1.5K
“ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்
மு.வ விளக்க உரை: முடியும் செயலையும் முடியாத படி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் செய்யாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்.”
அகத்தியனும் நாச்சியாரும் கீழே வருவதை பார்த்த மேகலையின் முகத்தில் லேசான புன்னகையும் நிம்மதியும். கண்டும் காணாமல் இருந்தாலும் மகனின் வாழ்க்கையை நினைத்து பயம் இல்லாமலா போய்விடும்.
அதிலும் நாச்சியாரையும் அவருக்குப் பிடித்துப் போனதில் மகனின் மூர்க்கத் தனத்தை அவளிடம் காட்டி விடாமல் இருக்க வேண்டுமேஎன்ற கவலையும் உள்ளுக்குள் இருந்து கொண்டு தான் இருந்தது.
மருமகளுக்காக முந்தைய நாள் இரவே அவன் அங்கு சென்றதைக் கேள்விப் பட்டதிலேயே மகிழ்ச்சியாய் இருக்க இப்போது புடவையில் இறங்கி வரும் மருமகளைப் பார்த்து பரம திருப்தியாகிப் போனது.
“எப்படி சாப்பாடு போடுவியா? இல்ல எங்களை முறைச்சுகிட்டே நிக்க போறியா?”, என்ற மகனின் குரலில் உணர்வு பெற்றவராய் உள்ளே செல்ல நாச்சியார் கணவனைத் திரும்பி பார்த்து வைத்தாள்.
மூவருமாய் கால உணவை முடித்து விட்டு, வரச் சொல்லியிருந்த காரில் கிளம்பினர். மேகலை முன்னால் அமர்ந்து கொள்ள நாச்சியாரும் அகத்தியனும் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டனர்.
அகத்தியன் அவளது இடக்கரத்தை பற்றித் தன் மேல் வைத்துக் கொள்ள காலையிலிருந்து நாச்சியாருக்கோ பலவித உணர்வுகள் உள்ளுக்குள்.
“நாகர்கோவிலில் இறங்கி கட்சிகாரர்கள் ஏற்பாடு செய்திருந்த சிறு விருந்தில் கலந்து கொண்டு அங்கிருந்தவர்களோடு அகத்தியன் பேசிக் கொண்டிருந்தான்.
மேகலையின் அருகிலேயே அமர்ந்திருந்த நாச்சியார் சுற்றும் முற்றும் பார்த்த படி அமர்ந்திருந்தாள்.
“நாச்சி..”
“என்ன அத்த?”
“இந்தப் பய ஏதோ வித்தியாசமா தெரியுதான் டி.”
“ஏன் அத்த அப்படி சொல்றீங்க?’”
“அவனை இப்படி நான் பார்த்ததே இல்ல. உள்ளுக்குள்ளே ரொம்ப சந்தோசமா இருக்கான்னு நினைக்கேன். உன்னை அவனுக்குப் பிடிக்க போய் தான் கட்டிருக்கான் போல டி.”
“…”
“என்ன அமைதியா இருக்க? உன்ட்ட ஒழுங்கா பேசுதானா?”
“ம்ம்..”
“பார்த்து பக்குவமா பேசிப் பழகு. எப்போ என்னத்துக்கு கோவம் வரும்னே தெரியாது.”
“என்ட்ட அவங்க கோவப்பட்டதே கிடையாது அத்த..”
“நிசமாவா சொல்லுத? அடிக்கடி கண்ணைக் கசக்கிட்டு நிப்பியே டி?”
“அதெல்லாம் நானே எதாவது பேசி அழுதது தான். அவங்க எனக்கு தைரியம் தான் சொல்லுவாங்க.”
“அடக் கொடுமையே.! அன்னைக்கு கூட உன் ரூமில் என் இடுப்பை கட்டிகிட்டு அழுதியே டி..”, என்றதில் தலைக் குனிந்து கொண்டவளாய் அமைதியாக இருந்தாள்.
“நான் நல்ல பிள்ளையைத் தான் பெத்துருக்கேனா அப்போ?”
“என்ன அத்த இப்படி சொல்லுறீங்க. அவங்க ரொம்ப நல்லவங்க..”
“ம்ம் இந்த ஊருக்குள்ளே நீ மட்டும் தான் இதைச் சொல்லணும்.”, எனும் போதே நாச்சியார் தற்செயலாய் அகத்தியன் இருந்த திசையைப் பார்க்க அவன் ஏற்கனவே அவளைத் தான் பார்த்திருந்தான்.
இருந்த இடத்திலிருந்தே அவன் ஏதோ ஜாடை பேச நாச்சியாருக்கு அவன் கூறுவது புரியாமல் போனது. கையிலிருந்த கைப்பேசியை எடுத்தவனாய் அவளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினான்.
“ப்ரெண்ட்ஸ் லேசா குடிக்க சொல்லுதாங்க. குடிச்சுக்கட்டுமா?”, என்ற மெசேஜிற்கு வேகமாய் வேண்டாம் என தலையசைத்தாள் நாச்சியார்.
“நைட் வந்து உனக்கு கூட கொஞ்சம் ரெடி பண்ணித் தரேன்.”
“ஐயே நான் என்ன குடிகாரியா?”, என்றவளின் பதில் மெசேஜில் லேசாய் புன்னகைத்திருந்தான்.
“ஆனா குடிகாரியா நான் உன்னைப் பார்த்துருக்கேனே..”
“குடிக்காதீங்க.. அந்த நாத்தம் எனக்குப் பிடிக்கல..”
“சரி..”, என்றவன் கைப்பேசியை உள்ளே வைத்து விட நாச்சியார் அப்போதும் அவனைத் தான் பார்த்திருந்தாள்.
சற்று தூரத்தில் இருந்ததால் அவர்களின் உரையாடல் காதில் விழவில்லை எனினும் அனைவருமாய் அகத்தியனை கேலி செய்வது அவளுக்கு புரிந்தது.
பேச்சு நீண்டு கொண்டே போவதும் அகத்தியனின் முக மாற்றமும் சற்று பயத்தைக் கொடுத்திருந்தது நாச்சியாருக்கு.
அடுத்த சில நிமிடங்களில் இவர்கள் அருகில் வந்தவன் இருவரையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பியிருந்தான்.
காரில் ஏறிய பின்னும் அவனது முகம் கடுகடுவெனவே இருக்க நாச்சியார் பயமிருந்தாலும் அவனது கரத்தைப் பற்றிக் கொள்ள சட்டென அவள் புறம் திரும்பியவன் அவள் முகத்தின் கலவரம் கண்டு இன்னுமாய் இறுகப் பற்றிக் கொண்ட படி முகத்தை சாதாரணமாய் வைத்துக் கொண்டான்.
இருந்தும் நாச்சியாரால் அதை அப்படியே விட முடியவில்லை. ஏன்ன செய்வதென யோசித்தவள் விரலில் லேசாய் அழுத்தத்தைக் கூட்ட என்ன என்ற கேள்வியோடு அவளைப் பார்த்தான்.
“கோவமா?”
“உன் மேல இல்ல.. பாவம் போல முழிக்காத..”, என்றவன் மெலிதாய் சிரிக்க அப்போது தான் நாச்சியாருக்கு சற்று நிம்மதியாய் இருந்தது.
மூவருமாய் அங்கு ஊர் சுற்றி விட்டு இரவு உணவிற்காக ஒரு ஹோட்டலில் இறங்கினர்.
“மா உனக்கு என்ன வேணும் சாப்பிட?”, என்றவன் கைப்பேசியைப் பார்த்த படியே கேட்க மேகலைக்கு மனம் அத்தனை மகிழ்ச்சியாய் இருந்தது.
“இப்படியெல்லாம் நாம வந்ததேயில்ல என்னல?!”, என்றதில் அகத்தியன் நிமிர்ந்து தாயைப் பார்த்தான்.
“மனசுக்குள்ளே என்னவோ பண்ணுதுல.. சொல்லத் தெரியல. உங்க ரெண்டு பேரோடயும் மிச்ச காலத்தை ஓட்டிட்டா அந்த நிம்மதியே போதும்.”
“தேவையில்லாம ஏன் பேசுத. வேணும்ங்கிறதை வாங்கு முதல்ல..”, என்றவன் நாச்சியாரிடம்,
“உனக்கு என்ன புரோட்டா தான?”, என்றதில் புன்னகையோடு ஆமென தலையசைத்தாள்.
அவளுக்கு வந்த பரோட்டாவை பியித்து போட்டு சால்னாவை அதில் ஊற்றி விட்டு தட்டை அவள் புறமாய் நகர்த்தி வைத்தான் அகத்தியன்.
தனக்கான உணவு வந்ததும் சாதாரணம் போல் முதல் வாய் உணவை நாச்சியாருக்கே நீட்ட அவளும் வெகு இயல்பாய் வாங்கிக் கொண்ட படி நன்றாக இருப்பதாய் தலையசைத்தாள்.
எப்போதும் போல் அவள் கைக்குள் அகப்படும் நான்கு பருக்கை போன்ற உணவை அவனுக்கு நீட்ட அகத்தியனும் ஒன்றும் கூறாமல் வாங்கிக் கொண்டான்.
மேகலைக்கு மனமெங்கும் மகிழ்ச்சியில் நிறைந்து வழிந்தது. நாச்சியார் பேருக்கு மேகலையோடு ஒட்டிக் கொள்ளாமல் மனதார அவரை நெருக்கமாய் நினத்ததால் தான் இதெல்லாம் அவளுக்கு சங்கோஜப்பட வைக்கும் விஷயங்களாய் இருக்கவில்லை என்பது புரிந்தது.
“அத்த.. இது நல்லாயிருக்கு சாப்பிட்டு பாருங்க..”
“இருக்கட்டும் டி நீ சாப்பிடு..”
“எனக்கு மட்டும் ஊட்டி விட்ட.. அதான் உன் அத்தைக்கு கோவம் போல.”, என்றவன் சிரிக்காமல் கூற இருவரையும் பார்த்தவள் உணவை மேகலைக்கு ஊட்டியிருந்தாள்.
“அவன் தான் என்னத்தையாவது சொல்றான்னால் நீ வேற ஏன் டி..”
“ஏன் அத்த.. நான் கொடுக்க கூடாதா..”
“அப்படி சொல்லல நாச்சி..”
“அப்போ அவங்க கொடுத்தா பிடிக்கும்ல.. ஏங்க..”, என்றவள் புன்னகையாய் கணவனைப் பார்க்க மேகலையின் முகத்தில் என்ன கண்டானோ ஒரு வாய் உணவைத் தாய்க்கு ஊட்டியிருந்தான்.
மூவருக்குமே ஒவ்வொரு விதத்தில் மனம் நிம்மதியடைந்திருந்தது. அகத்தியனுக்கு அவன் தொலைத்த பாட்டியின் அன்பைப் போன்ற ஒட்டு மொத்த அன்பும் நாச்சியாரிடம் இருந்து கிடைக்கும் என்ற நிம்மதி.
மேகலைக்கு இத்தனை வருடங்கள் தள்ளி நின்ற மகன் இப்போது மனதிற்கு மிக நெருக்கமாகி விட்ட நிம்மதி.
இருவரையும் விட நாச்சியாருக்கோ அவளது கடந்த காலத்தை மொத்தமாய் மறக்க வைத்திருக்கும் கணவனும் மாமியாரும் பெரும் நிம்மதியைக் கொடுத்திருந்தனர்.
மூவருமாய் வீட்டிற்கு வர மணி இரவு பத்தைக் கடந்திருக்க நாச்சியாருக்கு இப்போது மீண்டுமாய் கணவனை எதிர் கொள்வதில் சிறு பதட்டம் ஏற்பட்டிருந்தது.
ஒன்றும் பேசாமல் வேகமாய் மாடிக்குச் சென்றவள் மாற்றுடையோடு குளியலறைக்குள் நுழைய முயற்சிக்க வேகமாய் தடுத்திருந்தான் அகத்தியன்.
“சுண்டைக்கா.. தப்பிக்க பார்க்காத..”
“ஏங்க.. எனக்கு நிஜமாவே பயமா இருக்கு..”
“என்னை நினைச்சா? இல்ல இதெல்லாம் நினைச்சா?”, என்றவனின் கரம் அவளது வெற்றிடையில் அழுத்தமாய் பதிந்ததில் லேசாய் துள்ளியவளுக்கு கணவனை ஏறிடவே முடியவில்லை.
“சொல்லு..”
“உங்களை நினைச்சு இல்லை..”, என்றவளுக்கு முகமெல்லாம் சிவந்து தலையை இன்னுமாய் குனிந்து கொள்ள அகத்தியன் வேண்டுமென்றே குனிந்து அவளது முகத்தைப் பார்க்க முயற்சித்தான்.
“பயம் எப்போ போகும்?”
“…”
“சொல்லு டி எப்போ பயம் போகும்?”
“அதெல்லாம் தெரியாது..”
“அப்போ என்னைய நம்பி உன்னைக் கொடுத்துரு பக்குவமா நான் பயத்தை போக்குறேன்.”
“…”
“எதுக்குமே ஒத்து வரலைனால் நான் அடாவடித்தனம் தான் பண்ணணும்..”, என்றவன் மொத்தமாய் அவளைத் தன்னோடு நெருக்கியிருந்தான்.
பதறிப் போனவளாய் அவனது சட்டையை இறுகப் பற்றிக் கொண்டவளின் முகம் ஆணவனின் மனதில் அழகாய் பதிந்து போனது.
“நாச்சியா குழந்தை புள்ளையாவே இருக்காத டி..”
“…”
“என் மேல நம்பிக்கை இல்லையா? மகாராணியை நான் கஸ்டப்படுத்திருவேனா.?.”, என்று பலவாறாக தன் வாய் ஜாலத்தைக் காட்டி குமரியவளை வென்றிருந்தான் அகத்தியன்.
மனைவியவளின் பதட்டம் அவனை மொத்தமாய் பித்தனாக்கி விட்டிருந்தது அந்த நொடியில்.
அவளின் மென்மையான உதடுகள் அவனது உதடுகளுக்குள் சிக்கிக் கொள்ள தடுமாறித் தவித்தவளின் கரத்தை எடுத்து தனது பின்னந்தலைக்குள் வைத்துக் கொண்டான்.
அவனது கரங்கள் நகரும் இடங்களெல்லாம் பெண்ணவளின் உயிர் போய் உயிர் வரும் நொடிகளாய்.
மனைவியை கையில் ஏந்தியிருந்தவன் கட்டிலில் விழ வேகமாய் சுவற்றை ஒட்டி அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள் நாச்சியார்.
விளக்கை அணைத்து விட்டு அவளருகில் விழுந்தவன் அவளை அப்படியே தன்புறம் இழுத்து கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொள்ள இந்த அவஸ்தைகள் எல்லாம் குமரி அவளை வாட்டி வதைத்தன.
அகத்தியனின் வேகத்தில் அவளது ஆடைகள் விடுதலைப் பெற்றிருக்க கணவனின் பார்வையும் தீண்டலும் அவளுள்ளும் ரசாயன மாற்றங்களை நிகழ்த்த ஆரம்பித்திருந்தன.
பெண்ணின் கை நகங்கள் அவனது வெற்று முதுகில் கீறல்களைக் கொடுக்க அதையெல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் யார் இருக்கிறார்கள்!
அகத்தியன் என்ற முரடனின் மென்மை மொத்தமும் அவனது மனைவிக்காக மனைவியினிடத்தில் அன்று வெளிப்பட்டது.
முத்தங்களின் எண்ணிக்கைகள் எல்லாம் ஒரு கட்டத்தில் கணக்கில்லாமல் போயிருக்க அவனது ஆளுமையில் கணக்கிலடங்கா முத்தங்களை அவனும் பெற்றுக் கொண்டான்.
கூடலின் உச்சத்தை அனுபவிக்க பயந்தவளை உண்மையில் வெகுவாய் தன்னோடு தாங்கிக் கொண்டான் அகத்தியன்.
லேசான முகச் சுழிப்போடு அவனை இறுக்கியிருந்தவளின் நெற்றியில் அழுத்தமாய் முத்தம் வைத்து கண்களை ஏறிட்டான்.
“இனி பயப்பட எதுவுமில்லல?!”
“எனக்கு.. என்னவோ போல இருக்கு..”, என்றவளுக்கு போர்வையை கழுத்து வரை போர்த்தியவன் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க எழுந்து அமர்ந்தவளை தன் மார்பில் சாய்த்துக் கொண்டான்.
“நான் தானே.. நீயும் நானும் இனி வேற இல்ல.. இதை மட்டும் மனசுல வை சுண்டைக்கா..”
“ரொம்ப ஒல்லியா இருக்கேனோ?”
“எப்படியிருந்தாலும் எனக்குப் பிடிச்ச மாதிரி இருக்கியே..”
“என்னை நிஜமாவே உங்களுக்குப் பிடிக்குமா?”
“எல்லாம் முடிஞ்சப்பறம் கேட்க வேண்டிய கேள்வி தான்.”
“இப்போ தான் தோணுது.. சொல்லுங்க..”
“எங்க ஆச்சிக்கு அப்பறம் நான் என்னோடேயே வைச்சுக்கணும்னு நினைக்குற அளவு பிடிக்குது.”, என்றதில் சோர்வாய் புன்னகைத்தவள் இன்னுமாய் அவனோடு ஒண்டிக் கொண்டாள்.
“சேலையில அம்சமா இருந்தாளே சுண்டைக்கா..”
“ஆமா உங்களுக்கு எப்படி சேலை கட்டிவிடத் தெரியும்?”, என்றதில் அவளைக் கட்டிலில் தள்ளி பக்கவாட்டில் படுத்தபடி விழிகளுக்குள் நோக்கினான்.
“எதுக்கு இப்படி பாக்குறீங்க?”
“எனக்கே எனக்குனு வரப் போறவளுக்கு எல்லாமே நான் பண்ணி விடணும்னு கத்துகிட்டேன்.”
“எப்போ?”, என்றவளும் அவன் கண்களைத் தான் பார்த்திருந்தாள்.
“காலேஜ் படிக்கும் போது..”
“..”
“என்ன வேற எந்த சந்தேகமும் இல்லையா?”, என்றதில் பட்டென விழி தாழ்த்தியிருந்தாள் நாச்சியார்.
“மொத்தமுமே சந்தேகம் தான்கிற.. அப்படி தான?”
“எனக்குத் தூக்கம் வருது…”, என்றதில் சிரித்தவனாய் நேராய் படுத்துக் கொள்ள நச்சியார் அவனது தோளில் முகம் புதைத்து விழி மூடிக் கொண்டாள்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
8 comments
Vizhimoodi yosiththaal angeyum vanthaai penne penne
Superb update 👏
Semma. Kalakuraane agathiyan. Megalai nambu ma. Un pillai nijamave romba nallavan.
💞💞💞💞💞💞💞💞💞💞
அவனுக்காக ஒரு உறவு 😍😍😘
நாச்சியார் அகத்தியா ❤️💕🙈🙈🥰
மேகலை 🤗🤗😍😍
நைஸ் அப்டேட் 💖💖💖💖💖
Super💕
Nice
Lovely update 🥰🥰🥰