மலர்-16

by ஸ்ரீ
4 comments 190 views
A+A-
Reset

குறள் 356:

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி

மு.வ விளக்க உரை: கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத ழியை அடைவர்.

இரவு காரில் கிளம்பிய உன்னி முகுந்தன் மங்கைக்கு அழைத்தான். அழைப்பு ஏற்கப்படாமல் போக தன்னவளின் நினைவில் வெளியே வேடிக்கை பார்த்த வண்ணம் நிமிடங்களை நகர்த்தினான்.

ஐந்து நிமிடங்கள் கழித்து மங்கையிடமிருந்து வீடியோ கால் வர தனது ஹெட் செட்டை மாட்டியவனாய் அழைப்பை ஏற்றான்.

“தங்கம் கிளம்பிட்டியா?”

“ம்ம் மலரே அரை மணி ஆச்சு.”

“நீ ஏன் அவ்வளவு தள்ளியிருக்க? எனக்கு முகுந்தனை தேடுது.”

“என்ட சக்கரே..”

“திருமா கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துரு சரியா?”

“கட்டாயம் வரு. சரி சொல்லு அங்கே எல்லாரும் என்ன சொல்றாங்க?”

“ம்ம் எல்லாருக்கும் முகுந்தன் வந்தது  ரொம்ப ஹேப்பியாம். முகுந்தனை போல ஒரு நல்ல பையன் இல்லையாம். அதனால அவனையே பாப்பாக்கு கல்யாணம் பண்ணித் தரலாம்னு பேசிக்குறாங்க.”, என்றவள் சிரிக்க அவளையே பார்த்திருந்தவனும் பற்கள் தெரிய சிரித்தான்.

“ஞான் ஒரு பாடு ஹேப்பி மலரே..”

“எதுக்காம்?”, என்றவள் வேண்டுமெனவே கேட்க அவளது மூக்கைத் திருகுவது போல் விரலைக் கொண்டு சென்றவனாய்,

“இந்த ப்ரிய (அன்பான) பெண்குட்டி எனக்கு கிடைச்சதுக்கு.”

“ ..”

“எனக்கு ஒரு ஆசை பரையட்டே? ( சொல்லவா)”

“என்ன தங்கம்?”

“நீ கார்த்தியை கூப்பிடுற மாதிரி என்னை கூப்பிடணும்.”

“அடடே சார் சைலண்டா எல்லாத்தையும் நோட் பண்ணிருக்கீங்க அப்போ?”

“மலரே ஒரே ஒரு தரம் ப்ளீஸ்.”

“முகுந்தா மாமா நல்லாவே இருக்காது..”

“அப்போ உன் மாமாவையே கூப்பிட்டுக்கோ..”, என்றவன் ஏமாற்றமாய் அவளைப் பார்த்திருக்க,

“அவர் தமிழ்நாட்டு மாமா. ஆனால் என்ட உன்னி ஏட்டனல்லே!”, என்றதில் அவனின் முகம் தாங்கிய பிரகாசத்தில் மங்கைக்கு அத்தனை மகிழ்ச்சியாய் இருந்தது.

“ஒழுங்கா ஒரு தடவை கூப்பிடு மலரே..”

“உன்னியேட்டா ப்ராந்தாயி..”

“மலருக்கு மலையாளம் ரொம்ப அழகாயிருக்கு. இன்னும்  ஒரு மாசம் வெயிட் செய்யணும் உன்னைப் பார்க்க..”

“அதனால தான் சொல்றேன் அப்பாகிட்ட பேசி என்னை கல்யாணம் செஞ்சு கூட்டிட்டு போனு”

“உனக்கு எல்லாம் விளையாட்டு தான். மலரிண்டே காமுகனாயிட்டு (காதலனாய்) இருக்க ஆசை. அவளோட அன்பெல்லாம் ஸ்பெஷலா அனுபவிக்குறதுக்கு ஆசை. அப்பறம் கல்யாணம் கழிக்காம்.”

“பாரு டா இதில் இவரு அமைதியாம். ஒண்ணுமே பேச மாட்டாராம். ஊரை ஏமாத்த வேண்டியது.”

“பொன்னு மலரிண்ட முகுந்தன் மட்டும் தான் இப்படி.”

“லவ் யூ தங்கமே..”

“ஷெரி போய் உறங்கு. மார்னிங் சீக்கிரமே ஷுட்டிங் போயிடுவேன். ப்ரேக்கில் பேசுறேன் மலரே குட்நைட்.”

“ம்ம் ரீச் ஆனதும் மறக்காம மெசெஜ் பண்ணிடு. பை மிஸ் யூ.”, என்றவள் விடைபெறும் விதமாய் கையசைக்க முகுந்தனும் கையசைத்து அழைப்பைத் துண்டித்தான்.

மறுநாள் காலையில் எழும்போதே ஒரு வித சோர்வோடு தான் விடிந்தது மங்கைக்கு. முகுந்தனின் குறுஞ்செய்திக்கு பதிலனுப்பி விட்டு அவனுக்காக ஒரு பாடலை எடுத்து ஸ்டேடஸாக வைத்துவிட்டு தயாராகி கீழே சென்றிருந்தாள். அமைதியாய் காபியை வாங்கியபடி வந்து அமர்ந்தவள் ஒன்றும் பேசாமல் அவள் போக்கில் காபியை பருகத் தொடங்கினாள்.

“ஏலே மங்கை!”

“ம்ம் என்னப்பா?”

“என்னலே அமைதியா இருக்க உடம்புக்கு எதுவும் பண்ணுதா?”, என்றவர் பதட்டமாய் மகளின் கழுத்தில் கைவைத்துப் பார்த்தார்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல பா. அத்தை இன்னைக்கே ஊருக்கு கிளம்புறாளே. போர் பா.”

“அடக் கழுதை அதுக்காகவா இப்படி இருந்த. நான் என்னவோ ஏதோனு பயந்தே போயிட்டேன். எல்லாரும் பொழப்பை பார்க்க போகணும்ல ஆத்தா. இன்னும் ஒரே மாசம் தான் திரும்ப அண்ணன் கல்யாணத்துக்கு எல்லாரும் வரப் போறாக. இதுக்கு போய்.”

“ம்ம்”

“என்ன பாப்பா மூஞ்சியே வாட்டமா இருக்கு?”

“நீங்க எல்லாம் ஊருக்கு போறீங்கனு மூஞ்சியைத் தூக்கி வைச்சுட்டு உட்கார்ந்துருக்கு.”

“சின்னதில் இருந்து நீ மாறவே இல்லை டி.  பேசாம நீயும் என்னோட சென்னை வந்துரியா?”

“போ அத்தே.”

“பாப்பா திருமா கல்யாணத்துக்கு வருவோம். அடுத்து கார்த்தி கல்யாணத்துக்கு நீங்க எல்லாம் அங்கே வந்துருங்க. இதுக்கெல்லாம் வருத்தப்பட்டா நாளைக்கு கல்யாணம் முடிஞ்சு மாமியார் வீட்டுக்கு எப்படி டி போவ?”, என்றதில் மங்கைக்கு முந்தியவராய் முத்துப் பாண்டி,

“அட, பிள்ளை நீ போறனு வருத்ததில் இருக்கானு சொன்னா நீ அவளை கிளப்பி விட்டுட்டு இருக்க”

“நல்ல அப்பா நல்ல பொண்ணு”, என்றவர் சமையலறைக்குள் சென்றுவிட தாமோதரனோடும் கார்த்தியோடும் அன்றைய பொழுது கழிந்தது மங்கைக்கு.

மதிய உணவு வேளையின் போது தான் கைப்பேசியை எடுத்த முகுந்தனுக்கு மங்கையின் பாடல் அத்தனை நேர களைப்பையும் போக்கியிருந்தது.

இனி உன்னை பிரிய மாட்டேன்
துளி தூரம் நகர மாட்டேன்
முகம் பார்க்க தவிக்கிறேன்
என் இனிய பூங்காற்றே

மீண்டும் மீண்டுமாய் அதையே கேட்டிருந்தவனுக்கு சட்டென யோசனைத் தோன்ற ஒரு வாய்ஸ் மெசெஜை அனுப்பிவிட்டு முத்தம் கொடுக்கும் ஸ்மைலியையும் போட்டு அனுப்பிவிட்டு வேலையைக் கவனிக்கச் சென்றான்.

பதினைந்து நிமிடங்கள் கழித்து கைப்பேசியைப் பார்த்தவள் தனது ஹெட்செட்டைத் தேடி எடுத்து ஆடியோவில் அவனது குரலை எதிர்பார்க்க அங்கோ,

மலரே…….
என்னுயிரில் விடரும் பனிமலரே…

 

மலரே நின்னை காணாதிருந்நால்
மிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே
அலிவோடு என் அரிகத்தின் அணையாதிருந்நால்
அழகேகிய கனவெல்லாம் அகலுன்ன போலே

வேலை இருக்கு சக்கரே பொண்ணே. மிஸ் யூ பை.”, என்ற பாடல் அவனது குரலில் முடிந்திருந்தும் அப்படியே அமர்ந்திருந்தாள் மங்கை.

அதிலும் அந்த மலரே அவளது காதுகளுக்குள் இன்னுமும் வண்டாய் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்ததாய் ஓர் உணர்வு. பெண்ணவளை அவன்பால் மொத்தமாய் பித்தாக்கி விட்டிருந்தான். அதன்பின் எத்தனை முறை அந்த ஆடியோவை கேட்டாள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

இரவு அவளது பதிலை எதிர்பார்த்து வாட்ஸ்அப்பைத் திறந்தவன் அவள் ஒன்றும் அனுப்பாமலிருப்பதைக் கண்டு அவளை அழைத்தான். அதைத் துண்டித்து விட்டு மங்கை வீடியோ காலில் அழைத்தாள்.

“மலரே.. அத்தனை கொடூரமாவா இருந்தது என் பாட்டு?”

“லவ் யூ.”, என்றவள் திரையில் அழுத்தமாய் இதழ் பதிக்க முகுந்தன் ஒரு நொடி அதிர்ந்து போனான்.

“மலரே!!!”

“நான் உன்னை மிஸ் பண்றதா ஸ்டேட்டஸ் போட்டா நீயும் மிஸ் யூனு போட்டுட்டு போயிருக்கணும். அதைவிட்டுட்டு இப்படி அழகழகா காதலிச்சு என்னை இன்னும் இன்னும் மிஸ் பண்ண வைக்குற தங்கமே..”

“….”

“உன் குரலில் அந்தப் பாட்டு.. எனக்குள்ளே ஓடிட்டே இருக்கு. எனக்காக இப்போ இரண்டு லைன் பாடேன் ப்ளீஸ் ப்ளீஸ்..”

ஞானென்டே ஆத்மாவின் ஆழத்தின் உள்ளில்
அதிலோலம் ஆரோரும் அறியாதே சூட்சிச்ச
தாளங்ஙள் ராகங்ஙள் ஈணங்ஙளாயி
ஓரோரு வர்ணங்ஙளாயி

 

தளருன்னு ஒரென்றே தனு தோறும் நின்றே
அலை தல்லும் ப்ரணயத்தால் உணரும் மலரே……
அழகே…..

தன்னவளைப் பார்த்தபடியே பாடி முடித்தவனுக்கு அப்படியே திருஷ்டி கழித்தாள் மங்கை.

“நிஜமாவே நீ இத்தனை ரொமேன்டிக்கா ஹீரோ?!”

“தெரியலையே மலர் இப்போ தானே வந்துருக்கா!”

“ம்ம் என்னோட இதெல்லாம் நிறுத்திக்கணும். படத்தில் எங்கேயாவது ரொமேன்ஸ் எல்லாம் வந்தது…”

“இதெந்தா கொடுமை. அது ஜஸ்ட் நடிப்பு மாத்திரமே.”

“இருந்தாலும்..”

“!!!”

“சும்மா சொன்னேன் பயப்படாத உன் வேலைக்குள்ளே நான் வரவே மாட்டேன்.”, என்றவளை இன்னுமாய் பிடித்தது முகுந்தனுக்கு.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

4 comments

Kavi Natarajan July 22, 2026 - 2:26 am

💞💞💞💞💞💞💞💞

Fathima.ar July 22, 2026 - 3:12 am

Appavuklu Theriyala ponnu manasinulle kadhal vandhucho mode la suthura

srichitra July 22, 2026 - 8:01 am

Nice

suganyavel July 22, 2026 - 3:31 pm

Super💕

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode