799
“கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு
மு.வ விளக்க உரை: செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகும்.”
விடியலின் மனதை மொத்தமாய் குழப்பி தன் வசமாக்கியிருந்தான் மேகன். அவனது பின்னனி அவளை பயமுறுத்துவது ஆணவனுக்குப் புரியவில்லை.
அவளின் மனக் குழப்பங்களை அவனால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.
ஒரு வகையில் என்னை நீ திருமணம் செய்வது உனக்கு எல்லா விதத்திலும் லாபம் தான் என்ற எண்ணம் தான் மேகனுடையது.
ஆனால் விடியலால் அதை தவறான கோணத்தில் நினைக்க முடியவில்லை.
காரணம் அவன் கூறிய நீ மடடும் தான் நான் இப்படி பேசும் ஒருத்தி என்றது.
அவன் ப்ளே பாயோ தவறான நோக்கம் கொண்டவனோ இல்லை என்பதை அந்த கண்களே ஒவ்வொரு முறையும் தெளிவாய் உணர்த்துகிறதே.
பெங்களூரின் நவநாகரிகத்திற்கு பொருந்தாத தனக்கு நிச்சயம் பொருத்தமாவன் தான். ஆனால்..
“நீ ஏன் அவ்வளவு உயரத்துல இருக்க மேகன்..”, என்று எண்ணியவளுக்கு பெருமூச்சு எழுந்தது.
அங்கு மேகன் அவனது வேலையில் மூழ்கியிருக்க கைப்பேசியின் குறுஞ்செய்தி சத்தத்தில் அதை கையில் எடுத்துப் பார்த்தான்.
“மேம் ரீச்ட் ஹோம்.”, என்றதைப் படித்தவன் கைப்பேசியை வைத்து விட்டு நேரத்தைக் கவனித்தான்.
பார்த்திபனுக்கும் அதே குறுஞ்செய்தி வந்திருக்க ஒருமுறை மேகனைப் பார்த்து விட்டு அமைதியாய் இருந்தான்.
“என்ன பார்த்தி.. என்ன நினைக்குற?”
“சார்.. அதெல்லாம் ஒண்ணுமில்ல..”
“சும்மா சொல்லு மேன்..”
“இல்ல.. அது..”
“ஏன் அவனு கேட்க வர்ற?”
“!!”
“எனக்கும் தெரியலை. பட் எதோ ஒரு விதத்தில் அம்மாவை பார்க்குற மாதிரியே இருக்கு. “
“…”
“நம்மளோட கம்பர் பண்ண முடியாது ஆனாலும் அவங்க குடும்பமும் ஹை க்ளாஸ் தான். ஆனால் அவகிட்ட அந்த பெருமை இல்ல.
இந்த காலத்து ரிலேஷன்ஷிப்ஸ் ஒத்து வராதுனு என்கிட்டேயே சொல்றா.”
“…”
“நீயே சொல்லு சாதாரணமா கூட காதல் கதை இல்லாத யாராவது இருப்பாங்களா?”, என்றதில் பார்த்திபன் மேகனைப் பார்த்தான்.
“என்னை விடு நான் அந்த லைன்க்கு போக விரும்பலை அதனால எதுவும் இல்ல. பட் அவ அப்படியிருக்குறது.. ஐ லைக் இட்..”
“…”
“எல்லாத்துக்கும் மேல அவ என்னை வெயிட்டிங்கில் வைச்சுருக்கா டா இன்னும்.”, என்று கூறி சிரித்தான் மேகன்.
“சார் எனக்கென்னவோ அவங்க உங்க குடும்பத்துக்காக தான் தயங்குறாங்கனு தோணுது.”
“அது தான் எனக்கும் புரியலை. அதெல்லாம் அவ ஏன் யோசிக்கணும்?”
“என்ன இருந்தாலும் பிரச்சனை வரும் தான சார்..”
“என்னை மீறி அவளை நெருங்க முடியும்னு உனக்குத் தோணுதா?”
“..”
“என்ன பார்த்தி?”
“இல்ல சார்.. அது எனக்கு சரியா பிரச்சனையை புரிய வைக்க முடியலை.”
“ம்ம் பார்க்கலாம். எப்போ தான் ஓகே சொல்றானு..”, என்றவனின் கரம் அதுவாய் அவளது எண்ணிற்கு அழைத்திருக்க பார்த்திபன் அங்கிருந்து வெளியேறி இருந்தான்.
“ஹலோ..”
“வீட்டுக்கு வந்துட்டியா?”
“ம்ம்..”
“என்னாச்சு?”, என்று சாதாரணம் போல் அவன் கேட்க பெண்ணவளுக்கோ மனக் குழப்பத்தில் கண்ணீர் தொண்டையை அடைத்தது.
“விடியல்?!”
“மேகன்.. எனக்கு பயமா இருக்கு..”, என்றவளின் குரல் எத்தனை முயன்றும் உடைந்திருந்தது.
“…”
“இது.. இது எப்படி ஒத்து வரும் மேகன்? உங்களைப் பார்த்தவுடனே.. அன்னைக்கு… அது ஜஸ்ட்..”, என்றவளுக்கு ஒழுங்காக பேசக் கூட முடியவில்லை.
“விடியல் ஸ்டாப்..”
“…”
“இப்போ சொல்லு.. ஒழுங்கா.. தெளிவா..”
“நீ எனக்கேத்தவனா இருந்துருக்கலாம்..”, என்றவள் பட்டென அழைப்பைத் துண்டித்திருந்தாள்.
எத்தனை முயன்றும் சட்டென்று சரியென அவளால் அவனிடம் கூற முடியவில்லை.
எதிர்காலத்தை நினைத்து பயம் அவளை அதிகமாய் அச்சுறுத்தியது.
அனைத்திற்கும் மேல் ஆணவன் தனக்கு முன்னுரிமையும் மதிப்பும் கொடுத்து வரும் போது பாழாய் போன மனம் பாகாய் உருகித் தொலைக்கிறதே!
தலையணையில் முகம் புதைத்து குலுங்கி அழ ஆரம்பித்திருந்தாள் விடியல். அங்கு மேகனோ அவளது கடைசி வரிகளிலேயே கட்டுண்டிருந்தான்.
உன்னைப் பிடிக்கிறது நீ எனக்கு தகுந்த நிலையில் இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என்ற அவளின் எண்ணம் அவன் முகத்தில் இலகுத் தன்மையைக் கொடுத்திருந்தது.
அப்போதிருந்து இப்போது வரை அவளுக்கு அவன் மேகன் தான். மேகன் மஞ்சுநாத்தாய் அவனை ஒரு நொடியும் அவள் நினைக்கவில்லை.
நேத்ராவிற்கு கூட மாமனின் மகன் என்பதால் தான் பிடித்தம் வந்திருக்கும் நிச்சயமாய் அவனை மேகனாக மட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை அவளுக்கு இல்லையே!
இப்படியாய் இவள் ஒவ்வொரு வார்த்தையிலும் அவன் மீது தன் ஆதிக்கத்தைச் செலுத்திக் கொண்டே இருக்கிறாள்.
தன் எதிர்கால மனைவியாய் இவள் பொருத்தமானவள் என்று நினைத்தவனின் மனதில் அவளறியாமலே காதல் வாசத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறாள்.
அவனை அவனாகவே ஏற்றுக் கொள்ளும் பெண்ணவளை மொத்தமாய் தனக்குள் சுமக்கத் தயாராகியிருந்தான் மேகன்.
என்னவோ மனம் மிகவும் மகிழ்ச்சியாய் உற்சாகமாய் இருப்பது போல் தோன்றியது.
அங்கு விடியலோ இரவெல்லாம் அழுதழுது காய்ச்சலை இழுத்து வைத்திருந்தாள்.
கண் கூடத் திறக்காமல் படுத்திருக்கும் மகளைப் பார்த்து இளங்கோவிற்கும் வாசந்திக்கும் பயம் பிடித்துக் கொண்டது.
குடும்ப மருத்துவருக்கு அழைத்து பரிசோதித்து மாத்திரை மருந்துகளை வழங்கி அவளருகிலேயே இருந்து பார்த்துக் கொண்டனர்.
அந்த நேரம் விடியலின் கைப்பேசி ஒலிக்க எடுத்துப் பார்த்ததில் M என்று பதியப் பட்ட எண்ணில் இருந்து வந்த அழைப்பைப் பார்த்தவர் யோசனையாய் மகளைப் பார்க்க வாசந்தி என்னவென விசாரித்தார்.
“தெரியலை வாசு. அவ ப்ரெண்ட் யாரோ போல..”, என்றவர் கைப்பேசியை மகள் அருகிலேயே வைத்து விட்டு தலையை வருடினார்.
வெகு நேரம் தந்தையும் தாயும் அவளோடு அமர்ந்திருக்க இளங்கோ தனக்கு வந்த அழைப்பை ஏற்று பேசியவாறு தனதறைக்குச் சென்றார்.
சற்று நேரத்தில் வாசந்தியும் மகளுக்கு உணவு எடுத்து வரலாம் என்று வெளியேறியிருந்தார்.
மருந்தின் வீரியத்தில் காய்ச்சல் சற்று குறைந்திருக்க மெதுவாய் கண் திறக்க முயன்றவளுக்கு தலையெல்லாம் பாரமாய் இருந்தது.
கண்களை மூடிய படியே படுத்திருந்தவள் கைப்பேசி சத்தத்தில் அதைத் தடவி எடுத்து அரைகுறையாய் திரையைப் பார்த்து அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.
“எப்படியிருக்க இப்போ?”
“காய்ச்சல்..”
“அதான் கேட்குறேன் எப்படியிருக்க?”
“ம்ம்..”, என்றவள் தெளிவாக இல்லை என்பது மேகனிற்கு புரிந்தது.
“காய்ச்சல் வர்ற அளவுக்கு நான் என்ன பண்ணேண் உன்னை?”
“ரொம்ப பயமா இருக்கு..”
“என்னைப் பார்த்தா?”
“இல்ல.. பிரச்சனை வரும்..”
“நான் உனக்காக இருக்க மாட்டேனா?”
“ஏன் என்னை விட மாட்டுற?”
“பிகாஸ்..”
“…”
“ஐ திங்க்.. ஐ லவ் யூ..”, என்றதில் அந்த அயற்சியிலும் மெலிதான புன்னகை விடியலிடத்தில்.
“இனி நீ பயப்பட அவசியம் இல்ல. புரியுதா?”
“ம்ம்..”
“மேகன் லவ்ஸ் விடியல்.. இதைத் தாண்டி எதையும் யோசிக்காத. டேக் கேர்.”, என்றவன் அழைப்பைத் துண்டித்திருக்க விடியலோ மீண்டுமாய் ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்றிருந்தாள்.
பின் மதியத்திற்கு மேல் கண் விழித்தவளுக்கு காய்ச்சல் நன்றாகவே குறைந்திருக்க உடல் சோர்வு காரணமாக அப்படியே படுத்திருந்தாள்.
மேகனிடம் பேசியது மங்கலாக நினைவில் இருக்க அவசரமாய் கைப்பேசியை எடுத்துப் பார்க்க அவன் அழைப்பு வந்திருந்ததை பார்த்தவள் பேசியதை நினைவு கூற முயன்றாள்.
“என்னவோ சொன்னான்? எப்படியிருக்கனு கேட்டான் தான? உடம்பு சரியில்லனு அவனுக்கு எப்படி தெரியும்..”, என்று தனக்குள்ளேயே யோசித்துக் கொண்டிருக்க இளங்கோ மகள் அருகில் வந்து அமர்ந்தார்.
“சின்னு எப்படி டா இருக்க இப்போ?”
“நல்லாயிருக்கேன் பா.. நீங்க ஆபீஸ் போலேயா?”
“நீ கண்ணைத் திறக்காம இருந்ததைப் பார்த்து பயந்துட்டோம் தெரியுமா? அம்மா தனியா என்ன பண்ணுவானு அப்படியே இருந்துட்டேன்.”
“இப்போ நான் ஓகே தான் ப்பா..”, என்றவள் தந்தையின் தோள் சாய்ந்து கொண்டாள். தயக்கமிருந்தாலும் இளங்கோ மகளிடம் மெதுவாய்,
“சின்னு காலையில் உனக்கு ஒரு கால் வந்தது. Mனு போட்டுருந்தது”, என்றதில் மனதிற்குள் அதிர்ந்தவளாய்,
“ஓ..நான் என்னனு பாக்குறேன் ப்பா..”
“யாரு டா அது?”
“அது ஒரு ஈவ்ன்ட் டீம் மேனேஜர் ப்பா.. நான் பேசிக்குறேன்.”
“சரி டா பார்த்துக்கோ..”, என்றவருக்கு அழைப்பு வந்தது மகளின் தனிப்பட்ட எண்ணிற்கு என்பது தெரிந்து யோசிக்க வைத்திருந்தது.
“சின்னு இந்த கசாயத்தைக் குடி..”
“ம்மா கசக்கும்…”
“ம்ம் காலையில நீ படுத்துருந்த அழகுக்கு பாகற்காய் ஜுஸே கொடுத்தாலும் குடிக்கணும் டி.”
“..”
“எங்கேயும் எதையும் பார்த்து பயந்தியா டி. திடீர்னு இப்படி ஒரு காய்ச்சல் வந்துருக்கு.”, என்றவர் கையோடு கொண்டு வந்திருந்த குலதெய்வ திருநீற்றை மகளுக்கு பூசி விட்டார்.
“எல்லாம் திருஷ்டி தான் வாசு.. என் மகளைப் பார்த்து பொறாமை படாதவங்க யாரு இருக்கா சொல்லு..”
“ம்ம் சாயிந்திரம் திருஷ்டி சுத்தி போடுறேன்ங்க.. நீங்க வாங்க சாப்பிடலாம்.”
“ப்பா.. மணி என்ன ஆச்சு சாப்பிடலையா இன்னும்?”
“உன்னை விட்டு நகருவேனானு உட்காந்துருக்கார். எனக்குப் பசிக்குது வரீங்களா இல்லையா இப்போ?”, என்றதில் மனைவியோடு வெளியே சென்றவர் யோசனையோடே உணவு மேசையில் அமர்ந்தார்.
“என்னங்க என்ன யோசனை?”
“சின்னுவுக்கு எதுவும் பிரச்சனை இருக்குமோ வாசு?”
“அவளுக்கு என்னங்க பிரச்சனை? என்ன சொல்றீங்க?”
“அவ எதையோ மறைக்குற மாதிரி எனக்குத் தோணுது. கொஞ்ச நாளாவே அவ வித்தியாசமா நடந்துக்குறா இல்ல?”
“என்னங்க என்னென்னவோ சொல்றீங்க? எனக்கு படபடனு வருது..”
“நீ வேற.. சரி விடு நான் தான் தேவையில்லாம யோசிக்குறேனோ என்னவோ. நீ சாப்பிடு முதல்ல.”, என்றவர் மனைவியை குழப்ப விரும்பாதவராய் உணவை உண்ண ஆரம்பித்திருந்தார்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
6 comments
Kadhal vanthabudan kalla thanam sernthe varune
டேடிக்கு டௌட் வந்துருச்சி…..
அப்பாக்கு சந்தேகம் வந்துருச்சு
Nice
நைஸ் அப்டேட் 😍😍😍
Super💕