11
உறக்கத்தில் இருந்து விழித்தவளாய் கண் திறந்த நேரம் அபினவின் மடியில் தலை சாய்தத்திருந்தாள் திஷானி.
சில நொடிகளில் அனைத்தும் நினைவிற்கு வர பதறி எழப் போனவளின் மனநிலை அறியாதவனோ அவளை எழவிடாது தன் மடிமீது அழுத்தினான்.
“திஷாம்மா ஸ்ட்ரெயின் பண்ணாத என்னடா ஆச்சு ஓவர் வேலையா தூங்கிட்டியா?டயர்டா இருக்கியாமே அம்மா சொல்றாங்க..டாக்டர்கிட்ட போலாம் முதல்ல எதாவது சாப்டு..”
“இல்ல அதெல்லாம் வேணாம் டாக்டரெல்லாம் எதுக்கு ஏதோ டயர்ட்னெஸ் தான் வேற ஒண்ணுமில்லங்க..”
“டாக்டருக்கு எதுக்கு இவ்ளோ பயம்.. சரி போக வேணாம் நா சாப்பாடு எடூத்துட்டு வரேன் சாப்டு”,என்றவன் உணவு எடுத்து வந்து தானே ஊட்டியும் விட்டான்.அவனிடமிருந்து விழியகற்றாமல் ஒவ்வொரு வாய் உணவையும் உண்டவள் ஒரு நொடி அவனிடம் விஷயத்தை கூறிவிடலாமா என்று கூட எண்ணிணாள்.
இருந்தும் கடைசி நிமிடத்தில் தன் எண்ணத்தை மாற்றி அமைதி காத்தாள்.அவளை படுக்க வைத்து போர்வையை கழுத்து வரை மூடியவன் ஏசியை ஆன் செய்து இரவு விளக்கை போட்டுவிட்டு சாப்பிடச் சென்றான்.
மனதின் எண்ணங்கள் சூனியமாய் தோன்ற வெறுமையாய் உணர்ந்தவளுக்கு நிச்சயம் ஒரு ஆதரவு தேவைப்பட சாருவுக்கு அழைத்து பேச எண்ணியவளாய் அவளுக்கு அழைத்தாள்.
“ஹாய் டா எப்படியிருக்க?”
“நல்லாயிருக்கேன் சாரு நீங்க எப்படியிருக்கீங்க?”
“நல்லாயிருக்கேன் என்னாச்சு இந்த நேரத்துல கால் பண்ணிருக்க!எதுவும் ப்ரச்சனையில்லையே?”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல வந்து..நா கன்சிவ்வா இருக்கேனோனு சந்தேகமா இருக்கு சாரு..”
“அடிப்பாவி என்ன மாதிரியான விஷயத்தை என்ன ரியாக்ஷன்ல சொல்ற நீ..முதல்ல கன்பார்ம் பண்ணு..உங்க ஆள்கிட்ட சொல்லிட்டியா இல்லையா?ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கு திஷானி..வாழ்த்துக்கள்..”
அப்படியாய் ஒரு மகிழ்ச்சி அவள் குரலில் அதுவே திஷானியை தன் பயத்தை பற்றி பேச தடையாய் இருக்க அப்படியே அமைதி காத்தாள்.
“இப்போனு பாத்து ஊருக்கு போக வேண்டிய நிலைமை ஏர்போர்ட்ல தான் இருக்கேன் திஷானி.ஹஸ்பண்ட் சைட்ல க்ளோஸ் ரிலேட்டிவ் ரொம்ப சீரியஸ் கண்டிஷன்ல இருக்குறாங்க அதான் கடைசி ஃப்லைட்ல கிளம்புறோம்.
ஹில் ஸ்டேஷன் வேற கால் பேச முடியுமா தெரில அபிக்கு நா விஷ் பண்ணேன்னு சொல்லிடு..டாக்டர்கிட்ட போய்ட்டு வந்துரு மறக்காம..வந்து பேசுறேன்டா போர்டிங் அனௌன்ஸ்மெண்ட் பண்ணிடாங்க..சாரி டியர்..பை”என அழைப்பை துண்டித்திருந்தாள்.
திஷானியோ மொத்தமாய் பைத்தியமாகிக் கொண்டிருந்தாள் மனதளவில்.அவள் சிந்தனையை கலைக்குமாறு அபினவ் உள்ளே வந்து எப்போதும் போல் அவளை தன் கையணைப்பிற்குள் கொண்டு வந்திருந்தான்.
“ஏய் கருப்பழகி ரொம்ப பயமுறுத்திட்ட..நாளைக்கு எதுக்கும் ஹாஸ்பிட்டல் போலாமா?”
“வேணாம் இப்போ நா நல்லாதான் இருக்கேன்.”
“ம்ம் என்னவோ சொல்ற போடி உடம்பை ஒழுங்கா பாத்துக்கோ..இன்னொரு தடவை இப்படி பயமுறுத்தாத..சரி ஒழுங்கா தூங்கு இப்போ”
கணவன் உறங்கும் வரை அமைதியாய் விழி மூடியிருந்தவள் அதன்பின் மெதுவாய் கண் விழித்தாள்.அவனைவிட்டு எழுந்தமர்ந்தவள் தன் காலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.மனம் சலனமாகவே இருந்தது.
சற்றே சலிப்பாய் உணர்ந்தவள் எத்தனை நேரம் இப்படியே அமர்ந்திருக்க என்று எண்ணியவளாய் தூக்கத்தை தழுவினாள்.
அடுத்து வந்த மூன்று நாட்களும் அப்படி இப்படியாய் நகர ஒரு முடிவுக்கு வந்தவளாய் அந்த வார வெள்ளிக்கிழமை பள்ளியில் விடுப்பு கூறிவிட்டு அந்த ஏரியாவிலேயே இருந்த சிறந்த கைனிக் டாக்டரை பார்க்கச் சென்றாள்.
அதே நேரம் இங்கு தன் அலுவலகத்தில் மும்முரமாய் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த அபினவின் அலைப்பேசி அலர எண்ணைப் பார்க்காமலேயே அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.
“வாழ்த்துக்கள் என் எரும மாடே”கிட்டதட்ட சாரு மறுபுறத்தில் அலறாத குறையாய் தன் வாழ்த்தை கூறினாள்.
“சனியனே!!ஏன் இப்படி கத்துற..நா ஆபீஸ்ல இருக்கேன்..இப்போ நா என்னத்த கிளிச்சுட்டேன்னு இந்த வாழ்த்து??”
“உன்னை மனுஷனா மதிச்சு கால் பண்ணேன் பாரு எனக்கு தேவைதான்.எப்போ பாத்தாலும் இஞ்சிதின்ன குரங்கு மாதிரி இருந்துட்டு பொண்டாட்டியை இப்படி பண்ணி வச்சுருக்கீங்க..பேச்சை பாரு..”
“அவளையா நா என்ன பண்ணேன்.ஏற்கனவே இங்க மண்டை காயுது இதுல நீ வேற விளையாடிட்டு இருக்க உன்ன கொன்னுருவேன்..என்ன வேணும் உனக்கு இப்போ??!”
“மண்ணெண்ண வேப்பெண்ண விளக்கெண்ண எவன் பொண்டாட்டி கன்சிவ் ஆனா எனக்கென்ன பே..பக்கி..”,என்றவள் கோபமாய் போனை வைத்துவிட்டாள்.
“பைத்தியம் அதுவே கால் பண்ணி என்னத்தையோ உளறிட்டு கால் கட் பண்ணுது பாரு..எனக்குனு வந்து வாய்க்குது எல்லாம்”,என்று புலம்பியவனுக்கு சட்டென மூளையில் பொறிதட்ட அவள் கூறியதன் அர்த்தம் புரிந்தும் புரியாததுமாய் இருக்க அடித்துபிடித்து அவளை அழைத்தான்.
“என்ன?? நீங்க தான் பெரிய மேனேஜர் வெங்காயமாச்சே போ போய் வேலையை கட்டி அழு..”,என்றவளின் குரல் லேசாய் கரகரத்தது.
“ஏய் லூசு சாரி ஏதோ டென்ஷன்ல கத்திட்டேன்..நீயெல்லாம் எப்படி ஒரு பிள்ளைக்கு அம்மாவா இருக்க!!இப்படி எதுக்கெடுத்தாலும் மூஞ்சியை தூக்கிட்டு..என் மச்சான் ரொம்ப பாவம் தான்..”
“அவரை பத்தி நீங்க ஒண்ணும் கவலபட வேண்டாம் இப்போ எதுக்கு கால் பண்ண?”
“ஏய் ஆமா நீ எதுக்கு எனக்கு விஷ் பண்ண”,என தன் ஆர்வத்தை மறைத்து கேட்க முயன்றான்.
“பிசாசே நீ அப்பாவானதுக்கு உனக்கு விஷ் பண்ணாம…வேணாம் எதாவது சொல்லிர போறேன்..”
“ஏய் என்னடீ சொல்ற!!!”
“சொன்னாங்க சோத்துல உப்பில்லனு..என்ன புருஷனும் பொண்டாட்டியும் என்ன கலாய்க்குறீங்களா??”
“ஹே சாரு ப்ளீஸ் தெளிவா சொல்லு திஷா உன்கிட்ட பேசினாளா??!”
அவன் குரலின் தீவிரமே அவன் பதட்டத்தை வெளிப்படுத்த அன்று நடந்ததை மறைக்காமல் கூறினாள்.
“அவ ஏன் உங்ககிட்ட சொல்லல!!அபி எனக்கு என்னவோ அவங்க பயம் இன்னும் மாறலையோனு???”
“இல்ல இதுக்கு மேல டிலே பண்ண முடியாது நா போய் அவளை பாக்குறேன் சாரு.எல்லாம் நல்லபடியா இருக்கணும்னு ப்ளீஸ் ப்ரே பண்ணிக்கோ..நா அவகிட்ட பேசிட்டு உனக்கு கூப்டுறேன்..பை”,என்றவன் அடுத்த முக்கால் மணி நேரத்தில் திஷானியின் பள்ளி வாசலில் இருந்தான்.
உள்ளே சென்று விசாரித்தலில் அவள் உடம்பு சரியில்லையென கூறி மருத்துவமனைக்குச் செல்வதாக கூறியதாய் ஆசிரியை ஒருவர் கூறினார்.
எந்த ஹாஸ்பிட்டல் போயிருக்கா என்ன பண்ண போறா ஒண்ணும் புரிலயே..கடவுளே எதுவும் தப்பா நடந்துர கூடாது என மனதினுள் குமைந்தவனின் முகமே பாவமாய் இருக்க அந்த ஆசிரியையே அவளுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தாள்.
“சார் எதுக்கும் நம்ம ஏரியா கைனிக் விசாலாட்சி டாக்டர்ட்ட போய்ருக்காளானு பாருங்க.இங்க நல்ல லேடி டாக்டர் அவங்க தான் ஜெனரல் செக்கப்பும் பாப்பாங்க”
“ஓ எஸ் அதை எப்படி மறந்தேன்.தேங்க் யூ தேங்க் யூ சோ மச் மேம்..”,என்றவன் அடித்துப் பிடித்து மருத்துவமனைக்கு ஓடினான்.
அங்கு சென்று அவளை கண்களால் துழாவ ஒரு ஓரமாய் சாய்வாய் கண்மூடி அமர்ந்திருந்தாள்.சற்றே நிம்மதியாய் உணர்ந்தவன் ஒன்றும் கூறாமல் அமைதியாய் சென்று அவளருகில் அமர்ந்தான்.
அவள் பேர்கூறி நர்ஸ் வந்து அழைத்தப் போது கண்திறந்தவள் தற்செயலாய் அருகிலிருந்தவனைப் பார்க்க ஒரு நொடி அந்த விழிகள் தன் கள்ளத் தனத்தை மறைக்க முயன்று தோற்றது.
“சோ இப்போ மேடம் என்ன ஐடியால இங்க வந்துருக்கீங்க?!”,அவன் குரலிலிருந்து அவளால் ஒன்றையும் கணிக்க முடியவில்லை.அவள் அப்படியே அமர்ந்திருப்பதை கண்டவன் நர்ஸின் பொறுமை காற்றில் பறப்பதை உணர்ந்தவனாய் எழுந்து நின்றான்.
கையோடு அவளையும் எழுப்பி முன்னே நடக்க அவள்புறம் திரும்பியவன்,”நா மட்டும் உள்ளே போய் ஒரு ப்ரோஜனமும் இல்லனு நினைக்குறேன்..இல்ல நடக்க மாட்டனா நா வேணா??”,அவன் முடிப்பதற்குள் அவனருகில் வந்தவள் டாக்டர் அறையை நோக்கி நடந்தாள்.
அவர்களை வரவேற்று சிநேகப் புன்னகையை உதிர்த்த டாக்டர் அவர்களே பேசுவதற்காக காத்திருக்க திஷானி பேச போவதில்லை என்றறிந்தவன் அவனே வாய் திறந்தான்.
“ப்ரெக்னெஸி கன்பர்மேஷன்காக வந்துருக்கோம் மேம்..”
“ஓ குட்..செல்ப் செக் பண்ணிடியா மா?”
திஷானி இல்லை என்பதாய் தலையசைக்க இட்ஸ் ஓ.கே என்றவர் எக்ஸமைன் செய்ய அழைத்துச் சென்றார்.அபினவின் மனம் அனலாய் கனத்தது இருந்தும் எதையும் அவளிடம் காட்ட விரும்பாதவனாய் அமைதி காத்தான்.
டாக்டர் தன்னிருக்கையில் வந்தமர்ந்தவர் புன்னகையோடு,”காங்க்ராட்ஸ் எய்ங் மேன்..ரிசல்ட் பாசிடிவ் தான்.கொஞ்சம் சோர்வா தெரியுறா மத்தபடி ஒருப்ராப்ளமும் இல்ல..ஹப்பியா பாத்துக்கோங்க..நல்லா சாப்பிட சொல்லுங்க..வழக்கமான மெடிசின்ஸ் தர்றேன் நெக்ஸ்ட் டைம் செக்கப் வர்ற வர கண்டிநியூ பண்ண சொல்லுங்க..”,என கடகடவென ஒப்பித்தவர் மாத்திரைகளை எழுதிக் கொடுத்து முடிக்கவும் திஷானி அவனருகில் வரவும் சரியாய் இருந்தது.
அவசரமாய் ஏதோ கூற வந்தவள் அபினவின் காரப் பார்வையை கண்டு வாயை மூடிக் கொண்டாள்.மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வெளியே வந்தவன் அமைதியாய் காரை ஸ்டார்ட் செய்ய அவளுமே மௌனமே வடிவய் அமர்ந்திருந்தாள்.
பக்கத்து தெருவிலிருந்த பார்க் வாசலில் காரை நிறுத்தியன் உள்ளே செல்ல அவனை எதிர்த்து வாதிட தன்னை சமனப்படுத்தியவாறு பின்னே சென்றாள்.
“என்ன நினைச்சு நீ இதை பண்ணிட்டு இருக்க திஷானி?!”,இழுத்துப் பிடித்திருந்த பொறுமை அவன் குரலில்.
“எனக்கு இந்த குழந்தை வேண்டாம்..”
“வேண்டாம்னா எனக்கு புரில?”
“வேண்டாம்னா வேண்டாம் என் வயித்துல இருக்க வேணாம் இந்தபூமிக்கு வர வேணாம்..”
“சோ கொலை பண்ண தயாரா இருக்க அப்படிதான?”
“….”
“சொல்லு என்னை என்பிள்ளையை இரண்டு பேரையுமே கொல்ல தயாராய்ட்ட அப்படிதான?”
“அதெல்லாம் இல்ல ஏன் இந்த குழந்தை தான் வாழ்க்கையா?”
“ஆமாம்டீ எனக்கு அதுதான் வாழ்க்கை என் குழந்தை என் இரத்தம் என் காதலுக்கான வாரிசு..முக்கியமில்லாம வேறனென்ன?”
“……”
“என்கிட்ட கூட சொல்லனும்னு தோணலயா திஷாம்மா..”,கடுமையை தாண்டிய வருத்தம் தொணித்தது அந்த குரலில்.
இருந்தும் இரக்கமே இல்லாதவளாய் சிலையென அமர்ந்திருந்தாள்.அதில் மேலும் கடுப்பானவன்,
“அழுத்தம் பிடிச்சவ டீ நீ..சரி என் முடிவை சொல்லிட்டேன் எனக்கு இந்த குழந்தை நல்லபடியா பிறந்து ஆகணும்..வேற பேச்சு இல்ல போலாம்”,என எழுந்துக் கொண்டான்.
மனதில் பயமிருந்தாலும் அதைக் காட்டாமல் அவனோடு சென்றாள்.மதியமே வீட்டிற்கு இருவரும் சேர்ந்து வந்ததை ஆச்சரியமாய் பார்த்த பெரியவர்கள் கேள்வியாய் நோக்க அபினவ் வழக்கமான தன் விளையாட்டுத் தனத்தோடு,
“ம்மா சீக்கிரமே உன் மடில பங்கு கேட்க ஆள் வந்துருவாங்க போலயே இன்னும் ஒன்பது மாசம் தான்..அப்பறம் நான் என் பொண்டாட்டியோட செகண்ட் ஹனிமூன் கிளம்பிடுவேன் வர்றவங்கள நீ பாத்துப்பல?”,என்று கூறி கண்ணடித்துச் சிரித்தான்.
“அபினா உண்மையாவா டாக்டர்கிட்ட போய்ட்டு வந்தீங்களா?நாதான் அன்னைக்கே கண்டுபிடிச்சேனே என் மருமக முகம் பார்த்தே..திஷானிடா ரொம்ப சந்தோஷம் இருங்க இதோ வரேன்”,என வேகமாய் சமையலறைக்குச் சென்று சர்க்கரையை எடுத்துவந்து அபினவிற்கும் திஷானிக்கும் வாயில் ஊட்டிவிட்டார்.
மொத்தமாய் களைத்து இருந்தவள் மெதுவாய் சோபாவில் அமர சாரதா வந்து அவளருகில் அமர்ந்தார்.
“என்னாச்சு திஷானி எதுவும் சாப்டுறியா?ரொம்ப களைப்பா இருக்கியே!”
“அத்தை எனக்கு இந்த குழந்தை வேண்டாம்..ப்ளீஸ் அவர்கிட்ட சொல்லுங்க..”
“திஷா!!!”,அவருக்கு முன் அபினவ் தான் கத்தியிருந்தான் ஏற்கனவே கோபத்தை கட்டுப் படுத்தியிருந்தவன் இவள் சாரதாவிடமே இப்படி கூற தன்னையும் மீறி கத்திவிட்டிருந்தான்.
“அபி கொஞ்சம் பொறுமையா இரு..திஷானி ஏன் இப்படி சொல்ற முதல் குழந்தையை அப்படி சொல்லாத எத்தனை பேருக்கு இந்த வரம் கிடைக்காம இருக்காங்க தெரியுமா!!”
“அவளுக்கு அதெல்லாம் என்ன கவலை..பைத்தியகாரி மாதிரி அவ சொன்னத தான் சொல்லப் போறா..”
“அபி நீ உள்ளே போ..உன்னை பேச வேண்டாம்னு சொன்னேன்”,என சாரதா அதட்ட ராகவன் அவனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.
