கார்த்திக் மொத்தமாய் குழம்பிப்போயிருந்தான்..தான் என்ன நினைக்கிறோம் என்று அவனால் வார்த்தைகளால் கூறமுடியவில்லை எனினும் ஏதோ ஒன்று மனதினுள் உழன்று கொண்டேயிருந்தது..

சஹானாவின் மாறுதல்களால் சிறு பயமும் ஆக்கிரமித்திருந்தது..

எப்போதும் இயல்பாக இருப்பவள் அவனின் அருகாமையில் அதீத மகிழ்ச்சி கொள்கிறாளோ அதனால்தான் வித்யாசமாக நடந்து கொள்கிறாளோ அப்படி எடுத்து கொண்டாலும் அந்த பார்வை அதை சத்தியமாய் அவனால் மறக்க முடியாது எத்தனையோ காலம் கடந்து அவனை பார்ப்பதை போன்ற காதல் ஏக்கம் அத்தனையும் இருக்கும் அந்த பார்வையில்..

இதை யாரிடம் கூறுவது அதை அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என யோசிக்க யோசிக்க தலை வெடித்துவிடும் போல் இருந்தது எது எப்படிஇருப்பினும் தன் சஹியை யாரிடமும் விட்டுகொடுத்து பேச அவன் தயாராக இல்லை..

இதற்கு முடிவு கடவுளே கூறட்டும் என தலையை சிலுப்பிக் கொண்டு தன் வேலையை பார்க்க தொடங்கினான்..

அன்றிரவு சஹானா கார்த்திக்கை போனில் அழைக்க.

சொல்லு சஹி என்ன பண்ணிட்டு இருக்க..?

ம்ம் வழக்கம் போல வெட்டி ஆபீஸர் தான் கார்த்திக்.. உன்ன சண்டே பாத்தது அடுத்து எப்போ மீட் பண்ணலாம்..

அடிப்பாவி சண்டே முடிஞ்சு டூ டேஸ்தான் ஆகுது ஏதோ ஒரு மாசம் ஆனமாறி பில்டப் குடுக்குற..

அப்பவாவது நீ என்ன பாக்க வருவியாநுதான்..ஐ மிஸ்ட் யூ சோ மச் மேன்..

அச்சோ சஹிகுட்டி மிஸ் பண்றாங்களா அப்படி விட கூடாதே சரி நாளைக்கு மார்னிங் இங்க பக்கத்துல இருக்குற சிவன்-ராமர் கோவில்ல மீட் பண்ணலாம் ஓ.கே வா..

ஹேஹே தேங்க்யு புஜ்ஜுப்பா..இனி ஜாலியா கனவுல உன்கூட டூயட் பாடுவேன் பை குட்நைட்..

முகத்தில் புன்னகை அரும்ப போனை வைத்தவனுக்கு ஏனோ அவளின் அந்த மாற்றத்தை பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை நாளைய விடியல் எதற்கு காத்திருக்கிறதோ என்ற எண்ணத்தோடே  கண்ணயர்ந்தவனுக்கு மறுபடியும் அதே காட்சிகள் தொடர்பில்லாமல் நகர இறுதியாய் வைலட நிற பட்டுபுடவையில் தலையில் இரத்தம்கொட்ட அவனின் சஹி ஏதோ கூறியவாறு தரையில் சரிய தூக்கிவாரி போட்டவாறு எழுந்தமர்ந்தான்..

அருகிலிருந்த தண்ணீரை முழுவதுமாய் குடித்து முடித்தும் படபடப்பு அடங்கவில்லை..

இதற்கு மேலும் இதை சாதாரணமாய் விடுவது தவறு என்று புரிய சிறிது நேர யோசனைக்குபின் நநாளை கோவிலிலிருந்து வந்து தன் தாயிடம் அனைத்தையும் கூறலாம் என முடிவெடுத்தான்..

முந்தைய நாளின் தாக்கத்தினாலேயே சீக்கிரமாக கிளம்பி கோவிலை அடைந்தான் கார்த்திக்..

சஹானாவிற்காக காத்திருக்கலாமென சிவன் சன்னதிக்கு எதிரே பிரகாரத்தில் அமர்ந்தான்..

ஏதோ சிந்தனையில் உள்ளே சந்நிதியை நோக்கியவாறு அமர்ந்திருந்தவனின் அருகில் அசைவு தோன்ற சட்டென திரும்பியவனின் வலப்புறம் காவி உடையணிந்து உடல் முழுதும் விபூதியாய் நெற்றியில் நாமத்தோடு ஒரு பெரியவர் இருக்க திடுக்கிட்டு ஒரு அடி நகர முற்பட்டவனை பார்த்து மென்மையாய் ஒரு சிரிப்பு அவரிடத்தில்..

என்ன செய்யவென தெரியாமல் சிறு புன்னகையை உதிர்த்தான்..

என்ன கார்த்திகேயா உனக்கு அப்பன் ஈசனை விட உன் மாமனைதானே பிடிக்கும் பிறகு ஏன் என் அப்பனை அப்படி பார்த்துக் கொண்டிருக்கிறாய்??

முதலில் அவர்பேச்சின் அர்த்தம் விளங்காமலிருக்க அவர் வார்த்தைகளை தனக்குள்ளே கூறிபார்த்தவனுக்கு சட்டென விளங்கியது..

ஆமா எனக்கு பெருமாள்தான் இஷ்டம்நு உங்களுக்கு எப்படி தெரியும்??

ம்ம்ம் தெரியும் இந்த ஈசன் அனைத்தையுமே தெரீயவைத்து ஆடும் ஆட்டம்தானே என்னுடைய இந்த பிறவியே..

இப்போது கூட நீ ஏன் இப்படி அமர்ந்திருக்கிறாய் என்று தெரியும்.,உன் குழப்பமும் தெரியும் உன் கனவின் காட்சிகளும் தெரியும்..

ஐயா…..

ம்ம் குழப்பம் வேண்டாம் கார்த்திகேயா உன்னவள் உன்னை அடைந்துவிட்டாள் இனி எந்த நிலையிலும் அவளுக்கு உற்றதுணையாய் இரு..

அவளை சுற்றி அரணாய் இருந்து அவளை வழிநடத்து அனைத்தும் கூடிய விரைவில் சரி ஆகும்..

அவனறியாமல் அவன் கைகள் அவரை வணங்க,

சர்வம் சிவமயம்..நாராயணாய நம..என்றவாறு அவர் அந்தபுறம் நகரவும் சஹானா இந்தபுறம் வரவும் சரியாயிருந்தது..

ஹே கார்த்திக்..சாரி வந்து ரொம்ப நேரம் ஆச்சா???

ஆங்ங் அதெல்லாம் இல்ல சஹி இப்போதான்..என அவர் சென்ற திசையை பார்க்க..

ஆமா நா வரும்போதே பாத்தேன் ஏன் அந்தபக்கம் பாத்து தனியா பேசிட்டுஇருந்த நா கூட போன் பேசுறியோநு நினைச்சேன் பாத்தா ப்ளுடூத் கூட இல்லையே??

அப்பட்டமான அதிர்ச்சியோடு அவளை நோக்கியவன்  என்ன சொல்ற நீ??

என்னாச்சுப்பா உண்மையான அக்கறையோடு கேட்டாள்..

ஓரளவு சுதாரித்தவன் ஒண்ணுமில்லடா ஏதோ யோசனைல இருந்துட்டேன்..

சரி மேடம் இப்போ சொல்லுங்க வேறன்ன ஸ்பெஷல்??

கார்த்திக் நாம எப்போ கல்யாண பர்சேஸ் போலாம்நு சொல்லு..

ஐ லவ் டு டூ ஷாப்பிங் அதுவும் வெட்டிங் ஷாப்பிங் செம ஜாலி சொல்லு சொல்லு..

ஆமா சஹி அம்மா கூட ஏதோ சொல்லிட்டுஇருந்தாங்க நா கேட்டு உனக்கு கன்பார்ம் பண்றேன்..

அதுவரை சமத்தா வீட்டுல இருப்பியாம்..கல்யாண பொண்ணு இப்படிலா வெளில சுத்தகூடாது புரியுதா??

ம்ம் சரி இன்னைக்கே அம்மா விடமாட்டேன்னுதான் சொன்னாங்க கோவில்நு சொன்னப்பறம்தான் ஏதோ கன்வின்ஸ் ஆனாங்க..என சோகமாய் கூற,

ம்ம் பாத்தியா சோ பீ அ குட்கேள்..இன்னும் 30 டேஸ்தான் அப்பறம் உனக்கு போரே அடிக்காம பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு என்று கண்ணடித்து கூற..

ம்ம் போதும் போதும் ஆனாலும் கிடைக்குற கேப்லலா ரொமெண்ஸ்ஸ தெளிச்சு விடுறியே எப்படி கார்த்திக் கண்ணா???

வாலு..சரி இப்படி விளையாட்டுதனமாவே இருக்கியே இவ்ளோ சின்ன வயசுல கல்யாணம் பண்ணி என்ன பண்ண போற??

எப்படி குடும்ப குத்துவிளக்கா மாற போற??என புன்னகையோடு கேட்க,

ஐயோ கார்த்திக் நா எப்பவுமே பெட்டர்மாஸ் லைட் தான்.. குத்துவிளக்குலா செட் ஆகாதுப்பா..

பட் ஷுவரர்லி ஐ வில் பீ த பெஸ்ட் வைஃப் அண்ட் அ பெஸ்ட் டாட்டர் இன் லா அதுல உனக்கு டவுட்டே வேணாம்..

என புருவத்தை மேலும் கீழுமாய் அசைத்தாள்..

அவள் முன்தலையை செல்லமாய் உலுக்கியவன்,டேக் கேர்டா என மென் குரலில் கூற..

அதான் நீ இருக்கல என்ன பாத்துக்க என்று கூறி அழகாய் சிரித்தாள்..

சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பியவன் சஹானாவைஅவள் வீட்டில் விட்டுவிட்டு வந்து தனதறைக்குள் புகுந்து கொண்டான்..

நடப்பது அனைத்தும் நல்லதற்காகவா இல்லையா ஒன்றும் புரியவில்லை ஒரு வேளை தன்னால்தான் சஹானாக்கு ஆபத்து எதுவும் இருக்குமோ என பலவாறு குழம்பியவன் ஒரு முடிவுக்கு வரும்போது மாலை சற்று இருட்டியிருந்தது..

வேகமாய் எழுந்து முகம் துடைத்து கிளம்பினான்..

அவனின் கட்டுபாட்டிற்குட்பட்டு பைக் பறந்தது.. சிவா வீட்டின் முன் வண்டியை நிறுத்தவும் சிவா வெளியே வரவும் சரியாயிருந்தது..

வாங்க கார்த்திக் என்ன அவ்ளோ அர்ஜெண்ட்டா பாக்கனும்னு போன்ல சொன்னீங்க??எதாவது ப்ராப்ளம்மா??

சிவா இத எனக்கு யார்கிட்ட ஷேர் பண்ணிக்கனே தெரில பட் என் பேமிலி கிட்ட சொல்றதவிட சஹி சைட்ல சொல்றது பெட்டர்நு தோணிச்சு அதுவும் பெரியவங்க இத எப்படி எடுத்துப்பாங்கநு தெரில இதனால சஹிக்கு எந்த டிஸ்டர்பென்ஸ் வர கூடாதுங்கிகிறதுல நா தெளிவாயிருக்கேன்..

அதனால தான் நீங்க இத புரிஞ்சுப்பீங்கநு உங்ககிட்ட வந்துருக்கேன்..

என்ன கார்த்திக் என்னென்னவோ பேசுறீங்க??சஹானா எதுவும் தப்பு பண்ணிட்டாளா??எதுவாயிருந்தாலும் தயங்காம சொல்லுங்க..

ச்சச்ச அப்படிலாம் ஒண்ணுமில்ல..அது வந்து..என ஆரம்பித்து சஹானாவின் மாற்றம் பற்றியும் காலையில் அந்த சாமியார் கூறியது வரை கூறினான்..

கேட்டவனுக்கோ அதை நம்பவா வேண்டாமா என்பதற்கே நேரம் எடுத்தது..

கார்த்திக் யு மீண்ட் டு சே சஹானாக்குள்ள ஆவி…

ஹே,.சிவா அந்த அளவு எனக்கு யோசிக்க பயமாயிருக்கு பட் அட் த சேம் டைம் இத ஆரம்பத்துலயே நிறுத்துறது பெட்டர்நு தோணுது ..

ம்ம்ம் புரியுது..பர்ஸ்ட் ஆப் ஆல் ரொம்ப தேங்க்ஸ் கார்த்திக் இத இவ்ளோ தெளிவா நீங்க கேண்டில் பண்றதுக்கு..

சிவா என் வைபஃப் அ நானே விட்டுகுடுத்துட்டா வேற யாரு அவள புரிஞ்சுப்பாங்க..

இறுக கட்டிகொண்டான் சிவா.. தேங்க்ஸ் மாப்ள உண்மையியிலேயே சஹானா குடுத்து வச்சவ..

என்ன சிவா நீங்க இது என் கடமை தான சரி என்ன பண்ணலாம்நு சொல்லுங்க??

நெற்றியை யோசனையாய் தடவியவன்,எக்ஸக்ட்டா என்ன பண்றதுநு தெரில பட் நாம ஏன் இன்னொரு தடவை கன்பார்ம் பண்ணி பாத்துற கூடாது??

ம்ம் நீங்க சொல்றதும் கரெக்ட்தான் எனக்கும் இது ஏற்கனவே தோணிச்சு பட் செய்றதுக்கு தைரியம் வரல..

கார்த்திக் அகெயின் அந்த டிப்ரெண்ஸ் அவகிட்ட தெரிய வர மாறி அவளோட பேசுங்க எதாவது க்ளூ கிடைக்குதாநு பாப்போம்..

அதுக்கப்பறம் இதபத்தி பக்குவமா சித்தப்பாகிட்ட பேசலாம்..

அதன்பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு என்ன செய்ய வேண்டும் என்பதை மனதில் குறித்துக் கொண்டு விடை பெற்றான்..

மறுநாள் விடிந்தும் விடியாமலுமாய் கிளம்ப தயாராகி வந்தவனை கீதா ஆச்சரியமாய் பார்த்தார்..

என்னப்பா இவ்ளோ காலைலயே கிளம்பிட்ட..

அது ஒண்ணுமில்லம்மா என் ப்ரெண்ட்டோட பிரதர் சென்னைக்கு வராரு அவர பிக் பண்ண ஸ்டேஷன் போறேன் சீக்கிரம் வந்துருவேன்ம்மா..

பை என கூறியபடியே வேகமாய் வெளியேறினான்..

சஹானாவின் வீட்டிற்கு பின்புறமாய் பைக்கை நிறுத்திவிட்டு அக்கம்பக்கம் பார்த்துவிட்டு சுவரேறி குதித்தான்.

தண்ணீர் குழாய் மீதேறி மாடியில் அவளறையை ஒட்டியிருந்த பால்கனியை அடைந்தான்..

உள்ளே எட்டிப்பார்க்க சிறு குழந்தையாய் சஹானா தனது டெடிபியரை அணைத்தவாறு உறங்கிக் கொண்டிருந்தாள்..

தன்னிலை மறந்து அவளை ரசித்தவன் சட்டென சுயநினைவு பெற்று வந்த வேலையை கவனிக்க தொடங்கினான்..

தன் மொபைலை எடுத்து அவளை அழைக்க சிறு அசைவுகூட இல்லாமல் உறங்கிக் கொண்டிருந்தாள்..

சரியான தூங்குமூஞ்சி எப்படி தூங்குறா பாரு என எண்ணியவனுக்கு முகத்தில் மென்னகை தானாய் அரும்பியது..

மறுபடியும் அழைக்க கண் திறக்காமலேயே அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்..

ஹே தூங்குமூஞ்சு சஹி எவ்ளோ நேரம் கால் பண்றேன் கண்ணத் திறந்து பாரு மொதல்ல..

ஹே கார்த்திக் குட்மார்னிங் எப்டி நா கண்ண தெறக்கலனு கரெக்ட்டா சொல்ற என தூக்கத்தில் அரைகுறையாய் பேச..

சஹி வந்து கதவ தொற ப்ளீஸ் யாராவது பாத்தா அவ்ளோதான்..

லூஸாப்பா நீ உன் ரூம் கதவ நா எப்படி திறக்க முடியும்??

அய்யோ கடவுளே என் ரூம் இல்ல உன் ரூம் கதவ தொறக்க சொன்னேன் என அங்கிருந்த செடியிலிருந்து ஒரு சிறு கல்லை அவள் மேல் வீசினான்..

ஆஆ,.என சத்தமிட்டபடியே பால்கனியை நோட்டமிட்டவள் கார்த்திக்கை கண்டு வேகமாய் சென்று கதவை திறந்து அவனை உள்ளிழுத்தாள்..

ஹே..புஜ்ஜுப்பா என்னதிது சர்ப்ரைஸ் என அவன் தோளை கட்டிக்கொண்டு ஆடினாள்..

ம்ம் இதுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல இப்படியா தூங்குவ உன்ன எழுப்புறதுக்குள்ள மூன்றாம் உலகப்போரே முடிஞ்சுரும் போலயிருக்கு கல்யாணத்துக்கப்பறம் ரொம்ப கஷ்டம் என பாவமாய் கூற

ம்ம் அப்போ நா பிக் கேர்ள்ளா நடந்துப்பேன் சரி சொல்லு என்னதிது திடீர்நு??

ம்ம் நேத்தே உனக்கு ரொம்ப போர் அடிக்குதுநு சொன்னல அதான் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் குடுக்கலாமேநு கிளம்பி வந்துட்டேன்.

இனி மேரேஜ் முடிஞ்சு நீ என்கிட்ட வர வர அப்பப்போ இப்படி ஒரு ரொமேண்டிக் சர்ப்ரைஸ் குடுக்கலாம்நு இருக்கேன் நீ என்ன சொல்ற??

வாவ் ஜாலி..சரி ஆனா எப்படி திடீர்நு இவ்ளோ தைரியம்??மாமனார் மேல மரியாதை பயம் எல்லா குறைஞ்சு போச்சா??

அதெதெல்லாம் அப்படியேதான் இருக்கு என் சஹி மேலதான் கொஞ்சம் லவ் அதிகமாய்டுச்சு.. கரெக்ட்டா??

ம்ம்ம் கார்த்திக் பின்ற போ டே பை டே நல்ல இம்ரூவ்மெண்ட்.. சரி கிளம்பு அம்மா வந்தாலும் வந்துருவாங்க..

வந்தா வரட்டும் இவ்ளோ கஷ்டப்பட்டு வந்தவன சும்மா அனுப்புறது உனக்கே நல்லாயிருக்கா மை சஹிகுட்டி..

எல்லாம் நல்லாதான் இருக்கு கார்த்திக் சார் மொதல்ல இடத்தை காலி பண்ணு நீ.,

என்ன சஹி லவ்வே பண்ணலனு நா சொன்னப்பவே தைரியமா என் வீட்டுக்கு திருட்டுதனமா வந்த இப்போ என்னடானா நானே பாக்க வந்தாலும் விரட்டி அனுப்புறீயே இது நியாயமா என்றவாறு அவளை நெருங்கி உக்கார்ந்தான்..

ம்ம் அப்போ நீ குட்பாயா இருந்த இப்போதான் கைல லைஸென்ஸ் கிடைச்சப்பறம் ரொம்ப பேட் பாயா மாறிட்டியே அதானால தான் விரட்டி விட்றேன் ஒழுங்கா கிளம்பிடு..

நோ வே..எனக்கு தர வேண்டியத தந்தா மட்டும் தான் நா இங்கிருந்து போவேன்

கார்த்திக்..

ம்ம் சொல்லு மை டியர் என்றவாறு அவளின் முடிகற்றைகளை கைகளால் அளந்தான்..

வேண்டாம் கார்த்திக்.. இதெல்லாம் சரியேயில்ல என்றவளுக்கு குரல் உள்ளேயே போயிருந்தது..

சட்டென எழுந்து அவள் நகர முற்பட அவளை இழுத்த வேகத்தில் அவன் மார்பில் வந்து விழ கார்த்திக்கின் செயினில் சிக்கிக் கொண்டது அவளின் தலைமுடி..

இருவருமாய் போராடி அதனை விடுவிக்க சட்டென அவளின் பார்வை குத்தி நின்றது அந்த டாலரில்..

கார்த்திக் இது????

ஏன்டா இது எங்க பாட்டி எனக்கு குடுத்ததாம் அவங்களுக்கு நானா ரொம்ப இஷ்டம்..

அதான் வேற யாருக்கும் இல்லாம எனக்கு குடுத்தாங்களாம்..

லேசாய் ஒரு சிரிப்பு அவளிடத்தில்,

ஏன் சகி சிரிக்குற??

உன் பாட்டியவிட இந்த டாலருக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் அதனாலதான் அது உன்ன விட்டு எங்கேயும் போல என்று கூறி அவனை பார்க்க அந்த பார்வையில்தான் எத்தனை வசீகரம்..

உயிர்வரை குளிர்பரவுவதாய் உணர்ந்தான் கார்த்திக்..

எங்க இத தொலச்சுடுவேனோனு பயந்தேன் நல்ல வேளையா உன்கிட்டயே வந்துருக்கு..

இத நீ எப்படி தொலைக்க முடியும் சகி??என்ன சொல்ற??

உங்க எல்லா கேள்விக்கும் சீக்கிரமே பதில் கிடைக்கும் கார்த்திக் என மிருதுவாய் அவன் கன்னத்தை தடவினாள்..

அவள் கை மீது கார்த்திக் தன் கையை வைக்க சட்டென அந்த பார்வையில் மாற்றம் இது அவனின் சஹி..

கிளம்பு கார்த்தி அம்மா பாத்தா அவ்ளோதான் என இழுத்து தள்ளாத குறையாக அவனை வெளியில் அனுப்பினாள்.

அங்கிருந்து கிளம்பி சிவாவோடு பேசியிருந்த படியே அந்த பார்க்கை சென்றடைந்தான்.. என்ன கார்த்திக் எனி க்ளு??

ம்ம் எந்த அளவு யூஸ்புல்லா இருக்கும்நு தெரில என்று டாலர் விவரத்தை கூறினான்..

ஏன் கார்த்திக் நாம ஏன் உங்க பாட்டிகிட்ட இதபத்தி கேக்க கூடாது??

திடீர்நு சம்மந்தமேயில்லாம இதபத்தி என்னனு கேக்குறது சிவா??

ம்ம் அதுவும் கரெக்ட்தான் வேணா ஒண்ணு பண்ணுவோம் எனக்கு இந்த மாடல் ரொம்ப பிடிச்சுருக்கு கடையில இதமாறி செய்ய சொன்னா இது அப்போ உள்ள மாடல்நு சொல்றாங்க இதயே நா குடுக்கலாம்நு இருக்கேன்னு சொல்லுங்க??என்ன ரியாக்ஷன்னு பாப்போம்..

ம்ம் ஓ.கே வா தான் இருக்கு சரி ட்ரை பண்றேன்..

அந்த வார இறுதியில் காஞ்சிபுரத்திலிருந்த தன் பாட்டியை பார்ப்பதற்காக சிவாவோடு சென்றான்..

கார்த்தி வாடா கண்ணா எவ்ளோ நாள் ஆச்சு உன்ன பாத்து பரவால்லையே கல்யாண மாப்பிள்ளைக்கு என்ன பாக்குறதுக்கு கூட நேரமிருக்கா??

பாட்டி என்ன இப்படி சொல்லிட்டீங்க சரி அதெல்லாம் இருக்கட்டும் இவரு தான் நம்ம வீட்டு மாப்பிள்ளை நம்ம ஷரவந்திக்கு பேசிருக்கோம்..

அடடே என்னோட புது பேரனா வாப்பா வா உக்காரு என்ன சாப்ட்ற??

அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் பாட்டி மொதல்ல நீங்க உக்காருங்க.. ஆமா தாத்தா எங்க காணும்??

அவருக்கு வேற வேலையென்ன பின்னாடி தோட்டத்துல தான் இருப்பாரு இப்போ வந்துருவாரு..

உங்க ரெண்டு பேரையும் பாத்தா ரொம்ப சந்தோஷப்படுவாரு..

சரி ரெண்டு பேருக்கும் என்ன பிடிக்கும்நு சொல்லுங்க விருந்து போட்டு அசத்திரேன்..

பாட்டி நீங்க எது பண்ணிணாலும் நல்லாதான் இருக்கும் ஒரு புடி புடிச்சுட்டுதான் போவோம்..

கொஞ்ச நேரம் பேசிட்டு இருங்க அப்பறமா சமைக்கலாம்..-சிவா..

சில நிமிட பொதுவான உரையாடல்களுக்கு பிறகு கார்த்திக் மெதுவாய் ஆரம்பித்தான்..

ஆங்ங் பாட்டி இந்த டாலர் இருக்குல இது சிவாக்கு ரொம்ப பிடிச்சுருக்காம் அதான் பேசாம மாப்ளைக்கு செயின் போடும் போது இதையும் சேர்த்து போடலாம்நு இருக்கேன் நீங்க என்ன சொல்றீங்க??

என்ன கார்த்தி இப்படி சொல்லிட்ட??இது மாதிரி வேற வேணா செஞ்சு போட்றலாம் இது வேண்டாம்ப்பா..

இல்ல பாட்டி நாங்க கடையில விசாரிச்சு பாத்துட்டோம் இது அந்த காலத்து டிசைனாம் இப்போ பண்ணிணாகூட சில ஆல்ட்ரேஷன் பண்ணிதான் கிடைக்குமாம்..

அவங்க காட்றதெல்லாம் இவருக்கு பிடிக்கல அதுக்கு அப்பறம்தான் இதையே குடுத்துறலாம்நு முடிவு பண்ணேன்..

இல்ல கார்த்தி அது சரி வராது..

ஏன் பாட்டி இப்போதான் வாய் நிறைய என்ன பேரன்னு கூப்டீங்க எனக்காக இதகூட தரமாட்டீங்களா??

அட நீ வேறப்பா நா குடுத்தாலும் அது உன்கிட்ட இருக்கனுமே??

என்ன பாட்டி சொல்றீங்க??????

ம்ம் என்னனு சொல்றது கார்த்திக்கு கூட இந்த விஷயமெல்லாம் தெரியாது இது இவன் தாத்தாவோட தாத்தாவோடது..

அவருக்கு ரெண்டு பசங்களாம் அவரோட கடைசி காலத்துல இந்த டாலர அவரே அவரோட பெரிய மகனுக்கு போட்ருக்காரு அவரு தான் எங்க மாமனார்..

என் வீட்டுகாரரோட பொறந்தவங்க ரெண்டு பேரு அதுல இவருதான் மூத்தவருங்கிறதால இவருகிட்ட அந்த டாலர் வந்தது..

நாங்களும் எந்த ப்ரச்சனையும் இல்லாம சந்தோஷத்துக்கு குறைவில்லாம தான் வாழ்ந்தோம்..

எனக்கு ரெண்டு பொண்ணு ரெண்டு பையன் அதுல கார்த்தியோட அப்பா ரெண்டாவது அதனால என் மூத்த பையனோட குழந்தைக்கு இந்த டாலர போடனும்னு முடிவு பண்ணி போட்டுவிட்டோம்..

அப்போயிருந்து என் மூத்த பையன் குடும்பத்துல ஒண்ணுமாத்தி ஒண்ணு ஏதாவது ப்ரச்சனை வந்துட்டேதான் இருந்தது நாங்களும் ஏதோ போறாத காலம் என்ன பண்றதுநு நினைச்சோம் பாத்தா ஒரு தடவை அவன் உயிருக்கே ஆபத்து வந்துருச்சு..

அலறி அடிச்சு எங்க குடும்ப ஜோசியர்ட்ட போனா அவரு ஜாதகத்துல எந்த குறையும் இருக்குறமாறி தெரில ஆனா உங்களுக்கு சம்மந்தமில்லாத பொருள் ஏதோ உங்ககிட்ட வந்துருக்கு அதுலயிருந்து தான் உங்களுக்கு ப்ரச்சனை ஆம்பிச்சுருக்கு என்னனு யோசிச்சு பாருங்கநு சொல்லிட்டாரு..

எவ்வளவோ யோசிச்சும் எங்களுக்கு என்னனே தெரியல ரெண்டு நாள் கழிச்சு வீட்ல இருந்த ஆனில என் பையனோட செயின் மாட்டி டாலர் வந்து என் வீட்டுகாரர் காலடில விழுந்தது..

சட்டுனு எல்லாருக்குமே இதுதான் காரணமோநு தோணிச்சு சரி சந்தேகம்நு வந்தப்பறம் எதுக்கு விடனும்நு அத வாங்கி என் பீரோல வச்சுட்டேன்..

அடுத்த ஒரு மணி நேரத்துல என் பையனுக்கு பெரிய நஷ்டமாய்டும்நு நினைச்சுட்டு இருந்த ஒரு தொழில்ல அவன் எதிர்பாக்காத அளவு லாபம்நு செய்தி வந்தது..

நானும் என் வீட்டுகாரரும் ஆடி போய்ட்டோம்..அந்த டாலர்ல தான் ப்ரச்சனை என்ன பண்றதுநு யோசிக்க ஆரம்பிச்சுட்டோம்..

இப்படியே கொஞ்ச நாள் போக என் பொண்ணு வீட்டுக்கு வந்திருந்தப்போ இந்த விஷயத்தை பத்தி பேசிட்டு இருந்தோம்..

அவளுக்கு இதெல்லாம் நம்புறமாறியில்ல.. என்னம்மா நீ நம்ம பரம்பரை நகையபத்தி நீயே இப்படி சொல்ற அப்படி பாத்தா நீயும் அப்பாவும் எந்த குறையும் இல்லாமதான இருந்தீங்க அண்ணணுக்கு வேண்டாம்னா விடு நா அத எடுத்துக்குறேன் நம்ம குடும்ப நகை எனக்கு கிடைச்சா சந்தோஷம்தான்னு பேசி முடிச்சு நகர்ந்தா பாரு அவ உக்காந்திருந்த இடத்துலயிருந்த ஓடு கீழே விழுந்தது..

அவளே ஒரு நிமிஷம் ஆடி போய்ட்டா.. அதுக்கப்பறம் அவ அதபத்தி மறந்துகூட பேசமாட்டா..

இப்படியே வருஷம் போக எங்களுக்கே அது மேல ஒரு பயம் வந்துருச்சு இனி இத யாருக்கும் குடுக்க வேண்டாம் நம்ம காலத்துக்கு அப்பறம் என்ன நடக்கனுமோ நடக்கட்டும்நு விட்டுட்டோம் அதுக்கு அப்பறம்தான் கார்த்தி பொறந்தது..

அவனுக்கு அஞ்சு வயசாயிருக்கும் போதுதான் ஷரவன் ஷரவந்தி பொறந்தது..

அவங்களுக்கு பேர் வைக்குறஅன்னைக்கு குழந்தைகளுக்கு நகை போடனுமேநு என் நநகைபெட்டிய எடுத்து வச்சுட்டு இருக்கும்போது கார்த்தி  ஓடி வந்து என்பக்கதுல உக்காந்து ஒவ்வொண்ணா எடுத்து பாத்துட்டு இருந்தான்..

அப்போ இந்த டாலர கைல எடுத்தவன் பாட்டி இது எனக்கு வேணும் போட்டுவிடேன்னு கேட்டான்..

எனக்கோ பகீர்நு இருந்தது..இது வேணாம் கண்ணா உனக்கு நா வேற வாங்கி தரேன்னு எவ்வளவோ சொன்னேன் அழுது ஒரே அடம்..

சரிநு மனசு கேக்காம அத அவனுக்கு போட்டுவிட்டேன்.. இருந்தாலும் உள்ளுக்குள்ள பக் பக்நு தான் இருந்தது..

அவன்மேல எப்பவுமே ஒரு கண்ணு வச்சுட்டேயிருந்தேன்..

தாத்தா தான் என்ன சமாதான படுத்தினாரு.. கார்த்தி அப்பா அப்போ சென்னைல இருந்ததால அவனுக்கு இந்த டாலர் பத்தின ப்ரச்சனையெல்லாம் தெரியாது நானும் எதுவும் சொல்லிக்கல..

ஆனா அன்னைக்கு பூரா கார்த்தி முகத்துல அப்படி ஒரு சந்தோஷம் அப்பப்போ அந்த டாலர பாத்து பாத்து சிரிச்சுப்பான் எனக்கு ரொம்ப ஆச்சரியமா போச்சு என் பேரனுக்கு எந்த குறையும் வரகூடாது ஆண்டவாநு என் குலதெய்வத்தை வேண்டிடேதான் இருப்பேன்..

ஆனா இதுல ஆச்சரியம் என்னனா அதுக்கப்பறம்தான் கார்த்தி அப்பாக்கு கவர்மெண்ட் வேலை கிடைச்சுது லோன் போட்டு நல்லபடியா அந்த வீட்ட கட்டினான்..

குறையில்லாம இருந்தாங்க அதுக்கப்பறம் தான் எனக்கும் தாத்தாக்கும் மனசு நிம்மதியே ஆச்சு..

இதெல்லாம் யாருக்குமே தெரியாது இப்போ ஏதோ நீங்க ரெண்டு பேரும் இதபத்தி கேட்டவுடனே சொல்லிட்டேன்..

இதனாலதான் சொல்றேன் அது உனக்கு வேண்டாம்நு நீயும் ஷரவந்தியும் நூறு வருஷம் நல்லாயிருக்கனும் அது உனக்கு வேணாம்ப்பா..

என்று பாட்டி பாவமாய் முடிக்க கண்ணிமைக்கவும் மறந்திருந்தனர் சிவாவும் கார்த்தியும்..

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

4 comments

Kavi Natarajan October 16, 2026 - 8:43 am

💞💞💞💞💞💞

suganyavel October 16, 2026 - 6:43 pm

Aha super💕

Padmasubramanian October 16, 2026 - 7:10 pm

💞💞முற்பிறப்பில் தாத்தா கார்த்தி. அவங்க காதலி தான் இப்போ சஹியா 🤔🤔

srichitra October 16, 2026 - 8:37 pm

Nice

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode