குறள் 61: பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற

மு.வ விளக்க உரை: பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.

நேரமாக ஆக ஒவ்வொருவராய் வர ஆரம்பித்திருந்தனர். பார்த்தி நிலையுணர்ந்து மேகனை அங்கிருந்து கிளம்புமாறு கூற அவன் பார்த்த பார்வையில் அதன் பின் அவன் அருகிலேயே வரத் துணியவில்லை.

வந்தவர்களில் பாதி பேருக்கு இளங்கோவின் மரணத்தை விட விடியலின் கைப்பற்றிய படி அமர்ந்திருந்தவன் தான் அதிர்ச்சியைக் கொடுத்தான்.

யாராக இருக்கும் என்று சிலர், மேகன் இங்கு எப்படி என்று சிலர், மாலைக்குள் அனைத்தும் முடிந்திருக்க தந்தையை விடாமல் அவரை அணைத்து கொண்டு அழுதவளின் முகம் மேகனின் இறுதி மூச்சு வரை  நிச்சயம் மறக்காது.

அதற்கு மேல் வீட்டு மனிதர்கள் மட்டுமே இருப்பதால் அடி வாங்கினாலும் பரவாயில்லை என்று தான் பார்த்திபன் மேகனை அங்கிருந்து அழைத்துச் சென்றிருந்தான்.

காலையிலிருந்து ஒன்றும் உண்ணாமல் தேவையான தண்ணீர் கூட குடிக்காமல் இருந்தவனை பார்த்திபன் தலையைத் திருப்பி பார்த்த படியே முன்னிருக்கையில் அமர்ந்திருந்தான்.

“நல்ல மனுஷன் பார்த்தி..”, என்றவன் விழி மூடி இருக்கையில் பின் சாய்ந்து அமர்ந்திருந்தான்.

“ஆமா சார். பிசினஸ் கூட்டமே அவ்வளவு பேர் வந்துருந்தாங்க. அந்த விஜய் இப்படி அழுவான்னு நான் நினைக்கவே இல்ல.”

“அப்பறமா அவனுக்கு போன் பண்ணி எப்படியிருக்கான்னு கேட்டுக்கோ. இன்னைக்கு அவன் இல்லைனால் எதுவுமே நடந்துருக்காது.”

“உண்மை தான் சார். இப்பவும் இப்படி மனுஷங்க எல்லாம் இருக்காங்களானு ஆச்சரியமா இருந்தது எனக்கு.”

“யூ நோ வாட்..”

“??”

“அவரோட ஷேர்ஸில் சிலதை விஜய் பேரில் எழுதிருக்கார்.”

“என்ன சார் சொல்றீங்க?”

“முதன் முதலா விடியலைப் பத்தி நீ கொடுத்த டீடெயில்ஸ்ல அதுவும் இருந்தது.

அதனாலேயே உண்மையில் விஜய் அந்தக் குடும்பத்துக்கு யாருனு நான் தெரிஞ்சுக்க நினைச்சேன்.”

“…”

“என்கிட்ட பேசும் போது சொன்னார் நாங்க இருக்குற வீட்டைத் தவிர எல்லாத்தையுமே என் பொண்ணுக்கு கொடுத்துறேன்னு.

அவ மொத்தமாவே டேட்ஸ் பிரின்ஸஸ் டா. என்ன பண்ணுவானு எனக்குத் தெரியலை.”, என்றவன் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டான்.

அதற்குள் வீட்டு வாசலில் கார் நிற்க அத்தனை நேரம் இருந்த வருத்தமெல்லாம் மறைந்து உடல் இறுக காரில் இருந்து இறங்கினான்.

மொத்தக் குடும்பமும் வரவேற்பறையில் அவனுக்காக காத்திருக்க ராதிகா வாசலிலேயே நின்று அவனை பின்பக்கம் சென்று குளித்து வருமாறு கூறினார்.

குளித்து உள்ளே வந்தவன் தந்தையைத் தான் பார்த்திருந்தான். நிலைமை தெரிந்ததும் அவனது சித்தப்பா கூட வீட்டிற்கு வந்து விட்டிருந்தார்.

“ஒரு வகையில் நாமளும் காரணம் இல்ல டேட்?”, என்றதில் அனைவருக்குமே உள்ளுக்குள் உதறல் தான். ராதிகாவைத் தவிர யாரும் அவனருகில் செல்லக் கூடத் தயாராய் இல்லை.

“பேசுங்க டேட். நேத்து என்ன பேச்செல்லாம் அவர் கேட்டார். இப்போ பேசுங்க..”

“மேக்.. இது தற்செயலா நடந்த ஒரு விஷயம்..”

“இருக்கலாம். ஆனால் நீங்க பேசினதுக்கு அவர் மனசு வருத்தப்படாம இருந்துருப்பாரா?”

“…”

“என்னை மதிச்சுருந்தா நீங்க என்கிட்ட சொல்லிருப்பீங்க ப்பா..”

“டேய் கண்ணா.. நீ டயர்டா இருக்க அப்பறம் பேசலாம் டா..”, என்ற சித்தப்பாவைப் பார்த்தவன்,

“உங்க தங்கச்சியும் அவங்க புருஷனும் இனி என் கண்ணில் படக் கூடாது.”, என்றதில் மஞ்சுநாத் கத்தியிருந்தார்.

“யாரோ ஒருத்தருக்காக என் தங்கச்சியை இப்படி பேசுவியா நீ?”

“அவங்களை நான் பார்க்க கூடாது சித்தப்பா. அவங்க பேசினதெல்லாம் கேட்டால் நீங்க இதை விட மோசமான முடிவைக் கூட எடுப்பீங்க.”, என்றவன் வேகமாய் மாடிக்குச் செல்ல தம்பிகள் அண்ணனின் பின்னே சென்றனர்.

“ண்ணா.. அண்ணி எப்படியிருக்காங்க?”

“இருக்கா.. அவ்வளவு தான்.”

“நாங்க நாளைக்கு பார்க்க போலாம்னு இருக்கோம்.”, என்றதில் அமைதியாய் தலையசைத்து அறைக்குள் நுழைந்திருந்தான் மேகன்.

மறுநாள் காலையிலேயே விடியலின் வீட்டிற்கு கிளம்பி நின்றவனை என்ன கூறித் தடுப்பது என்று பார்த்திபனுக்குத் தெரியவில்லை.

பத்தாததுக்கு அண்ணன் தம்பி நால்வருமாய் வந்ததில் தலையில் கை வைத்து விட்டிருந்தான்.

“எர்லி மார்னிங் தான பார்த்தி ஒண்ணும் பிரச்சனை இல்ல. வாங்க..”, என்று அனைவருமாய் கிளம்ப இவர்கள் அங்கு சென்று இறங்கிய நேரம் யுவனும் சைத்ராவும் காத்திருந்தனர்.

இருவரும் மேகனைப் பக்கவாட்டில் அணைத்து விடுவிக்க அனைவருமாய் உள்ளே நுழைந்ததில் உறவினர் சென்று விடியலையும் வாசந்தியையும் அழைத்து வந்தார்.

சைத்ரா விடியலை அணைத்துக் கொள்ள ஏங்கி ஏங்கி அழுதவளை யாருக்கும் சமாதானப் படுத்த முடியாமல் போயிருந்தது.

ஆண்கள் அனைவருமாய் அவளைச் சுற்றி அமர்ந்த படி பலவிதமாய் ஆறுதல் கூறினர்.

இருந்த கவலையையும் மீறி வாசந்தி நடப்பதனைத்தையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தார்.

சில நிமிடங்களுக்குப் பின் தள்ளி நின்றிருந்த மேகனுக்கு அருகில் வந்தவர் தயக்கமாய் நிற்க அவர் இருந்த கோலம் மேகனை உள்ளுக்குள் வதைத்தது.

“நடந்ததெல்லாத்தையும் தாண்டி இந்த கல்யாணம் இப்போ அவசியமா?”, என்றவருக்கு எதிரில் நிற்பவன் மேகன் மஞ்சுநாத்தாகவோ பில்லினியராகவோ தெரியவில்லை.

கணவனை இழந்த ஆற்றாமையில் பேசும் சராசரி பெண்ணாய் அவன் முன் நின்றார்.

“என் புருஷன் நேத்து மொத்தமா மனசு நொந்து போயிருந்தார். எனக்கு நிச்சயமா தெரியும்.”

“….”

“பணத்துக்கும் படிப்புக்கும் அடிப்படை குணத்துக்கும் சம்மந்தம் இல்லைனு நேத்து தான் புரிஞ்சுகிட்டேன்.”, என்றதில் விழிகளை மூடி தன்னைத் தானே நிதானப் படுத்தினான் மேகன்.

“இது மாதிரி நாளைக்கு என் பொண்ணை யாரும் எதுவும் பேச மாட்டாங்கனு என்ன நிச்சயம்?”

…”

“எனக்கு இப்போதைக்கு இருக்குற ஒரே உறவு என் பொண்ணு மட்டும் தான்.”, என்றவர் உதடு துடிக்க நின்றதில் விடியல் வேகமாய் வந்து அவரை அணைத்திருந்தாள்.

“ம்மா..”

“அம்மாக்கு நீயாவது வேணும் சின்னு..”

“ம்மா.. ஏன் இப்படியெல்லாம் பேசுற..”

“நமக்கு இவங்க பணம் ஸ்டேட்டஸ் கௌரவம் எதுவும் வேண்டாம் டி. நிம்மதியா நம்ம வாழ்க்கையை நாம வாழணும்.”

“ம்மா..”

“இல்ல உனக்கு அவங்க தான் முக்கியம்னு தோணினால் இப்போவே கிளம்பி போயிடு.”

“ம்மா என்ன பேசுற நீ..”

“என் புருஷன் உயிர் போக அங்கே நடந்ததும் ஒரு காரணம் டி.  நீ வாழப் போற அந்த வீட்டுக்கு என்னால எப்படி வர முடியும்?”

“!!”

“சாகுற வரை அங்கே நடந்தது எனக்கு மறக்காது.”

“நான் உன்னை கட்டாயப்படுத்தல உன் முடிவு என்னவோ.. எதுவாயிருந்தாலும் எனக்குப் பிரச்சனையில்ல..”, என்றதில் விடியல் யோசிக்காமல் தாயை சமாதானப் படுத்தும் நோக்கில்,

“ம்மா எனக்கு நீ தான் முக்கியம். ஏன் மா இப்படி பேசுற. உன்னை விட கல்யாணம் எனக்கு முக்கியமா போயிடுச்சா..”, என்றதில் மேகனின் பார்வை விடியலை ஊடுருவியது.

தந்தை இறந்து விட்டார் தனக்கான ஒரே சொந்தம் தாய். அவரை புண்படுத்தி என்ன சாதிக்க முடியும் என்ற எண்ணத்தில் தான் விடியல் பேசியது.

ஆனால் மேகனுக்கோ தன்னை சட்டென அவள் விலக்கி விட்டது போல் தோன்றி விட்டது.

விடியலின் வார்த்தைகளில் மேகனுக்கு கோபம் வரவில்லை. அதைவிட, இளங்கோவின் முகம் தான் நினைவுக்கு வந்தது.

“என் பொண்ணோட சந்தோஷமான வாழ்க்கைக்கு உத்தரவாதம்…”, அந்த ஒரு வார்த்தை அவனை அங்கேயே நிறுத்தியது.

அந்த நொடியில் விடியலுக்கு தாயைச் சமாதானப்படுத்துவதே பிரதானமாய் இருக்க மேகனைப் பற்றியோ மேகனுக்காகவோ பேச வேண்டியதைப் பற்றி அவள் யோசித்திருக்கவில்லை.

மேகனுக்கும் அவள் நிலை நன்றாகவே புரிகிறது இருந்தும் அவளிடமிருந்து தனக்காக ஒரு வார்த்தை வந்து விடாதா?

அப்படியென்றால் அவள் மனதில் தன் வீட்டிற்கு வந்தது தான் இளங்கோவின் மரணத்திற்கு காரணம் என்ற எண்ணம் இருக்கிறதா என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை.

“ஃபைன் ஆன்ட்டி”, என்ற மேகனின் குரலில் அனைவரின் பார்வையும் அவன்புறம் திரும்பியிருக்க,

“இனி நான் உங்க பொண்ணை தொந்தரவு பண்ண மாட்டேன்.”, என்றதில் தம்பிகளும் தங்கையும் அண்ணனை நெருங்கியிருந்தனர்.

“ண்ணா..”

“ஷட் அப் கைஸ். நீங்க வந்த வேலை முடிஞ்சுது கிளம்பலாம்.”, என்றவனின் குரல் பேதத்தில் தான் விடியலுக்கு அவனின் மனவோட்டம் புரிந்து அவசரமாய்,

“மேகன்..”

“இப்போ எதுவும் பேச வேண்டாம். உங்கம்மா நிலைமையில் இருந்து பார்த்தா அவங்க சொல்றது சரி தான்.

அவங்களைப் பார்த்துக்கோ. நீயும் தைரியமா இரு.”, என்றவன் வாசலுக்குச் செல்ல பின்னால் ஓடியவள் அவனது கரம் பற்றினாள்.

“நீயும் போனால் நான் செத்துருவேன் மேகன்..”, என்றதில் அவளது கழுத்தை நெருக்கியிருந்தான்.

“என்னை மீறி உன்னைத் தொட அந்த சாவுக்கு கூட தைரியம் கிடையாது டி.”

“..”

“என் மேகன் என்னை அப்படியெல்லாம் விட்டுர மாட்டான்னு ஒரு வார்த்தை நீ சொல்லிருந்தா உங்கம்மாவை சமாதானப்படுத்த நான் இப்போவே என்ன வேணாலும் பண்ணிருப்பேன்.”

“மேகன்..”

“என் மேல  உங்க அம்மாவுக்கு எப்போ முழு நம்பிக்கை வருதோ அப்போ என்னைத் தேடி வா. அதுவரை உன் மூஞ்சியில் நான் முழிக்க மாட்டேன்.”

“மேகன்..”

“உங்கப்பா என்கிட்ட கேட்ட ஒரே விஷயம் அவர் பொண்ணோட சந்தோஷமான வாழ்க்கைக்கு உத்தரவாதம். அதுக்கான  நம்பிக்கை இப்போ இங்கே இல்ல.

அது இல்லாம இந்த கல்யாணம் நடந்தா அவரை நான் அவமதிக்குற மாதிரி.”, என்றதில் விடியல் இன்னுமாய் உடைந்து போனாள்.

“இப்போ எனக்கு காதலை விட என் மேல இருக்க வேண்டிய நம்பிக்கை முக்கியமா இருக்கு. என்னை மன்னிச்சுரு சின்னு..”, என்றவன் உச்சந்தலையில் முத்தம் வைத்து திரும்பி பார்க்காமல் சென்றிருந்தான்.

விடியலுக்கு ஒரே நாளில் மொத்த வாழ்வே சூனியமாகி விட்டதாய் இருந்தது. தாய்க்கும் காதலுக்கும் நடுவில் சிக்கிக் கொண்டவள் வெளிவரும் வழி தெரியாமல் தவித்தாள்.

இத்தனை களேபத்திற்கு பிறகும் வாசந்தி அவர் முடிவில் உறுதியாய் இருப்பது அவரின் முக பாவனையிலேயே தெரிந்தது விடியலுக்கு.

பேசும் நிலையில் அவளும் இல்லை மகளின் பேச்சைக் கேட்கும் நிலையில் வாசந்தியும் இல்லை என்பதில் தனதறைக்குள் சென்று அடைந்து கொண்டாள் விடியல்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

8 comments

srichitra September 16, 2026 - 4:00 pm

Emotional ud

Mathy September 18, 2026 - 11:39 am

வாசந்தி எமோஷனலா முடிவு எடுத்துட்டாங்க ஏற்கனவே அவங்களுக்கு பொண்ணு காதலிச்சதுல பிடித்தம் இல்லை…. விடியல் தான் புரிய வைக்கணும்…

Kavi Natarajan September 16, 2026 - 4:11 pm

😍😍😍😍😍😍

Nice update sis

Raji Vijay September 16, 2026 - 4:24 pm

Paavam v and Megan. Appa illa, ammava or love va ? V enna seiva?

Kiruthika M September 16, 2026 - 6:28 pm

Ada ponga pa 🤧😭Meg and V next enna panuvangalo

Fathima.ar September 16, 2026 - 6:44 pm

Ilango sammathichum palan illaama poche

suganyavel September 16, 2026 - 9:17 pm

Very emotional💕

EswariSkumar September 16, 2026 - 9:58 pm

என்ன ஸ்ரீ மா இப்படி பண்ணீட்டீங்க😔😔😔😔

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode