656
“என்னைத் தொட்டு
“குளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்
இரவு களைப்பாய் தன்னருகில் வந்தமர்ந்தவளின் காலைத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டவனாய் மெதுவாய் அழுத்திக் கொடுத்தான் முகுந்தன்.
“எந்தா உன்னியேட்டா ரொம்ப நேரமா அமைதியா இருக்கே?”
“என்ட பொன்னு மலரோட நெருக்கத்தை அனுபவிச்சுட்டு இருக்கேன் சக்கரே..”
“!!”
“இத்தனைப் பேருக்கு ப்ரியப்பட்ட பொண்ணு, ப்ரியப்பட்ட ஒருத்தன் நானல்லே. அது இப்போ ரொம்ப தோணுது.”
“நீ அவ்வளவு அன்பையும் மொத்தமா தர்ற ஒருத்தனாய் இருக்கியே உன்னியேட்டா.”
“…”
“எனக்கு இப்பவும் இதுக்கு பதில் தெரியாது. எந்த ஒரு நிமிஷத்தில் நீ தான் என் எல்லாம்னு எனக்குள்ளே தோணிணது. ஏன் தோணிச்சு எப்படி தோணிச்சு எதுவுமே தெரியலை.
ஒரு விதத்தில் நாம காதல் எதிர்பார்த்த அளவு எதிர்ப்பெல்லாம் இல்லாமல் ரொம்ப அழகான Happily married ever after மாதிரியான காதல் கதையாய் இருக்க காரணம் அந்தக் கடவுளோட மகிமை இல்லாம வேற என்ன?
கல்யாணத்தைப் பத்தி எதிர்பார்ப்பே இல்லாத ஒருத்திக்கு கல்யாண பந்தத்தோட முழு அர்த்தமா ஒருத்தனை புருஷனாக்கியிருக்கா அந்த மீனாட்சி.”
“மலருக்கு எல்லாரும் எதோ ஒரு சர்ப்ரைஸ், கிப்ட் எல்லாம் கொடுத்தாங்களே. ஆனால் நான் ஒண்ணுமே தரலையே சக்கரே?”
“ஏன் தராம.. இதோ..”, என்றவள் அவனது தாடியற்ற முகத்தைச் சுட்டிக் காட்ட அதில் சிரித்தவனாய்,
“இப்போ ஒரு சின்ன சர்ப்ரைஸ் அண்ட் நாளைக்கு ஒரு பெரிய கிப்ட்”, என்றவன் தனது சட்டையை அவிழ்த்து வலது கையின் புஜத்தைக் காட்ட பார்த்திருந்தவள் விழி விரித்தாள்.
“என்ட மலருக்கு பிடிச்சதல்லே இ ஆம்ர்ஸ். அதை இன்னும் ஸ்பெஷல் ஆக்கணும்னு தோணிச்சு.”
அழகான ரோஜா போன்ற மலர் டட்டூவும் அதன் அருகிலேயே அவளுக்கு அளித்த மோதிரத்தில் இருந்தது போல இரண்டு M இணைந்ததாய் பச்சைக் குத்தியிருந்தான்.
அவனது நிறத்திற்கு லேசாய் சிவப்பு இன்னமும் இருக்க அதை வருடியவள் மெதுவாய் வாய் குவித்து ஊதினாள்.
“மலர் முகுந்தன்..”
“அல்லா, மலர்மங்கை”, என்றவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
“உன்னியேட்டா..”
“ம்ம்..”
“நீ எனக்கு நிறைய நிறைய பண்ற நான் உனக்கு எதுவுமே தரலையே. நிஜமா இதெல்லாம் எனக்குத் தோணலை ஆனால் நான் உன்னை நேசிக்குற அளவு யாரையுமே நேசிக்கலை.”
“என்ட பொன்னு மலரையே எனக்கு கொடுத்துருக்கியே அது போதாதா. அதுக்கு ஈடு கொடுக்கத் தான் இந்த மாதிரி சின்ன சின்ன கிப்ட் நான் தர்றது சக்கரே.”
“உனக்கு எப்படி என்னைப் பிடிச்சுது?”
“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட மலரே..”, என்றவன் சிரிக்க செல்லமாய் அடித்தாள்.
“முதன் முதலா ப்ளைட்டில் கண்ணை மூடி உன்னை நீயே தேத்திக்க முயற்சி பண்ணிட்டு இருந்ததைப் பார்த்து சின்ன குழந்தைங்க கடவுள்கிட்ட கண்ணை மூடி ப்ரே பண்ணுமே அப்படி இருந்தது.
எனக்கே எதோ தோணி தான் உன்கிட்ட பேச ஆரம்பிச்சேன். அதுவும் நீ என்னை கண்டுபிடிச்ச அப்பறம் கூட சாதாரணமா பேசின போது அப்படியே உன்னைப் பேச சொல்லி கேட்டுட்டே இருக்கணும்னு ஒரு எண்ணம்.
அதுவரை அப்படி ஒருத்தரோட கம்பெனியெல்லாம் நான் எதிர்பார்த்ததேயில்லை. அதனால தன்னே ப்ரெண்ட்ஸ் கூட கிடையாது. எனக்கே பெரிய ஷாக். அப்பறம் கூட இது ஜஸ்ட் ஒரு அட்ராக்ஷன் போலேனு நினைச்சு விட்டுட நினைச்சேன்.
ஆனால் என்ட மோகினி பொண்ணு எனக்குள்ளே ஜம்முனு உட்காந்துட்டா. அண்ட் அவளை வாழ்க்கை முழுசும் அப்படியே என்னோடவே வைச்சுக்க நானும் தயாராய்ட்டேன்.”, என்றவனது புஜத்தை வருடியிருந்தவளாய் அவனையே பார்த்திருந்தாள்.
“எந்தா பார்வை டி இது?”
“நீ இப்படி தான பார்க்குற என்னை முழுங்குற மாதிரி..”
“அதனால பதிலுக்கு பதில் என்ன பண்ணலாம்னு இருக்க சக்கரே?!”
“ஐயே.. ச்ச சரி சொல்லு நாளைக்கு என்ன கிப்ட்?”, என்று பேச்சை மாற்றியவளைக் கண்டு சிரித்தவனாய்,
“நாளைக்கு மலரை அவ்விட அழைச்சுட்டு போகாம். கண்டிப்பா மலருக்கு பிடிக்கும்.”
“தங்கமே.. என்னதுனு சொல்லு?”
“ம்ஹும். பார்த்து நீயே தெரிஞ்சுக்கோ”, என்றவன் பதில் பேச விடாமல் தன்னவளை தன்னுள் புகுத்திக் கொண்டான்.
மறுநாள் இருவருமாய் காரில் கிளம்ப எங்கு என்னவென எதுவும் அறியாமல் தன்னவனுடனான பொழுதுகளை ரசித்தபடி பயணத்தில் லயித்திருந்தாள் மங்கை.
ஆறு மணி நேரப் பயணத்திற்கு பின் வட்டவடா எனும் மலைக் கிராமத்திற்குள் கார் நுழைய அந்த இயற்கை அழகை பார்த்தவளின் கண்கள் பிரகாசித்தன.
“இது என்ன இடம் தங்கமே!!”
“அழகான ஒரு கிராமம். இங்கே காய்கறிகள் ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கும். மூணாறுக்கு வர்ற பல பேருக்கு பக்கத்தில் இப்படி ஒரு இடம் இருக்குறது தெரியாது சக்கரே..”
உள்ளே செல்ல செல்ல அதன் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லாமல் போக அதை விட பேச்சிழந்து போனாள் கார் நின்ற வீட்டினைப் பார்த்து.
“மலருக்கு என்னோட எங்கே போகணும்னு கேட்டப்போ அதுக்கு மலர் ஒரு பதில் சொன்னா. அது என்னனு நியாபகம் இருக்கோ சக்கரே?!”, என்றதில் ஒரு நொடி யோசித்தவள் அதிர்ச்சியாய் தன்னவனைப் பார்த்தாள்.
“உன்னியேட்டா அது ஏதோ அப்போ தோணிணது. அதுக்காக??!!!”
“என்ட சக்கரேக்கு தோணிணால் மதி. நான் நடத்திக் கொடுக்கும். இப்போ இன்னொரு தடவை பரா.”, என்றவள் தோள் மீது கைப்போட்டு தன்னோடு நிறுத்திக் கொண்டான்.
“அழகான மலையடிவாரம். அதுக்கு கீழேயே சின்னதா நமக்காக ஒரு வீடு. அதில் நானும் என்னோட உன்னியேட்டனும் மட்டும். நம்ம வீட்டைச் சுத்தியும் அழகழகான பூ. அந்த வாசத்தின் நடுவில் ஒரு வாழ்க்கை. எப்படியிருக்கும் இல்ல தங்கமே!”, என்றவள் தன்னவனின் கன்னத்தில் அழுந்த இதழ் பதித்தாள்.
அவள் கேட்டது சிறிதும் மாறாத வண்ணம், அழகான மலையடிவாரத்தில் கண்ணாடி மாளிகையாய் பிரமிக்க வைத்திருந்த வீட்டின் வாயில் முழுவதும் வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கியது. இயற்கையும் இயற்கை சார்ந்த வாழ்வும் பிடிக்காதவர் யார் இருக்க முடியும்.
சற்றும் ஆச்சரியம் குறையாமல் வீட்டை நோக்கி முன்னே நடந்தவள் முகுந்தனைத் திரும்பி பார்க்க வீட்டின் சாவியை அவளிடம் கொடுத்தவனாய்,
“ஹேப்பி மேரிட் லைஃப் சக்கரே.”, என்றவன் அவனது மலரின் நெற்றியில் அழுந்த இதழ் பதித்தான்.
“கிப்ட் எப்படியிருக்கு என்ட மதுர மலரே?”
“உன்னையும் உன் காதலையும் மாதிரி கவிதையா இருக்கு உன்னியேட்டா..”, என்றவளோடு உள்ளே நுழைந்தவன் தங்களுக்கான உலகில் சஞ்சரிக்க அந்த காதலையும் காதலர்களையும் பார்த்து நாணம் கொண்டவளாய் நிலவுப் பெண்ணும் மேகத்தினுள் தன்னை ஒளித்துக் கொண்டாள்.
ஒவ்வொரு நாளும் புதிதாய் தன்னை பார்ப்பவனைப் போல் பாவிப்பவனின் காதல் லீலைகளில் களைத்து போனதை விட நாணம் அதிகமாகிப் போனவளாய் அவனின் மார்பில் தலை சாய்த்துக் கிடந்தவளின் காதருகில்,
“என்னைத் தொட்டு
அள்ளிக்கொண்ட மங்கை
பேரும் என்னடி எனக்குச்
சொல்லடி விஷயம் என்னடி”
என்றவன் காந்தக்குரல் கொண்டு இன்னுமாய் அவளை மயக்க ஆணவனின் அத்தனை வருடக் காதலையும் தன்னுள் பத்திரப்படுத்திக் கொண்டிருப்பதை எண்ணி எண்ணி மனமகிழ்ந்து போனாள் மாமலர் மங்கை.
தனது ஐந்து மாத மேடிட்ட வயிறோடு முகுந்தனின் அருகில் கைகூப்பி மங்கை அமர்ந்திருக்க அவர்களுக்கு அருகில் பலராமோடு பார்வதியும் அமர்ந்திருந்தார்.
அந்த வருடத்தின் மதுரை மீனாட்சியின் திருக்கல்யாணம் சிறப்பாய் நடைபெற மங்கையும் பார்வதியும் தன் கணவன் கையால் திருமாங்கல்ய கயிறைக் கட்டிக் கொண்டனர்.
தங்கள் காதல் கதை ஆரம்பித்த அதே இடத்தில் இப்போது அவர்களின் வருங்காலத்தை வயிற்றில் சுமந்தபடி அமர்ந்திருந்த மலருக்கும் அவளது முகுந்தனுக்கும் வாழ்வில் மீனாட்சியின் அருள் பரிபூரணமாய் கிட்டியிருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஐந்தாண்டுகளுக்குப் பின்,
அந்த பிரம்மாண்ட அரங்கத்தின் முதல் வரிசையில் கேமிரா ஒளிக்கீற்றுகள் கண்கூசச் செய்திருக்க கணவனின் அருகில் புன்னகை முகமாய் பெருமையோடு அமர்ந்திருந்தாள் மங்கை.
உன்னி முகுந்தனின் அந்த வருடத்தின் இரண்டு படங்களும் பெரிய அளவில் வெற்றிப் பெற்றிருக்க, அந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு தான் வந்திருந்தார்கள்.
ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகளுக்குப் பெற்றோர் என்று நம்ப முடியாத அளவிற்கு இருந்த இருவரையும் அங்கு பலரின் பார்வைகள் மொய்த்துக் கொண்டிருந்தன.
“அடுத்த விருதினை வழங்க நமது முன்னாள் இந்திய கிரிக்கெட் பெண்கள் அணி கேப்டன் திருமதி மாமலர்மங்கை உன்னி முகுந்தனை மேடைக்கு அழைக்கிறோம்.”, என்ற அறிவிப்பில் மலர் விழிவிரித்து கணவனைப் பார்த்தாள்.
“போ மலரே..”, என்றவனின் புன்னகையில் கேமிராக்களை மனதில் உணர்ந்தவளாய் புன்னகையோடு எழுந்து மேடைக்குச் சென்றாள்.
“ஹாய் மேம் எப்படியிருக்கீங்க?”
“ரொம்ப நல்லாயிருக்கேன் தேங்க் யூ.”
“சவுத் இந்தியாவில் ரொம்பவே ஃபேமஸான அண்ட் சென்சேஷ்னலான கல்யாணம் அண்ட் கப்பிள்னு பார்த்தா அது நீங்க தான். பட் சோஷியல் மீடியாவை விட்டு ஒதுங்கியே இருக்கீங்களே ஏன்?”
“பெருசா எந்தக் காரணமும் இல்லை. எங்களோட பெர்சனல் பெர்சனலாவே இருந்தா போதும்னு தோணுது.”
“இருந்தாலும் அப்பப்போ கிடைக்குற உங்க பேமிலி போட்டோஸ் அடுத்த இரண்டு நாளைக்கு ஃபுல் ட்ரெண்டில் சுத்துது. அதெல்லாம் பார்ப்பீங்களா?”
“யா யா பார்த்துருக்கேன். ரொம்ப அழகா இருக்கும் எல்லா வீடியோஸும்.”
“சூப்பர் மேம் அவார்ட் வின்னர் நேம் சொல்லிட்டீங்கனா அவங்களையும் மேடைக்கு கூப்பிட்டரலாம்.”, என்றதில் தன் கையில் கொடுத்த அட்டையைப் பிரித்தவள் தன்னவனின் பெயரைப் பார்த்து புன்னகைத்த வண்ணம்,
“தி பெஸ்ட் அக்டர் மேல் அவார்ட் கோஸ் டு உன்னி முகுந்தன்.”, என்றதில் சினிமா பிரபலங்கள் முகத்தில் எல்லாம் அவர்களறியாமல் ஒரு அழகிய புன்னகை.
முகுந்தன் மேடை ஏறியதும் கைக் குலுக்கியவளாய் வாழ்த்துக்களை கூறிவிட்டு அவனுக்கான விருதினை வழங்கினாள்.
இப்போது முகுந்தனின் கையிலும் மைக் கொடுக்கப்பட புன்னகை முகமாய் அதை வாங்கிக் கொண்டவன் அனைவருக்குமாய் வணக்கம் தெரிவித்தான்.
“சார், ஸ்டேஜ் இஸ் யுவர்ஸ். நீங்க பேசி முடிச்ச அப்பறம் எங்களுக்கு இரண்டே இரண்டு கேள்விக்கு மட்டும் பதில் சொன்னால் பேன்ஸ் ஹேப்பி ஆவாங்க.”, என்றதற்கு ஆமோதிப்பாய் தலையசைத்தவனாய்,
“குட் ஈவ்னிங் எவ்ரிவொன். இந்த அவார்ட் என்னோட இரண்டாவது கன்டினியஸ் இயர். அதிலும் என் வைஃப் கையால் அதை வாங்கினதில் இன்னுமே ஸ்பெஷல். இதை ப்ளான் பண்ணிணது யாரா இருந்தாலும் மை ஸ்பெஷல் தேங்க்ஸ் டு யூ.
அண்ட் முக்கியமா ஒருத்தருக்கு இந்த நேரத்தில் தேங்க் பண்ணியே ஆகணும். அது என்ட பாரியா. வலர சப்போர்டிவ் வலர அன்டர்ஸ்டாண்டிங்கோட அவ குடும்பத்தைப் பார்த்துக்குறதால மட்டுமே நான் என்ட வேலையில் கவனம் செலுத்த முடியுது.
தேங்க் யூ ஃபார் மேக்கிங் மை லைஃப் சோ ப்ரைட் மலரே.”, என்றதற்கு இடவலமாய் தலையசைத்து பக்கவாட்டில் லேசாய் அணைத்து நகர்ந்தாள் மங்கை.
“அட அட வீட்டுக்குப் போய் கண்டிப்பா சுத்திப் போடுங்க சார்.”
“மேம் நீங்க சொல்லுங்க, சார் பண்றதில் பாதிக்கு மேல ரொமேண்டிக் படங்கள் தான் பட் ரியல் லைஃபில் சார் எப்படி?”, என்றதில் முகுந்தனை பார்த்து நெளிந்தபடி புன்னகைக்க அவன் சமாதானமாய் தலையசைத்தான்.
“பொதுவா வெளியில் அமைதியா இருக்குறவங்க ரொம்பவே எக்ஸ்ப்ரசிவ்னு சொல்லுவாங்க தான.. சோ சாரும் அப்படி தான்.”
“அவரை விட மோசமா எஸ்கேபிஸம் கத்து வைச்சுருக்கீங்க மேம் நீங்க. சரி போகட்டும் சார் நீங்க சொல்லுங்க உங்க இளமையின் ரகசியம் என்ன? ஃபாதர் ஆஃப் டூ கிட்ஸ்னு சொன்னா நம்பவே முடியலையே..”
“எனக்கோ என்னோட நடிப்புக்கோ நீங்க எந்த க்ரெடிக்ட் கொடுத்தாலும் அதுக்கு மொத்த காரணமும் இவங்க தான். ஒரு பாடு பிரேமம் கொண்ட வாழ்க்கை இருந்தால் இளமை அழகு எல்லாமே தன்னால் வந்துரும்னு எனக்கு தோணுது.”, என்றவனிடம்,
“ஒன் லாஸ்ட் ரெக்வஸ்ட் சார் ப்ளீஸ். எங்களுக்காக, இல்லை இல்லை உங்க வைஃப்க்காக ஒரு பாட்டு ஜஸ்ட் டூ லைன்ஸ் ப்ளீஸ்.”, என்றதை மறுக்க முடியாதவனாய்,
“குளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்
மனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்
அகம் அருவும் மயிலிணைகள் துயில் உணரும் காலம்
என் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்
அழகே….
அழகில் தீர்த்தொரு சிலையழகே
மலரே….
என்னுயிரில் விடரும் பனிமலரே…”
என்று முடித்தவன் அனைவருக்கும் நன்றி தெரிவித்து விட்டு தன்னையே விழுங்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்த தன்னவளின் கைப்பிடித்து கீழே இறங்கியிருந்தான்.
அதன் பின் அனைவரோடும் பேசி விழா முடித்து வீட்டிற்கு வந்தபோது குழந்தைகள் இருவரும் தாத்தா பாட்டியோடு உறங்கியிருக்க தங்களறைக்கு வந்த மங்கை தனது நகைகளை கழட்டி வைத்த வண்ணம் கண்ணாடியில் தன்னவனைத் தான் பார்த்திருந்தாள்.
இத்தனை வருடங்களில் அவனது அபார வளர்ச்சியை கண்ணெதிரே கண்டுகொண்டு இருப்பவளுக்கு வீட்டில் அவனது தங்கம் மட்டும் துளியும் மாறாமல் அதே காதலோடு தன்னைச் சுற்றித் திரிவதில் எப்போதுமே தனி கர்வமுண்டு.
“எந்தா சக்கரே, சைட் அடிக்குற?”
“நீ ஹேண்டசம்னு எனக்குத் தெரியாதா கூட்டத்தில் எல்லாரும் அதையே சொல்லி கேட்டு காண்டில் உன்னை முறைச்சுட்டு இருக்கேன் உன்னியேட்டா.”
“எடி அதுக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. என்னை முறைச்சால்?”
“ம்ம் பின்னே அவங்க எல்லாரோடயுமா போய் சண்டை போட முடியும்.”
“சக்கரே..”, என்றவன் கரத்தை நீட்ட அதைப் பற்றி அவனருகில் அமர்ந்தவளாய் தன்னவனுக்கு திருஷ்டி கழித்தாள்.
“எல்லாரும் என் தங்கத்தைப் பார்த்து கண்ணு வைக்குறாங்க. இதெல்லாம் நல்லதுக்கே இல்லை சொல்லிட்டேன். இனி என்னை அவார்ட் பங்ஷனுக்கு எல்லாம் கூப்பிடாத தங்கமே.”
“ரிலாக்ஸ் பொன்னு மலரே. இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகாத.”
“ம்ம் ஆனாலும் என்ன எல்லாம் கேள்வி கேட்குறாங்க. எனக்கு டென்ஷன் ஆகிடுச்சு.”
“எல்லாம் ஒரு விளம்பரத்துக்கு தான். வேற வேலை என்ன சொல்லு?”
“என் புருஷன் எவ்வளவு ரொமேண்டிக்னு இவங்களுக்கு ஏன் நான் சொல்லணும்.”
“அதுக்கு பதில் மலர் அறியுமோ?!”, என்றதற்கு மங்கை அவன் காதருகில் ஏதோ கூற சத்தமாய் சிரித்திருந்தான் முகுந்தன்.
“கல்யாணம் ஆனப் புதுசில் என்னைப் பார்த்து பார்த்து வெட்கப்பட்ட மலரா இது?”
“ம்ம் அப்படியிருந்தவளை இப்படி மாத்தி வைச்சுருக்குறது யாராம்?”, என்றவளுக்கு குரல் உள்ளே போயிருந்தது.
“இப்போ மலர் வலர கேடி ஆகிப் போயி.”, என்றவன் இன்னுமாய் சிரிக்க அவசரமாய் அவனது வாயை மூடியபடி,
“உன்னியேட்டா போதும்.”, என்றவளுக்கு முகமெல்லாம் சிவந்து விட்டிருந்தது. மதுரமாய் ஒரு காதல், கவிதையாய் ஒரு வாழ்க்கை எனப் படைத்தவனேப் பொறாமைப் படுமளவிற்கான வாழ்வை ஒவ்வொரு நொடியும் ரசித்துக் கழித்து மகிழ்ந்திருந்தனர் தங்கப் பையனும் அவனது சக்கரைப் பொண்ணும்.
“நம் எதிர்காலத்தை ஒளிர்விப்பதாய்
நம் சுயத்தை மேம்படுத்துவதாய்
நமைப்பற்றி நாம் அறியா பக்கங்களை
நமக்கு எடுத்துக் காட்டுவதாய்
குறைகள் அத்தனையும்
நிறைகளாக்குவதாய்
வாழ்விற்கானப் பிடிமானத்தை வழங்குவதாய்
எனக்கு நான் அல்ல உனக்குத் தான் எனும்
மந்திரத்தை ஜெபிப்பதாய்
மொத்தத்தில்
உனக்கான முன்னேற்றமாய் நான்
எனக்கானப் பற்றுகோலாய் நீ என்பதான
வாழ்வெல்லாம் காதலைக் கடந்த
பேரன்பின் சாயல்கள்..”
*********** முற்றும்*********
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
8 comments
Gods own gifted city la Sri gifted novel..
Nice
😍😍
Thank you ka..😍😍😍
Super story sri ma 💞💞💞💞💞💞💞💞
😍😍
Thank you ka..😍😍
Superb story ma. எத்தனை முறை படித்தாலும் அலுக்காது. வாழ்த்துக்கள்.
😍😍
Thank you ka..😍😍
Lovely❤ super💕 story💕
😍😍
Thank you ka..😍😍