157
அவன் எண்ணியபடியே அடுத்து வந்த வாரங்களில் சஹானாவை பார்ப்பதை தடுப்பதற்காக சேகரின் வீட்டிற்கு செல்வதை தடுத்தான்..
ஏதோ காரணம் கூறி அவரை ஆபீஸிலேயே பார்த்து வேலையை முடித்து கொடுத்தான்..
ஒரு மாதத்திற்கு பிறகு அடையாரில் ஒருவரை சந்திக்க வேண்டிய வேலையை முடித்துவிட்டு திரும்பும் போது தற்செயலாய் சாலையின் மறுபுறம் பார்க்க முகம் முழுக்க பரபரப்பும் லேசாய் பயமுமாய் நின்றிருந்தாள் அவள்..
அப்படியே போய்விட எண்ணியவன் மனது கேட்காமல் வண்டியை திருப்பி கொண்டு வந்து அவள்முன் நின்றான்..
சின்னதே சின்னதாய் ஒரு நிம்மதி அவள் கண்களில்,ஆனால் அடுத்த நொடி பார்வையை எங்கோ திருப்பி கொண்டாள்..
ஹாய் சஹானா என்ன இங்க நிக்குறீங்க எனி ப்ராப்ளம்..
யாரும் என் மேல அக்கறை பட வேண்டாம்..ப்ரெண்ட்நு சொல்லிட்டு ஒரு மாசமா பாக்கல..மெசெஜ்க்கு ஒரு ரிப்ளை கிடையாது..
இப்போ என்ன திடீர் கரிசனம் ஒண்ணும் தேவையில்ல..நீங்க போலாம்.,
அவனுக்கோ சிரிப்புதான் வந்தது..சரி அப்பறமா நாம சண்ட போடலாம் இங்க ஏன் தனியா நிக்குறீங்க அத சொல்லுங்க மொதல்ல..
இந்த ஏரியா கொஞ்சம் மோசம்..எப்போ என்ன நடக்கும்நு தெரியாது..அப்பறம் உங்க இஷ்டம்..
சட்டென ஒரு அடி அவனருகில் வந்து நின்றவள்,விழிகளில் மருட்சியோடு இருபுறமும் பார்க்க வெற்றி புன்னகை அவனிடத்தில்..
கார்த்திக் இங்க இருக்குற ஒரு ஆர்பனேஜ்க்கு வந்தேன் அப்பா செங்கல்பட்டுக்கு வேலையா போய்ருகாங்க சோ ஆட்டோல தான் வந்தேன்..
என் பர்ஸ் எங்கேயோ மிஸ் ஆய்ட்டுச்சு மொபைல் கூட அதுலதான் இருக்கு அதான் என்ன பண்றதுநு தெரியாம நிக்குறேன் என்று கவலையாய் கூற அத்தனை வைராக்கியத்தையும் தாண்டி இளகிவிட்டது அவனுக்கு..
அவன் விளையாட்டு போல் கூறினாலும் அந்த இடத்தில் ஆள்நடமாட்டம் சற்று கம்மியாகத்தான் இருக்கும் அந்த நிலைமையில் அவளை அங்கு விட்டு செல்வது சரியில்லை என,தனியா வரீங்க இப்படியா கேர்லெஸ்ஸா இருப்பீங்க..
சரி வாங்க போலாம் என பைக்கை ஸ்ட்டார்ட் செய்ய ஏனோ சற்று தயங்கியவாறு ஏறி அமர்ந்தாள்..
ஆர்பனேஜ் எங்கயிருக்கு??அங்க போய் செக் பண்ணி பாக்கலாமா??என்றவாறு வண்டியை கிளப்பினான்..
இல்ல நா அங்க பாத்துட்டுதான் வந்தேன் ஷுவரா இல்ல..ஆட்டோல தான் போய்ருக்கும்..
வீட்டுலயிருந்து வந்த ஆட்டோ ரிப்பேர் ஆய்டுச்சு சோ இங்க இருக்குற ஒரு ஆட்டோ ஸ்டாண்ட்ல தான் செகண்ட் ஆட்டோ பிடிச்சேன் கைலயே அமௌண்ட் வச்சுருந்ததால பர்ஸ் இருக்காநு பாக்காமயே விட்டுட்டேன்..
அதற்குள் அந்த ஆட்டோ ஸ்டாண்ட் வந்துவிட இதோ இதோ இங்கதான்என்று அவன் தோளை தட்டி நிறுத்தினாள்..
சற்று தள்ளி அவளை நிற்க வைத்துவிட்டு அவன் சென்று விசாரிக்க அங்கிருந்த டிரைவர்களில் ஒருவர் அவள் பர்ஸை அவனிடம் கொடுத்து ஏதோ பேசி கொண்டிருந்தார்..
அவனின் செயலில் தன் தந்தையை நினைத்தாள் இன்றும் கூட அவர் அப்படிதான் சில இடங்களுக்கு சென்றால் அம்மாவையோ இவளையோ அதில் நேரே ஈடுபடுத்த மாட்டார்..
உதாரணமாக இளநீர் சாப்பிட இறங்கினால்கூட இவர்களை காரைவிட்டு இறங்க வேண்டாம் என்பார் சற்று தூரத்தில் நிறுத்திவிட்டு தானே இரண்டு மூன்று முறை அலைந்து வாங்கி வருவார்..
இப்போது கார்த்திக்கும் அவ்வாறு செய்வது ஏனோ இனம்புரியா மகிழ்ச்சியை தந்தது..
பர்ஸை வாங்கி வந்தவன் அவள் முன் கையசைத்து அவளை நினைவிற்கு கொண்டு வந்தானன்..
என்னங்க பகல் கனவா??இந்தாங்க உங்க பர்ஸ் ஆட்டோல தான் விட்டுடீங்க போல அவருக்கு ஏதோ அவசர வேலைநு ஸ்டண்ட்ல இருக்குறவங்ககிட்ட கொடுத்து நீங்க வந்தா கொடுத்துற சொல்லிருக்காரு..
இனியாவது கேர்புல்லா இருங்க இவரை மாறியே எல்லாரும் இருப்பாங்கநு சொல்லமுடியாதுல..
தேங்க் யு சோ மச் கார்த்திக்..நீங்க வரலனா நா என்ன பண்ணிருப்பேன்னு தெரில..
பரவால்ல சஹானா பர்ஸ் கிடச்சுருச்சே ஆட்டோல போறீங்களா இல்ல நானே ட்ராப் பண்ணிடவா..??
ரொம்ப தாகமா இருக்கு வாங்களேன் எதாவது ஜீஸ் ஷாப் போய்ட்டு போலாம்..
நீங்களும் வீட்டுக்கு தான் போறீங்கனா நா உங்ககூடவே வந்துரேனே..
யோசனையாய் அவளிடம் தலையசைத்துவிட்டு அருகிலிருந்த ஜுஸ் கடையில் சென்று அமர்ந்தனர்..
அதிசயமாய் அவள் அமைதியாய் குடிக்க கார்த்திக்கிற்கு தான் பக் பக்கென்று இருந்தது..அவனே பேச்சு கொடுத்தான்..
உங்க பொட்டிக் வேலைலா எப்போ ஆரம்பிக்குறீங்க சஹானா??எனக்குலா இன்வைட் உண்டா??
என்ன இப்படி கேட்டுட்டீங்க கார்த்திக் நா பொட்டிக் ஓபன் பண்ணிணா கண்டிப்பா உங்கள சீவ் கெஸ்ட்டாவே கூப்டுருவோம்..
ஏன்ங்க அப்படி சொல்றீங்க த்ரீ மந்த்ஸ்ல ஆரம்பிக்க போறேன்னு தான சொன்னீங்க??இப்போ அதுக்கு மேலேயே ஆய்டுச்சே..
ம்ம் அப்போ சொன்னேன்..பட் இப்போ அதெல்லாம் செட் ஆகும்நு தோணல கார்த்திக்..
இப்போ கான்ஸென்ட்ரேஷனே ஒழுங்காயிருக்க மாட்டேங்குது..
என்னாச்சு சஹானா நீங்க இப்படி பேசி நா பாத்ததேயில்லையே என்னாச்சு..??
பெருசா ஒண்ணுமில்ல கார்த்திக் கல்யாணம் பண்ணி செட்டில் ஆய்டலாமாநு பாக்குறேன்..
ஓ..சூப்பர்ங்க இது கூட பெஸ்ட் தான்..அப்பறம் என்ன சார்ட்ட சொன்னா வேலைய ஆரம்பிச்சுருவாருல..
ம்ம்ம் வேலைலா கம்மிதாங்க..அப்பாக்கு கஷ்டம் தர கூடாதுநு நானே பையன்லா பாத்துட்டேன்.. அப்பா ஓ.கே சொன்னா போதும்..
எதுவும் கூற தோன்றவில்லை என்றாலும் கேட்டுதான் ஆக வேண்டுமென்று தட்ஸ் க்ரேட் பையன் என்ன பண்றாரு சஹானா??
அதுவரை ஜுஸ் அருந்தியபடியே பேசி கொண்டிருந்தவள் சட்டென நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்து அப்போ யாரு என்னனு தெரியாம தான் ஒன் மந்த்தா என்ன அவாய்ட் பண்ணீங்களா கார்த்திக்???
ஒரு நொடி இதயதுடிப்பு வேகமாய் இருப்பதாய் உணர்ந்தான்..இந்த நேரடி தாக்குதலை அவன் எதிர்பார்க்கவில்லை.
.அவளை கண்ட நாள் முதல் தனக்குள் ஓர் அழகான உணர்வு இல்லாமல் இல்லை..ஆனால் காதல் என்று என்றுமே நினைத்ததில்லை..
அதுவும் போக கார்த்திக் பொண்ணுங்க விஷயத்துல எக்ஸ்பர்ட்லா கிடையாது ஆனால் ஏனோ சஹானாவின் அந்த துறுதுறுப்பும் அவனையொத்த ரசனையும் அவனுக்கு பிடித்திருந்தது..
காலேஜ் நாட்களில் நண்பர்களோடு சைட் அடித்ததுண்டு அதன் பிறகு மீண்டும் இன்று அவளை ஏனோ பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றியது நிஜம்..
இவையனைத்தையும் மீறி தன் குடும்பம் சேகர் என அனைவரையும் நினைத்து தன் மனதை அடக்கி கொண்டதும் நிஜம்..
இப்போது தன் முன் இருப்பவள் தன்னிடம் கேட்பதற்கு அவனால் என்ன கூறமுடியும்..??
ஹலோ கார்த்திக் ??
ஹாங்ங் என்ன சொன்னீங்க சஹானா??
தூங்குறவங்கள எழுப்பிரலாம் ஆனா தூங்குற மாறி நடிக்குறவங்கள என்னைக்குமே எழுப்ப முடியாது கார்த்திக்..
ஒன்றும் பேசவில்லை அவன்..
சோ நீங்க பேச மாட்டீங்க..சரி ஓ.கே லெட் மீ கம் டு த பாய்ண்ட்..
எனக்கு இந்த பாத்தவுடனே வர லவ்லலா நம்பிக்கை கிடையாது பட் உங்க கூட பழகின இந்த த்ரீ மந்த்ஸ்ல ஏனோ உங்கள நா அட்மையர் பண்ண ஆரம்பிச்சுட்டேன்..நா பசங்களோட பழகாதவ கிடையாது பட் உங்கள பாத்தா வர அந்த பீல் வேற யார்கிட்டேயும் எனக்கு இருந்தது இல்ல..
எப்போலா நா உங்களவிட்டு தள்ளி இருக்கனும்நு நெனைச்சேனோ அப்போலா அதவிட வேகமா நீங்க மனசளவுல ரொம்ப பக்கமா வந்தீங்க..
பட் இந்த ஒன் மந்த் உங்கள பாக்காமயிருக்கும் போதுதான் எனக்குள்ளயிருக்குற அந்த பீல்லோட அர்த்தம் புரிஞ்சுது..
வெக்கத்தவிட்டு சொல்றேன் அக்சுவலா எனக்கு எந்த வெட்கமும் இல்ல..லவ் யு சோ மச் கார்த்திக் வாண்ட் டு லிவ் மை ஹோல் லைவ் இன் யுவர் ஆம்ஸ் அண்ட் வாம்த்..
எனக்கு ப்ரபோஸ்லா பண்ண தெரியாது தோணிணத சொல்லிட்டேன்..
அவளையே பார்த்திருந்தவன் சில நிமிட மௌனத்திற்கு பிறகு பேசினான்..
சஹானா பர்ஸ்ட் ஆப் ஆல் ஐ அஅம் வெரி சாரி நா உங்கள எந்த விதத்துலயாவது டிஸ்டர்ப் பண்ணிருந்தா..
வாண்ட்டட்டா எதுவும் பண்ணல பட் ஏதோ உங்கள இந்த அளவுக்கு யோசிக்க வச்சுருச்சுநு நினைக்கும் போது ஐ பீல் பேட்..
என் பேமிலி பேக்ரௌண்டுக்கு இந்த லவ் எல்லா செட் ஆகாது..ஒரு மூத்த மகனா எனக்கு நிறைய கடமைகள் இருக்கு..
அதையும் தாண்டி சேகர் சார் என்னோட வெல் விஷர்..
அவருக்கு என்னால துரோகம் பண்ண முடியாது உங்களுக்கு புரியும்நு நம்புறேன் ப்ளீஸ் இனி இந்த டாப்பிக் வேண்டாமே..
கண்டிப்பா ஒரு நல்ல ப்ரெண்ட்ஸா இருப்போம்..
பேசி முடிச்சுட்டீங்களா நா என் லவ்வ சொன்னேன் நீங்க அதுக்கு என்ன நினைக்குறீங்கநு உங்க தாட்ஸ்ஸ நா கேக்கல அண்ட் என்ன சொன்னீங்க ப்ரெண்ட்ஸா??
நண்பர்கள் காதலர்களானா லைவ் வரம்மா இருக்கும் பட் காதலர்கள் நண்பர்களானா வாழ்க்கை சாபமாய்டும் கார்த்திக்..
நா உங்ககிட்ட எதிர் பார்க்குறது வரத்தை தான்.. அத தர முடிலனா பரவால்ல அட்லீஸ்ட் சாபமாக்காம இருந்தா போதும்..
போலாம் என விறுவிறுவென்று வெளியே சென்றுவிட்டாள்..அவன் பில் கட்டிவிட்டு வெளியில் வருவதற்குள் சற்று தூரத்தில் அவள் ஆட்டோவில் ஏறுவது தெரிந்தது..செய்வதறியாமல் நின்றான்..
சோர்வாய் வீட்டினுள் நுழைந்தவனை ஹாலிலேயே வரவேற்றார் கீதா..
வாப்பா என்ன ரொம்ப டயர்ட்டா இருக்க ரொம்ப வேலையா காபி சாப்டுறியா??
அதெல்லாம் வேண்டாம்மா என்றவாறு தன் பையை அருகிலிருந்த சோபாவில் வைத்து விட்டு தன் தாயின் மடியில் படுத்து கொண்டான்..
ஏனோ அவளின் முகமே அவனை சுற்றியது.. ரொம்ப ஹார்ஷ்ஷா பேசியிருப்போமோ..என்ன நினைச்சுருப்பா??
பாவம் சின்ன பொண்ணுதான எடுத்து சொன்னா புரிஞ்சுருந்துருப்பா..
என வாதிட்டு கொண்டிருக்க அங்கு கீதாவோ,டேய் கார்த்தி தெரியுமா உனக்கு இப்போலா அப்பா என்கூட கிச்சன்ல வந்து சின்ன சின்ன ஹெல்ப் பண்றாருடா..
என்ன தனியா விடுறதேயில்ல.. அவரோட இப்படி மனசுவிட்டு பேசி ரொம்ப வருஷமாச்சுடா..
எல்லாத்துக்கும் அந்த சஹானா பொண்ணுதான் காரணம்..நல்ல பொண்ணு இல்லடா?? ஏன் அந்த பொண்ணு இப்போலா வரதேயில்லயோ தெரில.. என ஆதங்கப்பட சட்டென எழுந்து தன் அறைக்குள் புகுந்து கொண்டான்..
ஒரு வாரம் கழித்து அவளிடமிருந்து அழைப்பு வந்தது..தயக்கத்தோடே எடுத்து பேசினான்..
கார்த்திக் நா உங்கள பாக்கனும்..ஒரு ½ மணி நேரம் எனக்காக வர முடியுமா??
அது வந்து..
பயப்படாதீங்க நா உங்கள கடத்திட்டு போய் கட்டாய கல்யாணம் பண்ற ஐடியாலலா இல்ல நம்பி வரலாம் என அவன் பதில்கூறும்முன் இடத்தை கூறிவிட்டு வைத்துவிட்டாள்..
இவள எப்படி சமாளிக்குறதுன்னே தெரிலயே..என்ன பண்ணபோற கார்த்திக் என்று தலையை பிடித்து கொண்டு அமர்ந்துவிட்டான்..
சில நிமிடங்களில் கிளம்பி வெளியே வந்தவனின் எதிரில் ஷரவந்தி வந்து நின்றாள்.. என்ன அண்ணா இன்னைக்கு ஆபீஸ் இல்லையா கேஷ்வல்ஸ்ல கிளம்பீட்ட??
ஆங்ங்ங் அது ஒரு ப்ரெண்ட்ட பாக்க போறேன்டா அதான்..
ஓ,.ஆமா உன்ட்ட கேக்கனும்நு நெனைச்சேன் உனக்கும் KCக்கும் எதாவது சண்டையா??உன் பேச்செடுத்தாலே கடிச்சு கொதறாங்க..
அப்படியெல்லாம் ஒண்ணுமில்லயே ஷரவ்..நா அவங்கள பாத்தே ரொம்ப நாள் ஆச்சு..சரி லேட் ஆச்சு கிளம்புறேன்..பை..
அங்கு இவனுக்கு முன் வந்து காத்திருந்தாள் சஹானா..கண்களில் கோபம்,முகமோ கலையிழந்திருந்தது..
அதை பார்த்தவனுக்கோ எங்கேயாவது ஓடிவிடலாம் போலிருந்தது..
கார்த்திக் உங்ககிட்ட இத காட்டுறதுக்குதான் கூப்டேன் பாருங்க என்று ஒரு கவரை அவனிடத்தில் கொடுத்தாள்..
கேள்வியாய் அதை வாங்கி பிரிக்க உள்ளே இருந்த அத்தனையும் க்ரீட்டிங் கார்ட்ஸ்..அனைத்துமே அவளுக்கு வந்தது..
காதல் கடிதங்கள்.. அவனுக்கோ தர்ம சங்கடமாயிருந்தது.. இதெல்லாம் எதுக்கு என்கிட்ட காட்டுறீங்க சஹானா??
தலையில் அடித்து கொண்டவள் எல்லாம் என் விதி வேற என்ன..
உருகி உருகி லவ் லெட்டர் எழுதி பின்னாடி சுத்தினவன் மேலலா வராத இந்த பாழா போன லவ் என்ன பாத்து சிரிக்கவே காசு கேக்குற உங்க மேல வந்துருக்கே..
இவனுங்க எல்லாரோட சாபம்தான் இப்போ என்ன இப்படி பாடா படுத்துதுநு நினைக்குறேன்..
அவளையே பார்த்திருந்தவனின் கண்களில் சிறு சிரிப்பு..
சிரிக்காதடா என்று ஆள்காட்டி விரலை காட்டி அவள் மிரட்ட அவளின் அந்த ஒருமை அழைப்பு அவனுக்குள் சாரலை பரப்பியது..
சாரி..இதோ பாருங்க கார்த்திக் நா எதுக்காகவும் யார்கிட்டேயும் கெஞ்சினதில்ல..அது எனக்கு பிடிக்கவும் பிடிக்காது..
பட் நா இப்போ அதபத்தி கவலபடல..எப்படியாவது கஷ்டபட்டு என் லவ்வ ஏத்துக்கோங்கநு கேக்கலாம்நு தான் வந்தேன்..
என்னால முடில ஏன் நா இப்படி ஆய்ட்டேன்னு எனக்கே தெரில..
சஹானா..
யோவ்..ஒழுங்கு மரியாதையா என்ன லவ் பண்ணி கல்யாணம் பண்ணி குழந்தை குட்டிய பெத்துகிட்டு சந்தோஷமா 100 வருஷம் வாழ்ற..
அதவிட்டுட்டு கத சொல்ல ஆரம்பிச்ச உன்ன நானே கொன்னுடுவேன் என டேபிளில் இருந்த போர்க்கை எடுத்து அவன் முன் நீட்டினாள்..
எவ்வளவு முயன்றும் அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.. சிரித்து விட்டான்..
அவனேயே அவள் கண்கொட்டாமல் பார்க்க சட்டென சூழ்நிலை உணர்ந்து வாயை மூடிக் கொண்டான்..
சஹானா ப்ளீஸ் ட்ரை டு அண்டெர்ஸ்டாண்ட்..லவ்ங்கிறதுக்கு நாம சம்மதம் இருந்தா போதும் ஆனா கல்யாணம் ரெண்டு பேமிலி சம்மந்தபட்டது..
சேகர் சார் நல்லவர்தான் ஆனா அதுக்காக யாரோ வந்து அவர் பொண்ண கல்யாணம் பண்ணிகிறத அவரால ஏத்துக்க முடியுமா..
ஏன் நா ஷரவந்திய அப்படி யாருக்கு வேணா கல்யாணம் பண்ணி வச்சுருவேனா..நீ இன்னும் குழந்தையாவே பேசிட்டு இருக்க.
அதனால தான் நா சொல்றத உன்னால புரிஞ்சுக்க முடில..கொஞ்ச நாளைக்கு உன் கான்சென்ட்ரேஷனை வேற எதுலயாவது இன்வால்வ் பண்ணு எதாவது அச்சீவ் பண்ணணும் நினைச்சுக்கோ..
அந்த கேப்ல நிதானமா யோசி உன் முடிவு எந்த அளவுக்கு ஸ்ட்ராங்கா இருக்குநு யோசி அதுக்கப்பறமும் இப்படியேயிருந்தனா மத்தத அப்பறம் பாக்கலாம்..
ஹேய் உன்கிட்ட தான் பேசுறேன்..என அவள்முன் சொடுக்கு போட கனவிலிருந்து மீண்டவளாய் ஓ..சாரி என்ன சொன்னீங்க..
வாட் என்ன சொன்னேனா???
ஐ அம் சாரி மிஸ்டர் கார்த்திக்..நா நல்லா யோசிச்சுட்டேன் என் முடிவுல எந்த சேஞ்ச்சும் இல்ல..
நீங்க குட் பாய்யா உங்க முடிவ மாத்திக்கோங்க அத தவிர உங்களுக்கு வேற ஆப்ஷனேயில்ல..சரி டைம் ஆச்சு நா கிளம்புறேன்..
பை புஜ்ஜுப்பா..என்று கண்ணடித்து சென்றாள்..
கார்த்திக்கோ மொத்தமாய் குழம்பி போனான்..நாம என்ன சொன்னோம் இவ என்ன பண்றா..
கடவுளே இதெல்லாம் எங்க போய் முடிய போதோ தெரிலயே..
இப்படியாய் இருவரும் முரண்பாடாகவே நாட்களை தள்ள அன்று கார்த்திக்கின் கல்லூரிகால நெருங்கிய நண்பர்கள் ஷ்யாம்,கிஷோர் இருவரும் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தனர்..
அவர்களோடு ஒரு கெட் டு கெதர்க்காக கிளம்பினான்.. அந்த காபி ஷாப்பில் அமர்ந்து பல மாத கதைகளை பேசினர்..
பின் மூவருடைய திருமண பேச்சு வர கார்த்திக் தயங்கியவாறே சஹானாவை பற்றி கூறினான்..
அவர்களுக்கும் கார்த்திக்கை பற்றி தெரியுமென்பதால் சரிடா நீ சொல்றத சொல்லிட்ட அவ கேக்கலனா என்ன பண்ண முடியும்..
விடு அவளாவே கொஞ்ச நாள்ல மனச மாத்திட்டு போய்டுவா..-கிஷோர்..
டேய் உருப்படியா ஒரு ஐடியா குடுக்குறியா..நல்ல பொண்ணுணு சொல்ற எந்த விதத்துலயும் செட் ஆகாதுநு சொல்ற இருந்தும் நீ தான் வேணும்னு சொல்றானா உன்ன எவ்ளோ லவ் பண்றாநு அதுலயே தெரிலயா..
நாம ரெண்டு பேருக்கும் தான் லவ் செட்டாகல அட்லீஸ்ட் அவனாவது நல்லாயிருக்கட்டுமே என்று ஷ்யாம் சிரிக்க..
தேங்க் யு சோ மச் ப்ரோ.. உங்களுக்காவது கொஞ்சமே கொஞ்சமா அறிவு வேல செய்தே..
மிஸ்டர் நீங்களும் எனக்கு ப்ரோ முறைதான் இருந்தாலும் எனக்கு ப்பேவரா பேசாததால உங்கள நா மைண்ட்ல வச்சுக்குறேன்..
கல்யாணத்துக்கப்பறம் வீட்டுக்கு வாங்க நல்ல காரமா கொழம்பு வச்சு கொல்றேன்.. என இருவரையும் பார்த்து பேச அங்கு கார்த்திக்கோ தலைசுற்றாத குறையாக இருந்தான்..
சிஸ் நீங்க தான் அந்த குட்டிசாத்தானா சாரி சஹானாவா??என ஷ்யாம் அவன் பங்கிற்கு பத்த வைக்க..
சோ ஸ்வீட் ஆப் யு கார்த்திக் எனக்கு நிக் நேம்லா வச்சுருக்கீங்களா..
நம்ம மனசுக்கு ரொம்ப புடிச்சவங்களுக்கு தான நாம செல்ல பேர்லா வைப்போம்..
நைஸ் அப்போ கூடிய சீக்கிரம் உங்க மைண்ட் மாறிடும்..
ஓ.கே யு பீப்புள் கேரி ஆன்..பை ப்ரோ என ஷ்யாமிற்கு மட்டும் கூறிவிட்டு கிஷோரை காரமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தாள்..
டேய் என்னடா நடந்துது இங்க??-கிஷோர்..
ஹா ஹா மச்சி சான்ஸேயில்லடா..மை குட்நஸ் இப்படி ஒரு கேரக்டர நா பாத்ததேயில்ல..
கண்டிப்பா யு டு வில் மேக் அ ப்யூட்டிபுல் லைவ்டா.. யோசிக்காம ஓ.கே சொல்லிடு..-ஷ்யாம்..
கிஷோரும் கார்த்திக்கும் சேர்ந்து ஷ்யாமை ஒரு கை பார்த்தனர்..
டேய் டேய் விடுங்கடா ஒரு அப்பாவி தனியா சிக்கினா இப்படியா பண்றறது..
சரி கார்த்திக் நீ இங்கதான் இருப்பநு அவளுக்கு எப்படி தெரியும்..
அதான் எங்க வீட்டுல ஒண்ணு இருக்கே ஷரவ் அவளோட ப்ரெண்ட் அவகிட்ட தான் போட்டு வாங்கிருப்பா.. என்றான் கடுப்பாய்..
எத்தனை நாட்கள் ஆயினும் சஹானாவின் மனது மாறுவதாயில்லை கார்த்திக்கை தான் தடுமாற வைத்து கொண்டிருந்தாள்..
கார்த்திக் முடிந்தவரை அவளை கோபபடுத்த என்னவெல்லாம் உண்டோ அனைத்தையும் செய்து கொண்டிருந்தான்..
இதற்கிடையில் அவனே வாய்பிழக்கும் அளவிற்கு ஒன்றை செய்தாள் நம் சஹானா..
இரவு மணி 11:45 கார்த்திக் மாடியில் தனதறையில் டாக்யுமெண்ட் ஏதோ பார்த்து கொண்டிருக்க பால்கனியில் ஏதோ உருட்டும் சத்தம் கேட்க,இந்த நேரத்துல என்ன சத்தம் இது பூனை கூட கிடையாதே என யோசனையாய் கதவை திறக்க..
அங்கு அவன் கண்ட காட்சியில் ஒரு நொடி மூச்சு விடவும் மறந்துவிட்டான்..
பால்கனியின் சுவரில் பல்லி போல ஒட்டிக் கொண்டு ஏறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தாள் அவனின் குட்டிசாத்தான்..
அவன் அப்படியே நிற்பதை கண்டவள் யோவ் நீ லவ் பண்ணலனா கூட பராவால்ல அதுக்காக இந்த நிலைமைல கூட பிடிச்சு வச்ச பிள்ளையார் மாறி நிக்குறதா வந்து தூக்கி விடுங்க கார்த்திக்..
என்று அவள் முடித்த போதுதான் வேகமாய் வந்து கை கொடுத்து தூக்கிவிட்டான்..
அவசரமாய் அவளை உள்ளிழுத்து கதவை பூட்டியவன்..
அவளை எரிக்கும் பார்வை பார்த்தான்..சஹானா நீ ஏன் இப்படியிருக்க இந்த நேரத்துல தனியா அதுவும் இப்படி யாருக்கும் தெரியாம கொஞ்சமாவது மனசுல பயமிருக்கா??
அப்படி என்ன தலை போற காரியம் என பொரிந்து தள்ள..
ஷ்ஷ்ஷ் ரிலாக்ஸ் நீங்க இப்படி கத்துறதுலயே எல்லாரும் வந்துருவாங்க வெய்ட் என தன் நைட் பைஜாமாவிலிருந்து ஒரு கிப்ட் பாக்ஸை எடுத்து அவனிடம் கொடுத்தாள்..
இத புடிங்க,.
என்னதிது??
பர்ஸ்ட் புடிங்க கார்த்திக்..எதுவும் பேசாதீங்க 5 4 3 2 1 ம்ம்ம் இப்போ குடுங்க..
ஹேப்பி பர்த்டே டு மீ ஹேப்பி பர்த்டே டு மீ ஹேப்பி பர்த்டே டு டியர் சஹானா.. என மெல்லியதாய் அவள் பாட என்ன கூறவென்று தெரியாமல் பேச்சிழந்திருந்தான் கார்த்திக்..
தேங்க்ஸ் பார் யுவர் கிப்ட் கார்த்திக்..ஏனோ உங்ககிட்ட தான் பர்ஸ்ட் விஷ் கேக்கனும்னு தோணிச்சு அதான் வந்தேன்..
ஓ.கே பாய்..என அவள் கிளம்ப அவசரமாய் ஹாப்பி ரிடண்ஸ் ஆப் தி டே சஹானா என்றான் மெதுவாய்..
கண்களில் அப்படி ஒரு மின்னல் அவளிடத்தில்.. பாத்துப்போ.. ரீச் ஆய்ட்டு இன்பார்ம் பண்ணு.. அழகாய் தலையசைத்து விடைபெற்றாள்..
அவனுக்கோ அந்த இரவு தூங்கா இரவாய் அமைந்தது..காலை எழுந்தவுடன் அவளுக்கு வாழ்த்து மெசெஜ் அனுப்பிவிட்டு நா உன்ன பாக்கனும் பேசலாமா??
என்று சேர்த்து அனுப்பினான்..ஐ லவ் டு டூ தட் என்று பதில் வந்தது.. பைத்தியம் என்று சிரித்து கொண்டே அவளை பார்க்க தயாரானான்..
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
2 comments
💞💞💞💞💞💞💞
Lovely❤