நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்

பத்தடுத்த கோடி உறும்

மு.வ விளக்க உரை: (அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பை விட, பகைவரால் வருவன பத்துகோடி மடங்கு நன்மையாகும்.

அதன் பின் ஒரு வாரத்திற்கு மேகனிடமிருந்து எவ்வித தொந்தரவுகளும் இல்லாமல் போக சற்று நிம்மதியாய் உணர்ந்தாள் விடியல்.

ஆனால் அதற்கான காரணமோ அங்கு டெல்லியில் சித்தப்பா கூறிய ஆளை அவன் குறி வைத்தது தான்.

பெங்களூரில் இருப்பவன், தான் இருந்த இடத்திலிருந்தே அந்த நபரின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைத்திருந்தான்.

என்ன ஏதென அவன் சுதாரிப்பதற்குள் பல இடத்தில் இருந்து அவனுக்கு செக் வைத்திருக்க வெகுவாய் திணறியவனுக்கு யார் என்ன என்று எதுவுமே புரியாத நிலை.

எதுவுமில்லாதவனாய் அவன் தெருவில் நிற்கும் நிலையில் இருந்த நேரம் அவனுக்கு அலைபேசியில் அழைத்திருந்தான் மேகன்.

“யார் பேசுறது?”

“உன்னை கோபுரத்தில் இருந்து குப்பை மேட்டுக்கு கொண்டு வந்தவன்..”

“ஹே யார் நீ?”

“என்னவோ டெல்லியே உன் கோட்டைனு சொன்னியாமே?”

“!!”

“யார்கிட்ட மோதுறோம்னு தெரியாம இருக்குற வரை நீ பண்ணது தப்பில்ல. ஆனால் என் பேரை சொல்லியும் நீ எதிர்த்துருக்கனால் என் ஈகோ அடி வாங்குதே..”

“மே..மேகன் சாப்..”

“ஹான் கேட்கல…”, என்றவன் சுழல் நாற்காலியில் சுற்றிய படியே உரையாடிக் கொண்டிருந்தான்.

“சார் ஐ அம் சாரி.. இனி உங்க அங்கிள் பக்கமே நான் வர மாட்டேன்.”

“”…”

“என்னால எந்த தொல்லையும் இருக்காது. நம்புங்க. ப்ளீஸ் என்னை மன்னிச்சுருங்க..”

“நீ எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் உன்னை எதிர்க்குறது மேகன்னு தெரிஞ்சா இனி அந்தப் பக்கம் கூட தலையை வைச்சுப் பார்க்க நினைக்காத..

காட் இட்?”, என்றவன் பார்த்திபனைப் பார்க்க அவன் யாருக்கோ கைப்பேசியில் அழைத்த வண்ணம் அங்கிருந்து நகர்ந்தான்.

ஒரு வாரமும் நேரம் காலம் பகல் இரவு என்று இல்லாமல் அவனைத் துரத்தி அடிப்பதை மட்டுமே கவனத்தில் கொண்டிருந்தவனுக்கு இப்போது தான் பசி தூக்கம் அனைத்தும் நினைவிற்கு வந்தது.

முகத்தை அழுந்தத் துடைத்தவனாய் தனது சித்தப்பாவிற்கு அழைத்திருந்தான்.

“கண்ணா என்ன டா இப்படி பண்ணி வைச்சுருக்க?”, என்று தான் அவர் பேச்சை ஆரம்பித்ததே.

“உங்க பிரச்சனை முடிஞ்சுது தான? அப்பறம் என்ன சித்தப்பா?”

“டேய், அண்ணா காதுக்கு விஷயம் போயிருக்கும் இந்நேரம்.”

“அதுகென்ன நான் பேசிக்குறேன்.”, எனும் போதே மஞ்சுநாத் அங்கு தம்பியின் செகெண்ட் காலில் வந்திருந்தார்.

“சொன்னா மாதிரியே அண்ணா கால் பண்றார்.”

“கான்ப்ரென்ஸ் பண்ணுங்க. நான் இருக்குறதா சொல்லிக்காதீங்க..”, என்றதில் தலையில் கை வைத்தவராய் அழைப்பை ஏற்றார்.

“அண்ணா…”

“அங்கே என்ன நடக்குது சித்?”

“அண்ணா எதுவுமில்லையே…”

“இங்கே பாரு அவனை கொம்பு சீவுற வேலையை நீ இதோட நிறுத்திக்கோ. உள்ளூர் பிரச்சனை எல்லாம் பத்தாதுனு அங்கே போய் வம்பு பண்ணிட்டு இருக்கான்.”

“அண்ணா மேக் மேல தப்பில்ல. அவன் தான் என்கிட்ட தேவையில்லாம..”

“எதுவும் பேசாத. கவர்மெண்டே உன் கையில் இருக்கு உன்னை காப்பாத்துறதுக்கு நீ தூக்கி வளர்த்தவன் வரணுமா?”

“…”

“அவன் போற விதம் ஒண்ணும் சரியில்லை சித். இதெல்லாம் தேவையில்லை.”

“அண்ணா.. நான் சொல்றதை பொறுமையா கேளுங்க. உங்களையும் என்னையும் நசுக்க பாத்தவங்க எல்லாம் இப்போ பயந்து இரண்டடி பின்னாடி நிக்குறாங்க.

அதுக்கு காரணம் நம்ம மேகன் தான். இதை உங்களால மறுக்க முடியுமா?

அவன் வயசில் நீங்க இந்த தொழிலில் உங்க பேரைத் தக்க வைச்சுக்க எவ்வளவு கஷ்டப்பட்டீங்க?

ஆனால் இன்னைக்கு நம்ம நிலைமையே வேற. இந்த சாம்ராஜ்ஜியம் நீங்க உருவாக்கினது தான்.

ஆனால் இன்னைக்கு நாம நம்பர் ஒன்னா நிலைச்சு நிக்குறதுக்கு நிச்சயமா நம்ம மேக் தான் ண்ணா காரணம்.”

“டேய் இதெல்லாம் எனக்குத் தெரியாதுனு நினைக்குறியா?”

“!!”

“அதனால அவனை சுத்தி ஆபத்து நிறைய உருவாகும் டா. அது எனக்கு வேண்டாம். போதும்ங்கிற காசு பணம் நம்மகிட்ட இருக்கு அதை வைச்சு நம்ம தொழிலைப் பாத்துகிட்டு குடும்பம் குழந்தைனு அவன் நிம்மதியா ஒரு வாழ்க்கை வாழணும்னு தான் நான் ஆசை படுறேன்.

ராதிகாவோட எண்ணமும் அது தான். ஆனால் இவன் பண்றதெல்லாம் அதை பாதிக்கும்னு தோணுது.”, என்றவரின் குரலில் வருத்தம் அப்பட்டமாகவே தெரிந்தது.

“அண்ணா கவலைப்படாதீங்க. மேகனுக்கு எதை எப்போ எப்படி பண்ணனும்னு நல்லாவேத் தெரியும்.

அதுவுமில்லாம அவன் தேவையில்லாத எந்த பிரச்சனைக்கும் போறதில்லை.

நம்மளை சீண்டுறவங்களுக்கு தகுந்த பாடம் புகட்றான். நம்ம பிள்ளை எப்பவும் தப்பான பாதைக்கு போகாது ணா..

நீங்க வருத்தப்படாதீங்க..”, என்று சமாதனப்படுத்தி அண்ணனை அழைப்பைத் துண்டிக்க வைத்திருந்தார்.

“கண்ணா.. அப்பா பேசுறதை கேட்ட தான?”

“சித்தப்பா.. அவர்கிட்ட எனக்கு சப்போர்ட் பண்ணி பேசிட்டு இப்போ என்ன க்ளாஸ் எடுக்க ஆரம்பிக்குறீங்க?”

“மேக் கண்ணா எங்களுக்கு இந்த தொழில் பேர் இதெல்லாம் எவ்வளவு முக்கியம்னு உனக்குத் தெரியும்.

ஆனால் அதை எல்லாத்தையும் விட நீ எங்களுக்கு முக்கியம். புரியுது தான?”

“நான் பார்த்துக்குறேன் சித்தப்பா. குட் நைட்..”, என்றவன் அழைப்பைத் துண்டித்து விட்டு இருக்கையில் பின் சாய்ந்து விழி மூடிக் கொண்டான்.

அந்தக் குடும்பத்திற்கு அத்தனை பிள்ளைகளும் தான் உலகம். அதிலும் தங்களை தோள் கொடுத்து உயர்த்திய அண்ணனின் முதல் மகனான மேகன் என்றால் தனிப் பிரியம்.

ஒரு, வயது வரை தரையில் கால் படாமல் வளர்த்தார்கள் என்று தான் கூற வேண்டும்.

சித்தப்பாவும் அத்தையும் அவனைக் கொஞ்சியதைப் போன்று தங்கள் பிள்ளைகளைக் கூட கொஞ்சியிருக்க மாட்டார்கள் என்று எண்ணியவனின் முகத்தில் இலகுத்தன்மை அதுவாய் குடியேறியது.

தந்தை பேசியதை யோசித்தவனுக்கு சட்டென விடியலின் நியாபகம் வர கைப்பேசியை எடுத்து எவ்வித யோசனையுமின்றி அவளுக்கு அழைத்திருந்தான்.

நடு இரவில் நல்ல உறக்கத்தில் இருந்தவளுக்கு சட்டென கேட்ட சத்தத்தில் ஒரு நொடி ஒன்றுமே புரியாமல் போனது.

கைப்பேசித் திரையில் அவன் எண்ணைப் பார்த்ததும் மொத்த தூக்கமும் காணாமல் போயிருந்தது.

“ஹ..ஹலோ..”

“எப்படியிருக்க?”

“இதை கேட்கவா இந்த நடு ராத்திரியில் கால் பண்ணீங்க?”, என்ற போது தான் மணியைக் கவனித்தான்.

“சாரி.. டைம் பார்க்கல..”

“…”

“தூங்கு.. பை..”, என்றவன் அழைப்பைத் துண்டித்தும் இருந்தான். கைப்பேசியை காதில் இருந்து எடுத்துப் பார்த்தவளோ,

“யாரு டா நீ.. நீயாவே கால் பண்ண.. நீயே கட் பண்ற.. என்ன நினைச்சுட்டு இருக்கான் இவன்..”, என்றவளுக்கு கொஞ்ச நஞ்ச தூக்கமும் எங்கோ போயிருந்தது.

அரைகுறை தூக்கத்தால் முகமே வாடியிருக்க தூக்க கலக்கத்தோடு வந்தமர்ந்த மகளின் நெற்றியைத் தொட்டு பார்த்தார் இளங்கோ.

“என்ன சின்னு உடம்பு சரியில்லையா?”

“அதெல்லாம் இல்லப்பா.. சரியா தூங்கல.. தூக்கமா வருது.”

“போய் தூங்குடா. ஆபீஸ் எல்லாம் வர வேண்டாம்.”

“என்ன டி என்னாச்சு?”, என்ற படி வாசந்தியும் மகளின் கையைத் தொட்டு பார்த்தார்.

“ம்மா டயர்ட்டா இருக்கு வேற ஒண்ணும் இல்ல.”

“எல்லாம் உங்களை சொல்லணும். இவளுக்கு காலாகாலத்துல கல்யாணத்தை பண்ணாம பிஸினஸ் பார்க்கட்டும் ஷோ பண்ணட்டும்னு அவ இஷ்டத்துக்கு விட்டுட்டு இருக்கீங்க..”

“இப்போ அதுக்கும் நான் டயர்டா இருக்குறதுக்கும் எதாவது சம்மந்தம் இருக்கா?”, என்றவள் தாயை முறைத்தாள்.

“எதுக்கு இப்படி கஷ்டப்படணும்ங்கிறேன்?”

“ஓ கல்யாணம் பண்ணினா மட்டும் நான் என்ன கால் மேல கால் போட்டு உட்கார போறேனா? உன்னை மாதிரி நானும் நாள் மொத்தம் வேலை தான பார்க்கணும்?”

“குடும்பத்துக்காக பண்ணும் போது அதெல்லாம் கஷ்டமா தெரியாது டி…”

“ம்ம் அதுக்கு எங்கப்பா மாதிரி ஒரு புருஷன் கண்ணுக்குள்ளே வைச்சு பார்த்துகிட்டா ஓகே..”, என்றவள் தந்தையைப் பார்த்து கண் சிமிட்டினாள்.

“ம்ம் உங்கப்பாவை நீ தான் மெச்சிக்கணும்..”

“ஏன் ஏன்?? எங்கப்பாக்கு என்ன குறைச்சல்?”

“அடப் போடி உங்க தாத்தா பாட்டியை பார்க்காத வரை தான் இவர் என் புருஷன்.

அவங்களா நானானு வந்தா யோசிக்காம புருஷன் ரோலை கட் பண்ணிருவார்..”

“வாசு என்னைப் போய் இப்படி சொல்லிட்ட பார்த்தியா?”

“உண்மையைத் தான சொன்னேன். இந்த ஆம்பளைங்க எப்போ நல்ல பையனா நல்ல அப்பாவா இருக்காங்களோ அப்போ அவங்க நிச்சயமா நல்ல புருஷனா இருக்க மாட்டாங்க..”, என்றவர் சமையலறைக்குள் செல்ல விடியல் தந்தையிடம்,

“ஏதோ என்னால முடிஞ்சது ப்பா..”, என்று கண்சிமிட்டி ஓடியிருந்தாள்.

“ம்மா..”

“ம்ம்?”

“ஏன் அப்படி சொன்ன?”

“என்ன சொன்னேன்?”

“நல்ல புள்ளை எப்பவும் நல்ல புருஷனா இருக்க முடியாதுனு?”

“உண்மை தான டி. நல்ல பிள்ளைங்கிற பேர் எப்போ கிடைக்கும் அவங்களுக்கு பிடிச்ச மாதிரி எல்லாமே செஞ்சு வாங்கிக் கொடுத்து அவங்க எதிர்பாக்குற மாதிரி நடந்துகிட்டா தான?”

“..”

“அதே மாதிரி உனக்கு உங்க அப்பா எப்போ நல்ல அப்பாவா தெரியுவாரு உன்னை கொஞ்சி நீ கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து நீ நினைக்குறதை எல்லாம் செய்யும் போது தான?”

“ம்ம்..”

“இதெல்லாம் நடக்கும் போது ஒருத்தங்களோட பேச்சுக்கு மதிப்பு குறையும். அவங்களை சமாதானப்படுத்தி தன்னோட பெத்தவங்களும் தான் பெத்தவங்களும் கேட்குதை நடத்தி கொடுப்பாங்க. அந்த ஒருத்தர் தான் பொண்டாட்டி.”

“..”

“உன் பாட்டிக்காகவும் உனக்காகவும் அவர் பண்ற பல விஷயங்கள்ல என்னோட சகிப்புத் தன்மை கண்டிப்பா இருக்கும்.

கேட்டால் நீ தான் டி என்னைப் புரிஞ்சுப்ப அவங்ககிட்ட இதை எதிர்பார்க்க முடியுமானு ஒரு டயலாக் போதும் என்னை ஆஃப் பண்றதுக்கு.”

“…”

“ஆம்பளை அவன் நினைக்குறதெல்லாம் பண்றான்னால் அதுக்கு காரணம் அவன் பொண்டாட்டி அதையெல்லாம் அனுமதிக்குறதால மட்டும் தான்.

என் பக்கம் கயிறை நான் இறுக்கினேன்னு வை ஒண்ணு நிம்மதி போயிடும் இல்ல அந்த உறவே போயிடும். நேரமாகுது போ டி ரெடியாகு.”, என்றவர் சமையலை கவனிக்க விடியலுக்கு தாயின் பேச்சு யோசிக்க வைத்திருந்தது.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

8 comments

EswariSkumar September 7, 2026 - 7:30 am

விடியல் அம்மா சரியா சொன்னாங்க 👍👍👍

Kavi Natarajan September 7, 2026 - 7:35 am

💞💞💞💞💞

srichitra September 7, 2026 - 8:56 am

Nice

Mrs Beena loganathan September 7, 2026 - 9:01 am

கணவனின் நம்பிக்கையாய்
குடும்பத்தின் அன்பாய்
காயம் பட்ட மனதிற்கும்
கனிவாக மருந்தாவாள்
கணவனின் துணையாக
காதல் மனைவி…..

கோபத்தை விழுங்கி
குறைதனை மறந்து
காலம் தந்த சோதனையையும்
கடந்து நிற்பாள் துணைவி…..

கட்டிக் காக்கும் கரங்களால்
குடும்பத்தை இணைத்து
கசப்பிலும் இனிமை தேடி
கனவுகளை வளர்ப்பவள்…..

குழந்தைக்கு தாயாகி
கணவனுக்கு துணையாகி
குடும்பத்திற்கு உயிராகி
குலத்தை காத்திடும்
கடவுளாகி…..

காலம் முழுவதும்
கூடவே நடக்கும் உறவாய்
காதலும் அக்கறையும்
கலந்த கடவுளே… மனைவி…..

Mathy September 7, 2026 - 10:18 am

நைஸ் ❤️❤️❤️❤️

suganyavel September 7, 2026 - 8:29 pm

Super💕

Sindhu Narayanan September 10, 2026 - 8:45 pm

😍😍😍

Jacky September 14, 2026 - 8:30 am

definition for good son,father and husband super.It’s all in the wife’s hand. so very true

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode