அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்

புறத்த புகழும் இல

மு.வ விளக்கம்: அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.”

“விஷயத்தை முழுசா தெரிஞ்சுக்குறதுக்கு முன்னாடியே கத்திட்டு இருக்க வாசு..”, என்றவர் மேகனைப் பற்றி கூற நெஞ்சில் கை வைத்து விட்டிருந்தார் வாசந்தி.

“ஏங்க அவங்களுக்கும் நமக்கும் ஏணி வைச்சாலும் எட்டாதுனு தெரிஞ்சும் நீங்க என்ன யோசிக்கணும்னு சொல்றீங்க?”

“நான் இப்போ யோசிக்குறது ஸ்டேட்டஸ் பத்தி இல்ல வாசு.. என் பொண்ணு லவ் பண்ற ஆளைப் பத்தி..”

“தெரிஞ்சுக்க எதுவும் இருக்குறதா எனக்குத் தோணலைங்க..”

“உன் பொண்ணு அவரை விரும்புறா..”

“..”

“அப்போ அவளோட வாழ்க்கையை முடிவு பண்ணுறதுக்கு முன்னாடி, அவர் எப்படிப்பட்டவர்னு தெரிஞ்சுக்கணும். அவர் குடும்பம் எவ்வளவு பெரிசுனு இல்லை…

அவர் நம்ம சின்னுவை எவ்வளவு நல்லா பார்த்துக்குவார்னு தான் பார்க்கணும்.”

“ஆனா…”

“வாசு.”, இளங்கோவின் குரல் இம்முறை மென்மையாக இருந்தாலும் அழுத்தமாக இருந்தது.

“ராஜ் விஷயத்துல நாம அவசரப்பட்டது தான் பெரிய பிரச்சனையா போச்சு.

அதே தப்பை மறுபடியும் பண்ணக் கூடாது.”, அந்த வார்த்தையில் வாசந்தி அமைதியாகிப் போனார்.

“சின்னு.”

“ப்பா…”

“நீ அவரை மனசார காதலிக்கிறியா?”

“ஆமா பா.”

“அவர் உன்னை?”, அவளது கண்களில் மீண்டும் கண்ணீர் நிறைந்தது.

“என்னை விட அதிகமா.”, என்றதில் இளங்கோவின் முகத்தில் மிகச் சிறிய புன்னகை தோன்றியது.

“சரி.”

“ப்பா?”

“அப்போ அவரைப் பார்க்க ஏற்பாடு பண்ணு.”

“!!!”

“நான் முடிவு பண்ணிட்டேன்னு இல்லை. உனக்காக அவரைப் புரிஞ்சுக்க முயற்சி பண்றேன்.”, என்றதில் விடியல் நம்ப முடியாமல் தந்தையைப் பார்த்தாள்.

அவள் அடுத்த நொடி தந்தையின் தோளில் சாய்ந்திருந்தாள்.

“தேங்க்ஸ் பா…”

அவளது தலையை வருடிய இளங்கோவின் பார்வை மட்டும் சற்றே தொலைவில் நிலைத்திருந்தது.

“MR Groups… மேகன் மஞ்சுநாத்.”, அந்தப் பெயர் அவருக்குப் புதிதல்ல. ஆனால் அந்தப் பெயருக்குப் பின்னால் இருக்கும் மனிதனைத் தான் அவர் முதன் முறையாகத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது.

தனதறைக்குள் வந்தவள் மேகனுக்கு அழைக்க அதற்காகவே காத்திருந்தவனாய் உடனே அழைப்பை ஏற்றிருந்தான்.

“சின்னு நீ ஓ கே தான..”

“மேகன் அப்பா உங்களைப் பார்க்கனும்னு சொல்றார்.”

“நாளைக்கு நம்ம ப்ல்டிங்கிலேயே மீட் பண்ணலாம் சின்னு. 12Th ப்ளோர் மீட்டிங் ஹால்.”

“ம்ம் சரி மேகன்.”

“ஏன் வொர்ரி பண்ணிக்குற. நான் பேசிக்குறேன்.”

“என்னவோ மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு மேகன்.”

“ரொம்ப யோசிக்காத தூங்கு. நாளைக்கு பார்க்கலாம். குட் நைட் சின்னு.”, என்றவன் அவளை மேலும் குழப்ப விரும்பாதவனாய் அழைப்பைத் துண்டித்திருந்தான்.

காலையில் எழுந்து வந்தவளிடம் வாசந்தி ஒரு வார்த்தை கூட பேசியிருக்கவில்லை.

இளங்கோ எதார்த்தத்தை உணர்ந்து மகளின் மனநிலை புரிந்து யோசிக்கும் தந்தை.

ஆனால் வாசந்தியோ சுற்றம் நட்பு மானம் அவமானம் என நான்கு திசைகளிலும் குடும்ப நலனை யோசிக்கும் சாதாரண குடும்பத் தலைவி.

அவர் பார்வையில் அவர் முதலில் நினைப்பது குடும்ப கௌரவத்தையும் கணவரின் மரியாதையையும்.

ஆனால் இளங்கோவிற்கு அன்பு மகளின் மகிழ்ச்சி மட்டுமே பிரதானமாய் இருந்தது.

மூவரும் அமைதியாய் காலை உணவை முடிக்க தானும் வருவதாய் வாசந்தி கூறினார்.

குடும்பத்தைச் சந்திக்கும் போது இருவருமாய் செல்லலாம் என்று மனைவியை சமாதானப்படுத்தி விட்டு கிளம்பியிருந்தார் இளங்கோ.

காரிலும் தந்தைக்கும் மகளுக்கும் இடையில் பேச்சு வார்த்தையே இல்லாமல் இருக்க விஜய் ஏதோ சரியில்லை என்று உணர்ந்து அமைதியாகவே வந்தான்.

இருவருமாய் பன்னிரெண்டாவது தளத்தை அடைந்த நேரம் பார்த்தி அங்கு தான் இருந்தான்.

“மேம் நீங்களும் சாரும் உள்ளே வெயிட் பண்ணுங்க. சார் இன்னும் அஞ்சு நிமிஷத்தில் வந்துருவார்.”, என்றதில் தந்தையை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றிருந்தாள்.

கூறியது படியே அடுத்த ஐந்து நிமிடத்தில் கதவு திறக்கும் சத்தத்தில் தலையைத் திருப்பிய இளங்கோ கோட் சூட்டில் நெஞ்சை நிமிர்த்தி நடந்து வந்தவனைப் பார்த்து எழுந்து நின்றிருந்தார்.

இப்படி ஒரு சூழல் இல்லையென்றால் மேகன் என்பவனின் நிழலை நெருங்குவதற்குக் கூட அவருக்கு மாதக் கணக்கில் ஆகியிருக்கும் என்பதை நினைத்து நின்றிருந்தவரை மேகனின் குரல் நடப்பிற்கு கொண்டு வந்தது.

“ஹாய் அங்கிள்..”

“ஆங்ங்.. ஹாய் சார்..”

“உட்காருங்க அங்கிள்..”, என்றவன் விடியலைப் பார்க்க முகத்தில் கவலையும் பயமும் மண்டிக் கிடந்தது அவளிடத்தில்.

“விடியல்..”

ஹான்!!”

“நீ கொஞ்ச நேரம் வெளியே இரேன். நானும் அங்கிளும் பேசிட்டு வரோம்.”, என்றதில் இன்னுமாய் பதறினாள்.

மகளை வைத்துக் கொண்டு இளங்கோவால் தன்னிடம் மனம் விட்டு பேச முடியாது என்பது மேகனின் எண்ணம்.

எனவே அவளை வெளியில் காத்திருக்கச் சொல்ல மனமில்லை எனினும் அவனது வார்த்தைக்கு மதிப்பு கொடுத்தவளாய் அங்கிருந்து வெளியேறியிருந்தாள்.

கிட்டத்தட்ட அரை மணி நேர பேச்சு வார்த்தைக்குப் பின் இளங்கோ வெளியே வந்தார். தந்தையின் முகத்தில் இருந்து விடியலால் எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை.

“ப்பா..”

“பேசிட்டேன் சின்னு. போலாம்..”, என்றவர் அவர் போக்கில் செல்ல விடியல் வேகமாய் மேகனைக் காணச் சென்றாள்.

அவனும் சாதாரணம் போல் கைப்பேசியில் எதையோ பார்த்திருக்க பெண்ணின் நிலைமை தான் பாவமாகிப் போனது.

“மேகன் அப்பா என்ன சொன்னாங்க..”

“வீட்டில் பேசிட்டு சொல்றேன்னு சொல்லிருக்கேன் சின்னு.  நீ ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்க?”, என்றவன் அவளருகில் வந்து கைக்குட்டையை வைத்து முகத்தை ஒற்றியெடுத்தான்.

“ஏன் இரண்டு பேரும் எதுவும் சொல்ல மாட்றீங்க?”, என்றவளின் முகத்தை கைகளில் ஏந்தியவனாய்,

“நான் பார்த்துக்குறேன் டி. நீ பயப்படுற அளவுக்கு நிஜமாவே எதுவும் இல்ல. நம்பு..”, என்றதில் அரை மனதாய் அவனை திரும்பிப் பார்த்த வண்ணம் வெளியேறியிருந்தாள்.

மேகன் அங்கிருந்து கிளம்பியவன் நேராகத் தன் தந்தையைப் பார்க்கச் சென்றிருந்தான்.

“டேட்..”

“வா மேகன்..”

“என்ன முடிவு பண்ணிருக்கீங்க?”

“எதைப் பத்தி..”

“டேட்.. நாம இரண்டு பேருமே அவ்வளவு வெட்டியா இல்ல.. விஷயத்துக்கு வாங்க..”

“எனக்கு இதில் விருப்பமில்ல மேகன்.”

“பட் ஐ லவ் ஹெர்..”

“இது எந்த விதத்திலேயும் ஒத்து வராதுனு உனக்கு புரியலையா?”

“ஸ்டேட்டஸ் உங்களை விட அதிகமாக பார்க்குறவன் நான்.”

“அதுமட்டுமில்ல அவளும் பிசினஸ் பேக்ரவுண்ட் அதுவுமில்லாம சக்சஸ்புல் கேரியரில் இருக்குற ஒரு பொண்ணு..”

“சோ?!”, என்றவனுக்கு நிஜமாகவே தந்தை என்ன கூற வருகிறார் என்பது புரியவில்லை.

“ஒரு இன்டிபெண்டெண்ட் வுமனா கல்யாணத்துக்குப் பிறகு உன்னோட பிசினஸில் அவளோட இன்ப்ளுயன்ஸ் வரும். இதனால பிரச்சனைகள் வரலாம். உன் வயசு இப்போ இதையெல்லாம் யோசிக்காது..”

“..”

“என்ன நான் சொல்றது சரினு ஒத்துக்குறியா?”

“உண்மையான ஆம்பள தன்னோட மனைவியோட திறமையையும் ஆளுமையையும் பார்த்து எப்பவும் பயப்பட மாட்டான் டேட்.”

“!!”

“ஆம்பளை பொண்டாட்டியை அடக்க நினைக்க மாட்டான். அவளோட திறமை மேல அளவு கடந்த நம்பிக்கை தான் வைப்பான்.

அவளால சில சூழ்நிலைகளைச் சமாளிக் முடியாமல் போகலாம். அதே மதிரி எனக்கு சில விஷயங்களில் முடிவெடுக்க தடுமாற்றம் வரலாம்.

அப்போ அவ சொல்ற விஷயம் என் நல்லதுக்காக இருந்தா நான் கண்டிப்பா கேட்பேன்.”

“!!”

“என் ஈகோ என் பெட்ரூம்க்கு வெளியில வரை மட்டும் தான் எப்பவும் இருக்கும் டேட்.”, என்றதில் மஞ்சுநாதே தடுமாறிப் போனார்.

மகனைப் பற்றி அறிந்தவருக்கு அவனின் காதல் பற்றி தெரியாமல் போனது. தந்தையின் அமைதியைக் கவனித்தவனாய் இருக்கையில் இருந்து எழுந்தவன்,

“ஆளுமை இருக்குற அம்மாவும் அவங்க கனவை மதிச்சு அவங்களுக்கு இடம் கொடுத்த அப்பாவும் வளர்த்த வளர்ப்பு என்னோடது.

இந்தக் கல்யாணத்தை நிறுத்தணும்னு இதையெல்லாம் ஒரு காரணமா சொல்லிட்டு இருக்கீங்க? நான் சின்னத்தனமா இருப்பேன்னு எப்படி யோசிச்சீங்க?

எப்போ அவங்க பேமிலியை மீட் பண்ணலாம்னு சொல்லுங்க டேட்.”, என்றவன் வெளியேறியிருக்க மஞ்சுநாத்திற்கு இருக்கும் நிலையையும் மீறி மகனின் பேச்சில் மெலிதான கர்வ புன்னகை எட்டிப் பார்த்தது.

அவன் முடிவில் இப்போதும் அதிருப்தி தான் ஆனால் என்னவெல்லாம் பேசிச் சென்றிருக்கிறான் என்று எண்ணியவர் மனைவியிடம் இரவில் அனைத்தையும் கூற ராதிகாவிற்குமே புன்னகை தோன்றியது.

“பட் இது நடக்க போறதில்ல ராது.”

“..”

“என்ன அமைதியா இருக்க?”

“அவன் நினைச்சதை நடத்தியே தீருவான். முடிஞ்ச அளவு பிரச்சனைகள் இல்லாம எல்லாம் நடந்தா நல்லாயிருக்கும்னு எனக்குத் தோணுது.”

“இப்படி சொன்னால் எப்படி? நீ பேசு அவன்கிட்ட.. எடுத்துச் சொல்லு..”

“எனக்கு எல்லாத்தையும் விட என் புள்ளை சந்தோஷம் தான் முக்கியம்ங்க..”, என்றவரிடம் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் எரிச்சலடைந்தார்.

நடந்தததை எப்போதும் போல் தம்பியிடமும் தங்கையிடமும் மஞ்சுநாத் கூற அவர் தங்கை அண்ணனிடம் இளங்கோவை அழைத்து நாம் பேசிப் பார்க்கலாம் அவர் மகளுக்குப் புரிய வைக்கட்டும் என்று கணவர் கூறியதை அப்படியே கூறினார்.

மஞ்சுநாத்திற்கும் அது சரியென்று தோன்ற அடுத்த இரு தினங்களில் தன் வீட்டிற்கு இளங்கோவை  அழைத்திருந்தார் மஞ்சுநாத்.

இளங்கோவும் வாசந்தியும் மேகனின் வீட்டு வாசலில் இறங்கும் வரை மேகனுக்கு இது தெரியாமல் போயிருக்க அலுவலகத்தில் இருந்து அப்போதே கோபமாய் வீட்டிற்கு கிளம்பியிருந்தான்.

மஞ்சுநாத் தனது தங்கை மற்றும் தங்கை கணவரோடு வரவேற்பறையில் அமர்ந்திருக்க இளங்கோவும் வாசந்தியும் தயக்கமாய் உள்ளே நுழைந்தனர்.

அவர்களின் அதிருப்தி வெளிப்படையாகவே தெரிய வாசந்திக்கோ முள் மேல் நிற்பது போன்று இருந்தது.

இளங்கோ எப்போதும் போல் மகளைத் தவிர வேறு எண்ணம் இல்லாதவராய் பொறுமையை கடைப் பிடித்தார்.

யார் பேச்சை ஆரம்பிப்பது என்று ஒருவரை ஒருவர் பார்த்திருக்க தன் கணவர் வீட்டில் வைத்து கூறி அனுப்பிய படி மஞ்சுநாத்தின் தங்கையே பேச்சை ஆரம்பித்திருந்தார்.

சாதாரணமாய் தொடங்கியது போல் இருந்த பேச்சு அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாய் மறைமுக தாக்குதலாகவும் குத்தல் பேச்சாகவும் மாறியிருந்தது.

ஓரளவிற்கு மேல் பொறுக்க மட்டாமல் வாசந்தி எழுந்து விட இளங்கோ மனைவியின் கைப் பற்றி அழுத்தினார்.

வாசந்தி ஏதோ பேச வாய் திறக்க அந்த நேரம் கேட்ட காலடிச் சத்தத்தில் அனைவரும் வாசல் புறம் திரும்பியிருந்தனர்.

கண்களில் கோபம் கொப்பளிக்க நின்ற மருமகனைப் பார்த்த மஞ்சுநாத்தின் தங்கைக்கு ஒரு நொடி என்ன செய்வது என்றே புரியவில்லை.

“என்ன நடக்குது இங்கே?”, என்றவனின் ஆழ்குரல் வாசந்திக்கு தூக்கி வாரி போட்டது.

“யாரைக் கேட்டு இவங்களை இங்கே வர வைச்சீங்க?”

“…”

“எதுக்காக இந்த திருட்டுத்தனம்?!”, என்றதில் மஞ்சுநாத் குரல் உயர்த்தியிருந்தார்.

“மேகன் வார்த்தையில் கவனம் இருக்கணும்.”

“இவங்க முகத்தைப் பார்த்தால் அப்படி ஒண்ணு இவ்வளவு நேரம் இருந்ததா எனக்குத் தெரியலையே?”

“நான் இல்லாம நான் சம்மந்தப்பட்ட விஷயத்தை பேச யார் அனுமதி கொடுத்தது உங்களுக்கு?”, என்றவனின் பார்வை மாமாவைத் தீண்டிச் செல்ல அவர் கோபமாய் இருக்கையில் இருந்து எழுந்திருந்தார்.

“என்ன மேகன் இது..”

“என்னனு நீங்க தான் சொல்லணும். எங்க அம்மா இல்ல. நான் இல்லை. ஆனால் நீங்க பேசிட்டு இருக்குறது என்னோட சம்மந்தப்பட்டவங்க கூட..”, என்றவனின் கோவத்தில் இளங்கோவும் வாசந்தியும் செய்வதறியாது நின்றிருந்தனர்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

8 comments

EswariSkumar September 15, 2026 - 7:20 am

அப்டி என்ன அவசியம்… இப்படி திருட்டு தனம் பண்றதுக்கு…

Kavi Natarajan September 15, 2026 - 8:01 am

👌👌👌👌👌👌👌👌

Fathima.ar September 15, 2026 - 8:26 am

Nice update

Superb update sis 👏.

Raji Vijay September 15, 2026 - 9:45 am

Ilango sariyana appa..ponnu kkaga yosichu seiyrar. Avanga athaiku ithu thiruttuthanam nu theriyaliye. megan mass entry po. Correct time la..superb..ilango ku ithuve periya nambikaiyai kuduthu irukanum. Parpome.

Kiruthika M September 15, 2026 - 1:55 pm

Avan kekrathu crtuh dhana avan ilama yepdi Avan life pathi pesuvinga

srichitra September 15, 2026 - 5:56 pm

Super

Mathy September 16, 2026 - 12:21 am

😍😍😍😍

suganyavel September 16, 2026 - 8:46 pm

Super💕

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode