மலர்-39

by ஸ்ரீ
3 comments 400 views
A+A-
Reset

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு

மு.வ விளக்க உரை: அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான், அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுடையவனாகத் தோன்றுவான்.

மறுநாளின் விடியல் அனைவரின் கனவு நாளாக இருந்தது. பெண்கள் அனைவருமாய் மணமகளை பார்த்துப் பார்த்து தயார் செய்ய அங்கு மாமன் மகன்களோடு அதகளமாய் தயாராகிக் கொண்டிருந்தான் உன்னி முகுந்தன்.

“மச்சான் மங்கை மொத்தமா ப்ளட் ஆகப்போறா..”

“ஆம்பளையா போயிட்டேன் வசந்த் இல்லைனா மாப்பிள்ளையை நானே சைட் அடிக்கலாம்.”, என்றதில் முகுந்தன் தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான்.

“என்னை ஏன் டா இப்படி படுத்துறீங்க. எல்லாம் மலருக்கு சர்ப்ரைஸ் பண்ணணும்னு தான்.”

“சேட்டா ரிசெப்ஷன் வாஸ் ஜஸ்ட் மேஜிக்கல். எல்லாருமா கலக்கிட்டீங்க..”

“ஆனாலும் கிச்சு நாங்க எல்லாம் பிறந்த வீட்டு பாசத்தை பாட்டில் காட்டிட்டோம். புகுந்த வீட்டில் ஒண்ணும் இல்லையே பா..”

“தாலி கட்டின அப்பறம் தான புகுந்த வீடு அப்போ இறக்குவோம் பா வெயிட் பண்ணுங்க..”, என்றதில் முகுந்தன் தம்பியை ஆச்சரியமாய் பார்த்தான்.

“நீயுமா???!”

“நானும் அம்மையும். எனக்கு எங்கே தமிழ் பாட்டு தெரியும்.”, என்றதில் மற்றவர்கள் சிரித்தனர்.

“நாலு வருஷமாச்சே இந்நேரம் நல்ல பொண்ணா உஷார் பண்ணிருக்க வேண்டாம்? அதை விட்டுட்டு இன்னும் சமையலை லவ் பண்ணிட்டு சுத்துற கிச்சு..”

“நமக்கு அந்தத் திறமை இல்லை மாறா. சோ அம்மை யாரையாவது பார்த்து செட் பண்ணி விட்டால் தான் உண்டு.”

“இந்த காதல் மன்னனுக்கு இப்படி ஒரு தம்பியா?”, என்ற திருமாவை செல்லமாய் முறைத்து வைத்தான் முகுந்தன்.

அங்கு மணமகள் அலங்காரம் முடிந்திருக்க மகளைப் பார்க்க உள்ளே நுழைந்தார் முத்துப் பாண்டி.

“அப்பா..”

“என் பெத்தாரு. எம்புட்டு அழகா இருக்க தெரியுமா.”, என்றதில் கண்கள் அதுவாய் கலங்கத் தயாராக குணவதி மகளை எச்சரித்தார்.

“ஏலே சந்தோசமா போய் கல்யாணம் பண்ணிக்கனும். அழக் கூடாது என்ன. பிள்ளைக்கு எதாவது சாப்பிட கொடுத்தியா குணா?”, என்றவர் வெளியே யாரோ அழைக்கும் சத்தத்தில் அங்கிருந்து நகர்ந்திருந்தார்.

முகூர்த்த நேரம் நெருங்க மனையில் அமர்ந்திருந்தவனின் கண்கள் நொடிக்கொரு தரம் மணமகள் அறையைத் தான் தழுவிச் சென்றன.

அதிக நேரம் அவனது பொறுமையை சோதிக்காமல் கதவு திறக்கப்பட அரக்கு வண்ணப்பட்டில் தமிழ்நாட்டு முறைப்படி சடையலங்காரம் முதல் நகைகள் வரை அனைத்தும் அவனது மங்கையை தேவதையாய் ஜொலிக்கச் செய்திருந்தன.

மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக
மாதவன் தங்காய் வருக
மணி ரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக

அதை விட முந்தைய தினத்தின் நாணம் பதட்டமெல்லாம் மறைந்து அவளுக்கான அவளின் நாளை கொண்டாடும் மனநிலையில் இருந்தவளாய் முகம் மொத்தமும் புன்னகையோடு தன்னவனைப் பார்த்தவள் ஒரு நொடி அப்படியே நின்று விட்டிருந்தாள்.

அவளின் உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டவனாய் தன்னவளையேப் பார்த்திருக்க இரட்டிப்பு மகிழ்ச்சியோடு வந்து அருகில் அமர்ந்தாள்.

“தங்கமே… மொத்தமா சாச்சுட்டியே..”

“என்ட பொன்னு மலர் ஆசைப்பட்டது போல தாடியில்லாம முறுக்கு மீசையோட நெத்தியில் குங்குமம் மதுரக்காரனைப் போல உண்டோ?”

“அழகு சுந்தரனாயிட்டுண்டு ஏட்டா..”, என்றதில் முகுந்தனுக்கு வெட்கமே வந்திருந்தது.

ஐயர் தாலியை முகுந்தனிடம் கொடுக்க பக்கவாட்டில் திரும்பியவன் மகிழ்ச்சி பொங்க நிற்கும் அவனது மொத்தக் குடும்பத்தையும் ஒரு முறை பார்த்துவிட்டு தன்னருகில் பற்கள் தெரிய புன்னகைத்து அமர்ந்திருந்தவளின் முகம் பார்த்தபடியே மூன்று முடிச்சையும் கட்டியிருந்தான்.

தாலிக் கட்டி நெற்றியில் குங்குமம் வைத்தவன் பெண்ணவளை லேசாய் சாய்த்து நெற்றியில் அழகான தன் முத்திரையைப் பதித்தான்.

“லவ் யூ தங்கமே..”

“லவ் யூ என்ட பொன்னு மலரே. தேங்க் யூ ஃபார் மேக்கிங் மை லைஃப் சோ கலர்புல்.”, என்று முடித்த நேரம் அனைவருமாய் மணமக்களுக்கு கை கொடுக்க கனியனுக்கும் பூங்கோதைக்கும் மனம் நிறைந்து போயிருந்தது.

வாத்திய சத்தமும் அந்த நேரம் முடிந்திருக்க சட்டென கேட்ட பாடலில் சிறியவர்கள் அனைவரும் கிருஷ்ணனைப் பார்க்க அவன் மணமக்களை அணைத்து தனது வாழ்த்தை தெரிவித்தான்.

அந்த தென்மதுரை மீனாள் விளக்கேற்ற வந்தாள்
சீதனமாய் கையில் தாய்ப்பாசம் கொண்டு வந்தாள்

 

இனி எங்கள் நெஞ்சக் கூடத்தில் தீபத் திருவிழா
எங்கள் வானில் வெளிச்சம் வீசுதே
சின்ன வெண்ணிலா
எங்கள் அன்புக்கு அண்ணன் பண்புக்கு
தென்றல் சந்தனம் பூசுதோ
எங்கள் வீட்டுக்குள் வீசும் தென்றலாய்
ஒரு தேவதை வந்ததோ

“வெல்கம் ஹோம் அண்ணி.”, என்றவனோடு பலராமும் பார்வதியும் மருமகளின் நெற்றியில் இதழ் பதித்தனர். வந்தவர்கள் அத்தனை பேருக்கும் ஒரே எண்ணம் தான். பிறந்தால் மங்கையாய் பிறந்திருக்க வேண்டும் எனுமளவிற்கு அத்தனை பேரின் அன்பிலும் திகட்டத் திகட்ட மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.

சம்பிரதாயங்கள் முடிந்து குடும்பப் புகைப்படம் என்று அனைவருமாய் நின்ற நேரம் அனைவருக்குமே மகிழ்ச்சி தொண்டையை அடைத்தது. அதிலும் கனியனின் நிலை உணர்ந்தவர்களாய் மகன்களும் மகள்களும் தாய் தந்தையைத் தேற்றி அமர்த்தினர்.

மணமக்கள் நடுவில் அமர்ந்திருக்க கனியன் முகுந்தனின் அருகிலும் பூங்கோதை மங்கையின் அருகிலுமாய் அமர்ந்திருந்தனர்.

முத்துப் பாண்டி இனியன் பலராம் தாமோதரன் அமுதினியின் கணவனோடு கார்த்தி என ஆண்கள் நாற்காலியிலும் அவர்களின் மனைவிகள் அவர்களுக்கு பின்னால் நின்றிருக்க திருமா கன்னிகா மாறன் சித்ராவோடு உன்னி கிருஷ்ணன் கீழே அமர்ந்திருந்தனர்.

அத்தனை பேருக்கும் தனித்தனியாய் இந்த புகைப்படத்தை பெரிதாய் ப்ரேம் போட்டு தர வேண்டும் என்று போட்டோகிராபரிடம் கூறிவிட்டு தான் நகர்ந்திருந்தனர்.

ஆட்டம் பாட்டமென திருவிழாவைப் போல் மகள் திருமணத்தை முடித்திருந்தார் முத்துப் பாண்டி. பெண் மாப்பிள்ளையை வீட்டிற்கு அழைத்து வந்து பால் பழம் கொடுத்து விளக்கேற்ற வைத்து என பொழுது கழிய புதுமணத் தம்பதிகளின் தனிமைக்கான நேரமும் வந்திருந்தது.

பேய் முழி முழித்து அமர்ந்திருந்த மங்கையைப் பார்த்து அமுதினி கன்னிகா சித்ராவோடு ஸ்வப்னாவும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தனர்.

“ஏன் டி மூஞ்சியை இப்படி வைச்சுருக்க. எனக்கே பயமா இருக்கு. மாமா பாவம்.”

“உன் மாமன் தான. அவன் எப்படிபட்ட ப்ராடுனு எனக்கு தான் தெரியும். பேசாம போ டி.”

“ஐயோ கடவுளே அமைதியா இரு மங்கை.”

“அண்ணி நிஜமாவே டென்ஷனா இருக்கு. நீங்க எல்லாம் இந்த மலைமாடுங்களை எப்படி சமாளிச்சீங்க.”

“அடச்சை இவளைக் கொண்டு போய் விட்டுட்டு வாங்க அண்ணி. இனி இவ அவர் பாடு.”, என்ற அமுதினி தலையில் அடித்துக் கொண்டாள்.

மாடியில் மங்கையின் அறையை அவர்களின் முதலிரவிற்காக அலங்கரித்திருக்க உள்ளே அமர்ந்திருந்தவன் ஒவ்வொரு இடமாய் பார்வையைச் சுழற்றினான்.

தன்னவளின் வாசம் அங்கிருக்கும் மலர்களை தாண்டி அவனது நாசியை நிறைத்ததாய் தோன்றியது முகுந்தனுக்கு. கதவு திறக்கும் ஓசையில் திரும்பியவனுக்கு சாதாரணப் புடவையில் எவ்வித ஒப்பனையின்றியே அத்தனை அழகாய் தன்முன் வருபவளிடமிருந்து விழியகற்றுவது பெரும்பாட்டாய் இருந்தது.

முகம் சிவக்க தன்னவனின் அருகில் அமர்ந்து கொண்டவளாய் எப்போதும் போல் அவனது வலது கையைப் பற்றிய படி தோளில் சாய்ந்து கொண்டாள்.

“மலர் ஹேப்பியானோ?”

“ரொம்ப ரொம்ப ரொம்ப.. இப்படி ஒரு ட்ரீம் வெட்டிங் எல்லாம் நினைச்சே பார்க்கலை தங்கமே.”

“…”

“உன்னியேட்டன் ஹேப்பியோ?”

“என் அழகு பொண்ணை எனக்கு சொந்தமாக்கியிருக்கேன் ஹேப்பி இல்லாம எப்படி சக்கரே..”

“..”

“மலர் ஒரு பாடு டென்ஷனாயிட்டுண்டு அல்லே?”

“எப்படி கண்டுபிடிச்ச?!”

“அந்தக் கையில் நடுக்கம் தெரியுதே..”, என்றவன் அவளை புன்னகையோடு ஏறிட இன்னுமாய் முகத்தை குனிந்து கொண்டாள்.

“அஞ்சு வருஷமா லவ் பண்றோம்னு வெளியில் சொல்லாத அவமானம்.”

“…”

“வெளியே அவ்வளவு பேசுறவளுக்கு இப்போ எந்தாயி?”

“…”

அமைதியாகவே இருந்தவளைப் பார்த்து இன்னுமாய் பித்துக் கொண்டவனாய் அவளை கட்டிலில் தள்ளி தானுமாய் விழுந்திருந்தான்.

“மலர் தன்னே என்னை டெம்ட் ஆக்குறா. எதாவது பேசு டி.”

“உன்னியேட்டா..”

“ம்ம்..”

“நீ எப்பவும் கேட்குற மாதிரி இரண்டு இல்லை மூணு குழந்தைங்க வேணும்.”, என்றதில் விழி விரித்தவனாய்,

“மலருக்கு தான் டெலிவரி அங்கில் பயம் அல்லே..”

“அதெல்லாம் இல்ல நீ என் கூடவே இருந்தா போதும்.”

“அத்தர வல்ய பெண்ணாயோ என்ட மலர்?”

“ம்ம் எல்லாம் ஆகியாச்சு. ஆனாலும் உன்னோட இந்த ஆம்ஸ் தான் ரொம்ப பயமுறுத்துது உன்னியேட்டா.”, என்றவள் அவனது புஜத்தை லேசாய் வருடினாள்.

“பட்சே அது மலரிண்ட வீக்னெஸ் அல்லே.”, என்றவனின் குரல் உல்லாசமாய் தன்னவளின் செவி உரசியது.

“ம்ஹும்..”

“பொய் பேசினா தண்டனை யுண்டு என்ட சக்கரே..”

“இந்த ஆம்ஸ் விட என்னோட வீக்னெஸ் உன்னோட இந்த அழகான கையில் கட்டியிருக்குற பெரிய ரவுண்ட் டையல் வாட்ச் தான். நீ கையசைக்கும் போதெல்லாம் ரொம்ப அழகாயிருக்கும்.”

“ம்ம் அப்பறம்?”, என்றவன் இன்னுமாய் அவளைப் பேசத் தூண்டினான்.

“உன்னியேட்டனோட வீக்னெஸ் என்ன?”, என்றவளுக்கு அவனை நிமிர்ந்து பார்க்கவே திரானியில்லாமல் போயிருந்தது.

“இந்த மதுர மலர் தன்னே என்னோட மொத்த வீக்னெஸ்..சரியானோ?”

“…”

“சோ, ஆம்ஸ் மலருக்கு பிடிக்காது. வெயிட்டை குறைச்சுடலாம் அப்போ..,”

“ஆம்ஸும் பிடிக்கும் தான் ஆனால் பயம் தங்கமே..”, என்றவள் தன்னவனை இறுகப் பற்றிக் கொண்டாள்.

“என்ட மலரை நான் எப்பவும் ஹர்ட் செய்ய மாட்டேன் சக்கரே.”, என்றதில் தன்னவனின் விழி நோக்கியவளாய் அதற்கு மேல் அவனை பேச விடாமல் செய்திருக்க கடினப்பட்டு அவளை நிதானமாக்க அத்தனை நேரம் பேசிக் கொண்டிருந்தவனும் தன்னிலை மறந்திருந்தான்.

அன்பின் உருவமான தன்னவளை தாங்கிக் கொண்டவனின் காதலுக்கு தன் பெண்மையை அமுதமென அள்ளிக் கொடுத்திருந்தாள் அவனின் மலர்.

அத்தனை வருட கண்ணியமும் காற்றில் கரைந்திருக்க இருவர் ஒருவராய் இணைந்து இன்பக்கடலில் மூழ்கி முத்தெடுத்து முடித்த நேரம் வானம் லேசாய் சிவக்கத் தொடங்கியிருந்தது.

முகுந்தன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க அவனது கையணைப்பில் படுத்திருந்தவளின் மனம் நிறைவின் உச்சத்தில் இருந்தது.

தன்னை இத்தனை பைத்தியகாரத் தனமாக காதலிக்க இவனால் மட்டுமே முடியும் என்று நினைக்க நினைக்க மனம் தித்திப்பாய் இருந்தது.

சினிமாத் துறையில் அவனைப் போன்றவர்கள் வெகு அரிது என்று கூறும் அளவிற்கு பெண்களிடம் நன் மதிப்பை பெற்றிருந்தவனுக்கு தன்னருகில் இருப்பவளிடத்தில் மட்டும் எப்போதுமே அத்துமீறத் தான் தோன்றும்.

இந்த நான்கு வருடங்களில் மலர் அறிந்த உன்னி முகுந்தன் என்பவன் காதலனின் உச்சக்கட்ட பைத்திய நிலையில் இருப்பவன்.

யாரையும் ஏறெடுத்துப் பார்க்காதவன் தன்னிடத்தில் காட்டும் அந்தரங்க முகத்தில் எப்போதுமே அவள் சிணுங்கிப் போவாள்.

இன்றும் இத்தனை நேரமும் தன் மீதான அவனது ஆளுமையும் காதலும், பெண்ணவளைக் கொண்டாடியல்லவா தீர்த்து விட்டான்.

அதை விட அமைதியின் சிகரம் என்று குடும்பமே பட்டம் கொடுத்தவனின் அத்தனை நேர பிதற்றல்களும் இப்போதும் காதுகளை கூசச் செய்வதாய்.

தாடியற்ற தன்னவனின் கன்னத்தை லேசாய் வருடிப் புன்னகைத்தவளாய் அவனை இன்னுமாய் தன்னோடுச் சேர்த்துக் கொண்டு தூங்கிப் போனாள்.

காலையில் இருவருமாய் தூக்கம் கலைய தன் மலரை அத்தனை நெருக்கத்தில் உணர்ந்தவனின் கரங்கள் இன்னுமாய் அவளை தன்னோடு இறுக்க கையிலேயே அடித்தாள் மங்கை.

“என் எலும்பை உடைச்சுராத உன்னியேட்டா..”

“சக்கரே வலிக்குதா சாரி..”

“தங்கமே.. சும்மா சொன்னேன் ஏன் டென்ஷன்..”

“ஐ நோ, நான்… நேத்து… எடி நீ ஓகேயல்லே?”

“எல்லாம் ஓகே தான். நீ போய் குளிச்சுட்டு வந்து என்னை எழுப்பு தங்கமே. தூக்கமா வருது.”, என்றவள் இன்னுமாய் போர்வைக்குள் சுருண்டு கொண்டாள்.

இருவரும் தயாராகி கீழே செல்ல எத்தனிக்க மங்கையின் புடவையை சரி செய்தவனாய்,

“கண்ணெழுது பொன்னு மலரே.. அது இந்த குண்டு கண்ணுக்கு ஒரு பாடு சௌந்தர்யமானு.”

“நீ கலாரசிகன் உன்னியேட்டா..”, என்றவள் அவன் கேட்டது போல் பட்டையாய் கண்ணுக்கு மையிட்ட பின்னே கீழேயிறங்கியிருந்தாள்.

தங்கள் பிள்ளைகளை கணவன் மனைவியாய் பார்த்த குடும்பத்தினருக்கு கண்களுக்கு நிறைவாய் இருக்க, அனைவருமாய் உணவு மேசை களைகட்டியது.

அன்று பின் மதிய வேளையிலேயே அனைவரும் கேரளா கிளம்புவதோடு மூன்று தினங்களில் கொச்சினில் மிகப்பெரும் வரவேற்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குலதெய்வ கோவில் வழிபாடு முடித்து வந்ததோடு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றே ஆக வேண்டும் என மங்கை கூறிவிட மணமக்களை அழைத்துக் கொண்டு திருமாவும் கன்னிகாவும் கிளம்பினர்.

அந்த மீனாட்சியைப் பார்த்த நொடி மங்கைக்கு மனமெல்லாம் ஒருவித பரவசம். தன்னருகில் உரிமையானவனின் தோள் உரச விழிகளை மூடி நின்றவளுக்கு வாழ்க்கையே முழுமையடைந்து விட்டதாய் ஓர் உணர்வு.

தன்னவளின் உணர்வுகளை யூகித்தவனாய் அங்கிருந்து நகர்ந்ததும் ஆதரவாய் தோள் தட்டிப் புன்னகைத்தான் முகுந்தன்.

“பொன்னு மலரு ஒரு பாடு எமோஷனாலா இருக்காளே ஏன்?”

“இது அந்த மீனாட்சி கொடுத்த வாழ்க்கை இல்லையா. அதனால இருக்கும் தங்கமே. உன்னோட பொண்டாட்டியா இப்படி நடக்குறது உள்ளுக்குள் என்னவோ பண்ணுது.”

“சக்கரே..”, என்றவன் ஏதோ கூற வர திருமாவும் கன்னிகாவும் அவர்களிடம் ஐந்து நிமிடத்தில் வருவதாய் கூறிவிட்டுச் சென்றனர்.

“நீ ஏன் இப்படி என்னை உருக வைக்குற?!”, என்றவள் புன்னகைக்க பிரகாரத்தில் அமர்ந்தவர்களாய்,

“அதுக்கு தான இந்த வாழ்க்கை சக்கரே. காதல் அன்பு இதெல்லாம் ஒரு பாடு அழகானது. ஆனால் அதையெல்லாம் அனுபவிக்க நேரம் கொடுக்காமல் கோபம் கவலை ஸ்ட்ரெஸ் இதெல்லாத்தையும் தலையில் வைச்சுக்க எனக்கு விருப்பம் இல்லா.”

“பொதுவா ஆண்கள் அன்பை வெளிப்படுத்த தெரியாதவங்க மனசுக்குள்ளேயே வைச்சுப்பாங்கனு சொல்லுவாங்க.

ஆனால் என்னைப் பொறுத்தவரை அது வேஸ்ட். என் கூடவே ஒவ்வொரு நிமிஷமும் இருக்குற நீ எனக்கு எத்தனை இம்பார்டெண்ட்னு உனக்கு புரிய வைக்குறது தானே வாழ்க்கைக்கு கொஞ்சம் ஸ்பைஸ் அட் பண்ணும்.

இரண்டு நிமிஷத்தில் சாப்பிட்டு முடிக்குற சாப்பாட்டுக்கே அவ்வளவு சுவை நமக்கு தேவைப்படும் போது அம்பது அறுபது வருஷம் சேர்ந்து வாழப் போற வாழ்க்கைக்கு எவ்வளவு சுவை தேவைப்படும்.

இப்போ உன்னோட காதலனாய்  புருஷனாய் உன்னை ரசிச்சு வாழணும்ங்கிற ப்ளேவர்.

40-50 வயசு ஆனப் பின்னாடி உடலளவுலேயும் மனசளவிலேயும் நிறைய பிரச்சனைகளைச் சந்திக்குற நேரம் உனக்கு ஆதரவா அனுசரணையா இருக்க வேண்டிய ப்ளேவர்.

60-70 வயசில் நல்ல நண்பனா இத்தனை வருஷம் நாம கடந்து வந்த நாட்களை எல்லாம் அமைதியா உட்காந்து அசை போடுற ப்ரெண்ட்ஷிப் ப்ளேவர். அதே தான் உனக்கும்.

இதுக்கெல்லாம் மட்டும் தானே ஒரு ஆணும் பெண்ணும் துணையா இருக்கணும்ங்கிறதை கடவுள் படைச்சது. இதில் எதையுமே நான் மிஸ் பண்ண போறதில்லை மலரே.”, என்றவனிடமிருந்து விழியகற்றக் கூடத் தோன்றாமல் அமர்ந்திருந்தவளை கன்னிகா நடப்பிற்கு கொண்டு வந்து அழைத்துச் சென்றாள்.

வீட்டில் அடுத்தடுத்த வேலைகளைக் கவனித்தவர்களுக்கு மூச்சு விடவும் நேரமில்லாமல் போனது.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

3 comments

Kavi Natarajan August 5, 2026 - 3:32 am

💞💞💞💞💞💞💞💞

srichitra August 5, 2026 - 7:34 am

Very nice

suganyavel August 5, 2026 - 2:18 pm

Super💕

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode