741
“மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
மு.வ விளக்க உரை: மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.”
நாட்கள் யாருக்கும் நிற்காமல் நகர அன்றைய காலையே மஞ்சுநாத்தின் குடும்பத்தில் பிரச்சனையோடு தான் ஆரம்பித்திருந்தது.
மேகனும் விடியலும் தம்பிகளோடு ஹோட்டலில் சந்தித்த போது எடுத்த புகைப்படங்களில் அவர்கள் இருவரது புகைப்படம் மட்டும் சமூக வலைதளங்களில் பரப்பப் பட்டிருந்தது.
மேகன், தொழிலதிபர் மஞ்சுநாத் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ராதிகா அவர்களின் மகன், தென்னிந்தியாவின் ஃபேமஸ் மென்ட்டலிஸ்ட் V என்ற பெண்ணை காதலித்து வந்ததாகவும் குடும்ப பிரச்சனைகள் காரணமாக திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாத காரணத்தால் இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
Vயின் தந்தை இறந்ததற்கு மேகன் குடும்பமும் ஒரு காரணம் அது தான் இந்த பிரிவிற்கான காரணமாய் இருக்கலாம் என்றும் நெருங்கிய நட்பு வட்டங்கள் தெரிவிக்கின்றன.”, என்ற வீடியோக்களைப் பார்த்தவன் பார்த்தியை கோபமாய் முறைத்தான்..
“இன்னும் கொஞ்ச நேரத்தில் ஸ்ஸோர்ஸை கண்டு பிடிச்சுரலாம் சார்.”, என்ற நேரம் மஞ்சுநாத் மகனை அழைத்திருந்தார்.
இருந்த கடுப்பில் அவரது அறைக்குச் சென்றவன் அசிரத்தையாய் அவரைப் பார்த்து நிற்க,
“இதெல்லாம் நமக்குத் தேவையா மேகன்?”
“இது நான் உங்களைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வி டேட்.”
“நீ நடந்துக்குறது எதுவும் சரியா இல்லை. இந்தக் கல்யாணம் நடக்காதுனு அந்த பொண்ணோட அம்மாவே தெளிவா சொல்லிட்டாங்க. இன்னும் என்ன பண்ணனும்னு எதிர்பார்க்குற?
நான் போய் அவங்க வீட்டு வாசலில் மன்னிப்பு கேட்டு பொண்ணு கொடுக்க சொல்லணுமா?”
“இந்த கல்யாணம் வேண்டாம்னு முடிவு பண்ண வேண்டியது நாங்க இரண்டு பேரும்.
இப்போ கொடுத்துருக்குறது எல்லாருக்குமான ஹீலிங் டைம். அவ்வளவு தான்.”
“..”
“ஒரு வேளை விடியல் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னால் அப்போ நான் நீங்க பேசுறதை எல்லாம் காதில் வாங்கிக்குறேன்”
“!!”
“இப்போ இந்தப் பிரச்சனைக்கு என்ன பண்ணனுமோ அதை நான் பண்றேன்”, என்ற நேரம் அறைக் கதவைத் தட்டி விட்டு பார்த்திபன் உள்ளே வந்திருந்தான்.
அவன் கைப்பேசியில் எதையோ காட்ட அதைப் பார்த்த மேகனின் முகத்தில் அழகான புன்னகை.
விடியல் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர்கள் இருவருமாய் தனிமையில் இருந்த போது அவனது கை வளைவில் அமர்ந்த படி எடுத்த செல்பி புகைப்படத்தை பதிவிட்டு,
“Falling in love with same person in every situation is different kind of addiction”, என்று கேப்ஷன் போட்டு வைத்திருந்தாள்.
பொதுவாக அவள் சமூக வலைதளத்தில் இருந்து தள்ளியிருக்க நினைப்பவள். தனிப்பட்ட விவரங்களை கடைபரத்த நினைக்காதவள்.
அவள் பெயரைக் கூட உலகிற்குத் தெரியப் படுத்த விழையாத ஒருத்தியின் மில்லியன் பாலோவர்ஸ் இருக்கும் பொது பக்கத்தில் இதைப் பதிவிட்டிருப்பது அவனது பெயரைக் காப்பாற்ற அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்.
அதிலும் நிச்சயம் ராதிகாவின் பெயர் அடிபட்டதில் தான் அவள் இந்த முடிவை எடுத்திருப்பாள் என்பது மேகனிற்கு புரிந்தது.
தனது கைப்பேசியை எடுத்தவன் அவளது பதிவை ரீஷேர் செய்து லைக்கும் செய்து விட்டு இருந்த கோபங்கள் எல்லாம் வற்றிப் போனவனாய் வெளியேறி இருந்தான்.
வெகு நாட்களுக்குப் பிறகு அந்தப் பதிவைப் பார்த்து விட்டு சைத்ரா மேகனுக்கு அழைத்திருந்தாள்.
“சொல்லு சைத்து எப்படியிருக்க?”
“எப்படி ண்ணா எதுவுமே நடக்காத மாதிரி பேசுற?”
“எனக்கு இன்னும் உன் மேல கோவம் தான்..”
“நான் என்ன பண்ணட்டும்?”
“அண்ணா.. இது என்ன மாதிரியான காதல்?”, என்றதில் முகம் நிறைத்த புன்னகை மேகனிடத்தில்.
“நீங்க இரண்டு பேரும் பார்த்து பேசி அஞ்சு மாசம் கிட்ட ஆகப் போகுது.
ஆனாலும் எப்படி ண்ணா.. அண்ணிக்கு உங்க மேல கோவமே இல்லையா?”
“கோவத்தை விட எங்க காதல் எங்களுக்கு ரொம்ப முக்கியம் சைத்து..”
“அப்பறம் எதுக்குண்ணா இந்த கஷ்டமெல்லாம்?”
“சைத்து உன் கல்யாணத்தை நடத்த அப்பாகிட்ட சண்டை போட கூட நான் தயாரா இருந்தேன்.
அதில்லாம அம்மா தம்பினு எல்லாரும் உனக்கு சப்போர்ட் பண்ணாங்க. ஆனால் நீ ஏன் அப்பா சம்மதத்துக்காக காத்திருந்த?”
“!!”
“அவளுக்கு இருக்குற ஒரே உறவு அவங்க அம்மா. அவங்களை எதிர்த்தோ கஷ்டப்படுத்தியோ கல்யாணம் பண்ணினால் அது நான் பெருமை படுற விஷயம் கிடையாது.”
“!!”
“அவங்களோட இழப்புக்கு நாம மரியாதை கொடுக்கணும். அதை விட இறந்து போனவருக்கு நியாயம் பண்ணணும்னு நினைக்குறதில் தப்பு என்ன சொல்லு.”
“எல்லாமே சரி தான். ஆனால் அண்ணி பாவம் இல்லையா?”
“அவ படுற கஷ்டத்துக்கு எல்லாம் சேர்த்து வைச்சு என்கிட்ட வந்தப்பறம் வாழ்க்கை முழுசும் சந்தோஷத்தை மட்டும் தான் அனுபவிப்பா சைத்து.”
“..”
“மேகன் இஸ் நத்திங் வித் அவுட் ஹிஸ் விடியல். அது அவளுக்கு ரொம்ப நல்லாவே தெரியும்.”, என்றதில் பதில் பேசக் கூட தோன்றாமல் கைப்பேசியை காதில் வைத்திருந்தாள் சைத்ரா.
அங்கு அலுவலகத்தில் தனதறையில் அமர்ந்து கைப்பேசியைத் தான் பார்த்திருந்தாள் விடியல்.
இது யார் எதற்காக செய்த விஷயமாக இருந்தாலும் அதன் தீவிரத்தைக் குறைத்தே ஆக வேண்டும் என்பது மட்டும் தான் அவளின் நோக்கமாய் இருந்தது.
அதிலும் விஷயத்தை பலவாறாய் மாற்றிச் சித்தரித்து வாய்க்கு வந்த படி எல்லாம் இணையத்தில் பரப்பி விட்டதில் எவ்வித யோசனையுமின்றி புகைப்படத்தை பதிவேற்றியிருந்தாள்.
அதை மேகன் ரீஷேர் செய்திருப்பதாய் வந்த நோட்டிபிகேஷனைப் பார்த்தவளுக்கு பல மாதங்களுக்கு பின் மனதார புன்னகை எழுந்தது.
சரியாய் அந்த நேரம் விஜய் அவளது அறைக்குள் வர அவனுக்கும் அவளது புன்னகையைப் பார்த்து நிம்மதியாய் இருந்தது.
“இப்படி உங்களைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு விடியல்.”
“..”
“யாரு இதை பண்ணிருப்பா? அதுவும் இத்தனை மாசம் கழிச்சு..”
“இவர்கிட்ட பிரச்சனை பண்ண ஆளுக்கா பஞ்சம்..”, என்றவள் அவளையும் மீறி சிரித்திருந்தாள்.
“ஆனாலும் அவரை அசால்ட்டா டீல் பண்ற ஒரே ஆள் நீங்க தான்.”
“அவ்வளவு உரிமையை எனக்கு கொடுத்துருக்குறது அவர் தான் விஜி..”
“நீங்க ரெண்டு பேரும் சேரணும்னு உங்களை விட நாங்க எல்லாம் தான் ரொம்ப ஆவலா இருக்கும் விடியல்.”, என்றதற்கு புன்னகைத்திருந்தாள்.
ஒரு புறம் அவளது பதிவு வைரலாகி முந்தைய பேச்சுக்களெல்லாம் மறைந்திருக்க இங்கு மேகன் அதன் ஆணிவேரைக் கண்டு பிடித்திருந்தான்.
பார்த்தியின் மூலம் மனீஷிற்கு அழைத்தவன் அவன் அழைப்பை ஏற்றதும்,
“மேகன் ஹியர்..”
“அடடே மேகன்! பரவாயில்லையே என்னோட பேசுறதுக்கு எல்லாம் நேரமிருக்கா?”
“இன்னும் ஒரு தடவை உனக்குத் தேவையில்லாத விஷயத்தில் தலையிட்டனு வை..”
“அதனால தான இப்போ உங்களோட பேச வாய்ப்பு கிடைச்சுருக்கு மேகன் ஜி..”
“உங்க நல்லதுக்கு தான் சொல்றேன். இதோட நிறுத்திக்கோங்க..”
“அது கொஞ்சம் கஷ்டம் தான் மேகன்.”, என்றதில் இங்கு மேகன் தன்னிருக்கையில் சாய்ந்து அமர்ந்த வண்ணம்,
“ம்ம் அப்படியா சொல்றீங்க? சரி நான் கால் கட் பண்றேன். உங்ளுக்கு ஒரு கால் வரும் பேசிட்டு லைன்க்கு வாங்க.”, என்றவன் பதிலுக்குக் கூட காத்திராமல் அழைப்பைத் துண்டித்திருந்தான்.
“இவனுக்கு ஏன் பார்த்தி அடுத்தவன் சொத்து மேல இவ்வளவு குறி?”
“இன்னைக்கு தேதியில் பாதிக்கு மேல இப்படிதான் இருக்காங்க சார்.
அதுவும் அவன் பேக்ரவுண்ட்க்கு ஊரை அடிச்சு உலையில் போடுறது என்ன பெரிய விஷயமா சொல்லுங்க..”
“ம்ம் அதென்னவோ சரி தான். அப்பாவுக்குத் தப்பாம இருக்கான் போல மகன்..”
“ஆமா சார் அந்த மினிஸ்டர் செய்யாத அராஜகமே இல்லங்கிற அளவுக்கு லிஸ்ட் பெருசா போகுது.
அதிலேயும் பல தொழிலதிபர்களையே மிரட்டி பல சொத்தை வளைச்சு போட்டுருக்காங்க.
அப்படினால் பலமில்லாதவங்க நிலைமையை யோசிச்சு பாருங்க..
ஆனா அவன் உங்க பக்கம் வராம இருந்துருக்கலாம்.”, என்றதில் மேகன் பார்த்தியை அர்த்தமுள்ள பார்வை பார்த்தான்.
“அவங்க அப்பா அரசியலுக்கு வந்த காலத்தில் இருந்து பண்ணின அத்தனை தில்லு முள்ளுக்கும் ஆதாரம் எடுத்தாச்சு சார்.”, என்றதில் மேகனின் கண்களில் ஒருவித கர்வம் தெரிந்தது.
“வைச்சுரு கண்டிப்பா சீக்கிரமே யூஸ் ஆகும். இவனால வயசான காலத்துல அவங்க அப்பாவும் சேர்ந்து கம்பி எண்ணப் போறார்னு தான் தோணுது.”, என்றதில் பார்த்தி ஆமோதிப்பாய் தலையசைத்தான்.
வீட்டிற்கு வந்தவளுக்காக கோபமாய் காத்திருந்தார் வாசந்தி.
விடியல் அமைதியாய் அறைக்குள் செல்ல எத்தனிக்க வாசந்தியின் குரல் அவளை நிறுத்தியிருந்தது.
“காலையிலிருந்து போன் வந்த வண்ணமா இருக்கு. என்ன டி நினைச்சுட்டு இருக்க நீ?”
“…”
“உங்கப்பாவை விட உனக்கு அவங்க முக்கியமா போயிட்டாங்க இல்ல?”
“ம்மா!!”
“அப்படி என்ன அவனே தான் வேணும்னு நிக்குற? சுய மரியாதையை விட உனக்கு அவங்க காசு பணம் பெருசா போச்சா?”, என்றவர் கோவத்தில் வார்த்தைகளை விட்டிருந்தார்.
அன்னையை அடிபட்ட பார்வை பார்த்தவள் அப்போதும் வாயே திறக்கவில்லை.
“உங்கப்பாக்கும் இந்த கல்யாணத்தில் விருப்பமே இருந்திருக்காது.
உன்னோட விருப்பத்துக்காக சம்மதிச்சு அதையே மனசுக்குள்ளே போட்டு கஷ்டப்பட்டுருக்கார்.
இல்லைனால் இந்நேரம் உயிரோட இருந்துருப்பாரு டி.”, என்றவர் அழ ஆரம்பித்திருந்தார்.
அமைதியாய் தாய் தந்தை அறைக்குள் சென்றவள் ஒரு கோப்பை எடுத்து வந்து தாயின் அருகில் அமர்ந்தாள்.
“அப்பா இந்த வீட்டைத் தவிர எல்லாத்தையும் என் பேரில் தான் வைச்சுருந்தார் மா..”
“!!”
“நீங்க மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்ச உடனேயே இதைப் பண்ணிருக்கார்.
அதாவது அந்த ராஜை எனக்கு கல்யாணம் பண்ணனும்னு நினைச்ச பிறகு.. சரி தான? உனக்கும் தெரியும் தான?”
“..”
“சொல்லு தெரியுமா தெரியாதா?”
“தெரியும்..”
“நீ பாக்குற எந்த மாப்பிள்ளையாவது இதை வேண்டாம்னு சொல்லிருப்பான்னு உனக்குத் தோணுதா?”
“..”
“சோ என் கல்யாணத்துக்குப் பிறகு எந்த நேரமும் நீங்க எதுவுமே இல்லாம நிக்குற நிலைமை தாராளமா வந்துருக்கும்.”
“..”
“இந்த வீடும் உங்க ரெண்டு பேர் பேரில் இருக்குற சில லட்சங்களும் மட்டுமே போதும்னு உங்களுக்குத் தோணிருக்கு ஏன்னால் உங்க பொண்ணு மேல அவ்வளவு பாசம்..”
“ஆமா டி போற இடத்தில் நீ எந்த கஷ்டமும் படாம சந்தோஷமா வாழணும்னு பெத்தவங்களான எங்களுக்கு இருக்காதா?”
“கரெக்ட் தான்..”
“..”
“நான் பதினைஞ்சு நாளுக்குப் பிறகு ஆபீஸ் போனப்போ என் டேபிளில் ஒரு ஃபைலை விஜய் கொண்டு வந்து வைச்சார்.”
“..”
“அதில் என் பேரில் இருந்த எல்லாத்தையும் உன் பேருக்கு மாத்துறதுக்கான டாக்குமென்ட்ஸ் இருந்தது.
அதைப் படிச்ச பிறகு தான் இப்போ நான் பேசின எல்லாமே எனக்குத் தெரியும்.”
“எந்த யோசனையும் இல்லாம அதில் கையெழுத்துப் போட்டு கொடுத்துட்டேன்.
விஜய் அதை யார்கிட்ட கொண்டு போய் சேர்த்துருப்பார்னு உனக்கு புரியுது தான?”
“!!!”
“இப்போ உன் கையில் இருக்குற டாக்குமெண்ட் எல்லாமே உன் பேரில் இருக்குறதுக்கான பத்திரம் தான்.”
“இதைப் பத்தி கண்டிப்பா அப்பா மேகன்கிட்ட பேசிருக்கார். அதுக்கு மேகனோட பதில் தான் இதை உன்கிட்டேயே திரும்பக் கொடுக்குறது.”
“!!”
“காசு பணத்தையெல்லாம் தாண்டி சில விஷயங்கள் எங்களுக்குள்ளே இருக்கு அதை ஒரு அம்மாவா உன்கிட்ட உனக்கு புரியுற மாதிரி என்னால சொல்ல முடியுமானு தெரியலை.”
“!!”
“என்னை நீ எவ்வளவு வேணாலும் திட்டிக்கோ ஆனால் என் காதலை கொச்சப் படுத்தாத மா ப்ளீஸ்..”, என்றவள் எவ்வித ஆர்பாட்டமும் இன்றி நகர்ந்திருந்தாள்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
8 comments
Nice
Convincing love
Nice update sis
So sweet Megan and vidiyal. Evlo understanding. Pesama/ paarkaama irundhalum
Thier understanding ❤️
Very nice. பாவம் விடியல். அம்மாவால் நிறைய வருத்தமடைகிறாள்
💞💞💞💞💞💞
நைஸ் ❤️
Nice👍