அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்

மு.வ விளக்க உரை: தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.

“அண்ணா.. இந்த ஒரு தடவை விட்டுரலாம்..”

“ஒரு மாசமா விட்டு பிடிச்சாச்சு சுகா.. அவன் தேவையில்லாதவங்களோட சேர்ந்து தேவையில்லாததை எல்லாம் பண்ணிட்டு இருக்கான்.”

“..”

“சொன்னா புத்தியில் ஏறும்னு எனக்குத் தோணலை. பட்டால் தான் புத்தி வரும்.”

“…”

“இனி MR groupsக்கும் அவனுக்கும் சம்மந்தம் இல்லை.”

“அண்ணா!!!”

“இதில் எந்த மாற்றமும் இல்ல. சுகா முடிஞ்சா என்னை சரியா புரிஞ்சுக்க முயற்சி பண்ணு.

இல்லைனாலும் நோ ப்ராப்ளம்.”, என்றவன் அங்கிருந்து கிளம்பியிருக்க சுகன் உடனே தந்தைக்கு அழைத்து விட்டிருந்தான்.

விஷயத்தை கேள்விபட்ட சித்தும் முதலில் அதிர்ச்சி அடைந்து பின் யோசித்து பொறுமையாய் மேகனிற்கு அழைத்திருந்தார்.

“சொல்லுங்க சித்தப்பா..”

“ரகு விஷயம் என்ன டா? கொஞ்ச நாளாவே சரியில்லைனு சுகா சொல்றான்.”

“அவன்கிட்ட இருந்து ஹோட்டல்ஸ் பொறுப்பை எடுத்துகிட்டேன்னு கோவமா இருக்கான்.”

“அண்ணனுக்கு ரிபோர்ட் பண்றதில் இவனுக்கு என்ன டா கஷ்டம்?”

“அவன் இன்னும் குழந்தையில்லைனு அவன் நினைக்குறான். நாம தான் அப்படி நினைச்சுட்டு இருக்கோம் போல.”

“இப்போ நீ எடுத்துருக்குற முடிவினால எல்லாம் மாறுமா?”

“கண்டிப்பா நான் மாத்துறேன் சித்தப்பா..”

“சரி டா பார்த்துக்கோ.”, என்றவர் அழைப்பைத் துண்டித்திருக்க எதையோ நினைத்து மேகனுக்குச் சிரிப்பு வந்திருந்தது.

விஷயமறிந்து ரகு அன்று இரவு மேகனின் முன் வந்து கோவமாய் நின்றிருந்தான்.

“அண்ணா எதுக்காக இப்படி பண்ணீங்க. இனி நான் என்ன பண்ணட்டும்?”

“MR groups ஓட முதலாளி பேரில் இருந்து தான் உன்னை எடுத்துருக்கேன். ஸ்டில் நீ எம்ப்ளாயியா இருக்கலாம். தப்பில்ல.”

“என்ன விளையாடுறீங்களா?”, என்றவன் குரலை உயர்த்தியிருக்க பார்த்தியே சற்று அதிர்வாய் ரகுவந்தைப் பார்த்தான்

“என்னால அப்படியெல்லாம் இருக்க முடியாது..”

“வேற என்ன பண்ணலாம்ங்கிற?”

“நான் அப்பாகிட்ட பணம் கேட்டு தனியா பிசினஸ் பண்ண போறேன்.”, என்றதில் மேகன் சிரிக்க அது ரகுவந்தை இன்னுமாய் சீண்டி விட்டிருந்தது.

“ஆல் த பெஸ்ட் ரகு..”, என்றவனின் நக்கலில் கோபமாய் வெளியேறியிருந்தான்.

விஷயமறிந்து மஞ்சுநாத் ஒருபுறம் கத்த ஆரம்பித்திருக்க மேகன் இடத்தில் எந்த எதிர்வினையும் இல்லை.

இரவு வந்த ராதிகா மகனுக்கான உணவோடு அவனது அறைக்குள் நுழைந்தார்.

“கண்ணா..”

“யெஸ் மாம்..”, என்றவன் பால்கனியில் நின்று இருளை வெறித்திருந்தான்.

“ஐ அம் டயர்ட் ம்மா. ப்ளீஸ் நீங்களும் ஆரம்பிக்காதீங்க..”, என்றவன் மறுபுறம் அமைதியாய் இருந்ததில் தலையைத் திருப்ப உணவை ஒரு வாய் எடுத்து அவன் முன் நீட்டியிருந்தார்.

“நான் என்ன குழந்தையா?”

“எனக்கு நீ குழந்தை தான் கண்ணா..”

“மாம் நோ நீட்..”

“அம்மாக்காக மேக்..”, என்றதில் உணவை வாங்கிக் கொண்டவன் உள்ளே சென்று நாற்காலியில் அமர ராதிகா பொறுமையாய் உணவை ஊட்டி முடித்து அவனை அழைத்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்தார்.

மகனின் கத்தலையும் மீறி தனது மடி சாய்த்துக் கொண்டார்.

“எப்பவுமே நாம பலசாலியா இருக்க முடியாது கண்ணா..”, என்றவரின் கரம் அவனின் தலையை வருடிக் கொண்டிருந்தது.

“சில நேரம் மனசு கஷ்டமா இருக்கும் சில நேரம் உடைஞ்சு போகும் சில நேரம் தேவையே இல்லாத பயம் இருக்கும்.

அதையெல்லாம் எப்பவுமே எல்லார்கிட்டேயும் மறைச்சு வைக்க வேண்டிய அவசியம் இல்ல.”

“..”

“யாராவது ஒருத்தர்கிட்ட வாழ்க்கையில நான் இவ்வளவு தான்.

இது தான் நான் அப்படினு இருந்துற வாய்ப்பு கிடைச்சால் அதை யோசிக்காம பயன்படுத்திக்கனும் கண்ணா..”

“நீங்க அப்படி இருக்கீங்களா?”

“ம்ம்.. என் அம்மா இருந்த வரை அவங்க தான் எனக்கான கோ- டு பெர்சன்.”

“..”

“இந்த உலகத்துக்கு நான் எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் அவங்க முன்னாடி நான் உலகமே தெரியாத சின்னக் குழந்தையா இருக்க தான் விரும்புவேன்.”

“…”

“மே பி உனக்கு அது விடியலா இருக்கலாம்.”

“அப்படியெல்லாம் இல்ல..”

“இருந்தாலும் தப்பில்ல. என்னை விட காரணமே இல்லாம உன்னை விரும்ப ஆரம்பிச்ச ஒருத்தி அவ. கண்டிப்பா உனக்காக அவ எல்லா சூழ்நிலைலேயும் கூட இருப்பா.”

“…”

“இந்த உலகத்தில் உன்னால அடைய முடியாதுனு எதுவும் இருக்கா?”

“..”

“ஆனா அவளுக்காக நீ காத்திருக்குற மாதிரி நிலைமை இருக்குல.

இந்த வலி அவளை உனக்கு இன்னுமும் பொக்கிஷமா மாத்தும். உங்க உறவை வாழ்க்கை முழுசுக்கும் பலப்படுத்தும்.”

“..”

“எல்லாமே சீக்கிரமே சரியாகிடும் கண்ணா.. நீ மென்டலி ட்ரெயின் ஆகாத. அப்பறம் அவ உன்கிட்ட வரும் போது அதை கொண்டாடுற மனநிலை குறைஞ்சு போயிடும்.”

“உங்களுக்கு அவளைப் பிடிச்சுருக்கா?”

“நீ தான் அவளை என் கண்ணிலேயே காட்டலையே..”, என்றவர் சிரித்தார்.

“சந்தர்ப்பம் கிடைக்கலை மாம்.”

“தட்ஸ் ஓகே. எல்லாம் சரியாகும். நீ இப்போ ஒழுங்கா தூங்கு.”, என்றதற்கு ஆமோதிப்பாய் மேகன் தலையசைத்ததில் நிம்மதியுற்றவராய் அவனைப் படுக்க வைத்து விட்டு வெளியேறியிருந்தார்.

அன்றைய காலை விடியல் அவசரமாய் அலுவலகத்திற்கு தயாராகி உணவு மேசையில் வந்து அமர வாசந்தியும் அவளருகில் இருந்த நாற்காலியை நகர்த்திப் போட்டு அமர்ந்தார்.

“சின்னு..”

“சொல்லு மா.. எதாவது வேணுமா? நம்ம கனி அக்காவை வாங்கிட்டு வர சொல்றேன். இல்லைனால்..”

“அதெல்லாம் இல்ல உன்கிட்ட பேசணும்.”, என்றதில் நேரத்தைப் பார்த்தவள்,

“என்ன மா சொல்லு..”

“உன் பெரியம்மாவோட அண்ணா பையன்..”, என்றதில் உணவிலிருந்து விழி நகர்த்தி ஒரு நொடி அன்னையைப் பார்த்தவள் மீண்டுமாய் உண்ண ஆரம்பித்தாள்.

“நல்ல பையன் நல்ல சம்பாதிக்குறான். லண்டன்ல செட்டில் ஆகிருக்கான்.”

“சரி இதுக்கெல்லாம் நான் என்ன பண்ணணும்?”

“இங்கே பாரு டி நல்லா இருந்த உங்கப்பா திடீர்னு போவார்னு நாம நினைச்சோமா? எனக்கும் என்ன எழுதிருக்கோ அதுக்குள்ளே உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை..”

“உனக்கு முன்னாடி நான் போற விதி இருந்தா என்னம்மா பண்ணுவ?”

“அடிச்சேன்னால் தெரியும் என்ன டி பேச்சு இது?”

“நீ பேசுறதும் அப்படி தான் இருக்கு.”

“..”

“நான் அமைதியா சாதாரணமா இருக்குறதுனால நான் நிம்மதியா இருக்குறதா நீ நினைச்சுட்டு இருக்கியா?”

“.?”

“ஒவ்வொரு நிமிஷமும் உள்ளுக்குள்ளே செத்துட்டு இருக்கேன்.”

“சின்னு!!”

“இப்படி மாப்பிள்ளை பாக்குறேன். கல்யாணம் பண்றேன்னு என்னை மொத்தமா சாகடிச்சுறாத மா..”

“!!”

“உனக்கு பிடிக்காததை நான் பண்ண மாட்டேன். அதே மாதிரி எனக்குப் பிடிக்காத எதையும் என்கிட்ட பேசாத ப்ளீஸ்..”

“அப்படினால் வாழ்க்கை பூராவும் இப்படியே இருக்க போறியா?”

“அதில் எனக்கு எந்தக் கஷ்டமும் இல்ல. ஆனால் நீ இப்படி யார் யாரையோ என்னோட சேர்த்து பேசும் போது தான் அருவருப்பா இருக்கு. புரிஞ்சுக்கோ மா..”, என்றவள் பாதி உணவில் அப்படியே எழுந்து சென்றிருந்தாள்.

வாசந்திக்கு மகளின் எதிர்காலம் குறித்த பயம் அதிகரித்திருந்தது. ஆனால் அதற்காக அந்த மேகனையே திருமணம் செய்து கொள் என்று கூறவும் மனம் வரவில்லை.

இத்தனை தினங்களுக்குப் பிறகு இப்போது வாசந்தியிடம் இருப்பது நூறு சதவிகிதம் பிடிவாதம் மட்டுமே என்பதை அவரும் உணர்ந்து தான் இருந்தார்.

அன்று தன்னுடைய பேச்சை மதித்து மேகன் இப்படி மொத்தமாய் தன் மகளிடமிருந்து விலகுவான் என்று அவர் உண்மையில் எதிர் பார்க்கவில்லை.

அதை விட இந்த மாத காலத்தில் மகள் ஒரு முறை கூட மேகனைப் பற்றி தன்னிடம் வாய் திறக்காமல் இருப்பதும் ஆச்சரியமாய் இருந்தது.

இப்படியாய் அவரவர் வாழ்க்கை பல போராட்டங்களுக்கு நடுவில் நகர்ந்து கொண்டிருக்க மேகன் சென்றிருந்த தொழில் முறை சந்திப்பில் அந்த மனீஷை முதன் முறையாக நேரில்  சந்தித்திருந்தான்.

“என்ன மேகன் உங்களை நெருங்கவே விட மாட்றீங்க?”, என்றவனின் குரலில் அடக்கப்பட்ட கோபம்.

“நெருங்க முடியலைனு தெரிஞ்சாலும் விடாமல் துரத்துறீங்களாமே மிஸ்டர்.. பார்த்தி சார் பேர் என்ன?”, என்றதில் கடுப்பாகியிருந்தான்.

“முயற்சி பண்ணாமல் இருந்தா எப்படி ஜெயிக்க முடியும். சொல்லுங்க..”

“ஆனால் இது தேவையில்லாத முயற்சிங்கிறது தான் விஷயமே..”

“ஒரு தடவை நாம பேசிப் பார்க்கலாமே மேகன்.. ஐ திங்க் யூ வில் லைக் மை டீல்.”

“ஓ ஷுவர் பார்க்கலாமே…”, என்றவன் கை குலுக்கி கிளம்பியதும் மனீஷின் முகத்தில் இருந்த புன்னகை மறைந்திருந்தது.

அவனது நெருங்கிய நண்பன் மனீஷிடம், “ஏன் டா உங்கப்பாக்கு இருக்குற செல்வாக்குக்கு இவனெல்லாம் ஒரு ஆளா?”

“எதிராளியோட பலம் தெரியாம பேசாத ஃபூல். அவன் நினைச்சா கவர்மெண்டையே மாத்துவான்.”

“என்ன டா சொல்ற?”

“அவங்க அப்பாவை மாதிரி இல்ல டா இவன். இன்னைக்கு தேதிக்கு எங்கே இருந்தெல்லாம் அவனுக்கு பிரச்சனை வரும்னு அவனுக்குச் சின்னதா ஒரு டவுட் இருக்கோ அதுக்கு சம்மந்தப்பட்ட எல்லா இடத்திலேயும் ஆள் வைச்சுருக்கான்.”

“!!”

“அவங்க அம்மா மினிஸ்டர் அப்பா டாப் டென் பணக்காரர். ஆனா இவன் அதை ரெண்டையும் எப்பவும் தக்க வைச்சுக்கத் தெரிஞ்ச புத்திசாலி.”

“நான் என்ன விஷயமா இவனை சுத்தி வரேன்னு தெரியாம இருக்கும் போதே இவ்வளவு கவனமா இருக்கான் பாத்தியா?”

“நானும் அதை தான் டா கேட்குறேன். அப்படி என்ன அவன்கிட்ட இருக்கு உனக்குத் தேவையானது?”

“அவங்க ரெசார்ட் வைச்சுருக்குற மூணு இடமும் அதை சுத்தியுள்ள ஏக்கர் கணக்கான இடமும் சொர்ண பூமி டா முட்டாள்”

“வாட்??!”

“ம்ம்..”

“இது மேகனுக்குத் தெரியாதுனு நினைக்குறியா?”, என்றதில் மனீஷ் சிரித்தான்.

“தெரிஞ்சுருக்கும்..”

“அப்புறம்?”

“அவனுக்குத் தெரிஞ்சிருந்தாலும் பரவாயில்லை. எனக்கு அந்த இடங்கள் வேணும்.”

“எப்படி? அவன் உன்னை உள்ளே விடுவானா?”, மனீஷின் முகத்தில் மீண்டும் புன்னகை வந்தது.

“விடாம இருக்குற மாதிரி தான் இப்போ வரைக்கும் நடந்து கிட்டு இருக்கான்.

இனிமேல் அவனால என்னை வெளியே வைக்க முடியாத மாதிரி பண்ணப் போறேன்.”,என்றவனின் முகத்தில் ஏளனச் சிரிப்பு.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

9 comments

Fathima.ar September 18, 2026 - 4:02 pm

Puthusu puthusaa aal vaaranga first epi la vantha spark ku innum subam Potala daaq

Awww..😍😍

ஸ்ரீ September 18, 2026 - 4:30 pm

😉😁😁😁

Kavi Natarajan September 18, 2026 - 4:38 pm

💞💞💞💞💞💞

Kiruthika M September 18, 2026 - 6:19 pm

Ivan enna Panna porano

Nice update sis.

Raji Vijay September 18, 2026 - 7:52 pm

Semma. Megan amma evlo theliva advise panninanga. Superb. Manish..vidiyal vachu yedhum plan panrano.or raghu vaa?

EswariSkumar September 19, 2026 - 7:39 am

இவனுக்குன்னு புதுசு புதுசா கிளம்பி வற்ரீங்களேடா…

srichitra September 19, 2026 - 11:39 am

Nice

Mathy September 19, 2026 - 11:54 am

நைஸ்…

suganyavel September 19, 2026 - 7:03 pm

Super💕

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode