117
அருகிலிருக்கும் கோவிலில் சம்பிரதாயங்களை முடித்துவிட்டு விருந்தினர்களுக்கு வீட்டிலேயே சின்ன கெட்டுகெதர் மாதிரியான ஏற்பாடு செய்திருந்தனர்..
புடவை வேஷ்டி இன்னபிற பொருட்களெல்லாம் வாங்க,விருந்தினர்களை அழைக்கவென நேரம் ஓடிக்கொண்டிருக்க..
கார்த்திக் பிஸியாயிருந்தால் ஷரவன் ஷரவந்தியோடு சென்று முடித்து வருவான்..
அன்று வெள்ளிகிழமை சேகரின் வீட்டிற்கு ஆடிட்டிங் வேலையாக செல்ல வேண்டியிருப்பதால் அப்படியே அவரை அழைத்து வந்து விடலாமென ஷரவந்தியையும் அழைத்து கொண்டு கிளம்பினான்..
அண்ணா எதுக்கும் நீயே மொதல்ல உள்ள போ எனக்கு பயமாயிருக்கு என சிரித்தவாறே அவள் பின்னோக்கி நகர செல்லமாய் அவள் காதை திருகினான்..
அவகிட்ட எதையாவது போட்டு குடுத்துறாத அப்பறம் அதுக்கும் ரிவெண்ச் எடுக்குறேன்னு எதாவது பண்ணி வச்சுடுவா..என்று பேசியவாறே உள்ளே நுழைந்தனர்..
சிவாவும் சேகரும் ஏதோ அபிஷியலாய் பேசி கொண்டிருக்க இவர்களை பார்த்ததும் புன்னகையோடு வரவேற்றனர்..
ஏனோ சிவாவின் முகத்தில் ஷரவந்தியை பார்த்தபோது எக்ஸ்ட்ரா பளிச் தோன்றி மறைந்ததாய் தோன்றியது கார்த்திக்கிற்கு..
வா கார்த்திக்..ஷரவந்தி தான இது..எப்படிம்மா இருக்க..
நல்லாயிருக்கேன் அங்கிள்..
வேலைல ஜாய்ன் பைண்ணிட்டியா??
ம்ம் போய்ட்டு இருக்கேன் அங்கிள்..
இது சிவா என் அண்ணண் பையன்..வக்கீலா இருக்கான் என அவரே இருவருக்குமான அறிமுக படலத்தை முடித்தார்..
ஷரவந்தி அவனை பார்த்து சிநேகமாய் சிரிக்க சிவாவோ இந்த உலகத்திலேயே இல்லை..
சரி என்ன சாப்டுறீங்க??
சார் அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்..அப்பா அம்மாக்கு சஷ்டிபூர்த்தி பண்ணலாம்நு முடிவு பண்ணிருக்கோம்..
அதான் இன்வைட் பண்ணலாமேநு வந்தோம்..அப்பா அம்மாக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல..
சோ க்ரண்ட்டா பண்ணல.. ரொம்ப க்ளோஸ் சர்க்ள்ள மட்டும் இன்வைட் பண்ணலாம்நு..
தனியா வந்தா நல்லாயிருக்காதுநு தான் இவளையும் கூட்டிட்டு வந்தேன் கண்டிப்பா பேமிலியோட வந்துருங்க சார்..
சிவா நீங்களும் தான் அப்பா அம்மாவோட கண்டிப்பா வரணும்.
நல்லவிஷயம் தான கார்த்திக்..எத்தனை பேருக்கு இப்படி புள்ளைங்க கேக்காமலே தேவையானத பண்ணுவாங்க..
நாங்க கண்டிப்பா வரோம்ப்பா..அதற்குள் துளசி ஜுஸோடு அங்கு வர அவரை குங்குமம் கொடுத்து அழைத்தாள் ஷரவந்தி..
எங்க நம்ம குட்டிசாத்தான காணோம் என்று அவனறியாமலே மனம் அவளை தேட..
உள்ளேன் ஐயா என சரியாக அங்கு வந்து சேர்ந்தாள் சஹானா.. என்ன நடக்குது இங்க???
காலைலேயே ஒரே பேச்சும் சிரிப்புமா இருக்கு ம்ம்ம் என்று வந்து அவனருகில் இருந்த இடத்தில் அமர்ந்தாள்..
ஹாய் சஹானா..வீட்டுல பங்ஷன் கண்டிப்பா வரணும் என குங்குமத்தை நீட்ட..
கண்டிப்பா வருவேன் ஷரவ் என்று கூறி சிரித்தாள்..
அங்கிருந்த சில நிமிடங்களில் பெண்கள் இருவரும் நண்பர்களாகிவிட போன் நம்பர் எக்ஸ்சேண்ஞ்ச் வரை நடந்துவிட்டது..
அவர்கள் விடைபெற்று செல்ல,சேகர் துளசியிடம் நல்ல குடும்பம் துளசி பாரு ரெண்டு புள்ளைங்களும் எவ்ளோ பொறுப்பா இருக்காங்கநு..
ஆமா சிவா நீயும் வரதான.. வேணா எங்களோடேயே வந்துரேன்..
இல்ல சித்தப்பா அப்பா அம்மாவயும் கூட்டிட்டு நா நேராவே வந்துரேன்..சஹானா அவனை சின்னதே சின்னதாய் ஒரு சந்தேக பார்வை பார்க்க..
ஐயோ குட்டிசாத்தான் ஸ்மெல் பண்ணிட்டாளே சிவா சிக்கிறாத கிளம்பு என்று தன்னை தானே எச்சரித்து கொண்டுஅங்கிருந்து நழுவி விட்டான்..
அந்த அழகான நாளும் வந்தது..உறவினர்களோடு கோவில் சடங்குகளை முடித்துவிட்டு மற்ற விருந்தினர்களை வரவேற்பதற்கான வேலைகளை கவனித்து கொண்டிருந்தான் கார்த்திக்..
அவன் வேலை சம்பந்தபட்டவர்களெல்லாம் வருவார்களென்பதால் வாசலிலேயே நின்றிருந்தான்..
சிறிது நேரத்தில் சிவா அவன் அப்பா அம்மாவோடு உள்ளே வர இவனுக்கோ ஆச்சரியம்..
ஏனெனில்,இரண்டொருமுறை அவன் தந்தையிடம் பேசியிருக்கிறான் அவ்வளவே அப்படியிருக்க இவன் சிவாவை அழைத்ததை வைத்து குடும்பத்தோடு வந்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் ஏனோ ஷரவந்தி தான் காரணமோ என்று தோன்றியது..
சிந்தனை அனைத்தையும் ஒதுக்கி அவர்களை இன்முகத்தோடு வரவேற்றான்..
தன் பெற்றோரிடம் அறிமுகப்படுத்தி விட்டுஅவர்களை கவனிக்க தொடங்க,சிவாவோ,கார்த்திக் நீங்க போய் மத்தவங்கள கவனிங்க நமக்குள்ள நோ பார்மாலிடீஸ்..
இருப்பினும் அவனால் அப்படி விட முடியவில்லை..யாரையோ கூப்பிட திரும்பியவனிடம் ஏதோ கேட்பதற்காக ஷரவந்தி வர,ஷரவந்திம்மா இவங்கள பாத்து கவனிச்சுக்கோ,சாப்ட கூட்டிட்டு போ..என்றான்..
சரிண்ணா நீ போய் மத்தவங்கள கவனி..நா பாத்துக்குறேன் என்றவாறு சிவாவையும் அவன் பெற்றோரையும் பார்த்து புன்னகைத்தாள்..
அவர்களோ தங்களுக்குள் அர்த்தமுள்ள பார்வையை பரிமாறி கொண்டடனர்..
உன் பேர் என்னம்மா??என்ன பண்ணிட்டு இருக்க?-சிவாவின் அம்மா..
ஷரவந்தி ஆன்ட்டி..இப்போ தான் டீச்சர் ட்ரெய்ணிங் முடிச்சுட்டு பல்லாவரம் ஸ்கூல்ல டீச்சரா வொர்க் பண்ணிட்டு இருக்கேன்..
வாங்க ஆன்ட்டி சாப்ட்டுடே பேசலாம்..என அவர்கள் பேசியபடி நடக்க சிவாவிற்கோ அவளை தவிர யாருமே கருத்தில் பதியவில்லை..
இங்கு நிலைமை இவ்வாறாக இருக்க அங்கு கார்த்திக் வாசலை அடைந்த நேரம் சேகரின் கார் உள்நுழைந்தது.
சேகர் துளசியை தொடர்ந்து இறங்கியவளை பார்த்து ஒரு நிமிடம் இமைக்கவும் மறந்துதான் போனான்..
அழகான கடல்நீல நிற காக்ரா சோலியில் ஒயிலாய் வந்தவளை பார்த்து பேச்சிழந்திருந்தான்..
ஏனோ ஒவ்வொரு முறையும் அவனறியாமல் அவள் வசம் மனம் போவதை அவனால் தடுக்க முடியவில்லை..
வாங்க சார் ரொம்ப தேங்க்ஸ் நீங்க வந்ததுக்கு..வாங்க மேடம் வாங்க சஹானா..
என்னப்பா தேங்க்ஸ்லா சொல்லிட்டு..நாம அப்படியா பழகுறோம்..
ம்ம்,.என்ன கார்த்திக் அப்பா அம்மாக்கு மேரேஜ்ஜா இல்ல உங்களுக்கா??என்று அவனை ஏறயிறங்க பார்த்தாள்..
வழக்கமான புன்னகையோடு அவர்களை உள்ளே அழைத்து செல்ல சஹானாவிற்கோ மனம் அவனையே சுற்றியது..
சிவப்பு வண்ண சில்க் காட்டன் சட்டையும் வேஷ்ட்டியுமாய் அம்சமாய் நின்றவனை பார்த்தவளுக்கு கண்களை நகர்த்துவது மிகவும் கஷ்டமாகதான் இருந்தது..
அதன்பின் அவனது கவனிப்பும் அவன் குடும்ப சூழலும் அவளை வெகுவாய் கவர அவனையே நோட்டமிட்டு கொண்டிருந்தாள்..
கீதா அவளிடம்,என்ன சஹானா எப்படியிருக்க??சென்னைலா செட் ஆய்டுச்சா??
எங்க ஆன்ட்டி ஏதோ பரவால்ல..பட் ப்ரெண்ட்ஸ் இல்லாம போர் அடிக்குது..
அதுக்கென்னம்மா இங்க வந்துரு ஷரவந்தியும் நாலு மணிக்குலா வந்துரா.. உனக்கும் டைம் பாஸ் ஆன மாறியிருக்கும்ல..
ஹே ஆமா சஹானா நானும் ஈவ்னிங்ல வெட்டிதான்.. நாம இங்க பக்கத்துல எங்கேயாவது கூட போய்ட்டு வரலாம்..
கண்டிப்பா வரேன் ஆன்ட்டி யு ஆர் சோ ஸ்வீட்..
அட அதனாலதான் அடிக்கடி என்ன எதாவது கடிச்சுட்டேயிருக்கா..
ப்பாப்பாபா செம கடி..நீங்க காலேஜ் பொண்ணு மாறி மொக்க போட்டுட்டு இருக்கீங்க உங்களுக்கு சஷ்டியப்த்தபூர்த்தினா நம்ப முடில போங்க..
ஹஸ்பண்ட்க்கு 60 வயசு ஆனா பண்றதுதான..சோ நா இன்னும் யெங் தான் என்ன சொல்ற..
ஓ மை காட் யு ஆர் சான்ஸ்லெஸ் ஆன்ட்டி..என்று கூறி சிரிக்க கீதாவிற்கு சற்று நேரத்திற்கு முன் உள்நுழைந்த தன் மகனும் சஹானாவுமே மனக்கண்ணில் நின்றனர்..
பேராசைதான் என்று தெரிந்தும் ஏனோ அந்த நினைவை அவரால் ஒதுக்க முடியவில்லை..
சேகர் வீட்டிற்கு வந்துமே கார்த்திக்கையும் அவன் குடும்பத்தை பற்றியுமே பேசி கொண்டிருந்தார்..
சஹானாவோ என்னவோ நினைவில் இருந்தாள்..தன் அறைக்கு வந்தவளுக்கு காலை முதல் நடந்த அனைத்தையுமே தன்னுள் ரீவைண்ட் செய்து கொண்டிருந்தாள்..
கார்த்திக் என்ற ஒருவனை முதன்முதல் சந்தித்ததிலிருந்து இன்று வரை அவனின் ஒவ்வொரு செயல்களையும் நினைத்து கொண்டாள்..
பெரும்பாலான நேரம் அவனின் பதில் அந்த அழகான புன்னகையாகத்தான் இருக்கும்..
இன்று காலை கூட யாரோ ஒருவருடன் பேசி கொண்டிருக்க அவர் ஏதோ கூறினார் போலும் தன் பற்கள் தெரிய சிரித்தவனின் கண்களுமே அந்த சிரிப்பை பங்கிட்டு கொண்டது..
உணவு பரிமாறும் போது போன் பேசியபடியே அவளிடம் கண்ணாலேயே வேண்டுமா என்று கேட்டவிதம் அந்த நேரம் அவன் கண்ணை நேராக சந்திக்க பெரும் பாடுபட்டாள்..
சற்று நேரத்தில் சுயநினைவிற்கு வந்தவள்..தன்னைதானே கடிந்து கொண்டு உறங்க சென்றாள்..
நாட்கள் இனிமையாய் கழிய ஷரவந்தியும் சஹானாவும் நல்ல நண்பர்களாகியிருந்தனர்..குறுஞ்செய்தி அனுப்புவதும்,எப்போதாவது பேசி கொள்வதும் என நன்கு பழகிவிட்டனர்..
இதற்கிடையில் கார்த்திக்கை அந்த பங்ஷனில் பார்த்த பிறகு பார்க்கவேயில்லை..
அவ்வப்போது தன்னையறியாமல் அவன் சிந்தனை எழுந்தாலும் கஷ்டப்பட்டு அடக்கி கொண்டாள்..
அன்று ஏதோ காரணத்திற்காக ஷரவந்திக்கு பள்ளி விடுமுறையாய் இருக்க பேசும் போதே சஹானாவை வீட்டிற்கு அழைத்தாள்..
சஹானாவிற்கும் ஏனோ மாறுதல் வேண்டியதாயிருந்தது..
எப்படியும் கார்த்திக் இருக்க மாட்டான் எனவே போய் வரலாமென முடிவு செய்து துளசியிடம் கூறிவிட்டு காரை எடுத்து கொண்டு கிளம்பினாள்..
மதிய வேளை என்பதால் ட்ராபிக் கம்மியாக இருக்க சுலபமாய் வந்தடைந்தாள்..
வந்தவள் காலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்திருக்க அப்போதுதான் ஷரவந்தியிடம் அவள் வருவதை கூறவில்லை என்றுரைக்க சரி சர்ப்ரைஸ்ஸாக இருக்கட்டும் என காத்திருந்தாள்..
கதவு திறப்பதற்கான அறிகுறியே இல்லாததால் மறுபடியும் காலிங் பெல்லை அழுத்திவிட்டு லேசாய் கதவில் சாய்ந்தவாறு நின்றாள்..
ஐந்து நிமிடத்தில் கதவு திறக்கப்பட எதிர்பாராமல் நடந்ததில் சட்டென தடுமாறி உட்புறம் அவள் சாய இறுக பற்றி நிறுத்தியது ஒரு கரம்..
தன்னை சமாளித்து நிமிர்ந்தவள்..தேங்க்…ஏதோ சொல்ல வாயெடுத்து வாயடைத்து நின்றாள்..
தன் முன் வெற்று மார்போடு ஒரு புறம் மட்டும் துண்டை போட்டபடி த்ரீ போர்த் பேண்ட்டோடு நின்ற கார்த்திக்கை கண்டு இமைகள் துடிக்க சட்டென நகர்ந்து நின்றாள்..
அவனும் அவளை இங்கு எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் விழியே உணர்த்த சட்டென துண்டை இருபுறமும் போட்டு கொண்டான்..
ஹலோ சஹானா என்ன ப்ளசண்ட் சர்ப்ரைஸ்..என இயல்பாய் கேட்க..
அவளும் ஓரளவு சுதாரித்து கொண்டு ம்ம் நீங்க இப்படி மாடலிங் லா பண்றீங்கநு கேள்விபட்டு அத பாத்துட்டு போலாமேநு தான் வந்தேன் என சீரியஸாய் கூற அவன் கண்கள் குறும்பு சிரிப்பை சிந்தியது..
அதை கண்டும் காணாமல் அவனை தாண்டி உள் நுழைந்தாள்..
கதவை திறக்க போனவனை காணோமே என்று வந்த ஷரவந்தி சஹானாவை கண்டதும் உற்சாக குரல் கொடுத்தாள்..
ஹே சஹானா வாங்க வாங்க மார்னிங் பேசினப்ப கூட ஒண்ணும் சொல்லல..
ஏன் டீச்சர்கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டுதான் வரணுமா??
ஐயோ தெரியாம கேட்டுட்டேன் வாங்க..
பேச்சு சத்தத்தில் ஷரவனும் கீதாவோம் வெளியே வர இருவருக்குமாய் ஒரு ஹாய் கூறினாள்..
அன்னைக்கே கேக்கனும்னு நெனச்சேன்.. ஷரவன் நீங்க டுவின்ஸ்னு கேள்வி பட்டேன்.. பட் நிறைய டிவ்ரெண்ஸ் இருக்கே எப்படி??
எல்லா டுவின்ஸும் ஒரே மாறி இருக்க மாட்டாங்க சஹானா..
நாங்க நான் ஐடென்டிகல் டுவின்ஸ்..சோ ஈஸியா டிவ்ரண்ஷியேட் பண்ணிட முடியும்..
ஓ,.என்ன ஸ்வீட்டி ஆன்ட்டி வீட்டுக்கு வந்தவங்களுக்கு காபிலா கிடையாதா??
அதற்குள் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிவிட்டு வந்த கார்த்திக்கை தவிர அனைவரும் அவள் கூறியதற்கு சிரிப்பாய் பார்க்க..
அவனோ கேள்வியாய் பார்த்தான்..ஷரவந்தி அதன் காரணத்தை விளக்க தலையை இடவலமாக ஆட்டியவாறு அங்கிருந்து நகர்ந்தான்..
அதன் பிறகு சிறியவர்கள் மூவரும் ஏதேதோ கதையடித்து கொண்டிருக்க கீதா கிட்சனில் ஏதோ வேலையாக இருந்தார்..
கார்த்திக்கோ டீவி பார்ப்பதாய் காட்டி கொண்டு அவர்களின் உரையாடலிலேயே கவனம் பதித்தான்..
அதிகபட்சம் பேசுவது யாரென்று கூறவா வேண்டும்..
சஹானா திறந்த வாய் மூடாமல் அவள் பெங்களுரு சரித்திரத்தை விவரித்து கொண்டிருக்க மற்ற இருவரும் தலையாட்டி பொம்மைகளாய் மாறியிருந்தனர்..
அதை பார்த்தவனுக்கோ தன் தம்பி தங்கையை நினைத்து பாவமாயிருந்தது..
என்ன பொண்ணுடா இது இப்படி பேசுறா வாய் வலிக்கவே வலிக்காதா..
என தீவிர ஆராய்ச்சியில் இருந்த நேரம் மதிய தூக்கம் முடிந்து மோகன் கீழே வந்தார்..
வாம்மா சஹானா எப்போ வந்த??
போங்க அங்கிள் நா வந்து ரொம்ப நேரம் ஆச்சு நீங்க என்ன வயசானவங்க மாதிரி இவ்வளவு நேரம் தூங்கிட்டு இருக்கீங்க..
கார்த்திக்கோ ஆஹா ரிடெயர்ட் டீச்சர பத்தி தெரியாம இவ வாய காட்டுறாளே..
அவரு மணிரத்னம் படம் மாறி ரெண்டு வார்த்த சேர்த்து பேசினால உலக அதிசயம்.. மகளே மாட்டுன என அவர்களை பார்க்க..
என்னம்மா நீ 60 வயசு ஆயாச்சு அப்பறம் வயசானவனில்லாம நா என்ன காலேஜ் பையனா..
அடடா வயசெல்லாம் வெறும் நம்பர்தான் அங்கிள்..
மதியானம் சாப்ட்டு இப்படிதூங்கினா அப்பறம் ஆன்ட்டிக்கு அண்ணா மாறியிருப்பீங்க..
ஸ்வீட்டிய பாருங்க எப்படி காலேஜ் கோயிங் மாறியிருக்காங்க..
அவங்களோட ரொமான்ஸ் பண்றதவிட்டுட்டு இப்படி டைம் வேஸ்ட் பண்ணா எப்படி..கீதா வேகமாய் வெளியே எட்டி பார்க்க கணவனின் பார்வையில் என்ன கண்டாரோ மறுபடியும் உள்ளே நுழைந்து கொண்டார்..
இங்கு சிறியவர்களுக்கோ சிரிப்பு தாளவில்லை இருப்பினும் அவர்கள் அப்பாவிடம் இப்படியெல்லாம் பேசியதில்லை என்பதால் அடக்கி வாசித்தனர்..
ஒன்றும் கூறாமல் அளை பார்த்து லேசாய் சிரித்துவிட்டு நகர்ந்துவிட்டார்..
சட்டென கார்த்திக்கை பார்த்தவள் இப்போ தெரியுது எதுக்கெடுத்தாலும் ஒரு சிரிப்பு உங்களுக்கு யார்கிட்டயிருந்து வந்ததுநு..
ஆனா சஹானா யு ஆர் க்ரேஸி..எப்படி இப்படி எல்லாரையும் போட்டு வாங்குறீங்க.. ஆனா எங்கப்பா மாட்டினதுதான் ஹைலைட் என சிரிக்க..
நா கொஞ்சம் அப்படிதான் ஷரவ்..தோணினத டக்குநு பேசிருவேன்..பட் யாரையும் ஹர்ட் பண்றமாறி பேசமாட்டேன்..
யுஷுவலா அவ்டெர்நூன் தூங்குறது நாட் குட் பார் ஹெல்த் சோ இப்ப நா சொன்னத வச்சு எதாவது சேஞ்ச் நடந்தா அது நல்லதுதான..
அப்படியே ஆன்ட்டிக்கும் ஒரு கம்பனி கிடைச்சா மாறியிருக்கும்ல என கூறி கண்சிமிட்ட.. அவளை விட்டு கண்அகற்றாமல் இருந்தான் கார்த்திக்..
அதன்பிறகும் எவ்வளவோ பேசிவிட்டு ஒரு வழியாக கிளம்ப தயாரனபோது மணி ஏழை தொட்டிருந்தது..
கீதா, கார்க்திக் நீ கூட போப்பா இருட்டிருச்சு பாரு..
அதெல்லாம் வேண்டாம் ஸ்வீட்டி நா பாத்து போய்ப்பேன் அப்பறம் உங்க பையன பத்திரமா விட்டுட்டு வர சொல்லி எங்கம்மா என்ன கூட அனுப்புவாங்க பரவால்லையா??
நல்லா பேசுற..நீ இருந்தா நேரம் போறதே தெரில ஷரவந்தியும் வாலு தான் ஆனா உன்ன கம்பேர் பண்ணா அவ ஒண்ணுமேயில்ல.. என்று அவள் கன்னத்தை கிள்ளி சிரித்தார்..
கார்த்திக் மனசு கேட்காமல் வாசல் வரை வந்து நா வேணா வரேனே சஹானா..தனியா மேனேஜ் பண்ணிடுவீங்களா??
கார்த்திக் உங்க மனசுல என்ன நினைக்குறீங்கநு தெரியும்.. என்கிட்ட வம்பு பண்ணிணா அவன்தான் ரொம்ப பாவம்நு தான நினைக்குறீங்க..
ச்சச்ச அப்டிலா இல்லங்க..சரி ரீச் ஆனவுடனே மெசெஜ் பண்ணுங்க..டேக் கேர்..
ஷுவர்..பாய்..
வீட்டிற்கு சென்று அவனுக்கும் ஷரவந்திக்கும் மெசெஜ் அனுப்பிவிட்டு குளித்து இரவு உடைக்கு மாறி கட்டிலில் விழுந்தவளுக்கு வழக்கம்போல் கார்த்திக்கின் நினைவுகளே ஆட்கொண்டது..
அதிலும் இன்று அவன் நின்ற கோலம் இப்போது நினைத்தாலும் ஏனோ வெட்கம் பிடுங்கி தின்றது..
அங்கு கார்த்திக்கோ மொத்தமாய் சஹானாவை தான் நினைத்து கொண்டிருந்தான்..
தன் தாய் தந்தையோடு அவள் பழகியவிதம்..ஷரவன் ஷரவந்தியோடு அரட்டை என அனைத்தையும் தாண்டி அவனை பார்க்கும் போது கண்களில் சிறு மின்னல் என ஏதேதோ நினைத்தவனுக்கு தன் எண்ண போக்கினை நினைத்து கோபம் வந்தது..
இல்ல இது சரிவராது அறியாமல்கூட அவளை சஞ்சலபடுத்தி விட கூடாது என்று முடிவெடுத்தான்..
இனி முடிந்தவரை அவளை பார்ப்பதை தவிர்க்க வேண்டுமெனவும் நினைத்து கொண்டான்..
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
2 comments
💞💞💞💞💞💞💞
Nice