777
“செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி
மு.வ விளக்கம்: ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.”
இளங்கோவும் வாசந்தியும் வீட்டிற்குச் சென்றிருக்க விஜயின் மூலம் தந்தை மேகனின் வீட்டிற்குச் சென்றது தெரிந்தவள் பார்த்திக்கு அழைத்து மேகன் எங்கிருக்கிறான் என்று விசரித்ததோடு அவனை உருட்டி மிரட்டி அங்கு நடந்ததையும் கேட்டு அறிந்திருந்தாள்.
கோவம் தலைக்கேற மேகனின் அலுவலகத்திற்குச் சென்றவள் மேகனைச் சந்திக்க வேண்டும் என்று கூற ரிசெப்ஷனில் இருந்த பெண்ணா அப்பாயிண்மெண்ட் உள்ளதா என்று கேட்க இன்னும் கடுப்பானவளாய் மேகனுக்கே அழைத்திருந்தாள்.
“சொல்லு..”
“உன்னைப் பார்க்கணும். உன் ரூம் வாசல்ல நிக்குறேன். வரலமா கூடாதா?”, என்றதில் அந்தப் பெண்ணோ அரண்டு போனாள்.
பார்த்தி வேகமாய் வந்து கதவைத் திறக்க எதையும் கவனிக்காதவளாய்,
“யாரைக் கேட்டு அப்பா அம்மவை வீட்டுக்கு வர சொன்னாங்க?”, என்றவள் கத்த அங்கிருந்த சுகன் ரகுவந்த் சைதன்யா மூவரும் அதிர்ந்து இருக்கையில் இருந்து எழுந்திருந்தனர்.
தொழிலிற்கு வந்த பின் தங்களது அண்ணனை எதிர்த்து இப்படி ஒரு குரல் கேட்டதே இல்லை.
அப்படியிருக்க இதற்கு அண்ணனின் கோபம் எப்படியிருக்குமோ என்று விழித்து நின்றனர்.
“நீ முதல்ல உட்கார்.”, என்றவனின் தொனியே அவனது உள்ளடக்கிய கோவத்தைக் காட்ட தம்பிகள் மூவரும் உடனே அங்கிருந்து வெளியேறி இருந்தனர்.
“சொல்லுங்க வேணும்னே கூப்பிட்டு வைச்சு அவமானப் படுத்துறீங்களா?”
“மைண்ட் யுவர் வேர்ட்ஸ் சின்னு.. எனக்கும் அவங்க வர்றாங்கனு தெரியாது.”
“இதுக்கு தான் நான் தள்ளி தள்ளி போனேன். கேட்டீங்களா? இப்போ அப்பாவை நான் எப்படி பேஸ் பண்ணுவேன்.”
“கத்துறதை நிறுத்து டி முதல்ல. ஆமா நான் தான் உன்னை வற்புறுத்தி காதலிக்க வைச்சேன்.
இப்போ என்ன பண்ணனும் அதுக்கு?”, என்றவன் அவளுக்கு மிச்சமாய் கத்தியதில் அதிர்ந்து விழித்திருந்தாள் விடியல்.
“சொல்லு என்ன பண்ணணும். அப்படியே உன்னை விட்டுட்டு போயிடவா? இல்ல போய் வேற எவனையாவது கல்யாணம் பண்ணிக்கோனு ஆசீர்வாதம் பண்ணவா??”, என்றதில் விடியல் அழுதிருந்தாள்.
நடந்ததெல்லாம் அவளை ஏற்கனவே பலகீனமாக்கி இருக்க இப்போது மேகனின் கோபம் அவளை இன்னுமாய் படுத்தியது.
தலை குனிந்து கொண்டவள் விழி மூடி கண்ணீரை உள்ளிழுக்க முயன்ற நேரம் மேகன் அவள் முன் அமர்ந்து இறுக அணைத்திருந்தான்.
“அழாத சின்னு..”
“…”
“சாரி டி..”, என்றதில் அவனை இறுக அணைத்துக் கொண்டு விசும்பினாள் விடியல்.
“ப்ச்ச்.. நீ அழுதா எனக்கு சண்டை போடவே தோணலை. கஷ்டமா இருக்கு சின்னு. ஐ அம் சாரி..”, என்றதில் நிமிர்ந்தவள் கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டாள்.
“நிஜமாவே எனக்கு விஷயம் தெரியாது. நம்பு டி..”
“உன்னை நம்பாம நான் எங்கே போக?”, என்றதில் மெலிதாய் சிரித்தவன் அவளது உச்சந்தலையில் முத்தம் வைத்தான்.
“நீ போய் அங்கிள் ஆன்ட்டிகிட்ட பேசு. திரும்பவும் இப்படி நடக்காது அதுக்கு நான் பொறுப்பு.
ம்ம்?”, என்றதற்கு ஆமோதிப்பாய் தலையசைத்தவள் இருக்கையில் இருந்து எழுந்து அவனை ஒரு முறை இறுக அணைத்து நகர்ந்திருந்தாள்.
தம்பிகள் மூவரும் வெளியில் நின்றிருக்க அறையை விட்டு வந்தவளுக்கு அவர்களை எதிர் கொள்வதில் சங்கடமாய் இருந்தது.
“அண்ணி டேக் கேர்..”, என்று சைதன்யா கூறியதில் மெலிதாய் மூவருக்கும் பொதுவான புன்னகையை பதிலளித்தவள் அங்கிருந்து கிளம்பியிருந்தாள்.
வீட்டு வாசலில் இருந்து உள்ளே செல்வதற்குள் மனம் பாடாய் பட்டது விடியலுக்கு. வாசந்தி உணவு மேசையில் அமர்ந்திருக்க இளங்கோவை காணாமல் வேகமாய் அவர் அறைக்குச் செல்ல நாற்காலியில் அமர்ந்து கட்டிலில் கால் நீட்டிய படி இரு விரல்களை நெற்றிக் கொடுத்து அமர்ந்திருந்தார்.
“ப்பா..”, என்றவள் அழுகையை அடக்க முடியாமல் அவரருகில் சென்று மடியில் தலை சாய்த்திருந்தாள்.
“ஹே சின்னு..”
“ப்பா என்கிட்ட சொல்லிருக்கலாமே ப்பா.. ஏன் போனீங்க..”
“எதுக்கு இப்படி அழற. ஒண்ணுமில்ல உட்காரு..வா..”, என்றவர் காலை மடக்கி மகளை கட்டிலில் அமர்த்தினார்.
வாசந்தி அமைதியாய் அறை வாசலில் நின்றிருந்தார்.
“ப்பா.. அவருக்கும் உங்களை வர சொன்னது தெரியாதாம்.. தெரிஞ்சுருந்தா..”
“மேகன் ரொம்ப நல்ல பையன் சின்னு..”, என்றதில் தந்தையை ஏறிட்டாள்.
“உன் மேல உயிரையே வைச்சுருக்கார். என்னை விட உன்னை ரொம்ப நல்லா பார்த்துக்குவார்.”
“ப்பா..”
“அன்னைக்கு நான் அவரைப் பார்த்து பேசின பிறகே இதெல்லாம் எனக்கு புரிஞ்சுடுச்சு.
ஆனால் இன்னைக்கு அவங்க வீட்டு மனுஷங்களையே எதிர்த்து பேசினது உனக்காக மட்டும் தான்னு நல்லாவே புரிஞ்சுது.”
“அப்பாக்கு உன் சந்தோஷம் ரொம்ப முக்கியம் சின்னு. இன்னைக்கு நடந்ததெல்லாம் ஒரு விஷயமே இல்ல.”
“நீங்க சொல்ற எல்லாம் சரி தான்..”, என்றதில் தந்தையும் மகளும் வாசந்தியை ஏறிட்டனர்.
“ஆனால் கல்யாணம்ங்கிறது புருஷன் மட்டும் இல்லையே. அதிலேயும் அவங்க தங்கச்சிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறவரா இருந்தா அவங்களைப் பேச விட்டு வேடிக்கை பார்த்துப்பார்.”
“…”
“நீங்க சொன்னதெல்லாமே சரியா இருக்கட்டும். ஆனால் என் பொண்ணு வாழ போற வீட்டில் எல்லாரோட விருப்பமும் எனக்கு முக்கியம்.”, என்றவர் அங்கிருந்துச் சென்றிருந்தார். இளங்கோ மெதுவாய் மகளின் தலையை வருடிய படி,
“அவளுக்கும் விருப்பம் தான் ஆனாலும் பயம் நியாயம் தான. எல்லாம் சீக்கிரமே சரியாயிடும் சின்னு. நீ வருத்தப்படாம இரு.”, என்று மகளுக்கு சமாதானம் கூறி அனுப்பி வைத்தார்.
இரவு படுத்தவருக்கு அன்று மேகனுடன் பேசியதெல்லாம் நினைவில் வந்தது.
“சொல்லுங்க அங்கிள் உங்களுக்கு என்ன தெரிஞ்சுக்கணுமோ கேளுங்க.”, பவ்யமோ பகட்டோ இல்லாத ஒருவித திடமான குரலில் தான் மேகன் பேச்சை ஆரம்பித்தான்.
“எனக்கு என் பொண்ணு தான் உயிர். அவளோட சந்தோஷத்தைத் தாண்டி எதுவும் முக்கியமில்லை. என்னோட சொத்து மொத்ததுக்கும் அவ தான் ஒரே வாரிசு.”
“..”
“எங்களுக்குனு அந்த வீட்டைத் தவிர எல்லாத்தையும் அவளுக்கு கல்யாணத்துக்காக நான் தர தயாரா இருக்கேன்.”
“அங்கிள் நாம பிசினஸ் பேசுறோமா?”
“!!”
“அப்படியிருந்தா நீங்க சொல்ற எல்லாத்தோட மதிப்பையும் சேர்த்து பத்து என்ன நூறு மடங்கா நான் விடியலுக்கு கொடுக்குறேன். எங்க கல்யாணத்துக்காக..”
“!!”
“நீங்க என்கிட்ட நேரடியாவே எதையும் சொல்லலாம்..”
“அது.. காசு பணத்தில் நாங்க உங்களவு இல்லாம இருக்கலாம். அதைக் காரணமா வைச்சு என் பொண்ணுக்கு எதிர் காலத்தில் எந்தப் பிரச்சனையும் வராதுனு எனக்கு உத்திரவாதம் வேணும்.”
“..”
“அதுக்காக தான் எல்லாத்தையும் கல்யாணத்துக்கே கூட கொடுக்குறேன்னு சொல்றேன். அவளுக்கு வேற மாப்பிள்ளைங்கிறது எல்லாம் இந்த ஜென்மத்தில் வாய்ப்பில்ல.
ஏன்னால் என் பொண்ணு அந்தளவு உங்க மேல அன்பு வைச்சுருக்கா. அவ மனசை மாத்தவோ உங்களை பிடிக்கலைனு தள்ளி வைக்கவோ எனக்கு விருப்பம் இல்ல அவசியமும் இல்ல.
எனக்குத் தேவை என் பொண்ணோட சந்தோஷமான வாழ்க்கைகான உத்திரவாதம் அவ்வளவு தான்.” என்றதில் புன்னகையோடு எழுந்தவன் அவரருகில் வந்து நின்றான்.
சட்டென அவரது பாதம் பணிந்து நிமிர்ந்ததில் மனிதர் ஒரு நொடி பதறிப் போனார்.
“சார் என்ன பண்ணிட்டீங்க?!”, என்றவர் இருக்கையில் இருந்து எழுந்தே விட்டிருந்தார்.
“என் வாழ்க்கையில் எங்க அம்மா அப்பாவைத் தாண்டி நான் யார்கிட்டேயும் ஆசீர்வாதம் வாங்க நினைச்சதில்ல. இப்படி கால்ல விழுந்ததும் இல்ல.
பட் என் விடியலோட அப்பா காலில் விழுறதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. இது தான் என் காதல். இந்த உலகத்தில் விடியலா வேற எதுவுமானு கேட்டால் எப்பவும் என் சாய்ஸ் விடியல் மட்டும் தான்.”
“!!”
“இதுக்கு மேல எனக்கு புரிய வைக்கத் தெரியாது. நீங்க சொல்லுங்க.. வேற என்ன பண்ணட்டும்?”
“சார்..”
“இன்னுமும் அதில் மாற்றமில்லையா?”
“மருமகனைப் பேர் சொல்லி கூப்பிட்டா நல்லாயிருக்காதே அதான் எப்படி கூப்பிடனு தெரியலை..”, என்றதில் மேகனிடத்தில் விரிந்த புன்னகை.
“ஆனா உங்க வீட்டில் எப்படி எடுத்துப்பாங்க?”
“அப்பாவைத் தவிர எல்லாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்ல. சீக்கிரமே நான் அப்பாகிட்டேயும் பேசிட்டு சொல்றேன்.”, என்றதற்கு தலையசைத்தவர் மேலும் சில விஷயங்களைப் பேசி விட்டு கிளம்பியிருந்தார்.
இப்போது அதை நினைத்தவருக்கு முகத்தில் புன்னகை தோன்ற அப்படியே உறக்கத்திற்குச் சென்றவர் காலையில் கண் விழித்திருக்கவில்லை.
இரவு வெகு நேரம் தூங்காமல் இருந்த விடியல் பின்னிரவிற்கு மேல் தான் கண்ணயர்ந்திருக்க அறைக் கதவு தட்டும் ஓசை லேசாய் காதில் விழ கடினப்பட்டு கண்களைத் திறக்க எத்தனித்தாள்.
கதவு தட்டும் ஓசையோடு வாசந்தியின் குரலும் கேட்க வேகமாய் எழுந்தவள் கதவைத் திறக்க விழி நிறைத்த நீரோடு வாசந்தி நின்றிருந்தார்.
“ம்மா.. என்னம்மா..”
“சின்னு.. அப்.. அப்பா.. எழுந்துக்க மாட்றாரு..”, என்றதில் அன்னையைத் தாண்டி ஓடியிருந்தாள் விடியல்.
எவ்வித எதிர்வினையும் இல்லாத அமைதியான தந்தையின் முகத்தைப் பார்த்தவளுக்கு கையெல்லாம் நடுங்கியது.
“ப்பா..”
“ப்பா.. என்னை பாருங்க..”, என்றவள் அவசரமாய் மேகனுக்கு அழைக்க தூக்கத்தில் இருந்தவன் தன்னவளின் குரலில் அழுந்தமர்ந்திருந்தான்.
“மேகன்.. அப்பா..”
“சின்னு என்ன டி?”
“மேகன் அப்பா..”, என்றவள் அதையே கூறிய படி அழுது கொண்டிருக்க அவளின் பாதுகாப்பிற்கு இருக்கும் ஆட்களுக்கு அழைத்து வீட்டிற்குள் செல்லுமாறு கூறியிருந்தான்.
அவர்கள் இருவரும் விடாமல் அழைப்பு மணியை அழுத்த வாசந்தி பதட்டமாய் வந்து கதவைத் திறந்ததும் வேகமாய் உள்ளே சென்றவர்கள் இளங்கோவின் நிலையுணர்ந்து ஒருவர் மருத்துவரை அழைக்க ஒருவர் CPR கொடுக்க முயற்சி செய்தார்.
மருத்துவர் வந்து இளங்கோவின் இறப்பை உறுதி செய்ய தாயும் மகளும் கதறி விட்டிருந்தனர்.
முக்கால் மணி நேரத்தில் அங்கு இருந்த மேகனுக்கு வாசலிலேயே கேட்டது இரு பெண்களின் அழுகுரல் தான்.
பார்த்தியும் அவனும் உள்ளே செல்ல விஜயும் விஷயமறிந்து ஓடி வந்திருந்தான்.
மேகன் விடியலின் அருகில் வந்து தோள் பற்ற பெண்ணவளோ அவனை அணைத்துக் கொண்டு கதறித் துடித்திருந்தாள்.
“சின்னு..”
“இனி அப்பா என்னை அப்படி கூப்பிட மாட்டார் மேகன். அவரை எழுந்து வர சொல்லு மேகன். அப்பா வேணும்..”, என்று குழந்தையாய் கதறுபவளைத் தேற்றும் வழி தான் மேகனுக்குத் தெரியாமல் போயிருந்தது.
விஜய் ஒரு புறம் உடைந்தழ பார்த்தி தான் அவனை அதட்டி மீண்டு வர வைக்க முயற்சி செய்தான்.
“விஜி டேய் இரண்டு லேடிஸ் தனியா என்ன பண்ணுவாங்க.. நிலைமையை புரிஞ்சுக்கோ.. யாருக்கு எல்லாம் தகவல் சொல்லணும் என்னனு பாரு டா..”
“சார்.. நான் அநாதை பார்த்தி.. ஆனால் சார்கிட்ட வேலைக்கு வந்த அப்பறம் அதை நான் நினைச்சு கூட பார்த்ததில்ல தெரியுமா..
எனக்கு அப்பா.. மாதிரி..”, என்று அவன் ஒரு புறம் பிதற்ற அதற்குள் வாசந்தி அழுதழுது மூர்ச்சையாகி இருந்தார்.
அதன் பின்பு தான் நிலைமை உணர்ந்தவன் வேக வேகமாய் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்ய ஆரம்பித்திருந்தான்.
விடியல் மேகனின் கைப் பிடிக்குள் இருந்து வெளி வரவே இல்லை. அவளைப் பார்த்தவனின் பார்வை அடுத்ததாய் இளங்கோவின் மீது பதிய ஆழ்மூச்செடுத்து விழிகளை மூடிக் கொண்டான்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
9 comments
Ethukku ippo ilango ku sangu
😭🤧
😭😭😭😭😭
நல்லவன் கையில் பொண்ணை ஒப்படைச்ச நிம்மதி… நிரந்தரமா உறங்கிட்டார்…
இளங்கோ நல்ல அப்பா.. இப்போ ஏன் அவரை காலி பண்ணிட்டிங்க… ☹️☹️
Nice update sis
Elango iranthiruka vendam. Mama & athai kitta fight ennachu? Mamanar kitta peainadha ninachu, rendu side um problem solve pannitu poi irukalaaam
Unexpected
So sad.
Aiyayo