245
ஏனோ அவளின் அந்த புன்னகை அவனுக்கு நிம்மதி அளிப்பதாய் இருந்தது. எப்போதும் இருக்கும் சோகம் எனும் மேகம் மறைந்து முழு நிலவாய் அவள் பிரகாசிப்பதாய் தோன்றியது..
முதன் முதலாய் அவளை உற்று நோக்கினான்..மாநிறம் ஒல்லியான உடல்வாகு வட்டமான உருண்டை கண்கள்..
நிறம் கம்மியென்றாலும் லட்சணமான முகம் இப்படியாய் அவளருகில் வந்தவன் சிந்தனை கலைந்து கண்ணாடியை கழற்றியவாறே அவளெதிரில் அமர்ந்தான்..
”எதுக்கு வர சொன்ன??”
“என்ன சாப்டுறீங்க? காபி சொல்லட்டுமா??”
என அவள் தயக்கமாய் கேட்க ஆமோதிப்பாய் தலையசைத்தான்.. சர்வர் அங்கிருந்து நகர்ந்தவுடன் அவளே ஆரம்பித்தாள்..
“என் பேரு நிர்பயா..பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பை தான்..அம்மாவுக்கு நேட்டிவ் மும்பை அப்பா இங்க தஞ்சாவூர் பக்கம் தான் அதனால தமிழ் தெரியும்..
நா இத்தனை வருஷத்துல மும்பை தவர எங்கேயும் போனதில்ல..
இதுதான் பர்ஸ்ட் டைம் அதனாலேயே ஒரு மாதிரியான இன்செக்யூரிட்டி பீலீங்..அப்பா அம்மா சிக்ஸ் மந்த்ஸ் முன்னாடி தான்…” எனும்போதே அவள் குரல் கம்ம..
“சரி அழாத..கன்ட்ரோல் யுவர் செல்ப் இனிதான் நீ தைரியமா இருக்கனும் தெரியாத ஊர்ல வந்துட்டு இப்படி பயத்தை அப்பட்டமா முகத்துல காமிச்சுட்டு இருந்தா தப்பு பண்றவங்களுக்கு அதுவே வசதியா போய்டும்..
ஆமா இப்போ இதெல்லாம் எதுக்கு என்கிட்ட சொல்ற அன்னைக்கு உன்ன திட்டினதுக்காகவா??”
அதற்குள் காபி வர அதை அவனருகில் நகர்த்தியவாறே,
“இல்ல சார் அதனால லா இல்ல..அன்னைக்கு உங்க ப்ரெண்ட்டோட வைப் ஷாலினி அவங்ககிட்ட நா நடந்துகிட்டது ரொம்ப தப்புதான் ரொம்ப கில்ட்டியா பீல் பண்ணேன்.
அதுவும் ஒரு ப்ரெக்ணெண்ட் லேடிகிட்ட கண்டிப்பா அப்படி கஷ்டபடுத்துற மாதிரி நடந்துருக்க கூடாது அதான் உங்ககிட்டேயும் சாரி கேட்டுட்டு அவங்ககிட்டேயும் பேச முடியுமானு கேக்கலாம்னு..”
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம்..அவ தப்பா எடுத்துக்க மாட்டா..”, என்றவாறு காபியை பருகியவன்,
“ஆமா ஹாஸ்ட்டல் மாத்திட்டியா??”
“ஆமா சார் ரெண்டு நாள் ஆகுது அது வீடு தான் நாலுபேரா ஷரிங்ல தங்கிருக்கோம்..”
“ம்ம் சரி கிளம்புறேன் எதுவும் ஹெல்ப் வேணும்னா என் நம்பர் இருக்குல கால் பண்ணு.. சரியா??”, ஆமோதிப்பாய் தலையசைத்தவள் அவனோடு வெளியே வர ,
“நீ எப்படி போகப் போற??”
“ஆட்டோ இல்ல பஸ்ல தான் சார்..”
“சரி ரீச் ஆய்ட்டு டெக்ஸ்ட் பண்ணு..பை”, என்றவன் புயலாய் வண்டியை கிளப்ப கண்ணிமைக்கும் நொடியில் பார்வையிலிருந்து மறைந்தான்..
அவளுடனான அன்றைய சந்திப்பு மனதுக்கு இனிதாய் தோன்றியது தமிழ்ச் செல்வனுக்கு..
அவன் வீட்டிற்கு வந்து ஒரு மணி நேரமாகியும் அவளிடமிருந்து அழைப்பு வராமலிருக்க அவனே அவளை அழைத்தான்.. முழு அழைப்பு சென்று மறுபுறம் அமைதியாக மறுபடியும் அழைத்தான்..
“என்ன போலீஸ் ஆளோட பேசாம ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாதா இப்போதான வீட்டுக்கு போன?”
“ஏய் யார் நீ இந்த போன் உன்கிட்ட எப்படி வந்தது??”
“போனா போனோட ஓனரே என்கிட்ட தான் இருக்கா..பேசுறியா??”
“சார்..இவங்க யாருனே தெரில என்னென்னவோ சொல்றாங்க..”என்பதற்குள் அவன் குரல் மறுபடியும் கேட்டது.
“என்ன ஏசிபி..முகமெல்லாம் சிவக்குது போல..”
“ஏய் யார் நீ கைல சிக்குன என்ன ஆவனு தெரியாது யார்ரா நீ??தைரியமான ஆம்பளைனா என் முன்னாடி வந்து நில்லு அதவிட்டு பொண்ணு மேல கை வைக்குற??”
“அட அட போலீஸ்க்கு என்னா லவ்வு..ம்ம்”
“டேய் அவ என் ஆளுனு எவன்டா சொன்னது.. முதல்ல நீ எங்கயிருக்கனு சொல்லு அப்பறம் பேசுறேன்..”
“வா வா அதுக்கு தான நானும் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்..இடத்தை சொல்றேன் ஒழுங்கு மரியாதையா தனியா வந்து சேரு..
இல்லனா என்ன நடக்கும்னு தான் உனக்கே தெரியுமே நீதான் புத்திசாலியாச்சே..”
தன் பிஸ்டலை எடுத்தவன் ஹரிஷிற்கு சுருக்கமாய் விஷயத்தை மெசேஜ் அனுப்பிவிட்டு கிளம்பினான்..
அவள் நலன் குறித்த கவலை லேசாய் எட்டிப்பார்க்க அதை தள்ளி வைத்து விட்டு அந்த இடத்திற்கு விரைந்தான்..
பூந்தமல்லி தாண்டிய ஹைவே பகுதியிலிருந்த பழைய குடோன் அது.. உள்ளே செல்ல ஐந்து தடியன்களுக்கு நடுவே கைகளும் வாயும் கட்டப்பட்ட நிலையில் அவள் அமர்ந்திருந்தாள்..
“யார் ஆள்டா நீங்களாம்??லூசுதனமா எனக்கு சம்மந்தமேயில்லாதவள தூக்கிட்டு வந்து என்னை வெறுப்பேத்துறீங்க??”
“ஏ போலீஸு நல்லா நடிக்குறய்யா.. சம்மந்தமில்லாமயா இப்படி வந்து நிக்குற” என சிரிக்க..
பதிலுக்கு சிரித்தவன், ”டேய் கூறுகெட்ட குக்கரு போலீஸுக்கே போன் பண்ணி பொண்ணை கடத்திருக்கனு சொன்னா வராம வீட்ல போய் இழுத்து மூடி தூங்கவா செய்வான்..
அதுலயும் நா ஹீரோயிசம் காட்ட சான்ஸ் கிடைக்கும் போது வராம இருக்க முடியுமா சொல்லு..”
“ஏய் என்ன நக்கலா??”
“இல்ல விக்கல் அட ச்சை மொக்க ஜோக்லா போட வைச்சுகிட்டு மொதல்ல எந்த கேங் நீங்கலெலாம் அத சொல்லு..”
“ம்ம் பப்ளிக்கா துடிக்க துடிக்க போட்டீங்களே குணா அந்த கேங் தான்..”
“அடப்பாவி செத்தவனுக்காகவா என் உசுர எடுக்குறீங்க ச்ச நா கூட புது கேங் லீடர்னு சந்தோஷப்பட்டேனே..
சரி சொல்லு உங்க அண்ணணுக்கு மேல தனியா இருக்க முடிலயாமா அதான் உங்களையும் கூப்டுறானா??”
எனும்போதே ஒருவன் பெரிய கத்தியை அவன்புறம் நீட்ட வளைத்து பிடித்து அவனை வயிற்றில் அடிக்க சுருண்டு விழுந்தான்..
அடுத்த பத்து பதினைந்து நிமிடமும் களேபரமாய் இருக்க ஹரிஷ் அந்த ஏரியா போலீஸோடு உள்ளே நுழைந்தான்..
அனைவரையும் போலீஸிடம் ஒப்படைத்து வந்தவன் அவளை கைப்பற்றி தூக்கி கட்டை அவிழ்த்து விட அத்தனை நேரம் வாய் அடைக்கப் பட்டிருந்ததில் தொண்டை வருண்டு இருமியவள் தேங்…க்..ஸ் சா..ர்…
“உன் ராசிப்படி என்கிட்ட நீ தேங்க்ஸ் மட்டும் தான் சொல்லனும் போல “, என நகர சின்னதாய் புன்னகைத்தவள் ஹரிஷிடம்,
”சாரி சார் அன்னைக்கு உங்க மிஸஸ் மனச கஷ்டப்படுத்திட்டேன்..”
“இட்ஸ் ஓ.கே நிர்பயா..முதல்ல இங்கிருந்து கிளம்பலாம் வாங்க”என்றவன்,
” தமிழ் நீ இவங்கள கூட்டிட்டு வீட்டுக்கு வந்துரு நா இங்க ஸ்டேஷன்ல பேசிட்டு வந்துரேன்” என்று நகர்ந்தான்..
தமிழ் பைக்கில் அமர்ந்து அவளை பார்க்க தயக்கமாய் அவனை ஏறிட்டவளிடம்,
“வந்து உக்காரு இங்கயிருந்து ஆட்டோ பிடிக்கனும்னா அரைமணி நேரம் ஆகும்..” என அக்சிலரேட்டரை உயர்த்த அமைதியாய் ஏறி ஓரமாய் அமர்ந்து கொண்டாள்..
நேராய் ஹரிஷ் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தியவன் உள்ள வா என்றவாறு முன்னே சென்றான்..
சோபாவில் சென்று இரு கைகளையும் விரித்தவாறு அவன் கண்மூடி அமர அவளுக்கு என்ன செய்யவதென தெரியாமல் கையை பிசைந்து நிற்க,
”வாங்க வாங்க நிர்பயா..உக்காருங்க”,என்றவாறு ஷாலினி ஹாலிற்கு வந்தாள்..
”என்ன அண்ணா வந்தவங்கள உக்கார சொல்லாம நீங்க ஹாய்யா உக்காந்துருக்கீங்க??”
“ஹே அவளுக்காக பைட்லா பண்ணிருக்கேன் ஷாலு என்ன இப்படி சொல்லிட்ட..”
“ம்ம் அது சரி நீங்க வாங்க இப்படி உக்காருங்க “என கைப்பிடித்து அமர்த்தியவளின் கையை பிடித்துக் கொண்டாள்..
”அன்னைக்கு நடந்தத நினைச்சு ரொம்ப கஷ்டமாய்டுச்சு ப்ளீஸ் என்ன தப்பா எடுத்துக்காதீங்க..”
“ச்ச அதெல்லாம் எப்போவோ மறந்துட்டேன் ஆமா அந்த ரௌடிஸ்ட்ட எப்படி மாட்னீங்க??”
“அதுவா நாங்க பேசிட்டு இருந்தத பாத்துருப்பானுங்க போல என்னை இவரோட…. இவருக்கு தெரிஞ்ச பொண்ணுனு நினைச்சு காபி ஷாப் வாசல்ல வச்சு கார்ல இழுத்துட்டு போய்ட்டாங்க..”
ஷாலினி குறும்பாய் தமிழைப் பார்க்க,
”அம்மா தாயே நீ வேற இப்போ உன்கிட்ட சொன்ன அதே கதையை என்கிட்டயும் சொல்றதுக்கு வர சொன்னா வேற ஒண்ணுமில்ல.. அமைதியா போய் சாப்ட எதாவது எடுத்துட்டு வா..”
“ம்ம் நம்பிட்டோம் நம்பிட்டோம் என்றவாறு ஜுஸ் எடுத்துவரச் சென்றாள்..
“சார் நா கிளம்புறேன் ஆல்ரெடி ரொம்ப லேட் ஆய்டுச்சு ரூம் மேட்ஸ் தேடுவாங்க..”
“பைவ் மினிட்ஸ்ல நானே கொண்டு போய் விடுறேன் டோண்ட் வொரி போ அந்த ரூம்ல போய் ரெப்ரெஷ் பண்ணிட்டு வா கிளம்பலாம் “என்றவனை நன்றி கலந்த பார்வை பார்த்து உள்ளே சென்றாள்..
அடுத்த பத்து நிமிடத்தில் அவளோடு அவன் கிளம்ப ஷாலினி அவளின் மொபைல் எண்ணை வாங்கி கொண்டாள்..
லீவ் இருக்குறப்போ இங்க வந்துருங்க நிர்பயா.. ரூம்ல தனியா இருக்காதீங்க இந்தாங்க நைட்க்கு டிபன் இதுல வச்சுருக்கேன்..
“அய்யோ எதுக்கு இதெல்லாம்..பரவால்ல..”
ஒண்ணும் ப்ரச்சனையில்ல எடுத்துட்டு போங்க..நெக்ஸ்ட் டைம் வரச்சே பாக்ஸ் எடுத்துட்டு வாங்க..இதுக்காகவாவது வரணும்ல..என்றவாறு வழியனுப்பி வைத்தாள்..
அவள் கூறிய வீட்டின் முன் இறக்கியவன்,” ஆமா உன்கிட்ட ஒண்ணு கேக்கனும்னு நினைச்சேன்..
காலைல அப்படி ஒரு இடத்துல அவனுங்களோட உன்னை பாத்தப்போ உன் முகத்துல ஏதோ பதட்டம் தான் இருந்துதே தவர கொஞ்சமும் பயமில்லையே எப்படி??”
வெற்றுப் புன்னகையை சிந்தியவள் ,”எப்படியும் நீங்க வந்துருவீங்கனு தெரியும்.. அதனால தான் பயமில்லாம இருந்துருக்கும்னு நினைக்குறேன்..
சரி நா வரேன்” என அவள் உள்ளே செல்ல அதுவரை காத்திருந்து பின்னர் அங்கிருந்து பைக்கை கிளப்பினான்..
அன்றைய நிகழ்வை வைத்தே ஷாலினி தமிழை கலாய்த்துக் கொண்டிருந்தாள்..
“அண்ணா எனக்கென்னவோ அந்த நிர்பயா தான் உங்களுக்காக பொறந்தவனு தோணுது..நீங்க என்ன நினைக்குறீங்க??”
“நீ வேற அவளுக்கு என்ன பாத்தாலே கை காலெல்லாம் உதறுது இதுல நீ சொல்றது ஒண்ணு தான் குறைச்சல்..”
“ஓஓ அப்போ உங்களுக்கு ஓ.கே அவங்களுக்காக தான் யோசிக்குறீங்களா??”
“ஷாலு..வர வர நீ ரொம்ப யோசிக்குற..”
“டேய் அவ சொல்றது கரெக்ட் தான்..உனக்கு அவ மேல ஒரு சாப்ட் கார்னர் இருக்குனு அப்பட்டமாவே தெரியுது.. இல்லனா நேத்து அவ கூப்டதுக்காக ஓடி போய் நின்னுருப்பியா??”
“டேய் அதெல்லாம் ஒண்ணுமில்ல.. முதன்முதலா அவளை பாத்தப்போவே ஒரு மாதிரி பயந்துபோய் பாக்க பாவமா இருந்தா அது மைண்ட்ல பதிஞ்சுடுச்சு..
மே பி அதனால அவளுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு நினைச்சேன்..அவ நல்ல பொண்ணு தான் பட் அவளுக்கேத்த நல்ல பையன் நா கிடையாது டா..
இதுக்கு மேல அவள பாக்கவே கூடாதுமனு எப்போவோ முடிவு பண்ணிட்டேன்..”
அவன் நினைத்தது மறுநாளே பொய் ஆகப் போவது அவன் அறிந்திறாதது.. அடுத்த நாள் காலை வழக்கம்போல் அலுவலகத்தில் வேலையில் மூழ்கியிருந்தவனை கான்ஸ்டபிளின் குரல் கலைத்தது..
“சார் உங்கள தேடி ஒருத்தங்க வந்துருகாங்க..”
“சரி வர சொல்லுங்க..”
சிஸ்டத்திலிருந்து விழியகற்றாமலேயே காலடி சத்தத்தை உணர்ந்தவன்,
”உனக்குனு எதாவது ப்ராப்ளம் தேடி வருதா என்ன?? இப்போ என்ன ஹெல்ப் வேணும்???”
“சார்..”
குரலின் மாற்றத்தை உணர்ந்து திரும்பியவன் வேறொரு பெண் நிற்பதை கண்டு மனதிற்குள் தன்னை தானே நொந்து கொண்டான்..
”சாரி சொல்லுங்க என்ன வேணும்??”
அந்த பெண் வந்த விவரத்தை கேட்டு அவளுக்கு வேண்டியதை கூறிவிட்டு அமர்ந்தவனுக்கு இதழோர சிரிப்பு எழுந்தது..
ஷாலினி கூறியது மனதினூள் தோன்ற அதுதான் உண்மையோ என்று தோன்றியது…
மொபைலை கையில் எடுத்தவன் அவள் எண்ணை எடுத்து அதையே பார்த்திருந்தான்..
அழைக்கவா வேண்டாமா என எண்ணிக் கொண்டிருக்கும் போதே அவன் அம்மாவின் அழைப்பு வர அட்டெண்ட் செய்து பேசினான்..
இரண்டு நாளில் அனைவரும் சென்னை வருவதாய் கூறினார்..அதன்பின் வந்த வேலைகளில் நிர்பயாவிற்கு அழைத்து பேசும் எண்ணத்தை மறந்தே போனான்..
அடுத்து வந்த தினங்களிலும் அவள்புறம் சென்ற எண்ணங்களை வலுகட்டாயமாக அடக்கினான்..
பெற்றோரின் வருகைக்குப் பின் அவர்களோடே பொழுது சரியாய் இருந்தது..
அண்ணன் மகளோடு விளையாடுவதும் அப்பா அண்ணணோடு கதை பேசுவதும் அம்மா அண்ணியோடு வம்பிழுப்பதுமாய் பொழுது கழிந்தது..
அடுத்து வந்த ஞாயிற்றுகிழமையில் அனைவருமாய் கோவிலுக்கு செல்ல முடிவெடுத்து வடபழனி முருகன் கோவிலுக்குச் சென்றனர்..
அனைவருமாய் உள்ளே நுழைய தமிழுக்கு கைப்பேசி அழைக்க பேசிவிட்டு வருவதாய் செய்கை காட்டி மறுபுறம் திரும்பி பேச ஆரம்பித்தான்..
பேசி முடித்து உள்ளே நுழைந்தவன் கண்களில் பட்டவளை நோக்கி கால்கள் தானாக செல்ல அருகில் சென்று பார்த்த போது கண்கலங்கி கண்ணீர் கன்னம் உரச கண்மூடி அமர்ந்திருந்தாள்..
“என்ன இன்னைக்கு முருகருக்கு அபிஷேகத்துக்கு தண்ணி இல்லனு சொன்னாங்களா??கண்ல இவ்ளோ ஸ்டாக் வச்சுருக்க??”
என்றவாறு கைக்கட்டி அவள் முன் நிற்க, குரல்கேட்டு சட்டென கண் திறந்தவள் வேகமாய் கண்களை துடைத்துவிட்டு எழுந்து நின்றாள்..
”சார் எப்படியிருக்கீங்க??”
“ம்ம் நல்லாயிருக்கேன்.. உன்னை பாத்தா நல்லாயிருக்குற மாதிரி தெரிலேயே என்னாச்சு??”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல சார்..சும்மா.சும்மா தான்..”
“முதல்ல சார்னு கூப்டுறத நிறுத்து.. கால் மீ தமிழ் ஆர் செல்வன் வாட் எவர்..”
அதற்கு அவள் பதில் கூறாமல் இருக்க அதற்குள் அவன் அண்ணி ராஜி அவனைத் தேடி வந்திருந்தாள்.. இருவரையும் சந்தேகமாய் அவள் பார்க்க தமிழ் முந்திக் கொண்டான்..
“அண்ணி இவ நிர்பயா தெரிஞ்ச பொண்ணு.. ஷாலினியோட ப்ரெண்ட்..”
“நா ஒண்ணுமே கேக்கலயே தம்பி.. ஆடு தானா வந்து சிக்குறத பாத்தா???”
“அண்ணி மீ பாவம்..என்ன விட்டுருங்க..”என காதில் மெதுவாய் கூற சிரித்தவாறே அவளோடு பேச ஆரம்பித்தாள்.. அதற்குள் அனைவரும் வந்து விட அறிமுக படலத்தை முடித்தான்..
அனைவருக்குமே ஆச்சரியம் தாளவில்லை..இத்தனை வருடத்தில் தமிழ் அறிமுகம் செய்யும் முதல் பெண் சிநேகிதம்..
அப்பா இருப்பதால் யாரும் எதுவும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்க தப்பித்தோம் என தமிழும் நழுவிக் கொண்டான்…
வீட்டிற்கு திரும்பும் வழியில் அவன் தந்தை தன் சிநேகிதரை பார்ப்பதற்காக இறங்கி கொள்ள வீட்டினுள் நுழைந்தவுடன் மூவரும் அவனை பிடித்துக் கொண்டனர்..
“டேய் உண்மைய சொல்லு யாரு அந்த பொண்ணு??அதெப்படி கரெக்ட்டா நாம போறப்போ அவளும் கோவிலுக்கு வருவா??”
என்னை பெற்ற தெய்வமே ஏன்ம்மா..சத்தியமா தெரிஞ்ச பொண்ணு அவ்ளோதான்..
வேற ஒண்ணுமில்ல ரெண்டு மூணு தடவை ஹெல்ப் பண்ணிருக்கேன்.. அதுமட்டும் இல்லாம லாஸ்ட் கேஸ்ல என்னால அவளுக்கு ஒரு ஆபத்து வந்துடுச்சு அதனால சின்னதா ஒரு சாப்ட் கார்னர் வேற ஒண்ணுமில்ல அண்ணி..
“நம்புற மாதிரி தான் இருக்குடா தம்பி ஆனாலும் ஏதோ ஒண்ணு அதுமட்டுமில்லனு சொல்லுதே??”
“உடன்பிறப்பே நீயுமா??ஒரு ஏசிபிய எல்லாருமா சேர்ந்து கார்னர் பண்றீங்களா??இதெல்லாம் நல்லாயில்ல..சொல்லிட்டேன்..”
மகனின் காதை செல்லமாய் திருகியவர் போலீஸ்லா இந்த வாசப்படிக்கு அந்தபக்கம்..உள்ள வந்தாச்சுனா மொதல்ல இந்த வீட்டு புள்ளடா..
சரி சொல்லு உனக்குஅந்த பொண்ணை பிடிச்சுருக்கா??நானும் எத்தனை மாசமா கல்யாணத்தை பத்தி பேசிட்டு இருக்கேன்..
உனக்கு அவளை தான் பிடிச்சுருக்குனாலும் சொல்லு அவங்க வீட்ல நாங்க பேசுறோம்..
அய்யோ அம்மா என்ன நீ விட்டா நாளைக்கே கல்யாணத்தை முடிச்சுருவ போலயிருக்கு..
அதெல்லாம் ஒண்ணுமில்ல அப்படி எதுவும்னா நானே உன்கிட்ட சொல்றேன் போதுமா ஆளவிடுங்க..
இருந்தும் இந்த விஷயத்தை யாரும் எளிதில் விடுவதாய் இல்லை..
அடுத்தகட்ட வீசாரணை ஹரிஷிடமும் ஷாலினியிடம் நடக்க.ஹரிஷ் நண்பனை விட்டுக் கொடுக்காமல் அவனுக்கு சாதகமாய் பேசினான்..
ஷாலினியோ மற்றவர்களோடு சேர்ந்து கொண்டு நிர்பயாவின் மீதான அவன் பார்வை ஒன்றே சொல்லும் இது நட்பு இல்லனு என கோர்த்து விட தமிழின் அண்ணியும் அவளுமாய் திட்டம் தீட்டினர்..
அடுத்தவார இறுதியில் டின்னருக்கு ஏற்பாடு செய்து ஹரிஷ் குடும்பத்தையும் நிர்பயாவையும் அழைக்க ஏற்பாடு செய்தனர்..
ஆனால் நிர்பயாவின் வருகை அவனுக்கு தெரிய கூடாது என முடிவு செய்தனர்..
அந்த நாளும் வந்தது..தமிழ் காலையிலேயே வேலையிருப்பதாய் கிளம்பிவிட்டான் இரவு ஏழு மணிக்கு வருரவதாய் கூறிச் சென்றான்..
அங்கு ஷாலினி படாதபாடுபட்டு நிர்பயாவை வர வைத்தாள்..
எவ்வளவோ கூறியும் அவள் மறுத்துவிட கெஞ்சி கூத்தாடி சம்மதிக்க வைத்தாள்..
தன் வீட்டிற்கு வர வைத்து அங்கிருந்து ஹரிஷ்ஷையும் அவன் பெற்றோரையும் அழைத்துக் கொண்டு தமிழ் வீட்டிற்கு செல்வதாய் ஏற்பாடு..
அதன்படி நிர்பயா நான்கு மணியளவில் ஷாலினி வீட்டிற்கு வர அவள் வைந்த கோலத்தை பார்த்து ஷாலினி தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள்..
ஏன் நிர்பயா இதவிட அழுது வடிஞ்சு உன்னால வர முடியாதா??உன்ன நா கெட் டூ கெதர்க்கு கூப்டனா இல்ல வேற எதுக்காவது கூப்டனா..
இந்தா இந்த புடவையை கட்டிக்கோ..என் ப்ளவுஸ் உனக்கு கரெக்ட்டா இருக்கும் பிடி..
“அக்கா ப்ளீஸ் இதெல்லாம் வேண்டாம் எனக்கு புடவைலா கட்ட தெரியாது..இதேயே போட்டுக்குறேன் ப்ளீஸ்..”
இங்க பாரு நீ என்ன பேருக்கு அக்கானு கூப்பிடுறியோ மனசாற கூப்டுறியோ எனக்கு தெரியாது..
ஆனா நா உன்ன என் சொந்த தங்கையா தான் பாக்குறேன்..ஏன் தெரியுமா நானும் உன்ன மாதிரி அம்மா அப்பா இல்லாதவதான்..
உன் நிலைமை எவ்வளவு கொடுமைனு என்னால புரிஞ்சுக்க முடியும்..
போனவங்களையே நினைச்சுட்டு இருந்தா ஒரு ப்ரோஜனமும் இல்ல டா..அவங்க நீ இப்படி வருத்தப்பட்டுட்டே இருக்குறத விரும்புவாங்களா சொல்லு..
உனக்கா நாங்க எல்லாரும் இருக்கோம்..தெரியாத ஊர்ல உனக்காக இத்தனை பேரை கடவுள் குடுத்துருக்காறேனு சந்தோஷப்படு..ம்ம் என அவள் தோள்பற்ற அவள்மேல் சாய்ந்து அழுது தீர்த்து விட்டாள்..
“தேங்க்ஸ் பார் யுவர் கேர் அக்கா..இனி நா நார்மலா இருக்க ட்ரை பண்றேன்..”
குட் கேள்..இனி வீக் கெண்ட் ஆனா நீ இங்க வந்துர புரியுதா??எனக்கும் பேச்சு துணைக்கு நீ இருந்தா நல்லாயிருக்கும்..
பாப்பா வெளில வர்ற வரை எனக்கு கம்பெனி குடு என்ன ஓ.கே வா??இப்போ போய் இத கட்டிட்டு வா என கன்னம் கிள்ளி உள்ளே அனுப்பி வைத்தாள்..
“அக்கா.”
“இன்னும் என்ன??”
“நிஜமாவே எனக்கு புடவை கட்ட தெரியாதுக்கா..”என பாவமாய் நின்றவளை பார்த்து வந்த சிரிப்பை அடக்கமாட்டாமல் அவளோடு உள்ளே சென்று நல்ல சுடிதாரை எடுத்துக் கொடுத்தாள்…
அனைவருமாய் 5 மணியளவில் தமிழ் வீட்டுக்கு கிளம்ப நிர்பயா வரும் விஷயத்தை அவனிடம் கூறுவதற்காக ஹரிஷ் போனை எடுக்க ஷாலினி அதை பிடுங்கி வைத்துக் கொண்டாள்..
சரோஜாவும் ராஜியும் அனைவரையும் வரவேற்க வாசலுக்கு வர லெமன் எல்லோ நிற சுடிதாரில் ஒயிலாய் நின்றவளை பார்த்து தமிழுக்கு இவள்தான் என்ற முடிவுக்கே வந்துவிட்டனர்..
“வாம்மா எப்படியிருக்க??”
“நல்லாயிருக்கேன் ஆன்ட்டி..நீங்க எப்படியிருக்கீங்க??”
நல்லாயிருக்கோம் வா வா உள்ளே வாங்க எல்லாரும் என அனைவருமாய் உள்ளே செல்ல சில நிமிட அரட்டை முடிய ராஜியும் சரோஜாவும் கிச்சனுக்கு சமையலை கவனிக்க செல்ல ஹரிஷ்ஷின் தாயும் உடன் சென்றார்..
ஆண்கள் அனைவருமாய் உள் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க நிர்பயா ஷாலினியோடு ஹாலில் அமர்ந்திருந்தாள்..
உதவி செய்யும் எண்ணம் இருந்தாலும் என்ன நினைப்பார்களோ என ஷாலினியோடே அமர்ந்து கொண்டாள்..
இரவு மணி 7:30 ஐ தொட்டிருக்க வாசலில் அழைப்பு மணி சத்தம் கேட்க வெளியே வந்த ராஜியிடம் கண்ஜாடை காட்டிவிட்டு ஷாலினி நிர்பயாவை கதவை திறக்க சொன்னாள்..
அவள் சென்று கதவை திறக்க தன் முன் நின்றவளை கண்டு கண்ணிமைக்காமல் நின்றான் தமிழ்ச்செல்வன்..அவனை கண்டு அவளும் செய்வதறியாமல் நிற்க,ஏன் இங்க வந்துருக்கனு கேட்டுருவாரோ..
என்ன பண்றது என மூளை வேகமாய் யோசிக்க அதற்குள் அவன் கேட்டே விட்டான்..
“ஏ அழுமூஞ்சி நீ இங்க என்ன பண்ற??”என்றவாறு வெளியிலிருந்த சேரில் அமர்ந்து ஷூவை கழட்டினான்..
“வந்து சார்..நா.ஷாலினி அக்கா தான்..”
“ஷப்பா போதும் எதுக்கு இப்படி நடுங்குற என்ன பாத்தா அவ்ளோ கொடுரமாவா இருக்கு??
உன்னை இங்க எதிர்பாக்கலங்கிற விதத்துல கேட்டேன் நீ ஏன் வந்தனு மீன் பண்ணல..
சரி கொஞ்சம் வழிவிட்டனா நானும் வீட்டுகுள்ள வருவேன் வரலாமா??இல்ல..”
ஐயோ சாரி சா..என நகர்ந்து உள்ளே ஓடிவிட்டாள்..மென்னகையோடு அவளை பின் தொடர்ந்தவன் உள்ளே ராஜியும் ஷாலினியும் சிரிப்பதை பார்த்து நடப்பதை புரிந்து கொண்டான்..
இருப்பினும் அவள்முன் ஒன்றும் கேட்கத் தோன்றாமல் தனதறைக்குச் சென்று உடைமாற்றி வந்தான்..
பேச்சும் சிரிப்புமாய் உணவு மேஜை களைகட்ட அவள் மட்டும் வழக்கம்போல அமைதியாய் தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்..
ஏனோ அனைவரும் சந்தோஷமாய் இருக்கும் நேரத்தில் அவள் அப்படியிருப்பது தமிழுக்கு வருத்தமாய் இருந்தது..
சாப்பாட்டை முடித்து பெரியவர்கள் பேச ஆரம்பிக்க இளையவர்கள் அனைவரும் மொட்டை மாடிக்குச் சென்று அமர்ந்தனர்..
“அக்கா நா கிளம்புறேனே ரொம்ப லேட் ஆய்டுச்சு ப்ளீஸ்..”
“ஹாவ் அன் அவர்ல கிளம்பிடலாம்டா நானே கொண்டு போய் விடுறேன்..கவலபடாத..”
அக்கா..என மீண்டும் அவள் காதை கடிக்க..அவளுக்கு மேலும் தர்மசங்கடம் வேண்டாம் என எண்ணியவன் விடு ஷாலு லேட் ஆய்டுச்சு தான் இன்னொரு நாள் மீட் பண்ணிக்கோ..
வா நிர்பயா நானே ட்ராப் பண்ணிட்றேன் என அதற்குமேல் நிற்காமல் கீழே சாவியை எடுக்க சென்றான்..
இளையவர்கள் தங்களுக்குள் சிரித்து கொள்ள நிர்பயா அனைவரிமும் விடைபெற்று சென்றாள்..
அங்கு பெரியவர்களோ மயக்கம் போடாத குறை தான் அவனே அவளுக்காக பாத்து பாத்து செய்வது அவர்களுக்கு ஆச்சரியமாய் இருந்தது..
இருப்பினும் எதையும் வெளிப்படையாய் யாரும் காட்டிக் கொள்ளவில்லை..
அடுத்த 20வது நிமிடம் அவள் வீட்டிற்கு அருகில் சற்று தள்ளி வண்டியை நிறுத்த அவள் இறங்கி அவனை ஏறிட்டாள்..வரேன் சா..உங்கள வேற தொந்தரவு பண்ணிட்டேன்..
சாரி..என திரும்ப, ஒரு நிமிஷம்..என்றவனை கேள்வியாய் பார்த்தாள்..
வண்டியை விட்டு இறங்கியவன் சில நொடிகள் அமைதிகாக்க பின் அவளிடம், “நா உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசப் பட்றேன்..இத..லவ்னுலா சொல்லிட முடியாது பட் ஒரு பொண்ண பாத்தவுடனே இவதான் நம்ம லைவ்க்கு செட் ஆவானு ஒரு ஸ்பார்க் தோணணும்..
அது எனக்கு உன்னை பாத்ததிலேயிருந்து இப்போ வர தோணிட்டுதான் இருக்கு..
எங்க வீட்ல எல்லாருக்கும் சம்மதம் தான்..நா அவங்ககிட்ட எதுவும் சொல்லல அவங்களாவே கெஸ் பண்ணி வச்சுருக்காங்க..
உன்னை இன்னைக்கு வர வச்சதுக்குகூட அதுதான் காரணம்..
வேற யார் மூலமாகவும் இந்த விஷயம் உனக்கு தெரியுரதுல எனக்கு விருப்பமில்ல அதான் நானே சொல்லிட்டேன்..
அண்ட் எந்த காரணத்துக்காகவும் நீ தனியா இருக்க உன் சுச்சூவேஷனை யூஸ் பண்ணிக்குறேன்னு நினைச்சுறாத..
வேற என்ன சொல்றதுனு தெரில..யோசிச்சு உன் முடிவை சொல்லு.. எதுவாயிருந்தாலும்.. பை என பைக்கை எடுத்து மின்னலாய் பறந்துவிட்டான்..
பெண்ணவளோ என்ன செய்வதென புரியாமல் வேகமாய் வீட்டிற்குள் சென்று யாருடனும் பேசாமல் தன் அறையில் சென்று முடங்கிக் கொண்டாள்..
அவனை முதன்முதலாய் கண்ட நாளிலிருந்து ஒவ்வொரு சந்திப்பும் அவள் கண்முன் நிழலாடியது..
அவளுக்காக அவன் செய்த அத்தனையிலும் அவனுக்கு அவள் மீதான ஈடுபாட்டை ஏதோ ஒருவிதத்தில் உணர்த்திக் கொண்டுதான் இருந்தது..
இருந்தும் இவை எதற்குமே தான் தகுதியானவள் இல்லை என்பதை எண்ணியபோது அழுகை முட்டிக் கொண்டு வந்தது…
வெகு நேரம் அப்படியே அமர்ந்திருந்தவள் அவனுக்கு கூற வேண்டிய பதிலை உறுதி செய்தவாறு உறங்கச் சென்றாள்.. ஆனால் உறக்கம் தான் வர மறுத்தது..
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
3 comments
💞💞💞💞💞💞💞💞💞
Writer madam appo konjam thaaralamaa thaan irunthirukkeenga . Ippo thaan epi size kammi
Super💕