“திஷானிம்மா எனக்கு பொண்ணு இல்லனு ரொம்பவே வருத்தப்பட்டுருக்கேன்.நீ இந்த வீட்டுக்கு வந்தப்பறம் எனக்கு அந்தகுறையே போய்டுச்சு.உன் அம்மாவா சொல்றேன் நீ எதை நினைச்சு இப்படி சொல்றனு எனக்கு தெரில ஆனா இனி அந்த நினைப்பு கூட உனக்கு வரக்கூடாது..போ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு போ..”,என அவளை மேலும் குழப்ப விரும்பால் அறைக்கு அனுப்பி வைத்தார்.
அங்கு அபினவோ பால்கனியில் நின்று எங்கோ வெறித்துப் பார்த்திருந்தான்.அவள் வரும் ஓசை கேட்டு கடினப்பட்டு தன்னை பொறுமையாக்கி அவளருகில் வந்தவன் அவள் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தான்.
“ஏன் டீ இப்படி பண்ற..உலகத்துக்கு வர்றதுகுள்ள அந்த பிஞ்சு கருவை ஏன் அழிக்கனும்னு நினைக்குற..பாவம் டீ..”
கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க அவள் தன் கைகளுக்குள் முகத்தை புதைத்து அழ ஆரம்பித்திருந்தாள்.வேகமாய் எழுந்து அவளருகில் அமர்ந்தவன் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.
“வேணாம் அபிப்பா..இந்த குழந்தையும் என் ஜீன்ல வந்துட்டா..”,என அவள் தேம்பினாள்.
வேகமாய் அவள் தாடையை பிடித்து நிமிர்த்தியவன்,”வந்துட்டா வந்துட்டா என்ன டீ என் பிள்ளையை ராஜாவாட்டம் வளர்ப்பேன்..போதுமா!!”
அதிர்ச்சியான பார்வை திஷானியிடம் சாருவின் மூலம் அவளின் பயம் பற்றிய தகவல் அவனை எட்டியிருப்பதை உணர்ந்தாள்.
“என்ன பாக்குற திஷாம்மா எல்லாம் தெரியும்.உன் பயத்தை நா தப்பா சொல்லல ஆனா அது தேவையில்லாததுனு தான் சொல்றேன்.நம்ம குழந்தையை நானே எப்படி பாரமா நினைப்பேன்.ஏன் அது உன் மரமண்டைக்கு புரிய மாட்டேங்குது.
என்கிட்ட விஷயத்தையே சொல்லாம அப்படியே அபார்ட் பண்ணிட்டு வந்துர அளவு உனக்கு என் மேல பாசம் இல்ல??”
“இல்லங்க அப்படியில்ல.உங்களுக்கு பாரம்னு நினைச்சது உண்மைதான் ஆனா அதையும் தாண்டி என் குழந்தையும் என்ன மாதிரி கஷ்டத்தை அனுபவிக்க கூடாதுனு தான் இந்தமுடிவுக்கு வந்தேன்.
அந்த குழந்தையை எல்லோரும் இரக்கத்தோட பார்ப்பாங்க ஸ்கூல்ல மத்த பசங்க மாதிரி அந்த குழந்தையால சந்தோஷமா இருக்க முடியாது காலேஜ்ல எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க.எல்லாத்துக்கும் மேல உங்களை மாதிரியே அந்த குழந்தைக்கும் நல்ல பார்ட்னர் கிடைப்பாங்கனு என்ன சாத்தியம் இருக்கு??”
“திஷா பிறக்காத பிள்ளையை ஊனமாக்கி அதுக்கு கல்யாணம் வரை யோசிக்க தெரிஞ்ச உனக்கு அதை நல்லபடியா பெத்து வளர்ப்போம்னு ஏன் யோசிக்க முடில..
ஒரு வேளை இந்த குழந்தை சாதாரணமா பிறக்க போற குழந்தைனு கடவுள் முடிவெடுத்துருந்தா தேவையில்லாத ஒரு பயத்துக்காக ஒரு உயிரை அழிச்ச பாவம் நம்மள நிம்மதியா இருக்க விடுமா சொல்லு திஷா..”,ஆற்றாமையோடு அத்தனை பேசினான் இருந்தும் அவள் மனம் இன்னுமே தெளிவானதாய் தோன்றவில்லை அவனுக்கு.
வெறுத்துப் போய் கட்டிலில் அப்படியே விழுந்தான்.இதற்குமேல் என்ன செய்ய வேண்டுமென தெரியாமல் விழிமூடி கிடந்தவனின் அலைப்பேசி அழைக்க எடுத்துப் பார்த்தவன் சாருவின் எண்ணைக் கண்டு எழுந்தமர்ந்து காலை அட்டெண்ட் செய்தான்.
“சொல்லு”
“என்னாச்சு திஷாவ பாத்து பேசினீங்களா?சமாதானம் ஆய்ட்டாங்க தான?உங்ககிட்ட ஏன் சொல்லலையாம்???”
‘ப்ரெண்ட்னு சொன்ன பாவத்துக்கு உனக்கு இருக்குற அக்கறை பிள்ளையை பெத்துக்க போறவளுக்குல இருக்கணும்..என்னால ஆனத பேசிட்டேன்..அவளுக்கு இந்த குழந்தை வேண்டாமாம் என்னை என்ன பண்ண சொல்ற?”,வார்த்தைகளை கடித்துத் துப்பினான்.
“ஹே லூசு..அவங்களுக்கு புரிய வைக்க சொன்னா நீங்களும் இப்படி கத்திட்டு இருந்தா என்ன அர்த்தம்??நீங்க போனை அவங்ககிட்ட கொடுங்க..”
“ஆமா யார் சொல்லியும் கேக்காதவ நீ சொன்னவுடனே கேட்டு கிளிச்சுற போறா..என்னவோ பண்ணித் தொல.”,என்றவன் போனை அவள் கையில் திணித்துவிட்டு நகர்ந்தான்.
“என்ன திஷானி இதெல்லாம்..உன்ட்ட படிச்சு படிச்சு எவ்ளோ சொன்னேன்..நீ என்ன பண்ணி வச்சுருக்க?”
“சாரு நீங்களும் என்னை புரிஞ்சுக்காம இப்படி பேசுறீங்களே”,இயலாமையாய் ஒலித்தது அவள் குரல்.
“திஷானி கொஞ்சம் ப்ராக்டிகலா யோசிங்க..சரி நா ஒண்ணு கேக்குறேன் உங்க குழந்தை அபிக்கு பாரமாகிட கூடாதுனு நினைக்குறீங்க சரி நாளைக்கே எதோ ஒரு காரணத்தால இதை சொல்ல எனக்கு பிடிக்கல ஆனா என் ப்ரெண்ட் நல்லாயிருக்கணும்னு ஆயிரம் தடவை கடவுளை வேண்டிட்டு இந்த வார்த்தையை சொல்றேன்..
நாளைக்கே அபி உடம்புக்கு எதாவதுனா அவரை பாரம்னு நினைச்சு விட்டுருவீங்களா?”
“சாரு!!!!”
“மன்னிச்சுரு திஷானி..உனக்கு வேற எப்படி புரிய வைக்குறது.நடக்குமா நடக்காதானு தெரியாத ஒரு விஷயத்தை பிடிச்சு தொங்கிட்டு இருந்தா வாழ்க்கை போய்டும் அது ஏன் உனக்கு புரில..என் ப்ரெண்ட்க்கு இப்போ வர நீதான் வாழ்க்கை.நாளைக்கு நீயும் உன் குழந்தையும் அது எப்படி இருந்தாலும் புரியுதா?நல்ல வாழ்க்கையை வீணாக்காத திஷானி..இந்த பயம் உன்னையே அழிச்சுரும் புரிஞ்சுக்கோ..உடம்பை பாத்துக்கோ நா நாளைக்கு பேசுறேன்..”
போனை வைத்தவளுக்கு மனம் படபடப்பாய் இருந்தது.பேச்சுக்காக கூறினாலும் சாருவின் வார்த்தை எத்தனை வலியும் வேதனையையும் கொடுத்தது.அப்படியிருக்க சின்னஞ்சிறு உயிரை கொல்லவே பார்த்தேனே கொலைகாரியா மாறத் தானே பாத்தேன்..அவர் சொன்ன மாதிரி அதை பண்ணி தொலச்சுருந்தா அந்த பாவமும் பழியும் என்னை விட்டுருக்குமா..வாழ்க்கையே சூனியம் ஆய்ருக்குமே..கடவுளே..”
மனதிற்குள் அரற்றிக் கொண்டிருந்தவளின் கையிலிருந்து போன் நழுவவுவதாய் தோன்ற இறுக்கிப் பிடித்த நேரம் அபினவின் கை அதில் இருந்தது.
ஒன்றும் பேசாமல் அவன் திரும்பி நடக்க எத்தனிக்க கையை அழுத்திப் பிடித்து நிறுத்தினாள்.நின்று என்னவென்பதாய் அவளைப் பார்க்க கண்ணில் கோர்த்த நீரோடு,
“சாரிங்க..ப்ளீஸ் உங்ககிட்ட சொல்லாம போனது தப்பு தான்..என்ன ஒதுக்கிடாதீங்க..ப்ளீஸ்..”
“பைத்தியம் தான் டீ பிடிச்சுருக்கு உனக்கு என்ன பேச்சு இது ஒதுக்கிடாதீங்க பாரமா இருக்கும்..குடும்பத்துக்குள்ள காதலுக்குள்ள இந்த வார்த்தைக்கெல்லாம் வேலையும் இல்ல அர்த்தமும் இல்ல திஷாம்மா..
சரி சொல்லு இனி எனக்கு தெரியாம இந்த மாதிரி பண்ண மாட்ட தான?”
“இன்னும் என் பயம் அப்படியே தான் இருக்குங்க..ஆனா நா எடுத்த தப்பான முடிவை மறுபடியும் எடுக்க மாட்டேன்.ஆனா அதுக்கு நீங்க ஒரு சம்மதம் தரணும்..”
“என்னது??”
“ஸ்கேன்ல ஒரு வேளை குழந்தைக்கு ப்ரச்சனை இருக்குனு தெரிஞ்சா அதுக்கு மேல நா என்ன சொல்றனோ அதுக்கு நீங்க ஒத்துக்கனும்..”,தயக்கமாய் அவனை பார்த்தவாறு கூறினாள்.
“உன்னையெல்லாம் அடிச்சு கொல்லலாம் போல ஆத்திரம் வருது..என்ன கருமம் டீ இது..ஆனா ஒருத்தன் அப்பா ஆக போறேன்ங்கிற விஷயத்தை இத்தனை கடுப்பான சூழ்நிலைல கேட்டுருக்க மாட்டான்..இதுக்கு மேல முடில திஷாம்மா..
இதுக்கு மேல உன்னை வழிக்கு கொண்டு வர வேற வழியே இல்ல..சாய்ந்திரம் நாம ரெண்டு பேரும் வெளில போறோம் அதுவரை வாயை மூடிட்டு தூங்கி ரெஸ்ட் எடு..அப்பறம் பேசிக்கலாம் எதுவா இருந்தாலும்..”
“எங்க போறோம்???”
“ம்ம் என் முதல் குழந்தை என் பொண்ணை பாக்குறதுக்கு..”
என்றவன் விருட்டென வெளியே சென்றுவிட தான் கேட்டது சரிதானா என்ற அதிர்ச்சியிலிருந்து மீளாமல் மீளத் தோன்றால் அப்படியே அமர்ந்துவிட்டிருந்தாள் திஷானி..
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!