15
அந்த அழகிய பீச் ரெசார்ட் லானில் மிக நேர்த்தியான முறையில் மணமேடை அமைக்கப் பட்டிருக்க விருந்தினர்களுக்கு இருக்கைகள் போடப்பட்டிருந்தன.மாலை வேளைதான் முகூர்த்தம் வேண்டுமென அபினவ் கண்டிப்பாய் கூறிவிட மாலை 6:45 மணிக்கு முகூர்த்தம் என முடிவு செய்தனர்.
வண்ண வண்ண விளக்குகளும் மலர்களின் வாசமும் கடல் அலையின் சத்தமுமாய் இதை விட ரம்மியமான திருமணத்தை யாரும் நினைத்திட முடியுமா என்ன..
அழகிய பட்டு வேட்டி சட்டையில் அழகிய ரோஜா மாலையோடு அமர்ந்து ஐயர் கூறும் மந்திரங்களை கூறிக் கொண்டிருந்தவனின் கண்களோ தன்னவளைத் தேடித்தான் இருந்தது.அவள் இறுதியாய் அவனிடம் பேசிய வார்த்தைகள் இன்னமும் அவன் செவிப்பறையில் சில்லென்ற குளிர்காற்றாய் சுழன்று கொண்டுதான் இருந்தது.
வரதட்சனைக்கான அவனின் விளக்கத்தை கேட்டவள் அடுத்து வந்த தினங்களில் அவனின் மெசேஜிற்கோ அழைப்பிற்கோ பதில் அளிக்கவேயில்லை.அவள் செயலில் சற்றே எரிச்சலடைந்தவன் நான்கு தினம் கழித்து அவளை சந்திக்க வீட்டிற்கே வந்துவிட்டான்.
அவள் மட்டுமே வீட்டிலிருக்க இவனை சற்றும் எதிர்பார்க்காமல் என்ன செய்வதென தெரியாமல் உள்ளே அழைத்து அமரச் செய்தாள்.
“சோ வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்?”
அவளிடம் அமைதி மட்டுமே..
“இப்போ என்ன பிரச்சனை உனக்கு ஏன் பேசாம அவாய்ட் பண்ற?எதாவது சொன்னாதான தெரியும்?தப்பே பண்ணாம எதுக்கு எனக்கு இந்த தண்டனைனு புரில?இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சே ஆகணும்”
“நீங்க தப்பு பண்ணதா நா சொல்லலையே!”
“ப்பா க்ரேட் அதாவது தெரியுதே அது வர சந்தோஷம்..சரி சொல்லு என்னாச்சு?”
“ஒண்ணுமில்லையே”
“ஓ காட்..என்னனு சொன்னா தான் அடுத்தத பத்தி யோசிக்க முடியும்..இப்போ இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பமா இல்லையா அதையாவது சொல்லு..”
“ககல்யாணம் வேண்டாம்னா எப்பவோ வேண்டாம்னு நேரடியா சொல்லிருப்பேன்..எனக்கு இதெல்லாமே புதுசா இருக்கு..உங்களோட கடைசி மெசேஜ் பாத்த அப்பறம் எனக்கு என்ன பேசுறதுனு கூட புரில.ஆண்கள் இந்த வார்த்தைக்கான அர்த்தம் இத்தனை நாளில் என் அகராதியிலே வேற.ஆனா நீங்க அதை மாத்தி எழுத்திட்டு இருக்கீங்க..சோ என் வாழ்க்கை கல்யாணம் இரண்டையுமே உங்க பொறுப்புல விட்டுட்டேன்..என் அம்மா சந்தோஷமா இருந்து முதல் தடவை பாக்குறேன்.அதற்கான மொத்த காரணமும் நீங்க மட்டும் தான்.
அதனாலேயே நா உங்களை முழுசா நம்புறேன்.எனக்கான சாரி..நமக்கான வாழ்க்கையை நம்ம கல்யாணத்திலிருந்து ஆரம்பிக்கலாம்னு தோணுது.இன்னும் இரண்டு வாரம் திஷானினு ஒருத்திய பார்க்கவே இல்லனு நினைச்சுகோங்க..இந்த இடைப்பட்ட நேரத்துல என் மனசை முடிஞ்ச அளவு நா பக்குவபடுத்தி கல்யாண வாழ்க்கைக்கு தயாராகிருவேன்.ஐ ப்ராமிஸ் யூ..ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட் மை பீலிங்க்ஸ்..”
உதட்டோர புன்னகையோடு இருக்கையிலிருந்து எழுந்தவன் அவளருகில் வந்து,”இப்போ தெரியுதா எனக்கு ஏன் உன்னை பிடிச்சுதுனு..இந்த தெளிவு எல்லாருக்கும் இருக்குறதில்ல..எனிவே தேங்க்ஸ் பார் ட்ரஸ்டிங் மீ..கல்யாணத்துல மீட் பண்ணலாம்..பை..டேக் கேர்..”,என கண்சிமிட்டிச் சென்றான்.
அவன் கற்பனையிலிருந்து வெளிவரவும் மணமகள் மேடைக்கு வரவும் சரியாய் இருந்தது.அவன் தேர்ந்தெடுத்த பட்டுப் புடவை தான் ஆனால் இன்னும் அழகாய் தோன்றியது இப்போது.
அழகான ஐவோரி நிற காஞ்சிப் பட்டில் தங்கநிற பார்டர் கலந்திருக்க அதற்கேற்றாற் போன்று முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட ப்ளவுஸும் தங்க நிற வெட்டிங் ஜீவல்லரியும் அடர் சிவப்பு நிற ரோஜா மாலையுமாய் வந்தவளிடம் குறையென்ற ஒன்றே தோன்றவில்லை அவனுக்கு.
அளவான ஒப்பனையும் நிறைய பதட்டமும் சிறு வெட்கமுமாய் கம்பீரமாய் தெரிந்தாள் பெண்ணவள்.அவனருகில் அவள் வந்த நொடி சற்றும் யோசிக்காமல் எழுந்தவன் தன்னவளை கரம்பிடித்து மெதுவாய் அமர வைத்து பின் அவளருகில் அமர்ந்தான்.லேசாய் முகம் திருப்பி தன்னை பார்த்தவளை கண்டு கண்ணடீத்து அவன் சிரிக்க சட்டென முகத்தை திருப்பிக் கொண்டாள்.
ஐயர் திருமாங்கல்யத்தை அபினவிடம் கொடுக்க மேள வாத்தியங்கள் முழங்க அதை கையில் வாங்கியவன்,தன்னவளின் கழுத்தருகில் கொண்டு சென்று அவள் கழுத்தில் அணிவிக்காமல் இருக்க பதட்டமாய்அவனை ஏறிட்டவளிடம்,
“மே ஐ??”,என மெதுவாய் கேட்க முகம் கொள்ளா மகிழ்ச்சி இதழோர புன்னகையாய் வெளிப்பட சம்மதமென தலையசைத்தாள்.மூன்று முடிச்சுகளையும் தானே போட வேண்டுமென மற்றவர்களை கை சாடை காட்டி நிறுத்த அங்கு எழுந்த சிரிப்பலையில் பெண்ணவளுக்கோ இன்னமும் ஒரு மாதிரியாய் ஆகிப் போனது.
சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்து விருந்தினர்கள் தங்கள் பரிசுகளை கொடுக்க காத்திருக்க மணமக்கள் மேடையை விட்டு இறங்கி லானில் போடப்பட்டிருந்த இருக்கையருகில் நின்றனர்.
சொந்தபந்தங்கள் நண்பர்கள் என அனைவரும் தங்கள் வாழ்த்துக்களையும் பரிசுகளையும் பகிர்ந்து உணவருந்த சென்றனர்.வந்தவர்களில் ஓரிருவர் திஷானியின் குறைப் பற்றி ஏதோ பேசியவாறு செல்ல அதை கேட்டவளின் மனமும் முகமும் ஒரு நொடி சுனங்கி விட்டது.
ஆனால் அதை எப்படி கண்டு கொண்டானோ தெரியவில்லை அடூத்த நொடி அழுத்தமாய் தோள்பற்றி தன்புறம் சேர்த்துக் கொண்டான்.இதை சற்றும் எதிர்பாராதவளுக்கோ மகிழ்ச்சியும் கண்ணீரும் ஒரு சேர முகத்தில் சேர்ந்து கொண்டது..
அதன்பின் மறந்தும் கூட அவளை விட்டு நகரவில்லை அவன்.இரவு உணவுப் பொழுதும் அவளுக்காய் பார்த்து பார்த்து பரிமாறச் செய்தவன் அவளின் அருகாமையை ரசித்து மகிழ்ந்தான்.அதன் பின் பெரியவர்கள் அனைவரும் கிளம்பத் தயாராக அபினவ் அவர்ஙளுக்கு உதவினானே தவிர கிளம்புவதாய் தெரியவில்லை.
குழப்பத்தோடே அவள் அங்கு அமர்ந்திருக்க அபினவின் தாய் அவளிடம் விடைபெற்று செல்வதற்காக வர மெதுவாய் எழுந்தாள்.
“நாங்க கிளம்புறோம் திஷானி..நாளைக்கு பார்க்கலாம்..”
“ஆன்ட்டி நாங்க..”
“அவன் சொல்லலையா இங்கதான் ஸ்டே பண்ண போறீங்க டா..காலையிலே ரெடி ஆய்ட்டு வாங்க..வரேன்”,என கன்னம் தட்டி விடைபெற்றார்.
அனைவரும் கிளம்பிச் சென்றபின் அவளருகில் வந்தவன்,”போலாமா ?”,எனக் கேட்க மௌனமாய் தலையசைத்தவள் அவனோடு சென்றாள்.
அழகான காட்டேஜ் போன்ற அமைப்பிலிருந்த தனி அறை அங்கேயேசின்னதாய் கிட்சன்,ஃபிரிட்ஜ் மற்றும் டீவியோடு அழகாய் இருந்தது.மெதுவாய் உள்ளே நுழைந்தவள் என்ன செய்வதென தெரியாமல் விழித்து நிற்க,
“என்னாச்சு திஷா வா..அதோ அங்க பெட்டில உனக்கான ட்ரெஸ் எல்லாம் இருக்கு மாத்திக்கோ..எதுவும் ஹெல்ப் வேணும்னா சொல்லு”
ம்ம் என தலையசைத்தவள் தனக்கான உடைகளை எடுத்துக் கொண்டு குளியலைறைக்குள் புகுந்து கொண்டாள்.உடைமாற்றி வந்தவள் தன்னவனைத் தேட வெளியே யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தான்.
என்ன செய்வதென தெரியாமல் அப்படியே கட்டிலில் அமர சில நிமிடங்களில் உள்ளே வந்தவன்,
“என் ப்ரெண்ட் உனக்கு விஷ் பண்ணணும்னு சொல்றா”,என மொபைலை நீட்ட
தயக்கமாய் அதை வாங்கியவள்,
“ஹலோ”
“ஹாய் திஷானி..ஹேப்பி மேரிட் லைப்..”
“ஹாங்..தேங்க் யூ..”
“என் பேரு சாரு..என்னபத்தி எல்லாம் சொல்லிருக்காங்களா?”
“அது..”
“ம்ம் தெரியுமே கண்டிப்பா சொல்லிருக்க மாட்டாங்க..நோ ப்ராப்ளம் ஒரே ஊர்ல தான இருக்கோம் சீக்கிரமே மீட் பண்ணலாம்..இதுக்கு மேல பேசினா என்ன கொன்னுருவாங்க..பை..”,என்றவள் அழைப்பை துண்டித்து விட
மொபைலை அவனிடம் கொடுத்தவள் கேள்வியாய் அவனை நோக்க,
“சாரு என்னோட எஃபி ப்ரெண்ட் ஒன் இயரா தான் தெரியும் பட் ரொம்ப பெஸ்ட் ப்ரெண்ட்.”
“ஓ..என்ன பண்றாங்க?”
“ம்ம் ஐடி தான் இப்போ ஒன் மந்த் ஆன் சைட் போய்ருக்கா அதான் கல்யாணத்துக்கு வரல..”
“ஓ..”
“ஆமா கேக்கனும்னு நினைச்சேன் உன் ப்ரெண்ட்ஸ் யாரும் வரலையா??ஸ்கூல் டீச்சர்ஸ் மட்டும் தான் பாத்த மாதிரி இருந்தது..”
“எனக்குஅவ்வளவா ப்ரெண்ட்ஸ் கிடையாது..ரொம்ப சூஸி டைப் தான் நா..”
“ஹாங்ங் முதல் பாயிண்ட்லயே போச்சா..நா ஜஸ்ட் ஆப்போசிட் நிறைய ப்ரெண்ட்ஸ் எனக்கு..கேள்ர்ஸ் கொஞ்சம் அதிகம்”,என்றவனை அவள் காரமாய் பார்க்க,
“ஹே நல்ல ப்ரெண்ட்ஸ் தான்..நம்பு..”
“சோ வெட்டிங் அரேண்ஞ்மெண்ட்ஸ் எப்படி இருந்தது ஒண்ணுமே சொல்லலையே நீ?”
“உண்மைய சொல்லணும்னா இப்படி ஒரு வெட்டிங் நா கனவுல கூட நினைச்தில்ல..ரொம்ப அழகாயிருந்தது..”,என்றவள் மெதுவாய் அவனை ஏறிட இதழ் விரிய சிரித்தவன் தன் பெட்டியின் அருகே சென்று ஒரு கவரை எடுத்து வந்து அங்கிருந்தை சேரை நகர்த்தி அவளருகில் போட்டு அமர்ந்தான்.
“சோ..இது என்னோட மேரேஜ் கிப்ட் உனக்காக நானே செலெக்ட் பண்ணது”,என அவளிடம் நீட்ட ஒருவித ஆர்வம் அவள் கண்களில் நிச்சயமாய் இருந்தது.
மெதுவாய் அதைப் பிரித்து பார்த்தவள் ஒரு நொடி பிரமித்துதான் போனாள்.அது அவளின் குடும்ப புகைப்படம் அவர் தந்தையோடு தாய் தம்பியும் இருக்க அபினவ் அவள் தோள் பற்றியிருக்குமாறு வரைந்த பென்சில் ட்ராயிங்.சாதாரணமாகவே அவர்கள் அனைவருமாய் சேர்ந்து ஒரு புகைப்படம் கூட எடுத்ததில்லை.அப்படியிருக்க தன் தந்தையையும் சேர்த்திருந்த அந்த ட்ராயிங்கை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவளுக்கு.
கண்களின் ஓரம் துளி நீர் எட்டிப்பார்க்க அவள் கையை எடுத்து தனக்குள் வைத்தவன்,
“ரிலாக்ஸ்..என்னோட முதல் கிப்ட் ரொம்பவே மறக்க முடியாததா அதே நேரம் உன் மனசுக்கு பிடிச்சதா இருக்கணும்னு நினைச்சு தான் இதை வாங்கினேன்..இனி உனக்கும் உன் பேமிலிக்கும் நா இருக்கேன்..ஓ.கே..”,என இதமாய் கேட்க இமை மூடித் திறந்து ஆம் என்பதாய் தலையசைத்தாள்.
“சரி வாயேன் அப்படியே ஒரு வாக் போய்ட்டு வரலாம்..டயர்டா இருக்குனா வேணாம்”
“இல்ல அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல போலாம்”,என தன் ஸ்டிக்கை எடுத்தவளை கைப்பிடித்து எழுவதற்கு உதவி செய்தவன் அந்த லான் பாகுதியில் அவளோடு நடக்க ஆரம்பித்திருந்தான்.
வழக்கம்போல் அவன் பத்து வார்த்தை பேசினால் இவள் ஒரு வார்த்தையென பேச அதற்கும் ஒன்றும் கூறாமல் அவளோடு இருக்கும் அந்த நொடியை ரசித்தான்.
சிறிது நேரத்தில் அறைக்கு திரும்ப அவள் கட்டிலின் ஓரமாய் அமர மறுபுறம் அமர்ந்தவன்,
“ரொம்ப டயர்டா தெரியுற திஷா..நல்லா ரெஸ்ட் எடு..மானிங் ஒரு அவசரமும் இல்ல பொறுமையா கிளம்பினா போதும்..ம்ம் படுத்துக்கோ…”,என்றவனுக்கு தலையசைத்து படுத்தவளின் அருகிலேயே சற்று இடைவெளி விட்டு படுத்தவன் அவள்புறம் திரும்பி நெற்றியில் இதழ்பதித்து குட் நைட் என்று கூற பெண்ணவளுக்கோ ஒரு நொடி இதயம் தாறுமாறாய் எகிற ஆரம்பித்தது
அத்தனை நேரம் அவன் கைப்பிடித்து நடந்ததே மனதை ஏதோ செய்ய இப்போது இந்த முத்தம் வாழ்வின் முதல் முத்தம் இத்தனை இயல்பாய் இத்தனை பாசமாய் சிறு வயதில் தாயிடமிருந்து பெற்ற நியாபகம்.
“இவன் ஏன் இப்படி இருக்கான்.கொஞ்சமும் இந்த கூச்சம் தயக்கமெல்லாம் இல்லவே இல்லையா..ஏதோ பத்து வருஷம் பாத்து பழகின மாதிரி பேசுறான்.முத்தம் கொடுக்குறான்.இல்ல எல்லா கல்யாணத்துலயும் இப்படி தான் நடக்குமா..முன்ன பின்ன செத்தால சுடுகாடு தெரியும்..கடவுளே ஒரு மணி நேரத்துக்கே இந்த நிலைமை..நா என்ன பண்ண போறேன்..”,என மைண்ட் வாய்ஸ் முழுவதையும் அவன் முகத்தை பார்த்த வாறே பேசி முடிக்க அவனோ குறுஞ்சிரிப்புடன் அவள் கன்னம் தட்டி,
“என்ன அப்படி பாக்குற திஷா டியர்,ஐயோ கிஸ் பண்ணிட்டானேனு யோசிக்குறியா இல்ல தூங்க சொல்லிட்டனேனு கோபமா பாக்குறியா?”,என கேட்க. சட்டென உணர்வு பெற்றவள்,
“ஹாங் அதெல்லாம் ஒண்ணுமில்ல..குட் நைட் “,என கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!