இரவு மணி 11:30 ஐ தொட்டிருக்க மணி உறங்கிவிட்டதை உறுதிப்படுத்தியவள் ஷரவன் கொடுத்த கிப்ட்டோடு வராண்டாவில் வந்தமர்ந்தாள்..

ஐயோ சஹானாக்கா எப்போ வருவாங்கநு தெரியலையே..

அப்பா கேட்டா என்ன சொல்றது ஒண்ணும் புரில இவரு ஏன் இப்படி பண்றாரு என பதட்டத்தில் செய்வதறியாமல் கௌரி தவித்துக் கொண்டிருந்தாள்..

11:45 ஐ தாண்டியவுடன் தன் கையிலிருந்த கிப்டை பிரித்தவள் ஆச்சரியம் சந்தோஷமென சொல்லமுடியா உணர்ச்சிகளில் மூழ்கியிருந்தாள்..

அழகான ஸ்மார்ட் போன் அதிலிருந்தது..அதையெடுத்து பிரித்து உயிர்ப்பித்த அடுத்த நொடி திரையில் ஷரவன் பெயரோடு அழைப்பு ஒலித்தது..

சற்றும் குறையாத படபடப்போடு அழைப்பை ஏற்று காதில் வைக்க பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அழகி என்றான் அவளவன்..

தேங்க் யூங்க எதிர்பாக்கவேயில்ல.. ஆனா எதுக்கு இதெல்லாம்.. விஷ் பண்ணா போதாதா??

ம்ம் எப்படி நா இங்க பரங்கிமலை மேல நின்னு கத்தினா உனக்கு அங்க பாபநாச மலைல கேக்குமா??

21ம் நூற்றாண்டுல போன் இல்லாம இருக்குற ஒரே ஆளு என் ஆளுதான்..

இதுல தன்னடக்கம் வேற??எப்படியிருக்க??கிப்ட் பிடிச்சுருக்கா??

ம்ம்.. .ரொம்ப நல்லாயிருக்கு.. அப்பாகிட்ட  போன் இருக்கு எனக்கு எதுக்கு தனியாநு வாங்கிக்கல…

அப்பறம்???

அப்பறம் ஒண்ணுமில்ல வச்சுடவா???

அடிப்பாவி ஒரு பேச்சுக்கு கேட்டா..

ம்ம் ரொம்ப கஷ்டம்தான் கிப்ட் குடுத்ததுக்கு ரிட்டன் கிப்ட்லா கிடையாதா??

ரிட்டன் கிப்ட்டா??நா என்ன தர முடியும்???

 ஒண்ணும் தர வேணாம் ஐ லவ் யூநு சொல்லு போதும்..

இப்போ வர பாக்குற அப்போயெல்லாம் நா தான் சொல்லிட்டுஇருக்கேன்.. ஒரு தடவை சொல்லேன்..

அது வந்து…ஐ ..ஐ லவ் யூ..பை..

அதன்பின் இரவு முழுவதும் குறுஞ்செய்தியிலேயே கழிய அங்கு வழக்கம்போல் சிவா ஷரவந்தியை ஒருவழி செய்து கொண்டிருந்தான்..

சிவா தூக்கம் வருதுப்பா.. நாளைக்கு பேசட்டுமா??நாளைக்கு ஸ்கூல் வேற இருக்கு..

ஹே டீச்சரம்மா ரொம்ப பண்ணாத கல்யாண வேலைல பேசகூட டைம் இல்லாம போச்சு..

ஐ மிஸ்ட் யூ சோ மச் நீ என்னனா தூங்க போறேன்னு சொல்லிட்டு இருக்க..

சிவா கடந்த ஒரு மணி நேரமா நீங்க இதையேதான் சொல்லிட்டு இருக்கீங்க..

ம்ம் அவ்ளோ ஆய்டுச்சா பாரு இனி நீயா கால் பண்ணாம நா பேச போறதில்ல போ.. அப்போதான் உனக்கு புரியும் என் பீலிங்ஸ்..

மறுபுறம் நிசப்தமாய் இருக்க,ஹலோ ஹலோ ஹே ஷரவ் கோவிச்சுகிட்டியா சாரிடா சும்மா விளையாட்டுக்கு தான் பண்ணேன்..ஹலோ..

ம்ம்ம்

அட லூசு தூங்கிட்டியா??கல்யாணத்துக்கப்பறம் லைஃப் அமோகம் போனை வைக்குறேன் பை.. என்றவனுக்கு அடக்கமாட்டாத சிரிப்பு எழுந்தது..

காலை வெயில் முகத்தை தழுவ புரண்டுபடுத்து மெத்தையை தடவியவன் அருகில் சஹானா இல்லாததை உணர்ந்து மெதுவாய் எழுந்தமர்ந்தான்.. சஹி எங்கயிருக்க??

இதோ வரேன் மாமா என சமையலறையில் இருந்து குரல் வந்தது அடுத்த இரண்டாவது நிமிடம் கையில் காபியோடு  அவன்முன் வந்து நின்றாள்.. குட்மார்னிங் மாமா..

குட்மார்னிங் சஹி..ஏன்டா அதுக்குள்ள எழுந்துட்ட??

இங்க பக்கத்துல இருக்குற கோவில்ல காலைலேயே பாட்டு போட்டாங்க மாமா அந்த சவுண்ட்ல எழுந்துட்டேன்..

சின்ன வயசுலயிருந்தே அது எனக்கு ரொம்ப பிடிக்கும்..

எப்போ சாங் சவுண்ட் கேட்டாலும் வாய்ல ப்ரெஷ்ஷோட போய் வெளித்திண்ணைல உக்காந்துருவேன்..

காலை வேளை வெயிலும் அந்த பாட்டும் மனசுக்கு இதமாயிருக்கும்..

ம்ம் எல்லாத்துக்கும் ஒரு ப்ளாஷ்பேக் வச்சுருப்பியே சரி நீ காபி சாப்டியா??

நா சாப்ட்டேன் மாமா நீ எடுத்துக்கோ இன்னைக்கு என்ன ப்ளான்???

நீயே சொல்லு சஹி எங்கபோலாம்நு எனக்கு உன்கூட எங்க வர்றதுனாலும் ஓ.கே தான்..என கண்சிமிட்ட..

அதானே கிடைக்குற கேப்லலா கோல் போடுறியே கார்த்திக்..சரி நாம தென்காசி போய்ட்டு வரலாமா??

கோவில் இருக்கு பக்கத்துலயே குற்றாலாம் என்ன சொல்ற??

வாவ் ஓ.கே ஒரு 15 மினிட்ஸ் குடு ரெடி ஆய்ட்டு வந்துட்ரேன் பட் மார்னிங் பூஸ்டர் எதாவது கிடைச்சா அதைவிட சீக்கிரமா ரெடிஆய்டுவேன் என கன்னத்தை காட்ட,

பரவால்ல நீ பொறுமையாவே வா நா வெயிட் பண்றேன் என்றவள் எழ எத்தனிக்க அடுத்த நொடி அவனின் கைச்சிறையில் இருந்தாள்..

ஐயோ விடு மாமா..நாம கிளம்பினமாறிதான்..

ஒழுங்கா நா கேட்டத குடு விட்டுறேன்..லேட் பண்ண பண்ண பூஸ்டர் ரேட் ஏறிட்டேதான் இருக்கும் நா ஒண்ணும் பண்ணமுடியாது சஹிம்மா..

செல்லமாய் தன்னவனை முறைத்தவாறு அவன் கேட்டதை கொடுத்துவிட்டு ஓடிவிட்டாள்..

அடுத்த இருபதாவது நிமிடம் தென்காசியை நோக்கி தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்..

போகும் வழியெங்கும் அத்தனை ரம்மியமாய் இருக்க அதனை இன்னும் மெருகூட்டுவதாய் இருந்தது அன்றைய வானிலை..

மேகங்கள் மலைஉச்சியை உரச எந்த நேரமும் மழைத்துளி மண்ணை தழுவம் என்பது போன்ற காட்சி மனதின் தடுமாற்றமனைத்தையும் மறையச் செய்து

நிம்மதியாக்கியது..

தென்காசியின் பிரம்மாண்டமான காசி விஸ்வநாதர் ஆலயம் கார்த்திக்கை பிரம்மிக்க வைத்தது..

எந்தெந்த கோவில்களையோ கட்டிட கலைகளையோ புகழும் நமக்கு நம் தமிழ்நாட்டு வரலாறுகளை கவனிக்க நேரமில்லால் போய்விடுவதே வருத்தத்திற்குரிய விஷயம்..

அவன் கண்களின் அர்த்தம் புரிந்தவள்,

வா மாமா உள்ள வா..இந்த கோவில் பாண்டியர்கள் காலத்துல கட்டினது..

இங்க இருக்குற மூலவர் சுயம்புவா தோன்றினவர்நு சொல்லுவாங்க..தாயார் உலகம்மன்..

இங்க இந்த சிவனை வழிபடுறது காசிக்கே போய் வழிபடுறதுக்கு நிகர்நு சொல்லுவாங்க.. அந்தளவு முக்கியமான கோவில் இது.

உண்மையிலேயே ஆச்சரியமா இருக்கு சஹி..சௌத் சைட்ல இவ்ளோ இடங்கள்கோவில்கள் இருக்குநு தெரிஞ்சுருந்தா இத்தனை வருஷத்தை வேஸ்ட் பண்ணிருக்க மாட்டேன்..

லவ்லி ப்லேஸஸ் டா..இனி எவ்ரி இயர் ஒருட்ரிப் போட்டு தமிழ்நாட்டுல உள்ள அத்தனை இடத்தையும் பாக்கனும்.

கண்டிப்பா மாமா…சரி வா உள்ள போலாம்..வியக்க வைக்கும் கட்டிடகலை  மனதிற்கு அமைதியாய் இயற்கைசூழல் என ஒவ்வொரு நொடியும் சொர்க்கமாய் இருந்தது இருவருக்கும்..

சிவபெருமானை மனதார வேண்டிக் கொண்டு வெளியே வர கார்த்திக் சஹானாவிடம் இங்கிருந்து குற்றாலம் எவ்ளோ நேரம் ஆகும் சஹிம்மா இப்போவே 10 மணி ஆய்டுச்சு போய்ட்டு ரிட்டன் ஆக முடியுமா???

ஹா ஹா மாமா நீ சென்னைல இருக்கநு நினைச்சுட்டு இருக்கியா ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடம் 20 25 கி.மீ இருக்க..

வெறும் 5 கி.மீதான் குற்றாலாம் வா போலாம்..

அவ்ளோதானா??ஹய்யோ இனி சும்மா சும்மா ஷாக் ஆகுறதா இல்ல எல்லா இடத்துக்கும் போய்ட்டு வந்து மொத்தமா ஷாக் ஆகிக்குறேன் என கார்த்திக் பாவமாய் கூற இருவரும் அதை நினைத்து சிரித்தவாறே பயணத்தை தொடர்ந்தனர்..

மழைக் காரைணமாய் மெயின் அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருக்க ஐந்தருவிக்கு மட்டும் சென்று வந்தனர்..

மதியம் மணி ஒன்றை தொட்டிருக்க மதிய உணவை முடித்துவிட்டு அடுத்ததாய் தென்காசியில் இருந்து 14 கி.மீதொலைவில் அமைந்துள்ள குண்டாறு அருவிக்குச் சென்றனர்..

அங்கு அவ்வளவாய் கூட்டமில்லாமல் இருப்பதை கண்டவன்..

சஹிம்மா இங்க அவ்வளவா ஆளே இல்லேயேடா சேவ்தான??

அக்சுவலா இந்த இடத்தைப்பத்தி தெரிஞ்சவங்க மட்டும்தான் வருவாங்க மாமா..

எல்லாருமே பொதுவா குற்றாலம்னா மெயின் பால்ஸ்,ஐந்தருவி,பழைய குற்றாலம் அப்படிதான் போவாங்க இதுபோகவே இங்க இன்னும் ரெண்டுமூணு பால்ஸ் இருக்கு..

உனக்கு இந்த இடம் டக்குநு நியாபகம் வர வைக்கட்டுமா தர்மதுரை படத்துல எந்தபக்கம் போகும் போதும் சாங்ல ஹீரோ  வருவாரு அதுல பாத்தாலே உனக்கு தெரிஞ்சுருக்கும் ஆளே இருக்க மாட்டாங்க எந்த பால்ஸ்லயுமே அவ்ளோ மக்கள் இல்லாம பாக்க முடியாது..

ஓ..யா கரெக்ட் சஹிம்மா இப்போ ஐடன்டிப்வை பண்ண முடியுது..என்றவாறு அருவியை நோக்கி நடந்தவன் கண்களை மூடி அந்த குளிர் நீரின் பரவசத்தை தன்னுள் நிரப்பினான்..

சட்டென கண்திறந்து பார்க்க சஹானா வெளியிலிருந்து அவனை பார்த்து சிரித்தவாறே நின்றிருந்தாள்..

மென்னகையோடு தன்னவளை கைநீட்டி அழைக்க அவன் கைகோர்த்து அவனோடு இணைந்து நின்றாள்..

சற்று வழுக்கு பகுதியாய் இருப்பதால் கார்த்திக் அவள் இடைபற்றி விழாமல் தாங்கியிருக்க சஹானா தன்னவன் தோள்பற்றி நின்றாள்..

காதலர்களுக்கோ புதுமண தம்பதிகளுக்கோ இதைவிட ரம்மியமாய் ஒரு தேனிலவு அமைந்துவிடுமா என்ன??

தூரத்து பறவைகளின் கூச்சலலில் நினைவுப் பெற்றவர்கள் சட்டென விலகி வெளியே வர சஹானா வேகமாய் காருக்குச் சென்றுவிட்டாள்..

கார்த்திக்கிற்கோ இந்த ஒரு சூழ்நிலையில் தன்னவளின் அருகாமை அவனை பைத்தியமாக்கியிருந்தது..

அவன் பார்வையின் கூடுதல் காதலைப் புரிந்தவளுக்கோ உடல் சிலிர்க்க ஆரம்பித்திருந்தது..

கைநடுங்க உதடுதுடிக்க நீர் சொட்டும் தலையோடு நிற்பவளை பார்த்தவனுக்கு இதற்குமேலும் அங்கிருக்க தோன்றவில்லை..

போலாம் சஹிம்மா..இதுக்கு மேலனா பித்தம் தலைக்கேறிடும் என்றவாறு அவளிடமிருந்து டவலை பெற்றுக் கொண்டு ட்ரைவர் இருக்கைக்கு செல்ல..

சஹானாவிற்கு குளிரையும் தாண்டி கன்ன கதுப்புகள் சூடேறியது..

கார் பயணத்தில் சிறிது நேரத்திற்கு இருவருக்குள்ளும் மௌனமே மொழியாய் இருக்க அவ்வப்போதான பார்வை பரிமாற்றத்தோடு ஒவ்வொரு நொடியும் இம்சையாய் நகர வேறு வழித் தெரியாமல் சஹானா அவன் தோள்ளசாய்ந்து கண்மூட சற்று நேரத்தில் உறங்கியும் விட்டாள்..

வீட்டினருகில் வந்து கார்த்திக் அவளை எழுப்ப அப்போதும்அவன் முகம் பார்க்கத் தோன்றாமல் சட்டென இறங்கி வீட்டிற்குள் சென்று ஒளிந்து கொண்டாள்..

கார்த்திக் மணியிடம் பேசிவிட்டு வருவதற்குள் உடைமாற்றி வெளியே வந்தவள் மணியோடு பேசுவதாய் காட்டிக் கொண்டு ஹாலிலேயே இருந்துவிட்டாள்..

மாலை ஆறு மணியளவில் கார்த்திக்கிடம் வந்தவள் மாமா என மெதுவாய் அழைக்க ம்ம் என மெதுவாய் நிமிர்ந்தவனின் பார்வையில் இருந்த குறும்பே அவளை இன்னும் தடுமாறச் செய்தது..

அப்படி பாக்காத கார்த்திக்..

இது என்னடா கொடுமையா இருக்கு??என் பொண்டாட்டிய நா பாக்காம??

பாரு ஆனா அப்படியே கடிச்சு முழுங்குற மாறி பாக்காத என வாய்க்குள் முனக அதைப் புரிந்து கொண்டவன் சத்ததமாய் சிரித்தான்..

போதும் போதும்..கௌரி எங்கேயோ கடைக்கு போறேன்னு சொன்னா அது கொஞ்சம் தூரம் வேற மணி அண்ணா இல்ல நீ கூட்டிட்டு போய்ட்டு வாயேன் ப்ளீஸ்..

எனக்கும் கொஞ்சம் திங்க்ஸ் வாங்கிட்டு வர சொல்லிருக்கேன்.. நீ கார்லயே இரு அவ வாங்கிட்டு வந்துருவா..

ம்ம் நா மட்டுமா நீயும் வாயேன் நீ இங்க என்ன பண்ண போற???

எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு மாமா..ப்ளீஸ்..நீ இப்படி என்ன மொறச்சுபாக்குறதே எனக்கு என்னவோ போல இருக்கு போய்ட்டு வா போ..என சிணுங்க..

அதற்குமேல் ஒன்றும்கூறாமல் கார் சாவிக்காக கைநீட்ட அவன் கைகளில் வைத்து அவள் நகர்வைதற்குள் ஆனாலும்என்ன ரொம்ப காயவிடுற நல்லதுக்கே இல்ல டீ பொண்டாட்டி என இதழ்மேல் இதழ்பதித்து ஓடிவிட்டான்..

சட்டென அக்கம்பக்கம் பார்த்தவள் யாருமில்லாததை உறுதிப்படுத்திக் கொண்டு முகத்தை சரிசெய்து வாசலுக்குச் சென்றாள்..

கௌரியிடம் கண்ஜாடை செய்தவள் தன்னவனுக்கு கையசைத்துவிட்டு உள்ளே சென்றாள்..

கௌரியோடு வந்து முக்கால் மணிநேரம் ஆகியிருக்க கார்த்திக்கிற்கு பொறுமை போய்விட்டது..

இந்த பொண்ணு வேற நேரம்காலம் தெரியாம இன்னைக்குதான் கடைக்கு வருவாளா??

சஹி என்ன பண்ணிட்டு இருக்காநு தெரிலயே..போன் வேற வீட்லயே வச்சுட்டு வந்துட்டேன்..

அவளாவது குடுத்து விட்டுருக்கலாம்..என எதையெதையோ நினைத்து பொழுதை கழிக்க கௌரி கடையிலிருந்து வெளியே வந்தாள்..

அண்ணா இன்னும் ரெண்டே கடைதான் சஹானாக்கா ஒரு புக் கேட்டாங்க அதுமட்டும் வாங்கிட்டா வீட்டுக்கு போலாம்..

ஸாரிண்ணா உங்களுக்கு வேற வீண் கஷ்டம்..

ஹே ச்சச்ச கஷ்டம்லா இல்லடா சஹி தனியா இருக்காளேநு தான் டென்ஷன் வேற ஒண்ணுமில்ல..

நீ போய்ட்டு வா என அவள் கூறிய கடைவாசலில் காரை நிறுத்தினான்..

அடுத்து அங்கு ஒரு அரைமணிநேரத்தை கஷ்டப்பட்டு கழித்துமுடிக்க வெளியே வந்த கௌரியோ போலாம்ண்ணா புக் நாளைக்குதான் வருமாம் வாங்க நாம வீட்டுக்கே போலாம்..

ஒரு வழியாய் கிளம்பினால் போதும் என்று மேலும் பேச்சை வளர்க்காமல் வீட்டை நோக்கி கிளம்பினான்..

காரை நிறுத்திவிட்டு வந்தவனுக்கு ஒரு நொடி பயம் வந்துவிட்டது..

ஒரு விளக்கும் எறியாமல் வாசல் கதவு ஜன்னல் என அனைத்தும் பூட்டியிருக்க என்ன செய்வதென புரியாமல் அடுத்த அடி வைப்பதற்குள் கௌரி அவனை தடுத்தாள்..

அண்ணா அண்ணா டென்ஷன் ஆகாதீங்க..

இந்தாங்க என சாவியை அவன் கையில் கொடுக்க முதல்தடவையாய் ஏதோ சந்தேகம் எழுந்தது..

அண்ணா அண்ணா அப்படி பாக்காதீங்க சாரி சாரி நா வேண்டாம்நு தான் சொன்னேன் அக்காதான் கேக்கல..

ஏதோ சர்ப்ரைஸ்நு சொன்னாங்க அதான் ஒத்துகிட்டேன்..

நீங்க போங்க நா காலைல வரேன் என நிற்காமல் ஓடிவிட என்னவென்ற ஆர்வத்தோடு கார்த்திக் கதவைத் திறந்தான்..

உள்கதவில் கைவைக்க தானாகவே திறந்தது..

அடுத்த நொடி சஹானா பின்னிருந்து அவன் கண்களை மூட,

ஹே சஹி என்ன இதெல்லாம்? ?என்ன பண்ற நீ..

ஷூஷூ பேசாம அமைதியா வா மாமா..

என மெதுவாய் அவனை அழைத்துச் செல்ல ஏற்கனவே பொறுமையிழந்திருந்தவன் அவள் கைப்பற்றி முன்னிழுத்து கண்களை திறக்க மொத்த வீடும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஜொலிக்க தங்க பதுமையாய் அடர் அரக்கு வண்ண க்ரீப் புடவையில் அவன் பிடியில் தலைகுனிந்திருந்தாள் அவனின் சஹி..

சஹி…

முகத்தில் வியர்வைத் துளிர்த்திருக்க மெதுவாய் அவனை ஏறிட்டாள்..

காலையிலிருந்து ஆடிய கண்ணாமூச்சி ஆட்டத்தில் களைத்திருந்தவன் பொறுக்கமாட்டாமல் பெண்ணவள் முகத்தை தன் கைகளில் ஏந்திக் கொள்ள அவளோ இரு விழிகளையும் இறுக மூடிக் கொண்டாள்..

மென்மையாய் இமைகளில் இதழ்பதிக்க பட்டாம்பூச்சியாய் இமைதிறந்து அவனை கண்டாள்..

சில நொடிகள் அவன் அணைப்பிலேயே கரைய பின் மெதுவாய் விலகியவள்,

வா மாமா சாப்டலாம்..

பசியே இல்ல டீ பொண்டாட்டி.என குழந்தையாய் உருக சஹானாவோ ஒவ்வொரு நொடியும் தன்னிலை மறந்து கொண்டிருந்தாள்..

உனக்காக நானே சமைச்சேன் கொஞ்சம் சாப்டு மாமா..என கட்டாயமாய் அவனை உணவு மேஜையில் அமர்த்த அவனோ தன்னவளை இடைப்பிடித்து தூக்கி மேஜை மேல் அமர வைத்தான்..

சஹானா தான் செய்த ப்ரைட் ரைஸ் சப்ஜியை பரிமாற அவளுக்கு ஊட்டியவாறே தானும் சாப்பிட்டான்..

சாப்பிட்டு முடித்து கை கழுவி வந்தவன் சஹானா அங்கு இல்லாததை கண்டு தனதறைக்குச் சென்று பார்க்க கட்டிலின் ஓரமாய் அவனுக்கு முதுகுகாட்டி அமர்ந்திருந்தாள்..

அவள் நிலை உணர்ந்தவன் ஒன்றும் கூறாமல் அவளருகில் சென்று அமர்ந்து அவள் கழுத்து வளைவில் முகம்பதித்து கையை சுற்றிக் கொள்ள வெட்கம் கலந்த பதட்டம் அவளை இன்னும் இன்னும் அழகாய் காட்டியது..சஹி பேபி..

ம்ம்ம்

என்ன இவ்ளோ சைலண்ட் ஆய்ட்ட என்னாச்சு??

அதெல்லாம் ஒண்ணுமில்ல மாமா..

ம்ம் அப்படியா ஆனா உன் முகம் எனக்கு வேற ஏதோ ஒண்ணு சொல்லுதே??

பெண்ணவள் அமைதிகாக்க ஒய் என்னடீ????

அவன்புறம் திரும்பியவள் அவன் கண்களை ஏறிட என்னவென புருவமுயர்த்தி அவன் கேட்க..

இல்ல மாமா இந்த கண்ல நா நிறைய ரியாக்ஷன்ஸ் பாத்துருக்கேன்..

கேரிங்,அபெக்ஷன்,லவ் இன்னும் நிறைய ஆனா இன்னைக்கு மார்னிங்ல இருந்து நீ என்ன பாக்குற பார்வை நா இதுவரை பாத்தது இல்ல அதான் ஒருமாறி நெர்வஸா..எக்சைட்டடா சொல்ல தெரில..

அடடா இந்த சின்ன கண்ல இவ்ளோ விஷயமா??

நீ கிண்டல் பண்ணாலும் அதுதான் நிஜம்..

அவளை இன்னுமாய் தன்னோடு நெருக்கி அமர்த்தியவன்..

சோ அதுக்காக தான் இந்த ப்ரிப்பரேஷன் எல்லாமா???என அவள் முகத்தை உயர்த்த ஆம் என தலையசைத்தாள்..

இது நம்ம லைப்போட முக்கியமான டெசிஷன் சஹிம்மா இதுக்கு நீ கண்டிப்பா ரெடியாதான் இருக்கியா??

மாமா ஏன் இப்படிலா பேசுற ஏன் நா நீன்னு பிரிச்சு பேசுற??உனக்கு எது இஷ்டமோ அதான் எனக்கும் மத்தபடிலா ஒண்ணுமில்ல மாமா..

நிச்சயமாய் இப்படி ஒரு பதிலை கார்த்திக் அவளிடம் எதிர்பார்க்கவில்லை..

வசதியான குடும்பத்தில் செல்லமாய் எந்த பொறுப்பும் இல்லாமல் சந்தோஷமாய் வளர்ந்தவள் இன்று அவன் சந்தோஷம்தான் முக்கியம் என்கிறாள்..

மாமா நீ யோசிக்குறது எனக்கு புரியுது..என்னடா இவ்ளோ மார்டன் ஆன பொண்ணு இந்த விஷயத்தை இவ்ளோ ஈசியா சொல்றாளேநு தான நினைக்குற???

நா எல்லா விஷயத்துலயும் மார்டன் தான் மாமா ஆனா உன் விஷயத்துல நா கடைஞ்செடுத்த பட்டிகாடுதான்..

உனக்கு பிடிச்சா எனக்கும் பிடிக்கும் உனக்கு பிடிக்கலனா எனக்கும் பிடிக்காது அத தவிர யோசிக்க ஒண்ணுமேயில்ல..

என்றவளை கர்வம் கலந்த காதலோடு தன் தோள் சாய்த்துக் கொண்டான்..

சஹி லவ் யூ சோ மச்டா..என்னை இந்தளவு தெரிஞ்சு வச்சுருக்க உன்னால மட்டும்தான் முடியும்..

நீ சொன்ன எல்லாமே கரெக்ட்தான் காலைல உன்னை அவ்ளோ பக்கத்துல பாத்தப்போ சத்தியமா நா நானாவே இல்ல..

நிச்சயமா முதல்தடவையா உன்னை பார்த்த பார்வைல காதலையும் தாண்டின ஒண்ணு இருந்தது..

ஒரு ஹஸ்பெண்டா உன்கிட்ட உரிமையெடுத்துக்கனும்னு நினைச்சேன்..

ஆனா இப்போ வீட்டுக்குள்ள நுழைஞ்சு எனக்காக நீ பண்ணிண அரேஞ்ச்மெண்ட்ஸ்லா பாத்த அடுத்த செகண்ட் சத்தியமா அந்த தாட்ல இருந்து நா வெளில வந்துட்டேன்..

நா இப்போ அதுக்கு தகுதியானவனானு தெரில சஹிம்மா ஒருமாறி கஷ்டமாயிருக்கு..

என்ன பேசுற மாமா என அவன் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள்..ஏன் இப்படிலா சொல்ற மாமா???

இல்ல சஹிம்மா இவ்வளவு சீக்கிரம்  நா உன்னை கல்யாணம் பண்ணிணது நீ எப்பவுமே என் பக்கத்துல என் பார்வைலயே இருக்கனும்ங்கிறதுக்காக தான்..

மத்தபடி இந்த பர்ஸ்ட் நைட் பேபி இதெல்லாம்நா யோசிச்சதுகூட இல்ல அப்படியே எதாவது நினைப்பு வந்தாலும் நீ கண்டிப்பா இப்போ இதெல்லாம் வேண்டாம்நு சொல்லுவங்கிற நம்பிக்கைல இருந்தேன்னு வச்சுக்கோயேன்..

ஆனா இதெல்லாத்தையும் தாண்டி இன்னைக்கு மார்னிங்ல இருந்து நா கன்ட்ரோல் இழந்துட்டேன்..பட்…

என்ன கார்த்திக் ஏன் ஏதேதோ பேசுற??என்னனு சொல்லு..

சஹி நீ என்கிட்ட எந்த விஷயத்தையாவது மறைச்சுருக்கியா டா??

சத்தியமா இல்ல மாமா..

ஆனா நா மறைச்சுருக்கேனே சஹிம்மா..

மாமா..

நிஜமாடா ஒரே ஒரு விஷயம் ஆனா அது உன்னை பத்தின விஷயம்..

அதை மறைச்சுட்டு உன்மேல முழு உரிமை எடுத்துக்க என்னால முடியாது..

அத இப்போ உன்கிட்ட சொல்லனுமாநு கூட தெரில ஆனா நீ என் மேல வச்சுருக்க பாசத்தை பாக்கும்போது மறைக்குறது தப்புநு மட்டும் தோணுது..

அமைதியாய் அவனே மேலும் பேசட்டும் என காத்திருந்தாள்..

சஹி நீ அன்னைக்கு ட்ரெய்ன் பாத்து மயங்கி விழுந்தது..

அப்பப்போ டயர்டா ஆகுறமாறி பீல் பண்ணது காயத்ரி இந்த வீட்டுக்கு வந்தது எல்லாமே உன்னோட பாஸ்ட் லைப்னால தான்..

என்ன சொல்ற மாமா எனக்கு ஒண்ணும் புரில..

சஹி நா சொல்றத முழுசா கேளு அதுக்குள்ள எந்த ஒரு முடிவுக்கும் வராத..

அதுமட்டுமில்லாம என்னை துளியளவு கூட தப்பா நினைச்சுராதடா சத்தியமா அதை என்னால தாங்கிக்க முடியாது..

உன் நல்லதுக்காக நம்ம கல்யாணம் நல்லபடியா நடக்கனும்ங்கிறதுக்காக தான் இத சொல்லல இன்னைக்கு இதெல்லாம் நடக்காம இருந்திருந்தா இன்னைக்கும் சொல்லிருக்க மாட்டேன்..

இன்னும் இருபது நாள்குள்ள எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டிட்டு உன்கிட்ட வந்து நின்றுப்பேன்..

இப்போ எல்லாமே தலைகீழா மாறிடுச்சு..என அவளின் மாற்றத்தை தேவிகா அவளுள் வந்த முதல் நாள் தொடங்கி அனைத்தையும் கூறி முடித்தான்..

ஒன்றும்கூறாமல் சஹானா அவைனையே பார்த்திருக்க சாரி சஹிம்மா மறைச்சது தப்புதான்..

ஆனா உனக்கு எதாவது ஆய்டுமோநு பயந்துட்டேன்டீ..

நீயில்லாம எனக்கு லைப் இல்ல சஹிம்மா..என கண்கலங்க அவனை இறுக கட்டிக் கொண்டாள்…

அத்தனை நாட்கள் தன்னுள் புதைத்திருந்த பாரத்தை கண்ணீராய் தன்னவளிடம் கொட்டித் தீர்த்துவிட்டான்..

அவன் சற்று நிதானமடைந்ததாய் தோன்றியபோது விடுவித்தாள்..

மாமா நீ ஏன் மாமா அழற..நீ ஒரு தப்பும் பண்ணல..நீ சொன்னதெல்லாம் கேக்கும்போது எனக்கு எவ்ளோ சந்தோஷமாயிருக்கு தெரியுமா..

ஏழு ஜென்ம பந்தம்நு சொல்லுவாங்களே அது எனக்கு நடந்துருக்கு..

இதே உன் இடத்துல வேற யாராவது இருந்திருந்தா இவ்ளோ பண்ணிருப்பாங்களாநு தெரில உங்க பொண்ணுக்கு ஏதோ ப்ரச்சனையிருக்குநு சொல்லிட்டு போய்ருப்பாங்க..

எனக்காக பாத்து பாத்து பண்ணிருக்கியே  மாமா அதை என்கிட்டயும் காட்டிக்காம..

சத்தியமா ஐ அம் வெரி வெரி லக்கி மாமா..நீ மட்டுமில்லாம சிவா ஷரவ் ஷரவன் கௌரி மணி அண்ணாணு எனக்காக எத்தனை பேரு இருக்காங்கநு  நினைக்குறப்போ இதெல்லாமே உன்னால தான் மாமா..

லவ் யூ லவ் யூ லவ் யூ மேட்லி கார்த்திக்..

சஹிம்மா என இறுக கட்டிக் கொண்டான்..நீ ஒண்ணும் கவலபடாதடா இந்த ப்ரச்சனைய எப்படி முடிக்கனுமோ அப்படி முடிக்குறேன்..

இங்கயிருந்து சென்னை போறப்போ நா என் சஹியை சஹியாவே கூட்டிட்டு போவேன்..

ப்ராமிஸ்டா என அவள் கைமேல் வைத்திருந்த அவன் கைகளையெடுத்து தன் இடுப்பைச்சுற்றி படரவிட அதை விலக்க எத்தனித்தவனை விடாமல் பிடித்தாள்..

அவன் ஏதோ கூற வாயெடுக்க தன் விரல்களால் அவன் வாயை மூடியவள்..

நீ ஒண்ணும் பேச வேணாம் நீ இந்த உண்மையெல்லாம் சொல்லாம இருந்திருந்தாலுமே நா உனக்கு குடுக்க நினைச்ச சர்ப்ரைஸ கண்டிப்பா குடுத்துருப்பேன்..

உனக்கு பேச குடுத்த டைம் முடிஞ்சுடுச்சு இனி எதுவாயிருந்தாலும் காலைல பேசிக்கலாம்..

என்றவள் அதற்குமேல் தானும் பேசவில்லை அவனையும் பேசவிடவில்லை..

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode