52
பால்போலே பதினாறில்
பால்போலே பதினாறில்
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணும்
இன்று புதிதாக அவிழ்ந்த மலர் போல
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணும்
இணைய தளத்தில் கணிணி களத்தில்
மின் அஞ்சல் அரட்டைகள் அடிக்கணுமே
வியர்வை வழிந்தால் மழையில் நனைந்தால்
முகத்தை முகத்தால் துடைக்கணுமே
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா
கெர்ள் ஃபிரண்ட் தானே பாய்ஸின் பூஸ்ட் அல்லவா
கெர்ள் ஃபிரண்ட் இல்லா வாழ்க்கை வேஸ்ட் அல்லவா
கெர்ள் ஃபிரண்ட் வேணும் வேணும்”
காரில் அலறிக் கொண்டிருந்த பாடலுக்கு ஸ்டிரிங்கில் தாளம் போட்டவாறே அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தான் அபினவ்…30 வயது இளைஞன்.மிகப் பெரிய ஐடி நிறுவனத்தில் ப்ராஜெக்ட் மேனேஜராக பணிபுரிகிறான்..சாரதா ராகவன் தம்பதியினரின் ஒரே புதல்வன்.மேல்தட்டு நடுத்தர குடும்பம் அவர்களுடையது.இப்போதைக்கு பெற்றோரின் ஒரே கவலை மகனின் திருமணம் மட்டுமே.ஆனால் அவனோ பிடி கொடுக்காமல் இந்த வருடம் அடுத்த வருடம் என்று தள்ளிக் கொண்டே செல்கிறான்.
அபினவ் பால் வண்ண நிறமும் ஆறடி உயரமுமாய் அதை மேலும் மெருகூட்டுவதாய் அவனின் சிக்ஸ் பேக்கும் அம்சமாய் திருமணத்திற்கு தயாரான நிலையில் இருக்கும் அழகு கண்ணன்…
தன் இருக்கையில் அமர்ந்தவன் கணிணியை உயிர்பித்து முதல் வேலையாய் முகப் புத்தகத்தினுள் நுழைய அத்தனை அத்தனை நோட்டிபிகேஷன்கள்..தனது வழக்கமான புன்னகையை உதட்டில் ஒட்டியவன் ஒவ்வொன்றாய் பார்த்து க்ளியர் செய்ய மறுபுறம் மெசென்ஜரில் கான்வர்சேஷன்கள் வர ஆரம்பித்திருந்தது.
தலை சுற்றி விடும் அளவிற்கு நண்பர்கள் பட்டியல் நீண்டு கொண்டேயிருந்தது.அதிலும் பெண் தோழிகளே அதிகம்..முதலில் பார்ப்பவர்கள் யாருக்கும் நிச்சயமாய் நல்லவிதமாய் எண்ண தோன்றாத கேட்டகிரி தான் நம்ம ஹீரோ சார்..பட் ஸ்ரீ யோட ஹீரோஸ் குட் பாயா இல்லாம எப்படி..மிக மிக நல்லவன் தான் என்ன வாய் கொஞ்சம் அதிகம்..
இப்படிபட்டவனின் சமீபகால முகப் புத்தக தோழி சாரு..அவன் எதையோ யோசிக்கும் போதே அவளின் நோட்டிபிகேஷன் வந்தது.
“நீயெல்லாம் இன்னும் உயிரோடதான் இருக்கியா?”
முகத்தின் புன்னகை பெரிதாக,”எஸ் ஸ்டில் அலைவ்”,என்று அனுப்பினான்.
“நீயெல்லாம் வரதா புயல்ல செத்துட்டனுல நினைச்சேன்..அறிவில்லையா மெசெஜ் பண்ணணும்னு தோணாது??”
“ஆபீஸ் ஷெக்டிக் வொர்க் பிஸி”
“நல்லது எக்கேடோ கெட்டு போ.பை”
“பை..”
“திமிரு..”
பார்த்தவனுக்கு மனதில் எழுந்த சிரிப்பை முகத்தில் காட்ட முடியவில்லை..ஒரு வாரமாய் புது ப்ராஜெக்ட் என்பதால் நிஜமாகவே வேலை தலைக்கு மேல் இருந்தது.அவ்வளவாய் யாருக்கும் ரிப்ளை செய்ய முடியாமல் போனது..மனிதர்கள் பலவிதம் என்பதற்கேற்ப பழகிய குறுகிய நாட்களிலேயே உயிர்த் தோழியாய் மாறிப் போனாள் சாரு..பாதி நாட்கள் இருவருக்கும் சண்டை மட்டுமே ஆனால் அதிலும் ஒரு புரிதல் இருந்தது..அவனின் விளையாட்டு பேச்சைக் கூட ரசிக்க மாட்டாள் கிட்டதட்ட அன்னையின் கண்டிப்பு இருக்கும் அதில்.
இப்படிபட்ட சாக்லேட் பாய் இன்று வரை சிங்கிள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா!!ஆனால் அதுதான் உண்மை..அன்னையாய் தங்கையாய் தமக்கையாய் மகளாய் தோழியாய் பல பெண்களோடு பேசுபவனுக்கு ஏனோ மனைவி என்ற இடத்திற்கான பெண்ணை தேட தோன்றவில்லை…
(முடிலல என்னாலயும் முடில..நல்லவரா கெட்டவரானு தான கேக்குறீங்க சத்தியமா எனக்கே தெரில..ஓ.கே நோ டென்ஷன்..வாங்க ஹிரோயினாவது புரிய மாதிரி இருக்காங்களானு பாப்போம்..)
அந்த பட்டர்ஃப்ளை மான்ட்டஸரி பள்ளியின் ப்ரிகேஜி வளாகத்தில் சிறு சிறு வாண்டுகளுக்கு நடுவே அமர்ந்திருந்தவளை யாரோ அழைக்க அவள் தன் வேலையிலேயே கவனமாய் இருக்க அவளருகில் இருந்த பிஞ்சு தன் தளிர் கரங்களால் அவளைத் தட்டி வாசலைக் காட்ட ஒரு பெற்றோர் தங்கள் குழந்தையோடு நின்றிருந்தனர்..
முகத்தில் புன்னகை மின்ன அவர்கள் அருகில் சென்றவள் குழந்தையை வாங்கிக் கொண்டு அவர்களை அனுப்பி வைத்தாள்..
திஷானி முதுகலை பட்டதாரி..மிகவும் ஏழ்மையான குடும்ப பின்னனியில் இருந்து வந்தவள் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு படித்து முடித்த கையோடு ஐடியில் வேலைக்கு சேர்ந்து ஐந்து வருடங்கள் கடும் உழைப்பால் குடும்பத்தை ஓரளவு நடுநிலைக்குக் கொண்டு வந்திருந்தாள்.தம்பி படிப்பை முடித்து வேலைக்குச் சென்றவுடன் தன் வேலையை விட்டுவிட்டு இங்கு வந்து சேர்ந்துவிட்டாள்..
திஷானி பெயரைப் போன்றே அவளும் வித்யாசமானவள் தான்..கருப்பழகி என்றுதான் கூற வேண்டும்..அவளை கண்டபின் நிச்சயம் கருமையையும் ரசித்துப் பார்க்கத் தோன்றும்.
அந்த கண்கள் பேசும் கவியை படிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு இருக்கிறதோ தெரியவில்லை.அப்படியான கண்கள்..முதுகை மறைத்த அடர்த்தியான கூந்தல்.மூக்கில் சிறிதாய் ஒற்றை வெள்ளைக் கல் மூக்கூத்தி மேலும் அழகு சேர்ப்பதாய்..
இத்தனையையும் மீறிய அவளின் குறை அவளை திருமண சந்தையில் விலக்கி விட்டிருந்து.அதை நினைத்து அவளும் என்றும் வருந்தியதில்லை தான் ஆனால் அவளின் அன்னைக்கும் தம்பிக்கும் அதுதான் மிகப் பெரும் கவலையாய் இருந்தது.
மாலை வேளையில் அபினவ் அலுவலகத்திலிருந்து கிளம்ப எத்தனிக்க சரியாய் அவனின் கைப்பேசி அலறியது.அவனது நண்பன் நரேன் தான் அழைத்திருந்தான்.இருவரும் பக்கத்து பக்கத்து அப்பார்ட்மெண்டில் தான் வசித்து வந்தனர் குடும்ப நண்பர்களும் கூட..
“சொல்லு மச்சி”
“மச்சான் நானும் அனுவும் ஆபீஸ் மீட்டிங்ல மாட்டிக்கிட்டோம்டா பாப்பாவ ஸ்கூல்லயே பாத்துக்க சொல்லிருந்தோம்..பட் ரொம்ப லேட் ஆய்டுச்சு எக்ஸ்பெக்டே பண்ணல நீ போய் பாப்பாவ பிக்கப் பண்ணிக்கிறியா..சாரி டா இன்னைக்கு மட்டும்..”
“டேய் இதுக்கு எதுக்கு சாரியெல்லாம் சொல்ற என் டார்லிங்க நா பிக்கப் பண்ணமாட்டேனா..நீங்க பாத்து பொறுமையா வாங்க நா பாத்துக்குறேன்..பை..”
அடுத்த பதினைந்தாவது நிமிடம் பள்ளி வாசலில் காரை நிறுத்தியவன் உள்ளே செல்ல அங்கு யாரையும் காணாமல் ஹாலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்திருக்க,
“யாரு உள்ளே வாங்க..”,எனும் குரல் கேட்டு ஷுவை கழட்டிவிட்டு உள்ளே சென்றான்.அங்கே சீஃப் ஆபீசர் எனுமிடத்தில் அமர்ந்திருந்த திஷானி அவனை ஏறிட தன் வழக்கமான விளையாட்டு சுபாவம் மாறாமல் முகம் மலர சிரித்தவன்,
“ஹாய் ஷாமிலியை பிக்கப் பண்ணிக்க வந்துருக்கேன்..அவங்க பரண்ட்ஸ்..”
“யா கால் பண்ணி சொன்னாங்க ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க ஆயாம்மா அழைச்சுட்டு வருவாங்க”
“ஓகேய்..”என்றவாறு பார்வையை சுழற்றியவன் மீண்டும் அவளிடத்திலேயே பார்வையை பதித்தான்..அதற்குள் குழந்தை வந்துவிட அவளை அழைத்துக் கொண்டு அவளிடம் விடைப் பெற்று வெளியே வந்தவன் காரில் குழந்தையை அமர வைத்து விட்டு தன்னிருக்கையில் அமர்ந்தான்.
காரை ஆன் செய்வதற்குள் அலைப்பேசி அழைப்பு வர அப்படியே பேசிக் கொண்டிருந்தவன் வெளியே வந்தவளைக் கண்டு ஒரு நொடி பேசுவதையே நிறுத்தி விட்டிருந்தான்..
ஒற்றைக் கையில் வாக்கிங் ஸ்டிக்கை பிடித்தவாறு ஒருபுறமாய் லேசாய் சாய்ந்து நடந்தவளிடமிருந்து ஏனோ பார்வையை அகற்ற முடியவில்லை..குழந்தையின் சிணுங்கலில் நினைவிற்கு வந்தவன் வேகமாய் காரை வீட்டை நோக்கி இயக்கினான்..
“அபி..நாம இப்போ எங்க போறோம்??”
“டார்லிங் நாம இப்போ சாரதா பாட்டிய பாக்க போலாம் நீ சமத்தா சாப்டுவியாம்.டேடியும் மம்மியும் ஓடி வந்துருவாங்களாம்..ஓ.கே வா??”,என்றவாறு காரை பார்க் செய்தவன் வீட்டிற்குள் நுழைய குழந்தை சாரதாவை தேடி ஓடினாள்..
“அம்மா நீ அவளுக்கு சாப்பிட ஏதாவது குடு.நா ரெப்ரெஷ் ஆய்ட்டு வரேன்”
அவன் வருவதற்குள் குழந்தை சாரதாவிடம் சாப்பிட்டு முடித்திருக்க அபி சென்று தன் அன்னை மடியில் படுத்துக் கொண்டான்..
“ஏன்டா எத்தனை வயசு ஆனாலும் இந்த பழக்கத்தை மாதிக்கவே மாட்டியா?சின்ன புள்ளை மாதிரி”
“ம்மா நா உனக்கு சின்ன புள்ளை தான..கொஞ்ச நேரம் ப்ளீஸ்..”
அதற்குள் ஷாமிலியின் பெற்றோர்கள் அவளை அழைத்துச் செல்ல வர,அபி தன் நண்பனோடு பால்கனியில் சென்று பேசிக் கொண்டிருந்தான்.
“செம கடி டா இன்னைக்கு ஆபீஸ்..இந்த ஸ்கூல்னால பரவால்ல அந்த மிஸ் கொஞ்சம் கேர் எடுத்து பாத்துப்பாங்க இல்லனா எங்க நிலைமையெல்லாம் ரொம்ப கஷ்டம்..”
“ம்ம் நம்ம குட்டிக்காக தான் இவ்ளோ நேரம் வெயிட் பண்ணாங்க போல உடனே கிளம்பிடாங்க”
“ம்ம் ஆமாடா அந்த பொண்ணு பேரு திஷானி..அவங்களும் ஐடி ல வேலை பாத்தவ தான்..மனசுக்கு பிடிக்காம பேமிலி ரீசன்ஸ்காக பாத்துட்டு இருந்தா.
இப்போ கொஞ்சம் பெட்டர் ஆனவுடனே இங்க வந்துட்டா..நம்மளவிட சின்ன பொண்ணு தான்..அவங்க அம்மா முன்னாடி என் அண்ணா வீட்ல சர்வெண்டா வேலை பாத்தாங்க சோ டீடெயில்ஸ் தெரியும்..”
“அவங்க கால்???”
“ம்ம் ஆமாடா போலியோ அட்டாக் அவ பொறந்து செவன் மந்த்ஸா இருக்கும் போதாம்..ரொம்ப வில் பவர் ஜாஸ்திடா.பாவம் கஷ்டப்பட்ட பேமிலி வேற சோ பெருசா ட்ரீட்மெண்ட்க்கு வழியில்ல..அவளே படிச்சு ஒரு நல்ல நிலைமைக்கு வந்துட்டானு அண்ணா சொல்லுவான்..”
“ஓ..”
“சரி டா நா வரேன் ஆல் ரெடி லேட் நீ போய் சாப்டு”
அதன்பின் இரவு உணவை முடித்து தீவிர யோசனையில் இருந்தவன் முகப் புத்தகத்தை திறந்து சாருவிற்கு மெசெஜ் அனுப்பினான்..
“ஹாய்”
“என்ன பக்கி”
“இன்னைக்கு ஒரு பொண்ணை பாத்தேன்..”
“உனக்கு எல்லாம் வாழ்க்கைல வேற வேலையே இல்லையா??”
“ஏய் எருமை மாடு அது இல்ல.இது வேற..”
“என்ன வேற?பொண்ணுங்கள தவர பேசுறதுக்கு வேற விஷயமே இருக்காதே உனக்கு என்ன எவகிட்ட என்ன மொக்க போட்டு வந்த”
“அடச்சை உன்கிட்ட போய் சொல்ல வந்தேன் பாரு..பே..”
“சரி என்ன சொல்லி தொல..”
“அவ பேரு திஷானி”
“ம்ம்”
“மான்ட்டஸரி ஸ்கூல்ல டீச்சரா இருக்கா”
“அங்க உனக்கென்ன வேல??”
“ஏய் லூசு”
“சரி சரி சொல்லு..”
“அந்த பொண்ணை பாத்தவுடனே ஒரு டிபரண்ட் பீல்..கல்யாணம் பண்ணிக்கலாம்னு தோணுது..”
“டேய் என்னடா டிபன் சாப்பிடலாம்னு தோணுதுங்கிற மாதிரி சொல்ற??”
“இல்லை டீ நிஜமாவே தான்..நா தான் ஏற்கனவே சொல்லிருக்கேன்ல கல்யாணம் பண்ணா கண்டிப்பா கஷ்டப்பட்ட பேமிலி பேக்ரவுண்ட் பொண்ணுதான் பாப்பேன்னு..இவளும் அப்படிதானாம்..அதுமட்டுமில்லாம போலியா அட்டாக்ல அவ கால்..”
“அபி!!!!!”
“ஆமா டா கண்டிப்பா இரக்கம்லா இல்ல..அவளை பர்ஸ்ட் பாத்தப்போ அப்படி ஒரு குறையே தெரில..அத்தனை கான்பிடன்ஸ் அவ முகத்துல..அது பிடிச்சுருக்கு..”
“அம்மா அப்பா என்ன சொல்லுவாங்க?!”
“தெரில..பட் கன்வின்ஸ் பண்ணிருவேன்னு நம்பிக்கை இருக்கு..”
“ம்ம் ஆனா நல்லா யோசிச்சு முடிவெடுக்க வேண்டிய விஷயம் இது..விளையாட்டுதனத்தை இதுல காட்டாதீங்க..நாளைக்கு எந்த ஒரு சூழ்நிலைலயும் அவ பீல் பண்ணிட கூடாது..”
“புரியுது டா..யோசிக்குறேன்.ஆனாலும் முடிவுல மாற்றம் இருக்கும்னு தோணல மானிங் அம்மாகிட்ட பேசலாம்னு இருக்கேன்..”
“காட் ப்ளஸ் டா பக்கி…வாழ்த்துக்கள்..ரியலி வெரி ஹாப்பி பார் யூ..சீக்கிரமே நல்ல நியூஸ் சொல்லுங்க..”
“தேங்க்ஸ்டா..பரவால்ல அப்பப்போ நா உன்னைவிட பெரியவன்னு மரியாதை குடுக்குறியே..இருந்தாலும் உன்னை கல்யாணம் பண்ணிருக்க வேண்டியது மிஸ் ஆய்டுச்சே..”
“ஆரம்பிக்காத ராசா போ போய் பொழப்ப பாரு..நல்ல வேளை நா தப்பிச்சேன்..சரி எல்லாம் கன்பார்ம் ஆனவுடனே எனக்கு அவங்க போட்டோ அனுப்புங்க..”
“ம்ம் அதெல்லாம் எனக்கு மட்டும்தான்..உனக்கெதுக்கு??”
“ச்சீ..பே..நல்லா இருந்தா சரி..பை..”
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!