அன்பு-3

by ஸ்ரீ
0 comments 19 views
A+A-
Reset

காலை பத்து மணியளவில் அந்த காபி ஷாப்பை அடைந்தவள் அபினவிற்காக காத்திருந்தாள்.

15 நிமிடங்கள் கடந்தும் அவனை காணாமல் பொறுமையிழந்தவள் அவனை அழைக்க எண்ணி தன் மொபைலை எடுக்க அதற்குள் பின்னிருந்து வந்த ஹாய் என்ற சத்தத்தில் திரும்பியவள் ஒரு நொடி வாயடைத்து போனாள்.

முந்தைய தினம் அவன் பெற்றோர் வந்து போனதில் இருந்தே அவன் முகத்தை நினைவு கூற பெரும்பாடு பட்டாள் ஆனால் ஏனோ நினைவிற்கு வர மறுத்தது.வாட்சப்பில் பார்க்கலாம் என்றால் அதிலும் அவன் புகைப்படம் இல்லை.இப்போது தன் முன் நிற்பவனை பார்த்தவளுக்கு என்ன விதமான உணர்வு எழுகிறது என அவளுக்கே புரியவில்லை.

சாரி ட்ராபிக்ல மாட்டிகிட்டேன்.வந்து ரொம்ப நேரம் ஆச்சா..”,என்றவன் அவளின் எதிர் இருக்கையில் அமர்ந்தான்.

இல்ல ஜஸ்ட் டென் மினிட்ஸ் தான்..”

பை த வே ஐ அம் அபினவ்..”,என கை நீட்ட கை குலுக்காமல் கை கூப்பியவள்,

திஷானி..”

அவள் செய்கையில் தோள் குலுக்கியவன்,”நைஸ் அண்ட் டிபெரெண்ட் நேம்,சோ என்ன சாப்டுறீங்க பர்ஸ்ட் ஆர்டர் பண்ணிரலாம்..”,என்றவாறு அவளுக்கு வேண்டியதையும் ஆர்டர் செய்துவிட்டு சற்று சாய்வாய் குஷனில் அமர்ந்தான்.

சொல்லுங்க என்ன பேசனும்”,என தன்னிடம் கேட்பவனை விசித்திரமாய் பார்த்தாள் திஷானி.

நீங்க தான் சொல்லனும்..என்கிட்ட கேக்குறீங்க?”

ஹா என் விருப்பத்தை தான் அம்மா அப்பா சொல்லிருப்பாங்களே உங்ககிட்ட..நீங்க தான் முடிவை சொல்லனும்..”

விருப்பம் எல்லாம் சரி..ஆனா எப்படி பார்த்த பத்து செகெண்ட்ல கல்யாணம் வரை முடிவு பண்ணீங்க?என்னை பத்தி எதுவுமே தெரியாம?”

உங்க கேள்வி நியாயமானதுதான் பட் இந்த அரேண்ஞ்ச் மேரேஜ்ல பொண்ணு பாக்குற ப்ராசஸ் இருக்குமே அது மாதிரி தான் உங்களை பாத்தவுடனே ஒரு ஸட்டிஸ்பைட் பீல்..அப்பறம் நரேன் உங்களைப் பத்தி சொன்னான்..சோ ரொம்ப யோசிக்குற அளவு எந்த விஷயமும் இல்லனு தோணிச்சு..அம்மாகிட்ட பேசினேன்..”,என அவன் முடிக்கும் நேரம் ஆர்டர் செய்த காபி வர அதை வாங்கி அவளுக்குமாய் நகர்த்தி வைத்தவன் தன் கோப்பையை எடூத்து பருக ஆரம்பித்தான்.

என்ன சொல்வதென தெரியாமல் அவள் அமைதியாய் காபி கோப்பையை வெறிக்க அவள் பதிலுக்காக காத்திருந்தான்.

சில நொடிகளில் உணர்வு பெற்றவள்,”மிஸ்டர் அபினவ்.எனக்கு இன்னமும் இந்த விஷயத்துக்கு எப்படி ரியாக்ட் பண்ணணும்னு தெரில.கல்யாணம்ங்கிற ஒரு விஷயத்தை பத்தி நா யோசிச்சு பாத்ததும் இல்ல.

இன்னும் நடக்குற எல்லாமே கனவு மாதிரி தான் இருக்கு எனக்கு.இதுல முக்கியமா என் யோசனைக்கு காரணம் உங்களுக்கு எந்த விதத்துலயுமே ஒத்துவராத என்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்குறதுதான்.

என் குடும்ப சூழல்,எனக்கான இந்த குறை இதெல்லாத்தையும் விட உங்க உருவத்திற்கு அப்படியே நேர்மாறான என் உருவம்.நா எப்பவுமே என்னை யாருக்காகவும் குறைச்சு மதிப்பிட்டது கிடையாது அது எனக்கு பிடிக்கவும் பிடிக்காது.

என்னளவில் நா ரொம்பவே அழகுதான் திறைமைசாலி தான்.பட் உங்ககிட்ட இதை சொல்றதுக்கு காரணம் இதெல்லாத்தையும் தாண்டியும் இந்த விருப்பம், கல்யாணம் இதெல்லாம் உங்களுக்கு எப்படி தோணுதுனு தான் எனக்கு புரில.வெளிப்படையாவே கேக்குறேன்.

உங்களுக்கு ஹெல்த் இஷ்யூ எதுவும் இருக்கா அம்மா அப்பாகிட்ட சொல்லாம அவங்க கட்டாயத்துதுக்காக கல்யாணம் பண்ற முடிவுக்கு வந்துருக்கீங்களா?”

காபி குடித்தவனுக்கு அவள் பேச்சின் பிற்பாதி கேட்டு புரையேற சற்று கடுமையான பார்வை அவளிடம்..

சாரி நீங்க இப்படியெல்லாம் கேள்வி கேட்டா என்னால சிரிப்பை கண்ட்ரோல் பண்றது கஷ்டம்...கே ஓ.கே முறைக்காதீங்க..ரிலாக்ஸ்..ரொம்ப யோசிப்பீங்களோ..

அதெல்லாம் அம் 100% பிட் தான்..ரெகுலர் எக்ஸெஸசைஸ் வீக்லி ஜிம் அண்ட் எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது..நம்பிக்கை வரலனா செக் அப் கூட பண்ணிக்கலாம் நோ ப்ராப்ளம்..”

நா கேட்டது தப்புனு எனக்கு தெரியும் பட் என் நிலைமைல இருந்து யோசிச்சா உங்களுக்கு புரியும்..இன்னமும் எனக்கு என்ன பதில் சொல்றதுனு தெரில..இவ்ளோ குழப்பத்தோட இந்த கல்யாணம் நடந்துதான் ஆகணுமா?நீங்களே வேண்டாம்னுசொல்லிருங்களேன் ப்ளீஸ்..”

ஹா..ஒரு குழப்பமும் இல்ல..சரி டெல் மி ஒன்திங்..உங்களுக்கு இந்த பத்து நிமிஷத்துல என்ன பத்தி என்ன தோணுது?”

ஸ்ட்ரெய்ட் பார்வர்ட் ஆனா வாய் தான் கொஞ்சம் அதிகமோனு தோணுது..”

லேசாய் சிரித்தவன்,”ரைட்..நீங்க யாரையாவது லவ் பண்றீங்களா?”

மறுபடியும் அவனை முறைத்தவள்இல்லை என்பதாய் தலையசைக்க,

இவ்ளோ க்ளியரா இருக்கீங்க அப்பறம் என்ன எப்படியோ யாரையோ கல்யாணம் பண்ணிக்க போறீங்க அது ஏன் நானா இருக்க கூடாது..இல்ல எதாவது ஆசிரமத்துல சேர்ற ஐடியால இருக்கீங்களோ?”

இப்படியே பேசிட்டு இருந்தா நா எழுந்து போய்டுவேன்..”

.கே ஓ.கே ரிலாக்ஸ்..நா என்ன உங்களை லவ் பண்ணவா சொல்றேன்..கல்யாணம் தான?உன் பயம் எனக்கு புரியூது பட் அதை சென்டிமென்டலா பேசி புரிய வைக்க என்னால முடியாது..நா ரொம்பவே ஈஸி கோயிங் நேச்சர்..சோ விளையாட்டா பேசுறமாதிரி இருக்குமே தவிர நா எடுக்குற முடிவுல விளையாட்டுதனம் இருக்காது..

பத்து செகண்ட் பாத்ததுதான் பட் பத்து மணி நேரம் யோசிச்சு எடுத்த முடிவு இது..அண்ட் அடுத்ததா என் பேமிலி அப்பா அம்மா உன்னை கண்டிப்பா எந்த விதத்துலயும் ஹர்ட் பண்ண மாட்டாங்க..என்னால கூட நமக்குள்ள சண்டை வரலாம் ஆனா அம்மா சத்தமா பேசகூட மாட்டாங்க..சோ இதை மீறி உனக்கு என்னதோணுதோ நீ வெளிப்படையா சொல்லலாம்..எனக்கு எந்த ப்ராப்ளமும் இல்ல..”

என்ன கூறவென தெரியாமல் அவள் பதட்டமாய் கைகளை பிசைய,

திஷா ப்ளீஸ் ரிலாக்ஸ் பர்ஸ்ட்..இப்படி நீ பயப்படுற அளவு ஒண்ணும் நடக்காது..கண்டிப்பா உன்னை ஏமாத்தணும்னோ இல்ல வேற எந்த இன்டென்ஷனோடயும் உன்னை கல்யாணம் பண்ணிக்க நினைக்கல..அண்ட் மெயினா இரக்கப்பட்டு வாழ்க்கை குடுத்து புண்ணியம் சம்பாதிக்குற நோக்கமும் இல்ல..காதலுக்கும் கல்யாணத்துக்கும் இடைப்பட்ட ஒரு நிலைமைல நாம இருக்கோம்.அதனால உன் முடிவை பொருத்துதான் என் அன்பை உன்கிட்ட வெளிப்படுத்த முடியும்..டெசிஷன் இஸ் யுவர்ஸ்..”

முதல் முறையாய் திஷானிக்கு பெண்மையின் வெட்கம் தன்னை ஆட்கொள்வதாய் தோன்றியது.முகத்தின் கடினத்தன்மை குறைந்து மென்மை படர்ந்தது..அவன் தன் பதிலுக்காக காத்திருக்கிறான் என்று உணர்ந்தும் ஏனோ சிறு தயக்கம் தன் சம்மதத்தை தெரிவிக்க,..

எனக்கு..நா..கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்..பட்..சடனா க்ளோஸா எல்லாம் பேச வராது..கொஞ்சம் டைம் வேணும்..”

ஷப்பா..நீ பேசினாலே போதும்ஸ்கூல் டீச்சரை சமாளிக்க ரொம்ப கஷ்டம் போலயே..எனிவே தேங்க் யூ பார் அக்செப்டிங் மை ப்ரபோசல்..”,என கைநீட்ட லேசாய் மென்னகைத்தவள் கை குலுக்கினாள்.

.கே அப்போ கிளம்பலாமா?நா அம்மாகிட்ட பேசி ஆன்ட்டிகிட்ட பேச சொல்றேன்..போலாமா?”

ம்ம் என அவள் தன் ஸ்டிக்கை எடுத்து எழ எத்தனிக்க தன்னிச்சையாய் அவளுக்கு உதவுவதற்காய் அவள் கைப்பற்ற அவனை கேள்வியாய் பார்த்தவளை பொருட்படுத்தாமல்,

கல்யாணத்துக்கு ஓ.கே சொல்லியாசச்சு சோ இதெல்லாம் பண்ணுவேன்..முறைக்காத. போலாம்..”,என அவளை எழுப்பிவிட்டவன் கார் சாவியை எடுத்தவாறே முன்னே செல்ல பின் செல்பவளுக்கு இன்னமும் சந்தோஷத்தை முழுமையாய் அனுபவிக்க முடியாமல் ஏதோ மனம் யோசனையில் சுழன்று கொண்டேயிருந்தது.

கார் கதவை திறந்து அவளை அமருமாறு அவன் செய்கை காட்ட,

இல்ல பரவால்ல ஸ்கூல் இங்க பக்கத்துல தான நா போய்க்குறேன்..நீங்க கிளம்புங்க..”

ஆர் யூ ஷுவர்?”

யா..”

.கே தென் பை..நைட் கால் பண்றேன்..பை..டேக் கேர்”,என்றவன் காரை கிளப்பி சென்றுவிட,

என்ன இது ஒரு பேச்சுக்கு கூட திரும்பவும் கூப்பிடாம போறாரு..இவரு என்ன கேரக்டர்னே புரிஞ்சுக்க முடிலயே..அவசரபட்டு ஓ.கே சொல்லிட்டோமோஎந்த நம்பிக்கைல அவரை பிடிச்சுருக்குனு சொன்னோம்.ஆனா அவரோட பேசும் போது மனசு ரொம்பவே லேசான மாதிரி இருக்கே..இதுக்கு முன்னாடி இப்படி யார்கிட்டேயும் ஒரு பீல் வந்ததே இல்ல..நா என்னதான் நினைக்குறேன்..ஒண்ணும் புரிலயே கடவுளே!!”,இப்படியாய் தன்னை தானே அவள் மேலும் மேலும் குழப்பிக் கொண்டிருக்க அவனோ அன்னை தந்தையிடம் விஷயத்தை கூறி அவள் வீட்டில் பேசுமாறு கூறினான்.

மாலை அவள் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற நேரம் அவள் தாய் பரபரப்பாய் சமையலறையில் ஏதோ செய்து கொண்டிருந்தார்.இவளை கண்டவர் உடனே அவளிடம் ஓடிவந்து திருஷ்டி கழித்து தன் மகிழ்ச்சியை வெளிப்டுத்தினார்.

ரொம்ப சந்தோஷம் கண்ணு..கடவுள் என்னை கைவிடல..உனக்கு ஒரு நல்லது நடக்கனும்னு போகாத கோவில் இல்ல வேண்டாத தெய்வமில்ல..இப்போ ராசா மாதிரி ஒரு மாப்பிள்ளை..எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா..நீ சம்மதிச்சுட்டனு அவங்க சொன்னத கேட்டவுடனே எனக்கு கையும் ஓடல காலும் ஓடல..அடுத்த முகூர்த்ததுலயே கல்யாணம் வச்சுக்கலாம்னு சொல்லிடாங்க..”

என்ன!!ஏன் இவ்ளோ சீக்கிரம்??எனக்கென்னவோ ரொம்ப அவசர படுறோமோனு தோணுதும்மா..”

கண்ணு அதெல்லாம் ஒண்ணுமில்ல.தம்பி போய் மாப்பிள்ளையை பத்தியும் அவங்க குடும்பத்தை பத்தியும் தீர விசாரிச்சுட்டான்.ஒரு ப்ரச்சனையும் இல்ல..நீ சந்தோஷமா இரு மத்தத நாங்க பாத்துக்குறோம்..”

ம்ம்மா வரதட்சனையெல்லாம் கேட்டா நா ஒத்துக்கவே மாட்டேன்ம்மா..இப்போவே சொல்லிடுறேன்..”

திஷானி அதெல்லாம் நீ ஏன் கவலபடுற..பேசாம போய் கல்யாண பொண்ணா தயாராகுற வேலையை பாரு.”.என்றவர் அவளிடமிருந்து தப்பி உள்ளே ஓடிவிட்டார்.

வரதட்சனையை பற்றி யோசித்தவுடன் இதை எப்படி மறந்தோம் என வேகமாய் தன் கைப்பேசியை தடவி எடுத்தவள் அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.

ஹாய்

ஹலோ டியர்..”

டியரா??”

ம்ம் பொண்டாட்டினே கூப்டலாம் பட் நீதான் ஒரு அங்ரி பேர்ட் ஆச்சே..”

.கே பை..”

இப்போ என்ன?”

எனக்கு ஒரு க்ளரிபிகேஷன் வேணும்

எதைப் பத்தி?”

எல்லாம் பேசினீங்க இந்த டௌரி பத்தி ஒண்ணும் சொல்லலயே அதான் தெளிவு படுத்திக்கலாம்னு..”

சற்று நேரத்திற்கு ஒரு பதிலும் வராமலிருக்க அவளே மீண்டும் அனுப்பினாள்.

எதுவாயிருந்தாலும் சொல்லுங்க..”

யா இப்போ தான் கல்குலேட் பண்ணி முடிச்சேன் இதோ அனுப்புறேன்”,

என்ற பதிலை பார்த்து ஏனோ மனம் ஏமாற்றமாய் உணர்ந்தது திஷானிக்கு.இறுதியில் இவனும் மற்றவர்களை போலத்தானா என எண்ணும் போதே வந்த குறுஞ்செய்தி சத்தத்தில் அதை திறந்தவளின் கண்கள் இன்னுமாய் விரிந்தன.

உந்தன் கயல்விழிகளின்

கடைக் கண் பார்வையும்

அந்த கூர்நாசியை உரசிச்

செல்லும் பொல்லாத கோபமும்

புன்னகைக்கும் போது பூத்துச்

சிரிக்கும் அந்த செவ்விதழ்களும்

இறுதி மூச்சு வரை என் வசம்

இருப்பதே நம் திருமணத்திற்காய்

நீ கொடுக்க வேண்டிய தட்சணை..”

இன்னும் நிறைய கேக்கணும் தான் சரி பாவம் இதுமட்டும் குடுத்தா போதும்னு பெருந்தன்மையா விட்டு கொடுக்குறேன்..”

அதிலிருந்து இன்னமும் விழியகற்றாமல் அப்படியே எத்தனை நேரம் அமர்ந்திருந்தாளோ அதன் பின்னான அவனது ஒரு குறுஞ்செய்திக்கு கூட அவள் பதில் அனுப்பவில்லை.அடுத்து சில நாட்களில் அவனே அவள் முன் வந்து நின்றான் அவளின் பதிலுக்காக..

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode