அன்பு-2

by ஸ்ரீ
0 comments 18 views
A+A-
Reset

காலையில் எழுந்தவன் சீக்கிரமாகவே தயாராகி அன்னையைத் தேடிச் சென்றான்.தந்தையிடமும் அளவுகடந்த அன்பு இருக்கிறது எனினும் தனக்கு வேண்டிய காரியம் சாதிப்பது அன்னையிடம் தான்..

ம்மா..”

சொல்லு கண்ணா..பால் சாப்டுறியா இல்லை டிபனே வைக்கட்டுமா??”,என்றவாறு வேலைகளை கவனித்து கொண்டிருந்தவரை தன்புறம் திருப்பியவன்,

ம்மா முக்கியமான ஒரு விஷயம் இங்க உக்காரு முதல்ல..”

டேய் ஏதோ புது ப்ராஜெக்ட் நேரமில்ல அது இதுனு சுத்திட்டு இருந்த இப்போ என்ன உக்காந்து பேசுற அளவு முக்கியமான விஷயம்?”

ம்மா நா கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்..”

அபி கண்ணா நிஜமா தான் சொல்றியா??இப்போவே அப்பாவ போய் தரகரை பாக்க சொல்றேன்..”

அதெல்லாம் தேவையில்லம்மா..எனக்கு ஒரு பொண்ணை பிடிச்சுருக்கு..”

டேய் என்னடா சொல்ற!!அப்போ அதனாலதான் இவ்ளோ நாள் கல்யாண பேச்சு எடுத்தாலே நழுவி ஓடினியா??”

ஐயோ அப்படி எதுவுமே இல்ல..நேத்து தான் அவளை பாத்தேனே..”,என்றவன் அவளைப் பற்றி விவரத்தைக் கூற சாரதா ஒரு நொடி பயந்து தான் போனார்..

அபி!!!இதெல்லாம் சரியா வராதுடா!!”

ஏன்மா அப்படி சொல்ற நீ தான சின்ன வயசுல இருந்து எல்லார்கிட்டேயும் அன்பா இருக்கணும்னு சொல்லி வளர்த்த இப்போ என்னாச்சு?”

அபி கண்ணா அது வேறடா..இது நம்ம குடும்பம் சம்பந்தபட்ட விஷயம் அப்பா என்ன சொல்லுவாரு..சொந்தகாரங்களையெல்லாம் எப்படி பேஸ் பண்றது எவ்வளவோ இருக்குடா!!”

ம்மா நீ சொல்ற எல்லாமே எனக்கும் புரியுது..ஆனா அதையும் மீறி எனக்கு கல்யாணம்ங்கிற நினைப்பு வந்ததே அவளை பாத்துதான்..நீ கேக்கலாம் என்னடா ஒரு பத்து நிமிஷம் பாத்ததுக்கு இவ்ளோ பேசுறநு..

உனக்கே தெரியும் தான எனக்கு எவ்ளோ ப்ரெண்ட்ஸ் இருக்காங்க அதுலயும் க்ளர்ஸ்..அத்தனை பேரையும் மீறி மனைவியா பாக்க நினைக்குற ஒரே பொண்ணு இவ மட்டும் தான்ம்மா..இதுக்கு மேல என் பீலிங்க்ஸ எக்ஸ்ப்ரஸ் பண்ண தெரில..நீ யோசிச்சு சொல்லுமா..லேட் ஆச்சு நா கிளம்புறேன்..பை மா..”,என்றவனிடம் ஒன்றும் பேச தோன்றாமல் அதிர்ச்சியில் அவர்நிற்க,

நிதானமாய் உள்ளே நுழைந்த ராகவன் அவரிடம்,”என்ன சாரதா பையன் காலைலேயே ஏதோ காதை கடிச்சுட்டு போறான்..என்ன விஷயம்??”

அது வந்துங்கஎன தயங்கி தயங்கி கூறி முடித்தவர் கேள்வியாய் கணவரைப் பார்க்க,

சாரதா அந்த பொண்ணு யாரு என்னனு நம்ம நரேன்கிட்ட விசாரி..”

அபிப்பா!!!”

ஏன் சாரதா இவ்ளோ டென்ஷன்..அவனோட நினைப்பு நம்ம எத்தனை பேருக்கு வரும்..எவ்ளோ பெரிய வேலைல இருக்கான்..எப்படிபட்ட வரன் எல்லாம் வந்துருக்கு அதெல்லாம் மீறி அவன் அந்த பொண்ணை பிடிச்சுருக்குனு சொல்றான்னா.கண்டிப்பா எல்லாம் சரியா வரும்நீ கேளு அப்பறம் பாப்போம்..”

அடுத்த அரை மணி நேரத்தில்தன் வேலையெல்லாம் முடித்தவர் நரேனுக்கு அழைத்து பேச ஆரம்பித்திருந்தார்..கேட்ட வரை அனைத்துமே திருப்தியாய் இருப்பதாய் தோன்ற அவர்களின் விவரங்களை வாங்கிக் கொண்டார்.

ராகவனிடம் கலந்து ஆலோசித்து அன்று மாலையே அவர்கள் வீட்டிற்கு இருவருமாய் சென்றனர்..நடுத்தர குடும்பத்திற்கான சிறிய வீடாய் இருக்க அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருந்தனர்.ஐந்து நிமிடம் ஆகியும் கதவு திறக்காமல் இருக்க மறுபடியும் அழைப்பு மணியை அழுத்தச் சென்ற நேரம் கதவு திறக்க ஒரு படி இறங்கி கீழே நின்றார் ராகவன்.

கதவை திறந்தது திஷானி தான்.பார்த்தவுடனேயே இருவருக்குமே திருப்தி தான்.அத்தனை களையான முகம்..அதற்குள் அவளின் பேச்சு அவர்களை நடப்புலகிற்கு கொண்டு வந்தது..

சாரி ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சுடேனா..சொல்லுங்க யாரை பாக்கனும்?”

அம்மா இருக்காங்களாம்மா?”

..இருக்காங்க ஆன்ட்டி வாங்க வாங்க அங்கிள்.”

ம்மா இங்க வாயேன்

உள்ளிருந்த மெலிந்த தேகமாய் நடுத்தர வயது பெண்மணி வெளியே வர சாரதா சிநேகமாய் புன்னகைத்தார்.

நாங்க நரேன் வீட்டு பக்கத்துல இருக்கோம்..”

நரேன்ஓ அந்த தம்பிங்களா.சொல்லுங்க என்ன விஷயம்.நா இப்போ எங்கேயும் வேலைக்கு போறதில்ல..”,,என்றார் தயக்கமாய்.

ம்ம் தெரியும் நாங்க வந்ததே வேற விஷயம் ..”,என ஓரமாய் நின்ற திஷானியை பார்த்தவர்,

இன்னைக்கு ஸ்கூல்க்கு போகலையாம்மா?”

இல்ல ஆன்ட்டி அம்மாக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல அதான் லீவ் எடுத்துகிட்டேன்..”

..”,இருவரையும் மாறி மாறி பார்த்தவர் வரவழைத்த தைரியத்தோடு,

நாங்க உங்க பொண்ணு திஷானிய எங்க பையன் அபினவ்க்கு கேட்டு வந்துருக்கோம்..”

கேட்டவரின் முகம் மகிழ்ச்சியில் பிரகசித்தாலும் தன் மகளை கண்ட அடுத்த நொடி முகம் வாடிவிட்டது..

அம்மாவ ஏன்ம்மா முறைக்குற..எதுவாயிருந்தாலும் எங்ககிட்ட பேசு..அதுக்காக தான வந்துருக்கோம்..”

ஆன்ட்டி தப்பா எடுத்துக்காதீங்க..உங்களுக்கு யாரு என்ன சொல்லி இங்க வந்துருக்கீங்களோ எனக்கு தெரில..ஆனா என்னை நேர்ல பாத்த அப்பறமும் உங்க முடிவுல மாற்றம் இல்லைனா..ஒரே விஷயம் தான் இருக்க முடியும்..உங்க பையனுக்கும் என்னை மாதிரியே??சாரி தப்பா எடுத்துகாதீங்க..”

ம்ம் நீ கேக்க வர்றது புரியுதும்மா..ஆனா அப்படியெல்லாம் எதுவும் இல்ல..உன்னைபத்தி எல்லாம் தெரிஞ்சும் வந்ததுக்கு காரணம் என் பையனுக்கு உன்னை பிடிச்சுருக்கு அது மட்டும் தான்..”

முதன் முறையாய் திஷானியின் மனம் தடுமாற்றம் அடைந்தது..

என்னை ஒருத்தனுக்கு பிடிச்சுருக்கா..இவங்க சரியா தான் பேசுறாங்களா??”,அவளின் குழப்பமும் நியாயம் தானே..அவள் சொந்த பந்தங்களே அவள் திருமணப் பேச்சை அவள் அன்னை எடுத்தாலே என்னென்ன பேசுவார்கள் என்று அறிந்தது தானே..மீண்டும் சாரதாவின் குரல் அவளை நடப்பிற்கு அழைத்து வந்தது..

என் பையன் பேரு அபினவ்.சாப்ட்வேர்ல ப்ராஜெக்ட் மேனேஜரா இருக்கான்..உன்னை தற்செயலா பாத்துட்டு வந்து எங்ககிட்ட சொன்னான்..நரேன்ட்ட விசாரிச்சோம் எங்களுக்கும் திருப்தியா இருக்கவே சரி நேர்ல பாத்து பேசிடுவோமேனு வந்தோம்..”

ஆன்ட்டி..”

திஷானி ஒரு நிமிஷம் உள்ளே வாயேன்..மன்னிச்சுருங்க இதோ வந்துடுரேன்..”,என அவள் கைப்பிடித்து அவள் அன்னை உள்ளே அழைத்துச் சென்றார்..

என்னம்மா இது வந்துருக்கவங்க முன்னாடி..”

திஷானி நா உன்னை கையெடுத்து கும்பிட்டு கேக்குறேன்..இதுக்கு முடியாதுநு மட்டும் சொல்லிடாத.நீ சொன்னத கேட்டு இத்தனை நாள் நானா கல்யாண பேச்சை எடுக்காம தான இருந்தேன்.இப்போ தானா வந்த சம்மந்தத்தை நீ கெடுத்துடாத திஷானி.எனக்காக நீ இதை மட்டும் பண்ணு”,என மகளின் முன் கைகூப்பி நிற்க வெளியில் அவர்களையும் வைத்துக் கொண்டு அதற்கு மேல் விவாதம் பண்ண தோன்றாதவளாய்,

இப்போ என்ன பண்ணணும்ங்கிற

அடுத்த பத்து நிமிடத்தில் அழகிய பட்டுப் புடவையில் வெளியே வந்தவளைப் பார்த்தவர்களுக்கு இன்னுமாய் மனம் நிறைந்து போனது.

இங்க வந்து உக்காரும்மா..”

ஆன்ட்டி..”

இங்க பாரு திஷானி உன் தயக்கம் பயம் எல்லாமே எங்களுக்கு புரியுது.இதில் எந்த விதமான கட்டாயமும் கிடையாது.உன் சம்மதம் எங்களுக்கு ரொம்பவே முக்கியம்.என் பையனை பார்த்து பேசு அப்பறமா உன் முடிவ சொல்லு.என்ன சொல்ற?”

இத்தனை தன்மையாய் தெளிவாய் பேசுபவர்களை அவமதித்து பேச தோன்றவில்லை அவளுக்கு.சரி யென தலையசைத்து வைத்தாள்.

அவளின் நம்பரை பெற்றுக் கொண்டு அவர்கள் வெளியே செல்ல அவளின் தாய்க்கோ மனம் கொள்ளா மகிழ்ச்சி.விளக்கின் முன் சென்று அத்தனை தெய்வதிற்கும் வேண்டினார்.மகனுக்கு போன் செய்து விஷயத்தை தெரிவிக்க அவனுக்குமே அக்காவிற்கு நல்ல காலம் பிறந்துவிடும் என்ற நம்பிக்கையில் உவகை கொண்டான்.

மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவன் தாய் தந்தை முகத்தை பார்க்க அதிலிருந்து ஒன்றையும் கண்டு பிடிக்க முடியாமல் தனதறைக்குச் சென்று உடைமாற்றி வந்தான்.சாப்பாட்டு மேஜையில் மூவருமாய் இரவு உணவுக்காக அமர அபி செய்கையால் தாயிடம் என்னவாயிற்று என கேட்க அதை கவனித்த அவன்தந்தையோ,

என்னடா அம்மாகிட்ட ரகசியம் கேக்குற?”

ப்பா அதெல்லாம் ஒண்ணுமில்லையே..”

ம்ம் ஒண்ணுமில்லையா?அப்போ திஷானி பத்தி தெரிய வேண்டாமா உனக்கு?”

ப்பாபாபா

ம்ம் அம்மா காலைலேயே சொன்னா நரேன்கிட்ட விசாரிச்சோம்.போய் நேர்ல பாத்துட்டும் வந்தோம்.”

என்னது???”

“”அபி கண்ணா எல்லாம் நல்லபடியா தான் போச்சு ஏன் டென்ஷன் ஆகுற..நல்ல பொண்ணுடா..எங்களுக்கு ரொம்ப பிடிச்சுருக்கு அவங்க அம்மாவுக்கும் சம்மதம் தான்.பொண்ணுதான் ஒண்ணுமே சொல்லல.நீ பேசி பாரு டா”,என அவள் நம்பரை அவனிடம் நீட்ட,

தேங்க் யூ சோ மச்ப்பா..என்னை புரிஞ்சுகிட்டதுக்கு..ம்மா உனக்கும்..”,என்றவன் புன்னகையோடு கைப்பேசியை எடுத்தவாறு மாடியில் தனதறைக்குச் சென்றான்.

கால் செய்ய நினைத்தவன் பின் தன் முடிவை மாற்றி வாட்ஸ்அப்பில் மெசெஜ் அனுப்பினான்..

ஹாய்..திஸ் இஸ் அபினவ்..”

பத்து நிமிடங்களுக்கு மேல் பதில் வராமல் போக கால் செய்தே பேசலாம் என மொபைலை கையில் எடுத்த நேரம் அவளிடமிருந்து பதில் வந்தது..

ஹாய்..”

ஹவ் ஆர் யூ

நல்லாயிருக்கேன்..நீங்க எப்படி இருக்கீங்க?”

பைன் பைன்..அம்மா இப்போதான் சொன்னாங்க..சோ நாளைக்கு மீட் பண்றதுல உங்களுக்கு ப்ராப்ளம் இல்லையே?”

ம்ம் இல்ல எனக்கும் ஸ்கூல் லீவ் தான்..”

.கே தென் மார்னிங் 10 மணிக்கு உங்க ஸ்கூல் பக்கத்துல இருக்குற காபி டே ல மீட் பண்ணலாம்..”

ஷுவர் நாளைக்கு பாக்கலாம்..குட் நைட்

குட் நைட் அண்ட் ஸ்வீட் ட்ரீம்ஸ் J

என்று போனை கீழே வைத்தவனுக்கு நிச்சயம் இது மனதிற்கு புது அனுபவமாய்தான் இருந்தது..எத்தனையோ நண்பர்கள் எத்தனையோ உரையாடல்கள் இருந்தும் இந்த 5 நிமிட உரையாடல் மனதிற்கு நெருக்கமாய் தோன்றியது..அதே எண்ணத்தோடு மறுநாள் அவளை சந்திக்க தயாரானான்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode