“நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்

தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்”

காலை பத்து மணிக்குரிய பரபரப்போடு இயங்கி கொண்டிருந்தது சென்னையின் முக்கிய பகுதியான தாம்பரம்..

தன் டூவீலரை அந்த பெரிய வீட்டின் முன் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான் கார்த்திக்..

வழக்கமாய் வருபவன் என்பதால் அவனை பார்த்து சிநேகமாய் சிரித்தார் அந்த வீட்டின் செக்யூரிட்டி..

பதிலுக்கு அழகாய் சிரித்துவிட்டு முன்னோக்கி நகர அதுகுள்ள அவரோட க்விக் இன்ட்ரோ பாத்ருவோம் வாங்க வாங்க..

கார்த்திக் பேரை கேட்ட உடனே கவுதம் மேனன் படத்துல வர ஹீரோ மாறி இமஜின் பண்ணிறாதீங்க..28 வயது இளைஞன்..

சீ.ஏ முடித்துவிட்டு ஆடிட்டராக பணிபுரிபவன்..நடுத்தர குடும்பத்தின் பொறுப்பான மூத்த மகன்…

பொறுப்பிற்கேற்ற சுட்டிதனமும் உண்டு ஆனால் அவனின் நெருங்கிய நட்பு வட்டத்தில் மட்டும்…

மாநிறம் கூர்மையான மூக்கு.காந்தமாய் கண்கள்..வயதிற்கேற்ற துறுதுறுப்பு தெரியும் அதில்..

அவனை அடுத்து இரட்டையர்களான தம்பி ஷ்ரவன்,தங்கை ஷரவந்தி..அப்பா மோகன் ஆசிரியராய் இருந்து ஓய்வு பெற்றவர்..

அம்மா கீதா அழகான குடும்ப தலைவி..இவ்வளவு தான் இவனின் உலகம்..அளவான வருமானம் அமைதியான குடும்பம் இதுதாங்க இவரோட பேக்ரவுண்ட்..

இப்போது இவன் வந்திருப்பது அவனின் முக்கியமான க்ளையண்ட் பிரபல துணிக்கடை ஓனர் சேகர்ரின் இல்லத்திற்கு..

வாரமொரு முறை இவ்வாறு வீட்டிற்கு வந்து ஆடிட்டிங் வேலை செய்து கொடுத்துவிட்டு போவான்..

மற்ற யாருக்கும் அவன் இதை செய்வதில்லை..சேகர் மிகவும் பண்பானவர் அத்தனை பணக்காரனாக இருந்தாலும் ஒரு முறை கூட அவர் பேச்சில் அந்த திமிர் இருந்ததில்லை..

இன்னும் சொல்லப் போனால் கார்த்திக்கிற்கு அவர் ஒரு நல்ல வெல் விஷ்ஷர்..

அவன் தொழிலின் ஆரம்ப காலத்தில் அதன் நிறை குறைகளை கூறி யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது வரை எடுத்து கூறுவார்.

அவர் மீது அவனுக்கு எப்போதுமே தனி மரியதை உண்டு…இருப்பினும் அதற்காக அவரிடம் எந்த உரிமையும் எடுத்து கொண்டதில்லை..

ஹாலில் நுழையும் போதே நின்னை சரணடைந்தேன் பாடல் ஏதோ அறையில் ஒலித்து கொண்டிருக்க அதில் ஒரு நொடி மனதை பதித்தான்..

பாரதியார் பாடல்களின் மீது அவனுக்கு என்றுமே அதிக ஈடுபாடு உண்டு..சட்டென சுதாரித்தவன்..

என்னதிது புதுசா பாட்டுலா கேக்குது இதுக்கு முன்னாடி இப்படி இருக்காதே..

பாடலை தாண்டி ஏதோ ஒரு அமைதி நிலவுவதாய் உணர்ந்தான்..என்னவோ சரியில்லயே..

சார்..

……..

சேகர் சார்..

…….

யாரும் வருவதற்கான அடையாளம் இல்லாமல் போக அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்..

அடுத்த நொடி அவன் மேல் வருணபகவான் தன் ஆசிகளை பொழிந்தார்..

கோபமாய் மேலே பார்த்தவனின் கண்களில் பதிந்தாள் அழகிய தேவதை..

இதுக்குதான் இதெல்லாம் வேண்டாம்நு சொன்னேன் என்ற சேகரின் குரலில் நினைவிற்கு வந்தவன் சட்டென பார்வையை திருப்பினான்..

அதற்குள் அந்த தேவதை வேகமாய் கீழிறங்கி அவனை நோக்கி வந்து சாரி ரியலி சாரி..

நா என் பிரதர் வரேன்னு சொல்லிருந்தான்..

அவன்னு நினைச்சு..எக்ட்ரீம்லி சாரி..என கண்களில் குறும்பு மின்ன ஆனால் உண்மையான வருத்தத்தோடு கேட்டாள்..

இட்ஸ்..ஓ..கே..

வா கார்த்திக் சாரீப்பா நீ எப்பவும் 11 மணிக்கு தான வருவ அதான் இவ ஏதோ சொன்னாலேனு..தப்பா எடுத்துக்காதப்பா..

ஐயோ பரவால்ல சார்..வேணும்நு யாராவது பண்ணுவாங்கலா..

தம்பி இந்தாங்க இந்த ட்ரெஸ்ஸை போட்டுக்கோங்க என ஒரு கவரோடு வந்து நின்றார் துளசி சேகரின் மனைவி..

இல்ல வேண்டாம் மேடம் நா வீட்டுக்கு தான் போணும் ஒண்ணும் பிரச்சனையில்ல..

தம்பி இது அவ கசின் பிரதர்காக எடுத்ததுதான் சாரோடது இல்ல உங்களுக்கு கரெக்ட்டா தான் இருக்கும் பயப்படாம வாங்கிக்கோங்க என்று கூற,அதற்குமேல் மறுக்காமல் அதை பெற்று கொண்டு அங்கிருந்த அறை நோக்கி சென்றான்…

உடை மாற்றி வந்தவனிடம் சேகர் பேச ஆரம்பித்தார்..அந்த தேவதையோ ஒன்றுமே நடக்காதது போன்று கையில் ஆப்பிள் பௌலை வைத்து கொண்டு டீவியை மும்மரமாக பார்த்து கொண்டிருந்தாள்..

இவ தான் என் பொண்ணு சஹானா..பெங்களுர்ல பேஷன் டிசைனிங் படிச்சுட்டு ரொம்ப வருஷத்துக்கப்பறம் இப்போதான் வந்துருக்கா..

நடுல எப்போவாவது வருவா பட் நீ அப்போ பாத்துருக்க மாட்ட..ஒரே பொண்ணுணு ரொம்ப செல்லம் குடுத்து வளர்த்துட்டோம்..

அதன் விளைவு தான் உனக்கு இப்போ அபிஷேகம் நடந்தது..

என் அண்ணா பையன் உனக்குகூட தெரியுமே சிவா அவன் வரேன்னு சொல்லிருந்தான்..

அவனுக்கு சர்பரைஸ் குடுக்க போறேன் அது இதுநு சொல்லி எங்கள உள்ளேயே உக்கார வச்சுட்டா..நீ வருவநு எதிர் பாக்கலப்பா..

அவளோ யாரோ யாரையோ பற்றி பேசுகிறார்கள் எனக்கென்ன என்பதுபோல் அமர்ந்திருந்தாள்..

கார்த்திக்கிற்கு உதடுகள் தானாகவே சிரிப்பை உதிர்த்தன..

சாஹானா இங்க வா என சேகர் அழைக்க..எஸ் டாட் என வந்து நின்றவளை பார்க்க ஏதோ பள்ளி செல்லும் பிள்ளை போல் தோன்றியது..

இவரு தான்..

மிஸ்டர்.கார்த்திக்.. நம்ம ஆடிட்டர்.. ரொம்ப ரொம்ப நல்ல பையன்.. வயசுக்கும் மூளைக்கும் சம்மந்தமேயில்ல அவ்ளோ அறிவாளி..

வாழ்க்கைல முன்னேறும்ங்கிற வெறி அவரு வேலைலயே தெரியும்..

எல்லாத்துக்கும் மேல அவர பாத்தா உங்கள சின்ன வயசுல பாத்தாமாறி இருக்கு அதானே..

இதை கேட்டு அவர் சத்தமாய் சிரிக்க,கார்த்திக்கோ ஆச்சரியமாய் பார்த்தான்..

சாரி மிஸ்டர் கார்த்திக் உங்களபத்தி காது வலிக்குற அளவு கேட்டுட்டேன் அதான் இன்னோரு தடவ அப்பா எனர்ஜிய வேஸ்ட் பண்ண வேண்டாமே..

என்ன திட்டனும்னாலே எங்கப்பா உங்களோட கம்பேர் பண்ணி தான் திட்டுவாரு..

அவன் எவ்ளோ பொறுப்பாயிருக்கான் நீ ஏன் இன்னும் குழந்தையாவே இருக்க..ப்ளா ப்ளா ப்ளானு..

அதுக்காகவே உங்க மேல செம கோவத்துல இருந்தேன்..பட் இப்போ நடந்ததுக்கு உங்க ரியாக்ஷன பாத்தாலே தெரியுது அப்பா சொன்னது எவ்ளோ கரெக்ட்னு..

உங்க இடத்துல நா இருந்திருந்தேன்னா இந்நேரம் கைல கிடைக்குறத தூக்கி அடிச்சுருப்பேன்..

பட் இட்ஸ் சோ நைஸ் ஆப் யூ..என பட்டாசாய் வெடித்து முடித்தாள்..

அவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே சிவா உள்ளே வர டேய் தடிமாடு நில்லு உனக்கு ரெடி பண்ண ஆப்புல தான் பாவம் இவரு சிக்கிட்டாரு என அவனை நோக்கி இவள் ஓட..

வந்தவனோ ஏதோ பேயை கண்டது போல் ஓட ஆரம்பித்தான்..வீடே அமர்க்களபட,சேகர் தான் நீ வா கார்த்திக் இதுங்கள திருத்தவே முடியாது..

என்று அலுவலக அறைக்கு அழைத்து சென்றார்..வேலை முடியும் தருவாயில் உள்ளே வந்தான் சிவா..

ஹாய் கார்த்திக்..வசமா அந்த குட்டிசாத்தான்ட்ட மாட்டீனீங்க போல..

லேசாய் சிரித்தவன் பர்ஸ்ட் அட்டெம்ட் மிஸ் ஆனதுக்கும் சேர்த்து இப்போ சிக்கிட்டீங்க போல..

அவ்ளோவா தெரீயுது என தலைமுடியை அவசரமாய் சரி செய்தான்..

சிவாவும் கார்த்திக்கும் நெருங்கிய நண்பர்கள் இல்லையென்றாலும் இந்த இரண்டு வருடத்தில் அவர்களுக்குள் இயல்பாய் பேசி கொள்ளும் அளவிற்கு அழகீய நட்பிருந்தது..

பப்ளிக்..பப்ளிக்..நேத்து அவள பிக்கப் பண்றதுக்கு ரயில்வே ஸ்டேஷன் வர சொல்லிருந்தா கடைசி நேரத்துல கோர்ட்ல வேலை வந்துடுச்சு..

நீயே ஆட்டோ பிடிச்சு போய்டுநு சொன்னேன்..நல்லவளா மறுத்து பேசாம போனை கட் பண்ணும் போதே உஷாராய்ட்டேன்..

அதனாலதான் பாத்து பக்குவமா உள்ளே நுழைஞ்சேன்..ஆனா எதிர்பாராம நீங்க மாட்டிக்கிட்டீங்க..

என்ன சிவா ஒரு வக்கீலா இருந்துட்டு தங்கச்சிக்கு இப்படி பயப்படுறீங்க..என்று கார்த்திக் மீண்டும் சிரிக்க..

அய்யயோ அவள பத்தி தெரியாம பேசுறீங்க..அப்பறமா டீடெய்ல்டா சொல்றேன்..

ஏன்னா வாராவாரம் வரும்போது நிறைய பேஸ் பண்ண வேண்டியிருக்கும்..எனும்போதே..

ஏ குரங்கு நீ இன்னும் கிளம்பலயா??-சஹானா

என் சித்தப்பா ரூம்ல நா இருக்கேன் உனக்கு ஏன் எரியுது??

மிஸ்டர் கார்த்திக் என் மேல உள்ள பொறாமைல தப்பு தப்பா சொல்லிருப்பான் நம்பாதீங்க..

பேஸிகலி ஐ அம் அ வெரிகுட் கேள்..

ம்ம்ம் சொல்லிகிட்டாங்க..-சிவா..

அவனை முறைத்துவிட்டு கார்த்திக்கிடம் திரும்பியவள் ப்ரெண்ட்ஸ் என கைநீட்ட ஒரு நொடி யோசித்தவன் பின் மரியாதைக்காக கை குலுக்கினான்..

எனக்கு இங்க ப்ரெண்ட்ஸ் ரொம்ப கம்மி,இவனோட தான் ஊர் சுத்துவேன் இப்போ இவனும் வக்கீல் ஆய்ட்டான்னு ரொம்ப சீன் போடுறான்..

சோ நீங்க ப்ரீயா இருக்குறப்போலா எனக்கு ஊர் சுத்தி காட்றீங்க ஓ.கே..??

ஐ அம் வெரி சாரி கார்த்திக் மிஸ்டர் 7:30 உங்க தோள் மேல உக்காந்து குத்து டான்ஸ் ஆட ஆரம்பிச்சுட்டாரு..என் ஆழ்ந்த அனுதாபங்கள்..-சிவா,

ரெண்டு பேரும் கொஞ்சம் வாய மூடுங்கடா..அவன போட்டு படுத்தி எடுக்குறீங்க..

போய் வேற வேலயிருந்தா பாருங்க என துளசி அதட்ட..இருவரும் வாயை மூடிக் கொண்டனர்..

ஒரு வழியாக வெளியே வந்து தன் வண்டியை உயிர்பித்தவனுக்கு உள்ளே சிவாவின் அலறல் சத்தம் கேட்டது..

சிரித்து கொண்டே வண்டியை எடுத்தவன் தன் வீட்டை அடைந்தான்..

உள்ளே நுழைந்தவனை ஏதோ ஏலியனை போல் பார்த்தனர் அவன் அம்மாவும் தம்பி தங்கையும்.

சோர்வாய் டைனிங் டேபிளில் அமர்ந்தவன் அம்மா சூடா காபி தரீயா என்றவாறு நிமிர அப்போது தான் அவர்களின் ரியாக்ஷனை கவனித்தான்..

என்னம்மா அப்படி பாக்குற??

இல்ல காலைல நீ இந்த ட்ரெஸ் போட்டுட்டு போலையே..??

அப்போதுதான் அதை கவனித்தவன் அத ஏன்ம்மா கேக்குற சேகர் சார் வீட்டுக்கு போய்ருந்தேன் என அங்கு நடந்த அனைத்தையும் கூற ஷரவனும் ஷரவந்தியும் விழுந்து விழுத்து சிரிக்க,கீதாவே கஷ்டபட்டு தான் சிரிப்பை அடக்கி கொண்டிருந்தார்..

நம்ம ஷரவந்தியே பரவால்லநு தோணிச்சும்மா..அப்படி ஒரு கேரக்டர்,சிவா கரெக்ட்டான பேர்தான் வச்சுருக்காரு குட்டி சாத்தான்னு..

நல்ல வேளை கூட பொறந்த அண்ணண்லா இல்ல டெய்லி அவகிட்ட போராடியே வாழ்க்கைய வெறுத்துருப்பான்..

ஐயோ அவ கதைய பேசுறதுல என் வேலைய மறந்திருவேன் போல அம்மா காபி குடு நா சீக்கிரமா கிளம்பனும் முரளி சார்கிட்ட அப்பாய்மெண்ட் இருக்கு..

என குடுத்த காபியை ஏதோ தண்ணீரை போல் குடித்துவிட்டு செல்லும் மகனை வாஞ்சையாய் பார்த்தார் கீதா..

பாவம் காபி கூட குடிக்க நேரமில்லாம இப்படி ஓடுறானே..ம்ம் என்னவோ அவன் வயசுல ஒவ்வொரு பையனும் எப்படி ஜாலியா இருக்காங்க இவன் மட்டும் ஏன் தான் இப்படி வேல வேலனு போறானோ தெரில..

ஷரவன் ஷரவந்திக்குமே அம்மா கூறுவதன் உண்மை புரிந்தது என்ன தான் சிரித்து பேசி தங்களோடு மகிழ்ந்தாலும் அதையும் மீறி பொறுப்பே அதிகமாய் தெரியும் அவனிடம்..

ஷரவன் டிகிரி முடித்துவிட்டு போட்டோகிராபி தான் இன்ட்ரெஸ்ட்நு சொன்ன போது அனைவருமே குடும்ப சூழ்நிலை காட்டி அதை எதிர்க்க கார்த்திக் தான் அவனை உற்சாகபடுத்தினான்.

அப்பா இஷ்டபட்ட வேலைய செஞ்சாதான்ப்பா மனசு நிம்மதியா இருக்கும்..சீக்கிரம் முன்னேறவும் முடியும் அவனுக்கு எது பிடிச்சுருக்கோ அதையே பண்ணட்டும் என்று கூறிவிட்டான்..

அப்பாவுமே கார்த்திக்சொன்னா சரியா தான் இருக்கும் என்று நினைப்பவர்..அவன் மீது அத்தனை நம்பிக்கை..

21 வயதில் டிகிரி முடித்த கையோடு ஒரு கம்பனியில் வேலையில் சேர்த்து பார்ட் டைமாக சி ஏ முடித்து தனி ஒருவனாய் நின்று தனக்கென ஒரு அங்கிகாரத்தோடு இருக்கிறான்..

எப்போதுமே தம்பி தங்கைகளுக்காகவே அதிகம் யோசிப்பவன்..அதுவும் தங்கையென்றால் அவனுக்கு மிகவும் செல்லம்..

தம்பியை கூட கடிந்து பேசுவான் ஆனால் தங்கையின் முன் தவறி கூட கோப படமாட்டான்..

அன்று விடுமுறை என்பதால் சற்று நேரம் கழித்துதான் விழிப்பான் கார்த்திக்..

அவன் உறங்குவதே அதிசயம் அது பொறுக்கமாட்டாமல் அலறியது அவனின் கைப்பேசி..

பாதி கண்களை திறந்து யாரென்று பார்க்க சேகர் அழைத்திருந்தார்..அதை அட்டெண்ட் செய்தவன்,

ஹலோ சொல்லுங்க சார் என்ன காலைலயே கால் பண்ணிருகீங்க??

சாரி கார்த்திக் சண்டே அதுவுமா உன்ன டிஸ்டர்ப் பண்ணிட்டேன்..

பரவால்ல சார் சொல்லுங்க..

இன்னைக்கு ப்ரீனால் கொஞ்சம் வீட்டுக்கு வரியாப்பா??

சற்று யோசித்தவன்,சரி சார் ஒரு ஒன் அவர்ல வரேன் என்று கூறி அதே யோசனையோடு போனை வைத்தான்..

இருப்பினும் தாமதிக்காமல் கிளம்பி சென்றான்..

என்னப்பா இன்னைக்கு கூட வேலையா??-கீதா

இல்லமா சேகர் சார் கூப்டாரு என்னனு தெரில கேட்டுட்டு வந்துரேன்ம்மா..

அங்கு சேகர் ஹாலில் அமர்ந்து டீவி பார்த்து கொண்டிருந்தார்.

கார்த்திக்கை பார்த்ததும் வாப்பா கார்த்திக் என்ன காலைலேயே வந்துருக்க ஏதாவது முக்கியமான விஷயமா??

சார் நீங்க தான கால் பண்ணி வர சொன்னீங்க இப்போ என்ன கேக்குறீங்க..

என்னப்பா சொல்ற காலைலயிருந்து என் போன் பக்கமே போலையே..

என்னவென்று குழம்பியவனை மேலும் குழப்பாமல் அங்கு ஆஜரானாள் நம்ம ஹீரோவோட குட்டீடி சாத்தான்..

ஹாய் கார்த்திக் வாங்க போலாமா என அசால்ட்டாய் தன் தோள் பையை நோண்டியவாறு வந்தவளை பார்க்க ஏதோ புரிவதாயிருந்தது..

நீங்கதான் கால் பண்ணீங்களா??தயக்கமாய் கேட்டான்.. சேகர் என்ன நினைப்பாரோவென்று வேறு இருந்தது..

ஆமா பின்ன ப்ரெண்ட்ஸ்நு கை குலுக்கினா மட்டும் பத்தாது சொன்ன வாக்க காப்பாத்தனும் இன்னைக்கு உங்களுக்கு லீவ் தான அப்போ சொன்னபடி என்ன வெளில கூட்டிட்டு போனும் தான..

போன் நம்பர் கூட தரல அதான் இந்த பனிஷ்மெண்ட்..அப்பா கூப்டாதான ஓடி வருவீங்க..என்று புருவங்களை மேலும் கீழுமாய் அசைத்தாள்..

என்ன சஹானா இது எதெதுல விளையாடுறதுநு இல்ல..

கார்த்திக் பாவம் இன்னைக்கு மட்டும்தான் லீவ் அதையும் இப்படி ஸ்பாயில் பண்ணி விடுற..

ரொம்ப தப்பு மொதல்ல அவர்ட்ட சாரி கேளு என சற்று கடுமையாய் பேச அவள் முகம் வாடிவிட்டது.. அவனுக்கோ என்னவோ போல் ஆகிவிட்டது..

சாரி..என முகத்தை தூக்கி வைத்து கொண்டு அவள் கேட்க அவனுக்கோ சிரிப்பாயிருந்தது..

பரவால்லங்க..சார் நீங்க எதுவும் சொல்லாதீங்க.. விளையாட்டா ஏதோ பண்ணிட்டாங்க..

இல்ல கார்த்திக் இவளுக்கு மட்டும் சப்போர்ட் பண்ணாதீங்க..இவளபத்தி தெரியாது..

கொஞ்சம் விட்டு புடிக்கலாம்நு நினைச்சீங்க இவளலா புடிக்கவே முடியாது என தன் பங்கிற்கு துளசி அர்ச்சனை செய்ய அவனுக்குதான் சங்கடமாக இருந்தது..

ஏய் எங்க போகனும்னு சொல்லு அப்பா கூட்டிட்டு போவாரு..

சுத்தம் நா என்ன கோவில் குளம்நு சுத்தவா கம்பனி கேட்டேன்.. நீ வேணா அப்பாவ கூட்டிட்டு காசி ராமேஸ்வரம்நு போய்ட்டு வா..

அடிக் கழுத பேச்சை பாரு.. அப்படி எங்கதாண்டீ போணும் உனக்கு..

அம்மா..எனக்கு இங்க மால் எங்கேயாவது போணும் அப்பறம் பிஸினஸ்ல இப்போ என்ன ட்ரெண்ட்நு நிறைய தெரிஞ்சுக்கனும்..

நா சென்னைல ஒரு பொடிக் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்..இதுக்குலா கார்த்திக் தான் கரெக்ட் இன்னோவேடிவ்வா நிறைய ஐடியா சொல்லுவாரு..

நா என்ன அவரு வேலைய கெடுத்துட்டா என்கூட வர சொல்றேன் சண்டேதான அதுகூட மேக்ஸிமம் ஒரு த்ரீ அவர்ஸ் தான..

எனக்கு சிவாவவிட்டா யாரத் தெரியும்.. அவனும் இன்னும் 10 டேஸ்க்கு பிஸிநு சொல்லிட்டான்..என பாவமாய் கூற..அவனுக்கே சற்று இளகிதான் போனது..

சார் உங்களுக்கு ப்ராப்ளம் இல்லனா நா கூட்டிட்டு போறேன் சார்..

என்னாலயும் எப்போதும் வர முடியாது கிடைக்குற டைம்ல என்னால முடிஞ்ச சின்ன ஹெல்ப்..

இந்த வயசுலயே சொந்தமா பிஸினஸ் பண்ணணும்நு நெனைக்குறது பெரிய விஷயம் சார்… என பக்குவமாய் கூறினான்..

உன்கூட அனுப்ப எனக்கு என்னப்பா ப்ராப்ளம்..உனக்கு வீண் சிரமமேநு தான் யோசிச்சேன்..

மத்தபடி ஒண்ணுமில்ல..நீ போய்ட்டு வா சஹானா..-சேகர்..

ஹே..ஜாலி…தங்க் யூப்பா..வாங்க கார்த்திக் அடுத்து எங்கம்மா எதாவது ஆரம்பிக்குறதுக்குள்ள எஸ்கேப் ஆய்டலாம் என துள்ளி குதித்து அவள் ஓட அவன் பின் தொடர்ந்தான்..

காரிலேயே போலாம் என்று அவன் கூற ஓ.கே இந்தாங்க என சாவியை அவனிடம் கொடுத்து விட்டு பக்கத்து கதவை திறக்க நின்றாள்..

ஏனோ பைக்கில் அழைத்து செல்ல அவனுக்கு சிரமமாய் இருந்தது இதுவரை அவன் அம்மா தங்கையை தவிர வேறு எந்த பெண்ணையும் ஏற்றியதில்லை..

அதுவும் போக யாரும் பார்த்து தவறாக எதாவது கூறிவிட்டால் சேகர் சாரை எதிர் கொள்வது மிகவும் கடினம் என்று தோன்றியதும் ஒரு காரணம்..

கார் கிளம்பியதிலிருந்து வாய் ஓயாமல் பேசி கொண்டு வந்தாள்..கார்த்திக்கிற்கு தலையே சுத்தி விடும் போலிருந்தது..

அது வாயா இல்ல பத்தமடை பாயா..இந்த பேச்சு பேசுறாளே ஆண்டவா என்ன ஏன் இப்படி சோதிக்குற என மனதினுள் குமுறியவாறே அந்த மிக பெரிய மாலின் முன் காரை பார்க் செய்துவிட்டு இருவரும் இறங்கினர்..

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

4 comments

Kavi Natarajan October 8, 2026 - 8:50 am

Nice start ma

suganyavel October 8, 2026 - 7:44 pm

Super💕 super💕

Kiruthika M October 8, 2026 - 8:20 pm

Nice start heroine ultimate 😁❤️

srichitra October 10, 2026 - 1:52 pm

Already vandha story thane ma. Nice start

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode