253
“குறள் 81:
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு
மு.வ விளக்க உரை: வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்”
திருமணத்திற்கு இன்னும் ஒரே வாரம் என்ற நிலையில் MR groups குழுமம் மொத்தமும் பரபரப்பாய் கல்யாண களையை ஒட்டிக் கொண்டிருந்தது.
விடியல் அலுவலக வேலையெல்லாம் வீட்டிலிருந்தே பார்த்துக் கொள்ள ஆரம்பித்திருந்தாள்.
கல்யாண களையும் பொலிவுமாய் வீட்டில் வளைய வரும் மகளைப் பார்த்து பார்த்து பூரித்துப் போனார் வாசந்தி.
மஞ்சுநாத்தின் வீட்டில் தொழிலையும் வேலைகளையும் கவனிப்பதோடு திருமணப் பொறுப்புகளையும் திறம்பட கவனித்துக் கொண்டனர்.
அப்போது தான் வீட்டிற்கு வந்த மேகனின் கைப்பேசி ஒலிக்க எடுத்து காதில் வைத்தவனுக்கு எதிர்புறம் மனீஷின் குரல் கேட்டது.
“வணக்கம் மேகன் ஜி..”
“ஷ்ஷ்… மாசத்துக்கு ஒரு தடவை என்னோட பேசலைனால் உனக்குத் தூக்கம் வராதா என்ன?”
“இது தான் பைனல் கால் மேகன். என்னை நம்புங்க..”, என்றதில் புருவம் சுருக்கினான்.
“கல்யாண மாப்பிள்ளை ரொம்ப பிஸியா இருப்பீங்க. எனக்குப் புரியுது. ஆனால் இப்போ தான் எனக்கான நேரமும் கிடைச்சுருக்கு என்ன பண்றது?”
“என்ன விஷயம்?”
“இப்படி நேரடியா விஷயத்துக்கு வந்துட்டா எப்படி.. ஓகே ஃபைன்..
கல்யாண ஜோர்ல இரண்டு நாளா உங்க தம்பி வீட்டுக்கு வரலைங்கிறதை கூட கவனிக்காம விட்டுருக்கீங்களே மேகன்..”, என்றதில் யோசித்தவன்,
“ரகு?!”
“ஹான் அவரே தான். இனி அந்தக் குடும்பத்துக்கும் எனக்கும் சம்மந்தம் இல்ல சொத்தை பிரிச்சு வாங்க கேஸ் போட போறேன்னு ஒரே அடம்.”
“!!”
“நான் தான் சமாதானப்படுத்தி வைச்சுருக்கேன்னால் பாருங்களேன்..”
“ஏய்…”
“டென்ஷன் ஆகாதீங்க மேகன் ஜி. வாங்களேன் நாம பேசுவோம்.
தம்பிக்காக வராம போயிடுவீங்களா என்ன?”, என்றவன் அழைப்பைத் துண்டித்திருக்க தம்பிகளிடம் மட்டும் விஷயத்தைக் கூறி மூவருமாய் கிளம்பியிருந்தனர்.
“அண்ணா யாரு இந்த மனீஷ்? நாம மட்டும் போறது சரியா இருக்குமா?”
“பார்க்கலாம் சைத்து.. சமாளிக்க முடியாத நிலைமை இருந்தா என்ன பண்றதுனு தான் உங்களையும் வர சொன்னேன்.
ரகு நம்மகிட்ட வந்தப்பறம் அவனை என்ன பண்ணனுமோ நான் பார்த்துக்குறேன்.”, என்றவன் நிதானமாய் கைப்பேசியில் எதையோ செய்து கொண்டிருந்தான்.
மனீஷ் அவனது கெஸ்ட் ஹவுஸ் ஒன்றின் அட்ரஸைக் கொடுத்திருக்க பெங்களூரின் பரபரப்பை மொத்தமாய் தொலைத்திருந்த அமைதியான ஆள் அரவமற்ற இடமாய் இருந்தது.
மூவருமாய் உள்ளே வர ஒருவன் மூவரையும் சோதிக்க வேண்டும் என்று வந்து நிற்க மேகன் பார்த்த பார்வையில் சுகன் அவனது தலையைப் பிடித்து தள்ளி விட்டு உள்ளே நுழைந்திருந்தான்.
“வாங்க வாங்க மேகன் ஜி. என்ன இது இப்படி மொத்த MR groups முதலாளிகளும் மொத்தமா வந்துருக்கீங்க..”
“உன்னோட உளறலை எல்லாம் கேட்குற பொறுமை சத்தியமா எனக்கில்ல. என்ன விஷயம்? அண்ட் ரகு எங்கே?”, என்றதில் கால் மேல் கால் போட்டு வசதியாய் அமர்ந்து கொண்டவனாய் மேகனைப் பார்த்து புன்னகைத்தான்.
“உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா மேகன். என் லைஃப்ல இத்தனை நாளை எல்லாம் நான் வேஸ்ட் பண்ணதே இல்ல..”
“…”
“எனக்கு ஒண்ணு வேணும்னு முடிவு பண்ணிட்டால் உடனே அது யார்கிட்ட இருந்தாலும் புடுங்கிடுவேன்.”
“…”
“அவ்வளவு ஏன் எங்கப்பாக்கு சம்மந்தப்பட்ட ஒரு பிசினஸே உங்கப்பாகிட்ட இருந்து அடிச்சு புடுங்கினது தான்.”
“…”
“உங்கப்பா உங்களை மாதிரி இல்லையாம் மேகன். ரொம்ப ப்ரஷர் எல்லாம் எடுத்துக்க மாட்டாராம்.
விட்டுது தொல்லைனு விட்டுக் கொடுத்துருவார் போல. ஆனா நீ ஏன் இவ்வளவு குடைச்சல் கொடுக்குற.”, என்றவன் பற்களைக் கடித்தான்.
சுகனும் சைதன்யாவும் அடக்கப்பட்ட கோவத்தில் இருக்க மேகனிடத்தில் எவ்வித எதிர்வினையும் இருக்கவில்லை.
“நான் உன்னை நெருங்கும் போதே என் நோக்கம் உனக்கு புரிஞ்சுருக்கும். அந்த மூணு ரெசார்ட்டை என்கிட்ட கொடுக்குறதுனால உங்க சொத்தில் ஒரு துளி சதவீகதம் தான் மாறப் போகுது. அதைக் கொடுக்குறதில் உனக்கு என்ன பிரச்சனை சொல்லு..”
“என் அப்பன் வீட்டு சொத்தை கொடுக்க எனக்கு எப்படி டா பிரச்சனை இல்லாம போகும்?”
“ஏய்!!”
“ஷ்ஷ் கத்தாத. கவர்மெண்ட்டை உன் கையில் வைச்சுட்டு சுத்தினால் பெரிய இவனா நீ?”
“!!!”
“என்கிட்ட வேலைக்காகாதுனு தெரிஞ்சும் விடாம சுத்தின பார்த்தியா அதுல தான் கொஞ்சம் காண்டாயிட்டேன்.”
“..”
“பத்தாததுக்கு எங்கம்மாக்கு வேற ப்ரஷர் கொடுத்துருக்க.. நான் ஹீரோ வேற கொஞ்சம் ஈகோ வேற பாப்பேன்.
அப்படியிருக்கும் போது என் குடும்பத்தை நெருங்க நினைக்குற உன்னை என்ன பண்ணணும்?”
“டயலாக் எல்லாம் பவரா தான் இருக்கு மேகன். என்ன இருந்து என்ன ப்ரயோஜனம். உன் தம்பியே உன்னை நம்பாம என்னை தான நம்பிட்டு இருக்கான்.”
“..”
“கிட்டதட்ட ஆறு மாசமா கொஞ்ச கொஞ்சமா தூண்டில் போட்டு மொத்தமா இழுத்துருக்கேன்.
அதுக்கு உதவி பண்ற மாதிரியே அவன்கிட்ட இருந்து நீ தொழிலை வேற பிடுங்கிட்ட..
ப்ச்ச் குழந்தை பாவம் எவ்வளவு மனசொடிஞ்சு போயிட்டான் தெரியுமா?”, என்றதில் சுகனுக்கும் சைதன்யாவிற்கும் தம்பியை நினைத்து கோவம் தலைக்கேறியது.
“பத்தாததுக்கு தொழில் தொடங்க பணம் வேற தர மாட்டேன்னு சொல்லிட்டீங்களாமே..
நான் தான் என் சொந்த காசு பத்து கோடியை கொடுத்துருக்கேன் தெரியுமா?”
“..”
“ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது உன் குடும்ப ரத்தமாச்சே எவ்வளவோ வேண்டாம்னு சொல்லியும் கொடுத்த பணத்துக்கு பத்திரத்தை ரெடி பண்ணி கடனா தான் வாங்கிக்குறேன்.
கண்டிப்பா திருப்பிக் கொடுத்துரேன்னு சொல்லிட்டான்.”
“..”
“ஆனாப் பாரு நல்லவனா இருக்குற அவனுக்கு யார்கிட்ட நல்லவனா இருக்கணும்னு தெரியாம போச்சு.
நான் என்ன பண்ணேன்..”, என்று நிறுத்தியதில் சுகனும் சைதன்யாவும் பதட்டமாய் ஒருவரை ஒருவர் பார்த்திருந்தனர்.
“ரகுவந்த் ஆகிய எனக்கு மனீஷ் கொடுத்த 10 கோடியை அவர் கேட்கும் போது என்னால திருப்பித் தர முடியலைனால் அவர் என் மேலே எந்த நடவடிக்கை வேணாலும் எடுக்கலாம்னு பத்திரத்தை மாத்தி அதில் அவனோட கையெழுத்தையும் வாங்கிட்டேன்.”, என்றவன் ஒரு பத்திரத்தைத் தூக்கி அவர்களின் மூவரின் முன்னிருந்த மேசையில் எறிந்தான்.
சுகன் அதை வேகமாய் கையில் எடுக்க வர சட்டென அதை பிடுங்கியிருந்தவன்,
“ஹான்.. பொறுமை பொறுமை தம்பி.. இது ஒரிஜினல் இல்ல. ஒரிஜினல் என் வக்கீல்கிட்ட பத்திரமா இருக்கு. அதனால ஒரு ஆர்வத்தில் கிழிச்சு போட்டுறாத.
அப்பறம் எனக்கு கோவம் வந்துட்டா இப்போவே இதை வைச்சு உன் தம்பியை எதாவது பண்ணனும்னு முடிவு பண்ணிருவேன்.”, என்றவன் மீண்டுமாய் அதை சுகனிடத்தில் தூக்கி எறிந்தான்.
அதைப் படித்துப் பார்த்தவனோ கோவத்தில் முகம் சிவக்க மனீஷிடம்,
“ரகு எங்கே உன்னை விட அவன் இப்போ எங்க கையில் கிடைச்சா தான் என்ன ஆவான்னே தெரியாது. வர சொல்லு அவனை..”
“ஐயோ அண்ணன் தம்பி சண்டைக்குள்ளே நான் வரலைப்பா.. நீயே கொஞ்சம் சத்தமா கூப்பிடு தன்னை சுத்தி நடந்த எதுவுமே தெரியாம அங்கே மேல ரூம்ல தான் தண்ணியடிச்சுட்டு இருக்கான்.”, என்றதில் சுகனும் சைதன்யாவும் மாடிப் படிகளில் ஓடியிருந்தனர்.
ரகுவோ முழு போதையில் சோபாவில் தலை சாய்த்து கால் இரண்டையும் விரித்த படி அமர்ந்திருந்தான்.
“டேய் இடியட்.. என்ன டா இப்படியிருக்க.. எழுந்துரு..”, என்று சைதன்யா அவன் கன்னத்தில் ஓங்கித் தட்டினான்.
“இவனை இன்னைக்கு என்ன பண்றேன்னு பாரு.”, என்ற சுகனோ காலால் அவனது தொடையில் அழுத்தி மிதித்திருந்தான்.
“ஏய்.. யாரு டா.. என்..னையே அடிக்..குறது..”, என்றதில் ஆங்கிலத்தில் தெரிந்த அத்தனை கெட்ட வார்த்தைகளையும் போட்டுத் திட்டி இருவருமாய் அவனை கீழே அழைத்துச் சென்றனர்.
படிக்கட்டில் கேட்ட சத்தத்தில் மனீஷ் தலையைத் திருப்ப மேகன் விழியுயர்த்தி அவர்களைப் பார்த்திருந்தான்.
“மேகன் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமானு தான் நான் எதிர் பார்த்தேன். ஆனால் அதை உருவாக்கிக் கொடுத்தது என்னவோ நீ தான்..”, என்றவன் உதடு வளைத்து தோள் குலுக்கினான்.
அவர்கள் மூவரும் படியிலிருந்து இறங்கி வந்து நிற்க ரகு விழி கூடத் திறக்காமல் சைதன்யாவின் மேல் தலை சாய்ந்திருந்தான்.
“இப்போ சொல்லுங்க மேகன் நம்ம பிசினஸ் பேசலாமா. முன்னாடியே வந்திருந்தா கொஞ்சம் டீசென்டான டீலா இருந்திருக்கும். பட் இப்போ எனக்கு அதில் விருப்பமில்ல.”
“..”
“சோ அந்த மூணு ரெசாட்டும் என் பேருக்கு வந்தாகணும். அதுக்கு பதிலா இந்த பத்திரத்தை வேணா கேன்சல் பண்ணிக்கலாம்.
அப்பறம் உங்க தம்பிக்கு எந்த பிரச்சனையும் என்னால வராது. ஐ ப்ராமிஸ் யூ.”
“…”
“அதுவுமில்லாம இப்போ உங்க தம்பிக்கு உங்களை விட நான் தான் முக்கியம். சொல்லப் போனால் நான் தான் அவனுக்கு அண்ணன் ஸ்தானமே..”, என்று முடித்த நேரம் பின்னிருந்து உதைத்ததில் மனீஷ் அப்படியே முன்னால் விழுந்திருந்தான்.
ஒரு நொடி என்ன ஏதென புரியாமல் சுகன் சைதன்யா மனீஷ் முழிக்க மேகனின் முகத்தில் அடக்கப்பட்ட சிரிப்பு. ரகு தான் அவனை உதைத்திருந்தான்
“அடிங்.. நானும் பொறுமையா இருக்கலாம்னு பார்த்தா ரொம்ப ஓவரா பேசுறான் ண்ணா இவன்..”, என்றதில் மேகன் சிரித்திருந்தான்.
“ஏன் டா..”
“பின்ன என்ன.. இன்னும் ஒரு வாரத்தில் உங்க கல்யாணம் அதுக்குள்ளே இந்த பிரச்சனையை மட்டும் முடிக்காம இருந்துருந்தீங்க நானே இவனை போட்டுத் தள்ளிருப்பேன்.”, என்றவன் நியாபகம் வந்தவனாய் சுகனை ஓங்கி மிதித்தான்.
“என்னை ஏன் டா மிதிக்குற?”
“வந்தவுடனே சார் என்ன பண்ணீங்க? மிதிக்கவா செய்ற உன்னை அப்பறம் கவனிச்சுக்குறேன்.”, என்றவன் சைதன்யாவிடம் கை ஓங்க அவன் இரு கைகளையும் உயர்த்தியவனாய்,
“ப்ரெண்ட்ஸ்..”, என்று சிரிக்க த்து என்று துப்பிய படி சட்டையை சரி செய்தான் ரகு.
“இந்தக் குடிகாரனா நடிக்குறது ரொம்ப கேவலமா இருக்கு ண்ணா..”, என்றதில் மேகன் எழுந்து ரகுவைத் தன்புறம் அழைக்க அருகில் வந்தவனின் தோளில் கைப்போட்டு அழுத்திக் கொண்டவனாய் ஆத்திரத்தில் இருந்த மனீஷைப் பார்த்து புன்னகைத்தான்.
“என்னைக்கும் அவன் என் தம்பி டா முட்டாள்.”, என்றதில் சுகனுக்கும் சைதன்யாவிற்கும் பெருமித புன்னகை.
“வலையை விரிக்கத் தெரிஞ்ச உனக்கு அதை யார்கிட்ட விரிக்கணும்னு தெரியாம போச்சு பார்த்தியா?”
“…”
“நான் சொன்னா இவன் கண்ணை மூடிட்டு கடல்லேயே குதிப்பான் டா. அவனைப் போய் எனக்கெதிரா திருப்ப பாத்துருக்க.”
“..”
“அவ்வளவு ஏன் இவ்வளவு நடந்ததுக்கு என் சித்தப்பா இப்போ வரை ஒரு வார்த்தை என்கிட்ட கேட்கலை.
MR groupsன்னால் என்னனே தெரியாம வந்து தலையைக் கொடுத்துருக்கியே ராஜா..”
“என்ன சொன்னாலும் நம்புறான் ண்ணா இவன்..”, என்ற ரகுவை கொலைவெறியில் முறைத்தான் மனீஷ்.
“ஏய் உங்க எல்லாரையும் நான் என்ன பண்றேன்னு பாருங்க..”
“ஒரு மண்ணும் கிழிக்க முடியாது. ஆனதை பார்த்துக்கோ..”, என்ற ரகுவை நோக்கி அவன் ஒரு அடி எடுத்து வைக்க சுகனும் சைதன்யாவும் சுதாரித்து அவனைப் பிடித்து நாற்காலியில் தள்ளியிருந்தனர்.
“நாங்க பாடிகார்ட்ஸ் எல்லாம் இல்லாம வந்தா உனக்கு பயந்துனு நினைச்சியா இவனுங்க மூணு பேருமே ஃபைட்டர்ஸ்.
வேணால் மோதிப் பார்க்குறியா ஆனால் அவனுங்க வயசுக்கு அடிச்சால் பொட்டுனு போயிடுவ அதான் யோசிக்குறேன்.”, என்றதில் மேசையிலிருந்த பத்திரத்தை மனீஷ் கையில் எடுக்க ரகுவோ பொறுமை இழந்திருந்தான்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
7 comments
❤️❤️❤️❤️❤️❤️
Sema fight irukku pola
Actually itha na yethir pathan 😁
Semma 👌👌👌👌
Super
👌👌👌👌👌👌
இத இத தான் எதிர்பார்த்தேன் 😍😍😍😘😘😘😘
மனிஷ் 🤭🤭🤭🤭🤣🤣🤣🤣உனக்கு இது தேவையா சொல்லு 🤭🤭🤭😏😏😏
மேகன் 🤗🤗🤗😘😘
Nice update sis
Happy 😊. Final la family ya target pannumpodhu, raghu Megan kitta varuvaan nu ninaichane. Paartha, ithu starting la irundhe megan_raghu plan polave😂😂…