“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

 

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே” 

திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் எனும் கூற்றிற்கேற்ப அந்த பாடலிலே உருகியவள் கண்திறந்தபோது அந்த ஈசன் அற்புத கோலத்தில் அவளுக்காகவே காட்சியளிப்பதாய் தோன்றியது..

பிரகாரத்தை சுற்றி வந்தவள் கண்ணில் படுவர்களெல்லாம் அளிக்கும் புன்னகைக்கு பதில் புன்னகையளித்தவாறு வீடு வந்து சேர்ந்தாள்..

சாமி நீ பக்கத்து ஊருக்கு போனும்னு சொன்னியே போலயா என்றவாறே உள்ளே நுழைய எத்தனிக்க பக்கத்து வீட்டு பாட்டி அவளிடம்,

ஏ கழுத எத்தனைதடவ சொல்றேன் அப்பன பேரு சொல்லி கூப்டாதநு கேக்குறியா நீ நாளைக்கே கல்யாணம் ஆகிப் போனா உன் புருஷனயும் இப்படிதான் கூப்டுவியா??

ஏ கிழவி எங்கப்பன நா கூப்டுறேன் உனக்கு ஏன் வலிக்குது..

போய் வேலையப் பாரு என்றவாறு உள்ளே நுழைந்தாள்..

சாமி வழக்கம்போல் விளக்கின்முன் நின்று சிவ பெருமாளை வேண்டிநிற்க அவரின் அந்த திருநாமமும் உடலில் இருந்த  விபூதியும் தெய்வகடாச்சமான முகமும் 15 வருடத்திற்கு முன் அவள் எப்படி பார்த்தாளோ அப்படியே இருப்பதாய் தோன்றியது..

அவளுக்கு ஐந்து வயதாய் இருக்கும் போது பஞ்சத்தின் காரணமாக அவளின் பெற்றோர்கள் இறந்துவிட தெரிந்தவர்களோடு இந்த ஊருக்கு வந்துவிட்டாள்..

யார் யாரிடமோ உதவி கேட்டும் பெண் பிள்ளை என்பதால் யாரும் வேலைக்குகூட ஏற்றுக் கொள்ளாமல் போக கோவிலுக்கு வந்தவள் அந்த சிவனை பார்த்தவாறே பசி மறந்து உறங்கியும்விட்டாள்..

அப்போது சாமி அவளை பார்த்து அர்ச்சகரிடம் விசாரிக்க அவர் விவரம்கூற அவளருகில் சென்றவர் அவளை எழுப்பி தன்னோடு வருகிறாயா என்று கேட்க அந்த பிஞ்சு மனதில் என்ன தோன்றியதோ ம்ம் என்று தலையசைத்தவாறு அவரோடு சென்றாள்..

அன்றிலிருந்து அவளை தன் மகளாகவே வளர்த்தார்..தன் வாழ்க்கையே தேவிகா தான் என்றவர் இருக்க தேவிகாவிற்கு உலகமே சாமி தான்..

அடிப்படையில் பயந்த சுபாவமுடையவள் ஆதலால் யாரிடமும் அவ்வளவு எளிதாக பழகிவிட மாட்டாள்.

அவரோடு அனைத்து ஊர் கோவிலுக்கும் திருவிழா சமயங்களில் சென்று அவருக்கு உதவியாய் இருப்பாள்..

இப்படியாய் நாட்கள் நகர அன்று காலையே அவள் தோழிகள் அவளை அழைத்துச் செல்ல வந்தனர்..

ஏ புள்ள தேவிகா நம்ம பண்ணையார் தோட்டத்துல மாங்காய் சரசரமா தொங்குது வா போய் பறிச்சுட்டு வரலாம்..

அய்யய்யோ திருடியா நா வரமாட்டேன்ப்பா மாட்டினா அவ்ளோதான்..

ஏய் பண்ணையார் ஊர்ல இல்ல அதனாலதான் உன்னையும் கூப்டுறோம் இல்ல நீயே எங்கள மாட்டிவிட்டுருவநு எங்களுக்கு தெரியாதா பேசமா வா விரசா போய்ட்டு வந்துரலாம்..

அரைமனதாய் அவர்களோடு சென்றவள் எவ்வளவு கேட்டும் உள்ளே செல்ல மறுத்துவிட்டாள்..

சரி இங்கேயே இருந்து யாராவது வந்தா சத்தம் குடு நாங்க வேகமா வந்துரோம்..

இந்தா இதெல்லாம் கைல வச்சுக்கோ என அங்கு விழுந்திருந்த பழங்களை அவளிடம் குடுக்க தாவணி தலப்பில் அவற்றை வாங்கியபடி நின்றாள்..

சற்று நேரத்தில் தோளில் ஏதோ உரச பூச்சியோ என பதறி துள்ளியவளள் கையிலிருந்த பழங்கள் கீழ விழ பின் திரும்பிபார்க்க கையில் கம்போடு ஆறடி உயரத்தில் நின்றவனை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டாள்..

இப்படியா கூப்டுவீக நா பாம்போ என்னவோநு பயந்தே போய்ட்டேன் ஆமா நீங்க யாரு என்ன ஏன் கூப்டீக??

என்றவாறே கீழிருந்த பழங்களை ஒவ்வொன்றாய் எடுத்து மறுபடியும் தாவணிக்குள் வைக்க..

அவனோ ஒன்றும் கூறாமல் அவளையே பார்த்திருந்தான்..

என்ன நா கேட்டுட்டே இருக்கேன் வாயே தொறக்காம நிக்கீக ஓஓ நீங்களும் மாங்கா திருடதான் வந்தீகளா???

அடியே தேவிகா அவருதான் பண்ணையாரு ஓடிவாடி சீக்கரம் வா என்று கத்திக் கொண்டே அவள் தோழிகள் ஓட நடப்பதை உணரவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது அவளுக்கு..

பயத்தில் கைகள் நடுங்க அவனிடம் பழங்களை நீட்ட கடைசியாய் வந்த தோழி ஒருத்தி அவள் கைப்பற்றி இழுத்துக் கொண்டு ஓட ஆரம்பிக்க அவனை திரும்பி திரும்பி பார்த்தவாறே செல்பவளை கண்களுக்குள் நிரப்பினான் நம் கார்த்திகேயன்..

பண்ணையாரின் ஒரே மகன்..நான்கு வருடங்களுக்கு முன் பண்ணையார் தன் மனைவியோடு வெளியூரில் படித்துக் கொண்டிருந்த தன்மகனான கார்த்திகேயனை பார்த்து விட்டு திரும்பும் வழியில் விபத்தில் இறந்துவிட்டார்..

பெற்றோரின் இழப்பு அவனை பெரிதாய் பாதிக்க ஊருக்கு வருவதையே குறைத்து விட்டிருந்தான்..

தோட்டத்து பொறுப்புகளையெல்லாம் நம்பிக்கையானவரிடம் ஒப்படைத்து இருக்க வருடத்துக்கு ஒரு முறையோ இருமுறையோ தான் வந்துவிட்டு போவான்..

அதுவும் ஓரிரு நாட்களே அதனால்தேவிகா அவனை பார்த்திருக்க வாய்ப்பில்லாமல் போனது..

மறுநாள் கோவிலுக்கு வழக்கம்போல்சென்றவள் கண்திறந்த நேரம் எதிரிலிருந்தவனை கண்டு தலைதெறிக்க ஓடாத குறைதான்.

சிட்டாய் பறந்துவிட்டாள்.அதன்பின் அவன் கண்ணில் படாமல் ஒவ்வொரு நாளும் தப்பிப்பதே ப்ரம்ம ப்ரயத்தனமாய் இருந்தது அவளுக்கு..

இதனிடையில் அவன் வீட்டிற்கே சென்று அவனை பார்ப்பாள் என நினைக்கவேயில்லை ஏதோ வேலையாய் வெளியே போகவேண்டும் என்று சாமி கூற அவளும் எப்போதும்போல் கோவில் வேலையாய் இருக்குமென செல்ல அவன் வீட்டுக்கு தெருவை கண்டதும் பயம் அப்பிக் கொண்டது..

இங்க எங்க போறோம் சாமி???

இல்ல தேவி நம்ம பண்ணையார் மகன் இல்ல அவரு நிரந்தரமா நம்ம ஊர்லயே தங்கபோறாராம் அதான் அவர பாத்து திருவிழா விஷயமா பேசிட்டு வரலாம்நு வந்தேன் கோவில் விஷயமா நீயில்லாம நா எப்போ போய்ருக்கேன் அதனாலதான் அதோ அதான் அவுக வீடு நீயும் இங்க வந்ததில்லல வா வா..

குனிந்த தலை நிமிராமல் அவரின்பின் சென்று ஓரமாய் நின்று கொண்டாள்..

சில நொடிகளில் உள்ளிருந்து அவன் வரும் காலடி சத்தம் கேட்க பெண்ணவளுக்கோ இதயைத்துடிப்பு அதிகமாய் எகிறியது..

வணக்கம் ஐயா என் பேரு சாமி இது என் பொண்ணு தேவிகா..

மரியாதைக்காய் தலை நிமிர்த்தி பார்க்க அவனோ கண்சிமிட்டி சிரிக்க சட்டென தலைதாழ்த்திக் கொண்டாள்..

நீங்க வயசுல பெரியவரு ஐயாநு கூப்டாதீங்க என் பேரு கார்த்திகேயன் அப்படியே கூப்டுங்க..

அய்யோ அதெப்படி சரியாவரும்??

எல்லாம் சரியாவாரும்..என புன்னகைக்க அடுத்து திருவிழா சம்மந்தமாய் தேவையானவற்றை பேசிவிட்டு கிளம்ப எத்தனிக்க சாமியோடு சேர்ந்து வெளியே வந்தவள் வாசலை தாண்டிச் சென்று அவனை திரும்பிப் பார்க்க அதற்காகவே காத்திருந்தவன் விடைக் கொடுத்து கையசைத்தான் பதறிப் போனவளாய் நிற்காமல் ஓடிவிட்டாள்..

சாமி அன்று முழுவதும் தான் பார்ப்பவர்களிடமெல்லாம் அவனைப் பற்றி உயர்வாய் கூறிக் கொண்டிருந்தார்..

இப்படியாய் நாட்கள் நகர கோவில் திருவிழா நாளும் வந்தது..

சாமி வாங்கிக் கொடுத்த அரக்கு நிற தாவணியில் தலைநிறைய பூவோடு அம்சமாய் கிளம்பி வந்தவளை பார்த்தவருக்கு கண்களில் நீர் கோர்த்தது..

உன்ன பெத்தவக சரியாதான் பேரு வச்சுருக்காக அந்த மகாலட்சுமியேதான் தேவிம்மா நீ..உன்ன கூடிய சீக்கிரம் ஒருத்தன் கைல பிடிச்சு குடுத்துட்டா நிம்மதியா கண்ணமூடிருவேன்..

என்ன சாமி பேச்சு இது கோவிலுக்கு போய் மத்தவங்களுக்கு சந்தோஷமா குறி சொல்லபோற இப்போ இது தேவைதானா..

வா போலாம்..என்றவாறு கோவிலையடைய அனைத்து முக்கியத் தலைகளும் வந்தவுடன் சிவனுக்குரிய ஆராதனைகள் ஆரம்பமாக சில நிமிடங்களிலேயே சாமி நிலைதடுமாறி ஆட ஆரம்பிக்க தேவிகா தாங்கிப் பிடிக்க முயல அவரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க தடுமாறினாள்..

அதை கவனித்திருந்தவன் சட்டென மறுபுறம் தாங்கிப் பிடித்து நின்றான்..அதன்பின்பு சாமி நினைவிற்கு வரும் வரையிலுமே கூடவேயிருந்து உதவிகள் செய்தான்..

கோலாகலமாய் திருவிழா ஒருபுறம் நடக்க மாலைவேளையில் அங்கிருந்த கடைகளை வேடிக்கை பார்த்தவாறு தேவிகா வந்து கொண்டிருக்க எதிரில் வந்த கார்த்திகேயனை கண்டு கொண்டாள்..

அப்படியே அவள் அங்கிருந்து நகர முற்பட அவனின் கணீர் குரலில் அவனை ஏறிட்டாள்..

தேவிகா நாளைக்கு காலைல கோவிலுக்கு வரும்போது கொஞ்சம் எனக்காக காத்திரு நா உன்கூட கொஞ்சம் பேசனும் வரேன் என்றவாறு அவன்போக்கில் சென்றுவிட்டான்..

கேட்டவளோ வாயடைத்து நின்றாள்..அவர் என்கிட்ட என்ன பேசபோறாரு..எதுக்காக கூப்பிடுறாரு தெரிலயே..

என்று ஆயிரம் முறை எண்ணியும் ஒன்றும் புரியாமல் அன்றைய தூக்கம் தொலைந்ததுதான் மிச்சம்..

மறுநாள் பொழுதோடே எழுந்து கோவிலுக்கு ஒருவித தவிப்போடே செல்ல அங்கு சிவனை எண்ணி கண்களைமூடி வேண்டியவள் கண் திறந்தபோது கார்த்திகேயன் நின்றிருந்தான்..

அவன் ஏதோ கூற வாயெடுக்க சரியாய் ஒருவர் அவனிடம் ஏதோ கேட்க வர விட்டால் போதுமென பிரகாரத்தை சுற்ற சென்றுவீட்டாள்..

ச்ச்சச அவர பாத்தா ஏன் இப்படி மூச்சு வாங்குது..கை கால் எல்லாம் உதருது நல்லவேளை முத்து அண்ணன் வந்து காப்பாத்தினாங்க என நிம்மதி பெருமூச்சை முழுசாய் முடீப்பதற்குள் பின்னிருந்து அருகில் அவன் குரல் கேட்க சட்டென திரும்பினாள்..

நில்லுனு சொன்னேனே இவ்ளோ வேகமா எங்க போற??கொஞ்சம் இப்படி வா என்றவாறு குளத்தருகில் நிற்க அவளை உள்ளே இரண்டு படி கீழிங்கி நிற்கச் சொன்னான்

எனவே வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அவன் மட்டுமே தெரிவான்..எதுக்கு கூப்டேன்னு தெரியுமா???

ம்கும் என இடவலமாய் தலையசைத்தாள்..லேசாய் புன்னகைத்தவன்.

எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சுருக்கு கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசப்பட்றேன்..

சொல்லப் போனா உனக்காக தான் நா திரும்ப இந்த ஊருக்கு வந்ததே..

பட்டணத்துல இருந்தேன்ங்கிறதால என்ன தப்பா நினைச்சுடாத நா விரும்பின முதல் பொண்ணும் நீதான் கடைசி பொண்ணும் கண்டீப்பா நீயாதான் இருப்ப யோசிச்சு உன் முடிவ சொல்லு நாளைக்கு நம்ம ஆத்தங்கரைல உனக்காக காத்திருப்பேன்..

என்றவாறு அவன் சென்றுவிட இவளுக்கோ என்ன நடக்கிறது என்பதே வெகு நேரம் புரியவில்லை.. அவள் தோழி வந்து  தோள்தட்ட அப்போதுதான் சுயநினைவிற்கே வந்தாள்..

அவுக எவ்வளவு பெரிய ஆளு என்னபோய் கல்யாணம் கட்டிக்கிறேன்னு சொல்றாகளே..

இதெல்லாம் எப்படி ஒத்து வரும் இந்த ஊர்காரங்க என்ன சொல்லுவாக..சாமி ஒத்துப்பாரா??

மொதல்ல எனக்கு பிடிச்சுருக்கா தெரிலேயே எந்த கேள்விக்குமே பதில் தெரியவில்லை என்பதுதான்…

விடிய விடிய யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவளாய் அதிகாலையிலேயே கோவிலுக்குச் சென்று சிவனிடம் முதலில் தன் விருப்பத்தை தெரிவித்துவிட்டு ஆத்தங்கரையில் தன்னவனுக்காய் காத்திருந்தாள்..

கடைசி படியில் அமர்ந்து நீருக்குள் காலை விட்டு விளையாடியவாறு அமர்ந்திருக்க பத்து நிமிடம் கழித்து வந்தவனுக்கு தனக்கு முன் அவள் வந்திருப்பதே அவள் மனதை கூறியது  இருப்பினும் அவளை சீண்டஎண்ணியவனாய் ஒன்றும் பேசாமல் பின்னால்  நின்றுகொண்டான்..

சில நிமிடங்கள் காத்திருந்தவள் அவன் வரவில்லை என்றெண்ணி எழுந்து திரும்ப அருகினில் நின்றவனை கண்டு பதறி நகரப் போனவள் கால் இடறி நீருக்குள் விழப்போக அவளின் ஒரு கரத்தை பற்றி மற்றொரு புறம் இடையைப் பற்றி இழுத்து நிறுத்தினான்..

சஹானாவின் முகத்தில் அப்படியாய் ஒரு பரவசம்..நாணத்தால் சிவப்பேறியது..

பார்த்திருந்தவனுக்கோ தன்னவள்மேல் காதல் இன்னும் இன்னுமாய் அதிகரித்தது..

சில நொடிகளில் தான் நிற்கும் நிலையறிந்து சட்டென விலகி ஓட எத்தனித்து இரண்டு படியேற.

தேவி நா கேட்டதுக்குபதில் இன்னும் சொல்லலியே நீ??என்றவனின் கேள்வியில் அங்கேயே நின்று அவன்புறம் திரும்பியவள் தலைகுனிந்தவாறே நின்றாள்.

குறுஞ்சிரிப்போடு  அவளருகில் வந்தவன் என்ன பிடிச்சுருக்கா பிடிக்கலையா????

அவள் ஆமாம் என்பதாய் தலையசைக்க..ம்ம் இப்படி சொன்னா என்ன அர்த்தம்..

பிடிக்கலநு சொல்றியா என மீண்டும் அவளை வாற அதிர்ச்சியாய் தலைநிமிர்த்தி அவள் பார்க்க அடடா அப்போ பிடிச்சுருக்கா??

என தலைசாய்த்து அவள் உயரத்திற்கு ஈடுகொடுத்து கேட்க வெட்கச் சிரிப்போடு ஆமா என்றவள் ஓடிவிட நாளைக்கும் இதே நேரம் இங்கேயே காத்திருப்பேன் என்றவனின் குரல் காற்றில் கரைந்தது..

வீட்டிற்கு வந்தவளுக்கு  மனம் நிறைந்திருந்தது தனக்கான உறவாய் உலகமாய் ஒருவன் வரப் போகிறான் என்ற எண்ணம் அவளை மகிழ்ச்சியடையச் செய்தது..

சாமியிடம் கூறலாமா வேண்டாமா என்றெண்ணியவள் எப்படி இந்த பேச்சை ஆரம்பிப்பது என தெரியாமல் குழம்பினாள்..

இத்தனை வருடத்தில் அவருக்கு தெரியாத ரகசியம் என அவளிடம் ஒன்றும் இருந்ததில்லை..

ஆனால் இந்த விஷயம் கார்த்திகேயன் மூலமாக தெரிவதே நல்லது என தோன்ற அதுவரை காத்திருக்க முடிவு செய்தாள்..

அன்றைய பொழுது இனிமையாய் விடிய சஹானாவிற்கு அவளின் கார்த்திகேயனை பார்க்க போவதே பன்மடங்கு பொலிவைக் கொடுத்தது..

விரைவாய் அத்தனை வேலையையும் முடித்துவிட்டு ஆத்தங்கரைக்கு செல்ல கார்த்திகேயன் அவளுக்காக காத்திருந்தான்..

அவள் வந்தது தெரிந்தும் அவளாய் வாய் திறக்கட்டும் என அவன் காத்திருக்க அவளோ எப்படி அழைப்பது என்று தெரியாமல் கைகளை பிசைந்தவாறு நின்று கொண்டிருந்தாள்..

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்தவனாய் பின் திரும்பி, அது சரி இப்படி வாயே பேசாம வாழ்க்கை பூரா ஓட்ரதா உத்தேசமா??

அப்போ நா வந்தது உங்களுக்குத் தெரியுமா??என்றாள் மெதுவாய்..

அப்பாடா ஒரு வழீயா பேசிட்டியா நா கூட வாழ்க்கைபூராவுமே நீ ஆமா இல்லநு மட்டும் தான் சொல்லுவியோநு நினைச்சு பயந்துட்டேன் சரி  இப்படி உக்காரு என்றவாறு அருகில் கைகாட்ட சற்று இடைவெளி விட்டு அவனருகில் அமர்ந்தாள்..

சிறு  புன்னகையோடே அவளை பார்த்திருந்தவன் ஆமா நீ எப்பவுமே இப்படி அமைதியாதான் இருப்பியா ஏன் என்கூட பேசமாட்ற ஒரு வேளை என்மேல நம்பிக்கை வரலையோ இன்னும்??

சட்டென கண்களில் நீர்கோர்த்திருந்தது பெண்ணவளுக்கு..

ஏன் இப்படி பேசுறீக???

ஏ ஏன் அழற??கண்ணைத் தொட முதல்ல..இனி நானும் அப்படி பேசமாட்டேன்..சொல்லு ஏன் அமைதியாவே இருக்க??

வந்து வந்து எனக்கு உங்கள எப்படி கூப்பிடறதுநு தெரிலயே என்றாள் தயங்கி தயங்கி..

உங்க அப்பாவ பேரு சொல்லிதான கூப்டுற என்னையும் அப்படியே கூப்டு..

அய்யய்யோ தப்பு தப்பு சாமியவே அப்படி கூப்டகூடாதுநு எவ்வளவோ முயற்சி பண்றேன் ஆனா மாத்திக்க முடில உங்களலா அப்படி கூப்பிடமாட்டேன்..

ம்ம் சரி அப்போ மாமாநு கூப்டு இனி ஒழுங்கா பேசுவ தான.. ம்ம் என அழகாய் தலையசைக்க அவனும் அவளை போல் செய்து சிரித்தான்..

ம்ம் சரி உங்கப்பாகிட்ட விஷயத்தை சொல்லிட்டியா??

இல்ல. ஏனோ எனக்கு இத சொல்ல வாயே வரமாட்டேங்குது சாமி ஒண்ணும் சொல்லமாட்டாரு தான் இருந்தாலும் ஒருமாறி பயமாயிருக்கு..

ம்ம் புரியுது தேவி சரி நீ ரொம்ப போட்டு குழப்பிக்காத நானே கூடிய சீக்கிரம் உன் வீட்டுக்கு வந்து பேசுறேன் சரியா??

நா ஒண்ணு கேக்கவா??

எதுவாயிருந்தாலும் சொல்லு தேவிம்மா..

இல்ல நீங்க பட்டணத்துலலா படிச்வுக எனக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம்..

வசதிநு பாத்தாலும் உங்ககிட்ட கூட வரமுடியாது..என்னவிட எவ்ளவோ அழகான பொண்ணுங்கலா இந்த ஊருல உங்க வசதிக்கு ஏத்தமாறி இருக்காங்க உங்களுக்கு ஏன் என்ன பிடிச்சுருக்கு??

அட அட பேசமாட்டியாநு கேட்டது ஒரு தப்பா இப்போ இவ்ளோ பேசுறியே என்று சிரிக்க,

அந்த சிரிப்பில் தன்னை தொலைத்தவள் உங்க சிரிப்பு நல்லாயிருக்கு என்றாள் ரசித்து..

அதற்கும் சிரித்தவன் சட்டென அவளருகில் நெருங்கி அமர்ந்தவன் அவள் கைகளை தன்னோடு இணைத்து கொண்டான்..

தேவி எனக்கு என் அப்பா அம்மா தான் எல்லாமே அவங்க போனப்பறம் சொந்தபந்தம் எல்லாமே காசு பணத்துக்கு தான் ஆசப் பட்டாங்களே தவிர என்மேல உண்மையான அன்பு யாருக்கும் இல்ல..

அதனாலேயே இங்க வரத நா குறைச்சுகிட்டேன்..ஏதோ ஒரு தனிமை என்னை சூழ்ந்துகிறதா தோணும்..

ஆனா உன்ன முதல்ல தோட்டத்துல பாத்தப்போ உன் பார்வை பேச்சு எல்லாமே அப்படி ஒரு வெகுளித்தனம் இருந்தது..உண்மையிருந்தது..

அதுதான் என்னை இங்க வரவச்சுது நாகூட எவ்வளவோ யோசிச்சேன்..என் ஆசைய உன்கிட்ட சொல்லி ஒருவேளை உனக்கு என்ன பிடிக்கலனா என்ன பண்றதுநு..

ஆனா நீ என்ன பாத்த ஒவ்வொரு முறையும் என்னவள்ங்கிற நினைப்புலயே எதாவாது சீண்ட தோணிச்சு..

நாளுக்கு நாள் அது அதிகமாக ஒரு கட்டத்தில் கல்யாணம்நு ஒண்ணு நடந்தா உன்கூடதான்னு முடிவு பண்ணிணேன்..

அப்பவும் மனசுல நினைச்சேன் ஒரு வேளை என் காதல நாசொல்லி உனக்கு விருப்பமில்லாம போச்சுன்னா அதுக்கப்பறம் எக்காரணத்தைக் கொண்டும் இந்த ஊருக்கு வரக்கூடாதுநு முடிவு பண்ணிதான் என் விருப்பத்தை உன்கிட்ட சொன்னது..

இப்போ சொல்லு வேறன்ன சந்தேகம் இருக்கு??என்று திரும்ப மறுபடியும் கண்களில் நீர்கோர்க்க அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்..

இப்போதான அழாதநு சொன்னேன் மறுபடியும் ஏன் அழற தேவி??

இனி அழமாட்டேன் மாமா என கண்களை துடைத்துக் கொண்டாள்..

பரவாயில்லையே மாமாநு கூப்பிடுற ம்ம் சரி நேரம் ஆச்சு தேவி நீ கிளம்பு அப்பா தேட போறாரு..

நாளைக்கு பாக்கலாம் என்றவாறு அவள் வீட்டிற்கு செல்லும் வரை அவள் பாதுகாப்பை உறுதிபடுத்தி விட்டு அவனும் வீட்டை அடைந்தான்..

மனம் கொள்ளா மகிழ்ச்சியோடு இருந்தவளுக்கு ஏனோ சிவனை பார்த்து வர தோன்ற மாலைநேரம் கோவிலுக்கு கிளம்பிச் சென்றாள்..

தன்னவனை மனதில் நினைத்தப்படியே தெருவில் சென்று கொண்டிருந்தவளை அருகில் சைக்கிளில் வந்தவன் இடித்துவிட பாத்துபோக மாடீகளா??

அப்படி என்ன அவசரம் என்றவாறே திரும்பி அவன் முகம் பார்த்தவள் சட்டென வாயை மூடிக் கொண்டாள்..

அவன் இவளை பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரிக்க உள்ளுக்குள் பயந்தவள் விறுவிறுவென அருகிலிருந்த வீட்டிற்குள் நுழைந்து கொண்டாள்..

அவன் பெயர் அருணாச்சலம்.. சொல்லும்போதே சஹானாவின் முகத்தில் அப்படியாய் ஒரு அருவருப்பு ஆத்திரம்..காயத்ரி அவளை சமாதானப்படுத்த அவள் பேச்சைத் தொடர்ந்தாள்..

அவனை கண்டாலே ஊரின் பெண்களெல்லாம் ஓடி ஒளிந்து கொள்வர்  இல்லாத கெட்டப்பழக்கங்களே இல்லை எனும் அளவிற்கு நல்லவன்..

தூணுக்கு சேலைகட்டிவிட்டால்கூட சும்மாவிடாத அரக்கன் இரண்டு மாதங்களுக்கு முன்தன் ஆசைக்காய் ஒரு பெண்ணின் வாழ்வையே சீரழிக்க அவமானம் தாங்காத அப்பெண்ணோ தன் வாழ்வை முடித்துக் கொண்டாள்..

ஊர் பஞ்சாயத்தில் ஒன்றுகூடி பேசி அவனை ஊரைவிட்டு ஒதுக்கி வைக்க இப்படி அவ்வப்போது ஊருக்குள் வந்து வம்பு செய்வதையே வாடிக்கையாய் கொண்டிருந்தான்…

வீட்டிற்குள் நுழைந்தவளுக்கு இன்னுமும் மூச்சு வாங்கியது..யாரு தேவிகா வா என்னாச்சு ஏன் இப்படி வேர்த்துருக்கு???-காவேரி

அக்கா ஒண்ணுமில்ல கோவிலுக்கு போலாம்நு வந்தேன் வெளில அந்த அருணாச்சலத்தை பாத்துட்டு பயந்து உள்ளே வந்துட்டேன்க்கா..

அந்த வீணாபோனவனுக்கு ஒரு கேடும் வரமாட்டேங்குதே.. இவன்லா உயிரோடயிருந்து என்னத்த சாதிக்கப் போறான்.. நீ பயப்படாத இந்தா முதல்ல தண்ணிய குடி..

அதை வாங்கிப் பருகியவள் ரொம்ப நன்றிக்கா நா போய்ட்டு வரேன்..

நா வேணா துணைக்கு வரவா தேவிகா தனியா போய்டுவியா??

பரவால்லக்கா நா பாத்து போய்க்கிறேன்..என்றவள் கோவிலுக்குச் செல்லாமல் நேரே வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.

முந்தைய நாளின் பயத்திலேயே இரவு தாமதமாய் தூங்கியவள் காலை எழுந்து தயாராவதற்குள் சாமி யாருடனோ வெளியே பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்க இவ்வளவு காலைவேளையிலேயே யாராய் இருக்கும் என எட்டிப் பார்த்தவளுக்கு ஒரு நொடி இதயம் நின்றுவிட்டது..

கார்த்திகேயன் தான் சாமியோடு பேசிக்கொண்டிருந்தான்..

தேவிம்மா யாரு வந்துருக்கா பாரு போ போய் காபி எடுத்துட்டு வா..

என்ற சாமியின் குரலில் தான் இந்த உலகிற்கு வந்தவள் வேகவேகமாய் சென்று தன்னவனுக்காய் பார்த்து பார்த்து காபி போட்டு எடுத்து வந்தாள்..

அதை வாங்கிக் கொண்டவன் அவளை பார்த்து கண்சிமிட்ட கடகடவென சென்று கதவின்பின் நின்றுகொண்டாள்..

தம்பி என்ன இவ்ளோ தூரம் சொல்லிருந்தா நானே வந்துருப்பேனே…

இல்லங்க இந்த விஷயத்தைப் பேச நா இங்க வந்தா தான் சரியா இருக்கும் அதான் நானே வந்துட்டேன்..

அது வந்து..நா நேரடியா விஷயத்துக்கு வரேன் எனக்கு உங்க பொண்ணு தேவிகாவ ரொம்ப பிடிச்சுருக்கு கல்யாணம் பண்ணிக்க ஆசப்பட்றேன்..

அதான் உங்ககிட்ட பொண்ணு கேட்டு வந்துருக்கேன்..

தம்பி!!!!

எனக்கு உங்க மனநிலைமை புரியுது இருந்தாலும்..

தம்பி இதெல்லாம் சரிபட்டு வருமாப்பா இந்த ஊர்ல இருக்குறவங்க என்ன சொல்லுவாங்க??

தேவிகாவ யாரும் எதுவும் சொல்லிட்டா என்னால தாங்க முடியாதுப்பா..

உங்களுக்குத் தெரியும்நு நினைக்குறேன் தேவிய நா தத்தெடுத்து..

ஐயா எனக்கு எல்லாமே தெரியும் எதுஎப்படி இருந்தாலும் இப்போ தேவிஉங்கபொண்ணு ஒரு அப்பாவா உங்க முடிவ நீங்க சொல்லுங்க..

யாரை பத்தியும் நீங்க கவலபட வேண்டாம்..ஊர் பெரியவங்ககிட்ட நா பேசுறேன்..

எல்லாருக்கும் ஒத்துகிட்டா இங்கயிருப்போம் இல்லையா படிப்பு இருக்கு எப்படியிருந்தாலும் தேவியை வச்சு காப்பத்துற சக்தி எனக்கு இருக்கு..

வீட்டுக்கு பெரியவங்களா நீங்களும் எங்களோட வந்துருங்க எங்கேயாவது போய்டுவோம்..

தம்பி என அவனின் கைப்பற்றியவருக்கு பேச நா எழவில்லை..

என் பொண்ணுக்காக இவ்ளோ யோசிக்குற உங்களவிட என் பொண்ண யாரு நல்லா பாத்துரப்போறா எனக்கு பரிபூரண சம்மதம்ப்பாஎன்று முடிக்க தேவி ஓடிவந்து அவர் மேல் சாய்ந்து கொண்டாள்..

அனைத்தும் சுபமாய் அமைந்த திருப்தியோடு அவன் கிளம்பி வாசலுக்கு வர கோவில் அர்ச்சகர் வேகமாய் அவனிடம் வந்தார்..

என்ன பூசாரி ஐயா ஒரே பதட்டமா வரீங்க??

அது வந்துய்யா வந்து திருவிழா முடிஞ்சு ஒரு வாரம் பத்து நாள் வர சிவனுக்கும் அம்பாளுக்கும் நகை சாத்துறது வழக்கம் அதேமாதிரி தான் நேத்து அப்பா கோவிலுக்கு குடுத்த நகைகளை சாத்தினேன்..

காத்தால போய் பாத்தா நகையை காணும்ங்க..என்ன பண்றதுநு புரியாம தான் ஓடி வரேன்..

என்னதிது நம்ம ஊர்ல இப்படி நடக்க வாய்ப்பேயில்லையே..எவ்ளோ தைரியம் இருந்தா இப்படி ஒரு காரியத்தை பண்ணிருப்பாங்க..

அர்ச்சகரே உங்களுக்கு யார் மேலேயாவது சந்தேகமிருக்கா???

அப்படி குறிப்பிட்டு யாரும் தெரிலங்க..

அந்த பாழாபோன அருணாச்சலம் தான் இந்த வேலையெல்லாம் பண்ணுவான் அவனையும் ஊரைவிட்டு ஒதுக்கி வச்சாச்சு..வேற??

ஐயா நேத்து அந்த அருணாச்சலம் ஊருக்குள்ள வந்தான் நா பாத்தேன்..

என்ன சொல்ற தேவிகா???

ஆமா சாமி நேத்து சாயங்காலம் கோவிலுக்கு போறப்போ என்றவாறு நடந்ததை கூற,

அப்போ கண்டிப்பா அந்த கடன்காரனாதான் இருக்கும் சிவ சிவா இப்போ என்ன பண்றது??

கவலபடாதீங்க பூசாரி ஐயா அவனை கண்டுபிடிச்சு நகையை காப்பாத்த வேண்டியது என் பொறுப்பு..

நா போய் ஊர் பஞ்சாயத்தை கூட்ட சொல்றேன் என சாமி நகர,இல்ல அதெல்லாம் வேண்டாம் பஞ்சாயைத்துலா சரி படாது நாம அவன போலீஸ்ல பிடிச்சு குடுத்துருவோம் மத்தத அவங்க பாத்துப்பாங்க..

தம்பி போலீஸ்லா எப்படி ஊர் பஞ்சாயத்தை அவமதிச்ச மாதிரி ஆகிடாதா???

அதெல்லாம் நா பேசிக்குறேன்நீங்க ஊர் பெரியவங்கள கூட்டிட்டு என் வீட்டுக்கு போய்டுங்க நா அவன இழுத்துட்டு வரேன்..

கூறியபடியே அடுத்த இரண்டு மணிநேரத்தில் நகையோடு அவனையும் இழுத்துவர பெரியவர்களிடம் பேசி அவனை போலீஸில் ஒப்படைத்தான்..

அடிபட்ட மிருகமாய் அவன் உள்ளே செல்கிறான் என்பதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை பாவம்..

விதியின் விளையாட்டு அது என்றால் அதை மாற்றிடவும் முடியுமோ???

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

4 comments

Kavi Natarajan October 22, 2026 - 11:03 am

💞💞💞💞💞💞💞

srichitra October 22, 2026 - 11:10 am

Nice

Padmasubramanian October 22, 2026 - 3:03 pm

அருணாச்சலம் தான் அவளின் இறப்பிற்கு காரணமா?

suganyavel October 23, 2026 - 5:11 pm

Super💕

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode