அன்பு-9

by ஸ்ரீ
0 comments 18 views
A+A-
Reset

மறுநாள் காலை சென்னைக்குத் திரும்பியிருக்க அபினவ் அவளீடம் எப்போதும் போலவே இயல்பாய் இருந்தான்.ஆனால் அவளால் தான் தான் செய்ததை சாதாரணமாய் விட முடியவில்லை.அவனை மிகவும் நோகடித்து விட்டோமோ என மனதளவில் ஒடீந்து போயிருந்தாள்.

அது தெரிந்திருந்ததவனும் ஒன்றும் கேட்காமல் அமைதியாய் இருந்தான்.இருந்தும் அவளை தன்னருகிலேயே அமர்த்திக் கொள்ள அத்தனையையும் செய்தான்.

“திஷா டைம்ஷீட் பில் பண்ணணும் அர்ஜெண்ட் ப்ளீஸ் எனக்கு தட்டுல சாப்பாடு போட்டு இங்கேயே எடுத்துட்டு வர்றியா?”

“ம்ம் சரிங்க இதோ வரேன்”,என்றவள் தன்னவனுக்காய் வேக வேகமாய் எடுத்து வந்தாள்.

அவனுக்கு அது முக்கியமான வேலை இல்லையெனினும் அவளை சரி செய்வதற்கு இதெல்லாம் தேவையோ என தோன்ற உணவை அவள் ஊட்டி விட உண்ண ஆரம்பித்தான்.

அவனோடு சேர்ந்து அவளையும் சாப்பிட வைத்தான்.இரவு வரை அப்படி இப்படியாய் சமாளித்தவளுக்கு உறங்கச் செல்லும் நேரம் மறுபடியும் ஒருவித பதட்டம் வந்து ஒட்டிக் கொண்டது.எங்கேயோ வெறித்தவாறே ஹாலில் நின்றிருந்தவளை பின்னிருந்து இடைப்பற்றி அவன் இழுக்க,

“ஐயோ அத்தை மாமா யாராவது வந்துர போறாங்க..”

“தெரியுதுல அப்பறம் என்ன இங்க நின்னு கனவு கண்டுட்டு இருக்க..தூக்கம் வரலையா?”

“இல்லங்கஅது ஏதோ யோசனையில..”

“ம்ம் நல்லா யோசிக்குற..வா பேபி..”,என அழைத்துச் சென்றான்.வழக்கம் போல் திஷா ஓர் ஓரமாய் கட்டிலில் அடைக்கலம் தேட,

“திஷாஷா..”,அர்த்தமுள்ள அழைப்பு அவனிடமிருந்து.அது புரிந்தவள் மெதுவாய் அவன்புறம் திரும்பிப் படுத்தாள்.

அவன் ஒன்றுமே கூறாமல் அவளையே பார்த்திருக்க விழி தாழ்த்தியவளாய் தானாய் அவனருகில் நகர்ந்து படுத்தாள்.உதட்டோர புன்னகையோடு கையை தலைக்கடியில் வைத்தவாறு அவளைப் பார்த்தவன் அவளின் முன் தலையில் செல்லமாய் தட்டினான்.

“டீச்சரம்மா வர வர என்கிட்ட ஸ்டுடண்ட் மாதிரி பிகேவ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க..என்னாச்சு டியர் என்கிட்ட கூட சொல்ல முடியாத அளவுக்கு..”

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லங்க..சாரி..”

“சாரியா எதுக்கு டா?”

“நேத்து நா அப்படி நடந்துகிட்டதுக்கு..”

“ஹே இன்னுமா நீ அதை நினைச்சுட்டே இருக்க..நானே ஒண்ணும் சொல்லல அப்பறம் என்ன திஷா..கல்யாணம் நடந்ததுக்காக எல்லாமே உடனே நடந்தாகனும்னு எந்த கட்டாயமும் இல்ல டா..அதுவா இயல்பா நடக்கனும்.நேத்தும் அப்படிதான் ஆச்சு..அதையும் தாண்டின ஏதோ ஒன்னு உன்னை அன்கம்பர்டபிளா பீல் பண்ண வச்சுருச்சு..

சொல்ல போனா என் மேல தான் தப்போனு கூட யோசிச்சேன்.என்னதான் என் கன்ட்ரோலை இழந்திருந்தேன்னாலும் உன்னை ஹர்ட் பண்ணிறகூடாதுனு நிச்சயமா கவனமா தான் இருந்தேன் திஷா..அதையும் மீறி..ஐ அம் சாரி..”,என்றவன் அவள் கையை எடூத்து தனக்குள் வைத்துக் கொண்டான்.

“ஐயோ சத்தியமா அதெல்லாம் இல்ல..எனக்குதான்..நாதான் தேவையில்லாம..”

“சரி விடு திஷாம்மா..ரிலாக்ஸ்..ரெண்டு நாளா எவ்ளோ ஹாப்பியா இருந்த அப்படியே இரு வேற எதையும் போட்டு குழப்பிக்காத..ஒழுங்கா தூங்கு”,என்றவாறே தன் கையை அவள் தலைக்கடியில் நீட்ட தன்னோடு சேர்த்து நெற்றியில் இதழ் பதித்து விடுவித்தான்.

“நாளையிலிருந்த ஆபிஸ் செம கடுப்பு பேபி..நைன் அவர்ஸ் வில் மிஸ் யூ பேட்லி..ஆமா நீ எப்போ ஸ்கூல் போக ஆரம்பிக்க போற?”

“”நா இன்னும் டூ டேஸ் கழிச்சு போலாம்னு இருக்கேன்..இவ்ளோ லாங்க் லீவ் எடுத்ததேயில்லையா அதான் ஒரு மாதிரி சோம்பேறி தனமா இருக்கு..”

“அப்போ பசங்க இன்னும் ரெண்டு நாள் ஜாலியா இருப்பாங்கனு சொல்லு..”

“பசங்க மட்டுமா இல்ல அன்னைக்கு சாரு சொன்ன மதிரி நீங்களுமா?”,என்றவள் சிரிக்க

“ஐயையோ கண்டுபிடிச்சுட்டியா”,என போலியாய் அதிர்ந்தவனும் சிரிப்பில் இணைந்து கொண்டான்.

மறுநாள் அவனுக்காய் பார்த்து பார்த்து சமைத்து அலுவலகத்திற்கு பேக் செய்து அவனுக்கான உஉடையிலிருந்து அனைத்தையும் தயார் செய்து வைத்தாள்.அவனும் அவசர அவசரமாய் கிளம்பியதில் அவளை பாடாய் படுத்திக் கொண்டிருந்தான்.அதைக் காணும் இதை எங்கே என அனைத்தையும் கொடுத்து அவனை அனுப்பிவிட்டு அமர்ந்தவளுக்கு தன்னவனை நினைத்து மனம் இன்னுமே மென்மையடைந்ததாய் தோன்றியது..

அவளை சாதாரணமானவளாய் அவனைப் போன்ற ஒருத்தியாய் தான் ஒவ்வொரு முறையும் காண்கிறான்.எப்படி அதட்டிஉருட்டி வேலை வாங்குகிறான்.அப்போ எல்லோரையும் போன்று தான் நானுமா..என்னாலயும் இயல்பான வாழ்க்கை வாழ முடியும் தான்.நானா தான் எதையோ போட்டு குழப்பிட்டே இருக்கேன்..”என்று தன் சிந்தனையில் உழன்றவளை கன்னத்தில் பதிந்த அழுத்தமான முத்தம் நடப்புகிற்கு அழைத்து வந்தது.

தன்னவனை நோக்கித் திரும்பியவள் கண்களுள் அவனை நிறைக்க,”திஷா பேபி..மிஸ் யூ பேட்லி..சாரி பேபி லேட்டா எழுந்ததுனால இவ்ளோ டென்ஷன்.ஈவ்னிங் எவ்ளோ சீக்கிரம் முடியுமோ வந்துரேன் சரியா..ஹவ் டு கோ..பை டா என லேசாய் சாய்த்து தன் பாணியில் நெற்றியில் இதழ் பதித்துச் சென்றான்.

“பாத்து போய்ட்டு வாங்க”,என வேகமாய் கூறியவளைப் பார்த்து கண்ணடித்துச் சிரித்து கிளம்பினான்.

மதிய நேரம் வரை சாரதாவோடும் ராகவனோடும் பேசியவாறு பொழுதை கழித்தவளுக்கு அவர்கள் உறங்கச் சென்றப் பின் என்ன செய்வதென தெரியாமல் சுற்றி வந்தாள்.

“அவர் சாப்டாரா என்ன பண்ணிட்டு இருக்காரு  தெரிலையே..”,என அவளள் யோசித்து முடிக்கும் முன் அவனிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது.

“ஹாய் திஷா டியர் என்ன பண்ற சாப்டியா?நா இப்போ தான் லஞ்ச் முடிச்சேன்..டேஸ்ட் செமயா இருந்தது..லவ் யூ டீ பொண்டாட்டி..”

அதை பார்த்தவளுக்கு ஏதோ அவன் தன் எதிரிலேயே அமர்ந்து அதை தன்னிடம் கூறுவது போன்றதொரு பிரமை..மனம் சிலிர்க்க அவனுக்கு பதில் அனுப்பிவிட்டு அமர்ந்தவளுக்கு மனது நிலையில்லாமல் தவிக்க என்ன செய்வைதென யோசித்தவள் சாருவிற்கு அழைக்கலாம் என முடிவு செய்து கால் செய்தாள்.

“ஹாய் திஷானி எப்படியிருக்கீங்க?”

“நல்லாயிருக்கேன் சாரு..நீங்களும் குட்டியும் எப்படியிருக்கீங்க..ஆபிஸ் டைம்ல டிஸ்டர்ப் பண்ணிடேனா?”

“நாங்களும் சூப்பரா இருக்கோம் டா..இல்ல இல்ல இன்னைக்கு லீவ் தான் ரொம்ப மொக்கையா இருந்துச்சு சோ ஆபீஸ் மட்டம் போட்டாச்சு..”

“ஓஓ..”

“என்னாச்சு டா எதுவும் ப்ராப்ளமா திஷானி குரலே சரியில்ல..அபி எங்க??”

“எப்படி கண்டுபிடிச்சீசீங்க!!அவ்ளோவா தெரியுது..அவர் ஆபீஸ் ஜாயின் பண்ணிடாரு இன்னைக்குதான்..”

“ஓ அப்போ இது பசலை நோயா!!தலைவனை காணாமல்..ஹா ஹா”

“ஐயோ அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல சாரு..இது வேற எப்படி ஆரம்பிக்குறதுனு தெரில..அதான்..”

“சரி ப்ரீயா இருந்தா மீட் பண்ணலாமா பேசலாம்”

“ம்ம் உங்களுக்கு ப்ராப்ளம் இல்லையா வீட்டுக்கு வாங்களேன் ..குட்டியும் அழைச்சுட்டு வறீங்களா?”

“ம்ம் சரி டா வரேன் அவ தூங்குறா எழுந்தவுடனே வரேன்..”

“ம்ம் ஓ.கே சாரு..பை..”

மாலை ஐந்து மணியளவில் சாரு அங்கே வர திஷானி அவளை மாமனார் மாமியாருக்கு அறிமுகப் படுத்தினாள்.

“வாம்மா அபினவ் சொல்லிருக்கான் உன்னைபத்தி..நேர்ல பாத்ததுல ரொம்ப சந்தோஷம்…அடடா குட்டி பொண்ணு பாட்டிகிட்ட வாங்க..என்ன சாப்டுறீங்க”,என மேலும் சில நிமிடம் பேசிவிட்டு திஷானி தங்களறைக்கு அவளை அழைத்துச் செல்ல குழந்தை பெரியவர்களோடு விளையாட ஆரம்பித்திருந்தாள்.

“சொல்லுங்க திஷானி என்னாச்சு முகமே சரியில்ல..”

“அது வந்து எப்படி சொல்றதுனு தெரில சொல்லலாமானு கூட தெரில ஆனா நா ரொம்பவே குழம்பிருக்கேன் சாரு..ஆனா எனக்கு இதை இப்படியே கொண்டு போக தோணல..”

“நீங்க பேசுறதுலயே தெரியுது விஷயம் கொஞ்சம் சென்சிட்டிவ்னு..உங்க ரெண்டு பேரோட பெர்சனலா..அபி எதுவும் உங்ககிட்ட??”

“ஐயோ அப்படியெல்லாம் இல்ல..நாங்க பாண்டிச்சேரி போய்ருந்தோம்..நல்லா தான் போச்சு எல்லாம்..கடைசி நாள் நா தான் லூசு மாதிரி..என்ன மென்று முழுங்கி விஷயத்தை கூறினாள்.

ஆதரவாய் அவள் கைப்பற்றி அழுத்தியவள்,”திஷா உங்க பயம் நியாயமானது தான் ஆனா அதே நேரம் 100% அப்படிதான் நடக்கும்னு இல்லையே..ஏன் நீங்க பாசிட்டிவ் சைடையும் யோசிக்க கூடாது..”

“கரெக்ட்தான் ஆனா நா நினைக்குறது நடந்துட்டா அப்பறம் அவருக்கு தான கஷ்டம் சாரு..என்னையும் குழந்தையும் வச்சுட்டு ரொம்பவே கஷ்டபடுவாரு..”

“திஷானி குழந்தை மாதிரி பேசுறீங்க நீங்களே..அபி உங்களை என்னைக்குமே கஷ்டமா நினைக்க மாட்டாங்க..அப்படி நினைக்குறவங்களா இருந்தா தானே விரும்பி போய் உங்களை எதுக்காக கல்யாணம் பண்ணணும்?

இப்போதைக்கு இந்த யோசனையை கொஞ்சம் ஓரம் கட்டி வைங்க எனக்கு தெரிஞ்சு நீங்க நடந்த விதத்தை வச்சு அவரே உங்களுக்கு கொஞ்சம் டைம் குடுப்பாங்கனு தான் தோணுது..ஒருத்தரை ஒருத்தர் இன்னும் புரிஞ்சு லவ் பண்ணி வாழ்க்கை ரசிச்சு வாழுங்க அப்பறம் தாம்பத்யம்ங்கிறது அதன் போக்கில் நடக்கும் அதுக்கு அப்பறம் நீங்க இந்த கவலையெல்லாம் படலாம்..

இப்போவே இவ்ளோ யோசிச்சு புதுமண தம்பதிகளுக்கான வசந்த காலத்தை விட்றாதீங்க..மோர் தன் எனிதிங் உங்க காதல் மட்டும் தான் வாழ்க்கை முழுவதற்குமான நிலையான ஒரு விஷயம்..சோ மத்ததெல்லாம் இரண்டாம் பட்சம் தான்..சரியா?”,என முன்தலையை வருடிக் கேட்க சட்டென யோசிக்காமல் சாருவின் தோள் சாய்ந்து கொண்டாள்.

“புரியுது சாரு..கண்டிப்பா நீங்க சொன்ன எல்லாத்தையும் மனசுல வச்சுக்குறேன்.என்ன தான் நீங்க அவரு ப்ரெண்ட்னாலும் இந்த விஷயத்துல எனக்கு சப்போர்ட் பண்ணுவீங்க தான?”,என பாவமாய் கேட்டாள்.

“திஷானி..இந்த நிமிஷம் வரை நா உங்க ப்ரெண்டா தான பேசிட்டு இருக்கேன்..எனக்கு நீங்க ரெண்டு பேரும் நல்லா சந்தோஷமா இருக்கனும் அதான் முக்கியம்..சோ எப்போ என்ன குழப்பம்னாலும் என்கிட்ட மனசுவிட்டு பேசுங்க..சரியா?”

“தேங்க் யூ சோ மச் சாரு..நா இவ்ளோ குழப்பவாதியே கிடையாது..இப்போ தான் இப்படி ஆய்ட்டேன்..ஒரு வேளை மறுபடியும் வேலைக்கு போக ஆரம்பிச்சா சரி ஆய்டுவேன்னு நினைக்குறேன்..”

“ம்ம் குட் எல்லாம் சீக்கிரமே சரி ஆய்டும் ரிலாக்ஸ் டா..சரி ரொம்ப நேரம் ஆச்சு நா கிளம்பட்டுமா..வீட்ல தேடுவாங்க..”

“இருங்க அவர் வர்ற டைம்தான் உங்களை பாத்தா ரொம்ப சந்தோஷப்படுவாரு..அதுவும் போக இதுக்கு மேல பாப்பாவோட தனியா போக வேணாம்..அவரே ட்ராப் பண்ணட்டும்..சொன்னா சொன்னதுதான் வாங்க”,என அவளுக்கு பேச வாய்ப்பளிக்காமல் ஹாலிற்கு அழைத்துச் சென்றாள்.

அதற்குள் சாரதா குழந்தைக்கு உணவு ஊட்டிவிட சாருவிற்கோ ஆச்சரியம்,”ம்மா இன்னைக்கு மழை கொட்ட போகுது..என் பொண்ணு ஆர்பாட்டம் பண்ணாம சாப்டுறா!”

“என் செல்லத்தை இப்படி சொல்றியே அவ எவ்ளோ சமத்தா இருக்கா உனக்கு தான் அவளை பாதுக்க தெரில அப்போ”,என அவர் சிரிக்க,

“சாரு அப்படியில்ல உன் ப்ரெண்டையே வளர்த்தவளாச்சே அப்பறம் உன் பொண்ணை வளர்க்குறது என்ன கஷ்டமா சொல்லு”,என ராகவன் அவளுக்கு உஅதவிக்கு வந்தார்.

“அப்படி சொல்லுங்கப்பா..அந்த வானரத்தையே வளர்த்தா இவ எல்லாம் ஒண்ணுமேயில்ல தான்”,எனும்போதே

“அதை ஒரு மனுஷ குரங்கு சொல்ல கூடாது”,என்றவாறு அபினவ் உள்ளே வந்தான்.

“பொறுக்காதே மூக்கு வேர்த்துருமே..”,என்றவாறே தட்டை அவனிடமிருந்து நகர்த்தி அவள் உண்ண ஆரம்பிக்க அனைவரும் அவள் செய்கையில் சிரிக்க அந்த இடைவெளியில் தன்னவளுக்கான முத்தத்தை காற்றில் பரிசளித்தான்.சட்டென அவனின் செய்கையில் முகம் மலர்ந்தவள் அவன் பையை வாங்கி கொண்டாள்.

“நீயும் ப்ரெஷ் ஆய்ட்டு வா அபி சேர்ந்து சாப்டலாம்”,என சாரதா அவனிடம் கூற டூ மினிட்ஸ் வந்துரேன்ம்மா என்றவாறு தங்களறைக்குச் சென்றான்..

அவனுக்காய் ப்ரிட்ஜிலிருந்து ஐஸ் வாட்டர் எடுத்துச் சென்றவள் அவனைத் தேட பின்னிருந்து அணைத்தவன் மிஸ் யூ டி பொண்டாட்டி..என்ன சர்ப்ரைஸ் அந்த குரங்கு வீட்டுக்கெல்லாம் வந்துருக்கு..

“இல்லங்க லீவ்னு சொன்னாங்க நா தான் பாப்பாவையும் கூட்டிட்டு வாங்களேன்னு சொன்னேன்..”

“போச்சு இது வர ஒருதடவை கூட நா அவளை வீட்டுக்கு கூப்டதேயில்ல என்னை கொல்ல போறா..”

“பரவால்ல நீங்க பயப்படுற ஒரே ஆள் அவங்க தான் போலயே..”,என்றவள் சிரிக்க,

“பயமெல்லாம் இல்ல கொஞ்சம் அட்வைஸ் பண்ணியே கொல்லுவா அதை தான் தாங்கிக்க முடியாது..”,என்று நகர நினைத்தவன் அவளருகில் வந்து..

“நீ என்னை மிஸ் பண்ணவேயில்ல போலயே..ஜாலியா இருந்துருக்க அப்படிதான?”

“ஏன் இப்படி சொல்றீங்க?”

“பின்ன நா வந்தவுடனே மிஸ் யூ சொன்னேன் ரிப்ளையே இல்லையே”,என கன்னத்தை காட்ட சிரித்தவாறே இதழ் மதித்து நகர்ந்தாள்.

உணவு மேஜைக்கு வந்தவன் ஆருத்ராவை தூக்கி வைத்து கதைபேசி விளையாடி அதன்பின் உணவருந்த ஆரம்பித்தான்.பேச்சும் சிரிப்புமாய் உணவை முடித்து சாரு கிளம்பத் தயாராக அபினவ் அவளை ட்ராப் செய்வதற்காக கார் சாவி எடுத்துக் கிளம்பினான்.

திஷானியிடம் அர்த்தமுள்ள பார்வை பதித்து தான் கூறியதை நினைவில் வைத்துக் கொள்ள சொல்லி ஜாடை காட்டிச் சென்றாள்.காரை கிளப்பி வாசலை தாண்டியவுடன் அவளே பேச்சை ஆரம்பித்தாள்.

“திஷானி தான் கூப்டுருந்தாங்க..கால் பேசினப்போ அவங்க வாய்ஸே சரியில்லை அதான் வர மாட்டேன்னு சொல்ல முடில..”

“ஹே என்ன இது புதுசா எக்ஸ்ப்ளனேஷன்லா குடுத்துட்டு இருக்க லூசு..நா இதுவரை உன்னை இன்வைட் பண்ணதேயில்லையேனு தான் பீல் பண்ணிட்டு இருக்கேன்..”

“ச்சச்ச அதெல்லாம் இல்ல பக்கி பெலோ..திஷா கூப்ட்டு நா வர்றது வேற நீங்க பேச்சுலரா இருக்கும் போது வர்றது வேற தான..அதெல்லாம் ப்ராப்ளம் இல்ல..நா உங்க கிட்ட பேச வந்ததே வேற..பட் எப்படி ஆரம்பிக்குதுனு தெரில..”

“என்னாச்சு டா திஷா எதுவும் சொன்னாளா..என்ட்ட பேச எதுக்கு இவ்ளோ தயங்குற?”

“அப்படியில்ல..என்ன தான் ப்ரெண்ட்ஸ்னாலும் உங்க பர்சனல்ல தலையிடுறது  கொஞ்சம் ஹெசிட்டேட் ஆகுது..”

“லூசு அவளே உன்னை நம்பி கூப்ட்டு பேசிருக்கா அப்பறமும் நீ என்ன இப்படி யோசிக்குற எதுவாயிருந்தாலும் சொல்லு டீ..”

“அபி அவங்க உங்களை ரொம்ப ரொம்பவே நேசிக்குறாங்க..அவங்க உலகமாவே பாக்குறாங்க..பட் அட் த சேம் டைம் குழந்தைங்கிற விஷயத்துக்கு அவங்க இன்னும் பக்குவ படலையோனு தோணுது..”

“ம்ம் நானும் நினைச்சேன் இதை..சடனா அவ வித்யாசமா பிகேவ் பண்ணவுடனே சட்டுனு எனக்கு அதை எப்படி எடுத்துக்கனு தெரில டா..”

“ம்ம் புரியுது பட் அவங்க பயம் குழந்தை பெத்துக்குறதுல இல்ல.ஒருவேளை அந்த குழந்தையும் அவங்களை மாதிரியே ஆய்ட்டா என்ன பண்றதுனு தான்..”

“வாட் ரப்பிஷ்..எந்தகாலத்துல இருக்கா அவ..நிஜமாவே இதுதான் அவளோட பயமா?”

“ம்ம் ஆமா அபி..அப்படி பொதுவா அதை முட்டாள்தனம்னு சொல்லிட முடியாது..அவங்க எத்தனை இழப்புகள் அவமானங்களை சந்திச்சுருப்பாங்க அதோட பயம்தான்..பட் இது நிரந்தரம் கிடையாது நிச்யமா..நானும் நிறையவே பேசிருக்கேன்..அவங்ககிட்ட எதார்த்தத்தை புரிஞ்சுககோங்கனு தான் சொன்னேன் பட் உங்ககிட்ட தான் அவங்க தாட்ட நியாயப்படுத்தி பேசிட்டு இருக்கேன்.

கொஞ்சம் டைம் கொடுங்க அவங்களுக்கு நிச்சயமா அவங்க பயம் மறையும் சீக்கிரமே..உங்க லவ் அதை நிச்யம் செய்யும்.ப்ரெண்ட்ஸே இல்லனு சொன்னவங்க இப்போ அவங்களா தேடி ந்து தன் மனசுல இருக்குற விஷயத்தை ஷேர் பண்றாங்கனா எவ்ளோ பெரிய விஷயம் இந்த பதினைஞ்சு நாள்ல அதுவே நடக்கும் போது இதெல்லாம் கண்டிப்பா மாறும்..சோ அதுவரை நீங்க தான்..”

“ம்ம் புரியுது சாரு..கண்டிப்பா நா பாத்துக்குறேன் இதை அவ என்கிட்டேயே நேரா சொல்லிருக்கலாம்..பட் பரவால்ல உன்கிட்டையாவது ஷேர் பண்றாளே அதுவர சந்தோஷம்..ரொம்பவே பாவம்டா அவ..லைவ்ல நிறைய மிஸ் பண்ணிருக்கா..அதெல்லாத்தையும் அவளுக்கு மொத்தமா ஈடுகட்டணும் நிச்சயமா நீ சொல்ற அந்த டைம் அதையெல்லாம் நிறைவேத்தும் ..நா பாத்துக்குறேன்..ஆனாலும் உன்னையெல்லாம் ஒரு ஆளுனு மதிச்சு பேசிருக்கா பாரு..என்னத்த சொல்ல..”,என விளையாட்டாய் முடிக்க,

“ம்ம் நேரம் தேவைதான் புருஷனும் பொண்டாட்டியும் நல்ல சென்டிமெண்ட் சீன் ஓட்டிட்டு இப்போ பேச்சை பாத்தியா..ஆளும் மூஞ்சியும்..”

“ம்ம் அவ தலையெழுத்து நீ தான் ப்ரெண்டா அமையணும்னு விதி யாரை விட்டது..பாவம் என் திஷா பேபி..”

“ஹய்யோடா ரொம்பத் தான்..ஓவரா பேசினா அவங்ககிட்ட உங்க எப் பி ப்ரெண்ட்ஸ் எல்லாம் இன்ட்ரோ குடுத்துருவேன் பரவால்லையா..”

“பிசாசே என் வாழ்க்கையை இழுத்து மூடனும்னா முதல் ஆளா வந்துருவியே..உன்ட்ட பேசினதுக்கே ஆரம்பத்துல மேடம் கண்ணாலையே எரிச்சாங்க..இதுல மொத்த ப்ரெண்ட் லிஸ்ட் பத்தா அவ்ளோ தான் சோறே போடமாட்டா..”

“ஹா ஹா பரவால்ல..பதினைஞ்சு நாள்லயே புருஷனுக்கான அத்தனை க்வாலிடீஸும் பக்காவா வந்துருச்சே..நல்லது தான்..”,என்று அவள் சிரிக்க அடிப்தை போல் கை ஓங்கியவனும் அவளோடு சிரிப்பில் இணைந்து கொண்டான்.

அவளை இறக்கிவிட்டு உள்ளே செல்லும் வரை காத்திருந்து கிளம்பியவன் வீட்டை அடைய அனைவருமாய் ஹாலில் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவனும் இயல்பாய் சென்று திஷானியின் அருகில் அமர்ந்துகொண்டான்.டீவியை பார்த்துக் கொண்டிருந்தலும் அவ்வப்போது அவளின் தவிப்பான பார்வை தன்னை தீண்டிச் செல்வதை கவனித்தவனுக்கு புரிந்தது சாரு தன்னிடம் எதையும் கூறியிருப்பாளோ என்ற தவிப்பிருந்தது அந்த பார்வையில்.

இருந்தும் தானாய் எதையும் கேட்க வேண்டாம் என முடிவு செய்தவன் அமைதி காத்தான்.சற்று நேரத்தில் அனைவருமாய் உறங்கச் செல்ல தயக்கமாய் உள்ளே வந்தவளை கண்டவன் அவள் வாய்திறக்கமாட்டாள் என்ற முடிவில் பேச்சை ஆரம்பிக்க எண்ணி வாய்திறந்த நேரம்,

“அபிப்பா உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்..”

அவளின் அழைப்பே அவள் மனநிலையை உணர்ந்த கைநீட்டி அவளை தன்னருகில் அழைத்தான்.தயக்கமாய் வந்தவள் அவனருகில் அமரப் போக அவளை தடுத்தவன் தன் மடியில் அமர்த்தினான்.

குழந்தையைப் போல் அவளை சுற்றி கைப்போட்டு அவள் தோளில் தன் தாடையை பதித்தவன்,

“இப்போ சொல்லு திஷா பேபி..”

“இல்லங்க நமக்கு வந்து..அது..”

“அட எதுவாயிருந்தாலும் சொல்லு திஷாம்மா..”

“நாம கொஞ்ச நாளுக்கு அப்பறம் குழந்தையை பத்தி யோசிக்கலாமா!!ஏனோ அந்த விஷயம் மைண்ட்ல வந்தாலே என்னால சகஜமா இருக்க முடில..இதை உங்ககிட்ட சொல்லாம குழப்பத்தோட இருக்குறதுக்கு சொல்லிடுறது பெட்டர்னு தான்..சாரி தப்பா எடுத்துக்காதீங்க..”

“இதுல தப்பா நினைக்க ஒண்ணுமேயில்ல திஷா..இன்பேக்ட் நானே உன்கிட்ட இதைப்பத்தி பேசணும்னு இருந்தேன்..என் திஷா பேபியை ரொமான்ஸ் பண்ணி கொஞ்ச நாள் டார்ச்சர் பண்ணலாம்னு எனக்கும் தோணிச்சு ஜுனியர் வந்துட்டாங்கனா அப்பறம் என் பொண்டாட்டி என்னை கண்டுக்கவே மாட்டா தான..சோ இந்த டீல் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு..”,என விளையாட்டாய் தன் சம்மதத்தை அவளிடம் தெரிவித்தான்.

“உங்களுக்கு கோபமே வராதா!!எப்படி எல்லாத்தையுமே சாதாரணமா எடுத்துக்குறீங்க?”

“ஆஹா இது நல்லாயிருக்கே அப்போ கோபபட்டா சமாதானப்படுத்த ஸ்பெஷலா கவனிப்பியா டியர்?”,என்றவன் கவள் கழுத்து வளைவில் இதழ்பதித்தான்.

“ஐயோ போதும் தெரியாம கேட்டுட்டேன்..”,என எழுந்து கொண்டவள் என்ன நினைத்தாளோ அவனருகில் அமர்ந்து மடியில் தலைசாய்த்துக் கொண்டாள்.

ஒன்றும் கூறாமல் அவள் தலையை வருட ஆரம்பித்தவன் தன் கால் நனைத்த ஒரு துளி நீரில் அவள் கண்ணைத் துடைத்தவாறே,

“ஓய் நாதான் பாப்பாவ பத்தி இப்போ யோசிக்க வேண்டாம்னு சொல்லிட்டனே அப்பறம் எதுக்கு அழற?”,என நக்கலாய் கேட்க,

“நா உங்களுக்கு ரொம்ப கஷ்டத்தை கொடுக்குறேன்ல..”

“ஹே லூசு..இப்போ அப்படி என்ன நடந்துருச்சு..ஒண்ணுமில்லாத விஷயத்துக்கு இவ்ளோ ஃபீலிங்க்ஸ்லா ரொம்வே அதிகம் சொல்லிட்டேன்..”

“இல்லங்க எனக்கே தெரியுது நா பண்றதெல்லாம் ரொம்ப டார்ச்சர்னு ஆனாலும்..”

“திஷா பேபி..ரொமன்ஸ்பண்ற நேரத்துல இப்படி அழுகாச்சி சீன் ஓட்டுறதே தப்பு இதுல இப்படி தேவையில்லாம பேசி நீயும் குழம்பி என்னையும் படுத்தி இதெல்லாம் எவ்ளோ பெரிய அநியாயம் தெரியுமா?”

அந்த அழுகையையும் மீறி அவள் நிமிர்ந்து பார்த்து அவனை முறைக்க அதற்காகவே காத்திருந்தவன் அவளிதழை சிறைப் பிடித்திருந்தான்.அவளின் குழப்பம் பயம் கவலை அனைத்திற்கும் வடிகாலாய் அந்த ஒற்றை இதழ் ஒற்றல் இருக்க நிமிடங்கள் நீண்டு கொண்டே போனது…மூச்சு காற்றுக்காக ஏங்கிய இதழ்கள் நான்கும் ஒரு கட்டத்தில் பிரிய மனமின்றி பிரிய கண்கள் நான்கும் சந்தித்துக் கொள்ள தடுமாறி நின்றன.

அவன் மடியிலிருந்து எழுந்தவளுக்கு படுக்க இடம் கொடுத்து அவன் நகர முகம் மொத்தமும் பரவியிருந்த வெம்மையோடு அவனை ஏறிடக் கூட தைரியமில்லால் படுத்திருந்தவளை தன் அணைப்பிற்குள் கொண்டு வந்தவன்,

“என்னை கஷ்டப்படுத்துறதா நினைச்சு உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காம நிம்மதியா தூங்கு திஷாம்மா..குட் நைட்”,என்றவனின் இயத்துடிப்பை கேட்டவாறே உறங்கிப் போனாள் திஷானி.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode