10
அன்றைய நாளின் கேலி அதன் பின் அவ்வப்போது தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.அப்படியாய் தன் மடிக் கணிணியில் பார்வை பதித்திருந்தவன்,
“திஷா டியர் ரொம்ப நாளா கேக்கணும்னு நினைச்சேன் உன் எப் பி ஐடி என்ன?”
“எனக்கு அக்கௌண்டே இல்லங்க”,என்றவள் அவள்போக்கில் துணியை மடிக்க அவன் அவளை விசித்திரமாய் பார்த்தான்.
“நிஜமாவா சொல்ற?”
“இதுல பொய் சொல்ல என்ன இருக்கு நிஜமாவே இல்ல..ப்ரெண்ட்ஸ்னு நேர்ல பேசவே ஆள் இல்ல இதுல முகம் தெரியாத நட்புகள் கிட்ட நா என்ன பேசுறது..எப்பவுமே தனிமை தான் என் கம்பனியன்..”
“நீ ரொம்பவே வித்யாசமானவ தான் திஷா..”
மென்மையாய் சிரித்தவள் அவனிடம்,”ஆமா உங்களுக்கு நிறைய ப்ரெண்ட்ஸ் இருக்காங்கனு சொல்றீங்களே,இதுல எந்தளவு நம்பிக்கை இருக்கு உங்களுக்கு?”
மடிக்கணிணியை முடியவன்,”ம்ம் உன் கேள்வி புரியுது திஷா..நட்புங்கிறது எப்பவுமே எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்..நா இருக்குற இடத்துல என்னை சுத்தி ஒரு கூட்டம் இருக்கும் அப்படிபட்டவன்னு வச்சுக்கோயேன்.பட் இந்த சோஷியல் நெட்வொர்க்னு வந்தப்பறம் அது இன்னமும் ஆச்சரியமான ஒரு விஷயமா மாறிச்சு..
ஆரம்பத்துல என் ப்ரெண்ட்ஸோட ப்ரெண்ட்ஸ் ரெக்வர்ஸ்ட் குடுத்தா கொஞ்சம் யயோசிச்சு தான் அக்செப்ட் பண்ணுவேன்.ஆனா அதில ஒண்ணு ரெண்டு பேர் ஷேர் பண்ற டீடெய்ல்ஸ் போஸ்ட்ஸ் அவ்ளோ யூஸ்புல்லா இருக்ககும்..சோஷியல் அக்டிவிட்டீஸ்,ட்ரஸ்ட் வொர்க்ஸ் இன்னும் எத்தனையோ நானே நிறைய நேரம் வாலண்டியரா போய்ருக்கேன்..
ஆனா அவங்களயெல்லாம் நநா நேர்ல பாத்ததுகூட இல்ல தான்..பட் இந்தமாதிரி இடத்துல நாம சந்திக்குற மனிதர்கள் அவங்க லைப்னு எத்தனையோ விஷயம் இருக்கு..முகம் பார்க்காம அவ்ளோ பேசி தற்செயலா அவங்கள மீட் பண்ணும் போது ஒரு எக்ஸைட்மெண்ட் அது சான்ஸே இல்லடா..
எல்லாத்துலயும் நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு..நாம சூஸ் பண்ற பாதையை பொறுத்து நம்ம பயணம் இருக்கும் அவளோ தான்..”
“ம்ம் கரெக்ட் தான் பட் நீங்க சொல்ற அளவு நல்லது நிறைய இருக்கலாம் ஆனாலும்…”
“திஷா பேபி நாம நாளைக்கு வெளில போறோம் அப்போ உனக்கு கண்டிப்பா நா சொல்றது புரியும்..”
“வெளிலயா அதெல்லாம்..”,அவள் முடிப்பதற்குள் அவன் பார்வை அவளை துளைக்க.
“சாரி இனி அப்படி சொல்லல போலாம்..”என மெதுவாய் புன்னகைத்தாள்.
கூறியபடியே இருவருமாய் மறுநாள் கிளம்பி வர மதிய உணவு வெளியே பார்த்துக் கொள்தாய் கூறிவிட்டு தன்னவளை அழைத்துச் சென்றான்.
நேராய் அந்த பெரிய ஹோட்டலின் முன் காரை நிறுத்திவிட்டு ரிசர்வேஷன் விவரங்களை கூறிவிட்டு காத்திருக்க சற்று நேரத்தில் அவர்களுக்கான டேபிளை காட்டி அமரச் செய்தனர்.
அதுவரையுமே அமைதியாய் இருந்தவள்,”அப்படி யாரு தான் வராங்க!இப்போவாவது சொல்லலாம் தான?”
“ம்ம் சொல்லிட்டா போச்சு..உன்னோட முகம் தெரியாத எனிமி தான் வரா..”
“புரில யாரு அது?”
“சாருதான் வர்றா..”,என்றவன் சிரிக்க,
“அவங்க என் எனிமினு நா எப்போ சொன்னேன்..”
“சொன்னா தான் தெரியணுமா அதான் இப்போ கூட முகத்துல தெரியுதே”,என சீண்டும் போதே அவனுக்கு அழைப்பு வர ததானிருக்கும் டேபிளை பற்றி கூறியவாறே கை காட்ட அவன் பார்த்த திசையை பார்த்தவளுக்கு கண்கள் விரிந்தன.
தன்னவனை பார்த்தவளுக்கு அவன் குறும்பு பார்வை பதிலாய் கிடைக்க,”அவங்களுக்கு கல்யாணம் ஆய்டுச்சா??!!!”
“ஹா ஹா திஷா டியர் ரிலாக்ஸ் எதுவாயிருந்தாலும் வீட்ல போய் பேசிக்கலாம்..நானே இப்போ தான் பர்ஸ்ட் டைம் பாக்குறேன் அவளை நேர்ல..சோ நோ சண்டை ப்ளீஸ் ப்ளீஸ்”,என்பதற்குள் அவர்கள் அருகில் வந்தவள் இருவரையும் பார்த்து சிநேகமாய் சிரித்தவாறே அவர்களுக்கு எதிர் நாற்காலியில் அமர்ந்து தன் பக்கத்து இருக்கையில் அந்த அழகிய ரோஜா செண்டாய் இருந்த தன் நான்கு வயது மகளை அமர வைத்தாள்.
“ஹாய் எப்படி இருக்கீங்க இரண்டு பேரும்..”
“நீதான் சொல்லனும் இரண்டு பேரும் ஜோடிப் பொருத்தம் எப்படினு”,என அபினவ் தன்னவளின் தோள் சுற்றி தன்புறம் இழுத்துக் கூற
தன் கைகளால் திருஷ்டிகழித்து நெட்டி முறித்தவள் செமயா இருக்கீங்க போங்க..என்றுசிரித்தாள்.
“என்ன திஷானி இப்படி ஷாக்ல இருக்கீங்க..என்னாச்சு என்னை பத்தி ஏதாவது ஏடாகூடமா சொல்லி வச்சுருக்காங்களா??”
“ஐயோ அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல நீங்க மேரீட்னு எனக்கு தெரியாது அதுவும் குழந்தையோட பாத்தவுடனே சர்ப்ரைஸ் ஆய்டுச்சு..”
மகனே இந்த வேலைய வேற பண்ணி வச்சுருக்கியா கடவுளே சமாளிப்போம்..என மனதிற்குள் நொந்தவள்,
“ஹா மேடம் பேரு ஆருத்ரா இப்போ தான் ஸ்கூல் போக ஆரம்பிச்சுருக்காங்க”,என்று கூற சிறியவளோ அழகாய் சிரித்தாள்..
“ஹாய் ஆன்ட்டி ஹாய் அங்கிள்”
“ஹாய்டா செல்லம்..எப்படியிருக்கீங்க..”,என அபினவ் கைநீட்ட கைகுலுக்கி சிரித்தாள்.
“அப்பறம் மேடம் ஆன்சைட் லா எப்படி இருந்தது..”
“ஹாங்ங் என்ன தான் சொல்லுங்க நம்ம ஊரோட சுகமே தனிதான்..முடில..அதான் என் ஆளை அங்கேயே தவிக்க விட்டுட்டு நா ஓடி வந்துட்டேன்..அவரு நெக்ஸ்ட் மந்த் வராரு..”
“மனுஷன் நிம்மதியா இருக்காருனு சொல்லு..”
“எப்படி நீங்க லீவ் முடிஞ்சு வேலைக்கு போகும் போது இருப்பீங்களே அப்படியா??”,என குறும்பாய் திஷானியை பார்க்க அவளே சிரித்திருந்தாள்.
“அடிப்பாவி வந்த அஞ்சாவது நிமிஷம் கூட்டுசேர்த்துட்டியா!!சரி புதுசா கல்யாணம் முடிஞ்சுருக்கு முதல் தடவை பார்க்க வரோமே எதாவது கிப்ட் வாங்கிட்டு வருவோம் அதெல்லாம் இல்ல..அப்படியே ஜாலியா வந்துர வேண்டியதுது..”
“அய்யே அலையாதீங்க எல்லாம் வச்சுருக்கோம் என்றவள் தன் பையிலிருந்து அந்த பரிசை எடுத்து நீட்ட இருவருமாய் பெற்றுக் கொண்டனர்.
உணவை ஆர்டர் செய்து மூவருமாய் உண்ண ஆரம்பிக்க குழந்தையும் அவளாய் எடுத்து உண்ண ஆரம்பித்தாள்.
தற்செயலாய் திஷானியை கவனித்தவளுக்கு அவள் பார்வை தன்னை அவ்வப்போது தீண்டிச் செல்வதை உணர முடிந்தது.ஏதோ கூற வருகிறாள் என்பதை உணர்ந்து சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுமை காத்தாள்.
அதன்பின் மெதுவாய் குழந்தை சிணுங்க ஆரம்பிக்க அதையே காரணமாய் வைத்து அபினவிடம்,
“அங்க ப்ளே ஏரியா இருக்குதான கொஞ்சம் கூட்டிட்டு போய்ட்டு வாங்களேன் நா அதுகுள்ள சாப்ட்டு வரேன்..சாரி..”
“ஹே லூசு இதுக்கு எதுக்கு சாரி நீங்க வாங்க மை ப்ரின்ஸஸ்..வந்துரேன் திஷா டியர்..”,என்றவாறு அவன் எழுந்து செல்ல..
“திஷானி ஏதோ அன்கம்பர்டபிளாவே இருக்கீங்களே என்னாச்சு..நா வந்ததுல எதுவும் ப்ராப்ளமா?”
“ஐயோ அதெல்லாம் ஒண்ணுமில்ல சாரு..அக்சுவலா சாரி சொல்லணும் உங்ககிட்ட இவரு உங்களோட கால் பேசும் போதெல்லாம் மனசுக்குள்ள திட்டிருக்கேன்..எனக்குள்ள தான்னாலும் ஏனோ உங்களை பார்த்த அப்பறம் ஒரு மாதிரி கஷ்டமாயிடுச்சு..”
“புரியுது டா..எந்த வைஃப் க்கு தான் ஹஸ்பெண்ட் இன்னொரு பொண்ணோட மொக்க போடுறத பொறுத்துக்க முடியும்..அதுவும் எப் பி ப்ரெண்ட்னா கண்டிப்பா அப்படி நினைக்க தோணும் தான்..”
“ம்ம்”
“பட் நிஜமா சொல்லணும்னா நாங்க இந்தளவு நல்ல ப்ரெண்ட்ஸ் ஆவோம்னு நினைச்சதேயில்ல.அதுவும் உங்கள பாத்துட்டு வந்தவுடனே என்கிட்ட விஷயத்தை சொன்னப்போ எனக்கு அப்படி ஒரு சந்தோஷம் தெரியுமா..”
“என்னைப் பத்தியா??”
“ம்ம் உங்களை பாத்த அன்னைக்கே உங்க ஆளு ப்ளட்..அத்தனை ஸ்ட்ராங்கா பேசினாங்க..”
“ம்ம் எனக்கு இன்னுமே இந்த ரிலேஷன்ஷிப்பை எப்படி எடுத்துக்கணும்னு தெரில சாரு..”
“ஏன் டா அப்படி சொல்றீங்க?”
“தெரில நா என்ன நினைக்குறேன் ஏன் இப்படி இருக்கேன் எதுவுமே..யார்கிட்டேயும் இதைப் பத்தி பேசவும் தோணல..மனசு குழப்பமா இருக்கு அது மட்டும் தான் தெரியுது..”
“ரிலாக்ஸ் திஷானி..தேங்க்ஸ் பர்ஸ்ட் ஆப் ஆல் என்கிட்டயாவது உங்க மனசை வெளிப்டுத்துறதுக்கு..சொல்லுங்க என்ன குழப்பம் உங்களுக்கு?”
“இல்ல சாரு எதோ ஒரு விதத்துல நா அவருக்கு பொறுத்தமில்லையோனு தோணிட்டே இருக்கு..”
“திஷானி அவங்ககூடவே இருந்த இந்த பத்து நாளுக்கு அப்பறமுமா உங்களுக்கு இப்படி தோணுது?”
“அதனால தான் ரொம்பவே தோணுது.. ஒரு ப்ரெண்டா சொல்லுங்க நா அவருக்கு ஏத்தவ தானா?”
“ம்ம் இதுக்கு என்னோட பதில்ல சொல்றேன் ஆனா சமளிக்குறதா நினைக்காதீங்க..ககணவன் மனைவி உறவுல ஒருத்தருக்கு ஒருத்தர் ஏத்தவங்கனு சொல்றது உருவத்தை வச்சு இல்ல திஷானி..நம்ம மனசு பொருத்த விஷயம்..நீங்களே சொல்லுங்க அபினவ் விட யாராவது உங்களை சந்தோஷமா வச்சுக்க முடியும்னு நினைக்குறீங்களா?”
இல்லையென்பதாய் அவள் தலையசைக்க,”அதே மாதிரி உங்க மேல அவரு காட்டுற லவ் வேற யார்கிட்டையாவது அவரால காட்ட முடியும்னு உங்களுக்கு தோணுதா?”
“அப்படி என்னால நினைச்சு பார்க்க முடில சாரு..”
“ம்ம் இது ஒண்ணு போதாதா அவங்கள உங்களுக்கு எவ்ளோ பிடிச்சுருக்குனு தெரிய..ஒரு ப்ரெண்டா கூட என்னை அவர்கிட்ட நெருங்க விட முடில உங்களால இந்த பொசசிவ்னெஸ் எல்லாருக்கும் எல்லார்கிட்டேயும் தோணாதுடா..
நானும் லவ் மேரேஜ் தான் அந்த அனுபவத்துல சொல்றேன் அவர் உங்கள பாக்குற பார்வைல நிறைய நிறைய காதல் இருக்கு பாசம் இருக்கு ஆனா துளியும் இரக்கமோ கல்யாணம் பண்ணிட்டோம் அதனால ஏத்துக்குறேன்ங்கிற நினைப்போ இல்லவே இல்ல..அஅவர் உங்கள உங்களுக்காகவே நேசிக்குறாரு..அப்படியிருக்க நீங்களா ஏன் உங்கள அவர்ட்ட இருந்து பிரிச்சு காட்றீங்க..
நம்மோட உருவம் குறை இதெல்லாம் சும்மா வெளி உலகத்துக்குதான்.அவங்க பேசுறதுக்காக நாம வாழ முடியாது..மனசை நேசிக்குற யாருக்கும் உருவம் ஒரு பொருட்டா தெரியாது திஷானி..அழகான லைப் அழகா வாழ ஆரம்பிங்க..நா சொல்றது புரியுது தான?”என்றவள் லேசாய் அவள் கைப் பற்றி அழுத்த சமாதானமாய் தலையசைத்தவள்,
“ரொம்ப தேங்க்ஸ் சாரு..மனசு கொஞ்சம் தெளிவான மாதிரி இருக்கு..இப்போ பீல் பண்றேன் இப்படி எனக்கும் ஒரு ப்ரெண்ட் இல்லையேனு..”
“என்ன இப்படி சொல்லிட்டீங்க இனி நாம ரெண்டு பேரும் ஒரு கட்சி டீல் தான?”,என்றுச் சிரித்தாள்.
அதற்குள் அபினவ் குழந்தையோடு அங்கு வர அந்த பேச்சை அப்படியே நிறுத்திவிட்டு அவனிடம் கவனம் செலுத்தினர்.
“சரி ரொம்வே டைம் ஆச்சு நா கிளம்புறேன்..உங்கள இப்படி மீட் பண்ணணும்னு தான் நினைச்சுட்டே இருந்தேன்..வெரி ஹாப்பி நவ்..பை டேக் கேர்..”
“நானே ட்ரப் பண்றேன் வெயிட் பண்ணு..”
“அதெல்லாம் வேணாம் நம்ம ஊரு தான நா பாத்து போய்க்குறேன்..பர்ஸ்ட் டைம் ஔட்டிங் வந்துருக்கீங்க என்ஜாய் யுவர் டைம்..”என்று அவள் நகர அபினவ் தன்னவளை பார்த்து அமர்ந்தான்.
“என்ன திஷா டியர் ரொம்ப கோவமா இருக்கியா?பர்ஸ்ட் டைம் மீட் பண்ண ப்ளான் பண்ணோம் நோ சொல்ல முடில..”
“என்னங்க இது அப்படியெல்லாம் ஒண்ணும் நா நினைக்கல..சொல்லப் போனா நாங்க ரெண்டு பேரும் இப்போ நல்ல ப்ரெண்ட்ஸ் ஆய்ட்டோம்..நம்பர் கூட வாங்கிட்டேன்..”
“பார்ரா அந்த மயக்கிக்கு இதுவேதான் வேலை எல்லாரையும் வழிக்கு கொண்டு வந்துருவா..”
“உண்மைதான் ரொம்பவே பாசிஸ்டிவ் அப்ரோச்..லைப்ல யாருமே வேண்டாம்னு நினைச்சாகூட இப்படி சிலரை பாக்கும் போது எதையோ மிஸ் பண்ணிண பீல் இருக்கு கண்டிப்பா..”
“இனி எதையும் மிஸ் பண்ண விட்றதா இல்ல..ஜாலியா இரு திஷா..சரி போலாமா”,என்றவன் எழுந்து கொள்ள தன்னிச்சையாய் அவன் கைப்பிடித்து எழுந்தவள் பற்றிய கையை விடாமலே நடக்க ஆரம்பித்தாள்..ஆனால் தவறியும் அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்கவில்லை.
இத்தனை நாட்களில் முதன் முறையாய் அவளாய் அவன் துணையை நாடியிருக்கிறாள் என்பதே அவனுக்கு நிறைவய் இருந்தது இன்னுமாய் தன்னவளை உரசியவாறு நடக்க ஆரம்பித்தான்.
காரில் அமர்ந்தவன் அவள் முகம் பார்க்க முடிந்த மட்டுமாய் தலையை வெளியே திருப்பியிருந்தாள் பெண்ணவள்.குறுஞ் சிரிப்போடு காரை கிளப்பியவன் நேராய் கடற்கரையில் நிறுத்தினான்.
ஒரு நொடி கேள்வியாய் பார்த்தவள் பின் ஒன்றும் கூறாமல் கீழேயிறங்க அவனும் ஒன்றும் கூறாமல் காரை லாக் செய்துவிட்டு அவளோடு வந்தான்.பார்க்கிங் ஏரியாவை கடந்து மணல்பரப்பின் அருகே சென்ற அடுத்த நொடி அவள் இடைப்பிடித்து அப்படியே தூக்கி விட்டிருந்தான் அபினவ்.
இதை சற்றும் எதிர்பாராதவளோ அவன் கழுத்தை சுற்றி தன் கையை இறுகப் பற்றினாள்.
“ஐயோ என்னங்க இது!!நானே வரேன் விடுங்க..”
“சாரி பேபி..நீ மணல்ல நடக்கலாமா இல்லையானு தெரில ஆனா இன்னைக்கு நா ஹாப்பியா இருக்கேன் சோ கடல்ல காலை நினைச்சே ஆகணும்..அதுனால நோ எக்ஸ்கீயூஸஸ்..பட் நல்ல வேளை நீ ஒல்லியா இருக்க இல்லைனா என் நிலைமை..”,என அவளை உலுக்க தன்னையும் மீறி செல்லமாய் அவன் மார்பில் குத்தியவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்..
கடல் அலைகளின் அருகில் சென்று அவளை இறக்கியவன் அவள் கைப்பிடித்து நிற்க தன் காலணிகளை கழற்றியவள் கையை இறுகப் பற்றினாள்.
“என்னாச்சு திஷா?”
“இல்லங்க பர்ஸ்ட் டைம் அதான் கொஞ்சம் பயமா இருக்கு..”
“என்ன சொல்ற பீச்சுக்குகு வந்ததே இல்லையா?”
“ம்ம் இல்லங்க..இந்த மணல்ல நடக்க முடியுமானு தயக்கம் இருக்கும் அதனாலேயே வர மாட்டேன்..பட் இன்னைக்கு எக்ஸ்பெக்டே பண்ணல தேங்க் யூ சோ மச்..”,என்றவள் கைகளில் தலை சாய்த்துக் கொண்டாள்.
அதன் பின்னான நிமிடங்கள் இருவருக்குமே சொல்ல முடியாத உணர்ச்சிக் கலவைகளை கொண்டிருந்தன.
சிறு பிள்ளையென அலை வரும் நேரம் கையை இறுக்கிப் பற்றுவதும் பின் இயல்பாவதுமென முகத்தில் மெல்லிய புன்னகையோடே இருந்தவளை பார்த்தவனுக்கு அவளை அப்படியே கையணைப்பிற்குள் வைத்து கொள்ள வேண்டும் போலிருந்தது.
பெண்ணவளுக்கோ வாழ்வையே ஜெயித்துவிட்ட உணர்வு அந்த நீரின் குளுமை காலை வருடும் நேரமெல்லாம் தன்னவனின் ஸ்பரிசம் காட்டும் குறுகுறுப்பு அவளுள்.
வாழ்க்கை மொத்தமாய் அழகாகிவிட்டதைப் போன்ற ஓர் உணர்வு..அந்த கடற்கரை காற்றோடு கூடிய தன்னவனின் அருகாமை அவளை மோன நிலைக்கு கொண்டு சென்றிருந்தது..
குழந்தையென இன்னும் ஒருதடவை ஒருதடவைனு அரைமணிநேரம் அவள் அப்படியே நிற்க நாளை மாறுபடியும் வரலாம் என சமாதானப்படுத்தி அவளை அழைத்து வந்தான்.
வரும் போது அவனுக்கு இன்னுமே சிரமமாய் இருப்பது நன்றாகவே தெரிந்தது.அவன் உடையும் ஈரமாய் இருக்க அதோடு அவளையும் தூக்கி வந்தவனுக்கு பயங்கரமாய் மூச்சு வாங்க வேகமாய் தண்ணீர் பாட்டிலை அவனிடம் நீட்டினாள்.
குடித்து முடித்தவன் பொறுமையாய்,”திஷா டியர் எதுக்கும் கொஞ்சம் வெயிட் போடாம பாத்துக்கோ இல்லனா என் நிலைமை..”,என முடிப்பதற்குள் சீட்டிலிருந்த குஷனை எடுத்து அவனை அடித்திருந்தாள்.
“அடிப்பாவி கஷ்டப்பட்டு தூக்கிட்டு வந்ததுக்கு வேற எதுவும் தரலனாலும் பரவால்ல இப்படி அடிக்குறியே”,என்று சிரித்தவனோடு சிரிப்பில் இணைந்துகொண்டவள் ஒன்றும் கூறவில்லை.
வீட்டிற்குள் நுழைந்தவர்களைப் பார்த்து சாரதா தலையில் அடித்துக் கொண்டார்.
“சின்னப் பசங்க மதிரி இப்படியா ஆட்டம் போடுவீங்க..கடவுளே போங்க போய் முதல்ல ட்ரெஸை மாத்துங்க”,என்றவாறு கிட்சனுக்குச் சென்றார்.
தங்களறைக்குள் நுழைந்த அபினவ் மாற்றுத் துணியெடுத்து திரும்ப திஷானி அவனை இறுகக் கட்டிக் கொண்டாள்.முதலில் தடுமாறியவன் பின் தன்னவளின் செயலில் முகம் மலர அவளை தன்னோடு சேர்த்துக் கொண்டான்..
“என்ன டீச்சரம்மா சடன் சர்ப்ரைஸ்..”என்றவனுக்கு பதில் கூறாமல் சட்டென அவனை தன்புறம் இழுத்து கன்னத்தில் இதழ் பதித்திருந்தாள்..
மெதுவாய் விலகியவள்,”தேங்க்ஸ் பார் எவ்ரித்ங்..”,என தன்னவனின் விழி பார்க்க இப்படி சொல்ற தேங்க்ஸ்னா எத்தனை தடவை வேணாலும் அக்செப்ட் பண்ணிக்குறேன் என மீண்டுமாய் அவளை மார் சாய்த்துக் கொண்டான்..
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!