அந்த மாலின் அழகை ரசித்தவாறே வந்தவள் கார்த்திக் எதாவது சாப்ட்டு போலாமா??ரொம்ப பசிக்குது..ப்ளீஸ்..

வாங்க போலாம் அதுக்கு ஏன் ப்ளீஸ்நு சொல்றீங்க..என்றவாறு புட் கோட்டிற்கு சென்று வேண்டியதை ஆர்டர் செய்து வாங்கிவிட்டு அமர்ந்தனர்..

சென்னை ரொம்பவே மாறிடுச்சுல என்றாள் உணவை ருசித்தவாறே..நீங்க ப்ரெண்ட்ஸ்ஸோட எங்கேயாவது போலாம்நு இருந்துருப்பீங்க டிஸ்டர்ப் பண்ணிட்டேன்ல..

அதெல்லாம் ஒண்ணுமில்லங்க..எனக்கு நிறைய ப்ரெண்ட்ஸ்லா கிடையாது..

ரெண்டு மூணு பேர்தான்.. அவங்களும் இப்போ அப்ராட்ல இருக்காங்க..சோ சண்டே புல்லா வீட்டுலதான்..

ஓ..நைஸ்..அக்சுவலி நா வளர்ந்தது புல்லாவே பெங்களுர்தான்..

அப்பா பர்ஸ்ட் அங்கதான் வொர்க் பண்ணிட்டு இருந்தாரு..பிஸினஸ்காக தான் இங்க வந்தது ஒரு 7 8 வருஷம் முன்னாடி..

அப்போ நா அங்கயிருந்து வரமாட்டேன்னு சொல்லிட்டேன்..அங்க என் சித்தி வீடு இருக்கு அங்கயிருந்து தான் ஸ்கூல் காலேஜ் எல்லாமே..

இங்க அப்பப்போதான் வருவேன்..சோ புல் டைம் அப்பா அம்மா கூடதான்..

பட் உங்களபத்தி அப்பா நிறைய சொல்லிருக்காரு அதனாலதான் உங்ககிட்ட ப்ரெண்ட்லியா பழக முடிஞ்சுது இல்லநா நா கொஞ்சம் ரிசவ்ர்டட் டைப்தான் என்றாள் மெதுவாய்..

சற்று பற்கள் தெரியவே சிரித்தவன்,நீங்க ரிசஸர்வ்ர்ட் டைப்பா நம்ப முடிலயே..

அடப்பாவி நல்லவாருமாறி உக்காந்து எல்லாத்தையூம் கேட்டுட்டு இப்போ கவ்ண்டர் குடுக்குறீங்களா..

உங்கள போய் எங்கப்பா நல்லவன்னு சொல்றாரே என்று முறைக்க அதற்கும் சிரிப்பே பதிலாய் அவனிடம்..

சரி சொல்லுங்க உங்க பிஸினஸ் ஐடியாவ பத்தி எந்த அளவு யோசிச்ருக்கீங்க??

கார்த்திக் நா சும்மா அம்மாவ சமாளிக்குறதுக்காக சொன்னேன் மத்தபடி ஜாலியா ஊர் சுத்தி பாக்குறதுதான் என் ப்ளான்..

நோ நோ தப்பா நினைச்சுராதீங்க ஒரு த்ரீ மந்த்ஸ்க்கு அப்பறமா பிஸினஸ் பத்தி யோசிக்கலாம்னு இருக்கேன் இப்போதைக்கு விட்டுருங்களேன்..

அடுத்து அவர்கள் அங்கிருந்த புத்தக கடை,மியூசிக் ஷாப் என்று நுழைந்து சஹானா தனக்கு வேண்டியவைகளை எடுத்து கொண்டாள்..

இப்போது பார்க்கும் இவளா அன்று வீட்டில் அத்தனை வால்தனம் செய்தது எனுமளவிற்கு இருந்தது அவளின் விருப்பங்கள்..

அதுவும் அவனுக்கு மிகவும் பிடித்த புத்தகங்களை அவள் ஆவலாய் எடுத்தது அவனுக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுத்தது..

என்ன கார்த்திக் வீட்டுல அவ்ளோ ஆட்டம் போடுறவ இங்க என்னடானா பாரதியார்,சாண்டில்யன்னு சுத்துறாளேனு பாக்குறீங்களா??

ம்ம் கொஞ்சம் கம்மி ஷாக் தான்..அன்னைக்கு நா உங்க வீட்டுக்கு வந்தப்போ நின்னை சரணடைந்தேன் சாங் போய்ட்டுருந்ததே..

அப்போவே கொஞ்சம் ஷாக் ஆய்ட்டேன்..பட் எனக்கு ரொம்ப பிடிச்ச சாங் அது..

ஹே சூப்பர் ஜி..அப்போ உங்ககிட்ட நிறைய புக்ஸ் இருக்கா..

ஹே ப்ளீஸ் எனக்கு நெக்ஸ்ட் டைம் வரப்போ குடுங்க படிச்சுட்டு தரேன்..

கண்டிப்பா தரேன்.. பட் இவ்ளோ டாக்கட்டிவ்வா இருந்துட்டு எப்படி பொறுமையா புக்ஸ் படிக்குறீங்க..??

ஹலோ என்ன வாயாடினு டீஸெண்ட்டா சொல்றீங்களா??

இவ்வாறாக ஒரு வழியாய் அனைத்தையும் முடித்து அவளை அவள் வீட்டில் இறக்கிவிட்டு தன் வண்டியை எடுத்து கொண்டு கிளம்ப போனவனை தடுத்தாள்..

ஒரு நிமிஷம்..இந்தாங்க என தான் வாங்கிய புத்தகத்தில் ஒன்றை அவனிடம் கொடுத்தாள்..

என்னவென்று ஏறிட்டவனை,நீங்களும் புக்ஸ் படிப்பேன்னு சொன்னீங்களே சோ உங்க டைம்ம எனக்காக ஸ்பெண்ட் பண்ணதுக்கு என்னோட ஒரு சின்ன கிப்ட்..

இந்த புக் நா ஆல்ரெடி வச்சுருக்கேன் சஹானா..இன்பக்ட் நீங்க வாங்கின நாலுமே நா ஆல்ரெடி படிச்சுட்டேன்..

தப்பா எடுத்துகாதீங்க..நீங்க படிங்க ரொம்ப நல்லாயிருக்கும்..

ஒரு நொடி முகம் வாடியவள் சட்டென ஏதோ தோன்ற தன் பையிலிருந்து ஒரு பேனாவையெடுத்து ஒரு புத்தகத்தின் முதல்பக்கத்தில் தன் கையெழுத்திட்டு அவனிடம் கொடுத்தாள்..

இப்போ நீங்க மறுக்க முடியாது புக் உங்ககிட்ட இருக்கலாம் பட் என் ஆட்டோக்ராப் இதுலதான் இருக்கு சோ இது ஸ்பெஷல்தான்..

என்று கண்சிமிட்டி சிரிக்க அவனும் மறுக்காமல் பெற்று கொண்டான்..

வீட்டிற்கு வந்து ஹாலில் அப்படியே அமர்ந்து கண் மூடி கொண்டான் கார்த்திக்.. என்னண்ணா ரொம்ப வொர்க்கா என்று ஷரவந்தி பாவமாய் கேட்க..

ஹே அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா..வேலைலா இல்ல சேகர் சார் பொண்ணு சென்னைக்கு புதுசு அவங்களுக்கு சில புக்ஸ் வாங்கனும்னு கூப்டாங்க அதான் போய்ட்டு வந்தேன்..

யாரு நம்ம K.C யா??புக்ஸ் படிப்பாங்கலா??

அது என்னடா KC??

நீதானண்ணா சொன்ன குட்டிசாத்தான்.. அதோட ஷாட் ஃபாம்தான்..

இத மட்டும் அவங்க கேட்டாங்க நிஜமா குட்டி சாத்தானா மாறி உன்ன ஒரு வழி ஆக்கிடுவா என்று சிரிக்க அதற்குள் மற்றவர்களும் அந்த உரையாடலில் வந்து கலந்து கொண்டனர்..

சிறிது நேரம் பேசிவிட்டு அறைக்கு வந்தவன் அந்த புத்தகத்தை டேபிளில் வைத்துவிட்டு நகர நினைக்க ஏனோ மறுபடியும் அதை கையில் எடுத்தான்..

அவளிட்ட கையெழுத்தை பார்க்க அவள் முகமே மனதில் வந்தது அவன் புத்தகம் வேண்டாம் என்றதும் வாடிய அவள் முகம்..

இனிதே நாட்கள் நகர அவர்கள் நட்பும் அழகாய் மலர்ந்து கொண்டிருந்தது..

அதன்பின் அவர்களிருவரும் வெளியே செல்லவில்லை எனினும்,கார்த்திக் அவள் வீட்டிற்கு செல்லும் நேரங்களில் பேசிக் கொள்வர்..

அவனின் மொபைல் நம்பர் சஹானாவிடமிருப்பதால் எதாவது பார்வேட் மெசெஜ்..காலைமாலை வணக்கங்கள் என அனுப்புவாள்..

அவனோ பத்து மெசெஜ்ஜிற்கு ஒரு பதில் அனுப்புவான்..

இவ்வாறாக இருந்த நேரத்தில் ஒரு நாள் வழக்கம் போல் கார்த்திக் ஆடிட்டிங் விஷயமாக சேகர் வீட்டிற்கு வந்தான்..

இப்போதெல்லாம் இங்கு வரும்போதே அவனறியாமல் ஒரு பீதியோடு தான் நுழைவான் இன்னைக்கு என்ன பண்ணுவாளோ என்ற பயம்தான்..

அதே போல அன்றும் நுழைய வரும் போதே தலை தெறிக்க ஓடிவந்தவள் அவன் மேல் முட்டி நின்றாள்..

எதிர்பாராமல் நடந்ததில் தன் தலையை பிடித்து நின்றுவிட்டான்.. அவனுக்கு பின்புறம் நின்று கொண்டவள்,கார்த்திக் கார்த்திக் ப்ளீஸ் காப்பாத்துங்க..

என்னது உங்கள காப்பத்தனுமா??எப்பவுமே உங்ககிட்ட இருந்து தான யாரையாவது காப்பாத்த வேண்டியிருக்கும்..

அய்யோ மொக்க போடாதீங்க..அந்த தடிமாடு கிட்ட இருந்து என்ன காப்பாத்துங்க பர்ஸ்ட்..

என்று முடிப்பதற்குள் சிவா அங்கு வந்து சேர்ந்தான்..தேங் காட் கார்த்திக் அந்த குட்டிசாத்தான கொஞ்சம் புடிச்சுக்கோங்கோளேன் ப்ளீஸ் ப்ளீஸ்.. சித்தி வாங்க அந்த எருமமாடு சிக்கிருச்சு..

ஏய் மாடு கீடுனு சொன்ன கொன்னுருவேன் உன்ன..

ஆமா ஆமா உன்ன மாடுநு சொல்லி அத இன்சல்ட் பண்ண கூடாதுல.. மறந்துட்டேன்..

ஜோக்கா..முடில நாளைக்கு சிரிக்குறேன் என கார்த்திக்கை பிடீத்து கொண்டே வம்பிழுக்க..சித்தி சீக்கிரம்..

கார்த்திக் விட்டுறாதீங்க..துளசியை அழைக்கிறான் என்றால் இவதான் ஏதோ பண்ணி வச்சுட்டு வந்துருக்கா..

அப்போ கோழிய அமுக்கிற வேண்டியதுதான் என்று சற்று விலகி அவள் கையை இறுக பற்றி கொண்டான்..

ஐயோ கார்த்திக் என்ன பண்றீங்க ப்ளீஸ் விட்டுருங்க இனி உங்ககிட்ட எந்த வம்பும் பண்ணமாட்டேன்..

அதற்குள் கையில் டம்ளரோடு துளசி வந்து சேர்ந்தார்..ஏண்டி கொஞ்சமாவது பெரிய பொண்ணு மாறி நடந்துக்கிறியா

நீ..சின்ன பாப்பாநு நினைப்பு..ஒரு கசாயத்தை குடிக்க இவ்ளோ ஆர்பாட்டமா பண்ணுவ இந்தா குடி,கார்த்திக்கை முறைத்தவாறே அதனை கையில் வாங்கினாள்.. அங்க என்ன லுக்கு குடி போ என்றான் சிவா..

என்னது கஷாயமா??-கார்த்திக்..

ஹா ஹா ஆமா மேடம்க்கு ரெண்டு நாளா பீவராம்..அதுக்குதான் கஷாயம்..

ரெண்டு நாளும் சித்தி போராடிருக்காங்க ஒண்ணும் நடக்கல இன்னைக்கு நா வந்தவுடனே என்ட்ட சொன்னாங்க..

கரெக்ட்டா நீங்களும் வந்துட்டீங்க..என்று சிரிக்க ஐயோ என்று மனதில் தன்னை தானே நொந்து கொண்டான்..

ஏதேதோ இருக்கும்நு நினைச்சா கடைசில ஒரு கஷாயத்துக்கா இவ்ளோ அலப்பர..

ஹேய் கார்த்திக் இப்போலயிருந்து நா உங்க எனிமி போங்க இப்படி மாட்டிவிட்டுடீங்கள்ள..

என கத்த தொடங்க..அய்யய்ய எப்போ பாத்தாலும் மீன் மார்கெட் மாறி கத்திட்டேயிருக்காதீங்க..

இப்படியே போச்சுனா கூடிய சீக்கிரம் எனக்கு புது ஆடிட்டர்ர தான் பாக்கனும்..

கார்த்திக் சொல்லாம கொள்ளாம ஓடிருவான்.. டேய் சிவா நீயெல்லாம் வக்கில்நு சொல்லிக்காத சின்னபுள்ளதனமா அவளோட மல்லுக்கு நிக்குற என்றபடி வந்து அன்றைய கலகத்திற்கு முற்று புள்ளி வைத்தார் சேகர்..

மறுநாள் ஞாயிற்றுகிழமை ஆதலால் கார்த்திக் குடும்பத்தோடு வெளியே செல்லலாம் என்று முடிவு செய்தான்..

அதைபற்றிய யோசனையில் இருந்தவனை அழைத்தாள் சஹானா..

1000 வாலா காலிங் என்று திரையீயில் ஒளிர்ந்ததை பார்த்து இன்னைக்கு எங்க கூப்டுறாலோ தெரிலயே..சமாளிப்போம்..

ஹலோ சொல்லுங்க

கார்த்திக் இன்னைக்கு நீங்க ப்ரீயா??நிஜமாவே அவிஷியலா பேசதான் கூப்ட்டேன்..

ஹா..சாரிங்க இன்னைக்கு பேமிலியோட வெளிய போறோம் சோ நெக்ஸ்ட் வீக் பாக்கலாமா??

தட்ஸ் நைஸ்..யு கேரி ஆன்..இஃப் யூ டோன்ட் மைண்ட் எங்கநு தெரிஞ்சுக்கலாமா??

பெசண்ட் நகர் பீச்க்கு போய்ட்டு அப்படியே டின்னர் போலாம்நு யோசிச்சுருக்கேன்..

ஓ..ஓ.கே கார்த்திக் பாய்..

ஈவ்னிங் ப்ளான் செய்த்ததுபடி குடும்பத்தோடு பீச்சில் அமர்ந்திருந்தான் கார்த்திக்..பலதரப்பட்ட மக்கள்..

விதவிதமான கடைகள்..குளிர்ந்த கடல் காற்று இவை தரும் சுகமே தனிதான்..

அவன் தந்தை மோகன் எப்போதுமே அமைதியானவர்..கீதாவோ அதற்கு நேரெதிர்..

பிள்ளைகளுக்கு சரிசமமாய் பேசுபவர்..இப்படியே சில நேர அரட்டைக்கு பின் கிளம்ப எத்ததனிக்க,

ஹாய் கார்த்திக்..குரல் வந்த திசைக்கு முதுகுகாட்டி நின்றவனுக்கு பார்க்காமலேயே புரிந்தது வந்திருப்பது யாரென்று..

அய்யோ குட்டிசாத்தான்..மனம் அதுவாகவே அலறியது..

ஹாய் சஹானா என்ன இந்தபக்கம்??

வீட்ல போர் அடிச்சது அதான் அப்பா அம்மாவோட கோவிலுக்கு வந்தேன்..

அவங்க உள்ள போய்ருக்காங்க..

சரி கொஞ்ச நேரம் பீச்ல நின்னுட்டு வரலாமேநு வந்தேன்..என்ன பேமிலி ஔட்டிங்கா??

அவர்கள் பேசி கொள்ளும்போதே கீதாவின் மனம் அந்த பெண்ணையே சுற்றி வந்தது..

அழகான நீள்முகம்,பேசும் போது துறுதுறுவென்று அலைபாயும் கண்கள்..

ஒல்லியும் குண்டுமில்லாத உடலமைப்பு..தலைமுடியை விரித்துவிட்டு சென்டர் கிளிப் போட்டிருக்க தோள்களில் தவழுகிறது முடிகற்றை..

அழகான வெள்ளைநிற லாங் ஸ்கர்ட்டும்,பிங்க் வண்ண டாப்புமாய் நின்றவளை பார்க்க கண்களுக்கு நிறைவாய்தான் இருந்தது..

அதன் முக்கிய காரணம் அவளருகில் நிற்கும் தன் மகனுக்கும் அவளுக்குமான பொருத்தம்..

தன் அன்னையை கண்ட ஷரவந்தி அம்மா..போதும் அண்ணாக்கு பொருத்தம் பாக்க ஆரம்பிச்சுட்டியா..

ஹே நிஜமாவே நல்லாயிருக்குலடீ..

ஐயோ அம்மா மொதல்ல யாருநு கேளு..

கார்த்திக் அவனே அனைவரிடமும் அறிமுகப்படுத்தினான்..

இவங்க சேகர் சார் பொண்ணு சஹானா..பெங்களுர்ல இருந்து வந்திருக்காங்க..

அனைவரையும் பார்த்து பொதுவாய் சிரித்தவள்..

மோகன் கேட்ட சில கேள்விகளுக்கு அந்த நல்லவளே நாதான்ங்கிற ரேஞ்சுல பதில் கூறி கொண்டிருந்தாள்..

கார்த்திக்கோ என்ன ப்ளான்னோட வந்துருக்காநு தெரிலயே..இவ இப்படி இருக்குற ஆள் இல்லையே..

என தன் மூளையை கசக்கி பிளிந்து கொண்டிருக்க..அதற்குள் அவள் அனைவரிடமும் விடைபெறுவது தெரிந்தது..

ஷப்பா கிளம்பிட்டா என சின்னதாய் சந்தோஷப்பட இரண்டடி முன் வைத்தவள் மீண்டுமாய் இவனை நோக்கி வந்து,

சாரி கார்த்திக் இது இங்க பேசுற விஷயமில்ல தான்..

இருந்தாலும் இதவிட்டா டைம் கிடைக்காது..அது வந்து..நீங்க ஒரு பொண்ணு நம்பர் கொடுத்தீங்களே..

அவங்ககிட்ட பேசினேன்..நீங்க ரெண்டு பேரும் பார்க்ல பேசிட்டு இருந்தத அவ அண்ணண் பாத்துட்டாங்களாம்..

சோ இப்போ ஹவ்ஸ்ரஸ்ட் ஆக்கிட்டாங்களாம்..அவ உடனே உங்களை வீட்டுக்கு வந்து பாக்க சொன்னா..

ரொம்ப பாவமா இருந்தது..எவ்ளோ சீக்கிரம் முடியுமோ போய் பாருங்க என பாவமாய் கூறிவிட்டு நகர அவன் அப்பா பார்த்த பார்வையில் தான் நடப்பது கனவில்லை என்றுணர்ந்தான்..

அவன் பேச வாய்திறந்த நேரம் மெசெஜ் அவள் தான்..சாரி கார்த்திக் அந்த கஷாய மேட்டர்க்கான சின்ன ரிவெண்ஜ்..என்ஜாய்…

கோவத்தையும் மீறி அதை படித்வனுக்கு சிரிப்புதான் வந்தது..

என்னடா அந்த பொண்ணு என்னலாமோ சொல்லிட்டு போறா??-கீதா..

ம்மாமா நீ வேற அவ பொய் சொல்றாம்மா..

நல்ல பொண்ணா இருக்கா அவ ஏன்டா பொய் சொல்ல போறா??-மோகன்..

வாய தொறக்கத அப்பாவயே பேச வச்சுட்டாளே பாவி..இவளலா பெத்தாங்களா இல்ல அண்டால போட்டு செஞ்சாங்களாநு தெரில..

வீட்டில வச்சு வளர்க்க வேண்டிய ஜீவனேயில்ல இது என அள்ளி அள்ளி அர்ச்சனை செய்து கொண்டிருந்தான்..

என்னடா பதிலயே காணோம்..

ஐயோ நாதான் சொன்னேனேமா இவ இவ்ளோ அமைதியா பேசிட்டு போனப்பவே டவுட்டுதான்..

அன்னைக்கு அவங்க வீட்டுக்கு போய்ருந்தப்போ என ஆரம்பித்து கஷாய விஷயத்தை உணர்வுபூர்வமாய் கூறி முடிக்க,அப்பா அவனை முறைத்தவாறே நகர்ந்துவிட்டார்..

மற்ற மூவரும் வழக்கம்போல அவனை பலிகடாவாக்கி சிரிக்க..அவனும் அவர்களோடு கலந்து கொண்டான்..

ஆனா அண்ணா சான்ஸ்லெஸ் கரெக்டர் போ..உனக்கு அப்படியே ஆப்போஸிட்..என ஷரவன் சிரிக்க கீதாவின் மனமோ மகனின் சிரிப்பை ரசித்தவாறே வேறு கணக்கு போட்டது..

அழகாக நாட்கள் நகர..அன்று காலை ஷரவந்தி வீட்டையே அமர்களப்படுத்தி கொண்டிருந்தாள்..

தூக்க கலக்கத்தோடு வந்த ஷரவன்,ஏண்டி காலங்காத்தால இப்படி கத்துற..மனுஷன தூங்கவிடுறியா..

டேய் தடியா இப்படி தூங்கிட்டேயிருந்தா எப்படிடா காட்டுல போய் அனிமல்ஸ்ஸ போட்டோ எடுப்ப உன்ன வேலைய விட்டு தூக்கிறமாட்டாங்க.??

ஹேய் என்ன காலைலயே ஏதோ உளரிட்டு இருக்க??நா எந்த வேலைக்கு போறேன் என்ன வெளிய அனுப்புறதுக்கு..

லூசு நா ப்யூசர பத்தி பேசுறேன்டா..

ஓரே நொடி விஷயம் புரிந்தவனுக்கு கால் தரையில்லில்லை..நிஜமாவா ஷரவ்..

ஆமா டா நிஜமாதான் நீ அப்ளை பண்ண ஸ்டுடியோல இருந்து ஆபர் வந்துருக்கு பர்ஸ்ட் ட்ரெய்ணிங் அப்பறம் புல் டைம் ஜாப் எப்பூடி..

என இருவரும் குதித்து கொண்டிருக்க..கீதாவும் மோகனும் அவர்களின் உற்சாகத்தில் கலந்து கொள்ள..

அடுத்து வந்த கார்த்திக்கை கட்டிக் கொண்டான் ஷரவன்..

தேங்க்ஸ்ண்ணா..உன்னாலதான் இதெல்லாம் நடந்துருக்கு.. ரொம்ப சந்தோஷமாயிருக்கேன்..

டேய் இது உன் திறமைக்கு கிடைச்ச பபரிசுடா..இதுல நா ஒண்ணும் பண்ணல ஹேப்பியா வேலை பாரு..ஹரவந்தி மா உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இந்தா..

அவன் கொடுத்த கவரை பிரித்தவளை ஆர்வமாய் அவன் பார்க்க படித்தவளோ அருகிலிருந்த சோபா மேல் ஏறி ஆட ஆரம்பித்துவிட்டாள்..

ஏய் என்னடி இது வயசுக்கேத்தமாறியா இருக்க இறங்கு கீழ..-கீதா..

அதற்குள் அவள் கையிலிருந்ததை வாங்கி பார்த்த ஷரவனோ..

அம்மா இப்போ நீ என்ன சொன்னாலும் அவ காதுல விழாது..மேடம் இன்டர்வியூ போன ஸ்கூல்ல இருந்து அப்பாய்ண்மெண்ட் லெட்டர் வந்துருக்கு மேடம்ம இனி டீச்சர்நு தான் எல்லாரும் கூப்பிடனும்..

மோகனுக்கு அதை கேட்டதுமே முகமெங்கும் பூரிப்பு ..கீதாவோ உடனே சமையலறைக்கு சென்று உப்பு மிளகாயோடு வந்தார்..

அனைவரையும் உக்கார வைத்து சுத்தி போட்டு இன்னைக்கு போலவே என் புள்ளைங்க என்னைக்கும் சந்தோஷமாயிருக்கனும் கடவுளே என மனமார வேண்டினார்..

தம்பி தங்கை வேலைக்கு சேர்ந்து ஒரு வாரமாகியிருக்க..வார விடுமுறையில் அனைவரையும் அழைத்து கார்த்திக் பேசினான்..

அப்பாக்கு 60வது பிறந்தநாள் வரபோகுதேம்மா என்ன ப்ளான்ல இருக்கீங்க??

என்னடா ப்ளான்..எப்பவும் போலதான்..வடை பாயசத்தோட சாப்பாடு பண்றேன் உங்களுக்கு லீவுன்னா கோவிலுக்கு போய்ட்டு வருவோம்..வேறென்ன??

என்னம்மா இப்படி சொல்லிட்ட சஷ்டியப்த்தபூர்த்தி பண்ண வேண்டாமா??

அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் ராம்..குழந்தைகளுக்கு கல்யாணம் பண்ணி பேரன் பேத்தி எடுத்து கடமை முடிச்சாதான் பண்ணணும் எங்களுக்கு இன்னும் எவ்ளோ பொறுப்பு இருக்கு..

அப்பா அப்படியெல்லாம் ஒரு கண்டீஷனுமில்ல..இதோ மூணு பிள்ளைங்களும் நல்ல நிலைமைக்கு வந்துருக்கோமே அது போதாதா..

அண்ணா சொல்றபடி பண்ணிரலாம்..-ஷரவன்..

டேய் சொன்னா கேளு,

அப்பா இந்த விஷயத்துல நாங்க சொல்றத தான் நீங்க கேக்கனும்..

அண்ணா நீ ஏற்பாடு பண்ணு கல்யாண பொண்ணு மாப்ளைய நா ரெடி பண்றேன்..-ஷரவந்தி..

தன் தாய் தந்தையை பார்த்தவன் அவர்களின் நிலையறிந்து சரி க்ராண்ட்டா இல்லாம நம்ம க்ளோஸ் சர்க்கிள் மட்டும் கூப்ட்டு பண்ணுவோம்..

இந்த மொமெண்ட்லா திரும்ப கிடைக்காதுப்பா சோ நோ சொல்லாதீங்க..-கார்த்திக்..

அவர்களும் அரைமனதாய் சம்மதம் தெரிவிக்க அதற்கான வேலைகளில் மும்மரமாய் இறங்கினர் மூன்று சிங்க குட்டிகள்..

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

3 comments

Kavi Natarajan October 9, 2026 - 8:20 am

💞💞💞💞💞💞

suganyavel October 9, 2026 - 8:57 pm

Super💕

srichitra October 10, 2026 - 2:00 pm

Nice

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode