11
அந்த நாளின் விடியல் திஷானிக்குள் பல மாற்றங்களை கொண்டு வந்திருந்தது.காலையிலேயே எழுந்தவள் வேகமாய் அத்தனை வேலைகளையும் முடித்துவிட்டு தன்னவனை எழுப்புவதற்காக தங்களறைக்குச் சென்றாள்.
முகத்திலிருந்த புன்னகை சற்றே பெரிதாக கணவனின் அருகில் அமர்ந்தவள் அவன் கன்னத்தில் இதழ்பதித்து,”குட்மார்னிங்க..”
லேசாய் அசைந்து படுத்தவன் அரைகுறை தூக்கத்தில் கண்விழித்து அவளைப் பார்க்க சிரித்தவாறே அவள் மடியில் படுத்து தூக்கத்தை தொடர ஆரம்பித்தான்.
சிலி நிமிடங்கள் அவன் கேசத்தை வருடியவள் நினைவு வந்தவளாய்,”டைம் ஆச்சுங்க ஆல்ரெடி லேட்..”
“ம்ம் போலாம் போலாம் என் பொண்டாட்டியே இன்னைக்கு தான் வழிக்கு வந்திருக்கா அந்த வாய்ப்பை மிஸ் பண்றதாயில்ல..ஆமா என்ன காலைலேயே இப்படி ஒரு சர்ப்ரைஸ்!?”
“ம்ம் இனி தினமும் இப்படிதான்..”,என மென்குரலில் கூறியவளை விழிவிரிய பார்த்தவாறே எழுந்து அமர்ந்தவன்,”அட இதுகூட நல்லாயிருக்கே..என் காட்டுல இனி மழை தான்னு சொல்லு திஷா டியர்..”
“ம்ம் போதுமே..எழுந்தவுடனே ஆரம்பிக்காதீங்க..போங்க போய் ரெடி ஆய்ட்டு வாங்க டிபன் ரெடி பண்ணிட்டேன்..சாப்டலாம்..”
“நீ இப்படி ஒரு குட்மார்னிங் சொன்னதுக்காகவே இன்னைக்கு புல்லா நீ என்ன சொன்னாலும் கேட்பேன் திஷா பேபி..”,என்று அவள் இடுப்பில் குறுகுறுப்பு ஏற்படுத்தியவாறே குளிக்கச் சென்றான்.
அவள் அமைதியாய் இருந்தாலே இவன் ஆட்டம் தாங்காது இன்று அவளே தயக்கத்தை தகர்த்தபின் கேட்கவும் வேண்டுமோ,குளித்து வெளிவந்து தயாராவதற்குள் இரண்டு மூன்று முறை அவளை அழைத்து அதை எங்கே இதை எங்கே என அதை அவள் எடுக்கும் நொடிகளில் அவளை ஒரு வழி செய்து வைத்தான்.அடுத்த முறை அவன் அழைத்த போது பொறுமையிழந்தவராய் சாரதா திஷானியிடம்,
“ம்மா அவனுக்கு இன்னைக்கு என்ன தான் ப்ரச்சனை மீட்டிங் இருக்கோ என்னவோ இப்படி போட்டு படுத்தி எடுக்குறான்.நீ அவன் ரெடி ஆகுற வர அங்கேயே இருந்து எடுத்து கொடுத்துட்டு வா..பாவம் எத்தனை தடவை தான் நடக்குறது நீயும்,,போ டா”,என அவளை அனுப்பி வைத்தார்.
திஷானியோ மனதிற்குள் தலையில் அடித்துக் கொண்டாள்.”கடவுளே!!மானம் போகுது..நா பேசாமயே இருந்துருக்கலாம்.எனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலையோ??!”,என்று எண்ணியவள் அறைக் கதவை வேகமாய் திறந்து கொண்டு அவனைத் திட்டுவதற்கு வாயெடுத்தவள் அவனைக் காணாது மெதுவாய் உள்ளே வந்து அறைக்குள் எட்டிப் பார்த்தாள்.
அதற்காகவே காத்திருந்தவனோ கதவின் பின்னிருந்து வந்து அவளை பின்னிருந்து இறுக்கிக் கொண்டான்.
“ஐயோ ஒரு குட்மார்னிங் சொன்னது குத்தமா என்ன இந்த பாடுபடுத்துறீங்களே..”,என்றவள் போலியாய் அலுத்துக் கொண்டாள்.
“ம்ம் ரொம்ப தான் மேடம் சலிச்சுக்குறீங்க..சரி நா ஆபீஸ் கிளம்புறேன்..பை”,என நகரப் போனவனை தன்புறம் வேகமாய் இழுத்தவள்,ஒரு நிமிடம் அவன் விழி நோக்கி நிற்க,”என்னடீ??”,என்றவனின் குரலில் சற்றே தைரியத்தை வர வைத்தவள் அவன் இதழோடு இதழ் சேர்த்திருந்தாள்.
நடப்பதை உணர சில நொடிகளே ஆன போதும் சட்டென சுதாரித்தவாறு தன்னவளினுள் தன்னை தொலைத்தான்.நிமிடங்கள் கரைந்தோட சற்றே நிதானித்தவன் அவளை விடுவிக்க,”ஹவ் அ குட் டே..”,என்றாள் மெதுவாய்..
“லைஃப்ல பர்ஸ்ட் குட் டே இது தான்னு நினைக்குறேன்..திஷா டியர் பேசாம லீவ் போட்றவா..”
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் கிளம்புங்க”,என்றவள் கதவை திறந்து நிற்க அவனோ உள்ளே அலமாரியை நோக்கிச் சென்றான்.
“என்னாச்சுங்க எதுவும் மறந்துட்டீங்களா?”
“ம்ம் இல்ல..”,என்றவன் தன் சட்டையை செய்கையால் காட்ட அவன் மார்பு பகுதி முழுவதும் கசங்கியிருந்தது.அதை கண்டவளோ லேசாய் நாக்கு கடித்து கண்சிமிட்டி அவனை பாவமாய் பார்த்தாள்.
“திஷா பேபி வேணாம் மீ பாவம்..இப்படியெல்லாம் ரியாக்ஷன் குடுத்தா அப்பறம் நா வேலைக்கு போன மாதிரி தான்.நீ ஹாலுக்கு போ நா டூ மினிட்ஸ்ல வரேன்.அம்மா கேட்டாங்கனா போன் பேசிட்டு இருக்கேன்னு சொல்லு”,என. மார்க்கமாய் சிரித்து வைத்தான்.
ஹாலிற்கு வந்தவளோ முகச் சிவப்பை மறைக்க பெரும்பாடு பட்டாள்.அவன் கூறியது போலவே அவள் மட்டும் நிற்பதை கண்டு சாரதா அவனைப் பற்றி கேட்க போன் பேசிக் கொண்டிருப்பதாய் கூறி சமாளித்தாள்.
ஐந்து நிமிடத்தில் வேறு சட்டையோடு வந்தவன் அவள் கொடுத்த உணவுப் பையை வாங்கிக் கொண்டு வெளியே செல்ல வாசல் வரை சென்றவள் கதவோரமாய் நின்று கொண்டாள்.கார் கதவை திறந்தவன் என்ன நினைத்தானோ அவளருகில் வந்து ரகசியமாய்,
“அந்த சட்டையை எதுவும் பண்ணிடாத அப்படியே இருக்கட்டும் ரொம்ப ஸ்பெஷல் புரியுதா!”,எனக் கூறி மேலும் சிவக்க வைத்துச் சென்றான்.
அவன் கிளம்பும் வரை காத்திருந்து வழியனுப்பி வைத்தவள் தங்களறைக்கு வந்து முதல் வேலையாய் அவனின் சட்டையை தன் கையில் எடுத்தாள்.கசங்கிய பகுதியை மீண்டும் மீண்டும் வருட அத்தனை இதமான மயிலறகாய் அவள் மனம் அசைந்தது.மெதுவாய் எழுந்து கண்ணாடி அருகில் சென்றவள் சட்டையை தன் மேல் போட்டுக் கொள்ள அதிலிருந்த பெர்ப்யூமின் வாசமும் தன்னவனின் வாசமும் சேர்ந்து அவளை ஏதோ மோன நிலைக்கு தள்ள அப்படியே தலை சாய்த்து அதன் இனிமையை உள் வாங்கினாள்.
எத்தனை நேரம் அப்படியே நின்றிருந்தாளோ சட்டென கேட்ட போனின் ஒலியில் நினைவிற்கு வந்தவள் அதை கையிலெடுக்க அவளின் மாயவன் தான் அழைத்திருந்தான்.
“ஹலோ என்னாச்சு எதாவது விட்டு போய்டீங்களா?”
“ம்ம் பேபி என் மனசை தான் விட்டு வந்துட்டேன்..பத்திரமா பாத்துக்குறியா?”,என பொறுமையாய் கேட்க அவளோ முகம் வெம்மையுற அமைதி காத்தாள்.
“ஆனாலும் நீ அநியாயம் பண்ற 15 நாள் லீவ் போட்டு உன்னையே சுத்தி வந்தப்போ எல்லாம் கண்டுக்காம இப்படி ஆபீஸ் போறவன போட்டு டார்ச்சர் பண்ற டீ..பேசாம கிளம்பி வீட்டுக்கு வந்துரவா?”
“ஹும் அதெல்லாம் வேணாம்..”,என அவசரமாய் அவள் கூற மறுபுறம் அவன் சத்தமாகவே சிரித்தான்.
“ஹே பொண்டாட்டி என்ன பண்ணிட்டு இருக்க சட்டையை கையில வச்சு கனவு கண்டுகிட்டு தான இருக்க..”
“இல்ல போட்டு பாத்து கனவு காணுறேன்..”,என ஏதோ ஒரு நியாபகத்தில் அவள் உளற அபினவோ மறுபுறம் குத்தித்து ஆர்பாட்டம் பண்ணாத குறைதான்.
“ஐயோ இல்ல அது வந்து..நா..”
“ம்ம் போதும் டீ பொண்டாட்டி..எனி டைம் வீட்டுக்கு வந்துருவேன்..என் தொல்லையை அனுபவிக்க தயாரா இரு திஷா டியர்..பை”,என்றவன் அதே உற்சாகத்தோடு தன் இருக்கையில் அமர்ந்து வேலையை ஆரம்பித்தான்.
திஷானிக்கோ எப்போது அவன் வரும் நேரம் ஆகுமென வழி மேல் விழி வைத்து காத்திருந்தாள்.மாலை நேரமாக வேக வேகமாய் முகத்தை கழுவி தன்னை சரி செய்தவள் சாரதா கொடுத்த பூவை வாங்கி சூடிக் கொண்டாள்.
இரண்டு மணி நேரம் கடந்திருந்த நிலையில் சற்றே பொறுமையிழந்தவளாய் வாசலையும் டீவியையும் மாறி மாறி பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.அவன் வழக்கமாய் வரும் நேரமும் கடந்து போக சாரதா அவளை சாப்பிட அழைத்தார்.
“திஷானி அவனுக்கு எதாவது வேலை வந்துருக்கும் பாதி நாள் இப்படிதான் பண்ணுவான்.ஒரு போன் கூட பண்ணி சொல்ல மாட்டான்..என்ன ஐடியோ போங்க..நீ வா சாப்டலாம்..”
“இல்ல அத்தை நா அப்பறமே சாப்டுறேன்..நீங்களும் மாமாவும் சாப்டுங்க..எனக்கு பசிக்கல..”,என்றவள் தங்களறைக்குச் சென்றாள்.அப்போது தான் நினைவு வந்தவளாய் தன் மொபைலைப் பார்க்க 15 குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.
தாமதமாகுமெனவும் எதிர்பாராத வேலையெனவும் மேலும் அவ்வப்போது அனுப்பியிருப்பான் போலும்..அவன் நிலைமை மூளைக்கு புரிந்தாலும் ஏனோ மனம் அதை ஏற்றுக் கொள்ளாமல் அடம் பிடித்தது.ஒன்றும் செய்யத் தோன்றாமல் அப்படியே படுத்துவிட்டவள் ஏதோ சிந்தனையில் தன்னை தொலைத்தாள்.
அடுத்த அரைமணி நேரத்தில் அறைக் கதவு திறக்கப்படும் ஓசைக் கேட்டும் வந்தது கணவனென அறிந்திருந்தும் அசையாமல் அவள் படுத்திருக்க வந்தவனோ மெதுவாய் அவள் பின்புறம் படுத்துக் கொண்டு கன்னத்தில் இதழ் பதித்தான்.
“திஷா பேபி செம கோவத்துல இருக்கியா?”
“……..”
“நா அவ்ளோ வேலைலேயும் உனக்கு எத்தனை மெசெஜ் பண்ணேன்..ஒரு ரிப்ளையாவது பண்ணியா நீ..நியாயமா நா தான் கோபப்படனும்..”,அவன் முடிப்பதற்குள் கையை தட்டிவிட்டவள் காரமாய் அவன்புறம் திரும்பி,
“ஓ..லேட்டா வவந்ததே தப்பு இதுல நீங்க என் மேல கோப படுவீங்களா?”
“ஐயோ அங்கிரி பேர்ட் ஃபுல் பார்ம்ல இருக்கியா!!செம டயர்டா இருக்கேன் டா ஒரு பைவ் மினிட்ஸ் சாப்ட்டு சண்டை போடலாமா..ப்ளீஸ் ப்ளீஸ்.”,என பாவமாய் கேட்பவனிடம் அதற்கு மேல் பேசத் தோன்றாமல் அமைதியாய் எழுந்து உணவு எடுத்து வைக்கச் சென்றாள்.
அபினவிற்கோ அத்தனை களைப்பையும் மீறி ஒருவித உற்சாகம் ஒட்டிக் கொண்டது..அத்தனை உரிமையாய் தன்னிடம் அவளின் கோபம் அவனுக்கு எரிச்சலை வர வைப்பதற்கு பதில் சிரிப்பையே அளித்தது.அதே உற்சாகத்தோடு உடைமாற்றி ரெப்ரெஷ் ஆகி வந்தவன் சாப்பிட அமர்ந்தான்.
“ஏன்டா இவ்ளோ லேட்டாவா வர்றது அவளும் உனக்காக சாப்டாம இருரக்கா..சரி ரெண்டு பேரும் சாப்ட்டு சீக்கிரம் போய் படுங்க..திஷானி கிட்சன்ல எல்லாம் அப்படியே இருக்கட்டும் காலைல பாத்துக்கலாம் நீ போய் படுத்துக்கோம்மா..”,என்றவாறு சாரதா உள்ளே சென்று கதவை தாளிடும் வரை அமைதியாய் இருந்தவன் அடுத்த நொடி அவளை தன் மடியில் அமர வைத்தான்.
“ப்ச்ச் என்ன பழக்கம் இது ஹால்ல வச்சு..விடுங்க..”
“ம்ம் என் திஷா பேபி எனக்காக சாப்டாம காத்திருக்கா அவளை கவனிக்குறதுக்கு இடம் பொருள் எல்லாம் கிடையாது..”,,என முதல் வாய் சாப்பாட்டை எடுத்து அவளுக்கு ஊட்டிவிட்டான்.
மறுக்காமல் வாங்கிக் கொண்டவள் தானும் தட்டிலிருந்து எடுத்து அவனுக்குக் கொடுத்தாள்.சிறிது நேரத்தில் எழுந்து சேரை எடுத்து அவனருகில் போட்டு அமர்ந்தவள் தட்டை கையிலெடுத்துக் கொண்டு அவனுக்கு கொடுக்க ஆரம்பித்தாள்.
“திஷாம்மா இன்னுமா கோபம்..ஏன் அமைதியாவே இருக்க..ஐயோ உன் கோவத்தை சமாளிக்குறது ரொம்ப கஷ்டம் போலேயே..”,என எப்படியாவது அவளை வாய் திறக்க வைக்க அவன் எடுத்த முயற்சி அனைத்துமே தோல்வியை தான் தழுவியது..
அதன்பின் சமையலறையை சுத்தம் செய்ய அவள் ஆரம்பிக்க அவனும் உதவி செய்யத் தொடங்கினான்.வேலையை முடித்து அறைக்குள் வர அபினவிற்கு ஆபீஸ் போன் வந்தது.கொலைவெறியோடு அவள் அவனை பார்க்க சாரி சாரி என செய்கை செய்தவாறே மொபைலை எடுத்துக் கொண்டு பால்கனிக்குச் சென்றான்.
பத்து பதினைந்து நிமிடங்கள் பேசிவிட்டு வந்தவன் கட்டிலில் அமர்ந்திருந்தவளின் அருகில் அமர அடுத்த நொடி அவனை இறுகக் கட்டிக் கொண்டாள்.அவளின் அணைப்பே அவள் தன்னை எந்தளவு எதிர்பார்த்திருக்கிறாள் என்பதை உணர்த்தியது
“ஹே லூசு..”,என்றவனின் இதழ் புன்னகையில் விரிய அதை அப்படியே நிறுத்தியது அவன் சட்டையை நனைத்த அவளின் கண்ணீர்.
“ஏய் திஷாம்மா என்னடா என்னாச்சு உடம்புக்கு எதுவும் பண்ணுதா!!ஏன் அழற இப்போ?என்னனு சொல்லு டீ..”
“மிஸ்ட் யூ பேட்லி..”,அழுகையினூடே திக்கித் திணறி வந்து விழுந்தன வார்த்தைகள்.
கேட்டவனுக்கோ இதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டுமென நிச்சயம் புரியவில்லை.வேகமாய் தன்னிடமிருந்து அவளை பிரித்தெடுத்தவன்,
“திஷா பேபி நானும் தான் உன்னை இன்னைக்கு ரொம்ப மிஸ் பண்ணேன் சத்தியமா ஆனா அதுக்காக ஏன் அழற??வேலைக்கு போகாம இருக்க முடியுமா நாளையிலிருந்து நீயும் தான் ஸ்கூல்க்கு போக ஆரம்பிச்சுருவ..இதானடா நம்ம ரொட்டீன் அதுக்காக இவ்ளோ பீல் பண்ணுவாங்களா?””
சற்றே சமாதானமடைந்தவள் வரவழைத்த தெம்போடு,”நீங்க சொல்றதெல்லாம் எனக்கும் புரியுது,.பட் இந்த கண்ணீருக்கு காரணம் என் வாழ்க்கைல முதல் தடவையா ஒருத்தங்கள மிஸ் பண்ணிருக்கேன்.அந்த பீல் எப்படி இருக்கும்னு இன்னைக்கு தான் உணர்ந்தேன்..அதனால தான் அழுகை வந்துருச்சு.கான்ட் கன்ட்ரோல் மை செல்ப்..”
அவளை பார்த்திருந்தவனுக்கோ அவளின் வார்த்தைகள் வியப்பையும் வலியையும் ஒரு சேர கொடுத்தது.
“திஷாம்மா இது வர நீ யாரையுமே மிஸ் பண்ணதில்லையா?”
“ம்ஹூம்..என் அப்பா இந்த உலகத்துலயே இல்ல ஆனாலும் அவரோட அன்பையோ அரவணைப்பையோ என்னைக்கும் நா எதிர் பார்த்தது கிடையாது.அம்மா எப்பவுமே வேலை வேலைனு ஓடுவாங்க கிடைச்ச நேரத்துல தான் பேசிக்க முடியுமே தவிர நினைச்ச நேரத்துல பேசிக்க முடியாது ஆனா அவங்களை கூட நா மிஸ் பண்ணதில்ல..அண்ணா தம்பி அக்கா தங்கை எப்படி எந்த உறவும் எனக்கு தேவைப்பட்டதில்ல..
ஆனா முதல் தடவையா உங்களை எதிர்பார்த்து எதிர்பார்த்து வரலனு ஆனப்போ அந்த ஆற்றாமை வருத்தமா மாறி அந்த வருத்தம் கோபத்தை வர வச்சுருச்சு..எங்க உங்ககிட்ட பேசினா அழுதுருவேனோனு தான் அமைதியாவே இருந்தேன்.வந்ததும் வராததுமா அழுது உங்களையும் கஷ்டப்படுத்த வேண்டாமேனு தான்…
நிச்சயமா இந்த நாள் இந்த நிமிஷத்தை நா மறக்கவே மாட்டேன்ங்க..வாழ்க்கைல ரொம்ப பெரிய உணர்ச்சியை எனக்கு புரிய வச்சுருக்கீங்க..
காதலோ வெட்கமோ நிச்சயமா பெரிய உணர்ச்சியில்லனு தோணுதுங்க..வாழ்க்கைல எத்தனையோ கஷ்டமான காலத்துல கூட தனியா நின்னவ நான்..
ஆனா இன்னைக்கு வெறும் அன்புக்கும் அருகாமைக்கும் மட்டுமே உங்களைத் தேடுறேன்.இதெல்லாம் உங்களுக்கு பைத்தியகாரத் தனமா கூட தெரியலாம்.
ஆனா எனக்கு என் பர்த் டேவ விட இது தான் ரொம்ப முக்கியமான நாள் அபிப்பா..”,என்றவள் மீண்டும் தன்னவனின் தோள் சாய்ந்து கொண்டாள்.
சில நிமிடங்களுக்கு என்ன பேசவென தெரியாமல் வாயடைத்து போயிருந்தான் அபினவ்.
“தான் மணக்கப் போகிறவளின் உடல் பலவீனம் அதனால் அவளுள் இருக்கும் மனவோட்டங்கள் அனைத்தும் தெரிந்துதான் திருமணம் செய்வதாய் எண்ணியிருந்தான்.ஆனால் இப்போது இவள் கூறும் விஷயம் எத்தனைப் பெரியது.எத்தனை உண்மை..நண்பர்களும் காதலர்களும் சாதாரணமாய் கூறிக் கொள்ளும் ஒரு வார்த்தை இந்த மிஸ் யூ..ஆனால் இன்றுதான் உன்னிடம் தான் முதல் முறையாய் உரைக்கிறேன்.
வாழ்விலேயே நீ தான் முதல்முறையாய் அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை உணர்த்தியிருக்கிறாய் என்று கூறுவதை கேட்கும் போது நிச்சயம் ஐ லவ் யூ என்பதை விட ஆயிரம் மடங்கு உயிர்வரை சென்று தித்திக்கத்தான் செய்கிறது இந்த வார்த்தை..”,என தன்னுள் உழன்றவன் நடைமுறையை உணரும் நேரம் அவன் மடியில் கூடுகண்ட பறவையாய் படுத்து கால்களைக் குறுக்கி படுத்திருந்தவள் லேசாய் தலைத் திருப்பி தன்னவனைப் பார்த்தாள்.
“ஏன்ங்க எதுவும் பேசமாட்றீங்க..ரொம்ப மொக்கை போட்டுடேனா?”
“அடியேய் கருப்பழகி என்னை நாளுக்கு நாள் உன்மேல பைத்தியமா மாத்திட்டு இருக்க டீ..இனி ஐ லவ் யூ கூட யாருக்கு வேணாலும் ஈசியா சொல்லிருவேன் ஆனா மிஸ் யூ சொல்லவே தோணாது..அது உனக்கே உனக்கான வார்த்தை திஷா பேபி..மிஸ் யூ டூ..”,என்றவன் அவள் இதழ் நோக்கி குனிய சட்டென அவனை தள்ளிவிட்டு எழுந்தமர்ந்தாள்.
“அடிப்பாவி பக்கம் பக்கமா வசனம் பேசிட்டு இப்போ இது என்ன அநியாயம்!!”
“ம்ம் லேட்டா வந்ததுக்கு பனிஷ்மெண்ட்”,அவள் அசால்ட்டாய் கூறினாள்.
“உன் வீணா போன பனிஷ்மெண்ட்ல தீயை வைக்க..டீச்சர் தான நீ இந்த பெஞ்ச் மேல ஏத்தி விடுறது..ஸ்கேல் வச்சு அடிக்குறது இப்டிதான பனிஷ் பண்ணணும்..”
“ஹா ஹா அதெல்லாம் குழந்தைங்களுக்கு..கோட்டானுக்கு இல்ல..”,என்றவள் மேலும் சிரிக்க பொய் கோபத்தோடு அவளுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டான்.
தன்னவனை ரசித்தவாறே அவனருகில் சென்று பின்னிருந்து அணைத்து விடுவித்தாள்.
அவள்புறமாய் திரும்பியவன் அவள் மூக்கை பிடித்து அசைத்து ,”ஆனாலும் ரொம்ப தான் பண்றீங்க டீச்சர் மேடம்..ஆமா நாளக்கு ஸ்கூல் போனும் தான எல்லாம் எடுத்து வச்சுட்டியா?”
“ம்ஹும் இல்லங்க..வாழ்க்கைல இவ்ளோ நாள் லீவே போட்டதில்ல..அதனாலயோ என்னவோ ரொம்ப கடுப்பா இருக்கு பட் பசங்க முகத்தை பார்த்தா சரி ஆய்டுவேன்..காலைலயே எடுத்து வச்சுக்குறேன் எல்லாம் ஆல்ரெடி ரொம்ப லேட் நீங்களும் தூங்குங்க..”
“ம்ம் திஷாம்மா நீயும் நல்லா தூங்கு நாளைலயிருந்து உன்னை லோன்லியா பீல் பண்ண விடாம பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு..சரியா..லவ் யூ சோ மச்..”,என நெற்றியில் இதழொற்றி தன்னோடு சேர்த்தணைத்து உறங்கினான்.
மறுநாள் கண்விழிக்கும் போதே காபியின் நறுமணம் நாசி தொட அருகில் கணவனை காணாமல் விழிகளை கசக்கியவாறே எழுந்தமர்ந்தவள் தன்னருகில் கையில் காபியோடு அமர்ந்தவனை பார்த்து விழி விரித்தாள்.
“பேபி…காலைலேயே கண்ணுக்குள்ள போட்டு அமுக்கிறாத என்னை..குட் மார்னிங் டியர் பொண்டாட்டி..ஹவ் அ ஹாப்பி ஸ்டார்ட்..”
“ஐயோ என்னங்க இதெல்லாம் நா எழுந்து பண்ணிக்க மாட்டேனா..நைட்டும் லேட்டா தூங்கிட்டு ஏன் இப்படி சீக்கிரமே எழுந்து உக்காந்துருக்கீங்க..”
“ஒருநாள்ல ஒண்ணும் ஆகாது டியர்..என் பொண்டாட்டி மிஸர்ஸ் அபினவா பர்ஸ்ட் டே வேலைக்கு போக போறா..அதுக்குதான் இதெல்லாம்..காபி ஆறதுக்குள்ள வந்து எடுத்துக்கோ..”
சம்மதமாய் தலையசைத்தவள் எழுந்துசென்று பல்துலக்கி வர இருவருக்குமாய் இருந்த காபி கோப்பைகளை எடுத்துக் கொண்டு அலமாரியில் எதையோ தேடிக் கொண்டிருந்தவனின் அருகில் சென்றாள்.
“என்னங்க தேடுறீங்க??காபி எடுத்துக்கோங்க”
“ம்ம் இன்னைக்கு இந்த ட்ரெஸ் ஓ.கே வா உனக்கு”,,என ஒரு புடவையை எடுத்துக் காட்டியவாறே காபியை பருக ஆரம்பித்தான்.
“இது எப்போ வாங்கினீங்க நா பாக்கவேயில்லையே!!!”
“அதெல்லாம் பக்காவா ப்ளான் பண்ணுவோம்..கல்யாண புடவை எடுக்க போனப்போ இந்த புடவையும் பிடிச்சுதுனு எடுத்து வச்சேன் டியர்..பர்ஸ்ட் டேக்கு இது ஓ.கே தானா இல்ல இன்னும் பெட்டரா வேணும்னா வேற எடுத்து கட்டிக்கோ..”
“உங்க செலெக்ஷன் எப்பவுமே பெஸ்ட் தான்..இதையே கட்டிக்குறேன்..”,என்றவள் சிரிக்க
“இதெல்லாம் நல்லாதான் இருக்கு ஆனா இன்னும் குட்மார்னிங் வரவேயில்லையே”,என்றவன் தன் காரியத்தை சாதித்துக் கொண்டான்.
அதன்பின் வேகமாய் வேலைகளை முடித்து தங்கள் இருவருக்குமாய் மதிய உணவை பேக் செய்து முடிக்க சாரதா காலை உணவை தான் பார்த்துக் கொள்வதாய் கூறி அவளை தயாராக அனுப்பி வைத்தார்.
குளித்து முடித்து அபினவ் கொடுத்த புடவையை கட்டி முடித்தவள் தலையை வாரி பூவைச் சூடிக் கொண்டு தன்னை சரிபார்த்து திரும்ப அபினவ் குளித்து முடித்து வெளியே வந்தான்.
“வாவ் கருப்பழகி பின்ற போ..கல்லாயணத்துக்கு அப்பறம் இப்போ தான் புடவை கட்டிருக்க..பேசாம ஸ்கூல் லீவ் போட்டு அத்தானோட ரொமான்ஸ் பண்ற வேலையை பாக்கலாம் தான”
“பாசமா புடவையை எடுத்து குடுக்கும் போதே யோசிச்சுருக்கனுமோ..”என்றவள் குறும்பாய் சிரித்தாள்.
அவன் பதில் பேசும் முன் சாரதா அவர்களை அழைக்கும் சத்தம் கேட்க தன்னை தாண்டி போக எத்தனித்தவளை ஒரு நிமிடம் நிறுத்தியவன் கீழேயமர்ந்து அவள் புடவையை நீவி சரி செய்து அனுப்பினான்.
“நீ போ திஷா பேபி..நா டூ மினிட்ஸ்ல ரெடி ஆய்ட்டு வரேன்”,என அனுப்பி வைத்தான்.
இருவருமாய் சாப்பிட்டு முடித்து பெரியவர்களிடம் ஆசிப் பெற்று கிளம்பினர்.தானே அவளை பள்ளியில் ட்ராப் செய்துவிட்டு உள்ளே செல்லும் வரை நின்று கையசைத்துச் சென்றான்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!