனுக்கும் எனக்கும் கல்யாணம் பண்ற விஷயமா அப்பாகிட்ட பேசினாரு..
அப்பா முடியவே முடியாது ரொம்ப சின்ன வயசு இப்போவே கல்யாணம் பண்ண வேண்டாம் அவ படிக்கட்டும்னு எவ்வளவோ சொன்னாரு..
கடைசில என்னென்னவோ பேசி அப்பாவ அரைமனசா சம்மதிக்க வச்சாங்க என்கிட்ட இதபத்தி கேட்டப்போ நா ஒத்துக்கவேயில்ல..
பயங்கமா அழுதேன்..அதை தாங்க மாட்டாம இதுக்கு மேல இதபத்தி பேசாதீங்கனு அப்பா அவங்ககிட்ட சொல்லிட்டாரு…
அதுக்குமேல அங்கிளும் அந்த பேச்சை விட்டாரு..ப்ரச்சனை முடிஞ்சுதுனு நினைச்சா உண்மையிலே ப்ரச்சனை அப்போதான் ஆரம்பிச்சது.. காலேஜ் முடிச்சு எம்பிஏ சேர்ந்தேன்..
அப்படி நா க்ளாஸ்க்கு வர அப்போ போறப்போலா என்ன பாத்து அவன் பேச ஆரம்பிச்சான்..நா ஒத்துக்கலனவுடனே மிரட்டுனான்..
நா இதை எதையும் வீட்ல சொல்லல அப்பா கஷ்டபட கூடாதேனு விட்டுடேன் அதான் நா பண்ண பெரிய தப்பு…
அப்படி ஒரு நாள் சாய்ந்திரம் வீட்டுக்கு வர்ற வழில திடீர்னு ஒரு கார் என்னை வழிமறிச்சு உள்ளே இழுத்து போட்டு கிளம்பிடுச்சு..
உள்ள அங்கிள் பையனும் இன்னும் இரண்டு பேரும் முழு போதைல இருந்தாங்க.. அழுதேன் கெஞ்சினேன் எதுவுமே காதுல ஏர்ற நிலைமைல அவங்க இல்ல.. ஆனா அவன் சொன்ன விஷயம்..
“கல்யாணம் பண்ணி மொத்த பிஸினஸும் எனக்கு வரும்னு பாத்தேன்..நீ அதுக்கு ஒத்துவரல இப்போ உன் லைவ்வே போக போகுது இதுக்குமேல கல்யாணம்ங்கிற பேச்சுக்கே இடமில்லனு..”எனும் போதே வெடித்து அழுதாள்..
கண்களின் கண்ணீர் கன்னத்தை நினைக்க ஓடிச்சென்று அவன் தலைப்பற்றியிருந்தான் தமிழ்..
குறுக்கிய கால்களுக்கிடையில் தலைப் புதைத்து கதறியவளை தேற்ற வழியின்றி தவித்தான்.. தன் நினைவு தெரிந்து அவன் அழுதது இதுவே முதன்முறை..
பேச வார்த்தை வராமல் தன் கையழுத்ததிலேயே தன் அரவணைப்பை உணர்த்தினான்..
கொஞ்சம் கட்டுக்குள் வந்தவள் அவனை விட்டு எழுந்து ஜன்னலருகே சென்று எங்கோ வெறித்தபடி மீண்டும் தொடர்ந்தாள்..
“அதுதான் என் வாழ்க்கையோட கடைசி நாள்..இப்போ இருக்குறவ வெறும் நடைபிணம் தான்..
அவனுங்க பண்ண ஒரே நல்லது ஆத்திரத்தை தீத்துட்டோம்னு அப்படியே எங்கேயோ போட்டு போகமா என் வீட்டு வாசலயே என்ன தூக்கி போட்டு போனதுதான்..
அவன் ஏன் அப்படி பண்ணிணான்னு இப்போ வரவும் எனக்கு தெரியாது..
ஒருவேளை கடவுளுக்கு என்மேல கொஞ்சமா அப்போதான் இரக்கம் வந்துதோ என்னவோ..
அரைமயக்கத்துல உடம்பெல்லாம் ரணப்பட்டு கிழிஞ்ச பூவா கிடந்த என்னை பாத்து என் அப்பா அம்மா கதறினது இன்னமும் என் காதுக்குள்ள ஒலிச்சுட்டே தான் இருக்கு..
என்ன என்னனு கேட்க எதையும் சொல்ற நிலைமைல நா இல்ல..இருந்தாலும் இதை பத்தி பெத்தவங்ககிட்ட சொல்லிருக்க முடியுமா என்ன..
அப்பா ஓடிபோய் பக்கத்து தெருவுல இருந்த டாக்டர் ஆன்ட்டிய கூட்டிட்டு வந்தாரு.. விஷயம் தெரிஞ்சு ரெண்டு பேரும் பட்டபாடு உலகத்துல மிருகத்துக்கு கூட இந்த வேதனை வரக்கூடாது..
20 வருஷம் பாசமா வளர்த்து அவ எதிர்காலத்தை பத்தி ஆயிரம் கனவு கண்டு அவளுக்காகவவே தங்களோட லைவ்வ வாழ்ற பெத்தவங்களுக்கு எதுக்கு இந்த தண்டனை செல்வா??
பெண்ணோட அழுகைக்கு பேயும் இறங்கும்னு சொல்லுவாங்களே ஆனா என் கதறல் ஏன் அந்த பேய்ங்க காதுல விழல..அப்படி என்ன வெறி அப்படி என்ன குடி மயக்கம்..
ஒருத்தன் ஒரு பொண்ணு மேல எப்போ வலுகட்டாயமா கை வைக்குறானோ அப்போவே அவன் ஆம்பளைங்கிற தகுதிய இழந்துட்டான்.. ம்ம் நா இத சொல்லி மட்டும் எதுவும் மாற போகுதா என்ன..
அதுக்கப்பறம் ட்ரீட்மெண்ட் குடுத்து அந்த டாக்டர் ஆன்ட்டி அவங்க க்ளினிக்ல வச்சு பாத்துகிட்டாங்க.. தெரிஞ்சவங்கங்கிறதால விஷயம் வெளியே தெரியாம பாத்துகிட்டாங்க..
அப்பா பார்ட்னர்ட்ட போய் சண்டை போட அவரோ தன் புள்ளைய காப்பாத்துரதுக்குதான் குறியா இருந்தாரு..
பையன கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்குறேன்.. காதும் காதும் வச்சமாதிரி கல்யாணத்தை முடிச்சுரலாம்னு சொன்னாராம்..
அப்பாவால அடுத்தடுத்த கவலைய தாங்கிக்கவே முடில..பேசாம போலீஸ்ல சொல்லி அவனுக்கு தண்டனை கிடைக்க வைப்போம்னு தெரிஞ்ச போலீஸ் ஒருத்தர் மூலமா மேலிடத்துல பேச அவங்க யாரு என்ன பண்ணாங்க..
பொண்ணு இப்போ எங்கயிருக்கானு பத்திரிக்கைக்கு நியூஸ் குடுக்கதான் அலைஞ்சாங்க..
மனசு வெறுத்துப் போய் அப்பா என்னையும் அம்மாவையும் கூட்டிட்டு ஒரு கிராமத்துக்கு வந்துட்டாரு..எட்டு மாசம் வாழும்போதே நரகம்..
திடீர் திடீர்னு அலறுவேன் கதறுவேன் பாத்து பாத்து செத்து பொழைப்பாங்க ரெண்டு பேரும்..
அப்பா வீட்டோடேயே முடங்கி போனாரு..நடந்த அசிங்கத்தை மறக்கலாம்நு நினைக்ககூட முடிலை.. ஆம்பளைங்க மேல இருந்தே மரியாதையே போச்சு யாரை பாத்தாலும் பயம்..நடுங்கி ஓடுவேன்..
ஒரு கட்டத்துல அப்பா பக்கத்துல போகவே பயந்தேன்..பெத்த பொண்ணு தன்னேயே அந்நியமா பாக்குறாளேனு நொந்து போனார்..
அதுக்கு மேல அவரால வாழ முடியல..ஏன்னா நம்ம நாட்டுல பணபலமாமோ அதிகார பலமோ இருந்தா மட்டும்தான் எல்லாத்தையும் தூக்கி போடுற தைரியம் வரும்..
சாதாரண மிடில் க்ளாஸ் அப்பாகிட்ட அதெல்லாம் எதிர்பாக்கலாமா..விஷத்தை வாங்கிட்டு வந்தார்..
ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன்..இதோட அந்த அசிங்கத்தை மறந்துரலாம் நிம்மதியா போய்டலாம்னு நிம்மதியானேன்..
மூணு பேருமா சாப்பாட்டுல விஷம் கலந்து சாப்ட்டோம்..
நாங்கயிருந்தது சிட்டியா இருந்திருந்தா நாங்க செத்து நாத்தம் வந்தப்பறம் தான் என்னனே வந்து பாத்துருப்பாங்க..
கிராமமாச்சே அக்கம்பக்கத்துல இருக்குறவங்க கதவுதிறக்காம இருக்குறத பாத்து கதவ உடைச்சு உள்ளே வர மூணு பேரும் கிடந்த நிலைமையை பாத்து ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ண செக் பண்ணி அப்பாவும் அம்மாவும் இறந்துட்டதா கன்பார்ம் பண்ண நேரம்
மூச்சிழுத்து உயிருக்கு போராட ஆரம்பிச்சேன் நான்..ம்ம் சாகுறதுக்கு கூட அதிர்ஷடம் வேணும்னு அப்போதான் தெரிஞ்சுகிட்டேன்..
காப்பாத்தி அனாதையா என்ன தவிக்கவிட்டு தற்கொலைக்கு காரணம் என்ன ஏதுனு ஆராய்ச்சி பண்ணி ஒருவழி ஆகி வீடு வந்து சேர்ந்தேன்..
தனிமை அதவிட கொடுமையான விஷயம் எதுவும் இருக்குமானு தெரில..
பொண்ணுக்கு உயிரைவிட பெருசான கற்பு போனதை நினைச்சு அழறாதா அப்பா அம்மா ரெண்டு பேரையும் தொலைச்சுட்டு நிக்குறத நினைச்சு அழறதா தெரில..
ரொம்ப யோசிச்சேன்..அப்பா தன் ஊரைப்பத்தி சொல்லி நிறைய கேட்டுருக்கேன்..
தமிழ்நாட்டுக்கு வரலாம்னு முடிவுபண்ணேன்..எனக்காக அப்பா போட்டுருந்த சேவிங்க்ஸ்ல என் ட்ரீட்மெண்ட் போக பணம் கொஞ்சமிருந்தது..
அதை எடுத்துகிட்டு யார் உதவியும் இல்லாம யாருக்கும் தெரியாம இங்க வந்துட்டேன்..
என்ன பண்ண எங்க போகனு தெரியாம ரயில்வே ப்ளாட்பார்ம்ல உக்காந்திருந்தேன்..
என்ன பாத்த ஒரு சர்ச் சிஸ்டர் தான் அவங்களுக்கு என்ன தோணிச்சோ தெரில வந்து என்கிட்ட பேசினாங்க..
எதாவது உதவி வேணுமானு கேட்டாங்க அப்போதைக்கு தங்குறதுக்கு பாதுகாப்பா ஒரு இடம் கிடைச்சா போதும்னு நினைச்சேன்..
என்ன அந்த ஹாஸ்ட்டல சேர்த்து விட்டாங்க..அழுதழுது ஓஞ்சு போனேன்..எங்க வார்டனுக்கு தெரிஞ்சவங்க மால்ல கடை வச்சுருக்குறதா சொல்லி அங்கபோய் பாக்க சொன்னாங்க அப்போதான் நீங்க என்ன முதல் தடவை பாத்தது.எனக்கு அங்க வேலை அந்தளவு பிடிக்கல..
லிப்ட்ல உங்கள பாத்தப்போ கொஞ்சம் பயந்துட்டேன்..
அதுவும் நீங்களா வேற பேசினப்போ எப்போடா வெளில வருவோம்நு ஆய்டுச்சு..
அடுத்து அன்னைக்கு நைட் அந்த பஸ் ஸ்டாப்ல பாத்ததும் அப்படிதான்..
ஒரு வேலைக்காக போயிருந்தேன்..அந்த ஆளுக்கு ஒரு 50 வயசு இருக்கும் என்னைப்பத்தி எல்லா டீடெய்லையும் கேட்டுட்டு தனியா இருக்கேன்னு தெரிஞ்சவுடனே எதுக்கும்மா வேலைக்கு போய் கஷ்டபடுற என்கூட வந்துரியானு கேட்டான்..
பொண்ணுங்கனாலே வெறும் சதையா மட்டும் தான் பாதி பேருக்கு தெரியுது..
முக்கால் வாசி ஆம்பளைங்க தங்களுக்கு ஏத்த சுச்சுவேஷன்காக தான் காத்திருக்காங்க.
இந்த மாதிரி யாராவாது சிக்கினா அதோட அவங்க லைப் முடிஞ்சுது..
நா எல்லாரையும் தப்பா சொல்லல.. ஆனா தப்பு பண்றாவங்க எல்லாருமே சூழ்நிலைக்காக காத்திருந்துதான் தப்பு பண்றாங்க..
அங்க நடந்ததை நினைச்சு நொந்துபோய் உக்காந்திருந்தப்போ தான் நீங்க வந்து பேசினீங்க அவ்ளோ நேரம் அடக்கின அழுகை வெளியே வந்தது..
நீங்களும் தப்பானவர் தானோனு பயந்து விலகிப் போனேன்..
ஆனா போலீஸ்னு தெரிஞ்சப்போ கொஞ்சம் நிம்மதி ஆச்சு..
அதுவும் அலட்டிக்காம ஆட்டோ வரசொல்லி பத்திரமா விட சொன்னப்போ முதல்தடவையா நல்லவரை தப்பா நினைச்சுட்டோமேனு பீல் பண்ணேன்..
அதுக்கப்பறம் நெட்ல உங்களைப்பத்தி சர்ச் பண்ணி உங்க நம்பரை எடுத்து உங்களை கான்டாக்ட் பண்ண முடிவு பண்ணேன்..
வேலையில்லாம என்னால ரொம்ப நாள் இருக்க முடியாது..
அதே நேரம் எல்லார்கிட்டேயும் போய் என்னைப்பத்தி விளக்கவும் பிடிக்கல..சோ உங்களமாதிரி ஒருத்தர் மூலமா கிடைக்குற வேலைல பாதுகாப்பும் இருக்கும்னு நம்பிதான் உங்கள நேர்ல பாக்க வந்தேன்..
அதுக்கப்பறம் நாம மீட் பண்ணது எல்லாமே ஒரு கோ இன்ஸிடன்ஸ்தான்..என பெருமூச்சுவிட்டவள்,
இப்போ சொல்லுங்க நா எப்படி கல்யாணத்துக்கு ஒத்துக்க முடியும் அதுவும் இந்தமாதிரியான கூட்டு குடும்பத்துல நா..
எனக்கு அந்த தகுதி கிடையாது..இப்போகூட நா சாகுறவர எனக்குள்ளேயே போட்டு புதைக்க நினைச்ச விஷயத்தையெல்லாம் உங்ககிட்ட ஏன் சொல்றேன்னு எனக்கு தெரில..
ஆனா எனக்காக எவ்வளவோ பண்ணிட்டீங்க..இதுக்கு மேலேயும் காரணத்தை சொல்லாம உங்கள அலையவிட எனக்கு விருப்பமில்ல..
ப்ளீஸ் செல்வா இந்த நொடியோட இப்படி ஒருத்தி உங்க லைப்ல வந்ததையே மறந்திருங்க..
இவ்ளோ நல்ல மனுஷனான உங்களுக்கு தகுதியானவ நா கிடையாது..சாரி..நா வரேன்..
ஷாலினி அக்காகிட்ட நா சாரி சொன்னேன்னு சொல்லிடுங்க என்றவாறு வெளியே செல்பவளை தடுக்கக் கூட தோன்றாமல் சிலையென அமர்ந்திருந்தான் தமிழ்ச்செல்வன்..
அடுத்த இரண்டு நாட்களுக்கு நிர்பயாவிற்கு தமிழிடமிருந்து அழைப்போ மெசேஜோ எதுவும் வரவில்லை இதுதான் அவள் எதிர்பார்த்தது எனினும் ஏதோ ஓர் ஓரத்தில் மனம் அவனையே நாடியது..
அதுவரை அவன் ஒருமுறைகூட அவளிடம் பரிவாய் பேசியதில்லை எனினும் அவனின் அந்த கோபமும் மிரட்டலும்கூட ஒருவித அன்பின் வெளிப்பாடாய் இருப்பதாய் தோன்றும்..
ஏதேதோ எண்ணியவாறு ஆபிஸின் கணிணியை வெறித்துக் கொண்டிருந்தவள் தன் போனின் அழைப்பில் நினைவிற்கு வந்தாள்..
திரையில் ஒளிர்ந்த பெயரை பார்த்தவளுக்கு ஒரு நொடி இதயத்துடிப்பு காதருகில் கேட்பதாய் இருந்தது..
அழைப்பை ஏற்காமல் அப்படியே கையில் வைத்திருக்க அடுத்ததாய் மெசேஜ் நோட்டிபிகேஷன் வர எடுத்து படித்தாள்..”
“ஐ அம் வெய்டிங் ஔட் சைட் ..கம் டவுண்..”தமிழ்..
என்ன செய்வதென புரியாமல் பெர்மிஷன் சொல்லி கீழே வந்தவள் பேச வாயெடுக்க அதற்குள் அவனே,
“செம பசில இருக்கேன் இப்போ எதுவும் பேசாத ஏறு சீக்கிரம் “என பைக்கை ஸ்ட்டாட் செய்ய ஒன்றும் கூறமுடியாமல் அவனோடு சென்றாள்..
ஒ எம் ஆரில் ரிசார்ட்டோடடு கூடிய ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றவன் வேண்டியவற்றை ஆர்டர் செய்துவிட்டு அவளை பார்க்க கஷ்டப்பட்டு பயத்தை மறைத்து அவனை முறைத்தாள்.
“சத்தியமா செட் ஆகல..சரி சொல்லு ஆர்டர் பண்ணது போதுமா வேற எதுவும் சாப்டுறியா???”
“என்ன பாத்தா உங்களுக்கு எப்படி தெரியுது??நீங்க பாட்டுக்கு உங்க இஷ்டத்துக்கு எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க??கேக்க ஆள் இல்லனு தான..”
“ஏ போதும் ஒரே டயலாக் எவ்ளோ நாள்தான் சொல்லிட்டு இருப்ப??
இனி இந்த டயலாக் உனக்கு தேவையும் படாது ஏன்னா கேக்குறதுக்கு உன் புருஷன் நா இருக்கேன் புரிஞ்சுதா???”
அப்பட்டமான அதிர்ச்சி கண்ணில் நீராய் வெளி வர துடிக்க அதற்குள் ஆர்டர் செய்தவை வந்துவிட அவர்முன் பேச விரும்பாமல் அமைதியானாள்..
அவனோ வந்த உணவை தனக்கும் அவளுக்குமாய் தட்டில் போட்டு சாப்பிட ஆரம்பித்தான்..
சாப்டு பேசலாம் என்றவாறு அவள் உணார்ச்சியை கட்டுபடுத்த நேரம் கொடுத்தான்..பொறுமையாய் சாப்பிட்டு முடித்தவன் அவளிடம்,
“இப்போ சொல்லு கல்யாணத்தை எப்போ வச்சுக்கலாம்??நீ சொல்றத பொறுத்து நா வீட்ல பேசுறேன்..”
“நீங்க புரிஞ்சுதான் பேசுறீங்களா??என்னைபத்தி தெரிஞ்சும்.. முதல்ல இத உங்கவீட்ல சொன்னா எவ்ளோ கேவலமா நினைப்பாங்கனு உங்களுக்கு புரியுதா??”
ஒரு ஆழ்மூச்செடுத்தவன், ”இங்க பாரு என் பொண்டாட்டிய பத்தி எனக்கு தெரிஞ்சா போதும் உன் கடந்த காலத்தைபத்தி யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல அது என் அப்பா அம்மாவாவே இருந்தாலும்..
அது என் கடமையும் கூட அதைபத்தி நீ யோசிக்காத புரியுதா..
அண்ட் நீ என்ன நினைக்குறனு எனக்கு தெரியும் ரெண்டு நாளா நீ சொன்னதபத்தி யோசிச்சு இரக்கப்பட்டு நா இத சொல்றதா நினைக்குற அப்படிதான??
அக்சுவலா இரண்டு நாளா ஒரு டைட் வொர்க்ல மாட்டிகிட்டேன்.. நீ அன்னைக்கு கிளம்புறவர எனக்கு உன்னை சமாதானப்படுத்தகூட தெரியாம தான் நா இருந்தேன்..
ஒரு போலீஸா எத்தனையோ பேர் லைவ்ல நடந்தத பாத்திருந்தாலும் நம்மளோட இருக்குற ஒருத்தர்னு யோசிச்சு பாத்தா..
அதை ஏத்துக்க அந்த டைம் தேவைப்பட்டது உண்மைதான்.. ஆனாஅடுத்த ஒன் அவர்ல அந்த தாட்ஸ்ல இருந்து நா வெளில வந்துட்டேன்..
இரக்கப்பட்டோ தியாகம் பண்றதா நினைச்சோ நா இத பண்றதாயிருந்தா இப்போ நம்ம நாடு இருக்குற நிலைமைக்கு ஆயிரம் பொண்ணுங்ககிட்ட என்ன கல்யாணம் பண்ணிகுறீங்களாநு கேக்கனும்..
இது உன்மேல மட்டுமே இருக்குற ஒரு உணர்வு அதை வேற யார்கிட்டேயும் காட்ட முடியாது..
ஒரு வேளை ஒரு நாலு அஞ்சு வருஷம் நாம லவ் பண்ணிட்டு இருந்து அப்போ உனக்கு இப்படி ஒண்ணு நடந்திருந்தா..
உன்னை விட்டுட்டு போய்ர முடியுமா..நீ எனக்கானவனு முடிவு பண்ணப்பறம் உனக்கு என்னவானாலும் ஆதரவா இருக்க வேண்டியது நான்தான்..
அததான் இப்பவும் பண்றேன்..எனக்கு தெரிய வேண்டியது கல்யாண வேலைய ஆரம்பிக்குறதுக்கு உன்னோட சம்மதம் அவ்ளோதான்..”என கேள்வியாய் அவளை பார்க்க
நெருப்பில் நிற்பவளாய் மனதளவில் துடித்துக் கொண்டிருந்தாள்.. ”எல்லாம் சரி உங்களுக்கு என்னை பிடிச்சமாதிரி எனக்கும் உங்கள பிடிக்கனும் தான..
அதைப்பத்தி யோசிக்கவே இல்லையே நீங்க..”என குரல் நடுங்க கேட்டவளைப் பார்த்து சிரித்தவாறே,
தன் சேரின் நுனியில் அமர்ந்து டேபிளில் கை வைத்தவன், ”டோண்ட் பீ சைல்டிஷ்..என்னை பிடிக்காமயா இப்படி என்னோட வந்து உக்காந்து பேசிட்டு இருக்க??
சரி சொல்லு உனக்கு உண்மையாவே வேற யாராவது ஹெல்ப் பாண்ணிருந்தா இப்படி அவங்க சொல்றதெல்லாம் கேட்டுட்டு அவங்க கூட போவியா சொல்லு..
அந்த கம்ப்பர்டபிள் சோன் எல்லாருக்கும் எல்லார்கிட்டேயும் வராது நிரு..புரிஞ்சுக்கோ..
இப்போ உனக்கு ஒரு ப்ராமிஸ் பண்றேன் உன் கழுத்துல தாலி கட்ற அடுத்த செகண்ட் உன்னோட கடந்தகாலம்ங்கிற ஒண்ண அடியோடு தூக்கி போட்டுருவேன்..
இதனால பின்னாடி ப்ரச்சனை வரும்னோ உன்னை நா ஏமாத்திடுவேன்னோ 1% கூட உனக்கு பயம் வேண்டாம்..இனி நீ ஒரு அழகான குடும்பத்தோட குட்டி இளவரசி அவ்ளோதான்..
நம்ம வீட்ல எல்லாரும் குட்டி காவியாவ எப்படி பாக்குறாங்களோ அப்படிதான் உன்னையும் பாப்பாங்க..
வாழணும்ங்கிற ஏக்கம் எப்பவுமே உன் கண்ல இருக்கு அதை மறைக்க நினைச்சாலும் என்கிட்ட உன்னால மறைக்க முடியாது..
தைரியமா என் கைபிடிச்சு உனக்கு நீயே போட்டுருக்க சுவரை உடைச்சு வெளிய வா உனக்கான லைவ் இது இல்ல..
நீ பார்க்க வேண்டிய அழகான விஷயங்கள் வாழ்க்கைல நிறைய இருக்கு..”என அவள் கையை எடுத்து தனக்குள் வைத்து அழுத்த..
அத்தனை நேரம் கட்டுப்படுத்தி வைத்திருந்த அழுகை வெள்ளமாய் வெடித்து வெளியேறியது..
அதை எதிர்பார்த்திருந்தவன் அவள் கையை விடாது எழுந்து சென்று அவளருகில் இருந்த சேரில் அமர்ந்து தன் தோள் சாய்த்துக் கொண்டான்..
”ரிலாக்ஸ் நிரு..அம் ஆல்வேஸ் தேர் பார் யு..எவ்ளோ அழனுமோ அழுதுடு பாறத்தை குறைக்க கண்ணீர் மட்டும்தான் வழி..” என மென்மையாய் தலையை வருட சில நிமிடங்களில் சூழ்நிலை உணர்ந்தவள் அவனிடமிருந்து விலகி அமர்ந்தாள்..
“இதெல்லாம் ஒத்து வராது செல்வா வீணா ஆசையை வளர்த்து என்னையும் குழப்பாதீங்க..ப்ளீஸ் நா எங்கேயாவது போய்ட்றேன்..விட்டுருங்க..”
“உன்னை பாத்த இந்த ரெண்டு மாசத்துல ப்ரெண்ட்னு சொன்னப்பவே உனக்காக என்னால முடிஞ்ச அத்தனையும் பண்ணணும்னு நினைச்ச எனக்கு இப்போ பொண்டாட்டியா ஏத்துக்க போறப்போ எவ்ளோ செய்வேன்..
அப்படியெல்லாம் உன்னை எங்கேயும் விட முடியாது..இந்த ஜென்மத்துல உன்தலையெழுத்து என்னோடதான் இருக்கு இனி அதை எழுதினவனே நினைச்சாலும் மாத்தமுடியாது புரியுதா எப்போ நா வீட்ல பேசலாம்னு யோசிச்சு சொல்லு..
லூசுதனமா வேற எதாவது பண்ணலாம்னு நினைக்காத என்னைமீறி எதுவும் நடக்காது..வா போலாம்” என முன்னே செல்பவனை ஒன்றும் கூறாமுடியாமல் தவித்து நின்றாள்..
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
2 comments
Nice
Super💕