அன்பு-18

by ஸ்ரீ
0 comments 87 views
A+A-
Reset

திஷானியிடம் மனம்விட்டு பேசிய பிறகு சற்றே தெம்பாய் உணர்ந்தான் அபினவ்.அன்றைய பொழுது இனிமையாய் கழிய மறுநாள் சாரு குழந்தைகளை பார்க்க வருவதாய் கூறியிருந்தாள்.

காலை உணவிற்குப் பின் பதினோரு மணியளவில் கணவன் குழந்தையோடு வந்தவளை அனைவரும் வரவேற்க அபினவ் அவள் கணவனுக்கு கேட்காதவாறு,

“அந்த நல்லவளே நீ தானாம்மா..என்ன ஒரு அடக்கம் என்ன ஒரு அடக்கம்..மச்சான் முன்னாடி பிண்ற போ..”

“வாய மூடிட்டு இருக்கல சாவடிச்சுருவேன் குரங்கு..”,என்று பல்லை கடித்தவாறே சாரதாவிடம் சென்று நின்று கொண்டாள்.

குழந்தையை பார்த்து வருவதாய் கூறி அவர்கள் அறைக்குச் செல்ல சில நிமிடங்களில் அவள் கணவன் அபினவோடு பேசி படியே வெளியே செல்ல சாரு திஷானியோடு அமர்ந்தாள்.

“இப்போ தான் வழி தெரிஞ்சுதா உங்களுக்கு?”

“ஹே அப்படியெல்லாம் இல்ல டா ஆபீஸ் விஷயமா மும்பை போய்ட்டேன் அப்பறம் இங்கேயும் சரியா இருந்தது அதனால தான்..சாரி டா..”

“அட சாரி எல்லாம் எதுக்கு சும்மா சொன்னேன்..ரொம்பவே நிறைவா இருக்குற பீல் சாரு..நீங்க மட்டும் சரியான நேரத்துல அவர்ட்ட விஷயத்தை சொல்லியிருக்கலனா என்னென்னவோ நடந்துருக்கும்..”

“இப்போ எதுக்கு பழசை பத்தி பேசிட்டு திஷானி..நிஜமா உங்களை இப்படி பாக்குறதுக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கு..இனி வாழ்க்கைல சந்தோஷம் மட்டும் தான் உங்களுக்கு சொந்தம்..ஹேப்பியா இருங்க சரிதான?”

“அவரை மாதிரி ஒரு ஹஸ்பெண்ட் கிடைச்ச அப்பறம் எனக்கு என்ன குறை இருந்துட போகுது..ரொம்பவே ஹேப்பியா தான் இருக்கேன்..தேங்க்ஸ் அ லாட்..”

“தேங்க்ஸ் மட்டும் தானா சாப்பிட எதுவும் இல்லையா பசிக்குது..”

“அதான குண்டுபூசணி எப்படி இன்னும் சாப்பிடாம இருக்கேனு நினைச்சேன் கேட்டுட்ட..”,என்றவாறே அபினவ் வந்தான்.

“டான்கி புருஷனோட வந்துருக்கேனேனு கொஞ்சம் அமைதியா குட் கேர்ளா இருக்கேன்..இல்லனா இன்னைக்கு புல்லா எனக்கு அர்ச்சனை நடக்கும்..அதுக்காக தான் பாக்குறேன் இல்ல இன்னைக்கு நீங்க சட்னி தான்..”

“ஹா ஹா அது தெரிஞ்சு தான நானும் ஆட்டம் போட்றேன் இன்னைக்கு மை டே மகளே தொலஞ்ச..வா வா சாப்ட உன் அவர் வெயிட்டிங்..”

அவனை கருவியவாறே அவள் செல்ல குழந்தைகள் உறங்கியதால் திஷானியும் சிரித்தவாறே அவர்களை பின் தொடர்ந்தாள்.

டைனிங் டேபிளில் அனைவரும் அமர்ந்திருக்க சாரு அடக்க சொவரூபியாய் அமர்ந்து உணவை உண்ண ஆரம்பித்தாள்.திஷானியும் அபினவும் சிரிப்பை கட்டுப்படுத்தியதை பார்த்தவள் அருகில் பழத்தின் அருகில் இருந்த கத்தியை கண்களால் காட்டியவள் கண்களாலேயே எச்சரித்தாள்.

“ம்மா இன்னைக்கு உங்க சமையல் நல்லாயில்லையோ என்னவோ சாரு இவ்ளோ அமைதியா சாப்டுறா இல்ல..”

“அட நா கூட நினைச்சேன் சாரு ரொம்ப அமைதியா இருக்காளேனு எனக்கு தான் அப்படி தோணுதோனு நினைச்சு விட்டுட்டேன்.அப்போ நிஜமாவே சமையல் தான் காரணமா”,என அவரும் சேர்ந்து கலாய்க்க அவ்வளவு தான் கட்டிக் காத்த அத்தனை பொறுமையும் காற்றில் பறக்க வேகமாய் எழுந்தவள் தன் அருகிலிருந்த டம்ளர் தண்ணீரை அப்படியே எதிரிலிருந்த அபினவின் மேல் கொட்டியிருந்தாள்.

திஷானி விழுந்து விழுந்து சிரிக்க சாருவின் கணவனோ அதிர்ச்சியாய் ஒரு பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.

“எரும மாடே இன்னைக்கு என்ன ஆகுறீங்கனு மட்டும் பாருங்க என்றவள் அடுத்த தண்ணீர் டம்ளரை கையில் எடுக்க அபினவ் வேகமாய் எழுந்து தள்ளி நின்றான்.

அதற்குள் அவளிடமிருந்த டம்ளரை பிடுங்கி கீழே வைத்த கணவனின் பார்வையில் அமைதியானவள் மனதினுள்,”செத்தேன் இன்னைக்கு..ஸ்டார்ட் மியூசிக்..”

“சாரு ஒரு குழந்தைக்கு அம்மா மாதிரியா நடந்துக்குற வந்த இடத்துல இப்படியா பிகேவ் பண்ணுவாங்க..உனக்கு எப்போதான் பொறுப்பு வரப் போகுதோ..சாரி அபினவ்..”

“ஐயோ இப்படி ஆகும்னு தெரிஞ்சு தான் அவகிட்ட வம்பு பண்ணேன்..நீங்க தப்பா எடுத்துக்காதீங்க..”

“சுத்தம் அப்போ என்னை விட உங்க நிலைமை மோசம் போலயே திஷானி”,என்றவன் சிரித்தான்.

அன்றைய பொழுது அதை விட இனிமையாய் நகர முடியுமா என்றே தோன்றியது.அத்தனை சந்தோஷத்தோடு சாரு விடைபெற திஷானிக்குமே மனது நிறைந்து விட்டிருந்தது.

இரவு அபினவோடு அமர்ந்திருந்தவள்,”இன்னைக்கு சிரிச்சு சிரிச்சு எனக்கு வயிறே வலிச்சுருச்சு..அத்தனை மெச்சூர்ட்டான சாரு இவ்ளோ சில்லியா பிகேவ் பண்றாங்க அந்த அண்ணாவும் அவ்ளோ கேஷ்வலா எடுத்துகிட்டாங்க..”

“ம்ம் அதானே திஷா பேபி லவ்வோட மகிமை..ஒருத்தரை அவங்களாவே ஏத்துகிட்டா மட்டும் தான் லவ்வை முழுசா பெற முடியும் தரவும் முடியும்.இப்போ என் பொண்டாட்டி கூட அப்பப்போ அழுமூஞ்சியா தான் இருக்கா நா அட்ஜெஸ்ட் பண்ணிக்கலையா?”

செல்லமாய் அவன் கையை கிள்ளியவள்,”இனி நா எதுக்காகவும் அழ மாட்டேன்..என்ன பெட்??”

“ம்ம் நம்ம பட்டூஸ்க்கு சிப்ளிங்க்ஸ் ரெடி பண்ணிரலாம்..எப்படி என் பெட்??”

“ஐயே ஆசை தான்..”,என்றவள் சலுகையாய் அவன் மேல் சாய்ந்து கொண்டாள்.

மூன்று  வருடங்களுக்குப் பிறகு,

அபினவ் திஷாவையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அந்த மாலில் சுற்றிக் கொண்டிருந்தான்.

“ம்மா ஒரே ஒரு ஐஸ்க்ரீம் ப்ளீஸ்..”

“ஆமா ஆமா ஒன் தான் எனக்கு ஒண்ணு அக்காக்கு ஒண்ணு..ப்ளீஸ்..”

“ம்ம் ஆமா ரொம்ப பெரிய ஆள் இவ..ரெண்டு நிமிஷம் முன்னாடி பொறந்துட்டு ரொம்ப தான் மரியாதை..அபிப்பா நீங்க தான் வேண்டாம்னு சொல்லணும் இங்க என்னனா நீங்களும் கூட சேர்ந்து லூட்டி அடிக்குறீங்க..”

“நா என்ன பண்ண பேபி பசங்க தான் கேக்குறாங்க..”என்றவன் தோளை குலுக்கினான்.

“பேபி பேபி ப்ளீஸ்..”,என அகல்யாவும் அகிலும் ராகம் பாட அபினவை முறைத்தவள் எடுத்தா கொடுக்குறீங்க..வீட்டுக்கு வாங்க பாத்துக்குறேன்..”

அவளிடம் காரியம் சாதிக்க குழந்தைகளுக்கு எளிதான வழி தந்தையை போன்றே அவளை பேபி பேபி என ஒரு வழியாக்கி விடுவர்..

நினைத்தபடியே ஆளுக்கொரு ஐஸ்கீரிமை வாங்கிக் கொண்டு அங்கிருந்த டேபிளில் அமர்ந்தனர்.

சற்று நேரம் கழித்து அவர்கள் அருகில் வந்த புதியவன் அபினவிடம்,”எக்ஸ்கீயூஸ் மீ சார்..”

“எஸ் சொல்லுங்க..”

“சார் ஐ அம் விக்கி..ஜெர்னலிஸம் பைனல் இயர் ஸ்டூடண்ட்..”

“சொல்லுங்க என்ன விஷயம்..”

“இல்ல நா ப்ராஜெக்ட்காக ரொம்ப நாளா ஆர்டிகல் தேடி அலைஞ்சுட்டு இருக்கேன்..இன்னும் டூ டேஸ்ல சப்மிட் ண்ணணும்..பட் எதாவது வித்யாசமா கிடைக்கட்டும்னு தேடி தேடி அலுத்துப் போய்ட்டேன்..இன்னைக்கு உங்களை பார்த்தவுடனே உங்களை பத்தி எழுதலாம்னு தோணுது..”,என்று தயங்கியவாறே திஷானியை பார்த்வாறு கூறினான்.

அபினவுமே திஷானியை பார்க்க அவளோ இயல்பாய் எப்போதும் போல் குழந்தைகளை கவனித்துக் கொண்டிருந்தாள்.

“சாரி ப்ரோ..இதெல்லாம் சரி வராது அதுமட்டுமில்லாம நீங்க எதிர்பாக்குற எந்த வித்யாசமும் இங்க இல்லை அதை புரிஞ்சுகோங்க..”

எவ்வளவு கூறியும் அவன் மீண்டும் மீண்டும் பேச்சை தொடர அவன் நிலைமை உணர்ந்தவளாய்,”அபிப்பா ஏதோ ஒருநாலு கேள்வி பதில் சொல்லிட்டு போங்களேன்..பாவம் லாஸ்ட் மினிட் வேற வழியில்லை தான..”

இடவலமாய் தலையசைத்தவன்,”சரி பட் இப்போ இங்க குழந்தைங்க முன்னாடி எதுவும் வேண்டாம் அட்ரெஸ் நோட் பண்ணிகோங்க ஈவ்னிங்கா வீட்டுக்கு வாங்க..”

அவன் ஒரு வழியாய் இடத்தை விட்டு நகர அபினவ் திஷானியிடம்,”ஏன் டீ உனக்கு இந்த வேண்டாத வேலை..”

“பரவால்ல விடுங்க அந்த பையன் அப்படி என்ன தான் கேக்குறான்னு பார்ப்போமே..அதைவிட அதுக்கு நீங்க என்ன பதில் சொல்றீங்கனு பாப்போம்..”

“ரொம்ப நல்ல ஆசை நல்லா வருவ பேபி..நீ நடத்து..”

மாலை நேரம் கூறிய நேரத்தில் சரியாய் அவர்கள் வீட்டு அழைப்பு மணி ஒலிக்க அபினவ் வந்து கதவை திறந்து அவனை வரவேற்று ஹாலில் சோபாவில் அமர்த்தினான்.

“தேங்க்ஸ் பார் யுவர் டைம் சார்..சாரி உங்களை டிஸ்டர்ப் பண்றதுக்கு..”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல பசங்க முன்னாடி எதையும் பேச விரும்பாம தான் இப்போ வர சொன்னேன் சொல்ல போனா உங்களுக்குதான் அலைச்சல்..ஒருநிமிஷம்…திஷா காபி..”

“இதோ எடுத்துட்டு வரேன்ங்க”,என்று குரல் கொடுத்தவள் காபியோடு வந்து அவனருகில் அமர்ந்தாள்.

காபியை பருகி முடித்தவன் தன் மொபைலில் ரெக்கார்டரை ஆன் செய்து அனுமதி வேண்ட கேள்வி கேட்குமாறு தலையசைத்தான் அபினவ்.

“சார் உங்க மேரேஜ் லவ் மேரேஜா இல்ல அரேண்ஜ்ட்??”

“லவ் கம் அரேண்ஜ்ட்தான்.பாத்ததும் பிடிச்சது வீட்டுல பேசி கல்யாணம் பண்ணிக்கிட்டோம்..”

“நீங்க அவங்களை பார்த்தப்போவே இந்த ப்ராப்ளம் இருந்துதா அவங்களுக்கு..”

“ம்ம் இது பிறந்த கொஞ்ச மாதத்திலேயே ஏற்பட்ட பாதிப்பு..”

“ஓ..அப்போ நீங்க ரெண்டுபேரும் ப்ரெண்ட்ஸா ஏற்கனவே அறிமுகம் இருந்ததா?”

“இல்லை அப்படியெல்லாம் எதுவும் இல்ல..”,என்றவன் தங்கள் முதல் சந்திப்பை பற்றிக் கூறினான்.

“வாவ் சூப்பர் சார் நீங்க ரியல் ஹீரோ நிஜமாவே..ஒருத்தங்களோட குறையோட அவங்களை ஏத்துக்கிறது உண்மையா பெரிய விஷயம்..”

“உங்களோட இந்த ப்ரேஸே தப்பு ப்ரோ..ஏத்துக்குறதுங்கிறது கஷ்டப்பட்டு பண்றது,.வாழ்க்கை கொடுக்குறது,மத்தவங்க வற்புறுத்தலால கல்யாணம் பண்றது இல்லையா வேற வழியே இல்லனு பண்ணிக்குறது…பட் நா இது எந்த கேட்டகிரிலையுமே வர மாட்டேனே..இஷ்டப்பட்டு லவ் பண்ணி மனசார இவதான் எனக்கு லைப் பார்ட்னரா வேணும்னு அடம் பிடிச்சு கல்யாணம் பண்ணிருக்கேன்.

சொல்லப் போனா அவங்க விருப்பமே தெரிஞ்சுக்காம அவங்ககிட்ட ஒரு வார்த்தை கூட கேக்காம வீட்ல பேசி பெரியவங்க சம்மதிக்க வச்சு கிட்டதட்ட கொஞ்சம் கட்டாய கல்யாணம் தான்..சோ அப்படி பாத்தா என்னை ஏத்துகிட்டது அவங்க தான்.”

“நல்ல பேசுறீங்க சார்..சொல்ல போனா நீங்க சொல்றதும் சரி தான்.சரி அவங்களை பத்தி சொல்லுங்களேன்..”

“என் வைப்ங்கிறதுக்காக சொல்லல உண்மையாவே அவ ரொம்ப போல்ட் அண்ட் ஸ்ட்ராங் கேர்ள்.அவளால முடிஞ்ச வரை புதுசு புதுசா விஷயங்களை கத்துகிட்டேயிருப்பா..ஸப்போர்டிவ் வைப் அண்ட் வொண்டர்புல் மதர் நவ்..கண்டிப்பா அவ எனக்கு கிடைச்சது எனக்கு மிகப் பெரிய கிப்ட்..”

“லவ்லி..மேம் நீங்க சொல்லுங்க..கேட்குறது தப்பு தான் இருந்தாலும் கேட்காம இருக்க முடில..கண்டிப்பா நீங்க எதிர்பார்த்திருக்காத ஒரு கல்யாணம் உங்களோடது..வாழ்க்கை எப்படி போகுது..”

“இதுல தப்பா நினைக்க ஒண்ணுமில்ல..நீங்கனு இல்ல எங்களை பாக்குற யாருக்குமே இதெல்லாம் யோசிக்க தோணும் கண்டீப்பா..ஏன் நானே கூட ஆரம்பத்துல ரொம்பவே குழப்பத்துல இருந்தேன்.ஆனா உண்மையான அன்பு எதையும் எப்படியும் மாத்திடும்னு இப்போ புரிஞ்சுடுச்சு..ரொம்பவே சந்தோஷமான நிறைவான வாழ்க்கை நாளுக்கு நாள் அழகாய்டே போகுது..”

“நிஜமாவே உங்களை மீட் பண்ணதுல ரொம்ப சந்தோஷமா இருக்கு..ப்ராஜெக்டா இருந்தாலும் மனசுக்கு பிடிச்சு உருப்படியா ஒரு கான்செப்ட் எடுக்கணும்னு வெயிட் பண்ணேன் இதைவிட அழகான கான்செப்ட் கண்டிப்பா கிடைக்க போறதில்ல..ரொம்பவே தேங்க்ஸ் சார் ..”

“பட் எனக்காக நீங்க ஒண்ணு மட்டும் பண்ணணுமே..”

“சொல்லுங்க சார்..”

“இதை நீங்க சப்மீட் பண்ணும் போது நூறு சதவிகிதம் ஒரு காதல் கதையா தான் கொடுக்கணும் அதை வீட்டுட்டு ஆரம்பத்துல சொன்ன மாதிரி ஏத்துகுறது பெரிய விஷயம் அது இதுனு போட கூடாது..”

“சார்..”

“இல்ல நா உங்கள தப்பு சொல்லல..இது எப்பவுமே எனக்கு இருக்குற எண்ணம் தான்.பார் எக்ஸாம்ல் பேஸ்புக்ல அடிக்கடி எதாவது ஒரு கப்பில் போட்டோ போட்டு இவங்களுக்கு விஷ் பண்ணுங்க இல்லனா ஒரு பிசிக்கலி சேலெண்ஞ்ட் பேர்..அதுவும் இல்லனா அசிட் அட்டாக் விக்டிம் இவங்க போட்டோ எல்லாம் போட்டு அவங்க பார்ட்னர்ஸ ஏதோ பெரிய தியாகி ரேஞ்ச்க்கு பீல் பண்ணி கமெண்ட்ஸ் டேக் லைன்ஸ் பாக்கும் போது ரொம்ப ஒரு மாதிரி கடுப்பாகும்.

சீ அவங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சு விரும்பி கல்யாணம் பண்ணிக்குறாங்க.அப்படி நடக்குற கல்யாணத்துல ஏற்கனவே அந்த விக்டிம் பெர்சனே கொஞ்சம் இன்பீரீயாரிட்டி காம்ப்ளக்ஸ்ல இருக்க வாய்ப்பு இருக்கு அப்படியிருக்கும் போது நாம சும்மா போற போக்குல போட்டு போற கமெண்டோ இல்ல பயன்படுத்துற வார்த்தைகளோ அவங்களை எத்தனை அளவு காயப்படுத்தும்.

அதுமட்டுமில்லாம நாம குடுக்குற இந்த தியாகி பட்டத்துக்காக அவங்க இந்த கல்யாணத்தை பண்ணிக்கல..மத்தவங்களுக்கு குறையா சுமையா தெரியுறது தனக்கு தெரியாத அளவு காதல் இருந்து கல்யாணம் பண்றவங்க தான் எங்களை மாதிரி எல்லாருமே..

இப்போ இந்த விஷயத்தையே ஒரு கப்பில் போட்டோக்கு எல்லார் கல்யாணத்துக்கும் விஷ் பண்ற மாதிரி திருமண வாழ்த்துக்கள் காட் ப்ளஸ் யூ போத்னு மட்டும் போடுறதுல ஒண்ணும் தப்பில்ல தான..

உடலின் குறைங்கிது எப்பவுமே பெரிய விஷயம் கிடையாது..உடம்பு நல்லா இருக்குற எத்தனை பேரோட மனசு குறையில்லாம சுத்தமா இருக்குதுனு நம்மால் சொல்லிவிட முடியுமா..

அதைவிடவும் முக்கியம் தன் உடல் பலகீனத்தை பொருட்படுத்தாது தன் பாதை தடைகளை மீறி ஒவ்வொரு நாளையும் கடக்குறவங்க முன்னாடி சாதாரணமா இருக்குற நாம தான் தகுதி குறைஞ்சவங்க..

எல்லா வசதியும் இருந்தும்கூட ஒண்ணுமில்லயேனு ஒருநாளாவது மனசுல தோணாதவங்க எத்தனை பேர் இருப்போம்.அவங்களுக்கெல்லாம் தன் உடல் உறுப்பே  சரியா இல்லாத நிலையிலும் தன்னம்பிக்கையோட இந்த சமூகத்தை எதிர் கொள்றாங்க..அப்படியிருக்க அவங்க எல்லாம் நாம பார்த்து ஆச்சரியபட வேண்டியவங்க தானே தவிர அனுதாப படவேண்டியவங்க இல்ல நிச்சயமா..

அதனால என் கதை பக்கா காதல் கதையா தான் வரணுமே தவிர எந்த எக்ஸ்ட்ரா எலமெண்டும் வேண்டாம்.உங்க தீசிஸோடா காப்பி நிச்சயம் வேணும் ஓ.கே தான?”,என மென்னகைக்க

அவனும் பதிலுக்குச் சிரித்து கைக் குலுக்கினான்.

அவனை வாசல் வரைச் சென்று அனுப்பிவிட்டு வந்தவனை கண்கொட்டாமல் அவள் பார்த்திருக்க வழக்கம்போல் சோபாவில் படுத்து அவள் மடியில் தலை வைத்துக் கொண்டவன்,

“என்ன என் மூணுகால் அழகி மயக்கும் பார்வை பாத்துட்டு இருக்கா??ஸ்பெஷல் கவனிப்பு எதுவும் இருக்கா??”

“புத்தி போறத பாரு..அதெல்லாம் ஒண்ணுமில்ல கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆனாலும் ஏதோ நேத்துதான் கல்யாணம் ஆன மாதிரி என்ன விட்டுக் கொடுக்காம பேசுறீங்களே..அதை நினைச்சுதான் இப்படி இருக்கேன்..”

“நாலு என்ன நாற்பது வருஷம் ஆனாலும் நா இப்படிதான் பேபி இருப்பேன்..வழக்கமான டயலாக் தான் என் மொத்த காதலுக்கும் சொந்தகாரி, எஜமானி நீ தான்..இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும்..”

“ம்ம் எனக்கும் அதான் வேணும் உங்களை எப்பவும் எந்த ஜென்மத்துலயும் யாருக்கும் விட்டு தரவே மாட்டேன்..

     “எந்தன் ஊன் குறை மறந்து

உள்ளத்து  குறை அழித்து

வாழ்வை செழிவூட்டி

அழகாக்கிய அன்பன் நீ

ஏழேழு பிறவிக்கும்

உன் மாசற்ற

இவ்வன்பின் அழகியாய் நான்!!!”

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode