12
திஷானியை இறக்கிவிட்டு அலுவலகத்தை அடைந்தவன் அப்போதுதான் நேரத்தை பார்க்க அவளுக்காக சீக்கிரமே கிளம்பியது நினைவிற்கு வந்தது.சட்டென நினைவு வந்தவனாய் சாருவிற்கு அழைத்தான்.
“சொல்லு எரும..என்ன காலைலேயே கால் ஆபீஸ் போற ஐடியா இல்லையா..”
“ஐயையையே அதெல்லாம் வாயா இல்ல வேற எதாவதா பேசவே விடமாட்டியா மனுஷன?””
“சரி சரி சொல்லுங்க..சாப்டீங்களா?”
“ம்ம் நீ”
“ம்ம் ஆச்சு..இன்னைக்கு என்ன பஞ்சாயத்து வர வர புருஷனும் பொண்டாட்டியும் போன் பண்ணாலே பக்குனு இருக்கு!!”
“ஆமா இவங்க பெரிய ஐக்கோர்ட் ஜட்ஜ் பஞ்சாயத்தை தீர்த்து வைக்க போறாங்க..போவியா..”
“என்ன ரொம்ப நல்ல மூட்ல இருக்குற மாதிரி இருக்கு..நா வேணா திஷானிக்கு கால் பண்ணி எப் பில உங்க ஃபேன் ஒருத்தி யாரு அவ..பேரு கூட..”
“சனியனே வாய்ல வசம்ப வச்சு தேய்க்க..நா சந்தோஷமா இருந்தா பொறுக்காதே உனக்கெல்லாம்..இப்போ என்னை பேசவிடுவியா மாட்டியா?”
“ஹா ஹா ஹப்பாடா இன்னைக்கு பொழுது எனக்கு ரொம்ப நல்லாயிருக்கும்..சொல்லுங்க என்ன விஷயம்..”
“இல்ல டீ நேத்து திஷா ரொம்ப எமோஷனல் ஆய்ட்டா..நீ அன்னைக்கு சொன்னது கரெக்ட் தான் ரொம்பவே சென்சிடிவானவ தான் அவ.”
“”ம்ம் உண்மைதான் எப்பவுமே தன் சக்திக்கும் மீறி தைரியமா இருக்குறவங்க எல்லாமே மனசளவுல ரொம்பவே பலகீனமா தான் இருப்பாங்க என்ன அதை யார்கிட்டேயும் காட்டிக்க மாட்டாங்க..”
“எனக்கு ரொம்ப ஒரு மாதிரி ஆய்டுச்சு அவ எந்தளவு தனிமையை வெறுத்துப்பானு புரிஞ்சுக்க முடிஞ்சுது..அவ மனசுவிட்டு பேசினதே உன்கிட்ட மட்டும்தான்னு நினைக்குறேன்..எனக்கு விஷயம் தெரிஞ்ச மாதிரி காட்டிக்கல ஆனா அவளாவே மேலோட்டமா விஷயத்தை சொல்லிட்டா..அதை என்கிட்ட தெளிவுபடுத்தின அப்பறம் எந்த தயக்கமும் இல்லாம பேசுறா..”
“ம்ம் புரியுது..கொஞ்ச நாளைக்கு அந்தடாபிக் பத்தி பேச்சு வராம பாத்துகோங்க..அதே நேரம் இன்டரெக்டா அவங்க பயத்தை போக்குறதுக்கு கொஞ்சம் பேச்சு குடுங்க..எல்லாம் சீக்கிரமே சரி ஆய்டும்..எப்போ என்ன ஹெல்ப்னாலும் என்கிட்ட கேளுங்க கண்டிப்பா பண்றேன்..சரியா..”
“ஓ ஹெல்ப் பண்ண மாட்டேன்னு வேற சொல்வீங்களா மேடம்..போடி லூசு உனக்கெல்லாம் வேற ஆப்ஷனே இல்ல..நாளைக்கே எங்களுக்கு குழந்தை பொறந்த அப்பறம் அதை நீ தான் வளர்க்கனும்..நாங்க செகண்ட் ஹனிமூன் கிளம்பிடுவோம்..புரியுதா!”
“ம்ம் ரொம்ப தேவைதான்.என் புள்ளையை வளர்க்குறதுக்குள்ளயே எனக்கு நாக்கு தள்ளுது இதுல மறுபடியும் முதல்ல இருந்தா ஓடிருங்க,.”
“ச்ச்ச எனக்கு தான் கல்யாணமே ஆய்டுச்சே என்ன போய் ஓடிப் போக சொல்ற..”
“அடிச்சை உங்க மூஞ்சிக்கு திஷானியே அதிகம் இதுல இன்னோன்னு வேறயா..போய்யா போய் பொழப்பை பாரு..”
“போடி லூசு..பை..”,என அழைப்பைத் துண்டித்தவன் முகத்தில் புன்னகை தழும்ப,
“தேங்க்ஸ் பார் எவ்ரிதிங் எருமமாடு..”,என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தன் வேலையை கவனிக்கத் தொடங்கினான்.
தன்னவன் அழகாய் ஆரம்பித்து வைத்த நாள் முழுவதுமே அழகாய் இருந்தது திஷானிக்கு..
மாலை 4 மணிக்கு வீட்டிற்கு வந்தவளிடம் ராகவனும் சாரதாவும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
“என்னடா மருமகளே இன்னைக்கு எப்படி போச்சு?”
“நல்லா போச்சு மாமா..அந்த வாண்டுங்க பண்ற அட்டகாசத்தையெல்லாம் பார்க்க பார்க்க அலுக்கவே மாட்டேங்குது..”
“ம்ம் அது என்னவோ உண்மைதான் குழந்தைங்க கடவுளுக்குச் சமம்னு சும்மாவா சொல்றாங்க.. சரி நீ போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா திஷானி டிபன் எடூத்து வைக்குறேன்.”
“சரி அத்தை இதோ பத்து நிமிஷத்துல வரேன்..”,என்றவாறு தங்களறைக்குச் சென்று தயாரானவள் சாரதா கொடுத்த காபியையும் டிபனையும் வாங்கி உண்ண ஆரம்பித்தாள்.
“இன்னைக்கு காலைல கடைக்கு போய்ருந்தேன்டா..இந்த சில்க் த்ரெட் செட் பாத்தேன் ரொம்ப அழகா இருந்தது..சரி உனக்கு நல்லாயிருக்குமேனு வாங்கிட்டு வந்தேன்.பிடிச்சுருக்கா கலர் வேற வேணும்னா சொல்லு மாத்திக்கலாம்.”
“அத்தை சூப்பரா இருக்கு..இந்த கலர்ல என்னோட பேப்ரட் சாரி இருக்கு..உங்களுக்கு இதெல்லாம் பிடிக்காதா நீங்களும் யூஸ் பண்ணலாமே அத்தை..”
“இல்லடா இவ்ளோ ஹெவியா எல்லாம் போட மாட்டேன்.சின்ன பசங்க நீங்க போடுங்க நா அழகு பாக்குறேன்..”
“ஒரு நிமிஷம் அத்தை இதோ வரேன்”,என்று எழுந்து சென்றவள் வரும்போது கையில் ஒரு சிறிய பெட்டியோடு வந்தாள்.
“இந்த மாடல் எல்லாம் பாருங்க கண்டிப்பா நீங்க யூஸ் பண்ற மாதிரி சிம்பிள் டிசைன்ஸ் தான் “
“எல்லாமே அழழகா இருக்குடா ஆனா ஏன் ஒரே டிசைன்ல இத்தனை வாங்கிருக்க வேற வேற வாங்கிக்கலாமே..”
“அத்தை இது எல்லாமே நானே பண்ணது..எனக்கு இந்தமாதிரி வொர்க் எல்லாம் பண்ண ரொம்ப இஷ்டம்..அதனால ப்ரீ டைம்ல இப்படி எதாவது பண்ணிட்டே இருப்பேன்.நீங்க இப்போ இதை பத்தி பேசின அப்புறம் தான் இது இருக்குறதே நியாபகம் வந்தது..”
“அட பரவால்லையே டா வேற என்னனென்ன பண்ணுவ!!எனக்கும் இதெல்லாம் ரொம்ப இஷ்டம் இனி இந்த வீட்ல எனக்கு கம்பெனிக்கு ஆள் இருக்கு..”
“போச்சா ஏற்கனவே உங்க அத்தை புதுசா எதையாவது பண்றேன்னு என்னை போட்டு படுத்தி எடுப்பா இப்போ நீயுமா..இந்த பையன் மட்டும் ஜாலியா எஸ்கேப் ஆய்ட்டானே..”,என ராகவன் போலியாய் அலுத்துக் கொண்டார்.
“மாமா இதுக்காகவே டெய்லி ஒரு ப்ராடக்ட் செஞ்சு வீட்டை எப்படி மாத்துறோம் பாருங்க..என்ன அத்தை சொல்றீங்க?”
“அவரு கிடக்குறாரு நாம அசத்தலாம்..உனக்கு என்ன பொருளெல்லாம் தேவைப்படும்னு சொல்லு நாளைக்கு காலைல நா வாங்கி வைக்குறேன்.”
“பெருசா ஒண்ணுமில்ல அத்தை..பேசிக் பெயிண்ட் ப்ரஷ் க்ளு இந்தமாதிரி வாங்கினா போதும் மத்தபடி நம்ம வீட்ல உள்ள வேஸ்ட் திங்க்ஸ் வச்சு பண்ணிக்கலாம்..”
என உற்சாகமாய் பேசிக் கொண்டிருந்தவளை வாசலிலிருந்து கவனித்துக் கொண்டிருந்தான் அபினவ்.
ஐந்து நிமிடம் கழித்து உள்ளே நுழைந்தவனை கண்டவளின் கண்களில் அப்படியாய் ஒரு மகிழ்ச்சி ஏதோ பல வருடம் கழித்து சந்தித்ததை போன்ற அன்பு பார்வை.அவள் பார்வையில் தொலைந்தவன் பிறரரியாமல் அவளை கடிப்பதைப் போன்று உதட்டை அசைக்க சட்டென பார்வையை நகர்த்திக்கொண்டாள்
“என்ன ப்பா பலமான டிஸ்கஷன் போய்ட்டுஇருக்கு”,என்றவாறே சோபாவில் அமர்ந்தவன் வழக்கம் போல் சாரதா மடியில் படுத்துக் கொண்டான்.
“டேய் அபினா எப்போ தான் இந்த பழக்கத்தை மாத்துவியோ..நாளைக்கே என் பேரனோ பேத்தியோ வந்தா உன்னோட போட்டி போட்டு உன்னை பாத்து சிரிக்க போகுதுங்க..”
என்று அவர் கூறும்போதே திஷானியின் முகமலர்ச்சி லேசாய் மறைவதை கண்டவன் வேண்டுமென்றே அன்னையிடம்,
“ம்மா அதெல்லாம் பண்ணமாட்டாங்க அப்போ நா சமத்தா என் பொண்டாட்டி மடிக்கு ஷிப்ட் ஆய்டுவேன்.இப்போ அப்படி பண்ண முடில அதனால தான் இப்படி”,என திஷானியை பார்த்து கண்சிமிட்ட அவளோ வெட்கத்தை மறைக்க பெரும் பாடுபட்டாள்.
“அதானே பாத்தேன் பொழைக்கத் தெரிஞ்சவன்டா நீ..”,என ராகவன் செல்லமாய் அவன் காலைத் தட்டினார்.
“வாடா சாப்டலாம் அதிசயமா சீக்கிரம் வந்துருக்க எல்லாரும் ஒண்ணா சாப்டலாம் வா..”
“ம்ம் இதோ டூ மினிட்ஸ்ப்பா..”
பெரியவர்களும் நாசூக்காய் எழுந்து கொள்ள திஷானி தன்னவனோடு தங்களறைக்குச் சென்றாள்.
“திஷா பேபி எப்படி போச்சு இன்னைக்கு டே”,என்றவன் அவளை கைநீட்டி அழைக்க அவனருகில் அமர்ந்தவள்
“ப்ப் சூப்பரா போச்சுங்க..எல்லாரும் ரொம்ப மாறிட்டேன்னு சொன்னாங்க..ஆனா எனக்கு அப்படி எதுவுமே தெரியல..”
“ஹா ஹா ம்ம் மேபி என் செலெக்ஷன் ஆப் ட்ரெஸ்னால இருக்குமோ”,என காலரைத் தூக்கிவிட்டு கொண்டான்.
“ஓரளவு உண்மைதான் நா இந்தளவு மெனக்கெட்டு எல்லாம் ட்ரெஸ் பண்ணிணதேயில்ல அதனால கூட இருக்கும்..”
“இனி டெய்லியுமே உன்னை எப்படி அனுப்புறேன்னு பாரு..ஆமா நா வரும்போது நீயும் அம்மாவும் செம சீரியஸா டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தீங்களே!!!என்ன அது??”
“காசிப் கேக்குறீங்களா??அதெல்லாம் சொல்ல முடியாது!”,என்றவள் குறும்பாய் சிரிக்க
“ஓஓ அவ்ளோ ஆய்டுச்சா சரி அப்போ உங்க அத்தையோடயே ரொமான்ஸ் பண்ணு நா கோவமா போறேன்..”
“ஹா ஹா நீங்க இன்னும் வளரவேயில்லையே..அம்மா மடில படுத்துக்குறீங்க சின்ன புள்ள மாதிரி சண்டை போடுறீங்க..ஒரு கம்பெனியோட மேனேஜர்னு கொஞ்சமாவது நியாபகம் இருக்கா?”
“அடப் போடீ என்னை பொறுத்த வரை நா இன்னும் ஸ்கூல் கோயிங் தான்.மனசையும் அப்படி வச்சுக்கதான் பிடிச்சுருக்கு..சோ சும்மா வெளி உலகத்துக்கு தான் மேனேஜர்..வீட்ல ஆல்வேஸ் நா நானாதான் இருக்க நினைக்குறேன்.”
“ம்ம் அதான் அழகும்கூட..”,என்றவள் லேசாய் சாய்த்திருந்த தலையை உயர்த்தி அவனை ஓரப் பார்வை பார்த்தாள்.
“பார்ரா..மேடம் காம்ளிமெண்ட்லாம் தரீற்ங்க..பட் இன்னும் கொஞ்சம் பெட்டரா எதிர்பாக்குறேன்”,என்றவன் குறும்புச் சிரிப்பு அவனின் பொருளுணர்த்த மறுப்பேதுமின்றி தன் அதரங்களை அவனிடத்தில் ஒப்படைத்தாள்.
இரவு உணவை முடித்து திஷானி சமையலறையை சுத்தம் செய்ய சாரதாவிற்கு உதவச் சென்றாள்.அபினவிற்கு ஆபீஸ் அழைப்பு வரவே மொபைலை எடுத்துக் கொண்டு தனதறைக்குச் சென்றான்.
திஷானி வந்த பின்புமே அவன் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தான்.திஷானியும் அவனுக்காக பொறுமையாய் காத்திருக்க அவனருகில் அமர்ந்து லேப்டாப்பை கவனித்துக் கொண்டிருந்தாள்.
அடுத்த சில நிமிடங்களில் போனை வைத்தவன்,”இந்த ப்ரெஷ்ஷர்ஸை வச்சு என்னத்த பண்றதுனே தெரில..ப்ரொடெக்ஷன் சர்வர்ல கை வைக்கும் போது கேர்புல்லா இருக்கணும்னு அக்கறையே இல்ல..கோடிங்ல போய் தப்பு பண்ணி வச்சுருக்குதுங்க..
ஆல்ரெடி தலைவலி ஆரம்பிச்சுருச்சு இப்போ முதல்ல இருந்து கோட் வேற கடவுளே..டோட்டலி வேஸ்ட்”
“டென்ஷன் ஆகாதீங்க சரி பண்ணிடலாம்.பொறுமையா பாருங்க..”,எனும் போதே அவனுக்கு க்ளைண்ட் கால் வர எடூத்துக் கொண்டு அவசரமாய் பால்கனிக்குச் சென்றான்.
அவன் எழுந்ததும் சிஸ்டமை தன்புறம் திருப்பியவள் கோட் பேஜை ஓபன் செய்து கவனிக்க ஆரம்பித்தாள்.
கால் பேசி முடித்து வந்தவன் அவளருகில் அமர,”இப்போ கோட் ரன் பண்ணி பாருங்க..வொர்க் ஆகும் கண்டிப்பா”,என்றாள்.
“வாவ் திஷா பேபி டீபக் பண்ணிட்டியா..எப்படி இப்படியெல்லாம்..”,என்றவாறே அதை பரிசோதித்துப் பார்க்க சரியாய் வேலை செய்ய ஆரம்பித்திருந்தது.
“வாவ்வ்வ் மை திஷா டியர் தேங்க் யூ சோ மச்..பெரிய தலைவலியை கம்மி பண்ணிருக்க தெரியுமா..டூ மினிட்ஸ் இதோ வரேன்..”,என மொபைலை எடுத்துக் கொண்டு பால்கனிக்குச் சென்றவன் அடுத்த அடுத்த வேலைகளை முடித்தபின் திஷானியை அழைத்தான்.
வந்தவள் அமராமல் அவன் பின்புறம் நின்று அவன் தலையை நீவி விட ஆரம்பித்தாள்.
“ஹே பரவால்ல நீ உக்காரு..நீயும் எவ்ளோ நேரம் நின்னுட்டு இருந்துருப்ப டயர்டா இருக்கும் வா கொஞ்ச நேரம் இப்படிஉக்காரு அதுக்காக தான் கூப்டேன்..”
அப்படியே ஒருவிரல் வைத்து அவனை அமைதியாய் இருக்க செய்தவள் சில நிமிடங்கள் கழித்து வந்து அவனருகில் அமர்ந்தாள்.
சற்றும் யோசிக்காது அவள் காலையெடுத்து தன் மடியில் வைத்தவனிடமிருந்து அதை இறக்க முடியாமல் தவித்தவள் எவ்வளவோ கூறியும் அவன் விடுவதாய் இல்லை.
இதமாய் காலை பிடித்துவிட ஆரம்பிக்க திஷானிக்கோ அது மிகவும் தேவையான ஒன்றாய் தோன்றியது அத்தனை இதம் அந்த அழுத்தத்தில்.கால்கள் இத்தனை சோர்வாய் இருந்திருக்கிறதா என அப்போது தான் உணர்ந்தாள்..
ஒவ்வொரு விரல்களாய் நீவி விட்டவன் அவள் முகத்தின் இலகுத் தன்மையை பார்த்து கால்களை பிடித்துவிட்டவாறே கதை பேச ஆரம்பித்தான்.
“ஆமா ஐடி விட்டு வந்து வருஷமாயிடுச்சே இருந்தும் எப்படி கோடிங் எல்லாம் இப்படி பட்டையை கிளப்புற?”
“இல்ல வேலையை விட்டுட்டாலும் அப்பப்போ டூல்ஸ் அப்டேட் பண்ணிட்டே தான் இருப்பேன்.சி எஸ் நா ரொம்பவே விரும்பி எடுத்த டிகிரிங்க..அதனாலேயோ என்னவோ அது விட்டாலும் நா அதை விடமாட்டேன்,.”,எனச் சிரித்தாள்.
“ஆனாலும் நீ ஒரு பல்கலை வித்தகியா இருக்கியே இன்னும் என்ன திறமையெல்லாம் ஒளிச்சு வச்சுருக்கியோ தெரில..”
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லங்க..சின்ன லாஜிக் தான்.சின்ன வயசுல என் குறையை பாத்து எல்லாருமே என்னால அது முடியாது இது முடியாதுனு சொல்லுவாங்க..அப்போவே மனசுல ஒரு வெறி என்னால முடிஞ்ச அத்தனையையும் கத்துக்கணும்னு.அதுக்காக எல்லாத்துலயும் பெஸ்ட்னு கிடையாது.
பிடிக்குறதெல்லாம் கத்துப்பேன்.அதைப் பத்தி படிச்சு தெரிஞ்சுக்குவேன்.வேலைக்கு போனப்பறம் நா முதல்ல வாங்கினதே லேப்டாப் தான்.நிறைய நிறைய ப்ரௌஸ் பண்ணுவேன்.அப்போ தான் உலகத்துல தெரிஞ்சுக்க இத்தனை விஷயம் இருக்கானு நினைச்சேன்.அதுக்கு அப்பறம் ஸ்மார்ட் போன் வந்தப்பறம் இன்னும் மோசம்..”என்று சிரித்தவளை விசித்தரமாய் பார்த்தான் அபினவ்.
“நீ பேஸ்புக்ல இல்லனு சொன்னப்போவே இதெல்லாம் நா யோசிச்சுருக்கணுமோ..பட் நிஜமா நீ ஒரு சர்ப்ரைஸ் பேக்கேஜ் திஷா பேபி..காட் இஸ் க்ரேட் நல்ல வேளையா என் கையில உன்னை பத்திரமா கொடுத்துட்டாரு..”என்று கூற மென்னகையை பதிலிளித்தவள் சற்று இடைவெளிவிட்டு,
“உங்களால மட்டும் தான் என்னை இத்தனை சந்தோஷமா பாத்துக்க முடியும்னு அவருக்கே தெரிஞ்சுருக்கு அதனால தான்..”,என்றாள் மெதுவாய்.
அன்றைய நாளின் நிகழ்வுகளை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டவர்கள் நேரம் போவதறியாமல் பேசிக் கொண்டிருக்க நடுநிசியை கடந்த பின்பே உறங்கச் சென்றனர்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!