14
காலை வேளையின் இளம்வெயில் அறையில் நிறைந்திருக்க மெதுவாய் கண் விழித்தாள் திஷானி..தன்னருகில் கணவனை காணாமல் கண்களால் அறையை துழாவ குளியலறையிலிருந்து தலையை துவட்டியவாறே வந்தவனை கண்டு பதறியபடி எழுந்தமர்ந்தாள்.
“ஹே ரிலாக்ஸ்..எதுக்கு இவ்ளோ டென்ஷன்..மணி ஆறு தான் ஆகுது..”
“இல்ல நீங்க ரெடியானத பாத்து டைம் ஆய்டுச்சோனு..”
“இல்ல எப்போவுமே சீக்கிரம் எழுந்து பழகிடுச்சு அதான் ஜாக்கிங் போய்ட்டு வந்தேன் ஸ்வெட்டிங்னால குளிச்சுட்டு வந்துட்டேன் வேற ஒண்ணுமில்ல”,என்றவாறு இயல்பாய் அவளருகில் அமர்ந்தான்.
“சரி நீ இன்னும் குட் மார்னிங் சொல்லவேயில்ல”,கண்ணில் குறும்போடு அவன் கேட்க முதலில் குழம்பியவள் பின் குட் மார்னிங் எனக் கூற இடவலமாய் தலையசைத்தவன் இந்த குட்மார்னிங் லா வேணாம் என்றவாறு கன்னத்தை காட்ட அவனை முறைத்தவாறே முகத்தை பின்னிழுக்க,
“ம்ம் நல்ல வைப்..ஏதோ ரோட்ல போற பொண்ணுகிட்ட கிஸ் கேட்ட மாதிரி முறைக்குறியே..ம்ம் கஷ்டம்தான்..”,என நகர எத்தனித்தவன் அவள் எதிர்பாரா நேரம் கன்னத்தில் இதழ்பதித்து குட்மானிங் திஷா டியர் என கண்சிமிட்டிச் சென்றான்.
அதன்பின் ஒரு நொடிகூட அவளால் இயல்பாய் இருக்க முடியவில்லை.தன் மனநிலையும் புரியாமல் கணவனை தடுக்கவும் தோன்றாமல் குழப்ப ரேகைகள் முகத்தை ஆக்கிரமித்திருக்க அதோடே கிளம்பி அவனோடு வீட்டிற்குச் செல்ல தயாரானாள்.
அவர்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்று விளக்கேற்ற வைத்து பால் பழம் கொடுத்து அக்கம் பக்கத்தினர்களில் வந்திருந்தவர்களுக்கு அவளை அறிமுகம் செய்து என நேரம் றெக்கை கட்டிப் பறக்க மதிய உணவிற்குப் பின் தான் சற்றே ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு இருவரையும் அவர்கள் அறைக்கு அனுப்பி வைத்தார் சாரதா.
அறைக்கு வந்தவள் உடைமாற்றி அமரும் வரை பொறுமையாய் பால்கனியில் காத்திருந்தவன் அவள் அருகில் வந்து எதிரில் அமர்ந்தான்.
“திஷா உன்கிட்ட கொஞ்சம் பேசனும்..”
“என்னாச்சு சொல்லுங்க.”
“காலைல இருந்து உன்னை கவனிச்சுட்டுதான் இருக்கேன்.ரொம்பவே அன்கம்பர்டபிளாவே தான் இருக்க..மே பி என்னோட அக்டிவிட்டீஸ் தான் அதுக்கு காரணமா இருக்கலாம்…பட் நா ஏற்கனவே சொன்னமாதிரி நா ரொம்பவே ஈசி கோயிங் நேச்சர்..சோ யாரா இருந்தாலும் சட்டுனு பழகிடுவேன்.அப்படியிருக்கும் போது நீ என் வைப் உன்கிட்ட எப்படியிருப்பேன்னு நீயே புரிஞ்சுக்கோ..
அண்ட் கொஞ்சம் இல்ல இல்ல ரொம்பவே ரொமேண்டிக்கான ஆளு..சோ தொடாமயே லவ் பண்றது தூரமாவே உக்காந்து பேசுறது இதெல்லாம் சத்தியமா செட்டே ஆகாது.சொல்லப் போனா என்னோட முப்பது வருஷத்து காதலுக்கு சொந்தமானவ நீ..சோ ரொம்பவே உன்னை படுத்துவேன் தான் வேற வழியில்ல உனக்கு..
இப்போவே உனக்கு டைம் வேணும்னு தான் இவ்ளோ நல்ல பையனா இருக்கேன்.இல்லனா இப்படி கெஸ்ட்கிட்ட பேசுறமாதிரி உக்காந்து பேசிட்டுஎல்லாம் இருக்க மாட்டேன்.லெட் மீ கம் டு த பாயிண்ட்.
என்கிட்ட நீ நீயா இரு..எதுவாயிருந்தாலும் மனசுவிட்டு பேசு இனி வாழ்க்கை மொத்தத்துக்கும் முதல்ல உன்னோட பெஸ்ட் ப்ரெண்ட் நா அதுக்கப்பறம் தான் ஹஸ்பெண்ட்..இது உன் வீடு உனக்கு மட்டுமே சொந்தமான உறவுகள் நாங்க..சோ சந்தோஷமா ஃப்ரீயா இரு…சரியா?”
“நானுமே உங்ககிட்ட பேசணும்னு நினைச்சேன்.பட் எனக்கு இருந்த குழப்பத்துக்கு எல்லாம் நீங்களே பதில் சொல்லிட்டீங்க..நா சின்ன வயசுல இருந்தே கொஞ்சம் ரிசர்வ்டாவே இருந்து பழகிட்டேன்.கண்டிப்பா எவ்ளோ சீக்கிரம் முடியுமோ என்ன மாத்திக்குறேன்..என்னை இந்தளவு புரிஞ்சுகிட்டு எனக்காக யோசிக்குறதுக்கு ரொம்பவே தேங்க்ஸ்ங்க..”,என கையை நீட்ட பற்கள் தெரியவே சிரித்தவன்,
“தேட்ஸ் மை கேர்ள்”,என நீட்டிய கையோடு கை குலுக்கி லேசாய் அவளை தன்னோடு அணைத்து விடுவித்தவன் நெற்றியில் தன் முத்திரை பதிக்க மறக்கவில்லை..
“”சரி திஷா டியர் ரொம்ப டயர்டா தெரியுற..கொஞ்சம் ரெஸ்ட் எடு நைட் நிறையவே பேசலாம்”,என கண்சிமிட்டி தன் மொபைலை எடுத்துச் சென்றான்.
பெண்ணவளுக்கு நாணமும் பூரிப்பும் கலந்து மனம் மயங்கும் நிலையில் இருந்தாள்..அவனின் கடைசி வரிகள் இன்னுமும் முகத்தில் வெப்பத்தை ஏற்படுத்துவதாய் இருக்க அதுதான் ஆச்சரியமாகவும் உணர்ந்தாள்.
“உணர்ச்சியற்ற பொம்மைனு நினைச்சுட்டு இருந்த என்னையே முகம் சிவக்க வைக்குற புருஷன்.கடவுள் ஆடும் ஆட்டத்தின் வியப்பு என்றுமே குறையாது தான் போலவே..”,என்றெண்ணியவள் உதட்டோர சிரிப்போடே உறங்கியும் போனாள்.
மாலை எழுந்து தயாரானவளை அழைத்துக் கொண்டு அவள் வீட்டிற்குச் செல்ல தயாரானான் அபினவ்.அவன் வேகமாய் முதலில் கீழே வந்துவிட அவன் தந்தை அவனிடம்,
“ஏன்டா அந்த பொண்ண கூட இருந்து கூட்டிட்டு வர மாட்டியா..மாடில இருந்து இறங்க கஷ்டப்பட போறா”
“ப்பா..இத்தனை வருஷம் அவ மாடியே ஏறாமயா இருந்துருப்பா..அவளும் நம்மள மாதிரி தான் கொஞ்சம் ஸ்பெஷல் சைல்ட் ஆப் காட் அவ்ளோ தான்..அதுக்காக எப்போ பாத்தாலும் அவளை பேபி மாதிரி ட்ரீட் பண்ணாதீங்கப்பா..”
“சரி டா தெரியாம சொல்லிட்டேன்..ஆள விடு”,என கைகூப்பி சிரிக்க,
“அந்த பயம் இருக்கனும்.ம்ம் அப்பறம் நாளைக்கு எங்க பெட் ரூமை கீழே இருக்குற ரூம்க்கு மத்திக்குறேன்ப்பா..ஜானகிக்கா வந்தா க்ளீன் பண்ண சொல்லிடுங்க..”
“ம்ம் அதானே பாத்தேன்..நடக்கட்டும் நடக்கட்டும்”,என அவர் பலமாய் சிரிக்க. படியில் அவள் வரும் அரவம் உணர்ந்து அபி வேகமாய் தன் தந்தையின் வாயை மூடிவிட்டு காரை நோக்கிச் சென்றான்.
இதை அனைத்தையும் மாடியிலிருந்து கேட்டவளுக்கோ கணவன் என்பதை தாண்டி முதல் முறையாய் அவனை நண்பனாய் பார்க்க தோன்றியது..தன்னை சாதாரணமாய் பார்க்க எத்தனை பேரால் முடியும்.எத்தனை சிநேகத்தோடு பேசுபவர்கள் ஆனாலும் ஒரு முறையேனும் சிறிதளவு பரிதாபம் அவர்கள் கண்களில் எட்டிப்பார்க்கும்..அவனின் இந்த விளையாட்டுப் பேச்சு ஏனோ அவனை ரசிக்க வைத்தது.
மெதுவாய் கீழே வந்தவள் மாமனார் மாமியாரிடம் விடைபெற்று கிளம்பினாள்.காரருகே அவளுக்காக காத்திருந்தவன் கதவை திறந்து அவள் அமரும் வரை பொறுமையாய் உதவி செய்து பின் காரை கிளப்பினான்.
அவள் வீட்டிற்குச் சென்றதிலிருந்து அவனிடமிருந்து விழியகற்ற முடியாமல் தவித்தாள் பெண்ணவள்.அத்தனை எளிமையாய் அத்தனை பாசமாய் தன் தாயிடமும் தம்பியிடமும் பேசிக் கொண்டு அவர்கள் தருவதை வாங்கி சாப்பிட்டவாறே தன்னையும் கவனித்து என ஏதோ 30-40 வருட பழக்கம் போல் உரிமையாய் இருந்தான்.
இரவு உணவை முடித்து இருவருமாய் கிளம்ப காரை ஸ்டார்ட் செய்தவன்,”என்ன திஷா பேபி என்னை கண்ணாலேயே முழுங்கிட்டு இருந்தியே என்ன விஷயம்??”,என அழகாய் சிரித்தான்.
கண்டுகொண்டானே என்ற அவள் எண்ணம் கண்களில் அப்பட்டமாய் தெரிய சட்டென அவன் போட்ட ப்ரேக்கில் நினைவிற்கு வந்தவள் என்னவென்பதாய் பார்க்க,
“என்ன கண்ணு டியர் உனக்கு..இந்த கண்ணும் அந்த மூக்குத்தியும் உனக்கு எப்பவுமே அடட் ப்யூட்டி திஷா..”,என ஆழ்குரலில் கூற பெண்ணவளின் இதயமோ தாறுமாறாய் எகிறிக் கொண்டிருந்தது.
வாழ்வின் அவளுக்கான முதல் பாராட்டு..அதுவும் இத்தனை காதலோடு நினைக்க நினைக்க மனதின் பரவசத்தை ஏனோ கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை..அவள் நிலை உணர்ந்தவனும் மெல்லிய புன்னகையோடு காரை கிளப்பினான்.
வீட்டிற்கு வந்து இருவரும் ஹாலில் அமர சாரதாவும் ராகவனும் டீவி பார்த்துக் கொண்டிருந்தனர்.
“அபி கீழே இருக்குற ரூமை க்ளீன் பண்ணியாச்சு நைட் அங்கேயே ஸ்டே பண்ணிக்கோங்க..காலைல திங்க்ஸ் எல்லாம் ஷிப்ட் பண்ணிக்கலாம்”
“சூப்பர் ஓ..கே மா..சரி சாப்டாச்சா நீங்க ரெண்டு பேரும்..”
“ம்ம் சாப்டாச்சுடா மருமகனுக்கு இன்னைக்கு என்ன ஸ்பெஷல் அங்க?”
“எங்கம்மா ஒண்ணுமே இல்ல..சிம்பிளா முடிச்சுட்டாங்க”,என்றவன் குறும்பாய் திஷானியை பார்க்க அவளோ அப்பட்ட அதிர்ச்சியாய் அவனை பார்த்தாள்.
“அடப்பாவி கல்யாண விருந்தே ரெடி பண்ணிருந்தாங்க நல்லா மொக்கு மொக்குனு மொக்கிட்டு இங்க வந்து இப்படி சொல்றானே!!!”
லேசாய் அவளருகில் சாய்ந்தவன்,”ஏ கண்ணழகி சும்மா விளையாட்டுக்கு தான் சொல்றேன்..ஏன் இப்படி மொறைக்குற”,என்று கிசுகிசுப்பாய் கேட்க மாமனார் மாமியார் முன் அவன் செயலில் இன்னுமாய் நெளிந்தவள் சற்றே தள்ளி அமர சாரதாவும் ராகவனும் சத்தமாகவே சிரித்துவிட்டனர்.
“என்ன மருமகளே இப்படி பொழைக்க தெரியாதவளா இருக்க அவன் சொல்லி முடிச்ச அடுத்த செகண்ட் நல்லா நாலு அடி போட வேணாமா..”,என ராகவன் கேட்க
“அதானே என்ன டா நீ இப்படி அப்பாவியா இருக்க”,என சாரதாவும் சேர்ந்து சிரிக்க அவர்கள் கேட்ட விதத்தில் திஷானிக்கே சிரிப்பை அடக்க முடியாமல் போக பற்கள் தெரியவே சிரித்தவளை தன்னுள் நிறைத்தான்.முதல் முறை அவள் இப்படி சிரித்துப் பார்க்கிறான்.அத்தனை வசீகரமாய் அவள் முகம் பிரகசிக்க அதை ரசித்தவாறே அவன் அமர்ந்திருந்தான்.
அதன் பின்னும் சிறிது நேரம் பேசிவிட்டு படுக்கச் செல்ல அபினவ் தானே அவளுக்கான இரவு உடையையும் எடுத்து வருவதாய் கூறி அவளை கீழறையிலேயே காத்திருக்கச் சொல்லிச் சென்றான்.
உடைமாற்றி அவளுக்கான உடையை கையில் எடுத்து வந்தவன் அவளிடம் நீட்ட உடைமாற்றி வந்தவள் கட்டிலில் அமர்ந்தாள்.
“திஷா டியர் தூக்கம் வருதா உனக்கு??இல்லல கொஞ்ச நேரம் பேசலாமா?”
“கேள்வியும் நீங்களே பதிலும் நீங்களே அப்பறம் ஏன் என்னை கேக்குறீங்க?”,என்றாள் மெல்லிய சிரிப்புடன்.
“பரவால்ல நல்லா பேசுற இங்கேயே உக்காரலாமா இல்ல பால்கனிக்கு போலாமா?”
“ம்ம் அங்கேயே போலாம்”,என்றவள் எழுந்து செல்ல. அவள் அமர்ந்தபின் மற்றொரு சேரை எடுத்து அவளருகில் போட்டு அமர்ந்தான்.
ஏனோ இந்த இரவும் அமைதியும் தன்னவனின் பார்வையும் அவளை நெளிய வைத்தது.
“ஏன் அப்படி பாக்குறீங்க?”,என்றாள் அவனை ஓரப்பார்வை பார்த்தவாறு.
“ம்ம் நியாயமா இதெல்லாம் நிச்சயதார்த்தம் முடிஞ்சு பண்ணிருக்கனும் நீ தான் என்னை பாக்கவே மாட்டேன்னு சொல்லிட்டியே..”
“சாரி..அது..”
“ஹே கமான் உன்னை தப்பா எதுவும் சொல்லல இன்பேக்ட் உன்னை பத்தி எதுவுமே தெரியாம கல்யாணம் பண்ணிக்க போறேன்னு நினைச்சா அது ஒரு டிபரெண்ட் பீல் தான்..சரி சொல்லு எப்படி இருக்கு இந்த லைப்..அதாவது மிஸஸ் அபினவ் ஆ இந்த இரண்டு நாள் எப்படியிருக்கு?”
“ரொம்பவே விசித்திரமா இருக்குனுதான் சொல்ல தோணுதுங்க..இன்னும் இது கனவோனுதான் நினைச்சுட்டு இருக்கேன்..அதே நேரத்துல ரொம்ப சந்தோஷமாகவும் இருக்கேன்..நினைச்சு கூட பாக்காத வாழ்க்கையின் அழகான பக்கங்கள்..தேங்கஸ் பார் திஸ்”,என அவள் உணர்ந்து கூற
அவனோ வழக்கமான தன் விளையாட்டுத்தனம் எட்டிப் பார்க்க லேசாய் அவள் கையை கிள்ள சட்டென கையை நகர்த்தியவள் அவனை பார்க்க,”இல்ல ட்ரீம் இல்ல உண்மைதான்னு சொல்றேன்”,என லேசாய் சிரிக்க முறைக்க நினைத்தவள் முடியாமல் மென்னகைத்தாள்.
“அழகா சிரிக்குற திஷா பேபி..”,என்றவன் பின் சாய்ந்து இரு கைகளையும் தலைக்குப் பின் கொடுத்துஅமர்ந்துஅவளைப் பார்க்க அவளோ மெல்லிய குரலில்,
“எனக்கு நேத்துல இருந்து ஒரு விஷயம் தோணுது சொல்லட்டுமா?”
“என்ன திஷா சொல்லு..”
“இல்ல என்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு முடிவு பண்ணீங்க சரி..ஆனா நேத்துல இருந்து என்ன பாக்குற உங்க பார்வைல இருக்குற ஏதோ ஒண்ணு என்ன பேசவே விடாம ஆக்குது..உங்க பார்வையே அப்படி தானா இல்ல எனக்கு தான் அப்படி தோணுதானு தெரில..”,என மெல்லிய குரலில் கூறினாள்.
“பார்ரா டீச்சரம்மாக்கு என்ன ஒரு சந்தேகம்..பட் மனசுல வச்சுக்காம டேரெக்டா கேக்குறியே தட்ஸ் நைஸ்..
உன் கேள்விக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி நீ எனக்கு ஒருபதில் சொல்லு..என் பார்வையே அப்படி தானானு கேட்டியே எல்லார்கிட்டேயும் இஇப்படிதான் பேசுறேன்னு நினைக்குறியா?”
“இல்லை என தலையசைத்தவளுக்கு தெரியுமே தன்னிடம் மட்டும் தான் அவனின் பார்வை இப்படி பூவை மொய்க்கும் வண்டாய் சுற்றுகிறதென்று..சொல்லப் போனால் இந்த இருதினங்களிலேயே அவன் வீட்டில் யாருடன் எப்படி பேசுவான் என்பதையே ஊகித்து தான் இருந்தாள்.
“ஹப்பாடா இது போதும்..பட் நீ கேட்ட கேள்வி எனக்குமே இருந்தது..எப்போனா உன்னை பார்த்த முதல் தடவை..ஏனோ என்ன அறியாம உன் முகத்தை பாத்துட்டே இருக்க தோணிச்சு..அந்த ஒரு செகண்ட் அந்த ஒரு தாட் வச்சுதான் நாம கல்யாணம் வரை நா முடிவெடுத்ததே..நா ஈசி கோயிங் நேச்சர் தான்னாலும் யாரையும் கண்ணியமில்லாத பார்வை பார்க்க மாட்டேன்.
சைட் அடிக்குறது வேற ஆனா உரிமையான பார்வைனு படுறது வேற..உன்னை அன்னைக்கு ஸ்கூல்ல பாக்கும் போது எனக்கு அதான் தோணிச்சு..ஏனோ யாரோ ஒரு பொண்ணை பாக்குறதா எனக்கு தோணவேயில்ல..நா சொல்றதெல்லாம் வெறும் அஞ்சு பத்து நிமிஷத்துல நடந்த விஷயம்..
அப்படி யாரையும் பாத்தவுடனே எனக்கு எந்த பீலும் வந்ததில்ல திஷா..அதுலையும் இப்போ கல்யாணமும் முடிஞ்சப்பறம் உன்னை பாத்தாலே என் பார்வை நீ சொல்ற மதிரி மாறிடுது போல..”,என கண்சிமிட்டிச் சிரித்தான்.
“ம்ம்”,என்றவள் மெல்லிதாய் சிரிக்க சட்டென அவள்புறம் குனிந்தவன் முக்கியமா இந்தசிரிப்பு தான் காரணம்..அதுவும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அப்பா அம்மாவோட பேசும் போது சிரிச்சியே ப்பாபா டோட்டல் ப்ளட் அங்கேயே..”,என அவள் இதழ் ஓரத்தில் தட்டி பின்னே அமர்ந்தான்.
“சரி எப்பவுமே என்னை பத்தியும் இல்ல நா பேசுறதை கேட்டுட்டே இருக்கியே தவிர உன்னைபத்தி நீயா சொல்லவே இல்ல..சொல்லு லைக் உனக்கு பிடிச்சது பிடிக்காதது அந்த மாதிரி,..”
“அப்படியெல்லாம் வாழ்க்கைல எந்த நினைப்புமே இருந்ததில்லங்க..சொல்லப் போனா வாழ்க்கையை இரண்டு விதமா பேஸ் பண்ணலாம்.இந்த உலத்துல ஒவ்வொண்ணையும் ரசிச்சு அழகாக வாழலாம்.இன்னொன்னு பிறந்துட்டோம் வாழ்ந்து தான் ஆகணும் இப்டியும் இருக்கலாம்.
நா இதுல இரண்டாவது ரகம்.அதனாலேயே என்னவோ பெருசா எந்த விருப்பு வெறுப்பும் இருந்ததில்லை..
எனக்கு உலகமே எங்க அம்மாதான்..அப்பா..ம்ம் அப்படி ஒரு ஆளு எதுக்கு இருந்தாருனே எங்களுக்குத் தெரியாது.சரியான குடிகாரர்.பகல் முழுக்க பேய் மாதிரி உழைக்குறவரு சாயந்திரம் அத்தனை பணத்துக்கும் போய் குடிச்சுட்டு வந்து நிப்பாரு..எனக்கு இந்த குறை வந்தப்பறம் இன்னும் கேக்கவே வேணாம் அதை காரணமா வச்சே இன்னும் மோசம்..இதுல தம்பி வேற பொறந்தான்..அவனோட ஒரு வயசுல அப்பா போய் சேர்ந்துட்டார்..அதுக்கப்பறம் வாழ்க்கை ரொம்ப ரொம்ப மோசமான பக்கங்களோட தான் இருந்தது..கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சேன்..
அப்பறம் 12த்ல நல்ல மார்க் இருந்ததால ஸ்காலர்ஷிப் அப்பறம் அம்மா வேலை பாத்த வீட்டு ஓனர்ங்க எல்லாம் உதவி பண்ணதுல காலேஜ் முடிச்சேன்..அப்பறம் வேலை..சுத்தமா பிடிக்காத சூழல் தான் இருந்தாலும் அம்மா தம்பிக்காக ஏத்துகிட்டேன்..தம்பியை நல்லா படிக்க வச்சேன் அவன் வேலைக்கு போன அடுத்த நாள் சொன்னான்,”அக்கா நீ வேலையை விடு நா உங்களை பாத்துக்குறேன்னு..”,
லைவ்ல முதல் தடவையா சந்தோஷத்துல அழுகை வந்தது அப்போ தான்.இருந்தும் அவனும் சின்ன பையன் தான மொத்த பொறுப்பையும் திணிக்க விரும்பல அவன் மேல அதுக்கப்பறமும் ஒரு வருஷம் வேலையை கன்டிநியூ பண்ணேன்..அதுக்கப்பறம் தான் இந்த ஸ்கூல் வாழ்க்கை..
ரொம்ப ரொம்ப அழகானது..அந்த. பிஞ்சு குழந்தைங்கள பாக்கும் போது வாழ்க்கையின் கஷ்டமெல்லாம் ரொம்ப தூரமா போன மாதிரி இருக்கும்..ஏற்கனவே சொன்ன மாதிரி நிறைய ப்ரெண்ட்ஸ்லா இருந்தது இல்ல.எல்லாரோடையும் ஒரு லிமிட்டோட தான் பழகுவேன்.சந்தோஷம் துக்கம் எல்லாத்துலயும் எனக்கு ஆறுதல் நான் தான்..அப்படியே பழகிடுச்சு..இனி அதை மாத்திக்கணும்..இல்ல இப்போ மாத்திக்கிட்டேன்..”என்றவள் அவனை கண்டு சிநேகமாய் சிரிக்க கனவிலிருந்து மீண்டவனாய் பதிலுக்கு புன்னகைத்தான்.
லவ்லி..என்சாய்ஸ்ல பெஸ்ட் நீதான்னு இன்னொருதடவை ப்ரூவ் பண்ணிருக்க திஷா..சுயம் என்பது எப்போதுமே தன்னம்பிக்கை சம்மந்தபட்ட விஷயம்.நம்ம கஷ்டத்தையும் வருத்தத்தையும் கூட நெஞ்சு நிமிர்த்தி சொல்றது ரொம்பவே பாராட்ட பட வேண்டிய விஷயம்..அந்த வகைல என் பெட்டர் ஹாவ்க்கு என்னோட..”,என்றவன் லேசாய் குனிந்து கைகளால் சலாம் போட அதற்கும் அழகாய் சிரித்து வைத்தாள்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!