விழி-15(Final)

by ஸ்ரீ
4 comments 529 views
A+A-
Reset

தன் கண்ணம்மாவின் கலக்கமே அவனுக்கு உயிர் வலி கொடுக்கும் எனும்போது அவள் அப்படி அழும்போது திவா நிச்சயமாய் மனதளவில் இறந்து துடித்துக் கொண்டிருந்தான்.

சற்றும் தாமதியாது அவளை தன்னுள் புதைத்துக் கொள்ள திமிறியபடியே அழுது கொண்டிருந்தவளை தேற்ற வார்த்தையின்றி தவித்தான்.

சில நிமிடங்களுக்கு மேல் பொறுக்க மாட்டாதவனாய் தன்னிலிருந்து அவளை பிரித்தெடுத்தவன் நிதானமாய் அவளிடம்,

“உன் திவா இன்னும் உயிரோட தான் இருக்கான் கண்ணம்மா. இப்படி அழுது அவனை…”

சட்டென வாயை மூடியவள் அவன் சட்டையை கொத்தாய் கையில் பிடித்தாள்.

“ஏன் திவா ஏன் நீ இப்படியிருக்க. நா உன்கூட வாழறதுக்கு எந்த தகுதியும் இல்ல.

உனக்கு இருக்குற பக்குவமும் பொறுமையும் எனக்கு இல்லவே இல்ல.

நீ என் மேல வச்சுருக்குற அளவு காதலும் பாசமும் எனக்கு இல்லையே திவா. நா உனக்கு பொறுத்தமானவளே இல்ல. ”

“கண்ணம்மா இல்ல இல்லனு இவ்ளோ சொல்றியே நீ பேசின ஒவ்வொரு வார்த்தையும் என் மேல இருக்குற காதலாலயும் எங்க உன்னை விட்டு நா தூரமா போய்ட்டனோங்கிற பயத்துலயும் வந்தது தான. அதை உன்னால மறுக்க முடியுமா டா.

சொல்ல போனா ஒருவிதத்துல எனக்கு சந்தோஷம் தான் இந்த மாதிரி உரிமையா எனக்கே எனக்கா நீ வேணும்னு என்னை யாருமே நினைச்தில்ல டா.

இத்தனை உரிமையா சண்டையும் போட்டதில்ல அதெல்லாம் உன்னால உன்னால மட்டும் தான் எனக்கு கிடைக்குது கண்ணம்மா.

அதனால இன்னொரு தடவை தேவையில்லாம பேசி என்னை கொல்லாத டா. ”,பேசியவனின் கண்களிலும் கண்ணீர் நனைத்திருந்தது.

“தெரில திவா என்ன பேசணும்னு தெரில உன்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரில.

அவ்ளோ ஏன் இதுக்கு மேல உன்னை எப்படி பேஸ் பண்ண போறேன்னு கூட தெரில.

ஆனா நல்லா இருந்த நம்ம வாழ்க்கையை நானே விரிசல் விழ வச்சுட்டேனோனு தோணுது.

எல்லாத்துக்கும் மேல சிந்தாம்மா அவங்க என்னை இத்தனை நாள் பாத்துகிட்டதுக்கு நல்ல மரியாதை பண்ணிருக்கேன்.

அந்த ஒரு விஷயத்துக்காகவே நீ என்னை மன்னிச்சாலும் நா மன்னிக்க முடியாது திவா.

பெத்த அம்மாவா இல்லாத போதும் அவங்க உன்னை வளர்த்த விதத்துக்கும் என் அம்மா நடந்துகிட்ட விதத்துக்கும் எத்தனை தூரம் இல்ல.

காசு பணம் எல்லாத்தையும் தாண்டின ஒரு வாழ்க்கை, அவங்களுக்கு புரியல திவா.

அவங்க பொண்ணு அவங்க ரத்தம் தான நான் அதான் அவசரப்பட்டு உறவுகளை மதிக்காம போய்ட்டேன். ஐ பீல் ஷேம் ஆன் மீ திவா. ”

“கண்ணம்மா திஸ் இஸ் தி லிமிட். சில விஷயங்களில் வார்த்தைகளின் வீரியத்தை மூளையை கொண்டு ஆராயாம மனசால உணரனும் டா. நா அப்படி தான் யோசிக்குறேன்

அதனால தான் இப்போ கூட என்னால உன்னை குறைவா நினைக்க முடில.

போதும் டா நமக்கான கெட்ட நேரம் இதோட முடியுதுனு நினைச்சுப்போம்.

நீ முதல்ல தூங்கு நாளைய நமக்கான பொழுது புதுசா தொடங்கட்டும்.”

அவளை வலுகட்டாயமாய் தன் மடியில் படுக்க வைத்தவன் தலைகோத ஆரம்பிக்க அவனையே பார்த்திருந்தவள் வெகு நேரத்திற்குப்பின் கண்ணயர்ந்தாள்.

மறுநாள் கண்விழித்த போது வெண்பா அப்படியே அவன் மடியிலேயே தான் இருந்தாள்.

திவ்யாந்தோ அமர்ந்தவாறே கட்டிலில் பின் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.

சற்றே தெளிந்தவளுக்கு இரவுவநடந்த அனைத்தும் நினைவிற்கு வர மீண்டும் கண்களை நிரப்பிக் கொண்டு வந்தது கண்ணீர்.

மனதை தேற்றிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவளுக்கு சிந்தாம்மாவை பார்த்த பின்பு தன்னை கட்டுப்படுத்த முடியாமல் போனது.

அவரை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்திருந்தாள்.

“சிந்தாம்மா என்னவெல்லாமோ பேசிட்டேன்.

ப்ளீஸ் என்னை தப்பா நினைச்சுட மாட்டீங்க தான. வேணும்னு எதுவும் பண்ணல மா நிச்சயமா. ”

“என்ன கண்ணு நீ எதுக்கு இப்போ இப்படி அழற வார்த்தைக்கு வார்த்தை அம்மா அம்மானு கூப்பிட்டு இப்படி பேச உனக்கு உரிமையில்லையா.

இந்த வீட்டு செல்லம் டா நீ. அழாத முதல்ல கண்ணை துடை. இங்க வா சூடா காபி தரேன் சாப்டு.

எதோ கெட்ட நேரம் எல்லாம் முடிஞ்சுதுனு நினைச்சுக்கோ.”, என்றவாறு அவளை சமையலறைக்கு அழைத்துச் சென்றார்.

அதன்பின் அன்றைய பொழுது திவா அந்த வழக்கு விஷயமாக வெளியே சென்று விட தங்களறைக்குள்ளேயே முடங்கியிருந்தாள் வெண்பா.

ஏனோ மிகப் பெரிய தவறு இழைத்து விட்டதாகவே தோன்றியது அவளுக்கு.

மாலையில் திவா வீட்டிற்கு வர அவனிடமுமே ஒதுங்கியே தான் இருந்தாள்.

திவாவும் சிந்தாம்மாவும் அவள் மனநிலை உணர்ந்தவர்களாய் அவர்களாகவே அவளை அழைத்து பேச்சுக்குள் கொண்டுவர முயன்றனர்.

இருந்தும் பழைய வெண்பா வெளியே வரவேயில்லை.

இரு தினங்கள் இப்படியே கடக்க திவா அவளை பள்ளிக்குத் தயாராகுமாறு கூற மனசு சசரியில்லை என்பதோடு நிறுத்திக் கொண்டாள்.

வெண்பாவை பார்க்க ஒருபுறம் பாவமாக இருக்க திவாவை பார்த்தால் அதைவிட மோசமாக இருந்தான்.

ஒரு வாரமாக வழிக்கபடாத தாடியோடு கண்கள் ஒளியிழந்து இயந்திரதனமாய் சுற்றிக் கொண்டிருந்தான்.

சிந்தாம்மாவிற்கு என்ன செய்வதென ஒன்றும் புரியாமல் போனது.

விதி என்பதை தவிர யாரையும் குறை சொல்லக்கூட தோன்றாமல் கோவில் குளமென சென்றார்.

இப்டியாய் அடுத்த மூன்று நாட்கள் கடந்த நிலையில் திவா மருத்துவமனைக்கு கிளம்பி விட தங்கள் அறையை ஒழுங்குபடுத்தலாம் என முடிவு செய்தவள் ஒட்டடை அடித்து மெத்தை தலையணை உறைகளை மாற்றி முடித்து கப்போர்ட்டில் அனைத்தும் அடுக்கி வைக்கலாம் என முடிவு செய்தாள்.

அந்த நேரத்தில் மனமும் சற்றே லேசாவதாய் உணர்ந்தவள் அனைத்தையும் ஒழுங்குபடுத்தி விட்டு பைல்கள் இருக்கும் அலமாரியில் இருந்து அனைத்தையும் வெளியே எடுத்து போட்டு ஒவ்வொன்றாய் அடுக்கி வைக்க ஆரம்பித்தாள்.

நடுவில் வெண்பாவின் பெயர் போட்ட திவ்யாந்தின் மருத்துவமனை பைல் ஒன்று இருந்தது.

சிரத்தையின்றி அதை பிரித்தவள் அதில் பார்வையை சுழற்ற அதிலிருந்த விஷயம் அவளுள் அடுத்த பிரளயத்தை ஏற்டுத்தியது.

கால்கள் துவள அப்படியே கீழே அமர்ந்துவிட்டாள். மீண்டும் மீண்டும் அந்த ரிப்போர்ட்டை படித்து தனக்குள் கிரகித்துக் கொள்ள எண்ணியவளுக்கு ஏனோ அது அத்தனை சுலபமாய் இருக்கவில்லை.

எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாளோ தெரியாது அறைகதவு தட்டப்படும் ஓசையில் தெளிந்தவள் மெதுவாய் நடந்து சென்று கதவை திறக்க சிந்தாம்மா மதிய உணவிற்காக அழைத்தார்.

“இல்லம்மா பசிக்கல. நீங்க சாப்டுருங்க. நா அப்பறமா சாப்ட்டுகிறேன். ”

“ஏன் கண்ணு முகமே சரியில்ல என்னாச்சு?”

“ம்ம் ஒண்ணுமில்லமா தூங்கிட்டேன். இன்னும் தூக்கமா தான் இருக்கு அதான். தூங்கி எழுந்து சாப்பிட்டுகிறேன். ”

“ம்ம் சரி டா படுத்துக்கோ. ”

கதவை சாத்திவிட்டு வந்து கட்டிலில் அமர்ந்தவளுக்கு அப்போதும் அழ வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை.

அலமாரியையே வெறித்திருந்தவள் கீழிருந்த பைல்களை எல்லாம் அடுக்கி ஒழுங்குபடுத்திவிட்டு அந்த ஒரு பைலை மட்டும் எடுத்து தன் தலையணைக்கடியில் வைத்துவிட்டு படுத்துக் கொண்டாள்.

இலக்கில்லாமல் எங்கோ வெறித்தவாறே படுத்துக் கிடந்தவள் மாலை ஆனதும் எழுந்து சிந்தாம்மாவிற்காக பெயருக்கு ஏதோ கொரித்துவிட்டு அவரோடு ஹாலிலேயே அமர்ந்திருந்தாள்.

டீவி ஒருபுறமும் சிந்தாம்மாவின் பேச்சு மறுபுமுமென அடுத்த ஒரு மணிநேரம் கழிய திவ்யாந்த் ட்யூட்டி முடித்து வந்தான்.

வந்தவன் வழக்கம்போல் இரண்டு நிமிடங்கள் ஹாலில் அப்படியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.

“ஒரு வழியா இந்த காலேஜ் பிரச்சனை முடிஞ்சுது. ஆனாலும் மனசு தான் ஆரவே மாட்டேங்குது.

அம்மா அப்பாக்கு அடுத்த ஸ்தானம் ஆசிரியர்கள் அப்படி இருக்க அவங்களில் சிலரே இப்படி கேவலமா நடந்துகிட்டா பெத்தவங்க யாரை தான் நம்புவாங்க.

அதுவும் ஒவ்வொரு தடவையும் அந்த பொண்ணு அழுதுட்டு வந்து நிக்கும்போது மனசே பாரமாய்டும்.

சின்ன பொண்ணு நடக்குறதையெல்லாம் என்கிட்ட சொல்லறதுக்குள்ள கூனிக் குறுகிப் போவா.

என்னதான் அண்ணன்னு சொன்னாலும்  நானும் ஒரு ஆம்பளை தான. நிஜமா ரொம்ப அவமானமா இருக்கு கண்ணம்மா.

நாம பாதுகாக்க வேண்டிய பெண்களுக்கு நாமே எதிரியா இருக்குமேனு தோணுது.

பஸ்ல ரோட்ல வேலை பார்க்குற இடத்துல இதெல்லாம் போய் இப்போ படிக்குற இடத்துலயே இப்படினா என்னதான் டா பண்ணுவாங்க.

என்னவோ இதைபத்தி எவ்ளோ பேசுனாலும் ஒண்ணும் பண்ண முடியாம கையாலாகாம தான் இருக்கோம்.

சரி சிந்தாம்மா சாப்பாடு எடுத்து வைங்க ரொம்ப பசிக்குது. கண்ணம்மா நீயும் சாப்டு.

டூ மினிட்ஸ் நா ரெப்ரெஷ் ஆகிட்டு வரேன்”,என்றவன் எழுந்து சென்று உடைமாற்றி வந்து அமர வெண்பாவும் அமைதியாய் அவனருகில் வந்தமர்ந்தது உணவை உண்ண ஆரம்பித்தாள்.

உணவை முடித்தவள் அவள்போக்கில் அறைக்குள் சென்றுவிட திவ்யாந்த் சில நிமிடங்களில் உள்ளே வந்தான்.

“கண்ணம்மா என்னாச்சு ரொம்ப டல்லா தெரியுற?”

“ம்ம் திவா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். ”

“சொல்லுடா என்னாச்சு?”

“இல்ல இத்தனை நாள் நடந்த குழப்பத்துல இதைபத்தி கேக்கவே தோணாம போச்சு. ”

“எதைப்பத்தி?”

“அது வந்து உங்க ஹெல்த் இஷு பத்தி. ”

“எனக்கா எனக்கென்ன டா?”

“இல்ல நமக்கு குழந்தை. ”

“ஓ. அது.. அதைப்பத்தி சொல்றியா.”,என்றவன் அவனாய் அமைதி ஆனான்.

“சாரி உங்களை கஷ்டப்படுத்தனும்னு கேட்கல. இருந்தாலும் என்ன இஷுனு தெரிஞ்சா ட்ரீட்மெண்ட் பத்தி  யோசிக்கலாம் தான. ”

“ம்ம் நீ சொல்ல வர்றது புரியுது கண்ணம்மா ஆனா இதுக்கு ட்ரீட்மெண்டே இல்லனு சொல்லிடாங்க. ”

“ஓ…. ”,என்றவளின் முகம் இன்னுமாய் வாடிப்போக அவனுக்கு ஒரு நொடி மனம் பதைத்துப் போனது.

மெதுவாய் அலமாரியில் ஏதோ தேடுவதாய் எழுந்துச் சென்றவன் பைல்களை ஆராய அங்கு அந்த பைல் இல்லாததை கண்டு இதயமே நின்று போனதாய் உணர்ந்தான்.

“இதையா தேடுற திவா.”, என்றவள் தலையணை அடியிலிருந்து அந்த பைலை எடுத்து அவன் முன் நீட்ட அப்படியே கட்டிலில் அமர்ந்து விட்டான்.

“கண்ணம்மா. ”

“ஏன் திவா இப்படி பண்ண?சொல்லிருக்கலாமே. ”

“தாங்கிருக்க மாட்ட டா. இப்பவும் உன் மனநிலைமை எனக்கு புரியுது. இருந்தாலும் எதை நினைச்சும் கவலைபடாத டா. நா இருக்கேன். ”

அவன் மடியில் தலை சாய்த்துக் கொண்டவள் மெதுவாய்,

”என்ன ப்ராப்ளம் திவா. க்யூர் பண்ணவே முடியாதா?”

“கண்ணம்மா இதை மறந்துடேன் ப்ளீஸ். ”

“ஒண்ணும் பீல் பண்ண மாட்டேன் சொல்லு திவா. ட்ரீட்மெண்ட் இல்லையா?”

“கண்ணம்மா. அன்னைக்கு ரிபோர்ட் வாங்க போனப்போ என்னோடதை ரிவ்யூ பண்ணிட்டு முதல்ல கொடுத்தாங்க.

அடுத்ததா உன்னோடதை பாத்துட்டு விஷயத்தை சொன்னப்போ ரொம்வே உடைஞ்சு போயிட்டேன்.

கர்பப்பை ரொம்பவே வீக் அதாவது ஒரு குழந்தையை தாங்க கூடிய சக்தி இல்லை அதனால ப்ரெக்னென்ஸிக்கான வாய்ப்பு இல்லைனு சொன்னாங்க.

என்ன பண்றதுனு ஒரு நிமிஷம் ஒண்ணும் புரியல ஆனா கண்டிப்பா இதை உன்கிட்ட சொல்ற தைரியம் எனக்கு இல்லனு மட்டும் கன்பார்மா எனக்கு தெரியும்.

டாக்டர் என்னனென்னவோ சொன்னாங்க ஒண்ணும் மண்டையில் ஏறல இரண்டு நிமிஷம் யோசிச்சேன் டாக்டர்கிட்ட சொல்லி எனக்கான ரிப்போர்ட்டை மாத்த சொன்னேன். முடியவே முடியாதுனு சொன்னாங்க.

ஒருவழியா அவங்களை கன்வின்ஸ் பண்ணேன். உன் ரிப்போர்ட்டை அங்கேயே வச்சுட்டு என்னோடதை மட்டும் எடுத்துட்டு வந்தேன்.

ஆனா விஷயத்தை கேட்டு நீ கொஞ்சமும் அலட்டிக்காம அத்தனை சாதாரணமா எடுத்துப்பனு நா நினைக்கவே இல்ல.

அந்த ரிப்போர்ட்டை கண்ணால கூட பார்க்கல நீ. அந்த செகண்ட் உன்னை எனக்கும் மேல நா நேசிக்க ஆரம்பிச்சேன் கண்ணம்மா.

அத்தனை பெரிய விஷயத்தை ஒண்ணுமேயில்லங்கிற மாதிரி நீ எடுத்துகிட்டது நா பண்ணதுல எந்த தப்பும் இல்லனு நம்ப வச்சுது.

என்னால முடிஞ்ச வரை இந்த விஷயத்தை இப்படியே இருக்க விடணும்னு  நினைச்சேன்.

இந்த காலேஜ் விஷயமா அலைய வேண்டியது இருந்ததுனால இந்த பைலை என் ரூம்ல வைக்க வேண்டாம்னு இங்க கொண்டு வந்து வச்சேன்.

ப்ளீஸ் டா நீ எதுவும் போட்டு வருத்திக்காத குழப்பிக்காத. நாம இதுக்கு ஒரு நல்ல முடிவை கொண்டு வரலாம். ”

சலனமே இல்லாமல் அவன் முகத்தை பார்த்தவள்,

”நீ ஏன் திவா இன்னொரு மேரேஜ் பண்ணிக்க கூடாது?”

“கண்ணம்மா!!!இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினாலும் நா என் கன்ட்ரோலை இழந்துடுவேன். இதை இப்படியே விட்டுரு. ”

முதன்முறையாய் திவாவின் குரலிலும் கண்களிலும் அத்தனை தீவிரம்.

சிறிது கோபம் இருந்ததோ என்று கூட தோன்றியது வெண்பாவிற்கு.

அவனைப் பற்றி அத்தனை அவதூறு பேசிய போதும் குழந்தை பிறப்பதில் பிரச்சனை தன்னிடம் என்று கூறியபோதும் கூட வராத அந்த கோபமும் தீவிரமும் அவளின் இந்த வார்த்தைக்கு வருகிறதெனில் அது எத்தனை தவறான ஒரு பேச்சு என்பது வெண்பாவிற்கு நன்றாகவே விளங்கியது.

மெதுவாய் எழுந்து அமர்ந்தவள் அவன் முகம் பார்த்து,

“கோபபடாத திவா. வெறும் குழந்தைக்காக உன்னை கல்யாணம் பண்ண சொல்லல ஏற்கனவே உனக்கு யாருமில்லனு எவ்ளோ பீல் பண்ணிருக்க அதுக்காக தான் சொல்றேன்.

அது மட்டும் இல்லாம உன்னோட இந்த காதலுக்கு முழு தகுதியில்லாதவ நான். ”

“வில் யூ ப்ளீஸ் ஷட் அப் கண்ணம்மா. திஸ் இஸ் தி லிமிட். என்ன நினைச்சுட்ட என்னை பத்தியும் என் காதலை பத்தியும்.

நீ தான் டா நான். உன்னை தவிர வாழ்க்கைனு ஒண்ணு இல்லவே இல்ல எனக்கு அது குழந்தையாவே இருந்தாலும் சரி.

ஐ பெக் யூ இன்னொரு தடவை இப்படி பேசி கஷ்டப்படுத்தாத கண்ணம்மா. ப்ளீஸ்.

என்னால இத்தனை சத்தமா கூட பேச முடியும்னு இன்னைக்கு உன்னால தான் தெரிஞ்சுகிட்டேன்.

எல்லாரும் மாதிரி தான் டா நானும் சராசரி மனுஷன் என் பொறுமைக்கும் இவ்ளோ தான் எல்லை இருக்கு. வேணாம் இதுக்கு மேல இதைப்பத்தி எதுவும் பேசாத டா. ”

திவ்யாந்த் அடுத்தடுத்த அதிர்வுகளால் நொந்து போயிருந்தான்.

எல்லாமே தன்னை மீறி நடக்கும் செயல் என்பது புரிந்தாலும் அதை அத்தனை எளிதாய் எடுத்துக் கொள்ளத்தான் முடியவில்லை. அதுவும் வெண்பாவின் வாயால் இப்படியான வார்த்தைகளை அவனால் கேட்கவும் முடியவில்லை.

வெண்பாவோ இத்தனை ஆர்பார்ட்டத்திலும் சிலையென இருந்தாளேயன்றி அழவுமில்லை வருத்தமுமில்லை.

ஆனால் இன்னதென சொல்ல முடியாத ஒரு உணர்ச்சி அவள் முகத்தில். 15 நிமிடங்களுக்கும் மேல் அமைதி மட்டுமே பிரதானமாய் இருந்தது அவ்வறையில்.

சற்றே தெளிந்தவள் நிறுத்தி நிதானமாய் திவ்யாந்திடம்,

”நா கொஞ்ச நாள் தனியா இருக்கேன் திவா. ”

“தனியானா புரியல??!”

“தனியா உன்னையோ சிந்தாம்மாவையோ பார்க்காம ஹாஸ்ட்டல்லயோ இல்ல எங்கேயோ.

ஆனா இங்க வேணாம் உங்க முகத்தை பார்த்து பார்த்து என் மேல எனக்கே குற்றவுணர்ச்சி அதிகமாகி அதுவே என்னை பைத்தியமாக்கிடும்.

அதுமட்டுமில்லாம நா உன் பக்கத்துல இருக்குற வர நீயும் உன் வாழ்க்கையை பத்தி யோசிக்க மாட்ட திவா.

என்னால உன் வாழ்க்கைல வந்த குழப்பம் எல்லாம் போதும். அதனால தான். ”

“போ கண்ணம்மா உனக்கு எங்க போகணும்னு தோணுதோ போ.

ஆனா உன் திவாவை உயிரோட கொன்னுட்டு தான் போகப் போற அதைமட்டும் மனசுல பதிய வச்சுக்கோ. ”

“திவா ப்ளீஸ். ”,என்றவளுக்கு கண்கள் தானாய் கலங்க அமைதியாய் கண்ணீர் வடித்தாள்.

அவளருகில் வந்தவன் மறு சிந்தனையின்றி அவளை தன்னோடு சேர்த்துக் கொள்ள அத்தனை இறுக்கமாய் அவனோடு ஒன்றிக் கொண்டாள்.

முதல் நாள் பள்ளி செல்லும் பிள்ளை தாயை பிரியும் பாவம் அந்த இறுக்கத்தில்.

“ப்ளீஸ் திவா புரிஞ்சுக்கோ இங்க இப்படியே இருந்தேன்னா கண்டிப்பா நா பைத்தியம் ஆய்டுவேன்.

நா பேசின வார்த்தைகளும் உன்னை நோகடிச்ச நிமிஷங்களும் மட்டுமே தான் என் மனசை சுத்தி சுத்தி வருது. என்னை என்ன பண்ண சொல்ற. நெஞ்செல்லாம் அடைக்குது.

இந்த இரண்டு நாள்லயே சாப்பாடு இறங்க மாட்டேங்குது திவா.

எல்லாத்துக்கும் மேல நீங்க ரெண்டு பேரும் எனக்காக பார்த்து பார்த்து காட்டுற அன்பு அது என்னை கூனிக் குறுக வைக்குது. நா என்ன தான் பண்ணட்டும்?”

தன்னிடமிருந்து அவளை பிரித்தவன்,

”கண்ணம்மா அழறத நிறுத்து முதல்ல. போதும் வருத்தம் அழுகை எல்லாம் போதும்.

எப்பவுமே உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். இப்பவும் அந்த ஒரு காரணத்துக்காகவே நீ கேக்குற விஷயத்துக்கு நா சம்மதிக்குறேன்.

ஆனா தனியா எங்கேயோ எல்லாம் விட முடியாது. நீ எங்க போனாலும் சிந்தாம்மாவும் உன்கூட தான் வருவாங்க.

உனக்கா என்னைக்கு என்கிட்ட வரணும்னு தோணுதோ அப்போ வா. அதுவரை நா உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்.

அதே நேரம் உன்னை என் கண் பார்வைல தான் வச்சுருப்பேன். சம்மதம்னா சொல்லு அடூத்து என்ன பண்ணலாம்னு யோசிப்போம்.

இதுக்கு மேல பேசுறதுக்கு ஒண்ணுமில்ல. நீ சொல்றத பொறுத்து நா சிந்தாம்மாகிட்ட பேசுறேன். ”

அதன் பிறகு ஒருவழியாய் அவளை சம்மதிக்க வைத்து சிந்தாம்மாவிடமும் பேசி அவரை சம்மதிக்க வைத்து வீடு தேடும் நேரம் பழைய வீட்டின் ஓனரே அந்த வீட்டை விற்கப் போவதாய் கூற திவ்யாந்தே அந்த வீட்டை வாங்கிக் கொண்டான்.

அடுத்த ஒரு வாரத்தில் அனைத்து வேலைகளும் முடிந்து இருவருமாய் அந்த வீட்டிற்குக் கிளம்பினர்.

திவாவின் உயிரற்ற அந்த பார்வை அவளை குத்திக் கிளித்தது இருந்தும் இந்த முடிவை மாற்றிக் கொள்ள மனமின்றி கிளம்பிச் சென்றாள்.

திவ்யாந்த் அவளை அனுப்பியதற்கு முக்கிய காரணம் தனிமை அவளது மனதிற்கு தெளிவை கொடுக்கும் என்பது ஒன்று.

அதிக நாட்கள் அவளால் தன்னை விட்டு இருக்க முடியாது சீக்கிரமே தன்னிடம் திரும்பி விடுவாள் என்பது இரண்டு.

ஆனால் அதையும் மீறியதாய் இருந்தது வெண்பாவின் குற்றவுணர்ச்சி. முதல் ஒரு மாத காலம் முடிவதற்குள் ஒரு வழி ஆகிப் போனாள்.

திவ்யாந்தும் சொன்னபடி அவளை தன் கண்ணெதிரில் வைத்திருந்தானே ஒழிய ஒரு நாளும் அவள் கண்முன் வரவில்லை

சிந்தாம்மா வாரத்திற்கு ஒருமுறையோ இருமுறையோ திவ்யாந்தை காண சென்று வருவார்.

இருவருக்கும் ஆதரவாய் இருப்பதை தவிர அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதே உண்மை.

அப்படி இப்படியாய் ஆறு மாதங்களை கடந்தும் கூட வெண்பாவின் மனம் மாறாமல் போக திவ்யாந்திற்கோ இதற்கு மேல் முடியாது என தோன்றிவிட்டது.

நாட்டியாலயாவில் எட்டு மாதங்களுக்குப் பின் அவளை சந்தித்த தருணம் நிச்சயமாய் மறக்க முடியாத ஒன்று.

அப்பொழுதே அப்படியே தன்னோடு வந்துவிட மாட்டாளா என வெகுவாய் துடித்த மனத்தை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.

அன்றிலிருந்து அவளை பார்க்கும் சந்தர்ப்பங்களை தவிர்க்காமல் பேச ஆரம்பித்தான்.

அப்படி இப்படியாய் இதோ நாளை முதல் தன்னோடு தன்னருகிலேயே இருக்கப் போகிறாள்.

பழைய நினைவுகளில் கரைந்தவனுக்கு மறுபடியும் ஒருமுறை அத்தனை நிகழ்வுகளோடும் வாழ்ந்து வந்தது போன்ற பிரமை.

நேரம் நடுநிசியை தாண்டியிருக்க கடினப்பட்டு தூக்கத்தை வரவழைத்து உறங்கியவன் அதிகாலையிலேயே எழுந்து குளித்து தயாராகி வெண்பாவை அழைத்து வர மருத்துவமனைக்குச் சென்றான்.

அப்போது தான் சிந்தாம்மாவும் வெண்பாவும் எழுந்தே அமர்ந்திருந்தனர்.

சிந்தாம்மா அவனை பார்த்து புன்னகைத்தவாறே தங்கள் உடைமைகளை எடுத்து வைக்க ஆரம்பிக்க மெதுவாய் அவளருகில் வந்தவன் கன்னம் தொட்டு தன்புறம் இழுத்து நெற்றியில் இதழ்பதித்து

”குட் மார்னிங் கண்ணம்மா. இப்போ எப்படி இருக்கு?”

“குட்மார்னிங் திவா. இப்போ பெட்டர். ஏன் இவ்ளோ சீக்கிமே எழுந்துட்ட. ரெஸ்ட் எடுத்துருக்கலாமே. ”

“நீ நம்ம வீட்டுக்கு வர்றதே ஆயிரம் யானை பலம் தானே எனக்கு. சரி நா போய் டிபன் வாங்கிட்டு பில் செட்டில் பண்ணிட்டு வரேன்.

பொறுமையா ரெடி ஆகு டா. சிந்தம்மா இப்போ வந்துட்றேன். ”முகம் சலனமில்லாமல் இருந்தாலும் அவனின் நடை சிறுபிள்ளையாய் துள்ளித் திரிந்து கொண்டுதான் இருந்தது.

இருவருக்கும் உணவு வாங்கிக் கொடுத்து ஹாஸ்பிட்டல் பில் செட்டில் செய்து டிஸ்சார்ஜ் வேலைகளையெல்லாம் முடித்து மூவருமாய் கிளம்பும் போது மணி பத்தை கடந்திருந்தது.

வீட்டை அடைந்தவுடன் சிந்தாம்மா வேகமாய் சென்று ஆரத்தி கரைத்து கொண்டு வர அதற்குள் காரை நிறுத்திவிட்டு வெண்பாவை கைபிடித்து அழைத்து வந்தான்.

உள்ளே நுழைந்தவளை தனதறைக்கு அழைத்துச் செல்ல வாசல் வரை வந்தவள் அங்கிருந்தே அறையை சுற்றி பார்வையை சுழற்றினாள்.

அத்தனை அத்தனை அழகான தருணங்களும் கண்முன் காட்சியாய் விரிந்தது.

இறுதியாய் கடந்த கசப்புகளுக்கும் மனதை நிறைக்க விழிமுடி அத்தனையையும் கிரகித்துக் கொள்ள முயன்றவளை தோள்பற்றி உள்ளே அழைத்துச் சென்றான்.

கட்டிலில் சாய்வாய் அமர வைத்தவன் காலை நீட்டுமாறு தூக்கி வைக்க வெண்பா அவன் கைப்பிடித்து அருகில் அமர்த்திக் கொண்டாள்.

“மிஸ்ட் யூ சோ மச் திவா. லவ் யூ. ரொம்ப கஷ்டபடுத்திட்டேன். சாரினு ஒரு வார்த்தை சொல்றத தவிர வேற என்ன பண்ண முடியும்.

பட் நிஜமா நீ மட்டும் தான் என் வாழ்க்கைனு நானும் புரிஞ்சுகிட்டேன் திவா. என்னை விட்டு எங்கேயும் போக மாட்ட தான. நிஜமாவே ஃபாரின் ட்ரிப் போறியா திவா. ”

“இப்போ வர கன்பார்ம் பண்ணல கண்ணம்மா. எனக்கு எங்க இருந்தாலும் பிரச்சனை இல்லை.

உன்கூட இருக்கணும். உன் பக்கத்துலயே வேலை முடிஞ்சு வந்தா சிரிச்சுட்டே இருக்குற இந்த முகம் இருக்கணும்.

நைட் சேர்ந்து சாப்ட்டு கதைபேசி கை கோர்த்து பொழுது போக்கணும். தூக்கத்துல கூட என் கை எட்ற தூரத்துல நீ இருக்கணும் கண்ணம்மா.

வாழ்க்கை மொத்தத்துக்கும் அது மட்டும் தான் வேணும் டா. ”

“அப்போ குழந்தை??”

“கண்ணம்மா. கொஞ்ச நாள் போகட்டும் அதைபத்தி யோசிப்போம். ”

“இல்ல திவா அது மட்டும் தான் உன் வாழ்க்கையை முழுமையாக்கும்னு எனக்குத் தெரியும் திவா. உனக்கு தெரியாதது இல்ல.

எத்தனையோ வழி இருக்கு நாம டாக்டரை கன்சல்ட் பண்ணலாம். ”

“என்ன சொல்ற டா?”

“வாடகைத் தாய் அப்படி எதாவது…. ”

“கண்ணம்மா அப்படி ஒரு விஷயத்தை யோசிக்கல. நமக்கு வசதி இருக்குதான் நீ சொல்றத செய்யலாம் தான்.

ஆனா அதுகூட ஒருவிதத்துல சுயநலம் தான் டா. யோசிச்சு பாரு நீ சொல்ற மாதிரி வாடகை தாயா இருக்குறவங்க எல்லாருமே தன் சூழ்நிலையால பணத் தேவைக்காக தான் அதுக்கு ஒத்துக்குறாங்க.

ஆனா அப்டி அவங்க கடமைக்கு பெத்துகிட்டாலும் பத்து மாசம் வயித்துல சுமந்தது பொய்னு ஆய்டுமா சொல்லு.

வலிக்க வலிக்க பெத்தெடுத்த கொஞ்ச நாள்லயே உங்களுக்கும் குழந்தைக்கும் எந்த சம்மந்தமும் இல்லனு சொல்றதெல்லாம் கொடுமை டா. அந்த பாவம் நமக்கு வேண்டாம்.

என் விருப்பம்னு கேட்டனா கண்டிப்பா குழந்தையை தத்தெடுத்துக்கலாம். அதுவும் உனக்கு விருப்பம் இருந்தா இல்லைனா இப்படியே விட்டுருவோம் டா.

ஆசிரமங்கள்ல ஆதரவு இல்லாம என்னை மாதிரி எத்தனை எத்தனை பச்சை குழந்தைங்க இருக்காங்க.

அவங்கள்ல ஒருத்தரோட வாழ்க்கையை நாம பொறுப்பு எடுத்துப்போம் டா.

அந்த குழந்தையின் சந்தோஷம் நமக்கு எத்தனை குழந்தை பிறந்தாலும் கண்டிப்பா கிடைக்காது.

ஆனா இதெல்லாம் எந்வித கட்டாயமும் இல்ல. நீ மொதல்ல நல்லா ரெஸ்ட் எடு. அப்பறம் பொறுமையா யோசிச்சு சொல்லு டா. ”

“எவ்ளோ அழகா யோசிக்குற திவா நீ. இதுக்கு மேல எனக்கு தனியா யோசிக்க இந்த விஷயத்துல ஒண்ணுமேயில்ல.

கண்டிப்பா நீ சொல்றபடியே செய்யலாம். ஆனா பெண் குழந்தை தான் வேணும் திவா. உன் பொண்ணை நீ ராஜகுமாரி மாதிரி வளர்க்குறத ஆசை தீர பார்க்கணும். ”

காதல் பொங்க தன்னவளை இறுக அணைத்துக் கொண்டான். அத்தனை மாதப் பிரிவும் ஒன்றுமில்லையென மாறிப் போனது இருவருக்கும்.

காதல் காமம் அன்பு பாசம் அனைத்தையும் தாண்டிய ஒரு வித உணர்வு இருவருக்குள்ளும் நிறைந்திருந்தது.

ஒரு மாதத்திற்குப் பின்,

“வெண்பா கண்ணு பாப்பா அழறா பாரு. நா இதோ கஞ்சி எடுத்துட்டு வந்துட்டே இருக்கேன். சீக்கிரம் வாம்மா. ”

குளியலறையிலிருந்து வேகமாய் தலைக்கு துண்டை கட்டியவாறு வந்தவள் கட்டிலில் இருந்த ஒரு வயது மகளை கையில் ஏந்திக் கொண்டாள்.

“அம்மு குட்டி அம்மா வந்துட்டேன் டா. அழாதீங்க. பாட்டி உனக்கு புவா எடூத்துட்டு ஓடி வராங்க. சமத்துல. ”

சிந்தாம்மா அதற்குள் கஞ்சியோடு ஓடி வந்தார். வெண்பா தன் செல்ல ரோநிகாவை மடியில் எடூத்து வைத்து அதை ஊட்ட ஆரம்பிக்க பாதி சாப்பிட்ட போதே தூக்கத்தில் கண்ணயர்ந்து விட்டாள் அந்த செல்ல தேவதை.

சிந்தாம்மா அவளை தன் கையில் ஏந்தி கொண்டார்.

”நா அங்க போட்டுக்குறேன் கண்ணு. நீ பொறுமையா ரெடி ஆகு திவா வந்தவுடனே மூணு பேருமா கோவிலுக்கு போய்ட்டு வந்துருங்க”,என்றவாறு வெளியே சென்றார்.

அதன்பின் அலமாரியில் இருந்து திவாவின் விருப்பமான புடவையை எடுத்துக் கட்ட ஆரம்பித்தாள்.

சில நிமிடத்திலேயே உள்ளே வந்தவன் பின்னிருந்து தன்னவளை இறுக்கிக் கொள்ள வெண்பாவோ வேகமாய் விலகி நின்றாள்.

“ஐயோ என்ன திவா நீங்க. சிந்தாம்மா வந்துர போறாங்க. ”

“அட என் பிரின்ஸஸ் வந்தப்பறம் கண்ணம்மா ரொம்ப தான் வெட்கப்படுறாளே. என்ன கண்டுக்குறதே இல்ல. ”

“ம்ம் ஆமா ஆமா கண்டுக்காம தான் இருக்கா. ”, என்றவளுக்கு குரல் உள்ளேயே போயிருந்தது.

அவன்புறம் திரும்பி அவன் மார் சாய்ந்து கொண்டவள்,

”நவ் லைஃப் இஸ் சோ ப்யூட்டிபுல் திவா. குட்டிம்மாவ பார்க்க பார்க்க மனசு நிறைஞ்சு போகுது.

இத்தனை அழகான குழந்தையை அநாதையா விடுறதுக்கு எப்படி தான்…”

“கண்ணம்மா…இப்போ இவ நம்ம பொண்ணு. வாழ்க்கை மொத்தத்துக்கும் நமக்கே நமக்கான சொந்தம். வேற எந்த சிந்தனையும் உனக்கு வரக் கூடாது. புரியுதா. ”

அந்த பேச்சை மாற்ற விரும்பியவளாய்,

”புரியுது புருஷா. வர வர நீங்க தான் பிரின்சஸ் பிரின்சஸ்னு என்னை டீல்ல விடுறீங்க. ”

“அப்படியா அப்போ நேத்து நைட் பிரின்சஸ் தொட்டில்ல தூங்கினப்பறம் இவ்ளோ பெரிய பெட் இருந்தும் என் மேல இறுக்கிப் பிடிச்சு தூங்கினது யாரு கண்ணம்மா. உனக்கு தெரியுமா. ”

“ஐயோ திவா மானத்தை வாங்காதீங்க. நா போறேன்”,என்றவளைப் பிடித்து சுவற்றோடு நிறுத்தியவன் ஒரு வார்த்தையும் உதிர்க்காமல் அவள் விழி நோக்கி நிற்க அதன் அர்த்தம் உணர்ந்து தன் கரம் கொண்டு அவன் விழி மூடியவள் தன்னிதழை அவனோடு சேர்த்திருந்தாள்.

அவனிடமிருந்து தன்னை விடுவித்த நொடி அவள் விழி கூறும் பாஷை அவன் உணர்ந்தவனாய் சற்றே சிரித்தவாறு,

“நெரித்த திரைக்கடலில் நின்முகங்கண்டேன்;
நீல விசும்பினிடை நின்முகங்கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங்கண்டேன்;
சின்னக் குமிழிகளில் நின்முகங்கண்டேன்;
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே,
பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை;
சிரித்த ஒலியினிலுன் கைவிலக்கியே,
திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்

என் கண்ணம்மா!!!”,நிதானமாய் கூறி முடிக்க அவன் சட்டையை பற்றி இன்னும் தன்மேல் சாய்த்தவள் இந்த கண்ணம்மா வா இருக்குறதுக்காகவே இன்னும் நூறு ஜென்மம் எடுக்கணும் திவா.

ஆனா இந்த ஜென்மம் போல எந்த ஜென்மத்துலையும் உன்னை கஷ்டப்படுத்தாம உன் காதலை உருகி உருகி உயிர்க்குள் கலந்து வைக்கணும். ”.

“நேசத்தால் எனை நெகிழ வைத்தவன் நீ

காதலால் எனை கைதியாக்கியவன் நீ

அன்பால் எனை அரவணைத்தவன் நீ

பாசத்தால் எனை பித்தாக்கியவனும் நீ

விழியின் வழி உயிர் கலப்பதால் தான் காதலும் கடவுளாகிறதோ!!”

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

4 comments

Kavi Natarajan October 7, 2026 - 9:06 am

Super story ma 👌👌👌👌👌👌

Gayathri Sivaraman October 7, 2026 - 3:09 pm

Wowww….what a love and lovely couple…super narration sis…super love story💕

srichitra October 7, 2026 - 8:07 pm

Superb story ma. Congrats.

suganyavel October 7, 2026 - 8:54 pm

Nice👍

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode