இரண்டு நாட்கள் மின்னலாய் கடந்திருக்க கார்த்திக்கும் சிவாவும் ஓரளவு அனைத்து ஏற்பாடுகளையும் முடித்திருந்தனர்.

இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நீதிமன்றத்திலிருந்து அழைப்பு வந்துவிடும் அதற்கு அவன் எப்படி தயாராகப் போகிறான் என்ன செய்வான்..

தாங்கள் இதில் தலையிட்டு இருப்பதை எப்படி மறைப்பது என அனைத்து விதங்களிலும் பாதுகாப்பாய் திட்டமிட்டு கொண்டனர்..

இரண்டு நாட்கள் அவ்வளவு ப்ரச்சனைகள் வேலைகள் இருந்தும் சஹானாவை கண்டு கொள்ளாமல் ஒரு நிமிடம்கூட கார்த்திக் இருக்கவில்லை..

அவ்வப்போது அவளை சீண்டுவதும் பேச்சு வளர்ப்பதுமாய் தன்னருகிலேயே வைத்து கொண்டான்..

சஹானாவிற்கு தன்னவனின் இந்த காதலே அவனுக்கு தன்னால் ஆன அனைத்தையும் பண்ண வேண்டும் என்ற உறுதியை விதைத்திருந்தது..

அதுவும் அந்த அருண் விஷயத்தில் செய்ய நேர்ந்தால் அவள் மனம் நிறைந்துவிடும் என்று தோன்றியது..

அதற்கான தக்க சமயத்தையும் பார்த்து காத்திருந்தாள்..அவன் இதை விரும்பமாட்டான் எனினும் நிச்சயம் இதில் அவள் பங்கு இருக்க வேண்டுமென உறுதி கொண்டிருந்தாள்..

அதற்காகவே கார்த்திக்கிடம் அவர்களின் அத்தனை திட்டத்தையும் கேட்டு தெரிந்தும் கொண்டாள்..

இரண்டு நாட்களுக்குப்பின் ஓரளவு ஓய்வாய் இருப்பதாய் தோன்ற சஹானாவோடு வெளியே சென்று வர முடிவெடுத்து கிளம்பினான்..

வானிலை இதமாய் இருக்க தோட்டத்துக்கு சென்று வரலாம் என முடிவெடுத்து சென்றனர்..

கடந்த வாரம் தான் வேலைகள் முடிந்திருக்க இன்று அவ்வளவாய் ஆட்கள் இருக்கவில்லை..

பம்பு செட்அருகில் அமரலாம் என முடிவு செய்து அமர கார்த்திக் ஆர்வம் தாங்காமல் நீருக்குள் இறங்கிவிட்டான்..

ஹே மாமா வேற ட்ரெஸ் கூட எடுத்துட்டு வரல என்ன பண்ற நீ??

பரவால்ல சஹி இந்த இடத்தை பாத்துட்டு அமைதியாலா வீட்டுக்கு போக முடியாது..

என்ன ப்லேஸ் இல்ல.. ஒவ்வொண்ணும் கடவுள் பாத்து செதுக்கினாமாதிரி இருக்கு..

ம்ம் என்றவாறு அவனை புன்னகையோடு பார்த்திருந்தாள்..

ஒரு வழியாய் அவனை வெளியே வர வைத்து தலைதுடைத்து அமர வைத்தாள்..

மாமா நீ என்ன விட மோசமா இருப்ப போல இருக்கே.இப்படி ஆட்டம் போடுற??

சஹி நிஜத்துல என்னமாதிரி சைலண்டா இருக்குறவங்க தான் சான்ஸ் கிடைச்சா செமயா என்ஜாய் பண்ணுவாங்க தெரியுமா..

அப்பறம் நீயெல்லாம் என் பக்கத்துலகூட நிக்க முடியாது..

ஆமா ஆமா அதான் இவ்ளோ நேரம் நீ படுத்துறதுலயே தெரியுதே..

சரி வா மாமா அங்கபோய் இளநீர் சாப்டலாம் யாராவாது இருந்தா பறிச்சு போட சொல்லலாம்..

காவல்காரரிடம் கூறி இளநீர் பறித்து பருகி தோட்டத்தை சுற்றிப் பார்த்துவிட்டு திரும்புகையில் தூரத்தில் தெரிந்த வீட்டை சுட்டிகாட்டியவள் அதான் மாமா வள்ளியோட வீடு அதோ அங்க ஒரு பெரிய மரம் தெரியுதே அதுக்கு பின்னாடிதான் அந்த அருணோட தோட்டம்..

என்றவாறே கார் அருகில் வந்தவளுக்கு முகம் மாற தற்செயலாய் அதை கவனித்தவன் அவள் பார்வை சென்ற திசையை பார்க்க அங்கே அருண் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்..

வாழ்த்துக்கள் புது மாப்பிள்ளை சார்..எப்படியிருக்கீங்க???

நல்லாயிருக்கேன் நீங்க எப்டியிருக்கீங்க..

எனக்கென்ன ஆடிட்டர் சார் எப்பவும் போல அமோகமா இருக்கேன்..

உங்க மிஸஸ் என்ன இவ்ளோ சைலண்டா இருக்காங்க..

ரொம்ப பேசமாட்டாங்களோ??என ஓர் மார்க்கமாய் அவளை பார்க்க,

தேவையில்லாம பேசுறதில்ல என சட்டென கூறியவள் கார்த்திக் அவள் கையை பற்றியதை உணர்ந்து போலியாய் ஒரு சிரிப்பை உதட்டில் ஒட்டிக் கொண்டாள்..

சரி அருண் நாங்க கிளம்புறோம் ரொம்ப லேட் ஆய்டுச்சு..

ஓ.கே கார்த்திக் ரெண்டு பேரும் ஒரு நாள் வீட்டுக்கு வாங்க புது ஜோடிக்கு விருந்து போட்டு அசத்திடுவோம்..

அதுவர நீங்க இருந்தா வரோம்..என்றவள் அருணிண் பார்வை கூர்மையடைவதை கண்டு இல்ல நீங்க வெளியூர்க்கு அடிக்கடி போவீங்கநு சிவா சொல்லிருக்கான்

அத சொன்னேன் சரி வரோம் என நமட்டுச் சிரிப்பு சிரித்து காருக்குள் ஏற அருணிண் முகம் சிந்தனையில் ஆழ்ந்தது..

என்ன சஹிம்மா எவ்ளோ கஷ்டப்பட்டு அவன சிக்க வச்சுருக்கோம் ஒரு செகண்ட்ல அவனுக்கு க்ளு குடுத்துருப்ப..

சாரி மாமா என்னால கோபத்தை கன்ட்ரோல் பண்ணவே முடில.. ஆளும் அவனும். விட்டா இப்போவே கொன்னுருப்பேன்..

சஹி..ரிலக்ஸ்டா..

வீட்டிற்கு வந்தவன் யோசனையிலேயே இருக்க வேலையாள் பயந்தவாறே கையில் போனோடு சென்று அவன் அருகில் நின்றான்..

ஐயா..

என்ன முத்து என்ன விஷயம்..

உங்க சிநேகிதர் மெட்ராஸ்ல இருக்காகளே அவுக போன் பண்ணிருக்காக..

என் மொபைல்க்கு பண்ணாம எதுக்கு வீட்டுக்கு பண்ணீருக்கான் என்றவாறே அருண் போனை கையில் வாங்கிக் கொள்ள வேலையாள் உள்ளே ஓடிவிட்டான்..

சொல்லு ரவி ஏன் வீட்டுக்கு கால் பண்ணிருக்க??

உன் மொபைல்க்கு பண்ணிட்டேயிருந்தேன் நீ எடுக்கல அதான் இங்க பண்றேன்..

வேகமாய் சட்டையை தடவியவன்,ஓ கார்லயே விட்டுட்டு வந்துட்டேன்டா சரி சொல்லு என்ன விஷயம்..

அந்த வள்ளி விஷயமா கோர்ட்ல கேஸ் பைல் பண்ணிருக்காங்க கன்பார்ம்ட் நியூஸ்..

வக்கீல் யாரு சிவா வா????

அது யாரு அவன்லா இல்லடா??பப்ளிக் ப்ராசிக்யூட்டர்  அவரு பேரு கூட ஆங்ங் கணபதி..

ரொம்ப நேர்மையான ஆளு..அவரு இது வரை ஆஜரானதுல பாதிக்கு மேல கேஸ் பொதுநல வழக்குதான்..

எதுக்கும் அசராத ஆளூ..என்ன பண்ண போற???

ம்ம் இப்போதான் என்கூட கண்ணாமூச்சிஆட்ற ஆள்மேல சைல்ட்டா டவுட் வந்துருக்கு கன்பார்ம் ஆச்சு அதுக்கப்பறம் இந்த கேஸ் கோர்ட்க்கே வராது..

சரி அப்பப்போ என்ன நடக்குதுநு அப்டேட் குடுத்துட்டே யிரு..

சஹானாவின் பேச்சும் அந்த ஏளன சிரிப்பும் அவன் கண்முன் வந்து கொண்டேயிருந்தது..

முதல் தடவையிலிருந்தே அவளுக்கு அருணை பிடீக்கவில்லை என்பதை அப்பட்டமாய் முகத்தில் காட்டிக் கொண்டுதான் இருந்தாள்..

ஆனால் அதற்கான காரணம் என்னவாய் இருக்கும் என எத்தனை முறை யோசித்தாலும் அவனுக்கு தெரியவில்லை..

இருந்தா வரோம்நு சொன்னாளே அதுக்கு என்ன அர்த்தம் எதனால அப்படி சொன்னா??

ஒரு வேளை அந்த வள்ளியை இவ தான் எங்கேயாவது வச்சுருப்பாளோ??

கல்யாணம் முடிஞ்ச கையோட எல்லோரும் பாரின் ட்ரிப் இல்ல வேற ஸ்டேட் எங்கேயாவைது போவாங்க இதுங்க எதுக்காக இந்த கிராமத்துக்கு வந்துருக்குங்க??சரியில்லையே..

டேய் முத்து..

ஐயா.

வெளில நம்ம பசங்க எவனிருக்கானோ வர சொல்லு..

கூப்பிட்ட வேகத்தில் ஒரு தடியன் உள்ளே ஓடிவந்தான்..ஐயா சொல்லுங்க..

டேய் அந்த வள்ளி இந்த ஊரைவிட்டு போறதுக்கு முன்னாடி யாரைப் போய் பாத்தா என்னனு விசாரிச்சுட்டு வா யாருக்கும் சந்தேகம் வராதபடி விசாரிச்சுட்டு வா புரியுதா..

சரி ஐயா இதோ இப்போவே போறேன்..

அங்கு கார்த்திக் சிந்தனையில் இருந்தான் ஏனோ அவனின் உள்மனது குழப்பத்திலேயே இருந்தது..

அருண் அவர்களை கண்டுபிடித்துவிட்டானோ என்று யோசித்து கொண்டேயிருந்தான்..

மாமா என்னாச்சு ஏன் என்னவோ போலயிருக்க??

ஒண்ணும் இல்ல சஹிம்மா சும்மா யோசிச்சுட்டு இருந்தேன்..

அந்த அருணை பத்தியா???

கார்த்திக் ஆழமாய் ஒரு பார்வை பார்த்தான்..

நா பண்ணது தப்புதான் மாமா..ஆனா பரவால்ல எப்படியிருந்தாலும் என்னைக்கோ ஒருநாள் நடக்கப் போற விஷயம்தான..

சீக்கிரமா நடக்குதுநு நினைச்சுக்கோ..வந்த வேலையை சீக்கிரமா முடிச்சுட்டு ஊருக்கு போலாம் மாமா எனக்கு எல்லாரையும் தேடுது..

வீணா மனச போட்டு குழப்பிக்காத..என்றவள் எழுந்து சென்றுவிட

கார்த்திக் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..

தேவிகா அருணாச்சலத்தின் முடிவை நெருங்கிவிட்டாள் என்று தோன்றியது..

எனவே வரும் நாட்களில் ஏது வேண்டுமானாலும் நடக்கலாம்..

சஹானாவின் மேல் அவன் கவனம் விழாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்தான்..

ஆனால் அருணின் மொத்த குறியும் சஹானாவின் மேல்தான் இருந்தது..

அதற்கேற்றாற் போல வள்ளியைப் பற்றி விசாரிக்கச் சென்றவனும் இறுதியாய் பேசியது மணியிடம் என்று கூற மொத்த சந்தேகமும் அவளை நோக்கியே செல்ல வைத்தது..

அடுத்ததாய் சென்னையில் சிவாவை கவனிக்க ஆள் ஏற்பாடு செய்தான்..

கணபதியோடு அவன் பேசுவது உறுதியானது.. ஆக அனைத்தையும் ஆரம்பித்தவள் சஹானா..

ஆனால் இவை அனைத்திற்கும் காரணம் தெரியவில்லை..

பெரிய பெரிய க்ரிமினல் வேலைகளையெல்லாம் ஒண்ணுமில்லாமல் ஆக்கிய தன்னை ஒரு பெண் விஷயத்தில் சிக்க வைத்து விட்டாளே..

அப்படி என்ன வன்மம் என்று தெரிந்தே ஆக வேண்டும் என முடிவிற்கு வந்தவனாய் சஹானாவிற்கான வலையை விரிக்க சிந்திக்கத் தொடங்கினான்..

மறுநாள் அவரவர் வேலைகள் வழக்கம்போல் நடந்துகொண்டிருக்க பதினோரு மணியளவில் மணிக்கு ஒரு அழைப்பு வந்தது..

பேசி முடித்தவர் கண்ணீரும் கவலையுமாய் கார்த்திக்கிடம் வந்தார்..

தம்பி கௌரி காலேஜ்ல மயக்கம் போட்டு விழுந்துட்டாளாம் இப்போ தான் போன் வந்தது..

என்னாச்சுன்னே தெரிலப்பா இப்படி நடந்ததே இல்ல..நா போய்ட்டு வந்துரேன் உங்ககிட்ட சொல்லிட்டு போலாம்னு தான் வந்தேன்..

அண்ணா கவலபடாதீங்க ஒண்ணுமிருக்காது..நீங்க ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுரீங்க..

சரி வாங்க நானே கூட்டிட்டு போறேன்..கார்ல 20 மினிட்ஸ்ல போய்டலாம் சஹானா கார் சாவி எடுத்துட்டு வா..

நீ பத்திரமா உள்ளே இரு சஹி நாங்க என்னனு பாத்துட்டு வந்துரோம்..

சஹானா மென்சிரிப்போடு அவர்களிடம் ஒண்ணும் இருக்காது கவலபடாம போங்க என்று கூற இருந்த பதட்டத்தையும் மீறி இருவரும் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..

தைரியமா போய்ட்டு வா மாமா..என அவனை அனுப்பிவிட்டு இதழோர சிரிப்பு மாறாமல் ஹாலில் அமர்ந்தாள்..

அங்கு கல்லூரிக்குச் சென்று ஆபீஸ் ரூமில் விசாரிக்க அடுத்த பத்தாவது நிமிடம் கௌரி வந்து நின்றாள்..

அப்பா அண்ணா என்னாச்சு என்ன இப்போ வந்துருக்கீங்க..

கார்த்திக்கிற்கு ஒரு நிமிடம் இதயம் நின்றுவிட்டது.. மணி அண்ணா… என அவர் கையைப் பற்ற

தம்பி தேவிகா!!!!என அவரும் உறைந்து நிற்க இருவருமாய் காரை நோக்கி ஓடினர்..

ச்சச்ச எப்படி அண்ணா மறந்தேன்..நா அங்க இருந்துருக்கனும்ண்ணா..

அவ பேச்சுல வித்யாசம் தெரியுதேநு நினைச்சேன்.

கடவுளே என்ன நடக்கப் போகுதுநு தெரிலயே..

தம்பி பயப்படாதீங்க..என ஆறுதல் கூற நினைத்தாலும் அவரே பயந்துபோய்தான் இருந்தார்..

இருந்த பயத்தில் எப்படி வந்தான் என்பதை கடவுளே அறிவார்..

பயந்ததற்கு ஏற்றாற்போல வீட்டின் கதவு திறந்திருக்க உள்ளே சஹானாவை காணவில்லை..

வீடு முழுவதும் தேடி கார்த்திக் ஓய்ந்துபோய் ஹாலில் அமர்ந்துவிட்டான்..

தம்பி தம்பி தைரியமாயிருங்க ஒண்ணும் நடக்காது நா பக்கத்துல யார்ட்டயாவது விசாரிச்சுட்டு வரேன்.. என மணி வாசலை நோக்கி ஓடினார்…

கார்த்திக்கின் எண்ணமோ வேறாய் இருந்தது..நிச்சயமாய் சஹானாவை கட்டாயப்படுத்தி இங்கிருந்து அழைத்துச் சென்றிருக்க முடியாது..

அக்கம்பக்கத்தில் ஆள்நடமாட்டம் அதிகம்..

ஏமாற்றி அழைத்து செல்வதற்கும் வாய்ப்புகள் குறைவு..

சோ சஹானா அவளாவே தான் போய்ருக்கா அதுவும் தேவிகாவின் உதவியோடு..

அந்த அருண் அவளை எங்கு வர வைத்திருப்பான் என்பது மட்டுமே தற்போது தெரிய வேண்டிய ஒன்று..

யோசிக்கும்போதே மணி ஓடிவந்தார்..

தம்பி அந்த அருணோட ஆட்கள் தான் வந்துருக்காக ஆனா சஹானாம்மா நீங்களும் அங்கதான் வருவீங்க நா முன்னாடி போறேன்னு சொல்லிருக்காங்க..

நினைச்சேன் அண்ணா..எல்லாமே சஹானாவும் தேவிகாவும் சேர்ந்து எடுக்கு றமுடிவுதான் நாம ஒண்ணும் பண்ணிருக்க முடியாதுண்ணா…

நாம வெளியே போறப்போ அவ சிரிச்சதோட அர்த்தம் இதுதான்..

இப்போ அவளை எங்க கூட்டிட்டு போய்ருப்பாங்கநுதான் யோசிச்சுட்டு இருக்கேன்..

எனும்போதே அழைப்பு வர போனை பார்த்தவன் அவசரமாய் அட்டெண்ட் செய்ய மறுபுறம் அருண் பலமாய் சிரித்தான்..

என்ன ஆடிட்டரே பொண்டாட்டிய தேடாம இப்டி வீட்ல உக்காந்துட்டு இருக்க??

ஏன்டா அவதான் ஏதோ போன ஜென்மம் முந்தின ஜென்மம்நு கதை விட்டுட்டு இருக்கானா நீயும் அத கேட்டுட்டு ஏன்டா என்கிட்ட மோதுற???

எவ்ளோ பெரிய சாம்ராஜ்ஜியத்தை கட்டி காத்துட்டு இருக்கேன்..

கேவலம் ஒரு பொண்ணு கேஸ்ல என்ன உள்ள தூக்கி போட பாக்குறியா???

சரியா உனக்கு 15 நிமிஷம் டைம் அதுக்குள்ள என் தோட்டத்து வீட்டுக்கு நீ மட்டும் வர்ற..

எதாவது எடாகூடம் பண்ண நினைச்ச அப்பறம் உன் பொண்டாட்டி உயிருக்கு நா உத்திரவாதமில்ல.. என அழைப்பை துண்டித்துவிட்டான்..

தம்பி வாங்க போலாம்..

வேண்டாம்ண்ணா நா மட்டும் போறேன்..ஒரு மணிநேரத்துக்குள்ள நா உங்கள கான்டாக்ட் பண்ணலனா நீங்க போலீஸ்ட்ட இன்பார்ம் பண்ணிடுங்க..

என வேகமாய் காரைக் கிளபப்பிக் கொண்டு சென்றான்..

தங்கள் தோட்டத்தின் வெளியிலேயே காரை நிறுத்திவிட்டு இறங்கி ஓட்டமும் நடையுமாய் சென்றான்..

அவன் சென்ற வேகத்தில் பம்ப் செட் அருகிலிருந்த ஏதோ நீருக்குள் விழ இருந்த பதட்டத்தில் எதையும் கவனிக்காமல் முன்னேறிச் சென்றான்..

எத்தனை ஆட்கள் ஆயுதம் இருக்கும் எப்படி சமாளிப்பது என மனதில் எண்ணியவாறே அந்த வீட்டின் கதவை தட்ட ஒருவன் கதவை திறந்தான்..

உள்ளே அந்த அருணும் இன்னொருவனும் மட்டுமே இருந்தனர்..

படபடப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சஹானாவைப் பார்க்க அவள் அப்போதும் இதழோரச் சிரிப்போடு கைகள் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருந்தாள்..

அருண் பிரச்சனை உனக்கும் எனக்கும்தான அவளை விட்டுரு..

அது எப்படி முடியும் ஆரம்பமே இவதான..ஆமா தெரியாமதான் கேக்குறேன் அவதான் லூசுதனமா உளறானா நீயும் அவ கைபொம்மையாட்டும் ஆடிட்டு இருக்க..

அவஅவனுக்கு இந்த ஜென்மத்துல நடக்குறதே மறந்துருது இதுல இவ போன ஜென்மம் பத்தி பேசிட்டு இருக்கா..

சரி விடு அது உன் ப்ரச்சனை உன் பொண்டாட்டி ப்ரச்சினை நடுவுல என்ன ஏன்டா இழுக்குறீங்க.??

நா நினைச்சா கார்த்திக் சஹானாங்கிற ரெண்டு பேரை இருந்த இடம் தெரியாம அழிக்க முடியும் பாக்குறியா..

ஏதோ கொஞ்சநாள் பழகித் தொலைச்சுட்டேனேநு பாக்குறேன்..

ஒழுங்கா அந்த கழுத அவ பேரு என்ன ஆங்ங் வள்ளி அவளை கூப்ட்டு கேஸை வாபஸ் வாங்க சொல்ற அது நடந்தா மட்டும்தான் உன் பொண்டாட்டி இந்த இடத்தைவிட்டு வெளியே வருவா அப்பறம் உன் இஷ்டம் என தோளை குலுக்கியவாறு சென்று அங்கிருந்த நாற்காலியால் கால்மேல் கால் போட்டு அமர்ந்தான்..

கார்த்திக் ஏதோ கூற வாயெடுக்க அதற்குள் சஹானா அவனிடம் நீ ஏன் மாமா டென்ஷன் ஆகுற என்ன நடக்க போகுதுனு தெரிஞ்சும் நீ ஏன் கவலபட்ற..

அனைய போற விளக்கு பிரகாசமாதான் எரியும் நீ ரிலாக்ஸ்டா இரு..

கார்த்திக்கிற்கோ எப்படியாவது அவனை உயிரோடு போலீஸில் ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் உழன்று கொண்டேயிருந்தது..

எந்த சூழ்நிலையிலும் பொறுமையிழந்து விட கூடாது என தனக்குத்தானே கூறிக் கொண்டேயிருந்தான்..

சிவாவை இங்கு வரவிடாமல் தடுத்ததற்கு முக்கிய காரணமே அதுதான்..

இப்போது சஹானா பேசுவதை கேட்கும்போது இன்னமும் பதட்டமாய் இருந்தது..

இங்க பாரு அருண் நா உன் நல்லதுக்காக தான் சொல்றேன் புரிஞ்சுக்கோ ஒழுங்கா நீயே போய் போலீஸ்ல சரண்டர் ஆய்டு அதான் உனக்கு நல்லது..

உன் உயிருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாதுநு தான் நா இவ்ளோ தூரம் சொல்றேன்..

அதவிட உன்னை கொன்னுட்டு ஜெயிலுக்கு போய் என் லைப்ப கெடுத்துக்க நா தயாராயில்ல..

கார்த்திக் முடிப்பதற்குள் அருண் பலமாய் சிரிக்க ஆரம்பித்தான்..

நீ ..என்ன..கொல்ல போறியா??நல்ல ஜோக் பட் அத என்ஜாய் பண்ற மூட்ல நாயில்ல ஒழுங்கா நா சொன்னத செய்.

இல்ல இவ நிலைமை என்னாகும்நு எனக்கு தெரியாது என்றவாறு அவள் முடியை கொத்தாய் கையில் பிடிக்க கார்த்திக் அடுத்த நொடி அருணின் சட்டையை பிடித்திருந்தான்..

என்ன நடக்கிறது என்பதை உணரும் முன்பே அருண் பல அடிகளை வாங்கியிருக்க கார்த்திக் தடுக்க வந்த அவன் ஆட்களை பிய்த்தெடுத்துக் கொண்டிருந்தான்..

அதற்குள் கண்கள் தெளிவாக எழுந்து நின்றவன் கட்டியிருந்த சஹானாவின் கையைப் பிடித்து இழுத்தவாறு வாசலை நோக்கிச் சென்றான்..

தப்பு பண்ணிட்ட கார்த்திக் இனி நீயே நினைச்சாலும் உன் பொண்டாட்டிய பாக்க முடியாது..

இந்த அருண் யாருநு அப்போ தெரியும் உனக்கு. என்றவாறே வெளியே செல்ல சஹானா முகத்தில் சிறு கலக்கம்கூட இருக்கவில்லை

புன்னகைமாறாமல் அப்படியே நிர்மலமாய் இருந்த முகத்தை கண்டவனுக்கு முதன்முறையாய் பயம் வந்தது..

இருப்பினும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் காரின் அருகில் செல்ல அதற்குள் கார்த்திக் அவர்களை நெருங்கியிருந்தான்..

மறுபடியும் இருவருக்கும் சண்டை அதிகமாக ஓரளவுக்கு மேல் தாங்கமாட்டாமல் அருண் ஓட ஆரம்பித்திருந்தான்..

எதற்காக அடிக்கிறோம் என்பதே மறந்துபோகும் அளவிற்கு சஹானாவையும் மறந்து வெறிபிடித்தவனாய் அவனை துரத்த ஆரம்பிருந்தான் கார்த்திக்..

வயல்களின் நடுவில் ஓடி தோட்டத்தை கடந்து சஹானாவின் தோட்டப்பகுதிக்கு வந்தவன் அதற்கு மேல் முடியாமல் கால் இடறி கீழேவிழ அங்கிருந்த கல்லில் தலைப்பட்டு மயங்கி சரிந்தான்..

அவன் விழுந்ததை பார்த்தவனுக்கு தானாய் வேகம் குறைய சஹானாவின் நினைவு வந்து திரும்பினான்..

அவள் மெதுவாய் அவனருகில் வந்து மாமா உனக்கு ஒண்ணுமில்லயே எனும்போதே அவன் கண்களுக்கு மேல் லேசாய் உரசி ரத்தம் வெளிவர ஐயோ மாமா..

என தன் துப்பட்டாவால் துடைக்க எரிச்சலின் காரணமாய் முகம் சுளித்தவன் ஒண்ணுமில்ல சஹிம்மா..

நீ கைய காட்டு கட்டை கழட்டிவிடுறேன்..அஎன்று அவள் நலனை உறுதிப்படுத்திவிட்டு ஒரு நிமிஷம் சஹிம்மா ஒன் அவர் மேல ஆச்சு கண்டிப்பா மணி அண்ணா போலீஸ்ல இன்பார்ம் பண்ணிருப்பாரு நா அவனுக்கு என்னாச்சுநு பாக்குறேன் என்றவாறு அவனருகில் சென்றான்..

அவன் மயக்கத்தில் இருப்பதை உறுதிப்படுத்தியவன் அவனை மெதுவாய் இழுத்து பம்ப்செட் அருகில் சாய்ந்தவாறு அமர வைத்து கயிற்றால் அவன் கால்களை கட்டினான்..

அதற்குள் மணி போலீசோடு அங்கு வர போலீஸாரிடம் நடந்ததை விளக்கினான்..

ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல மிஸ்டர் கார்த்திக் ஏற்கனவே இவன்மேல நிறைய கம்ப்ளைண்ட்ஸ் இருக்கு அதிகாரம் இருந்தும் எந்த ஆதாரமும் இல்லாததால இவன எங்களால ஒண்ணும் பண்ணமுடில..

விடுங்க நாங்க பாத்துக்குறோம் என்றார் இன்ஸ்பெக்டர்..

சற்றே நிம்மதியடைந்தவன் தங்கள் பெயர் வெளிவராமல் பார்த்துக் கொள்ளுமாறு அவரிடம் கேட்டுக் கொள்ள அவரும் சம்மதித்தார்..

அவனருகில் சென்றவனுக்கு அவன் காயங்களை பார்த்து தன்னால் தான் இப்படி நடந்தது என்பதை எண்ணி குற்ற உணர்ச்சி எழ அவன் கன்னம்தட்டி எழுப்ப முயற்சி செய்தான்..

அரைகுறை மயக்கத்தில் நாக்கு வறண்டு போயிருக்க தண்ணீ தண்ணீ என அரற்றினான்..

என்ன செய்வதென தெரியாமல் அக்கம் பக்கம் பார்க்க அருகில் ஒரு சிறு தேங்காய்மூடி இருந்தது அவசரமாய் எழுந்து அதை நீரில் கழுவி பம்ப்செட்டிலிருந்து நீர் எடுத்து அவனை குடிக்க வைத்தான்..

அவன் தேவைக்கேற்ப மேலும் இருமுறை கொடுக்க குடித்து முடித்தவனுக்கு உடம்பிற்குள் ஏதோ செய்ய தன் மார்பை அழுந்தபிடித்து நெளியே மறு கையால் கார்த்திக்கின் சட்டையை பிடித்திருந்தான்..

அனைவருக்குமே என்ன நடக்கிறது என புரியாமல் நிற்க அருண் கார்த்திக்கிடம்,

இந்த ஜென்மத்துல நீ ஜெயிச்சுட்ட கார்த்திகேயா ம்கும் தேவி ஜெயிச்சுட்டா..

என்றவனின் கை வழுவிழந்து கீழேயிறங்க கார்த்திக் ஒரு நொடி உயிர் உறைய அவனையே பார்த்திருந்தான்..

சட்டென ஏதோ தோன்ற சஹானாவை பார்க்க அவள் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம் சந்தோஷம்..

அதற்குள் இன்ஸ்பெக்டர் வந்து மூக்கின் அருகே கைவைத்து பார்த்து கார்த்திக்கிடம் இடவலமாய் தலையசைத்தார்..

நீங்க கிளம்புங்க மிஸ்டர் கார்த்திக்.. இதுக்கு மேல நீங்க இங்க இருக்குறது சரி வராது..

லாயர் சிவா ஆல்ரெடி என்கிட்ட பேசினாரு சோ எதாவது பார்மாலிட்டி இருந்தா நா சொல்லி அனுப்புறேன்..

தலைல ஆள்காயமா இருக்கும்நு நினைக்குறேன்..

பிளட் லாஸ் வேற சோ யு டோண்ட் வொரி..மணி நீங்க கூட்டிட்டு போங்க என்றுகூற ஒன்றும் புரியாமல் எழுந்தவனின் கண்கள் ஒரு இடத்தில் குத்தி நின்றது..

பம்ப் செட் நீரின் மேல் மிதந்த பூச்சிமருந்து பெயர்தாங்கிய பிளாஸ்டிக் பாட்டில்..

கார்த்திக்கை கவனித்த மணியும் அதைப்பார்க்க அதிர்ந்துதான் போனார் இருந்தும் முகத்தில் எதையும் காட்டாமல் சஹானாவையும் அவனையும் அழைத்துக் கொண்டு விறுவிறுவென வீட்டிற்கு வந்துவிட்டார்..

கார்த்திக் இன்னமும் அதிர்ச்சியிலேயே இருக்க மணி குடிக்க தண்ணீர் கொடுத்து அவனை சமாதானப்படுத்தினார்..தம்பி..

அண்ணா நீங்களும் அதைப் பாத்தீங்க தான???

நாம எதையும் பாக்கல நீங்க எதையும் பண்ணல அவ்ளோதான் மறந்துடுங்க தம்பி..

சொன்னா கேளுங்க அருண்ங்கிற ஒருத்தன உங்க வாழ்க்கைல இருந்தே தூக்கிப் போட்ருங்க அதுதான் எல்லாருக்கும் நல்லது..

அவர் அவர்போக்கில் பேசிக் கொண்டிருக்க கார்த்திக் இன்னமும் அமைதியாய் அமர்ந்திருந்தான்..

சஹானா மெதுவாய் அவனருகில் வந்து அவன் காலருகில் அமர்ந்தாள்..

மாமா..

அவளை பார்த்தவன் அடுத்த நொடி அவள் கையை இறுகப் பற்றிக் கொண்டான்..தேவி!!!!!

மாமா என் பார்வையையே இவ்ளோ புரிஞ்சு வச்சுருக்கியே அப்பறம் ஏன் மாமா நா செஞ்சத புரிஞ்சுக்க மாட்ற..

அந்த அருணோட முடிவு இதுவாதான் இருக்கனும்..

போலீஸ் கோர்ட் இதெல்லாம் ம்கும் அந்த தண்டனையெல்லாம் அவன் எப்பவோ தாண்டிடான்..

அதனாலதான் நானே அவனை தேடி போனேன்..அவனுக்கு போன் பண்ணி நாதான் எல்லாத்துக்கும் காரணம்னு சொன்னேன்..

நா உன்னைப் பாத்து பேசனும்னு சொன்னேன்..

உங்க ரெண்டு பேரையும் இங்கிருந்து போக வச்சேன்..

அவன் என்ன பண்ணா உனக்கு கோவம் வருமோ அத செய்ய வச்சேன்..

எனக்குத் தெரியும் நீ அவன்மேல பரிதாப படுவநு ஆனா அந்த மருந்து தண்ணில விழுந்தது அந்த தண்ணிய அவனுக்கு குடுத்தது எல்லாமே எனக்காக அந்த சிவன் பண்ணிணது..

இதுலயே தெரிலயா அந்த கடவுளும் நம்ம பக்கம் இருக்காருநு..

நீ எதையும் போட்டு குழப்பிக்காத இனி உன் சஹானா மட்டும்தான் நா வரமாட்டேன்..

என் ஆசையை அந்த ஈசன் நிறைவேத்திட்டான்..இனி எனக்கு வேலையில்ல சஹானாவா என்னோட நூறு வருஷம் நீ சந்தோஷமா வாழணும்..

அது கண்டிப்பா நடக்கும்..நல்லாயிருக்கனும் மாமா நீ.. என்றவள் எழுந்து அவன் நெற்றியில் அழுத்தமாய் இதழ்பதித்து நகர்ந்தாள்.

சோபாவின் அருகில் நின்றவள் ஆப்படியே மயங்கிச் சரிய கார்த்திக் அவசாரமாய் அவளை பற்றி மடியில் கிடத்தினான்..

அடுத்த சில நிமிடங்களில் கண்விழித்தவள், கார்த்திக்..

சஹிம்மா ஆர் யூ ஓ.கே??

எதுவும் வேணுமாடா??

மாமா தேவிகா போய்ட்டாளா?இனி வரமாட்டாளா??இப்போ அவளுக்கு சந்தோஷமா??

சஹி எல்லாம் முடிஞ்சுதுடா..தேவிகா சந்தோஷமா கிளம்பிட்டாஇனி அவ உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டா…

யு ஆர் பர்வெக்ட்லி பேக் டு யுவர் லைப் சஹி.. ரிலாக்ஸ்.. போ நீ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு என அவளைஅறைக்குள் அழைத்துச் சென்று படுக்க வைத்துவிட்டு வர சிவா அவனை அழைத்தான்..

கார்த்திக் என்னாச்சு ரொம்ப நேரமா கால் பண்றேன் எடுக்கவேயில்ல..

மணி அண்ணா எல்லாத்தையும் சொன்னாரு.. இன்ஸ்பெக்டர்ட்ட பேசிட்டேன்.. ஒண்ணும் ப்ரச்சனையில்லையே??

சிவா ஒண்ணும் பிரச்சனையில்ல..நா வீட்லதான் இருக்கேன்..

நாங்க சேஃவ் தான்..அந்த அருண் இறந்துட்டான்..என நடந்ததை கூற,

கார்த்திக் சத்தியமா புல்லரிக்குது எனக்கு..மை காட் நம்பவா வேண்டாமாநு கூட தெரில..

பட் எனிவே எல்லா ப்ராப்ளம்ஸும் முடிஞ்சுது அதுவர சந்தோஷம்..

நா அங்க வரவா கார்த்திக்??ஹெல்ப் எதுவும் தேவப்படுதா??

அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் சிவா..மணி அண்ணா தான் இருக்காரே..

நீங்க ஷரவ் ஷரவந்திகிட்டேயும் சொல்லுங்க..நா அவங்ககிட்ட அப்பற பேசுறேன்..

எனக்கு ஒரு விஷயம்தான் உறுத்திட்டே இருக்கு..

போஸ்மார்ட்டம் பண்ணா அவன் பாய்ஸன் கன்ஸ்யூம் பண்ணிருக்கான்னு தெரிஞ்சுடும் அது அக்ஸிடெண்டா நடந்ததுதான் இருந்தாலும் கொலைக்கு சமம்தான சிவா..

கார்த்திக் ப்ளீஸ் அப்படி ஏன் யோசிக்குறீங்க நீங்க காப்பாத்த தான நினைச்சீங்க அங்கிருந்த போலீஸூம் நடந்தயெல்லாம் பாத்துட்டு தான இருந்தாங்க..

அப்பறம் எப்படி இது கொலையாகும்.. ஆல்ரெடி நா இன்ஸ்பெக்டர்ட்ட பேசிட்டேன்..

அவரு ஏற்கனவே அவன்மேல செம கடுப்புல தான் இருந்தாரு..

இதுல பொண்ணு மேல வேற கைய வச்சுருக்கான் எப்படியிருந்தாலும் அவரு நமக்குதான் சப்போர்ட் பண்ணுவாரு..

நீங்க கவலபடாம இருங்க ..சஹானாவ பாத்துக்கோங்க கார்த்திக்..

கொஞ்சநாள் ரிலாக்ஸ்டா இருந்துட்டு வாங்க..டேக் கேர்..பை..

மாலைமங்கும் வேளையில் வீட்டின் மொட்டைமாடியில் நின்று எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக்..

சஹானா அவனருகில் வந்து தோள்தொட நடப்புலகிற்கு வந்தவன் ஆதரவாய் அவள் தோள்பற்றி நின்றான்..

கொஞ்சாமாவது தூங்கினியா சஹி??ரொம்ப டயர்டா தெரியுரியேடா?

இல்ல மாமா அதெல்லாம் ஒண்ணுமில்ல நல்லாதான் இருக்கேன் நீ தான் எதையோ மனசுல போட்டு குழப்பிக்குறமாறி இருக்கு.. நார்மலா இல்லையே நீ..

உண்மைதான் சஹிம்மா எவ்ளோ தடுத்தாலும் மனசு அதைப்பத்தியேதான் யோசிக்குது..

உன்மேல அவன் கைவச்சப்போ என் பொறுமையெல்லாம் எங்க போச்சுன்னே தெரில..

அவன ஏன் அப்படி அடிச்சேன்னும் தெரில.. அப்போ நா கொஞ்சம் நிதானமா இருந்திருந்தா இவ்ளோ நடந்துருக்காது..

மாமா அவன நீ அடிச்சதாவா நினைச்சுட்டு இருக்க??அவ்ளோ கோபம் உனக்கு வரவே வராது எந்த சூழ்நிலைலயும் ஆனா கார்த்திகேயனுக்கு வரும்..

சஹி!!!

ஆமா மாமா உன் முகத்துல இருந்த கோபம் வெறி அதெல்லாம் நீயில்லநு உறுதியா காட்டுச்சு..

உயிர் போறப்போ அவன் சொன்னத மறந்துட்டியா உன்ன அவன் என்னனு கூப்டான்னு யோசிச்சு பாரு…..

நிச்சயமா அவன் கீழ விழுந்தத பாக்குற வர நீ நீயா இல்ல மாமா..

எனக்கு நல்லாவே வித்யாசம் தெரிஞ்சுது.. அதனால நீ எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம இரு..

சஹிம்மா ரொம்ப ஆச்சரியமா இருக்குடா கனவுல கூட நினைச்சு பாக்க முடியாத விஷயம் இது..

என்னவோ யாருக்கும் எந்தா பிரச்சனையும் இல்லாம எல்லாம் முடிஞ்சுதே அதுவரை நிம்மதியா இருக்கு..

காயத்ரிய வர சொல்லி சின்னதா செக்அப் பண்ணிக்கலாம்டா..

டூ டேஸ்ல இங்க போலீஸ் வெரிபிகேஷன்லா முடிஞ்சுரும் அதுக்கப்பறம் நாம ஊருக்கு கிளம்பலாம்..

வேற எங்கேயாவதுகூட போலாம் ஆனா கொஞ்ச நாளுக்கு இங்க வேணாம்டா..சாரி தப்பா எடுத்துக்காத..

மாமா இதுல தப்பா எடுத்துக்க ஒண்ணுமில்ல..நா தான் சொன்னேனே எனக்கே எல்லாரையும் பாக்கனும் போல இருக்கு எப்போ வேணா கிளம்பிடலாம் நீ மனச போட்டுகுழப்பிக்காம வா வந்து எதாவது சாப்டு என தன்னவனை பரிவாய் கீழே அழைத்துச் சென்றாள்..

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

4 comments

Kavi Natarajan October 28, 2026 - 7:38 am

💞💞💞💞💞

suganyavel October 28, 2026 - 1:22 pm

Super💕both are excellent

Padmasubramanian October 28, 2026 - 4:25 pm

மூணு ஆவியும் கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க.. 🤭🤭🤭🤭

srichitra October 29, 2026 - 3:52 pm

Very nice

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode