26
கல்யாண கலை அகலாமல் வீட்டின் சாப்பாட்டு மேஜை பேச்சும் சிரிப்புமாய் களைகட்டியிருக்க கீதா ஒவ்வொருவருக்காய் பரிமாறிக் கொண்டிருந்தார்..
கார்த்திக் அவ்வப்போது சஹானாவிற்கு பிடித்தவற்றை இயல்பாய் அவள் இலையில் வைக்க இளவட்டம் வழக்கம்போல் தங்கள் கேலிப் பேச்சை ஆரம்பிக்க சஹானாவிற்கோ முகம் சிவக்காமல் இருக்க வைப்பது பெரும்பாடாய் இருந்தது கார்த்திக்கோ எதற்கும் அசைவதாய் தெரியவில்லை..
சிறுபுன்னகையோடு தன் வேலையை தொடர்ந்து கொண்டுதான் இருந்தான்..
கார்த்திக் நீங்க எப்போ ஊருக்கு கிளம்புறீங்க??-மோகன்..
நாளைக்கு நைட்ப்பா..கார்தான சோ ஒரு 8 மணிக்கு கிளம்பினா போதும்..
ஒரு 15 டேஸ் லீவ் போட்ருக்கேன்ப்பா.. அதுக்கப்பறம் எக்ஸ்டெண்ட் பண்ணவா வேண்டாமாநு பாக்கனும்..
ம்ம் கரெக்ட் தான்..இன்னும் ஒரு வாரம் கூட எடுத்துக்கோ எப்போ பாரு வேல வேலநு ஓடிட்டேயிருப்ப கொஞ்சமாவது ரிலாக்ஸா இருந்துட்டு வாங்க..
சஹானா ட்ரெஸ்லா பேக் பண்ணிட்டியாம்மா??
இல்ல அங்கிள் அம்மா வீட்டுக்கு போய்ட்டு வந்துட்டு பண்ணலாம்நு இருக்கேன்..
இப்படியாய் உணவை முடித்து இருவரும் சேகர் வீட்டுக்கு கிளம்பிச் சென்றனர்..
சிவா குடும்பமும் வந்திருக்க கவனிப்பிற்கு குறைவில்லாமல் ஏதோ பத்து வருடங்கள் கழித்து மகளும் மருமகனும் வந்ததைபோல் கவனித்தனர்..
சற்று நேரத்தில் சஹானா பெண்களோடு சமையலறையில் புகுந்து கொள்ள கார்த்திக் சிவா மற்றும் பெரியவர்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்..
கௌரியும் கிட்சனில் இருக்க சரியாய் மணி உள்ளே நுழைந்த நேரம் சஹானா அவளிடம்,கௌரி நேத்து நா குடுத்த கிப்ட பத்திரமா வச்சுகிட்டல நா சொன்னமாறி இப்போ பிரிக்ககூடாது புரியுதா??என கேட்க..
என்ன கிப்ட் சஹானாம்மா???-மணி
அது சஸ்பென்ஸ் அண்ணா அவ பர்த்டே வருதுல அதுக்கு எங்களோட கிப்ட் ஷரவந்தி அங்க இருக்க மாட்டால அதான் நேத்தே குடுத்துட்டோம்..
விளையாட்டு புள்ளைங்க என்றவாறு அவர் நகர சஹானா கௌரியிடம் கண்சிமிட்டி சிரிக்க கௌரி வெட்கத்தோடு தலை குனிந்து கொண்டாள்..
போதும் போதுமெனும் அளவிற்கு தடபுடலாய் விருந்து உணவுவகைகள் இருக்க சாப்பிட்டு முடிப்பதற்குள் கார்த்திக் ஒருவழி ஆகிவிட்டான்..
அதன்பின் அனைவருமே ஓய்வெடுக்கச் செல்ல சஹானா கார்த்திக்கை தனதறைக்கு அழைத்துச் சென்றாள்..
அய்யோ சஹி முடில இந்த ரேஞ்ச்ல சாப்டா பேமிலி பேக் பார்ம் ஆய்டும் ஷப்பா முடில என கட்டிலில் அமர சஹானா அவனருகில் அமர்ந்து தோள் சாய்ந்து கொண்டாள்..
சட்டென அவள் அப்படி செய்ததும் பதறியவன்..
சஹி என்னாச்சுடா டயர்டா இருக்கா??
அதெல்லாம் இல்ல மாமா..ரொம்ப ஹேப்பியா இருக்கு..
எத்தனை நாள் இந்த ரூம்ல தனியா உக்காந்து உன்னை நினைச்சுட்டு இருந்துருப்பேன்..
கடைசிவர உனக்கு என்ன பிடிக்காமயே போய்டுமோநு கூட பயந்துருக்கேன்.. பட் இப்போ ஐ அம் சோ ஹேப்பி மாமா..
ஆதரவாய் தோள் பற்றியிருந்தவன் உச்சந்தலையில் இதழ்பதிக்க நிமிரிந்து அவனைப் பார்த்தாள்..
சஹி நா ஒண்ணு சொல்லட்டுமா???
என்ன மாமா சொல்லு..
இரண்டு நாளா செம அழகாயிருக்க தெரியுமா??
ஓ அப்போ இவ்ளோ நாள் அப்படியில்லையா என சண்டைகோழி மோடுக்கு மாற,அட அதில்ல சஹிம்மா..
இந்த ரெண்டு நாள்னு ஏன் பர்டிகுலரா சொல்றேன்னா இந்த கல்யாண களைனு சொல்லுவாங்களே அது அவ்ளோயிருக்கு உன் முகத்துல..
அப்படியா??
ஆமா சஹி நானும் கவனிக்குறேன் நேத்தும் சரி இன்னைக்கும் சரி மேக்கப்பே இல்லாம தான இருக்க ஆனாலும் எப்பவும் இருக்குறதவிட செம அழகாயிருக்க அதுக்கு காரணம் இந்த வகிடுல இருக்குற குங்குமம்,
இந்த கண்ல இருக்குற சந்தோஷம்,அப்பப்போ சிவந்துட்டேயிருக்குற இந்த கன்னம்,கழுத்தில இருக்குற இந்த மஞ்சள் சரடு,என ஒவ்வொன்றாய் கூறியபடி விரல்களால் அத்தனையையும் வருட சட்டென எழுந்தவளின் கையை விடாமல் பிடித்திழுக்க அவன் பிடித்தவிதமே பிடிவாதத்தை உணர்த்த அவனுக்கு முதுகுகாட்டி படுத்துக் கொண்டாள்..
தன்னவளை முழுவதுமாய் ஆக்கிரமித்தவன் அவள் உறங்கும்வரை அவளை விட்டு நகரவில்லை..
அதன்பின்னும் தன் மார்பில் உறங்குபவளை வருடியவாறே சிந்தனையில் ஆழ்ந்தான்..
அவள் பேச ஆரம்பித்தபோதே மனதளவில் மிகுந்த வருத்தத்தை உணர்ந்து பேசத் தொடங்கியதாய் தோன்றியது..
அந்த பேச்சை தொடர்ந்தால் அது எங்கு வேண்டுமானாலும் சென்று முடியலாம்..
குறைந்தபட்சம் அம்பாசமுத்திரத்தை அடையும் வரையாவது அவளை மனதளவில் வருத்தபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தான்..
இந்த பேச்சிற்கு வேறு எப்படியும் முற்றுபுள்ளி வைக்க முடியும் என்று தோன்றாமல் போக அவனின் அருகாமையில் நிச்சயமாய் அவளுக்கு அனைத்தும் மறந்துபோகும் என்பதை காலையிலேயே உணர்ந்து கொண்டான்..
அவனின் தீண்டலும் ஸ்பரிசத்திலும் இருந்து வெளிவர அவளுக்கு பல நிமிடங்கள் தேவைப்பட்டது..
அதன்படியே பேச்சை மாற்ற தற்போது உறங்கியும் போனாள்..
அப்படி இப்படியாய் இரு தினங்களை ஓட்டிவிட்டால் அங்கு சென்றவுடன் மற்றவற்றை பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்தான்..
அவள் கண்விழித்தபோது கார்த்திக் அங்கு இல்லை..
உதட்டோர புன்னகையோடே தன்னை சரிப்படுத்தியள் எழுந்து அமர துளசி கையில் காபியோடு உள்ளே நுழைந்தார்..
ஏண்டி மாப்பிள்ளை அங்க வந்து பேசிட்டு இருக்காரு நீ என்னனா இப்படி தூங்கிட்டு இருக்க??
இன்னும் நீ குழந்தையில்லடா சஹானா.. அங்க போய் இப்படிலா பண்ணாத என்றவாறு காபியை கொடுத்தார்..
ம்மா காலைல சீக்கிரமே எழுந்துட்டேன் அதான் தூக்கம் வந்துருச்சு டெய்லிலா இப்படி பண்ணமாட்டேன் கவலபடாதம்மா..
அதுமட்டுமில்ல அப்படியே தூங்கினாலும் உன் பொண்ண யாரும் எதுவும் சொல்லமாட்டாங்க போதுமா??
ம்ம் போய் ஒரு நாள் தான் ஆகுது அதுகுள்ள புகுந்தவீட்டுக்கு சப்போர்ட்டா.. என கிண்டலாய் கேட்க..
உண்மைதான்ம்மா.. ஸ்வீட்டி என்னை ஷரவந்தி மாதிரிதான் பாத்துக்குறாங்க..
அங்கிள் ப்ரெண்ட்லியா பேசுறாங்க.. ஷரவ் ஷரவன் அண்ணி அண்ணிணு எவ்ளோ பாசமாமா இருக்காங்க தெரியுமா..
எல்லாத்துக்கும்மேல என் கார்த்திக் இதுக்குமேல என்னம்மா வேணும் ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்கேன்..
இப்போ கூட மாமா தான நா எழுந்துருப்பேன்னு காபி கொண்டுவர சொன்னான் எனக்கு தெரியும்.. என கண்சிமிட்ட,
அடி கழுத என்ன இது மாப்பிள்ளைய நீ வாநு மரியாதயில்லாம பேசிகிட்டு..
ஆனாலும் எல்லார பத்தியும் நீ சொல்றத கேக்கும்போது பெத்த மனசு குளிர்ந்துருச்சு..
நீ தனியா வளர்ந்தவ ஜாய்ன் பேமிலில சமாளிக்கனுமேநு பயம் இருந்தது இப்போ நிம்மதியா இருக்கு சஹானா..
மூத்த மருமகளா நீதான் பொறுப்பா எல்லாரையும் பாத்துக்கனும் புரியுதாஎன மகளோடு கிடைத்த தனிமையில் அறிவுரைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தார்..
அங்கு கார்த்திக் சிவாவிடம் பேசிக் கொண்டிருந்தான்.சிவா அந்த அருணாச்சலத்தோட ஆடிட்டர் டீடெய்ல்ஸ்லா வேணுமே..
அண்ட் அவன்மேல இருக்குற கேஸ் டீடெய்ல்ஸ்லா கிடைக்குமா??
கார்த்திக் என்ன பண்ணலாம்நு இருக்கீங்க??
தெரில சிவா பட் இந்த டீடெய்லா கிடைச்சா எதாவது பண்ணமுடியும்நு தோணுது.. கண்டிப்பா பெரிய தண்டனை குடுக்கனும் சிவா..
பட் அது மட்டும் தேவிகாக்கு போதும்நு நினைக்குறீங்களா??
சிவா????
தேவிகாவோட உயிருக்கு இணையான தண்டனை என்னவா இருக்க முடியும்???
நோ வே சிவா..யார் உயிரையும் எடுக்குற உரிமை நமக்கு இல்ல..
அதுவும்போக நா கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போறதுக்கா தேவிகா ஆசபடுவா??
கண்டிப்பா இல்ல கார்த்திக் நா சொல்றது கண்டிப்பா நீங்க ஜெயிலுக்குலா போக மாட்டீங்க ஆனா அவன் உயிர் உங்களாலதான் போகும்..
அவனின் தீர்க்கமான முகத்தை கண்டவன்,சரி விடுங்க கார்த்திக் எல்லாம் நல்லபடியா நடக்கும்..
நா உங்களுக்கு டீடெய்ல்ஸ்லா அனுப்புறேன்..சரியாய் சஹானா வர அத்தோடு அந்த பேச்சை முடித்துக் கொண்டு பொதுவான உரையாடலுக்கு பின் கார்த்திக் வீட்டிற்கு கிளம்பினர்..
அடுத்த 24 மணி நேரமும் பேக்கிங்,ஷாப்பிங்,தீண்டல் சீண்டலோடு கழிய இரவு 8 மணிக்கு இருவரும் அம்பாசமுத்திரத்திற்கான தங்களின் பயணத்தை தொடங்கினர்..
திருமணத்திற்கு பிறகான முதல் தனிமை தன்னவனோடு மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்க ஒவ்வொரு நொடியும் தன் பயணத்தை ரசித்தாள்..
மாமா..
சொல்லு சஹிம்மா எதாவது வேணுமா??என்றபடி சாலையிலிருந்து விழியகற்றாமல் அவன் கேட்க..
மாமா என இன்னுமாய் அழுத்தி கூப்பிட என்னவென அவளை ஏறிட்டான்..
லவ் யூ சோ மச் கார்த்திக்..என இதழ்குவித்து கூற,ஒன்றும் கூறாமல் சாலையில் ஓரமாய் காரை நிறுத்தியவன்,
என்னவோ சொன்னியே சஹி எனக்கு ஒழுங்கா கேக்கல இப்போ சொல்லு என அவள்புறம் திரும்பி அமர்ந்தான்..
இதை எதிர்பாராதவளோ முகம் சிவக்க தலைகுனிந்து கொண்டாள்..
இப்போ நீ சொல்லாம நா காரை கிளப்பறதா இல்ல சீக்கிரம் சீக்கிரம்..
சொல்ல முடியாது போடா என வெளியே திரும்பிக் கொள்ள,அப்போ நாம இங்கேயே இருக்க வேண்டியதுதான்..
எனக்கு வேற இருட்டுனா பயம் என்ன பண்றது சஹி பேபி அடம்பிடிக்குறா ம்ம் என பின்புறம் தலைசாய்த்து அமர்ந்து கொண்டான்..
இருட்டு என்றதில் நிலைமை உணர்ந்து சுற்றும் முற்றும் பார்க்க ஹைவே தாண்டிய சாலையில் செல்லும் வாகனங்களை தவிர வெளிச்சமில்லாமல் இருக்க..
மாமா ப்ளீஸ் போலாம்..
முடியவே முடியாது நீ சொல்லு..
லவ் யூ கார்த்திக் ப்ளீஸ் காரை எடு..
இல்லயே அதுக்கப்பறம் ஏதோ என்று அவள்புறம் கன்னத்தை காட்ட..
இவ்ளோ கறாரான ஆடிட்டரா இருக்ககூடாது ரொம்ப மோசம் என முனகியவாறே அவன் கன்னத்தில் இதழ்பதித்தாள்..
லவ் யூ டூ சஹிம்மா என்றவன் நெற்றியில் இதழ்பதித்து விடுவித்தான்..
அத்தனை இருட்டிலும் தன்னவளின் வெட்கச் சிவப்பை ரசித்தவன் காரை கிளப்பினான்..
அதிகாலை 5:30 மணிக்கு அம்பாசமுத்திரத்தினுள் நுழைய சஹானா நல்ல தூக்கத்தில் இருந்தாள்..
வெளியிலிருந்த குளிர் அவனின் அடிவயிற்றை தொடுவதாய் தோன்றியது..
ஆள்நடமாட்டம் கம்மியாய் இருக்க வழியில் தெரிந்த கோவிலின்முன் காரை நிறுத்தி சில நிமிடங்கள் உள்ளிருந்த அம்மனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ப்ரச்சனை எப்படி முடிவிற்கு வரும் இவன் என்ன செய்ய போகிறான் எதுவுமே தெரியவில்லை..
அனைத்தும் உன் பொறுப்பு என்ற பார்வையை பார்த்துவிட்டு காரை கிளப்பினான்..
மணி இவர்களுக்காக தயாராய் காத்திருக்க கௌரியும் அவருமாய் பெட்டிகளை வாங்கிக் கொள்ள சஹானாவோடு உள்ளே வந்தவனை கௌரி வாசலிலேயே நிறுத்தினாள்..
ஒரு நிமிஷம் அண்ணா ஆரத்தி எடுத்துதான் உள்ளே போகணும்..
அட போனவாரம் தானடா வந்துட்டு போனோம் அதுகுள்ள என்ன இதெல்லாம்???
அண்ணா கல்யாணம் ஆகி முதல்தடவை வரும்போது ஆரத்தி இல்லாமயா ம்ம் இப்போ போங்க உள்ள..
சிரித்தவாறே இருவரும் உள்ளே நுழைய அறைக்குள் சென்று கட்டிலில் விழுந்தான்..
சஹிம்மா செம தூக்கம் வருது ஒரு ஒன் அவர்டா தூங்கி எழுந்துட்டு நாம ஹனிமூன் ஆரம்பிக்குறோம் ஓ.கே???
அடச்சே ஏன் மாமா நீ வேற பர்ஸ்ட் நல்லா ரெஸ்ட் எடு..நா போய் காபி எடுத்துட்டு வரேன் சாப்ட்டு அப்பறமா தூங்கு..
கையில் இரு காபி டாம்ளரோடு உள்ளே வந்தவள் அவனுக்கும் கொடுத்துவீட்டு தானும் பருகினாள்..
நீ தூங்கு மாமா நா கௌரி கூட பேசிட்டு வரேன் என வெளியே வர கௌரி டைனிங் ஹாலில் உணவை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்..
என்ன அக்கா தூங்கலயா??டயர்டா இருக்கும்ல??
இல்ல கௌரி நா நல்ல தூங்கிட்டுதான் வந்தேன் மாமா தான் தூங்கவேயில்ல.. சரி என்ன சொல்றாரு உங்க அவரு???
சட்டென அக்கம்பக்கம் பார்த்தவள் மணி இல்லையென்பதை உறுதிபடுத்திக் கொண்டு..
என்னக்கா நீங்க அப்பா கேட்டுருந்தா அவ்ளோதான்..நா அவங்ககூட பேசுறதெல்லாம் இல்லக்கா..
என்கிட்ட போனும் இல்ல அவங்க நம்பரும் இல்ல என மெதுவாய் கூற..
சுத்தம் என் கொழுந்தனார் பாடு திண்டாட்டம் தான் என்ன கௌரி நீ இதெல்லாம் அநியாயம் சரி விடு ஹே மறந்தே போய்ட்டேன் வந்தவுடனே அம்மா உன்கிட்ட போன் பண்ணி குடுக்க சொன்னாங்க இந்தா பேசு நா இதோ வந்துட்றேன் என்று கிச்சனுக்குள் நுழைந்தாள்..
ஹலோ அம்மா சொல்லுங்க அக்கா நல்லபடியா வந்துட்டாங்க..பேசனும்நு சொன்னீங்களாமே??
அம்பாசமுத்திர அழகியே கொஞ்சம் இந்த பக்கம் இருக்குறவனையும் பேச விடு..இவ்ளோ பேசுவியா நீ???
அய்யோ நீங்களா???அக்கா நம்பர் மாத்தி போட்டாங்க போல இருங்க குடுக்குறேன்..
ஏய் அதெல்லாம் கரெக்ட்டா தான் போட்ருக்காங்க..நீ கொஞ்சம் அமைதியா நா பேசுறத மட்டும் கேளு..
உனக்கு குடுத்த கிப்ட் பத்திரமா வச்சுருக்க தான??? நைட் கரெக்ட்டா 11:45 க்கு அத பிரிக்குற அதுக்கப்பறம் நா உன்கூட பேசுறேன் பை..
லவ் யூ இப்போ உங்கப்பா வர்றதுக்குள்ள போனை வச்சுடு பை பர்த்டே பேபி..
போனை வைத்தவளுக்கு இன்னமும் படபடப்பாய் இருந்தது..
நைட் பேசுறேன்னு சொன்னாரே ஐயோ கடவுளே அவங்களே புதுசா கல்யாணம் ஆனவங்க இவரு எனடானா நினைச்ச நேரம் எதையாவது பண்ணி வைக்குறாரு..
என்ன நினைப்பாங்க என்னை பத்தி.. என மனதிற்குள் தவித்து கொண்டிருக்கும்போதே சஹானா வந்து அவள் தோள் தொட பதறிப்போய் திரும்பியவள் அவளை கண்டு நிம்மதியானாள்..
ம்ம் இருதாலும் ஒரு வீட்டோட பெரீய மருமகள இப்படி கொரியர் சர்வீஸ் பண்ண வைகுறது கொஞ்சம் கூட நல்லாயில்ல என போலியாய் வருத்தப்பட
சாரிக்கா அவரு புரியாம மன்னிச்சுடுங்க..
ஹே கௌரி இப்போ எதுக்கு சாரிலா சொல்ற ஏதோ என்னால முடிஞ்சது நா சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்..
சரி நீ போய் காலேஜ்க்கு கிளம்பு.. நா மாமா எழுந்தப்பறம் சாப்டுக்குறேன்..
சிறிதுநேரம் அப்படி இப்படியாய் பொழுதை கழித்தவளுக்கு போரடித்து போக கார்த்திக்கை தேடிச் சென்றாள்.
அவளுக்கு முதுகுகாட்டி படுத்திருந்தவனின் அருகில் சென்று அமர்ந்தவள் இரண்டு நிமித்திற்குமேல் பொறுக்கமாட்டாமல் மாமா எழுந்துரு எனக்கு செம போர் அடிக்குது..
லேசாய் விழித்தவன் அவள்புறம் திரும்பி படுத்து தன்னவமேல் கை போட்டுகொள்ள,
அய்யே டர்டி பாய் நா குளிச்சாச்சு போய் குளிச்சுட்டு வா போ சீக்கிரம் நாம எங்கேயாவது போலாம் ப்ளீஸ் ப்ளீஸ் மாமா..
அடிப்பாவி நைட்புல்லா நல்ல தூங்கிட்டு இப்போ நா தூங்கினா உனக்கு போரடிக்குதா??.
ஹே நானும் கொஞ்சநேரம் தான் தூங்கினேன் பொய் சொல்லாத மாமா..
சரி சரி இந்த டோன்ல பேசினா அப்பறம் வெளில போற மூட் போய்டும்..எப்படி வசதி???
அடச்சே எப்போ பாத்தாலும் இப்படியே பேசிட்டு இரு கார்த்திக் நீ ரொம்ப ரொம்ப பேட் பாய் ஆய்ட சீக்கிரம் ரெடி ஆய்ட்டு வா சாப்டலாம் நா ஹால்ல இருக்கேன்.
அந்தபயம் இருக்கனும் பேபி..10 மினிட்ஸ்ல வந்துரேன்..
இருவருமாய் காலை உணவை முடித்துவிட்டு கிளம்பத் தயாராக மணி உள்ளே வந்தார்..
கண்ணுகளா மத்தியானத்துக்கு என்ன சமைக்கட்டும்???
அண்ணா நம்ம ஊரு பேமஸ் சொதி குழம்பு பண்றீங்களா??மாமா அத சாப்ட்டுருக்க மாட்டான்..
என்ன சொதியா???
ஆமா தம்பி இந்தப்பக்கம் எல்லாம் கல்யாணம் முடிஞ்சு மறுவீட்டுக்கு அததான் பண்ணுவாங்க..
தேங்காபால் எடுத்து காய்கறிலாம் போட்டு தொடுக்க இஞ்சிபச்சடியும் உருளைகிழங்கு வறுவலும் வச்சு சாப்டா மதிய நேரத்துல ஒரு தூக்கம் வரும் பாருங்க..
ஐயோ அண்ணா நீங்க சொல்றதுலயே நாக்கு ஊறுது..
நாங்க ரெண்டு பேரும் ஆத்துப்பக்கமா போய்ட்டு வரோம்.. வந்து ஒரு பிடி பிடிக்குறோம்..
தம்பி ஆத்துக்கா..என பதட்டமாய் சஹானாவை பார்க்க அவள் முகம் சற்று வாடிப்போக
அண்ணா அன்னைக்கு ஏதோ தண்ணில ரொம்ப நாளுக்கப்பறம் ஆட்டம்போட்டதுல மயக்கம் வந்துருச்சு அதுக்காக சஹானா எல்லா தடவையும் விழுவாநு நினைச்சுட்டீங்களா என கார்த்திக் கிண்டலாய் கேட்க..காரமாய் அவனை பார்த்தவள்
மணி அண்ணா மானம் போகுது என்னை நீங்களே இப்படி டேமேஜ் பண்றீங்களே..
சரி சரி தெரியாம சொல்லிட்டேன் சஹானாம்மா தாராளமா போய்ட்டு வாங்க.. என்றவர் கார்த்திக் சமாதானமாய் பார்த்துச் சென்றார்..
இருவருமாய் அந்த வயல்வெளிகளின் நடுவிலிருந்த பாதையில் நடக்க ஆரம்பிக்க சஹானா பெற்றோர் கைப்பற்றும் குழந்தைபோல் கார்த்திக்கின் கைப்பற்றி கதைபேசியபடி நடந்து கொண்டிருந்தாள்…
என்ன சஹி சைலண்ட்டா வர்ற??
ஒண்ணுமில்ல மாமா சும்மா அப்படியே யோசிச்சுட்டு வரேன்…
எதபத்தி டா??
இல்ல காலம் எவ்ளோ வேகமா நகருது பாரேன்.. 5-10 வயசுலயும் இந்த இடத்துல நடந்துருக்கேன் போன வாரமும் நடந்தேன்..
இப்பவும் வரேன் இருந்தாலும் எல்லா நேரமும் ஒரே மாதிரி இல்ல பாத்தியா நாளைக்கே நம்ம பசங்களும் வருவாங்க இப்படியே ஜென்ரேஷன்ஸ் போய்ட்டே இருக்கும் இவ்ளோ தான் லைப் இல்ல மாமா…
ஏன் சஹி என்னென்னவோ பேசுற??
சும்மா தோணிச்சு மாமா வேற ஒண்ணுமில்ல..ஆமா நா கேக்கனும்நு நினைச்சேன் மணி அண்ணா மாதிரியே நீயும் பயந்ததான???
ஹே ச்சச்ச அப்படிலா இல்ல சஹி அன்னைக்கு ஏதோ திடீர்நு அப்படி ஆச்சு அதுக்காக ஒவ்வொரு தடவையும் ஆகுமா என்ன??
அவனைப் பார்த்து சிரித்தவள் ஒன்றும்கூறாமல் நடக்க ஆரம்பித்தாள்..
குளிர்ந்த நீர் நம் காலை வருடும் சுகமே அலாதிதான்..
நீரின் சலசலப்பும் காற்றின் பபரப்பும் மனதை ஏதோ செய்ய கார்த்திக்கை நெருங்கி அமர்ந்து கொண்டாள்..
அந்த மௌனம் இருவருக்குமே ஒருவித ரம்யத்தை கொடுக்க இருவரின் கைகளும் கதைப்பேசியபடி இருக்க பாலத்தின் மேல் சென்ற ரயிலின் சத்தத்தில் இருவருமே நடப்புலகிற்கு வந்தனர்..
கார்த்திக் பதட்டமாய் சஹானாவை தோளோடு அணைத்துக் கொள்ள..
மாமா பயப்படலநு சொன்ன??என்றவளின் கண்கள் தந்த பார்வை உணர்த்தியது தேவிகாவென..
கார்த்திக்கின் பிடி அவனறியாமல் இறுக,
கவைலைபடாத மாமா..இனி எதைப்பாத்தும் உன் சஹானாவோ தேவிகாவோ பயப்பட தேவையில்ல..
சஹானாவா நீ கட்டின தாலிய கழுத்துல வாங்கின நொடியே எனக்கு ஆயிரம் யானை பலம் வந்துருச்சு..
இன்னும் அந்த அருணாச்சலத்தோட முடிவு மட்டும்தான் மிச்சம்.. அதுவும் கூடிய சீக்கிரம் நடக்கதான் போகுது தைரியமாயிரு மாமா..
ஒன்றும் கூறாமல் அவளை தோளோடு சாய்த்துக் கொண்டான்..
வெயில் சற்று அதிகமாக தொடங்க இருவரும் அங்கிருந்து கிளம்பினர்…
மதியம் மணி கூறியபடியே உணவு வகைகள் மேஜையை அலங்கரித்திருக்க இருவரும் அனைத்தையும் ஒருபிடி பிடித்தனர்..
வாவ் அண்ணா ரொம்ப நல்லாயிருக்கு ஆனா இப்படியே பத்து நாள்ள சாப்டோம் சென்னைக்கு போறப்போ நாங்க ரெண்டு பேரும் கொலுல வைக்குற செட்டியார் பொம்மை மாறிதான் போவோம்..-கார்த்திக்..
உணவு பரிமாறி முடித்து மணி வெளியேற சஹிம்மா நீ கொஞ்சம் தூங்கி எழுந்துரு..
நா அதுகுள்ள ஆபீஸ்கால் முடிச்சுட்டு ஓடி வந்துருவேன் ஓ.கே யா?
மாமா வந்தன்னைகே ஆரம்பிச்சுட்டியா???
இல்லடா டெய்லி ஒரு ஹாவ் அன் அவர்தான் அதுகூட நீ தூங்குற நேரத்துல தான்.. லேப்டாப் ஜார்ஜ் இருக்குல???
உன்னையெல்லாம் மாத்தவே முடியாது.. ம்ம் புல் ஜார்ஜ்ல தான் இருக்கு..
தட்ஸ் மை கேள்..தேங்க் யூ பேபி..என நெற்றியில் இதழ்பதித்து லேப்டாப்போடு மாடிக்குச் சென்றான்..
லேப்டாப்பை உயிர்பித்தவாறு சிவாவை போனில் அழைக்க இருவைரும் தங்களின் வேலையை தொடங்கினர்..
கார்த்திக் ட்ரவல்லா எப்படியிருந்தது ஒண்ணும் பிரச்சனை இல்லையே??
இல்ல சிவா அதெல்லாம் ஒண்ணுமில இப்போதான் தூங்கப் போனா அதான் கால் பண்ண லேட் ஆய்டுச்சு..
பரவால்ல கார்த்திக் அப்பறம் நீங்க கேட்ட ஆடிட்டர் டீடெய்ல் கிடைச்சது அவரு பேரு கருணாகரன்..
ரொம்ப வருஷமா அருணோட ப்ராப்பெர்டீஸ் வரவு செலவு எல்லாமே அவருதான் பாத்துகிறாரு..
ஆள் கைசுத்தம் ஆனா அருண்க்கு ரொம்ப விசுவாசமா இருக்காரு..
சோ அவர்கிட்டயிருந்து நமக்கு எந்த ஹெல்ப்பும் கிடைக்கும்நு தோணல..
கருணாகரன்..ம்ம்ம் ஆங் அவரு சைதாப்பேட்டை ஏரியாவா??
ஆமா கார்த்திக் அவர உங்களுக்கு தெரியுமா??
தெரியும் சிவா என் ப்ரெண்ட்டோட அப்பாதான்..
நீங்க சொன்னது 100% கரெக்ட் ரொம்ப நேர்மையான ஆளு அதே நேரம் அவரோட தொழில்கான எத்திக்ஸ மதிக்குறவரு சோ அவர்கிட்டகேட்டாலும் எதுவும் சொல்லமாட்டாரு..
சோ ப்ஸினஸ் வைஸ்அவன கார்னர் பண்றது இப்போதைக்கு முடியாது வேற எதாவது வழில தான் அவன டார்கெட் பண்ணணும்..
அவனோட வக்கீல்ட பேச சொன்னேனே கேட்டீங்களா??
ம்ம் பேசிருக்கேன் கார்த்திக் கொஞ்சம் பயப்படுறாரு.. இருந்தாலும் யோசிச்சு சொல்றேன்னு சொல்லிருக்காரு.,
குட் அவரு மூலமா அவன்மேல இருக்குற கேஸ்ல முக்கியமானதா சில டீடெய்ல்ஸ் வாங்கிகோங்க..
லைக் நீங்க ஏற்கனவே சொன்னீங்களே லேண்ட் ராபரி இல்ல ப்ளாக் மணி அப்படி எதாவது..
இப்போதைக்கு என் ஐடியா என்னன்னா ஸ்ட்ராங் எவிடென்ஸோட ஒரு கேஸை அவன்மேல போட்டு பப்ளிக் ப்ராசிக்யூட்டரா நீங்க ஆஜராகி அவனை உள்ளே தள்ளனும்..
சோ நமக்கு ஹெல்ப் பண்ற யாரைப்பத்தியும் அவனுக்குத் தெரியகூடாது அண்ட் இது எதார்த்தமா நடந்தமாதிரி இருக்கனும்.. என்ன சொல்றீங்க சிவா???
நல்லாதான் இருக்கு கார்த்திக் பட் அவனுக்கு இருக்குற பலத்துக்கு எவ்ளோ பெரிய கேஸா இருந்தாலும் ஈஸியா ஒண்ணுமில்லாம ஆக்கிடுவான்..
இதுக்கு நமக்கு இவ்ளோ கஷ்டம் நைட்டோட நைட்டா போய் அவன் கழுத்தறுத்து போட்டு வந்துருவோம்..
அதுதான் சரி நீங்க யோசிக்குற அளவுலா அவன் வொர்த்யில்ல..
என்ன சிவா கிரிமினல் லாயர்நு நினைச்சா கிரிமினலாவே மாறிடுவீங்க போல என லேசாய் சிரிக்க.
ஆனா உங்கள மாதிரி ஒரு மிஸ்டர் கூல் பார்ட்டியை நா பாத்ததேயில்ல கார்த்திக்..
என்னவோ போங்க..இவனையெல்லாம் பூமிக்கு பாரமா இன்னும் ஏன் விட்டுவச்சுருக்கோம்நு நினைச்சாதான் கடுப்பாயிருக்கு..
சரி நா என் ப்ரெண்ட்கிட்ட பேசிட்டு நாளைக்கு கூப்பிடுறேன் கார்த்திக் பை டேக் கேர்..
போனை வைத்துவிட்டு லேப்டாப்பில் சில அப்டேட்ஸை முடித்துவைத்துவிட்டு சஹானாவை தேடிச் சென்றான்..
மாடியின் கீழிருந்த மூன்றாவது படியில் அமர்ந்து குனிந்து ஏதோ செய்துகொண்டிருந்தாள்..
என்ன சஹி பண்ணிட்டு இருக்க என்றவாறு மெதுவாய் அவளை கடந்து கிழிறங்கியவன் அவள் நகத்திற்கு பாலிஷ் போட்டு கொண்டிருப்பதைப் பார்த்து அவள் எதிர்புறமாய் கடைசிப்படியில் அமர்ந்து குடு நா ஹெல்ப் பண்றேன் என்றவாறு ப்ரெஷை கையில் வாங்கி அவள் காலைப்பிடித்து தன் மேல் வைக்க,
ஐயோ மாமா என்ன பண்ற இதெல்லாம் நீ போய் குடு நானே போட்டுக்கிறேன்..
நா அவ்ளோ மோசமாலா போடமாட்டேன் சஹி..சின்ன வயசுல ஷரவ்க்கு நாதான் போட்டுவிடுவேன்..நம்பி காலை நீட்டு..
அதுக்கில்ல மாமா நீ போய் காலைப் பிடிச்சுகிட்டு விடு ப்ளீஸ்..
ஹே என் பொண்டாட்டி கால நா பிடிக்கிறேன் இதுல என்னயிருக்கு என மீண்டும் காலை தூக்கி வைத்து அவன் வேலையை ஆரம்பிக்க சஹானா தன்னவனையே கண்ணிமைக்காமல் பார்த்திருந்தாள்..
இரு கால்களுக்கும் பாலிஷ் போட்டுமுடித்து நிமிர்ந்தவனை கவனியாமல் சஹானா ஏதோ எண்ணத்தில் இருக்க அவள் உள்ளங்காலில் குறுகுறுப்பு மூட்டினான்.
கூச்சத்தில் நெளிந்தவள் சட்டென காலை எடுத்துக் கொள்ள,புருவமுயர்த்தி கார்த்திக் என்னவென கேட்க மென்னகையோடு எழுந்து கொண்டாள்..
மாமா காபி சாப்பிடுறியா நா போட்டு எடுத்துட்டு வரேன் வேலை ஓவரா??
ம்ம் இன்னைக்கு முடிஞ்சுது சஹிம்மா..நா உன்ன தூங்க சொன்னா நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க..
நா பக்கத்துல இல்லாம தூக்கம் வரலையா?? என அவளை தலைசாய்த்துப் பார்க்க,
ம்ம் ரொம்ப நினைப்புதான் இத்தனை நாளா நா எங்கவீட்ல தனியாதான தூங்கினேன் என்றவாறு சிவந்திருந்த முகத்தை மறைத்து சமையலறைக்குச் செல்ல குறுஞ்சிரிப்போடு கார்த்திக் அவளை பின்தொடர்ந்தான்..
சஹானா தன்னவனுக்காக காபியோடு மாலை சிற்றுண்டி தயார் செய்ய தொடங்க கார்த்திக் சமையல் மேடைமேல் அமர்ந்து மிக முக்கியமான வேலையாய் தன் மனைவியை சைட் அடித்துக் கொண்டிருக்க,
ஏன் மாமா இப்படி நீ குறுகுறுநு பாத்தா நா எப்படி வேலை செய்றது??
அடிப்பாவி உனக்கு சமைக்க வராததுக்கு இது ஒரு சாக்கா??
ஹலோ யாரு சொன்னா சமைக்க தெரியாதுநு??உனக்காக யூட்யூப்ல பாத்து எவ்ளோ கத்து வச்சுருக்கேன் தெரியுமா??
இப்போ நா பண்ற பக்கோடாவ சாப்ட்டு அப்பறம் சொல்லு எனக்கு சமைக்க தெரியுமா தெரியாதாநு..
ஓ.கே ஓ.கே கூல் சஹிம்மா..சரி அந்த வெங்காயத்தை குடு நா கட் பண்ணித் தரேன் நீ வேற எதாவது ரெடி பண்ணு..
அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் நீ போய் டிவி பாரு நா செஞ்சு எடுத்துட்டு வரேன்..
இந்த கதையே வேண்டாம் டிவி பாக்குறதுக்காகவா சென்னைல இருந்து இங்க வந்தேன்..
ஒவ்வொரு செகண்டும் உன்னோட ரசிச்சு ரசிச்சு வாழனும் சஹி என அவள் காதருகிலிருந்தமுடியை ஒதுக்க தலை சாய்த்து அவன் ஸ்பரிசத்தை ரசித்தவள்,
நா ஒண்ணு கேக்கட்டுமா கார்த்திக்??
என்னவென சைகையால் கேட்க,நீ எப்படி இப்படி ஈஸி கோயிங்கா இருக்க..
எல்லார்கிட்டேயும் அன்பா தம்பி தங்கச்சிக்கு பிடிச்ச அண்ணணா அப்பா அம்மா பெருமைபட்ற மகனா நல்ல ப்ரெண்டா என்னை கைல வச்சு தாங்குற புருஷனா எப்படி மாமா??
உதட்டில் புன்னகை மாறாமல் அவளை கைப்பிடித்து திருப்பி தன்முன் இழுத்துஅவள் கழுத்து வளைவில் தாடையை வைத்தவாறு இடையோடு வளைத்திருந்தான்..
சஹி நா என்னபத்தி இந்த அளவுலா யோசிச்சது இல்ல அதே நேரம் இப்படியிருக்குறதுக்காக ரொம்ப மெனக்கெட்தும் கிடையாது..
பை நேச்சரே நா கொஞ்சம் விட்டுகொடுத்து போற டைப்தான்..
ஷரவ் ஷரவனும் டுவின்ஸ்ங்றதால ரெண்டு குழந்தையையும் சேர்த்து முதல் தடவை பாத்தப்போயிருந்தே அவங்க எனக்கு ரொம்ப ஸ்பெஷலா தெரிஞ்சாங்க..
5 இயர்ஸ் கேப் வேறல சோ எப்பவுமே கொஞ்சம் மெச்சூரிட்டி இருக்கும்..
அண்ட் ஸ்கூல் படிக்கும்போது என் ப்ரெண்டோட அப்பா ஒருத்தர் ரொம்ப கோபகாரர்..
நல்லவரு தான் ஆனா எல்லார்கிட்டேயும் சிடுசிடுநு எறிஞ்சு விழுந்துட்டேயிருப்பாரு..
வைப்கிட்ட பையன்கிட்டநு எப்பவுமே அப்படிதான்..
அவரைப் பாத்தாலே என் ப்ரெண்ட் நடுங்குவான்..
அப்போ எனக்குத் தோணும் இப்படிகோபப்பட்டாதால அவரு என்ன சாதிக்க போறாரு..
வீணா எல்லாரோட விரோதத்தையும் மனக்கஷ்டத்தையும் தான் வாங்கிகுறாரு..
அதனால ஒரு நல்லதுமில்ல..அப்பறம் ஏன் கோபப்படனும்னு நினைச்சுருக்கேன்..
மே பி அதுதான் என்னோட இந்த பழக்கத்துக்கு காரணமா இருக்கலாம்..
நல்லதோ கெட்டதோ கோபம் ஆத்திரம் டென்ஷன் இதுனால எதுவும் மாறப்போறதில்லனு ரொம்ப தீர்க்கமா நம்புறேன்.
அதனால தான் இப்போ இப்படி இருக்கேன் என அவன் கன்னத்தால் கன்னம் உரச..
அவன்புறம் திரும்பியவள் அவன்தோளைச்சுற்றி கைகளை மாலையாக்கி அவன் மூக்கை உரசி லவ் யூ சோ மச் மாமா..
நீ ஆயிரத்தில ஒருத்தன் இல்ல லட்சத்துல ஒருத்தன்..அதுவும் எனக்கே எனக்கான ஒருத்தன்..
கொஞ்சம்கூட ஈகோ இல்லாம எல்லாரையும் சந்தோஷப்படுத்தி வாழறதெல்லாம் வரம் மாமா..
அந்த வரத்தை இப்போ நீ எனக்கும் குடுத்துருக்க தேங்க் யூ சோ மச் பார் தட்..
எவ்ளோ வொர்ஸ்ட் ஸ்சுவேஷன் வந்தாலும் நீ இப்படியே இரு இதுதான் உன்னோட பலமே..
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!