மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்லெனும் சொல்

மு.வ விளக்க உரை: மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

வீட்டிற்கு வந்தவன் மஞ்சுநத்தின் அறைக்குள் செல்ல சற்றே கவலையோடு அமர்ந்திருந்தார்.

“டேட்..”

“வா மேக்.. எல்லாம் ஓகே தான?”

“நீங்க ஏன் இவ்வளவு டல்லா இருக்கீங்க? என் மேல நம்பிக்கை இல்லையா?”

“அப்படியெல்லாம் இல்ல டா. இத்தனை வருஷத்தில் இதெல்லாம் நடந்ததேயில்ல.”

“இத்தனை வருஷமும் நீங்க யாரையும் எதிர்த்ததில்ல டேட். அதான் பிரச்சனையும் வரல.”

“..”

“மினிஸ்டர்ஸ் இல்லனால் வேற யாராவது ப்ரஷர் பண்ணினதுக்காக நாம எத்தனை விஷயத்தை இழந்துருக்கோம்னு சொல்லுங்க..”

“ஆனால் நமக்கு நிம்மதி கிடைச்சது மேக்..”

“இப்பவும் அந்த நிம்மதிக்கு ஒரு குறையும் இல்ல..”

“இப்போ எல்லாம் நிறைய பிரச்சனைகள் சின்னதாவும் பெருசாவும் வந்துட்டே இருக்குற மாதிரி இருக்கு. யார் காரணம்? என்ன விஷயம்?”

“அதெல்லாம் போட்டு உங்க மைண்டை நீங்க ஏன் குழப்பிக்குறீங்க? நீங்க தனியா உருவாக்கின சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி காப்பாத்த நாங்க நாலு பேர் இருக்கோம் இப்போ. என்ன வந்தாலும் நாங்க பர்த்துப்போம் டேட்.”

“எங்கே இந்த ரகு பையன் வேற என்னென்னவோ பண்ணிட்டு இருக்கான். அவன் கேட்குற காசை அவன் அப்பன் கொடுக்காம இன்னும் அவனை கோபப்படுத்துறான்.”

“அவன் தனியா தொழில் தொடங்குறது உங்களுக்கு ஓகே வா ப்பா?”

“நம்ம விருப்பத்தை விட அவனோட திருப்திக்கு சிலதை பண்றதில் தப்பில்ல தான மேக். அவனும் நீயும் எனக்கு வேற வேற இல்ல..”

“எல்லாம் சீக்கிரமே சரியாகும் டேட்.. நான் பார்த்துக்குறேன்.”, என்றதற்கு அமைதியாய் தலையசைத்தவர்,

“யாரு அவன்? என்ன கேட்குறானோ அதை…”

“எனக்கு இது ஸ்டேட்டஸ் பிரச்சனை பா. அப்படியெல்லாம் தூக்கி கொடுத்துற முடியாது.”

“..”

“முதல்ல வேணா அவன் தெரியாம நுழைஞ்சுருக்கலாம். ஆனால் இப்போ என்னைப் பத்தி முழுசா தெரிஞ்சுகிட்டு தான் அடக்க நினைக்குறான்.

அப்பறம் நான் எப்படி அமைதியா போக முடியும். நான் பார்த்துக்குறேன் டேட்.”, என்ற மகனிடம் அதற்கு மேல் அவரால் ஒன்றும் கூற முடிவில்லை.

இந்த பிரச்சனைகள் சற்று மட்டுப் பட்டிருக்க பார்த்திக்கு அன்று உடம்பு சரியில்லாததால் வேலைக்குச் செல்லவில்லை என்று பேச்சுவாக்கில் விஜயிடம் கூறியிருந்தான்.

காலை அலுவலகத்திற்கு கிளம்புவதற்கு முன் சமைத்த உணவை எடுத்துக் கொண்டு விஜய் பார்த்தியின் வீட்டிற்கு வந்து விட்டான்.

“வா டா என்ன காலையிலேயே?”

“ம்ம் ஒரு வளர்ந்து கெட்டவனுக்கு உடம்பு சரியில்லையேனு பார்த்துட்டு போக வந்தேன்.”, என்றதில் பார்த்தி அமைதியாகி விட்டிருந்தான்.

“எப்படி உங்க சார் லீவ் கொடுத்தாரு. நீ இல்லைனால் அங்கே எதுவுமே ஓடாதே டா பார்த்தி..”

“கொழுப்பா? தெம்பான பிறகு கவனிச்சுக்குறேன் உன்னை. “, என்றவன் அப்படியே கட்டிலில் படுத்திருந்தான்.

“இதை சாப்பிட்டு மாத்திரையை போட்டு அப்பறம் படு பார்த்தி..”, என்றவன் அவனிடத்தில் கொண்டு வந்த கஞ்சியை நீட்டினான்.

“என் மூஞ்சியில் என்ன தெரியுது சாப்பிடு டா..”

“தேங்க்ஸ் விஜி..”

“காலையிலேயே கெட்ட வார்த்தை பேச வைக்காத.. தின்னு தொலை..”, என்றதில் புன்னகைத்தவனாய் கஞ்சியை அருந்தினான்.

“வீட்டை இதை விட மோசமா வைக்க முடியாதா டா தடியா?”

“அதெல்லாம் எனக்கு செய்ய வராது..”

“அப்போ நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ..”

“ம்கும்..”

“அப்பறம் உங்க சாரோட இருக்க முடியாதேனு தான் கல்யாணத்தைப் பத்தி யோசிக்கலையோ?”

“யானை காது பக்கத்தில் இருக்கோம்னு எறும்பு கொஞ்சம் ஓவரா தான் ஆடுது. நசுக்கிறேன் இரு..”, என்றதில் இதழ் மடக்கி புன்னகைத்தான் விஜய்.

விடியல் அலுவல்களில் பிசியாகி இருக்க அவளுக்கு வேண்டியதெல்லாம் வாசந்தி தான் பார்த்து பார்த்து தயார் செய்தார்.

நகை உடை அவளுக்குத் தேவையானவை என அனைத்துமே அவர் பொறுப்பு தான்.

ஒரு வகையில் அவருக்கு அது மனமாற்றத்தைக் கொடுப்பதாகவும் இருக்க விடியலும் அதனாலேயே தள்ளி இருந்து கொண்டாள்.

இதற்கிடையில் அவளுக்கு அன்று ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நிகழ்ச்சி இருக்க முடிய இரவாகி விட்ட நேரம் அவளுக்காக அங்கிருந்த உணவகத்தில் காத்திருந்தான் மேகன்.

இருந்த களைப்பை எல்லாம் தாண்டி தன்னைப் பார்த்ததும் ஒளிரும் அந்த சிரிப்பை மனதிற்குள் நிரப்பிக் கொண்டவனாய் கை விரிக்க குழந்தையாய் வந்து அவனை அணைத்து விடுவித்தாள் விடியல்.

“ரொம்ப பிசியா இருந்தீங்களே.. இப்போ ஓகேவா மேகன்..”

“யா சின்னு. அதான் உன்னைப் பார்க்க வந்துட்டேன்.”, என்றதில் புன்னகைத்தவள் மெனு கார்ட்டை எடுத்து உணவுகளைப் பார்வையிட மேகனோ நாற்காலியில் இலகுவாய் சாய்ந்தமர்ந்த வண்ணம் விடியலைத் தான் பார்த்திருந்தான்.

தற்செயலாய் நிமிர்ந்தவளின் பார்வையும் அவனோடு கலந்து விட இருவரிடத்திலும் வெளி உலகத்தின் இரைச்சல்களை மறைத்த ஒருவித பேரமைதி.

“சின்னு..”

“ம்ம்..”

“டூ யூ லவ் மீ?”

“ஆங்?? என்ன கேள்வி இது..”

“சொல்லு…”

“இல்லையே லவ் பண்ணலை..”, என்றவள் தலை குனிந்து மெலிதாய் சிரித்தாள்.

“Mrs..மேகன்..”, என்றதில் சட்டென தலையை நிமிர்த்தியிருந்தவளின் முகத்தில் ஒரு தனி ஒளிர்வு.

“என்னாச்சு உங்களுக்கு?”, என்றவள் மெதுவாய் அவனது இடக்கரத்தை பிடித்து அழுத்திக் கொண்டாள்.

“நத்திங்..”, என்றவனின் பார்வை மட்டும் அவள் முகத்தில் இருந்து நகரவே இல்லை.

இப்படியாய் ஒருவர் மேல் ஒருவரின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்க அன்றைய தினம் ராதிகா விடியலுக்கு அழைத்திருந்தார்.

“ஹாய் ஆன்ட்டி..”

“ஹாய் கண்ணம்மா.. எப்படியிருக்க?”

“நல்லாயிருக்கேன் ஆன்ட்டி. நீங்க?”

“கல்யாண வேலையில் செம சந்தோஷமா இருக்கேன்.”, என்றதில் விடியல் புன்னகைத்தாள்.

“இன்னைக்கு நீ ஃப்ரீயா விடியல்?”

“என்ன விஷயம்னு சொல்லுங்க ஆன்ட்டி..”

“நாம இன்னைக்கு வெளியில் போலாமா?”

“ஓ போலாமே. எங்கே வரணும்னு சொல்லுங்க. நான் வந்துரேன்.”

“எங்கேயும் வர வேண்டாம் நானே வந்து அழைச்சுட்டு போறேன்.. “,என்றவர் அலுவலகத்திற்கு வருவதாய் கூறி விட்டு அழைப்பைத் துண்டித்திருந்தார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் வந்தவரின் காரில் ஏறி அமர்ந்தவள் அவரை அப்படியே அணைத்து நகர எப்போதும் போல் அவளது கன்னம் கிள்ளி முத்தம் வைத்துக் கொண்டார்.

“கல்யாண புடவையைப் பத்தி நீங்க இரண்டு பேரும் எதாவது ஐடியா வைச்சுருப்பீங்கனு நினைச்சு நான் அமைதியா இருந்தா அவன் என்னையே இன்னும் ஷாப்பிங் முடிக்கலையானு கேட்குறான்.”, என்றதில் விடியல் சிரித்திருந்தாள்

“எங்களுக்கு கல்யாணம் எப்படியெல்லாம் நடக்கணும்னு நினைக்குறதை விட கல்யாணம் நடந்தா போதும்னு நினைக்குறோம் ஆன்ட்டி..”

“அது சரி ஆனா நாங்க அப்படி இருக்க முடியாதுல.. எனக்கு காஞ்சிபுரம் போய் எடுக்க தான் ஆசை. ஆனால் நேரம் கிடைக்கலை.

அதான் இங்கே மாண்டியா பக்கம் ஒரு கிராமம் இருக்கு. அங்கேயே கொடுத்துரலாம்னு நினைச்சேன்.”

“நீங்க எடுக்குறது தான் எங்க கல்யாண புடவை ஆன்ட்டி..”

“எடுக்குறதா? உங்க ரெண்டு பேருக்காக பார்த்து பார்த்து நெசவு பண்ணித் தர சொல்ல போறோம்.”, என்றதில் அமைதியாய் தலை குனிந்து கொண்டாள் விடியல்.

“என்ன சொல்றான் என் பையன்?”, என்றதற்கும் புன்னகை தான் விடியலிடத்தில்.

“சந்தோஷமா இருங்க கண்ணம்மா.. எதுவானாலும் தைரியமா என்கிட்ட ஷேர் பண்ணிக்கோ நான் இருக்கேன். சரியா?”

“தேங்க்ஸ் அத்தை..”, என்றவளை வாஞ்சையாய் பார்த்திருந்தார் ராதிகா.

மேகனைப் பற்றிய விஷயங்களைப் பேசிய படி அவர்களின் பயணம் கழிய அந்த கிராமத்தில் சென்று புடவையின் நிறத்திலிருந்து பார்டரில் வர வேண்டிய சிறிய நுணுக்கங்களைக் கூட ராதிகா பொறுமையாய் விவரித்தார்.

“வாவ் அத்தை நீங்களே டிசைன் பண்ணீங்களா?!”

“ம்ம் எனக்கு புடவைனால் ரொம்ப பிடிக்கும். எப்போவாவது நேரம் கிடைக்கும் போது இதைப் பண்ணுவேன்.

இப்போ என் கண்ணாவோட உயிர் காதலிக்காக பார்த்து பார்த்து பண்ணிருக்கேன்.”, என்றவரை மிகவும் பிடித்துப் போனது விடியலுக்கு.

ராதிகா அங்கு இருந்தவரிடம் பேசிக் கொண்டிருந்த நேரம் விடியலை மேகன் அழைத்திருந்தான்.

“யாரைக் கேட்டு இரண்டு பேரும் ஷாப்பிங் போனீங்க?”

“உனக்கு தான் பொண்டாட்டிக்கு புடவை எடுக்கணும்னு அக்கறையே இல்லையே..”, என்றதில் மேகனிடத்தில் அமைதி.

“மேடம் ஹேப்பியா இருக்கீங்க?”

“ம்ம் அத்தையும் நானும் ஜாலியா நிறைய பேசினோம்.”

“ஆஹான்.. எதைப் பத்தி?”

“எங்களோட மேகனைப் பத்தி..”

“நான் வரவா?”

“வேண்டாம்.. ஆனால்..”

“என்ன வேணும்னு சொல்லு..”

“எனக்காக ஒரு புடவை.. நீயே பார்த்து வாங்கித் தா..”

“ரொம்ப கஷ்டமான வேலை டி. எனக்கு ஐடியாவே கிடையாது.”

“எனக்கு வேணும். அவ்வளவு தான்..”

“சின்னு இப்போவே பார்க்கணும்..”

“இன்னும் நாலு நாளுக்கு வாய்ப்பில்ல,”

“வில் கில் யூ. ஏன் டி?”

“அம்மாவும் நானும் ஊருக்கு போறோம் குலதெய்வ கோவிலுக்கு..”

“அவ்வளவு தான நானும் வரேன்.”

“கல்யாணத்துக்கு முன்னாடி அப்படியெல்லாம் போகக் கூடாது”

“யாரு டி அது எனக்கே ரூல் போடுறது?!”

“உன் மாமியார்..”, என்றவள் சிரிக்க மேகனுமே புன்னகைத்து தான் அமர்ந்திருந்தான்.

“நீ ஏன் ரொம்ப தள்ளியிருக்க மேகன்..”

“ஜஸ்ட் ஒன் மோர் மந்த். தள்ளிப் போடா பாவினு உன்னை சொல்ல வைக்க வேண்டியது என் பொறுப்பு டி மா பங்காரி..”

“போச்சு மோசமானவன் வெளியே வர்றான் என்னால சமாளிக்க முடியாது. பை..”, என்றவள் புன்னகையோடு அழைப்பைத் துண்டித்திருந்தாள்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

7 comments

❤️❤️❤️❤️❤️❤️

jemila Paul September 22, 2026 - 6:55 am

Nice pair mamiyar and marumagal 💐💐💐💐

Kiruthika M September 22, 2026 - 7:07 am

They’re too cute 🥺❤️

angel laddus2 September 22, 2026 - 7:24 am

விஜய் & பார்த்திபன் semma 🫂🤝👌👌👌👌🥰🥰🥰🥰

Fathima.ar September 22, 2026 - 7:31 am

Sweet morning update

EswariSkumar September 22, 2026 - 7:53 am

அருமை ❤️❤️❤️

Kavi Natarajan September 22, 2026 - 8:55 am

💞💞💞💞💞💞💞

Jacky September 22, 2026 - 9:33 am

lover boy

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode