அன்பு-8

by ஸ்ரீ
0 comments 13 views
A+A-
Reset

மறுநாள் காலையிலேயே திஷானியை தயாராக கூறியவன் மூன்று நாட்களுக்கான துணிகளை எடுத்து வைத்துக் கொள்ளுமாறு கூறினான்.வழக்கம் போல் எங்கு செல்கிறோம் என்று எதுவும் கூறவில்லை அவளும் கேட்கவில்லை.

கார் சென்னையின் ஈசிஆர் சாலையில் பயணிக்க ஆரம்பித்திருந்தது.அப்போதுமே திஷானி அமைதியாய் பயணத்தை ரசித்தாளே அன்றி ஒன்றுமே கேட்கவில்லை.முந்தைய நாளின் விஷயங்கள் அவளை மிகவுமே மாற்றியிருந்தன.

“ஏன் டியர் ஒரு பேச்சுக்கு கூட என்ன ப்ளான்னு கேக்க மாட்டியா?”

“ஏன் நீங்க சொல்ல மாட்டீங்களா?”

“அது சரி..ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாமேனு தான்..”

“ம்ம் அந்த சர்ப்ரைஸ கெடுக்க வேண்டாமேனு தான் கேக்கல..”,என்றவள் மென்னகைக்க,

“ஆஹா அப்பப்போ நீ ஒரு டீச்சர்னு மறந்துரேனே..”,என்றவனும் அவளோடு சிரிப்பில் இணைந்து கொண்டான்..

அடுத்த இரண்டு மணி நேரத்தில் கார் சென்று நின்ற இடம் புதுச்சேரியின் அழகிய கடற்கரை ரெசார்ட்டில்..

“என்னங்க திடீர்னு?”

“ம்ம் ஏற்கனவே மைண்ட்ல இருந்ததுதான் திஷா..பட் உன் மைண்ட் எப்படியிருக்குனு தெரியாம ட்ரிப் ப்ளான் பண்ண வேண்டாமேனு தான் ஒண்ணும் பண்ணல..பட் நேத்து நீ பீச் பாத்து எக்ஸைட் ஆனதுல தான் இந்த இடத்துக்கு வந்தே ஆகணும்னு முடிவு பண்ணிட்டேன்..பிடிச்சுருக்கா?”

“ம்ம் ரொம்பவே..”,என்றவள் புன்னகையோடு அவனோடு இணைந்து நடந்தாள்.

தங்களுக்கான அறையில் செக்இன் செய்தவர்கள் சற்று நேரம் ஓய்வெடுத்துவிட்டு வெளியே கிளம்பத் தயாராகினர்.

நேராய் மணக்குள விநாயகர் கோவிலுக்குச் சென்று மனமார வணங்கிவிட்டு அடுத்ததாய் அன்னை அரவிந்தர் ஆசிரமத்திற்குச் சென்றனர்.

அதன் அமைதியும் அழகும் மனதிற்கு தேவையான ஒன்றாய் இருந்தது திஷானிக்கு..அவளோடு பொறுமையாய் எந்த சிடுசிடுப்பும் இன்றி இயல்பாய் கை கோர்த்து வருபவனை பார்த்து பார்த்து வியந்தாள்.

அங்கிருந்து கிளம்பியவர்கள் தங்கள் ரெசார்ட்டை அடைய தங்களறைக்குச் செல்லப் போனவளை தடுத்து கடல்புறம் அழைத்துச் சென்றான்.

“வேண்டாம்ங்க ஏற்கனவே டயர்டா தெரியுறீங்க முதல்ல சாப்ட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க சாய்ந்திரமா வரலாம்..”

“திஷா பேபி ஹனிமூன் வந்துட்டு இப்டி சாப்ட்டு தூங்க சொல்றியே சோ சேட்..”,என இயல்பாய் கடல் அலையில் கால் நனைக்க ஆரம்பிக்க அவனைப் பற்றி அறிந்தவளும் ஒன்றும் கூறாமல் அவனோடு இணைந்து நின்றாள்.

அரைமணி நேரமாய் அடிக்கும் வெயிலை கூட பொருட்டுத்தாமல் நீரில் ஆட்டம் போட அவள்தான் கஷ்டப்பட்டு அவனை அழைத்துச் சென்றாள்.

அறைக்குள் நுழைந்ந நேரம் அபினவிற்கு அலைப்பேசி அழைப்பு வர அப்படியே  சோபாவில் அமர்ந்து பேச ஆரம்பித்திருந்தான்.அவன் அப்படியே அமர்ந்து பேசுவதைக் கண்டவள் சேரை எடுத்து அவனருகில் போட்டு அமர்ந்து அவன் ஷுவை கழட்டுவதற்கு தயாரானாள்.

அவனோ அவசரமாய் அவள் கைப்பிடித்து தடுக்க முக்கியமான அழைப்பு என்பதால் பேச்சை நிறுத்த முடியாமல் அவளிடம் வேண்டாமென்பதாய் தலையசைக்க அவள் அதை கண்டுகொள்ளாது தன் வேலையை கவனித்தாள்.

அவன் முகமெங்கும் வேர்த்திருக்க அருகிலிருந்த ஏசி ரிமோர்ட்டை எடுத்து டெப்பரேச்சரை சரி செய்து எழுந்து செல்ல எத்தனிக்க அவன் என்னவென்பதாய் செய்கை செய்ய துடைப்பதற்கு துண்டு எடுத்து வருவதாய் அவளும் செய்கையிலேயே கூறினாள்.

வேண்டாம் என தலையசைத்தவன் விளையாட்டாய் அவள்  துப்பட்டாவை கைகாட்ட அவளோ முகம் மலர சற்றும் தாமதியாது அவன் முகத்தை ஒற்றியெடுத்தாள்.

இருவருக்குமே இந்த செய்கை மொழி இன்னும் நெருக்கத்தை கொடுப்பதாய் இருக்க. அபினவோ வாய் அங்கு பேசிக் கொண்டிருந்தாலும் தன்னவளோடான இந்த நேரத்தை இழக்க விரும்பாதவனாய் தான் அமர்ந்திருந்த நீள் சோபாவில் அவளை அமரச் சொல்ல என்னவென புரியாமல் திஷானியும் அமர்ந்தாள்.

சிறு பிள்ளையாய் அவள் மடியில் தலை வைத்து படுத்தவாறே பேச ஆரம்பித்திருந்தான்.பெண்ணவளுக்கோ இனம் புரியா ஓர் உணர்வு. அவளது கை அந்நிச்சையாய் அவன் முடி கோத காதலும் தாய்மையும் கலந்த உணர்வு கலவை அவளை ரொம்பவே இம்சித்தது..அடுத்த சில நொடிகளில் அழைப்பை துண்டித்தவன் அவள் முகம் பார்க்க,

“சாரி திஷா டியர் இது என் ஹபிட் எப்பவுமே அம்மா பக்கத்துல இருந்தா இப்படி படுத்துப்பேன்..இனி உன்கிட்டேயும்..”,என்று நிறுத்தி அவள் கண்களுக்குள் பார்க்க சட்டென உணர்வு பெற்றவளாய்,

“ரொம்ப லேட் ஆய்டுச்சு வாங்க சாப்டலாம்”,என பேச்சை மாற்ற மென்னகையோடே எழுந்தவன் மேலும் அவளை சீண்டாமல் ரூம் சர்வீஸிற்கு கால் செய்து உணவு எடுத்து வருமாறு கூறினான்.

இருவருமாய் ஏதேதோ பேசியவாறே உணவை முடிக்க சற்று நேரம் ஓய்வெடுத்து மாலை மீண்டும் வெளியே செல்லலாம் என முடிவு செய்தனர்.

மாலை ஆறு மணியளவில் இருவருமாய் கிளம்பத் தயாராக அபினவ் திஷானியிடம்,”எங்க போலாம்னு சொல்லு திஷா..ட்ரைவ் போலாமா இல்ல வேற எங்கேயாவது??”

“உங்க இஷ்டம்ங்க எனக்கு பீச்லயே உட்காந்திருந்தா கூட போதும்..அவ்ளோ பிடிச்சுருக்கு..”,என்றாள் எதார்த்தமாய் அவனோ அதை செயல்படுத்தியே விட்டான்..

கடற்கரைக்குச் சென்றவன் தன்னவளோடு கால்களை அலை நனைக்க அப்படியே அமர்ந்து விட்டான்.கிட்டதட்ட மூன்று மணி நேரம் என்ன பேசினோம் எப்படி பொழுது கழிந்தது என எதுவும் தெரியாமல் அத்தனை சுவாரசியமாய் பேச்சும் சிரிப்பும் சீண்டலுமாய் கழிந்தது..

“ரொம்பவே டைம் ஆச்சு திஷாம்மா..போலாமா”,என்றவனின் அழைப்பே மனதில் பதிய அவன் மறுபுறம் திரும்பி தன் ஆடையிலிருந்த மணலை தட்டிக் கொண்டிருக்க அதை கவனித்தவள் தானே எழுந்துவிட எண்ணி எழ அத்தனை நேரம் அமர்ந்திருந்ததில் கால் ஏதோ போல் உணர்வு கொடுக்க சமாளிப்பதற்குள் நிலை தடுமாறிவள் “அபிப்பா” என்றவாறு அப்படியே விழுந்திருந்தாள்..

அவளின் அழைப்பில் திரும்பியவன் பதட்டமாய் திரும்ப மொத்தமாய் நீரில் நனைந்திருந்தவளை பார்க்க அவனறியாமல் சிரிப்பு வந்துவிட சத்தமாய் சிரித்து விட்டான்.

திஷானிக்கோ அவள் விழுந்ததைவிட அவனின் சிரிப்பில் கடுப்பாக எழுப்பி விடுமாறு கை நீட்ட இரு நொடி மனதார சிரித்து முடித்தவன் சாதாரணமாய் கை கொடுக்க தன் முழுபலம் கொண்டு அவனை இழுத்து விட்டிருந்தாள் திஷானி..

இப்போது தடுமாறுவது அவன் முறையாய் இருக்க அவள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்திருந்தாள்.

“அடிப்பாவி சைலண்ட் கில்லரா நீ..”

“ம்ம் நீங்க மட்டும் சிரிச்சீங்க தான அதுக்கு இது சரரியா போச்சு..”,என்றவள் சிரிக்க வழக்கம் போல் அவள் சிரிப்பில் தன்னை தொலைத்தவன் அவள் இதழோரம் தட்டிச் சிரித்தவாறு எழுந்தான்..தன் முகத்தை துடைத்து தன்னை சரி செய்தவன் தன்னவளை இடைப்பற்றி தூக்க சாதாரண காட்டன் சல்வார் என்பதால் ஈரத்தில் நனைந்திருந்ததில் இன்னுமாய் மெல்லிதாகியிருக்க கையில் ஏந்தியவனுக்கோ அவளின் வெற்றிடையை பற்றியதைப் போன்ற உணர்வு..

பெண்ணவளுமே அதைதான் உணர்ந்தாளோ என்னவோ அத்தனை நேரம் சிரித்திருந்த அவளின் முகம் மொத்தமாய் சிவந்து விட்டிருந்தது..அவளறியாமல் வேக மூச்சுகள் எடுக்க அவள் நிலையுணர்ந்தவனுமே தன்னிலை மறந்து விட்டிருந்தான்.

அவன் கழுத்தை சுற்றியிருந்த அவள் கைகளில் அத்தனை ஈரத்தையும் தாண்டிய வெம்மையை உணர்ந்தான்.அறை வாசலுக்கு வந்தவுடன் அவள் இறங்க எத்தனிக்க அவனோ அவளைஅனுமதிக்காது தன் சட்டை பாக்கெட்டை கண்ணால் காட்ட தலை குனிந்தவள் ஒன்றும் கூறாமல் அதிலலிருந்த சாவியை எடுத்து கதவை திறந்தாள்.

உள்ளே நுழைந்தவன் பின்புறமாகவே கதவை காலால் எட்டி உதைக்க அது அறைந்து ஒலித்து  ஓய்ந்தது.கதவருகே மெதுவாய் அவளை இறக்கியவன் அவள் நிதானமாக நொடிப் பொழுது நேரம் கொடுத்து அவளின் பக்கவாட்டின் இருபுறமும் தன் கையை கதவில் ஊன்றியவாறு அவளிடமிருந்து விழியகற்றாமல் நின்றான்.

பெண்ணவளுக்கோ வயிற்றில் ஏதோ பந்து பந்தாய் உருள்வதைப் போன்ற உணர்வு தவறியும் தன்னவனை பார்க்க முடியவில்லை..ஈரம் சொட்ட நின்றவளின் தலையில் குத்தியிருந்த சென்டர் கிளிப்பை மெதுவாய் அவன் அகற்ற முடிக் கற்றைகள் லேசாய் அவள் கன்னங்களை உரசின..

முடிகளை ஒதுக்கியவாறு அவளின் கன்னம் பற்றி அவன் அழுத்த அதற்குமேல் முடியாதவளாய் லேசாய் விழி உயர்த்தியவள் அவன் பார்வையை தாங்காது மார்பில் புதைந்து கொண்டாள்.

“வாவ் நீ அங்கிரி பர்ட்டா இருந்தாலே என்னால சமாளிக்க முடியாது இப்போ என்னடானா இப்படி ப்ளஷ் பண்றியே திஷா பேபி..”,என அவளை காதுமடலை இதழ் உரசக் கூற அவளோ மொத்தமாய் உருகி விட்டிருந்தாள்.

அவன் சட்டையை இறுகப் பற்ற அவனோ தன்னிடமிருந்து பிரித்தவளின் முகத்தை கையில் ஏந்திக் கொண்டான்.

“திஷாம்மா என்ன பாரு..”,அத்தனை மென்மை அவன் குரலில் மறுப்பின்றி அவள் அவன் விழி நோக்க,

“லவ் யூ டீ மை கருப்பழகி..இந்த குண்டு குண்டு கண்வழியா என் உலகத்தை நிறைய நிறைய ரசிக்கனும்..கோவம் வர்றப்போ எல்லாம் இந்த மூக்கை  கிள்ளி கடிச்சு சண்டை போடணும்..என் மொத்த காதலையும் இப்போ இந்த நொடி உன்னோட இந்த உதட்டுல முத்தமாய் கொடுக்கனும்..வழக்கம் போல முறைக்க மாட்ட தான?”,என கேலியாய் முடித்தாலும் அவன் பார்வை அவனின் தீவிரத்தை உணர்த்தியது திஷானிக்கு.

எதிர்பார்ப்பு பரபரப்பு பதட்டம் பயம் என அத்தனையும் அவளின் அந்த விழியில் தாண்டவமாட தலை அதுவாய் இல்லையென்பதாய் அவனுக்கான அனுமதியை வழங்கியது.

தன்னவளின் காதல் கவிஞனாய் தன் முதல் கவிதையை அவள் இழ்களில் எழுத தொடங்க பெண்ணவளின் கைகளோ அவன் சட்டையை இன்னுமின்னுமாய் இறுக்கியது..நொடிகள் நிமிடங்களாக தன் தெம்பனைத்தையும் இழந்தவளாய் தன்னவனிடமிருந்து விலக நினைக்க லேசாய் தன்னவளிடமிருந்து விலகி நின்றான் அபினவ்.

“சாரி டியர் ஆர் யு ஓ.கே?”,என்றவாறே அவளின் முடியை சரி செய்ய கூச்சத்தில் நெளிந்தவள் அவனை கடந்து செல்ல எத்தனிக்க அதற்கு மேல் சீண்டாமல் அவள் செல்ல அனுமதித்தான்.

முத்தமென்பது சிறிய விஷயமென நினைத்திருந்தவளுக்கு அதன் முழுமையான அர்த்தத்தை தன் ஒற்றை இதழொற்றலில் காட்டியிருந்தான் அந்த அன்புக் கணவன்.

உடைமாற்றி இருவருமாய் படுக்கத் தயாராக வழக்கம் போல் திஷானி ஒரு ஓரமாய் ஒண்டிக் கொண்டு தன்னவனுக்கு முதுகு காட்டி படுத்திருக்க அவன் சட்டென அவளை திருப்பி தன்புறம் இழுத்து கையணைப்பிற்குள் கொண்டு வந்திருந்தான்.

“திஷா நா சமத்து பையன் தான் ஆனா இனியும் அப்படியே முடியாது..எதுக்கு பெட்ல இருந்து கீழே விழுந்து ஓட போற மாதிரியே படுத்துக்குற..இனி எப்பவும் என் கைக்குள்ளயே உன் வாசம் என்னை உரச அப்படியே தூங்கு…உன் வாசத்தை நம்ம ரூம்ல இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் என் மேல நா பீல் பண்ணிட்டேயிருக்கணும்..”,என இன்னுமாய் தன்னோடு சேர்த்து அவள் உச்சி முகர்ந்து விடுவித்தான்.

“டீச்சரம்மா எப்போ பாத்தாலும் நா தான் பக்கம் பக்கமா டயலாக் பேசுறேன் நீ என்னடானா என்ன வெறிச்சு பாத்துட்டே இருக்க..என்னாச்சு இல்ல என்ன நினைக்குற சொன்னா தான தெரியும் எனக்கு..இதெல்லாம் பிடிக்கலனா பிடிக்கலனாவது சொல்லு..”,என அவள் முகத்தை உயர்த்த அப்போது தான் அவள் கண்களின் கண்ணீரை கவனித்தான்.

“ஹே என்னாச்சு “,என பதறிவனாய் அவளை விலக்க எத்தனிக்க அவள் இன்னுமாய் அவனோடு ஒண்டினாள்.

“ஏன் நீங்க இப்படியிருக்கீங்க..இப்படிகூட காதலிக்க முடியுமா என்ன!!சொல்லப் போனா லவ் யூங்கிற வார்த்தைக்கான மேஜிக் நீங்க இப்போ சொன்னப்போ நான் உணர்ந்தேன்..மேபி சாதாரணமா ஒரு கல்யாண வாழ்க்கை இப்படி தான் இருக்குமோ என்னவோ..

ஆனா நிச்சயமா எல்லா புருஷனும் உங்களை மாதிரியே அவங்க மனைவிகிட்ட நடந்துக்க மாட்டாங்கனு தான் தோணுது..நிச்சயமா இந்த பத்து பன்னிரண்டு நாளா தான் நா நானாவே இருக்குறேன்னு தோணுது…தேங்க் யூ ஃபார் எவ்ரிதிங் என தன்னவனை இறுக்கிக் கொள்ள ஒன்றும் கூறாமல் அவளின் தலைகோதிக் கொடுத்தான் அபினவ்..

சில நொடிகளில் அவளாகவே விலகி அவனை ஏறிட,”அழுகாச்சியெல்லாம் முடிஞ்சசுதா?திஷானி அழுதா நல்லாவே இல்ல..அதுவும் அபினவோட திஷானி அழவே கூடாது சரிதானா?”

“ம்ம்”,என்றவள் அழகாய் சிரிக்க தன் மார்பில் சாய்த்தவன் தந்தையும் தாயுமாகிப் போனான் தன் அன்பானவளுக்கு..

கண் விழித்தவளுக்கு அந்த  நாளின் விடியல் ஏனோ அழகின் மொத்த வடிவாய் தெரிந்தது.காரணம் தன்னை சிறு பிள்ளையை அரவணப்பதைப் போல் அரவணைத்து தூங்கும் தன்னவனின் தெளிந்த முகமே..

தன்னை மறந்து அவன் முகத்தையே பார்த்திருந்தவள் நகரக் கூட தோன்றாமல் அப்படியே படுத்திருந்தாள்.அந்நியமில்லாத அவன் தொடுகை கட்டுப்பாடின்றி அவளை மொய்த்து எடுக்கும் அவன் பார்வை அனைத்திற்கும் மேலாக அவனிடம் உணரும் பாதுகாப்பு இதைவிட இந்த பிறவியில் தனக்கு எதுவும் தேவையே இல்லை என்றே தோன்றியது அவளுக்கு..

அவளின் சிந்தனையை கலைப்பதாய் அவனின் அசைவு நிகழ்விற்கு கொண்டுவர மெதுவாய் அவன் கை நகர்த்தி எழுந்து கொண்டாள்.சற்று தாமதாகவே எழுந்தவன் தயாராகி தங்களுக்கான உணவை வரவழைத்து இருவருமாய் உண்டு முடிக்க,

“திஷா இங்க பேக் வாட்டர் போட்டிங் இருக்குனு சொன்னாங்க போலாம்.போட் ஹவுஸ் வேக்கண்ட் இருந்தா அங்க ஸ்டே பண்ணலாம்..எதுக்கும் லக்கேஜ் எடுத்துக்கலாம்..ஓ.கே வா?”

“ம்ம் சரிங்க நா எடுத்து வைக்குறேன் எல்லாத்தையும்..”,என்று அனைத்தையுமாய் எடுத்து வைத்தவாறு கிளம்பினர்.

அங்கு சென்றபின் என்ன தோன்றியதோ போட்டிங் வேண்டாமென பயந்தவளை வற்புறுத்தாது ஹவுஸ்போட்டிற்குச் சென்றனர்.அத்தனை அழகான சூழல் அந்த வெயிலையும் தாண்டிய மழைச்சாரலை அளித்திருந்தது இருவருக்குமே..முந்தைய நாளின் உரையாடலுக்குப் பின் இருவருமே தங்களுக்கிடையேயான இடைவெளியை சற்று ஒதுக்கி விட்டிருந்தனர் என்றே கூற வேண்டும்.. நாள் முழுவதுமாய் தன்னவனுடனான உரையாடல் சலிக்காத தெவிட்டாத செங்கரும்பாய் இனிக்க ரசித்து ரசித்து மகிழ்ந்தாள் திஷானி.

“ஏன்ங்க நீங்க என்னைப் பத்தி அம்மா அப்பாகிட்ட சொன்னப்போ அவங்க கொஞ்சம் கூட நெகெட்டிவா எதுவும் சொல்லலையா?உடனே ஓ.கே சொல்லிட்டாங்களா?”

“ம்ம் ஆமா டா..நானுமே எதிர்பர்க்கல ..”

“பட் அவங்க வீட்டுக்கு வந்து பேசினப்போ எனக்கு ஏதோ ஒரு உலகத்துல இருந்த ஒரு பீல்..கொஞ்சம் கூட கர்வமோ தலைகணமோ இல்லாம அவங்களாவே வந்து என்கிட்ட பொறுமையா பேசி..வாய்ப்பே இல்லங்க..அந்த கேரக்டர் தான் நீங்க இப்படி எல்லாத்தையும் ஈசியா எடுத்துக்குறதுக்கும் காரணம் கண்டீப்பா..”

“உண்மை தான் திஷா பேபி..அக்சுவலா சொல்ல ஒரு காரணம் இருக்கு அது.. அம்மாவோட அண்ணா பொண்ணு  கன்சீவ் ஆனப்போ ஸ்கேன் எடுக்கும் போது பேபி பிசிகலி சேலண்ஞ்ச்டா தான் பிறக்கும்னு சொன்னாங்களாம்..

என் கசின்க்கும் அவ ஹப்பிக்கும் ரொம்ப வருத்தம் தான் இருந்தாலும் பேபிய அபார்ட் பண்ண நினைக்கல நாம நல்லா பாத்துக்கலாம்னு நினைச்சாங்களாம் பட் எங்க அம்மாவோட அம்மா பிடிவாதமா அந்த குழந்தை வேண்டாம்னு சொல்ல டாக்டரும் பேமிலி டாக்டர் சோ அவங்களும் பாட்டிக்கு சப்போர்ட் பண்ணி பெண் குழந்தை வேற சோ பாட்டி சொல்றத கேளு அப்படி இப்படினு அபார்ஷனுக்கு சம்மதிக்க வச்சுடாங்களாம்…

அந்த இன்சிடன்ட் நடக்கும் போது நா காலேஜ்னு நினைக்குறேன்..அப்போ அம்மா அவ்ளோ புலம்பினாங்க என்கிட்டேயும் அப்பாகிட்டேயும்..ஏன் குழந்தை அப்படியிருந்தா பெத்துக்க கூடாதா ஒரு வேளை பிறந்தப்பறம் எதாவது ஆச்சுனா வேண்டாம்னு தூக்கிப் போட்ருவாங்களா அப்படி இப்படினு ஆர்பாட்டமே பண்ணிடாங்க..அதுக்கப்பறம் எங்க பாட்டிகிட்ட ரொம்ப நாளா அவங்க பேசவே இல்ல..

சோ மேபி அதனால உன்னை பார்த்து அவங்க இம்ரஸ் ஆய்ருக்கலாம்..தடைகளைத் தாண்டி சாதிக்குறது நமக்கான அடையாளத்தை நிலை நிறுத்துறதெல்லாம் அம்மாக்கு ரொம்ப இஷ்டம்..அதுவும் பொண்ணுங்க அப்படி இருக்காங்கனா கேக்கவே வேணாம்..

“ம்ம் உண்மையா ரொம்ப ஆச்சரியமா இருக்கு அத்தை மாதிரி எத்தனை பேர் யோசிப்பாங்களோ தெரில..எவ்ளோ ப்ராட் மைண்டட் பீபுளா இருந்தாலும் தன் பையன் வாழ்க்கைனு வரும் போது அவங்க பாலிசியை அப்ளை பண்ண யோசிப்பாங்க தான..மாமாவும் அத்தைக்கும் உங்களுக்கும் புல் ப்போர்ட் தராரு..அது இன்னும் அழகான விஷயம்..இப்போ இருக்குற நிலைமைக்கு லைவ்ல என்ன அச்சீவ் பண்ணணும்னு கேட்டா அவங்கள மாதிரி நல்லபடியா குடும்பம் நடத்தி அவங்க குடுத்த மாதிரியே இந்த உலகத்துக்கு ஒரு நல்ல பையனையோ பொண்ணையோ குடுக்கனும்னு தான் வேண்டிப்பேன்..”,என்றவள் சிந்தனை கலைந்து தன்னவனைப் பார்க்க அவனோ அவளை முழுங்கும் பார்வை பார்த்திருக்க அதன் பின்னே தன் வார்த்தையை உணர்ந்தவள் சட்டென விழி மூடி நாக்கை லேசாய் கடித்துக் கொண்டாள்.

குறும்பு பார்வையோடு தன் இருக்கையிலிருந்து எழுந்தவன் தன்னவளின் அருகில் சென்று காட்டிலில் அமர அவளுக்கோ வாய் வார்த்தைகளின்றி நர்த்தனமாட ஆரம்பித்திருந்தது..

“இல்ல அது வந்து எதார்த்தமா தான்..மத்தபடி..”

“மத்தபடி ..”

“…..”

திஷானியின் மருண்ட விழிகளும் முகத்தின் படபடப்பும் அவனை சற்றே நிலை தடுமாற வைத்துவிட அத்தனை நெருக்கத்தில் அவள் முகத்தை கையில் ஏந்தியவனுக்கு காதலனாய் கணவனாய் உணர்ச்சிக் கலவைகள் போட்டியிட முகத்தில் முத்தங்களை நிரப்ப இதழோடு இதழ் சேர்ந்த நேரம் மொத்தமாய் தன்வசம் இழந்திருந்தவன் அவளின் அனுமதியோடு இன்னுமாய் முன்னேறினான்.

காதலை தாண்டிய தாம்பத்திய தொடுகையை உணர்ந்தவளுக்கோ ஒன்றும் செய்ய முடியாத நிலை கூச்சமும் பயமும் போட்டியிட தடுக்கவும் முடியாமல் அவனோடு இயைந்து செல்லவும் முடியாமல் அவஸ்தையாய் அவள் தவித்தாள்.

நிமிடங்கள் நகர தன்னவளை தனக்கே உரிமையாக்கும் சிந்தனையில் இருந்தவன் மெதுவாய் அவளிடம்,

“பேபி உன்னை மாதிரியே என்னை மயக்கி வச்சுக்குறதுக்கு அழகா ரெண்டு பேபிஸ்..நீங்க மூணு பேரும் தான் இனி என் வாழ்க்கை மொத்ததுக்கும்..”,என அவள் காதில் ரகசியம் உறைத்தவாறே அவன் பணியைத் தொடர

சட்டென நெருப்பில் தகித்தவளாய் அவனிடமிருந்து விலகியவள் எழுந்து அமர்ந்தாள்.இதை சற்றும் எதிர்பாராதவனோ,

“சாரி டா என்னாச்சு ஹர்ட் பண்ணிட்டனா!!”,என அவள் காலை ஆராய அவளோ,

“இல்ல இல்லங்க அதெல்லாம் ஒண்ணுமில்ல..”,என்றாள் கண்ணீரை கட்டுப்படுத்தியவளாய்.

அவள் இதை விரும்பவில்லை என உணர்ந்தவனும் அதற்கு மேல் ஒன்றும் கேட்காமல் அவளை தன் தோள் சாய்த்துக் கொண்டான்.

“ரிலாக்ஸ் திஷா டியர்..ஒண்ணுமில்ல..பி கூல்..”,என உச்சி முகர்ந்து இதழ் பதித்திருந்தான்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode