ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை

சொல்லாடார் சோர விடல்

மு.வ விளக்க உரை: முடியும் செயலையும் முடியாத படி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் செய்யாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்.

நாட்கள் அதன் போக்கில் நகர தொந்தரவே செய்யாமல் விடியலை மனதளவில் ஏதோ ஒரு வகையில் நெருங்கியிருந்தான் மேகன்.

வேலை எதுவும் இல்லாமல் ஐந்து நிமிடம் இருந்தால் கூட பட்டென அவளின் மனதை அவன் நினைவுகள் ஆக்கிரமித்தன.

தன்னைத் தானே திட்டிக் கொண்டு அந்த சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் நாட்களை நகர்த்தினாள்.

இதற்கிடையில் யுவனின் திருமணமும் நெருங்கியிருக்க அவனது ஹல்தி நிகழ்ச்சிக்காக அத்தை வீட்டிற்குச் சென்றிருந்தான் மேகன்.

நிகழ்ச்சி முடிந்து தனக்கு வந்த அழைப்பை ஏற்று பேசுவதற்காக மேகன் மறுபுறமிருந்த பால்கனியை நோக்கிச் சென்றான்.

அழைப்பைத் துண்டித்து திரும்பிய நேரம் நேத்ரா அவனுக்கு எதிரில் நின்றிருந்தாள்.

“சொல்லு நேத்ரா..”

“மாமா எதுவும் தெரியாத மாதிரி பேசாதீங்க..”

“என்ன சொல்ற எனக்குப் புரியல?”

“யுவன்கிட்ட என்ன சொன்னீங்க?”

“…”

“பட் என்னால உங்களை மறக்க முடியாது மாமா.”

“நேத்ரா லிசன். எனக்கு அப்படி எந்த ஐடியாவும் இல்ல. ஆரம்பத்துலேயே அதை உனக்கும் புரிய வைச்சுரணும்னு தான் யுவன்கிட்ட பேசினேன்.”

“பட் வொய்?”

“இப்படி கேட்டால் என்ன அர்த்தம்? நான் உன்னை அந்த கோணத்தில் பார்க்கலை அவ்வளவு தான்.”

“சரி அரேண்ஞ்ட் மேரேஜா இருக்கட்டும். கல்யாணத்துக்கு அப்பறம் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கலாம்.”

“என்ன பேசுற நீ?”

“என்னால உங்களை விட்டுக் கொடுக்க முடியாது மாமா..”, என்றவளிடம் உறுதியை விட பிடிவாதம் தான் அதிகம் வெளிப்பட்டது.

“என்ன பண்ண ட்ரை பண்ற நீ? என்னை கல்யாணம் பண்ணிக்கணுமா? இல்ல MR groups ஓட மருமக ஆகணுமா?”, என்றதில் அதிர்ந்து விழித்தாள்.

“என்னை.. என்னை என்ன நினைச்சுட்டீங்க?”

“இங்கே பாரு நீ புரிஞ்சுக்காம பேசுறதை பார்த்தா எனக்கு இப்படி தான் கேட்கத் தோணுது.”

“!!!”

“உன் எண்ணம் கண்டிப்பா நடக்காது நேத்ரா. மனசை மாத்திக்கோ.

இது பெரியவங்களுக்குத் தெரிஞ்சு இதனால குடும்பத்துக்குள்ளே பிரச்சனை வந்தா ஐ ஸ்வேர்(Swear) ஜென்மத்துக்கும் உன் முகத்திலேயே முழிக்க மாட்டேன்.”, என்றவன் வெளியேறியிருக்க நேத்ராவோ மொத்தமாய் அதிர்ந்து போனாள்.

அவ்வளவு நேரமும் தங்கையைக் கவனித்தவனாய் யுவன் அவளருகில் வந்து ஆதரவாய் தோள் பற்றிக் கொள்ள அண்ணனின் தோளில் சாய்ந்தவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“உனக்கு மேகனைப் பத்தி தெரியும் தான. அவன் முடிவில் எப்பவும் மாற மாட்டான். மனசை மாத்திக்கோ நேத்தும்மா..”

“புரியுது ண்ணா.. கொஞ்சம் கஷ்டம் ஆனால் சீக்கிரமே சரியாகிடுவேன்.”, என்றதில் யுவனுக்கு நிம்மதியாய் இருந்தது.

அதற்கு மேல் அங்கு இருக்கப் பிடிக்காதவனாய் மேகன் பார்த்திபனோடு அவன் வழக்கமாய் செல்லும் அவனது ரெசாட்டிற்குக் கிளம்பியிருந்தான்.

காரிலிருந்து இறங்கியவன் அவனது அறை நோக்கி நடக்கத் தொடங்கியிருக்க பார்ட்டி ஹாலின் பக்கவாட்டில் ஒரே சத்தமாய் இருந்ததில் என்னவென அந்தப் பக்கம் பார்வையைச் சுழற்ற விடியல் சற்று பதட்டத்தோடும் அவளருகில் ஆறேழு  ஆண்கள் புகைப்படம் எடுக்கும் சாக்கில் அவளது அருகில் நெருங்க முயற்சித்த வண்ணம் இருந்தனர்.

ஆபத்து இல்லை எனினும் அவளது அசௌகரியம் முகத்தில் அப்பட்டமாய் தெரிய மேகன் பார்த்திபனின் புறம் பார்வையைத் திருப்பியிருந்தான்.

அடுத்த நொடி அவன் வேகமாய் சென்று அங்கிருந்தவர்களை விலக்கி விடியல் செல்வதற்கு வழி வகுத்தான்.

பார்த்தியின் அதிரடியிலேயே திகைத்தவளின் விழி அதுவாய் மேகனைத் தேட சற்றுத் தள்ளி நின்று அவளைத் தான் பார்த்திருந்தான்.

கூட்டம் கலைந்திருக்க பார்த்திபன் விடியலை போகும் படி கூற வாசலுக்கு செல்லும் வழியில் தான் மேகனும் நின்றிருந்ததால் சற்று படபடப்போடு அவனை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தாள்.

“ஹாய்..”, என்றவனின் குரல் ஆளுமை எப்போதும் போல் உள்ளுக்குள் ஏதோ செய்தது.

“ஹாய் மேகன்.. தேங்க்ஸ்..”

“இங்கே எல்லாம் வரும் போது இப்படி தனியா வா வருவ?”, என்றவனின் குரலில் சிறிது கோபம் இருந்ததோ?!

“இல்ல அது.. விஜி.. ஐ மீன் விஜய் இங்கே தான் இருந்தார். ஒரு மீட்டிங் அட்டெண்ட் பண்றதுக்காக அந்தப் பக்கம் லேப்டாப் எடுத்துட்டு போனார்.”

“நானே உன்கிட்ட பேசணும்னு இருந்தேன். கம்.”, என்றவன் அவன் போக்கில் உள்ளே செல்ல சுற்றும் முற்றும் விஜயை தேடிய படி அவனோடு சென்றாள் விடியல்.

அறையின் அமைதியும் அவனின் வாசனை திரவியத்தின் மணமும் அவளது படபடப்பை இன்னுமாய் அதிகரித்து விட்டது.

மேகன் தனக்கு வந்த அழைப்பை ஏற்று பேச அவனையே ஓரப் பார்வை பார்த்திருந்தாள்.

“இவனைப் பார்த்தாலே என்னவோ பண்ணுது. கூப்பிட்டா நான் பாட்டுக்கு வந்து உட்காந்துருக்கேன்.

என்ன பேசணுமாம் இவனுக்கு. பார்த்தாலும் இம்சையா இருக்கு பார்க்கலைனாலும் இம்சையா இருக்கு..”, என்றவள் மனதிற்குள் வாதாடிக் கொண்டிருக்க மேகன் அவள் முகத்தின் முன் சொடுக்கிட்டிருந்தான்.

“ஹான்.. சொல்லுங்க..”

“எனக்கு உன்னை பிடிச்சுருக்கு விடியல்..”, என்றதில் பெண்ணவளின் விழிகள் அதிர்ந்து விரிய அந்தப் பார்வையிலிருந்து விழி நகர்த்தாமல் நின்றிருந்தான் மேகன்.

“லெட் மி க்ளியர் யூ சம்திங். இது மாதிரி நான் இதுக்கு முன்னாடி யார்கிட்டேயும் பேசினதில்ல.

சோ யூ ஆர் த ஒன் அப்படினு பிக்ஸ் பண்ணதுனால தான் இதெல்லாமே..

நீ அன்னைக்கு என்னலெல்லாமோ சொன்னியே பென்ஞ்சிங், Situationship..

அதெல்லாம் என்னனு கூட எனக்கு ஐடியா கிடையாது. மே பி ஐ அம் அன் ஓல்ட் ஸ்கூல் கய்(Guy).”

“!!”

“உனக்கு புரிய வைக்க முடியுமா தெரில என்னோட ஃபிலாசபி ஒண்ணு தான்.

என்னோட மைண்ட் அண்ட் பாடியை யாருகிட்ட வேணாலும் என்னால ஷேர் பண்ண முடியாது.

செ*ஸ் இஸ் டூ ஸ்ப்ரிச்சூவல்(Spiritual)  என்னைப் பொறுத்த வரைக்கும்..”, என்றவன் முடிப்பதற்குள் அவனுக்கு முதுகு காட்டித் திரும்பியிருந்தாள் விடியல்.

“ஜஸ்ட் ஸ்டாப் திஸ் ப்ளீஸ்..”, என்றவளுக்கு குரலே எழவில்லை.

“நீ ஒரு அடெல்ட் அப்படியிருக்கும் போது நான் உன்கிட்ட தப்பா எதுவும் பேசல. என்னைப் பத்தி உனக்கு க்ளிர் பண்றேன்.

சோ எனக்கான பெர்சனா நீ தான் இருப்பனு தோணுது. அண்ட் ஐ அம் ஷுவர் கடைசி வரைக்கும் இந்த உறவு சேர்ந்து தான் இருக்கும் இருக்கணும்.”, என்றவன் தனது இரு கரங்களையும் பாக்கெட்டிற்குள் விட்ட படி நிமிர்ந்து நின்றான்.

விடியல் அமைதியாய் இருக்க அதற்குள் அவளது கைப்பேசி ஒலியெழுப்ப விஜயின் எண்ணைக் கவனித்தவளாய் அழைப்பை ஏற்றாள்.

“வெயிட் பண்ணுங்க விஜி நான் வந்துரேன்.”, என்றவள் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்திருந்தாள்.

மெதுவாய் அவன் புறம் திரும்பியவள் பார்வையை அவன் முகத்திற்குத் திருப்ப இமைக்காமல் அவளைத் தான் பார்த்திருந்தான்.

“இது எப்படி ஒத்து வரும்னு நினைக்குறீங்க?”

“ஏன் என்ன பிரச்சனை?”

“உங்க பேமிலி இதுக்கு சம்மதிப்பாங்களா?”

“இப்போவே அதையெல்லாம் யோசிக்கணுமா?”

“கண்டிப்பா. எனக்கும் என் குடும்பத்துக்குமான மரியாதை எனக்கு ரொம்பவே முக்கியம் மேகன். சோ சாரி.

இதுக்கு மேல இந்த டாப்பிக் நமக்குள்ளே வேண்டாம்.”

“என்னைப் பார்த்தா என் பொண்டாட்டியை எல்லார்கிட்டேயும் விட்டு கொடுத்து போறவன் மாதிரி இருக்கா உனக்கு?”, என்றதில் மீண்டுமாய் அதிர்வு விடியலிடத்தில்.

“நெஞ்சு வலி வர வைக்காம விட மாட்டான் போலேயே. காதல் அன்பு இதெல்லாம் இல்ல நேரா பொண்டாட்டிங்கிறான்.

இன்னும் என்னவெல்லாமோ பேசிட்டு இருக்கான்..”, என்றவள் மனதிற்குள் நொந்து கொண்டிருக்க மீண்டுமாய் அவன் பேச்சு அவளது கவனம் கலைத்தது.

“யூ நீட் டைம்ங்கிறது எனக்கு ஆச்சரியமா இருக்கு. இருந்தாலும் பரவால்ல டேக் யூவர் டைம்.

சீக்கிரமே முடிவைச் சொல்லு.”, என்றதில் வாசல் வரை வந்து விட்டிருந்தவள் அவன் புறம் திரும்பி,

“பட் வொய் மீ?”, என்றதில் லேசாய் உதடு விரித்தவன் பொறுமையாய் அவளருகில் வர மனம் வேகமாய் அடித்துக் கொண்டது விடியலுக்கு.

“நான் தான் அதைக் கேட்கணும். முதல் தடவையே தடுமாறினியே, வொய் மீ?”, என்றதில் நீ தான் என்னைத் தேர்ந்தெடுத்தாய் என்ற பொருள் பொதிந்திருக்க ஒன்றும் கூறாமல் அமைதியாக வெளியேறியிருந்தாள்.

விடியல் வெளியே வந்த நேரம் விஜய் அங்கேயே நின்றிருக்க அவளுக்கு பின்னால் வந்த மேகனைப் பார்த்து புருவம் சுருக்கினான்.

இருவருமாய் மேகனுக்கு முதுகு காட்டி வாசலுக்கு நடக்க மேகனின் சொடுக்கு சத்தத்தில் திரும்பியிருந்தனர்.

“இனி பாதுகாக்குறதா இருந்தா அந்த வேலையை ஒழுங்கா செய்.

இல்ல ஆபீஸிலேயே மீட்டிங் அட்டெண்ட் பண்ணு.”, என்று விஜயிடம் கூற விடியலுக்கு தர்ம சங்கடமாகிப் போனது.

வேகமாய் அங்கிருந்து வெளியேறியவள் காரில் அமர்ந்ததும் விஜயிடம்,

“அவர் பேசினதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் விஜய்.”

“எதுவும் ப்ராப்ளமாச்சா விடியல்? ஏன் அப்படி சொன்னார்?”

“இல்ல ஒரு பாய்ஸ் க்ரவுட் போட்டோ எடுக்குறதா சொல்லி டென்ஷன் பண்ணிட்டாங்க…”

“ச்ச.. ஐ அம் சாரி நான் உங்க கூட இருந்துருக்கணும்.”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல விஜய்..”, என்றவள் பேச்சை நிறுத்திக் கொண்டு வெளியில் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்திருந்தாள்.

மனம் மொத்தமும் மேகனுடனான பேச்சில் தான் உழன்றது. அவனை தன்னருகில் பார்த்த அந்த நொடி அவள் தன்னைத் தொலைத்தது உண்மை தான்.

ஒரு வித ஈர்ப்பு.. பிடித்தம்.. சைட் இப்படி என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் அந்த ஒரு பார்வைக்காகவா தன்னை அவன் எதிர்காலம் என்கிறான் என்று யோசித்தாலே தலை வலித்தது.

தனக்கு அவனைப் பிடித்திருக்கிறதா என்றால் நிச்சயம் அவளால் உடனே இல்லை என்ற பதிலை கூற முடியாது.

அவன் தோள் உரசும் கேசமும் பார்வையும் வயிற்றுக்குள் பலவித மாற்றத்தை இப்போது கூட கொடுக்கிறதே.

“ஏன் விஜய்..”

“ம்ம்?”

“அந்த மேகன் ரொம்ப பணக்காரர் இல்ல?”

“அன்னைக்கு தான் அவ்வளவு சொன்னேன் நீங்க என்ன இப்படி ஒரு கேள்வி கேட்குறீங்க?”

“இல்ல சும்மா தான் கேட்டேன்”

“பணக்காரங்கனு ஒரு வார்த்தையில் அடக்கிற முடியாது விடியல். அந்தளவு பெரிய இடம். அதை விட அவங்க குடும்ப ஒற்றுமை தான் இன்னும் ஹைலைட்.”

“…”

“இவரோட அப்பா சொன்னா அவரோட தம்பியும் தங்கச்சியும் உயிரையே விட்டுருவாங்களாம். அந்தளவு மஞ்சுநாத் சார் அந்தக் குடும்பத்தோட அஸ்திவாரம் மாதிரி.”

“ம்ம்..”

“இன்னும் இரண்டு நாள்ல மேகன் சாரோட அத்தை பையனுக்கு கல்யாணம். பொண்ணு நம்ம Charity group of hospitals ஓட வாரிசு. பணம் பணத்தை தான் சேரும்னு சும்மாவா சொன்னாங்க”

“..”

“அவருக்கு ஒரு அத்தை பொண்ணு கூட இருக்காங்க சொல்ல முடியாது பணத்தை வெளியில் விட வேண்டாம்னு அந்த பொண்ணை இவருக்கு கட்டி வைச்சாலும் வைப்பாங்க.”, என்றதில் விடியலுக்கு லேசாய் மனம் சுணங்கியது.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

7 comments

EswariSkumar September 7, 2026 - 5:17 pm

Visaarikka aarambichchittaa… Rightuu

Fathima.ar September 7, 2026 - 6:21 pm

Naanga rugged da engalukku soft emotions varathuuu

Kavi Natarajan September 7, 2026 - 8:06 pm

💞💞💞💞💞💞

suganyavel September 7, 2026 - 8:38 pm

Super💕

srichitra September 8, 2026 - 4:02 pm

Nice

Mathy September 9, 2026 - 10:18 am

நைஸ் 😍😍😍😍

Sindhu Narayanan September 10, 2026 - 9:23 pm

😍😍😍

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode