370
காயத்ரியிடம் செக்அப் முடித்து சென்னை வந்து இருதினங்கள் கடந்திருந்தது..
இரண்டு நாட்களில் ஷரவன் ஷரவந்தி சிவா என மாறி மாறி கார்த்திக் சஹானாவிடம் தனிமையில் பேசிவர பெரியவர்களுக்கு சந்தேகம் எழ ஆரம்பித்திருந்தது..
ஏற்கனவே 20 நாட்கள் தங்குவதாய் இருந்த விடுமுறையை குறைத்து உடனே வந்ததே பெரியவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது..
சஹானா அம்மா நேரடியாகவே கார்த்திக்கின் தாயாரிடம் போனில் விசாரித்துவிட்டார்..
இளசுகளும் எதையோ தெளிவாய் மறைக்க இன்று சேகர் சிவா குடும்பத்தோடு கார்த்திக்கின் வீட்டிற்கே வந்துவிட்டார்..
சில நிமிடங்கள் பொதுவான உபசரிப்போடு கழிய கார்த்திக்கின் தந்தை மெதுவாய் விஷயத்தை ஆரம்பித்தார்..
கார்த்திக் ஏன்ப்பா ட்ரிப் இவ்ளோ சீக்கிரமா முடிச்சுட்டு வந்துட்டீங்க அதுவும் வரபோறோம்நு ஒரு போன் கூட பண்ணல நானும் சரி நீயா சொல்லுவநு நினைச்சேன்..
ஆனா இப்போ நீங்க எல்லாரும் பெரியவங்க எங்ககிட்ட எதையோ மறைக்குறீங்கநு தோணுது..
சொல்லுப்பா எதுவும் பிரச்சனையா??பாரு பொண்ணைப் பெத்தவரு என்னவோ ஏதோனு பயந்து போய் இருக்காரு என்னப்பா இதெல்லாம்??
அப்பா ஐயோ நீங்க பயப்படுற அளவு ஒண்ணுமேயில்லப்பா நீங்கலா இந்த அளவு இந்த விஷயத்தை எடுத்துப்பீங்கநு நா நினைக்கல..
என அவர்களின் ஊகத்தை எண்ணி பயந்து ஒவ்வொருவரும் தங்களுக்குள் கண்களால் பேசிக் கொள்ள.. மோகன் விடுவதாய் இல்லை..
கார்த்திக் இது சரியில்ல..நாங்க எதாவது விஷயம் இருக்காநு உன்னை கேக்கல..
கண்டிப்பா ஏதோ இருக்கு அதை மறைக்காம சொல்லுனு சொல்றோம்..
சமந்தியையும் வச்சுட்டு நீ இப்படி பண்றது தப்புப்பா.. என்னனு சொல்லு..
கார்த்திக் சஹானாவை பார்க்க அவள் சம்மதமாய் தலையசைக்க நீண்ட மூச்செடுத்தவன் அனைவரிடமும் மேலோட்டமாய் விஷயத்தை கூறி முடித்தான்..
கீதாவும் மோகனும் ஒன்றுமே கூறாமல் இருக்க.. சேகரும் துளசியும் கார்த்திக்கின் கையை பற்றிக் கொண்டனர்..
மாப்பிள்ளை உங்களுக்கு எவ்ளோ நன்றி சொன்னாலும் பத்தாது..
என் பொண்ணை பத்திரமா பெரிய ஆபத்துல இருந்து மீட்டு எடுத்துருக்கீங்க..
வாழ்நாள் பூரா நாங்க கடமைபட்டுருக்கோம்..நாங்ககூட இவ்ளோ நிதானமா யோசிச்சுருப்போமாநு தெரில..
ரொம்ப நன்றிப்பா என கண்ணீர் மல்க சேகர் அவனை தழுவிக் கொண்டார்..
சஹானா அவர்களை சமாதானப்படுத்த கார்த்திக் மோகனின் அருகில் சென்று அமர்ந்தான்..
அப்பா..
நீ ஒண்ணும் சொல்ல வேணாம் கார்த்திக்..
அம்மா நீயாவது கேளும்மா..எனக்கு உங்களைப்பத்தி தெரியும் இருந்தாலும் இந்த விஷயம் தெரிஞ்சு கல்யாணத்துக்கு எதாவது தடை வந்துருமோநு பயந்துட்டேன்..
அதுமட்டுமில்லாம சஹானாக்கே 4 நாள் முன்னாடி தான் தெரியும்..
அவளுக்கு தெரிஞ்சுடகூடாதேநு தான் மறச்சுட்டேன்ம்மா..சாரிப்பா..
மோகன் அவன் கைப்பற்றி அமர்த்த அவரருகில் அமர்ந்தான்..
கார்த்திக் நீ பொறந்ததுல இருந்து ஒவ்வொரு விஷயத்துலயும் எங்கள பெருமைப்படுத்தி தான் பாத்துருக்க..
இப்பவும் அதேதான்டா நடந்துருக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாயிருக்கு..
ஒரு பையனா அப்பா அம்மாக்கு உதவுறது பெரிய விஷயம் கிடையாது..
நம்மளயே நம்பி தன் குடும்பத்தைவிட்டுட்டு வர பொண்டாட்டியையும் மனம் நோகாம பாத்துக்கனும் அதுதான் ஆணுக்கு அழகு..
நீ புள்ளையா நிருபிச்சதைவிட ஆயிரம் மடங்கு புருஷனா நிரூபிச்சுட்டடா..
நீங்க ரெண்டு பேரும்100வருஷம் நல்லாயிருக்கனும்..
என கண்கலங்க அவரை இறுக தழுவிக் கொண்டான். கீதாவும் மகனை ஆதரவாய் தாங்கிக் கொண்டார்..
அனைத்தும் சுபமாய் முடிய சிவா ஷரவந்தியின் திருமணபேச்சு ஆரம்பிக்க கார்த்திக் நான்கு மாதங்களில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றுகூற சிவாவோ வானில் பறக்காத குறைதான்…
மதிய உணவிற்கு அனைவருமாய் வெளியே செல்ல முடிவெடுத்து தயாராக கார்த்திக் கார் சாவி எடுப்பதற்காக தன் அறைக்கு வந்தான்..
அவன் பின்னே மெதுவாய் வந்தவள் பின்னிருந்து அவனை இறுக அணைத்துக் கொண்டாள்..
ஹே சஹி..
தேங்க்ஸ் கார்த்திக் தேங்க்ஸ் பார் எவ்ரிதிங்..லவ் யூ சோ மச்..
அவளை தன்புறம் இழுத்தவன் நெற்றியில் இதழ்பதித்து எனிதிங் பார் யூ மை சஹி பேபி.. என்று அவளை அழைத்துச் சென்றான்..
வழக்கம்போல் சிறியவர்கள் ஒரு காரிலும் பெரியவர்கள் தனியாய் வர இந்த இரு காதல் ஜோடிகளிடமிருந்து தப்பிக்க ஷரவன் தன் காதல்புறாவோடு போனில் பேசிக் கொண்டு வந்தான்.
என் அழகியே நீ எப்போ படிச்சு முடிப்ப??
என்ன??
என்ன என்ன இப்படி 600 கி.மீ தாள்ளி உக்காந்து எவ்ளோ நாள்தான் காலத்தை ஓட்றது..
நினைச்சா பாக்ககூட முடில மிஸ் யூ பேட்லி..
நாங்க வெளில போய்ட்டு இருக்கோம் நீயும் இருந்தா நல்லாயிருந்துருக்கும் தெரியுமா??
ம்ம்..இப்போதைக்கு ஒரு குட் நியூஸ் மட்டும் வேணா சொல்லட்டுமா??
பார்ரா சஸ்பென்ஸ்லா வைக்குற என்னனு சொல்லு குட் நியூஸா இல்லையாநு நாதான் சொல்லனும்..
இன்னும் ஒன் மந்த்ல செமஸ்டர் முடியுதுல..
அதுக்கப்பறம் பிஜி க்கு சென்னை காலேஜ்ல தான் அப்ளை பண்ண போறேன் அப்பாவும் சரிநு சொல்லிட்டாரு..
அதுமட்டுமில்ல கார்த்திக் அண்ணாதான் அப்பாகிட்ட பெர்மிஷன் வாங்கி குடுத்துருக்காரு நாங்கலா இருக்கோம் தைரியமா அனுப்புங்கநு சொன்னாராம்..
வாவ் வாவ் அப்போ நீ நம்ம வீட்ல தங்கிதான் படிக்க போறியா??
ஆஆஆ ஆசை தோசை அதெல்லாம் இல்ல அண்ணா ஹாஸ்டல் பாத்து தரேன்னு சொல்லிருக்காங்க..
அதானே..ம்ம் 600 கி.மீக்கு இது பரவால்லைதான்..சரிடா ஹோட்டல்க்கு வந்துட்டோம் நைட் கால் பண்றேன் பை..
என்றவாறு காரைவிட்டு இறங்க ஷரவ் சிவா சஹானா சேர்ந்து அவனை ஒரு வழி ஆக்கிவிட்டனர்..
ஒரு சின்ன பையன் தனியா மாட்டினா போதுமே உடனே ஓட்ட ஆரம்பிச்சுருவீங்களே..
யாரு நீ சின்ன பையனா இவ்ளோ நேரம் நீ வறுத்த கடலைல கார் புல்லா தீஞ்சவாடை.. இதுல சின்ன பையனாம் என ஷரவ் சிரிக்க..
மாமா பக்கத்துல இருக்குற தைரியத்துல ஆட்ற ம்ம் வீட்டுக்கு வா உனக்கு இருக்கு..
அடடா நானும் சிவாவுமே பரவால்ல போலயிருக்கே..
இப்படி அடிச்சுக்குறீங்க…பசி உயிர் போகுது வாங்க சாப்ட போலாம்..-சஹானா..
பேச்சும் சந்தோஷமுமாய் உணவை முடித்து அனைவரும் கிளம்ப தயாராக சிவா தன் காரில் ஷரவ் குடும்பத்தை அழைத்துச் செல்வதாய் கூற சேகர் சங்கரையும் அவர் மனைவியையும் தன்னோடு அழைத்துச் சென்றார்..
கார்த்திக் சஹானாவோடு காரில் அமர,எங்க போலாம் சஹிம்மா??
ஆனாலும் நீயும் சிவாவும் இப்படி திருட்டுதனம்லா நல்லா பண்றீங்க..எப்போ இந்த ப்ளான் போட்டீங்க???
ஹே சிவாவா தான் கூப்ட்டு போனாருடா..நா எதுவுமே சொல்லல என பாவமாய் கண்ணை உருட்ட..
ம்ம் நம்பிட்டேன்.. சரி எங்க வேணா போலாம் இவ்ளோ ப்ளான் பண்ண நீ அதையும் ப்ளான் பண்ணிருப்பியே சொல்லு எங்க போறோம்???
வாவ் யூ ஆர் மை டார்லிங் சஹி..கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்ட ப்ளான்லா பண்ணல பட் நீயும் நானும் சேர்ந்து மூவி போனதேயில்லல அதான் போலாம்நு தோணிச்சு..
என்ன டிக்கெட் கிடைக்குதோ போய்ட்டு வரலாம் என்ன சொல்ற அப்படியே மால்ல கொஞ்சம் சுத்திட்டு வர்லாம்..
ம்ம் என்னவோநு நினைச்சேன் நீ தேறிட்ட மாமா…குட் என அவன் தோள்தட்ட பணிவாய் கைகட்டி அதை ஏற்றுகொண்டு சிரித்தான்..
அன்றைய நாள் சஹானாவுக்கு மறக்க முடியாததாய் இருந்தது..
வீட்டிலேயே தாங்குபவன் வெளியில் கேட்கவும் வேண்டுமா..
அவளுக்கு வேண்டியதை வாங்கி கொடுத்து அவள்முகம் பார்த்து தேவையுணார்ந்து என குழந்தையாய் பார்த்துக் கொண்டான்.
இப்படியாய் வாரங்கள் நகர சஹானா மகிழ்ச்சி என்ற ஒன்றை தவிர வேறெதுவும் அறிந்திருக்கவில்லை..
கார்த்திக்கும் விடுமுறை முடித்து வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருந்தான்..
பகல் பொழுதில் அனைவரும் வெளியே சென்றுவிட சஹானா கீதாவோடும் மோகனோடும் பேசியபடி கீதாவுக்கு சின்ன சின்ன உதவிகள் செய்தாள்..
கார்த்திக்கை பற்றி மேலும் மேலும் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டாள்…
மாலை கார்த்திக் வந்தவுடன் அன்று நடந்த அனைத்தையும் அப்படியே ஒப்பிக்க அவனும் தன்னுடைய நாள் சென்றவிதம் பற்றி கூறுவான்..
அன்றும் வழக்கம்போல் கார்த்திக் ஆபிஸிலிருந்து வீட்டிற்கு வர சஹானாவை எங்கும் காணவில்லை..
என்னவென கீதாவிடம் கேட்க மொட்டைமாடிக்குச் சென்றதாய் கூறினார்..
உடைமாற்றி இருவருக்குமாய் காபி எடுத்துக் கொண்டு மாடிக்குச் செல்ல வானத்தில் எதையோ ரசித்தபடி கைகட்டி நின்றிருந்தாள்..
ஹலோ மேடம் என்ன பாக்ககூட வராம இங்க என்ன பண்றீங்க??
என்றவாறு காபியை அவளிடம் கொடுக்க உதட்டோர சிரிப்போடு அதை வாங்கினாள்..
என்ன பேபி முகத்துல ஏதோ வித்யாசமா தெரியுது என்ன விஷயம்??
இன்னைக்கு அப்பா அம்மா என்னபத்தி என்ன சொன்னாங்க???
அதெல்லாம் ஒண்ணுமில்ல மாமா..இது வேற..நீ மொதல்ல காபி குடி நா சொல்றேன்..
என காபியை அவள் பருக ஆரம்பிக்க தடுக்க தோன்றாமல் அவனும் அமைதியாய் குடித்து முடித்தான்..
அவளே ஆரம்பிக்கட்டும் என அமைதிகாக்க அவள் ஓரமாய் இருந்த ஒரு கவரை கையில் எடுத்தாள்..
மாமா இத்தனை நாள்ல நா உனக்கு பெருசா கிப்ட்நு எதுவும் குடுத்ததில்லல..
அதான் இன்னைக்கு குடுக்கலாம்நு நினைச்சேன்..
பார்ரா சர்ப்ரைஸ் கிப்ட்லா..ம்ம் தனியாவா கடைக்கு போன ஏன் சஹிம்மா அம்மாவையாவது கூட்டிட்டு போய்ருக்கலாம்ல..
அப்போ அது சர்ப்ரைஸா இருக்காதுல மாமா..அதுவும் போக ரொம்ப தூரம்லா இல்ல இங்கதான் என்றவாறு ஒரு பெட்டியை அவனிடம் நீட்ட அதை கையில் வாங்கியவாறே ஹாங் வாட்ச்சா தேங்க் யு டா என திறக்க அதில் வாட்சின்மேல் சிறு அட்டையில் பேபி என்று எழுதியிருந்தது..
அதைப் பார்த்தவனுக்கு ஒரு நொடி ஒன்றும் புரியாமல் இமைக்க மறந்து தன்னவளைப் பார்க்க..
சந்தோஷமாய் தன்னவன் தோள் சாய்ந்து கொண்டாள்..
அது அட்வான்ஸ் கிப்ட் தான் மெயின் கிப்ட் 10 மந்த்ஸ்ல கிடைக்கும் குட்டி கார்த்திக்கா??குட்டி சஹானாவா என்ன வேணும் சொல்லு?
என அவனை சாய்ந்தவாறே நிமிர்ந்து பார்க்க,அவள் உச்சிமுகர்ந்து இதழ்பதித்தவன் மேலும் தன்னோடு சேர்த்துக் கொண்டான்..
சோ சோ ஹேப்பி சஹிம்மா இனி நீ இன்னும் கேர்புல்லா இருக்கனும் உடம்பை பாத்துக்கனும்..
முதல்ல டாக்டர்ட்ட போய்ட்டு வந்துரலாம்.. அவங்க சொல்றத அப்படியே பாலோ பண்ணனும்.. ஹெல்தி புட் தான் சாப்டனும்..
ஐயோ மாமா போதும் இப்போதான் கன்பார்மே பண்ணிருக்கேன் விட்டா நீ பத்துமாசத்துக்கும் புட் சார்ட்டே போட்டுருவ போல இருக்கே..
எல்லாம் பண்ணலாம் முதல்ல ஸ்வீட்டிகிட்ட அங்கிள்கிட்ட சொல்லலாம் வர்ரியா??
லேசாய் அசடு வழிந்தவன்.கொஞ்சம் ஓவரா எக்சைட் ஆய்ட்டேன் சஹிம்மா..
வா போலாம் பட் மெதுவா நடந்துவா பாத்து..என்றவனை அவள் முறைக்க வாயை மூடிக்கொண்டான்..
விஷயத்தை கேள்விப்பட்டவுடன் வீடே அமர்களமாக கீதா சஹானா வீட்டினரை அழைத்து விஷயத்தை கூற இரவே மகளைப் பார்க்க அவர்களும் வந்துவிட கொண்டாட்டத்திற்கு குறைவில்லாமல் இருந்தது..
மூன்று மாதங்களுக்குப் பிறகு..
திருமணகளை அந்த அரங்கெங்கும் நிறைந்துகிடக்க பட்டுவேட்டி சட்டையில் சிவா மணவறையில் அமர்ந்து தன்னவளை தன்னிடம் காட்டுவார்களா மாட்டார்களா என்ற கடுப்போடேயே மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருக்க மணமகள் ஷரவந்தி அழகான மஞ்சள் நிறப்புடவையில் பச்சை பார்டரோடு கூடிய காஞ்சிப்பட்டில் அழகான தங்க ஆபரணங்கள் அலங்கரித்திருக்க அம்சமாய் தயாராகிக் கொண்டிருந்தாள்..
அங்கு ஷரவனோ கர்மசிரத்தையாய் தன்னவளை சைட் அடித்தவாறு அவளோடு சேர்ந்து வேலை செய்வதாய் பாவலா காட்டிக் கொண்டிருந்தான்..
எங்க நம்ம ஹீரோநு தான கேக்குறீங்க வாங்க வாங்க பாக்கலாம்..
லேசாய் மேடிட்ட வயிரோடு ஆரஞ்ச் நிற பட்டுப்புடவையில் தாய்மைக்கான அழகோடு சஹானா ஷரவந்தியருகில் அமர்ந்து அவளுக்கு உதவிக் கொண்டிருந்தாள்..சஹி..
அடடா இதோட அஞ்சு தடவை வந்துட்ட அண்ணா உனக்கு என்னாதான் வேணும் பேசாம அண்ணிய கூட்டிட்டு போய் அங்க எங்கேயாவது உக்காரு என ஷரவந்தி முறைக்க அவள் தோழிகள் சிரிக்க சஹானாவோ தலையில் அடித்துக் கொள்ளாத குறையாய் அவனை வெளியே இழுத்து அருகிலிருந்த அறைக்கு வந்தாள்..
மாமா மானம்போகுது நீ ஏன் இப்படி பண்ற..
இல்ல சஹி சாப்ட எதாவது வேணுமாநு..
மாமா..
ஹே ரொம்ப பண்றீங்க டீ எல்லாரும்..அவனவன் கஷ்டம் அவனவனுக்கு..
உனக்கென்ன ஜாலியா பாப்பாவ வயித்துக்குள்ள வச்சுகிட்டு பத்திரமா பாத்துக்குற..
எனக்கு தான் நீ வாமிட் பண்றத பாக்கும்போதும் டயர்டா இருக்கும்போதும் என்ன பண்றதுனே புரிய மாட்டேங்குது..
நேத்து புல்லா அவ்ளோ டயர்டா எழுந்துக்க முடியாம இருந்த இன்னைக்கு என்னன்னா கல்யாண பொண்ணைவிட சூப்பரா ரெடி ஆகி நிக்குற.. மூளை குழம்புது எனக்கு..
மெதுவாய் அவன் கையெடுத்து தன் வயிற்றில் வைத்து மாமா இங்க இருக்குறது என் கார்த்திக்கோட பாப்பா தான அப்போ அதுவும் கார்த்திக் மாதிரியே என்ன பத்திரமாதான பாத்துக்கும்..
அப்பறம் என்ன..நீ என் பக்கத்துல இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் நாங்க பத்திரமாதான் இருப்போம்..
இந்த வாந்தி மயக்கம்லா சகஜம் மாமா..இந்த கஷ்டம்கூட படலனா குழந்தையோட அருமை நமக்கு எப்படி தெரியும்..
தைரியமா இரு கார்த்திக்..என்று கண்சிமிட்ட..
தன்மேல் அவளை சாய்த்துக் கொண்டவன்.என்ன வேணா சொல்லு சஹிம்மா இந்த விஷயத்துல உங்களுக்கு வர்ற தைரியம் ஆம்பளைங்களுக்கு எப்பவுமே இருக்குறதில்ல..
சரி இனி கொஞ்சம் தெம்பா இருக்க பழகிக்குறேன். எனும்போதே கதவு தட்டப்படும் ஓசைகேட்டு கார்த்திக் கதவைத் திறக்க கீதா பதட்டமாய் இருந்தார்..
என்ன கார்த்தி சஹானாக்கு மறுபடியும் வாமிடிங்கா??ஷரவ் தான் நீ கூட்டிட்டு போனனு சொன்னா என்னாச்சுடா??
என கேட்க குறுஞ்சிரிப்போடு கதவை அகலதிறந்து சஹானாவை பார்க்க அவள் சத்தமாகவே சிரித்தாள்..
ஸ்வீட்டி மாமாவே பரவால்ல நீங்களுமா??
அட நா எவ்ளோ பயந்துபோய் ஓடி வரேன் நீ இங்க என்ன கிண்டல் பண்ணிட்டு இருக்க உதைகுடுக்க போறேன் வாங்க மணமேடைக்கு ஷரவ் போயாச்சு..
நாத்தனார் முடிச்சு போட வேண்டிய நீ இங்க இருக்க வா வா…
அடுத்த சில நிமிடங்களில் அனைவரின் ஆசீர்வாதத்தோடு சிவா ஷரவந்தி திருமணம் இனிதே நடந்து முடிந்தது..
சம்பிரதாயங்கள் முடிந்து ஷரவந்தி சிவா வீட்டுக்கு கிளம்ப அவளை அழவிடாமல் ஏதோ ஒன்றை பேசியவாறு சிவா வம்பிழுத்துக் கொண்டேயிருந்தான்..
பெற்றவர்களுக்கு அதுவே நிறைவாய் இருந்தது..
கார்த்திக்கும் ஷரவனும் அவர்களோடு கிளம்ப சஹானா தானும் வருவதாய் கூறினாள்..
கார்த்திக் முகம் உடனே பதட்டமாய் மாற சஹானா கைகூப்பினாள்..
வேணாம் மாமா நா வரல நீயே போய்ட்டு வா மறுபடியும் முதல்ல இருந்து என்னால முடியாது.. என முடிப்பதற்குள் அங்கு அனைவருமே சிரித்துவிட்டனர்..
ஷரவந்தியை விட்டு கிளம்பும் போது கார்த்திக் வழக்கம்போல் பொறுப்பான அண்ணணாய் அறிவுரை கூறி தன் கவலையை மறைத்து விடைபெற ஷரவனோ கண்கலங்கிவிட்டான்..
தாய் வயிற்றில் ஜனித்த நொடியிலிருந்து ஒன்றாகவே இருந்தவள் இப்போது வேறு வீட்டிற்கு வந்துவிட்டதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..
எந்தளவு இருவரும் சண்டையிட்டார்களோ அதேயளவு அன்பும் ஒருவர்மேல் ஒருவருக்கு இருக்க ஷரவந்தியும் அத்தனனைநேரம் கட்டுப்படுத்தி வைத்த கண்ணீரை அவன் தோள் சாய்ந்து கொட்டித் தீர்த்துவிட்டாள்..
ஷரவ் பாத்து நடந்துக்கோ எல்லாரையும் நல்லா பாத்துக்கோ அப்பப்போ கால் பண்ணு சரியா?
ம்ம் சரிடா நீயும் கால் பண்ணு..வில் மிஸ் யூ சோ மச்டா.. சிவா ஆதரவாய் அவள் தோள்பற்ற ஓரளவு நிதானித்திருந்தாள்..
என்ன ஷரவன் நீ அவளை தேத்துவனு பாத்தா நீயும் இப்படி எமோஷனல் ஆய்ட்டு இருக்க??-கார்த்திக்..
விடுங்க கார்த்திக் நாளைக்கே கௌரி வந்தப்பறம் ஷரவனுக்கு ஷரவ் பத்தி யோசிக்ககூட நேரம் இருக்காது அதான் இப்போவே பீல் பண்ணிக்குறான் இல்ல மச்சான் என கண்சிமிட்ட..
உடனே ஷரவ் அவனிடம் டேய் அப்படியா டா அவ வந்தா என்ன கண்டுக்க மாட்டியா?
அப்பறம் நாத்தனாரா இருக்க மாட்டேன் நாரதரா மாறிடுவேன் பாத்துக்கோ!!
மாமா சந்தோஷமா அவ என்ன மதிச்சு அன்பா பேசுறதே எப்பவாவதுதான் அதையும் இப்படி ஆக்கிட்டீங்களே..என பாவமாய் பார்க்க..
விடு மச்சான் வீடுக்கு ஒரே மாப்ளை மச்சினர்ங்க ரெண்டு பேருமே ரொம்பபபப நல்லவங்க இப்படி எதாவது கலகம் மூட்றதவிட வேற வழியில்ல அப்பறம் எனக்கும் எப்படிதான் டைம் பாஸ் ஆகும் சொல்லுங்க…
நல்ல டைம்பாஸ் மாமா..கீப் இட் அப் என்ன ஆள விடுங்க நா ஓடிறேன்.
சகோதரியை நல்ல இடத்தில் ஒப்படைத்த திருப்தியோடு சகோதரர்கள் வீடு திரும்ப ஏனோ வீடே வெறிச்சென்று இருப்பதாய் தோன்றியது..
கீதாவும் மோகனும் மனதளவில் பெண்ணை பிரிந்த தவிப்போடு இருந்தாலும் ஒன்றும் காட்டிக் கொள்ளவில்லை..
கார்த்திக் சஹானாவை தேடி அறைக்குச் செல்ல கட்டிலில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தாள்..
வா மாமா ஷரவ் எப்படியிருக்கா??ரொம்ப அழுதாளா??
ம்ம் இல்ல சஹிம்மா பரவால்ல ஷரவன்தான் ரொம்ப எமோஷனல் ஆய்ட்டான்..
ம்ம் ட்வின் சிஸ்டர் இல்ல..ரொம்ப மிஸ் பண்ணுவான்..நீ மட்டும் என்ன உள்ளுக்குள்ள பீல் பண்ணுவ வெளில காட்டிக்க மாட்ட..
எனக்கே என்னவோ வீடே வெறிச்சு போனமாதிரி இருக்கு..
ம்ம் உண்மைதான் சஹி..பட் இது எல்லாரும் நடக்குற ஒரு விஷயம்தான எங்க அம்மாவும் இப்படிதான் வந்துருப்பாங்க..
நீயும்தான்..பட் பெண்கள் எப்பவுமே க்ரேட் சஹிம்மா 20-23 வருஷம் வாழ்ந்த வீட்டை சொந்தங்களையெல்லாம் விட்டு புது மனுஷங்க புது இடம் யாரு எப்படிநு ஒண்ணும் தெரியாது..
இனி நீ இங்கதான் வாழணும்னு விடும்போது அதை ஏத்துகிட்டு கொஞ்சநாள்லயே அதுதான் தன்னோட குடும்பம்நு மாத்திகிட்டு வாழ்நாள் பூரா அவங்களுக்காகவே வாழறதெல்லாம் பெரிய விஷயம்டா.
ஆம்பளைங்களால இதெல்லாம் முடியுமாநு கூட தெரில..
வெளிலயிருந்து பாக்கும் போது இது ஒரு பெரிய விஷயமா இதுதான் காலம்காலமா இருக்குற சம்பிரதாயம்நு சொல்லிட்டு போய்டலாம்..
ஆனா நாம தூக்கி வளர்த்த பொண்ணோ அக்காவோ தங்கையோ பிரியும்போதுதான் இவ்ளோ யோசிக்க தோணுது..
ம்ம் கரெக்ட்தான் பட் இதுதான் எதார்த்தமும் மாமா..
கொஞ்சநாள்ல எங்க மைண்டே ஆட்டோமடிக்கா மாறிடுது..
இப்போ அது அம்மா வீடா மாறிடுது இதுதான் என் வீடா இருக்கு..
அந்த பிரிவை ஈடுசெய்றமாதிரியான புகுந்தவீட்டு உறவுகளும் புருஷனும் கிடைச்சுட்டா அது ஒரு பெரிய விஷயமா தெரியாது.
இப்போ எனக்கு கிடைச்சா மாதிரி என கண்சிமிட்டி சிரிக்க அவள் கன்னம் கிள்ளி தன்னவளை நினைத்து உவகை கொண்டான்..
இரு குடும்பங்களின் வாழ்வும் இனிமையாய் நகர கௌரி சென்னைக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டிருந்தது..
அவ்வப்போது சஹானாவை பார்க்கும் சாக்கில் வீட்டிற்கு வர வார இறுதியில் ஷரவன் சென்று அவளை பார்த்து வருவான்..
கார்த்திக் அனைத்தையும் தெரிந்திருந்தாலும் கண்டும் காணாமல் இருந்தான்..
ஏனெனில் இவர்களின் சந்திப்பால் இருவருமே தங்கள் கடமைகளை ஒழுங்காய் கவனிக்க தவறவில்லை..
மூன்று வருடங்களுக்குப் பிறகு,
தேவி எங்க இருக்க நீ??ரொம்ப படுத்துற நீயே வந்துரு என்கிட்ட..என்றவாறே தன் அறைக்குள் நுழைந்தாள் சஹானா..
ஆரம்பிச்சுட்டீங்களா ரெண்டு பேரும் இன்னைக்கு என்ன பிரச்சனை???
மாமா எல்லாம் நீ குடுக்குற இடம் தான் வர வர என் பேச்சை கேக்கவே மாட்றா என கார்த்திக்கிடம் பஞ்சாயத்திற்கு நின்றாள்..
பேபி அவளுக்கு இரண்டரை வயசுதான் ஆகுது நீ என்னவோ கல்யாண வயசுல இருக்குற பொண்ணை திட்றமாதிரி திட்டிட்டு இருக்க என்று அவன் சிரிக்க சஹானா அவளை முறைத்தாள்..
அவளை தன்புறம் இழுத்தவன்..ஹே பொண்டாட்டி ஒரு குழந்தைக்கு அம்மாவான உன்னையே நா செல்லம் கொஞ்சிட்டுதான் இருக்கேன் அப்பறம் என் பொண்ணை மட்டும் கொஞ்சமாட்டேனா?என மூக்குரச
அசடுவழிய தன்னவன்மேல் தலைசாய்த்துக் கொண்டாள்..
ஜல் ஜல் என்ற கொலுசோசை கேட்க அவனை விட்டு விலகியவளை கைப்பற்றி தன்னருகிலேயே நிற்க வைத்தவன் வாசலைப் பார்க்க..
காத்தி என்ன பணுற??என்றவாறு ஆலாக்கு சைசில் பெரிய மனுஷி ஓடிவர,
அடி வாலு எத்தனை தடவ சொல்றேன் அப்பாவா பேர்சொல்லி கூப்டாதநு கேக்கமாட்டியா??
கேக்கமாட்டே என்றவாறு தந்தையிடம் கைத்தூக்க வாரி அணைத்துக் கொண்டான்.. அப்படி சொல்லுடா என் தங்கம்..
ம்ம் போதும் உங்க அப்பா பொண்ணு பாசம் வா வா ஸ்கூல்க்கு டைம் ஆச்சு..
நா ஸ்ச்சூலுக்கு போ மாட்டேன்..நோ என மறுபடியும் வெளியே ஓட, ஐயோ மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிகுறாளே என அவளைத்துரத்த சிரித்தவாறே வேலைக்கு தயாரானான் கார்த்திக்..
சித்தா சித்தா என்ன தூக்கு அம்மா வரா என ஷரவனைச் சுற்ற ஷரவன் அவளை கையில் ஏந்தி சுற்றினான்..
தேவி டார்லிங் அம்மா பாவம்தான நீ போய் ரெடி ஆகி சமத்தா ஸ்கூல்க்கு போய்ட்டு வருவியாம் நா ஆபீ போய்ட்டு வந்து உன்ன ஐஸ்கீரீம் கடைக்கு கூட்டிட்டு போவேனாம்..
குட் கேள்ஸ்லா சித்தா சொன்னா கேப்பாங்க..
ம்ம்ம் சயி அப்போ என்ன கௌரி சித்தி பாக்க கூட்டிட்டு போவியா என கேட்க சஹானாவோடு வந்த கீதா அதைக் கேட்டு ஷரனைப் பார்க்க சஹானா ஒன்றும் தெரியாதவளாய் குழைந்தையை வாங்கிக் கொண்டு நகர கீதாவும் ஒன்றும் பேசாமல் வெளியே சென்றுவிட்டார்..
ஷரவன் என்ன செய்வதென தெரியாமல் அண்ணணிடம் போய் நிற்க..
வழக்கம்போல் நம்ம கூல் மாஸ்டர் நீ ஆபிஸ் கிளம்பு ஷரவா நா பேசிக்குறேன் என அசால்ட்டாய் கூறி நகர்ந்தான்..
சாப்பாட்டு மேஜையில் மோகனும் கார்த்திக்கும் உணவருந்த சஹானாவும் கீதாவும் பரிமாறினர்..
கார்த்திக் மெதுவாய் தன் தந்தையிடம் பேச்சை ஆரம்பித்தான்..
அப்பா அம்மா உங்ககிட்ட ஒரு விஷயம் பேசனும்..
என்னப்பா சொல்லு..
அது வந்துப்பா..நம்ம ஷரவன் கல்யாணத்தைப் பத்தி தான்..
ஓ..அதபத்தியா சொல்லுப்பா பொண்ணு படிப்பை முடிச்சுட்டாளா?? கல்யாணதேதி முடிவு பண்ணிரலாமா??
சாப்பாட்டை வாயில் வைத்தவனுக்கு புரையேற சஹானா அருகிலிருந்த தண்ணீரை பருக கொடுத்தாள்.. சற்று நிதானித்தவன்.அப்பா..
சொல்லுப்பா பொண்ணு வீட்ல பேசிரலாமா??
நீங்க யாரைபத்தி சொல்றீங்கப்பா..
உன் தம்பியும் நீயும் எந்த பொண்ணை முடிவு பண்ணிருக்கீங்களோ அந்த பொண்ணுதான்..
கார்த்திக் என்ன கூறவென தெரியாமல் முழிக்க சஹானா மெதுவாய், அங்கிள் கார்த்திக் பாவம் பொழச்சுப் போட்டும் விட்டுருங்க என சிரிக்க கார்த்திக் கீதாவைப் பார்த்தான்..
கார்த்தி அப்பா கௌரியைப் பத்தி தான் பேசுறாரு.. எங்களுக்கு எல்லாம் தெரியும்.. மனபூர்வமா சம்மதமும் தான்..
ம்மாமா..
ஆமாப்பா கொஞ்ச நாளாவே எங்க ரெண்டு பேருக்கும் சின்னவன் மேல கொஞ்சம் கவனம் இருந்தது..
அப்போ சஹானாகிட்ட தான் கேட்டோம் அவதான் விஷயத்தை சொன்னா..
இருந்தும் நீங்களே சொல்லட்டும்நு விட்டுட்டோம்..
இன்னைக்கு நம்ம தேவி குட்டி போட்டு உடைச்சுட்டா என சிரிக்க..
கார்த்திக் சஹானாவைப் பார்த்தான்,என்ன ஏன் மொறைக்குற மாமா நீ மட்டும் மணி அண்ணாகிட்ட பேசினத என்கிட்ட சொன்னியா??
அதுக்கு இது சரியா போச்சு என உதடுசுழித்து பழிப்பம் காட்ட.
இதோ வரேன் எதுக்கு எது சரினு நா சொல்றேன் என அவளைத் துரத்த மாமா ஆபிஸ் நேரமாச்சுல நீ கிளம்பு என்றவாறே அவள் அறைக்கு ஓடினாள்.
அறைவாசலிலேயே அவளை பிடித்திருந்தவன் கைச்சிறையில் அடைத்து ஏண்டீ சொல்லல??
கார்த்திக் நீயே எவ்ளோ பொறுப்பைதான் மேனேஜ் பண்ணுவ சரி உனக்கு ஹெல்ப் பண்ணலாமேநு தான்.. என்றவாறே அவன் சட்டையை சரிசெய்தாள்..
வர வர உனக்கு என்மேல பயமேயில்லாம போச்சு சரியில்லயே அப்பப்போ கொஞ்சம் ட்ரீட்மெண்ட் குடுத்தா தான் சரி வரும் என அவள் இதழ்நோக்கி குனிய.. போதுமே ஒழுங்கா ஆபீஸ் கிளம்பு மாமா..
ம்ம் சரி அப்பா அம்மா ஷரவன் விஷயத்துக்கு ஒண்ணும் சொல்லலையா உடனே ஓகே சொல்லிட்டாங்களா??
ரொம்ப அப்போஸ்லா பண்ணல பட் கொஞ்சம் யோசிச்சாங்க அவங்களுக்கு மறுக்குற அளவு எந்த காரணமும் இல்லதான் பட் எங்கப்பா பெரியப்பா எதாவது சொல்லுவாங்களோநு தயங்கினாங்க நாதான் அவங்ககிட்ட நா பேசிக்குறேன் உங்க விருப்பத்தை சொல்லுங்கநு சொன்னேன்..
அப்பறம் தெளிவாய்ட்டாங்க.. ஏன் மாமா நா வேணா இன்னைக்கு நாளைக்குள்ள போய் அப்பாகிட்ட பேசிட்டு வந்துரவா??
ஆச்சுனு அவங்க கல்யாணத்தை முடிச்சுருவோம் கௌரி அதுக்கப்பறம் படிக்குறதோ வேலைக்கு போறதோ அவ இஷ்டம் என்ன சொல்ற??
வீட்டோட மூத்த மருமக சொன்னா சரிதாங்க எஜமானியம்மா என சிரிக்க அவளும் கலந்து கொண்டாள்..
ம்ம் கூடிய சீக்கிரம் கல்யாண களை கட்ட போகுது வீடு..
ஆங்ங் அதோட ஒண்ணு சொல்ல மறந்தே போய்ட்டேன் ஷரவன் கல்யாணம் வரைதான் உனக்கு டைம் எவ்ளோ ஜாலியா இருக்க முடியுமோ இருந்துக்கோ அதுக்கப்பறம் மேடம் ரொம்ப பிஸி ஆய்டுவீங்க..புரியுதா??
என்ன மாமா சொல்ற என்ன பிஸி??
சர்ப்ரைஸ்ஸ்ஸ் ஓ.கே எனக்கு டைம் ஆச்சு பை சஹி.ஈவ்னிங் பாக்கலாம் பை என கன்னத்தில் இதழ்பதித்துச் சென்றான்..
அடுத்த இரண்டு நாட்களில் ஓரளவு அனைவரிடமும் சஹானா பேசியிருக்க வீட்டு லேண்ட் லைனிற்கு அழைப்பு வந்தது..சஹானா எடுத்து பேச ஷரவந்தி அழைந்திருந்தாள்..
சொல்லுங்க டீச்ரம்மா எங்களையெல்லாம் நியாபகம் இருக்கா பக்கத்துல இருக்கநு பேரு பாத்து மாசக் கணக்கா ஆச்சு..
என்ன சொல்றான் என் பாச மலர் அண்ணன்..
அண்ணி அண்ணி பொறுமையா திட்டுங்க நான் மட்டும்னா பரவால்ல உங்க மருமகனோ மருமகளோ வேற கேட்டுட்டு இருக்காங்க இல்ல அப்பறம் என்னடா இது நம்ம அத்தை இவ்ளோ கோபகாரங்களா இருக்காங்களேநு நினைச்சுறப்போறாங்க என்று சிரிக்க
சஹானாவிற்கு குஷி தாங்கவில்லை..வாவ் ஷரவ் கங்க்ராட்ஸ்..
சோ ஹேப்பி பார் யூ போத் டாக்டர் செக் அப் முடிஞ்சுதா???ஸ்வீட்டி அங்கிள் சீக்கிரம் வாங்க..
ஆமா நம்ம வீட்டு ராசியோ என்னவோ எப்போ கல்யாணம் நடந்தாலும் யாராவது கன்சீவ் ஆய்டுவாங்க போலயிருக்கே..
வாவ் அண்ணி ஷரவன் கௌரி மேட்டரை சொல்லியாச்சா எல்லாரும் ஓ.கே சொல்லிட்டாங்களா எப்போ கல்யாணம்??
ம்ம் இன்னும் இரண்டு மாசத்துல ஷரவ் அதுகுள்ள உடம்பை தேத்தி குட்டிப் பாப்பாவோட குட்கேளா வந்துரு.
இதோ ஸ்வீட்டி வந்துட்டாங்க குடுக்குறேன் பேசு என்றவள் தன் மொபைலை எடுத்து கார்த்திக்கிற்கும் ஷரவனுக்கும் விஷயத்தை கூறினாள்.
வேகத்திற்கு குறைவில்லாமல் நாட்கள் உருண்டோட அந்த அற்புத மூகூர்த்தத்தில் ஷரவன் கௌரியின் திருமணம் இனிதே நடந்தேறியது..
வெல்கம் டூ பாவப்பட்ட கணவர்கள் சங்கம் மச்சான் என சிவா கைகொடுக்க ஷரவந்தி அவனை முறைத்தாள்.
அம்மா தாயே பழைய நியாபகத்துல என்ன அடிக்க ஓடி வந்துராத என் குட்டி பாப்பா பாவம்..
ஓ அப்போ என் மேல அக்கறை கிடையாது உங்க பாப்பாவுக்காக தான் கவலபடுறீங்க??
பாத்துக்கோ மச்சான் இதுதான் கணவர்களின் நிலைமை என பாவமாய் கூற அங்கே சிரிப்பொலி அடங்க வெகுநேரம் ஆனது..
மணி கார்த்திக்கின் கைப்பற்றி கண்களில் வைத்துக் கொண்டார்..
என்ன அண்ணா இதெல்லாம்??
இல்ல தம்பி என் மகளும் நானும் பண்ணிண புண்ணியம்தான் இப்படி ஒரு குடும்பம் என் பொண்ணுக்கு கிடைச்சுருக்கு..
மனசு நிறைஞ்சிருக்குப்பா.. ஆதரவாய் தோள்தட்டி அவரை சமாதானப்படுத்தியவனை கர்வமாய் பார்த்தாள் அவனின் சரிபாதி..
அடுத்த இரண்டாவது நாள் ஷரவன் தம்பதியர் தேனிலவுக்காக கிளம்பத் தயாராகிக் கொண்டிருக்க காலை 11 மணியளவில் பைல்ட் என்பதால் சஹானா அவர்களுக்கானதை செய்து கொடுத்துக் கொண்டிருக்க வாசலில் சத்தம் கேட்டு வெளியே சென்றாள்.
அங்கே சிவா ஷரவந்தியோடு தன் அப்பா அம்மா சிவா பெற்றோர் என அனைவரும் வந்திறங்குவதை கண்டவள் ஆச்சரியத்தோடு சென்று வரவேற்றாள்..
வாங்கப்பா வாம்மா..என்ன திடீர்நு எல்லாருமா வந்துருக்கீங்க போன்ல கூட ஷரவ் நீ ஒண்ணுமே சொல்லல..
ஏன் இங்க நாங்க வரக்கூடாதா சொல்லிட்டு தான் வரணுமா என சிவா கேட்க.தெரியமா கேட்டேன் எருமை உள்ள வா..
ம்ம் எது மாறினாலும் இந்த மரியதை மட்டும் மாறமாட்டேங்குதே ம்ம் …
கார்த்திக்கை அழைப்பதற்காக அறைக்குச் சென்றவள் அங்கு அவன் தயாராகிக் கொண்டிருப்பதை கண்டு குழம்பினாள்..
என்ன மாமா இன்னைக்கு லீவுநு தான சொன்ன இப்போ எங்க கிளம்பிட்டு இருக்க??
கூல் சஹிம்மா அத்தை மாமா எல்லாரும் வந்தாச்சு போல நா போய் அவங்களைப் பாக்குறேன் நீ அழகா ரெடி ஆய்ட்டு வா பாக்கலாம்..
அவங்க வர்றது உனக்கு ஏற்கனவே தெரியுமா??என்ன நடக்குது இங்க??
பேபி இன்னும் ஹாவ் அன் அவர்ல எல்லாமே தெரியும் உனக்கு நீ சம்மத்தா நா சொல்றத செய் பாக்கலாம்..
என கன்னம் கிள்ளி விசிலடித்தவாறே வெளியே சென்றவனை பார்த்தவளுக்கு ஆர்வம் இன்னுமாய் அதிகரித்தது..
கப்போர்டைத் திறக்க வழக்கமான அவன் பாணியில் உள்ளே ஒரு பார்சல் இருக்க மென்னகையோடே அதை கையில் எடுத்து பிரித்தாள்..
அழகிய கடல்நீல நிற பட்டுப்புடவையும் அதற்கேற்றவாறு சின்னதாய் அதே நிற கற்கள் பதித்த நெக்லஸ் செட் இருந்தது.
ஆர்வம் தாங்காமல் வேகமாய் அதை உடுத்தியவள் கண்ணாடியில் தன்னை சரிப்பார்த்தவாறு வெளியே வரகீதா கையில் கொண்டு வந்த மல்லிச்சரத்தை அவள் தலையில் சூட்டினார்..
அம்ம்ம்மாமா நீ அழகாயிருக்க நாமயெல்லாம் இப்போ எங்க போறோம் தெரியுமா என தேவிகா அவள் காலைக் கட்டிக் கொள்ள ஷரவனும் சிவாவும்,
ஹே வாயாடி உன்ன இப்போ எஎன்ன பண்றோம் பாரு என அவளை கையில் தூக்கிக் கொண்டு வெளியே ஓடினர்..
அனைவருமாய் காரில் கிளம்பி செல்ல சஹானா அமைதியாய் தன்னவனை ரசித்தவாறே அமர்ந்திருந்தாள்..
அடுத்த 10வது நிமிடம் ஓரிடத்தில் கார் நிற்க இறங்கியவளின் கண்கள் அங்கிங்கு நகரவில்லை..
கார்த்திக் அவளருகில் வந்து நிற்க அவன் கைகளை இறுக பற்றிக் கொண்டாள்..
மாமா..
ம்ம் நீ மறந்துருப்ப ஆனா நா மறக்கமாட்டேன் சஹிம்மா..நீ கத்துக்கிட்ட விஷயம் எப்பவும் வீணாப் போய்ட கூடாது..
அதுக்காக தான் இந்த எஸ்.கே பொடிக்.. எஸ் பார் சஹானா அண்ட் கே பார் கார்த்திக்.. பிடிச்சுருக்கா???
நீ எனக்கு பிடிக்காதத என்னைக்குமே பண்ணமாட்டியே மாமா..
தேங்க் யூ சோ மச்..
எனிதிங் பார் யூ சஹிம்மா போ போய் ரிப்பன் கட் பண்ணு நல்லநேரம் முடியபோகுது எல்லாரும் வெயிட் பண்றாங்க பாரு..
பெருமையோடு ககத்திரியை தன்னவன் கைகளில் கொடுக்க இருவருமாய் சேர்ந்தே கட் செய்து உள்ளே சென்றனர்..
சின்ன இடம்தான் இருப்பினும் அம்சமான இன்டீரியரோடு கண்கவரும் ஆடைகளோடும் அழகாய் காட்சியளித்தது..
என்னால முடிஞ்சது சஹிம்மா.. ப்யூசர்ல டெவலப் பண்ணிக்கலாம் மெயினா இந்த மாதிரி ரெசிடென்ஷியல் ஏரியால ஓபன் பண்ண ரீசன்
இது கொஞ்சம் பார்ஷ் ஏரியாசோ நல்ல டிசைன்ஸ் மேனேஜபில் ரேட்ல குடுத்தோம்னா சீக்கிரம் டெவல்ப் ஆகிடும் ஆல்சோ ஸ்ட்ரிச்சிங் ஆப்ஷன் இருக்குறதால அதுக்காக வர்றவங்களும் வருவாங்க இப்போதைக்கு அதோ அவங்க ரெண்டு பேரையும் டெய்லர்ஸா போட்ருக்கேன்..
தேவையை பொறுத்து வேணும்னா ஆள் சேத்துக்கலாம்..
எல்லாம் ஓ.கே வாடா எனக்கு தெரிஞ்ச லெவல்ல பண்ணிருக்கேன் வேற எதுவும் மாத்தனும்னாலும் சொல்லு பண்ணிக்கலாம் என அவள் பதிலுக்காக அவளை பார்க்க அக்கம்பக்கம் பார்த்தவள் சட்டென அவன் கன்னத்தில் இதழ்பதித்து லவ் யூ சோ மச் கார்த்திக்.
ஐ பீல் வெரி வெரி ப்ரௌட்..தேங்க்ஸ் அ லாட் மாமா..கடைதிறந்த முதல் புடவையை கீதாவிற்கும் துளசிக்கும் கொடுக்க ஷரவ் கௌரி மற்றும் சிவாவின் தாய்க்கும் ஒன்றை பரிசளித்தாள்..
அன்றைய நாளின் மகிழ்ச்சி நீண்டு கொண்டேயிருப்பதாய் தோன்றியது சஹானாவிற்கு குழந்தையை தூங்க வைத்துவிட்டு பால்கனிக்கு வந்தவள் வானத்தையே பார்த்திருக்க கார்த்திக் அவள்காதருகில் மூக்குரசி என்ன தொழிலதிபர் அவர்களே தூங்க போலையா என்று சிரிக்க,
எப்படி தூங்குறது மாமா கழுத்து வரை சந்தோஷத்துல மூச்சடைக்குது..நீ ஏன் இப்படியிருக்க..
தனக்கு ஒருபடிமேல பொண்டாட்டிய வச்சுபாக்குற நினைப்பு எல்லா புருஷன்களுக்கும் வந்துராது மாமா..
நீ லட்சத்துல ஒருத்தன் மாமா..என கண்கலங்க தோள் சாய்ந்து கொண்டாள்..
சஹிம்மா..
மனதில் உன்னை சுமந்து
உயிராய் உன்னில் கலந்து
நீயே கதியென உன் சதியாய்
ஜென்ம ஜென்மமாய்
நின்னையேசரணென்று அடைந்தேன்
என் உயிரே.!!!..
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னோட உனக்கான சஹியாகவே பிறக்கனும் மாமா..
அப்படி நடக்கும்னா எனக்கு மோட்சமே வேணாம் என்றாள் கண்கொள்ளா காதலோடு..
******முற்றும்******
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
4 comments
உண்மை காதல் வாழும் போதே சொர்க்கமாய் தெரியும்.. அவர்களின் ஜென்ம பந்தம் என்றும் தொடரட்டும். 🥰🥰
Lovely story ma
Superb story ma. Congrats.
Lovely😊 story💕 super💕