பாட்டியின் பேச்சை கேட்டு இருவரும் அசையாமல் அமர்ந்திருக்க தாத்தா தான் வந்து அவர்களை சுயநினைவிற்கு கொண்டு வந்தார்..

வாங்க புது மாப்பிள்ளைகளா??என்ன இந்த கிழவி அப்படி என்னத்த சொல்லிட்டாநு பேயறஞ்சாப்ல உக்காந்துருக்கீங்க??

ஆமா நா கிழவி இவருக்கு அப்படியே இளமை ஊஞ்சலாடுது..

எல்லாம் இந்த டாலரை பத்தி தான் சொல்லிட்டு இருந்தேன்..

அட யாருடி இவ வந்த புள்ளைங்களுக்கு சாப்பாடு போடாம இது ரொம்ப முக்கியமா??

தாத்தா பாட்டிய ஒண்ணும் சொல்லாதீங்க நாங்கதான் பேசிட்டு இருந்தோம்..-சிவா..

அட விடுப்பா இவருக்கு வேற வேலையில்லஎன்ன ஏதாவது சொல்லலைனா தூக்கம் வராது..என்றவாறு எழுந்து சென்றார் பாட்டி..

கார்த்திக்கை சுயநினைவிற்கு கொண்டு வந்தவன் தாத்தாவிடம்,ஏன் தாத்தா நீங்க என்ன நினைக்குறீங்க??-சிவா

அதெல்லாம் எனக்கு விளக்கத் தெரிலப்பா..ஆனா அது என் தாத்தாவோட விருப்பமான நகையாம் அதனால அவரு இது கார்த்திக்குதான் கிடைக்கும்நு ஆசைப்பட்டாரோ என்னவோ மத்தபடி இத பத்தி யோசிக்க ஒண்ணுமில்ல அவ கெடக்குறா..

என அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்..

மதிய உணவை முடித்துவிட்டு கிளம்பியவர்கள் அங்கு சற்று தள்ளியிருந்த கோவிலில் அமர்ந்தனர்..

சிவா எனக்கு என்ன சொல்றதுனே தெரில.. இதெல்லாம் நம்பவா வேண்டாமாநு கூட தெரில..

கம் டவுண் கார்த்திக்.. எனக்கே இதெல்லாம் புதுசாதான் இருக்கு ஆனா அடுத்து நாம என்ன பண்றதுநு யோசிக்கனும்..

வேண்டாம் சிவா இத இப்படியே விட்ருவோம்..

கார்த்திக்????

ஆமா சிவா இன்னைக்கு கேட்டதெல்லாம் வச்சு பாக்கும்போது நம்மளையும் மீறின ஒரு சக்தி இருக்குநு நம்ப தோணுது..

நாம தலைகீழா நின்னாலும் நடக்குறதுதான் நடக்கும்நு புரியுது சோ வீணா நாம மனச குழப்பிக்காம விட்ரலாம்..

என் சஹி என் கூடவே தான இருக்கா நா அவளை பத்திரமா பாத்துக்குறேன்..

கவலபடாதீங்க கார்த்திக் நம்மள மீறி எதுவும் நடக்காது நடக்கவும் விடமாட்டோம்..

பட் இதபத்தி சித்தப்பாகிட்ட மட்டும் மேலோட்டமா சொல்லி வச்சுருவோம் வேற யாருக்கும் தெரிய வேணாம்.. ப்ளீஸ்..

இதபோய் எப்படீ அவருகிட்ட???

சித்தப்பா தப்பா எந்த முடிவும் எடுக்கமாட்டாரு கார்த்திக்..

அவரு எதார்த்தத்த புரிஞ்சு நடந்துக்குறவரு.. அவருக்கு சஹானா தான் எல்லாமே..

இப்போ இத சொல்லாம நாளைக்கு எதுவும் ப்ரச்சனைனா அவருக்கு பதில் சொல்ல முடியாது ப்ளீஸ் புரிஞ்சுகோங்க..

அரைமனதாய் அவனுக்கு சம்மதம் தெரிவித்து அங்கிருந்து கிளம்பினான்..

மாலை நேரம் சேகரை வெளியில் ஒரு ஹோட்டலில் சந்திப்பதாய் ஏற்பாடு..

அதன்படி சிவாவோடு காத்திருந்தான் கார்த்திக்..சில நிமிடங்களில் அங்கு வந்தவர் கார்த்திக்கை அங்கு கண்டு ஆச்சரியப்பட்டார்..

என்ன சிவா மாப்பிள்ளையும் வந்துருக்காரு என்ன விஷயம்??? பதட்டம் வெளிப்படையாகவே தெரிந்தது அவர் குரலில்..

சித்தப்பா ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க ஜஸ்ட் ஒரு விஷயத்தை உங்க காதுல போட்டு வைக்கலாமேநு கூப்டோம் மத்தபடி ஒண்ணுமில்ல..

கார்த்திக் கேட்டுகொண்டபடி டாலரைபற்றி மட்டுமே கூறினான்.

சித்தப்பா அது கார்த்திக்கோட குடும்ப நகை அதஎப்படி நம்ம சஹானா பாத்துருக்க முடியும் அதுவும் ஏதோ அவளோடது போலவே பேசிருக்கா இது மாறி இன்னும் ஒண்ணு ரெண்டு இன்ஸ்டென்ஸ் கூட இருக்கு அதான் உங்ககிட்டயும் ஒரு வார்த்தை சொல்லி வச்சா நல்லதுதானேனு நா தான் சொன்னேன்..

என்னப்பா என்னென்னவோ சொல்றீங்க?? சஹானாக்கு ஒண்ணுமில்ல இல்ல??

ஐயோ மாமா அதெல்லாம் இல்ல நா இருக்கேன் அவளுக்கு துணையா..

இல்ல எதாவது கோவிலுக்கு போய்ட்டு வந்தா இந்த குழப்பமெல்லாம் தீருமோநு ஒரு தாட் அதனால தான் உங்ககிட்ட சொல்ல சொன்னதே..

அவ ராசிப்படி எதாவது கோவிலுக்கு போக வேண்டியது நீங்க போகாம விட்டுருக்கீங்களா??

என்றவாறே இதற்குமேல் இதை பேச வேண்டாம் என சிவாவிடம் கண்ஜாடை காட்ட அவனும் அதை புரிந்து கொண்டு சம்மதமாய் தலையசைத்தான்..

அப்படியெல்லாம் ஒண்ணுமில்லயே மாப்ள என ஒரு நொடி யோசித்தவர் ஆங்ங் எங்க குடும்பத்துல யாருக்கு கல்யாணம்னாலும் கல்யாணத்துக்கு முன்னாடி குலதெய்வம் கோவில்ல பொண்ணு மாப்பிள்ளையை கூட்டிட்டு போய் பூஜை நடத்துரது வழக்கம்..

நா அத மறந்தே போய்ட்டேன்.. அத வேணா பண்ணீடலாம்ப்பா..

பாத்தீங்களா சித்தப்பா உங்ககிட்ட சொன்னதும் எவ்ளோ நல்லதா போச்சு பாருங்க சரி கார்த்திக் அப்போ நீங்க உங்க வீட்ல பேசிட்டு சொல்லுங்க ஒருதடவை போய்ட்டு வந்துருவோம்..

ம்ம் அதுவும் கரெக்ட்தான் நா பேசிட்டு சொல்றேன் சிவா..

கார்த்திக் உங்ககிட்ட நானும் ஒரு விஷயம் சொல்லனும்-சேகர்..

என்ன மாமா சொல்லுங்க??

தப்பா எடுத்துக்காதீங்க உங்ககிட்ட சொல்ல வேண்டாம்நு நினைக்கல ஏனோ அப்போ அது தேவையில்லையோநு தோணிச்சு பட் இப்போ சொல்றேன்..

சஹானா பிறந்த ஒரு வாரத்துல என்வீட்டு வாசல்ல ஒரு சாமியார் வந்து உக்காந்திருந்தாரு அவரு காசு பணமும் கேக்கல பசிக்குதுநு வரல இன்னும் சொல்ல போனா அவரு எவ்ளோ நேரமா உக்காந்திருந்தாருநு கூட எங்களுக்கு தெரியாது தற்செயலா வெளில கிளம்புறதுக்காக வாசலுக்கு வந்தா திண்ணைல உக்காந்து என்ன பாத்து சிரிச்சாரு..

உடம்பு புல்லா வீபூதியும் நெத்தியில திருநாமமுமா பாக்கவே அப்படி ஒரு தெய்வீக களை..

கார்த்திக்கிற்கு தான் பார்த்தவரின் முகம் மனகண்ணில் நிழலாடியது..

சஹானாவோட அம்மா தீவிரமான சிவ பக்தை இன்னும் சொல்லனும்னா சஹானாவே எங்களுக்கு அந்த ஈசன் கொடுத்த வரம்தான்..

அதனாலயே இந்தமாதிரி சந்நியாசிங்களை பாத்தா என் மனைவி அவங்களுக்கு என்ன வேணும்னு பாத்து செய்வா.

என்ன ஐயா வேணும் எதுவும் சாப்டுறீங்களாநு கேட்டேன்..அதுக்கும் சிரிச்சவரு..

அதெல்லாம் என் அப்பன் பாத்துப்பான் நீ ஒரு தகப்பனா பண்ண வேண்டிய விஷயங்கள உன்கிட்ட சொல்லிட்டு போலாம்நு வந்தேன்னு சொன்னார்..

ஏனோ அவர எதிர்த்து பேச தோணவேயில்ல..சொல்லுங்க ஐயாநு சொல்லி அவரு பக்கத்துல உக்காந்தேன்..

என்னென்னவோ சொன்னாரு ஆனா எல்லாமே நல்லபடியாதான் இருந்தது..

சேகரா உன் பொண்ணு என் தாய் மஹாலட்சுமியோட பூரண அருள் பெற்றவ அவளால உனக்கும் உன் குடும்பத்துக்கும் ஒரு குறையும் வராது..

இப்போ நீ இருக்குற நிலைமையிலிருந்து பலமடங்கு முன்னேறி புகழ் செல்வாக்கோட இருப்ப..

ஆனா உன் பொண்ணோட கல்யாணம் மட்டும் அவ விருப்பப்படிதான் நடக்கும் நடக்கனும் இதை இப்போவே உனக்கு தெரியபடுத்தனும்ங்கிறது விதி..

அவளின் தேர்வு யாராக இருக்கிறானோ அவன்தான் உன் மருமகன் அதில் மாற்றம் ஏதுமில்லை..

அதை மாற்றவும் நினைக்காதே..என் தாயை நான் ஒருமுறை பார்த்துவிட்டு கிளம்புகிறேன் அழைத்து வருகிறாயா??

மறுபேச்சு பேசாமல் சஹானாவ எடுத்துட்டு வந்து அவரு கைல குடுத்தேன்..

அவரு முகத்துல அப்படி ஒரு சந்தோஷம் அவள பாத்தவுடனே..அவ காதுல ஏதோ பேசினார்..

நிறைவா ஒரு பார்வை பாத்துட்டு அவள என் கைல குடுத்துட்டு கிளம்பிட்டார்..

எனக்கு என்ன பண்றதுண்ணே தெரில என் மனைவிட்ட இத கொஞ்ச நாள் கழிச்சு தான் சொன்னேன் ஆனா அவ பெருசா எடுத்துக்கல நம்ம பொண்ணுக்கு கடவுள் அருள் இருக்குநு நினைச்சு சந்தோஷப்படுங்க அதவிட்டுட்டு ஏன் கண்டத நினைச்சு குழப்பிக்குறீங்கநு சொன்னா..

எனக்கும் நா தான் ரொம்ப யோசிக்கிறேனோனு தோணிச்சு..காலப்போக்குல நா அத மறந்தும் போய்ட்டேன்..

ஆனா சஹானா உங்கள விரும்பினதா வந்து சொன்ன அன்னைக்கு ரொம்ப யோசிச்சேன்..

நீங்க நல்லவருதான் இருந்தாலும் ரெண்டு பேமிலிக்கும் செட் ஆகுமா என்ன பண்றதுநு கொஞ்சம் நெகெட்டிவ் தாட்ஸ் இருந்துட்டே இருந்தது..

சொன்னா நம்ப மாட்டீங்க அன்னைக்கு நைட் சொல்லி வச்சாமாறி சஹானாவோட குழந்தை முகமே கனவுல வந்துட்டு இருந்தது..

காலைல எழுந்து கொஞ்ச நேரத்துக்கு ஒண்ணும் புரில அப்பறம் நேரம் ஆக ஆகதான் அவளோட சின்ன வயசுல நடந்ததெல்லாம் நினைச்சு பாக்குறப்போ சட்டுனு அந்த சாமியார் சொன்னது நியாபகம் வந்தது..

ஒரு செகண்ட் புல்லரிச்சு போச்சு..இதுக்கு மேல இதுல நா முடிவு பண்ண ஒண்ணுமில்லைனு உங்ககிட்ட சம்மதம் சொல்லிட்டேன் அன்னைக்கே இந்த விஷயத்தையும் சொல்லலாம்நு தான் இருந்தேன் சரி வீணா உங்களை குழப்ப வேண்டாம்நு விட்டுட்டேன்..

தப்பா எடுத்துக்காதப்பா கார்த்திக்..

கார்த்திக்கும் சிவாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு ச்சச்ச அதெல்லாம் ஒண்ணுமில்ல மாமா..

சரி நீங்க எத நினைச்சும் கவலபடாதீங்க கூடிய சீக்கிரம் ஊருக்கு போய் பூஜையை முடிச்சுட்டு வந்துருவோம்..

என அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்..

கார்த்திக்.,.என்ன இது நாம ஒண்ணு நினைச்சா வேற ஒண்ணு நடக்குது..

இல்ல சிவா எனக்கு புரிஞ்சுடுச்சு..

என்ன சொல்றீங்க??

ஆமா சிவா இந்த ஜென்மத்துல நாதான் சஹானாவ கல்யாணம் பண்ணனும்ங்கிறது விதி..

அதோட அடையாளங்கள் தான் இத்தனையும்.. இனி இதுல யோசிக்க ஒண்ணுமேயில்ல..

எங்க கல்யாணத்தை எந்த ப்ரச்சனையும் இல்லாம முடிச்சாலே இந்த ப்ரச்சனைக்கெல்லாம் தீர்வு கிடைச்சுரும்நு நம்புறேன்..

கூடிய சீக்கிரம் அந்த பூஜையை முடிச்சுருவோம் உங்களுக்கும் ஷரவந்திக்கும் கூட அப்போவே பண்ணிடுவோம்.. என்ன சொல்றீங்க??

ம்ம்ம் நீங்க சொல்றது கரெக்ட்தான் இருந்தாலும்..

சிவா சஹானாவ நினைச்சு நீங்க கவலபடாதீங்க நா இருக்கேன்..என்றவனை பெருமையாய் ஒரு பார்வையோடு அணைத்துக் கொண்டான்..

இரு வீட்டு பெரியவர்களும் முடிவு செய்து பூஜைக்கான ஏற்பாடுகளை ஆரம்பிக்க தொடங்கினர்..

அதற்குள் முகூர்த்த புடவை வாங்குவதாய் முடிவு செய்து அதற்கான நாளையும் முடிவு செய்து கொண்டனர்..

காலை நேரப் பரபரப்பிற்கு குறைவின்றி சுழன்று கொண்டிருந்தது சென்னையின் தியாகராய நகர்..

சென்னையில் இந்த இடத்திற்கு மட்டும் வாரம் முழுவதுமே விடுமுறைதான் போலும்..எவ்வளவு கடைகள் எவ்வளவு மக்கள் எத்தனை வியாபாரம்..

வார நாட்களில் சென்றாலும் சனி ஞாயிறு போன்றே கூட்டம் அலைமோதும்..

சென்னையின் அடையாளமாக முக்கிய பங்கு வகிக்கும் இடமென்றே கூறலாம்..இரு குடும்பங்களும் அங்கிருந்த பட்டுத்துணிக்கு பெயர் போன கடைக்குள் சந்திப்பதாய் ஏற்பாடு..

கார்த்திக் சஹானா திருமணத்திற்கு முந்திய நாள் சிவா ஷரவந்திக்கும் நிச்சயம் முடிப்பதாய் முடிவு செய்ததிற்கேற்ப அவர்களுக்கும் ஆடை அன்றே வாங்குவதாய் ஏற்பாடு..

பேசிய நேரத்திற்கு இரு குடும்பங்களும் ஆஜராகிவிட ஜோடிகள் இருவரும் தங்கள் உடைகளை தேர்வு செய்வதாய் கழண்டு கொள்ள பெரியவர்கள் அனைவருக்குமான உடைகளை தேர்வு செய்ய ஆரம்பித்தனர்..

ஷரவ் உனக்கு என்ன கலர் பிடிக்கும்நு சொல்லு..

பர்டிகுலராலா பார்க்க வேண்டாம் சிவா எது நல்லாயிருக்கோ உங்களுக்கு எது பிடிச்சுருக்கோ எடுத்துக்கலாம்..

எனக்கு பட்டுபுடவைலலா அவ்ளோ நாலேஜ் கிடையாது..

அட அட ஷரவ் என்ன இவ்ளோ சிம்பிளா முடிச்சுட்ட நா கூட இன்னைக்கு புல்லா இங்கேயே தங்க வேண்டியிருக்குமோநு நினைச்சுட்டேன்..

என்ன காப்பபாத்தீட்டடீ செல்லம்..

போதும் போதும் நேர்ல பாத்தா இதுக்கெல்லாம் குறைச்சல் இல்ல..

ஆனா அன்னைக்கு வீட்டுக்கு வந்துட்டு போனப்பறம் ஆளையே காணும்..

போன்லயும் ஒழுங்கா பேசல.. நீங்கல்லாம் எப்படி ரெண்டு வருஷம் எனக்காக காத்திருந்தீங்க..என்றாள் போலி கோபத்துடன்..

ஹா ஹா ஷரவ் கொஞ்சம் பிசிடா..மத்தபடி உன்ன நினைச்சுட்டேதான் இருந்தேன்..

நீயே இப்படி கேக்குற அளவு நடந்துக்கிட்டேனா அப்போ இன்னைக்கு புல்லா ஷரவ் குட்டி கூடதான் ஸ்பெண்ட் பண்ண போறேன் ஜாலி..

ஹய்யய்யோ நா மாட்டேன்ப்பா அப்பா என்ன சொல்லுவாரோ..

அதபத்தி நீ ஏன் கவலப்பட்ற நா பாத்துக்குறேன் நீ என்கூட வந்தா மட்டும் போதும்..

என்றவாறே திரும்பியவனின் கண்களில் பட்டனர் கார்த்திக்கும் சஹானாவும்..

சஹானா கார்த்திக்கை ஒரு வழி ஆக்கிக் கொண்டிருந்தாள்..

கார்த்திக் இந்த புடவை காம்பினேஷனே சரியில்ல..

இது பார்டர் குட்டியா இருக்கு இது ஓல்ட் மாடல்..இது ரொம்ப டல்லா இருக்குல..

சஹி என்னால முடில நீ புடவை எடுக்க வந்தியா இல்ல கடையவே விலை பேச வந்தியா..

நீ ஷாப்பிங்க்கு ஆர்வமா இருந்தப்பவே உஷாராயிருக்கனும் மாட்டிக்கிட்டேன்..நா பாவம்மா..

அட என்ன புஜ்ஜுப்பா இதுக்கே இப்படி சொல்லிட்ட இன்னும் எத்தனை புடவை எடுக்க வேண்டியிருக்கு..

என்னது இன்னுமா???அப்போ நீ இங்க வந்து உக்காரு நானே உனக்கு செலெக்ட் பண்றேன் இல்ல இன்னைக்கு வீட்டுக்கு போனமாறி தான்..

நா புடவையை காட்றேன் ஓ.கே வா இல்லையாநு மட்டும் சொல்லு..

கார்த்திக் திஸ் இஸ் நாட் ஃபேர்..

ஐ நோ பேபி இருந்தாலும் வேற வழியில்ல..உனக்கு புடவை எடுத்துப் போட்டே இவங்களுக்கெல்லாம் வயசாய்டும் போலயிருக்கு சோ நா சொல்றத மட்டும் செய்..

என்றான் மென்னகையுடன்..

போலியாய் அலுத்துக் கொண்டாலும் மனதினுள் அவனின் ஒவ்வொரு செயலையும்ரசித்து மகிழ்ந்தாள்..

கண்கள் கூர்மையாய் தன்னவளுக்கான புடவைகளைத் தேட ஆரம்பிக்க அங்கு அவனவளோ காதலில் மூழ்கி இருந்தாள்..

தன்னவனை அணுஅணுவாய் தனக்குள் நிரப்பிக் கொண்டிருந்தாள்..

சாதாரணமான செயலிலும்கூட அத்துணை ஆளுமை..அவனை ரசித்தவாறே தற்செயலாய் லேசாய் தலைத் திருப்ப அருகில் ஒரு பெண் அவனையே பார்த்திருப்பதை கண்டு கொண்டாள்..

அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்து பார்வையை அகற்ற கொன்னுடுவேன்என ஆள்காட்டி விரலை நீட்டி இவள் மிரட்ட சட்டென நகர்ந்து கொண்டாள் அவள்..

அடுத்த நொடி அவளை பார்த்து பற்கள் தெரிய சிரித்தவாறே,என் பேபி இவ்ளோ பொசசிவ்வா எனக்கு தெரியாம போச்சே என்று கார்த்திக் புருவத்தை அசைக்க,

அடப்பாவி எல்லாத்தையும் பாத்துட்டா இருந்த கார்த்தி நீ பயங்கரமான ஆளு..

ம்ம்ம் பின்ன உன்னை எப்படி சமாளிக்குறது சரி உன் சிஐடி வேலையை எல்லாம் நிறுத்திட்டு கொஞ்சம் வந்த வேலையை பாரு.. இந்த புடவை எப்படியிருக்கு சொல்லு..

ம்ம்ம் அது இந்த டாட்ஸ்க்கு பதிலா இதுல..

ஏய் நல்லாயிருக்கா இல்லையாநு மட்டும் சொல்லு புடவையவே ரீடிசைன் பண்ணாத..

ஹா ஹா சரி சரி கூல்..இன்னும் ஒரு சான்ஸ் குடு கார்த்திக் நா செலெக்ட் பண்ணிறேன்..

சத்தியமா நா பாவம் சஹி..என்றவாறே அடுத்த புடவையை பார்க்க கண்களை சுழற்றினான்..

அழகான அந்த புடவை அவன் கண்களில்பட்டது..இரத்த நிற சிவப்புப் புடவை உடல் முழுதும் தங்கசரிகைகளால் நிறைந்திருக்க அகலமான பார்டரோடு அழகாயிருந்தது..

சற்று பழைய டிசைன்தான் எனினும் ஏனோ அதை பார்த்தவுடன் அவனுக்கு பிடித்துவிட்டது..

சஹி இதையே எடுத்துக்கலாம்..என சட்டென்று கூறிவிட்டு அவளைப் பார்க்க முகம் முழுவதும் மலர்ந்து அழகாய் தலையசைத்தாள் பெண்ணவள்..

அடடா என்ன ஒரு அதிசயம் உடனே ஓ.கே சொல்லிட்ட??

ம்ம் அய்யோ பாவமேநு செலெக்ட் பண்ணா ரொம்ப பண்றியே??சரியில்லையே..

அம்மா தாயே சும்மா கிண்டல் பண்ணேன் சரி வா அடுத்த செக்ஷன் போவோம் இந்த ஸ்பீட்ல செலெக்ட் பண்ணா 60ம் கல்யாணம்தான் பண்ணிக்கனும் வா சீக்கிரம் என்றவாறு மற்ற புடவைகளை தேர்வு செய்ய சென்றனர்..

இவ்வாறாக நேராம் கழிய அந்த ஒவ்வொரு நொடியையும் இருவருமே ரசித்து லயித்திருந்தனர்..

கார்த்தி இது எப்படியிருக்கு??கார்த்தி இது எனக்கு சூட் ஆகுமா??

ஏதோ இத்தனை வருடமும் அவனை கேட்டுதான்உடை தேர்வு செய்ததுபோல் சளைக்காமல் கேள்விகேட்க அதை வீட அவள் ஆயிரம் முறை அவன் பெயரை உச்சரிப்பதை கேட்டு கேட்டு மகிழ்ந்தான்..

அவளோ,தான் எத்தனை கேள்வி கேட்டாலும் சலிக்காமல் அலுக்காமல் உதட்டில் ஒட்டிய சிரிப்போடு அவளை ரசனையாய் பார்த்த வண்ணம் பதில்கூறீயதில் மெய் மறந்திருந்தாள்..

கார்த்திக்…

ம்ம் சொல்லு என அவளிடமிருந்து விழியகற்றாமல் அவன் கேட்க..

என்ன எவ்ளோ லவ் பண்ற என அசால்ட்டாய் கேட்டுவிட பணிப்பெண் சட்டென சிரித்ததில் சூழ்நிலை உணர்ந்து அவன் நினைவிற்கு வர அப்போதும் நம் 1000 வாலா விடுவதாயில்லை..சொல்லு கார்த்தி..

அவள் கையை பீடித்து சற்றுதூரம் தள்ளி அழைத்துச் சென்றவன் இப்போ இது ரொம்ப முக்கியமான டவுட்தான் அதுவும் அந்த பொண்ணு முன்னாடி ஏன் சஹி..

ரொம்ப முக்கியம்தான் பின்ன நீ பாட்டுக்கு தாராளமா என்ன சைட் அடிச்சுகிட்டே சூப்பரா புடவை செலெக்ட் பண்ணி குடுத்துட்டேயிருக்க..

அவ உன்னையேதான் பாத்துட்டு இருந்தா தெரியுமா.

இதுல பக்கத்துல புடவை எடுக்க வர்ரவங்களும் உன் செலெக்ஷனதான் பாத்துட்டேயிருக்காங்க..

ஆனா நீ எதையும் கண்டுகிரதா இல்ல அதான் இப்படி பண்ண வேண்டியதா போச்சு..

சிறு மென்னகையோடு ஆனாலும் உனக்கு இவ்ளோ கான்விடென்ஸ் கூடாது..

விட்டா இந்த ஊரே என்னதான் பாக்குதுநு சொல்லுவ போல..

காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சுநு பழமொழி கரெக்ட்டாதான் சொல்லிருக்காங்க என மறுபடியும் சிரிக்க..

என்ன இப்படி சொல்லிட்ட புஜ்ஜுப்பா..உன்ன யாருக்காவது பிடிக்காம போகுமா..

அப்பப்போ காத்துல பறக்குற இந்த தலைமுடி உன்னோட இந்த துறுதுறு கண்ணு ஷார்ப் நோஸ்..

உன்னோட இந்த க்யூட்டான லிப்ஸ் அதுக்கு இன்னும் அழகேத்துற உன்னோட மீசை..

எல்லாத்துக்கும் மேல என்னபாத்தாலே உன் உதட்ல வந்து ஒட்டிக்குற அந்த ஸ்மைல்..

ப்ப்பாபா வேற என்ன வேணும் சொல்லு..என ரசனையாய் முடிக்க அவனோ சிரிப்பை அடக்க மாட்டாமல் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்..

சஹி நம்ம கதையில எல்லாமே உல்ட்டாவா தான் இருக்கு போ..

அவனவன் தன் கேள் ப்ரெண்ட்ட வர்ணிப்பான் பொண்ணு வெக்கப்படும் இங்க என்னடானா நீ தான் பிண்ற போ..

ஏன் பொண்ணுங்கள மட்டும்தான் வர்ணிக்கனும்னு ஏதாவது சட்டமிருக்கா என்ன??நா சொல்றது கரெக்ட்நு ஒத்துக்கோ..

இரு கைகளையும் தூக்கி அவள் முன் வளைந்து சரண்டர் என செய்கைகாட்ட அது என அவளும் இல்லாத காலரை தூக்கிவிட்டுக் கொண்டாள்..

ஹே ஏன்னே தெரில எனக்கு உன்ன வாங்க போங்கநு கூப்பிட வரவே மாட்டேங்குது என்ன பண்றது நானும் வீட்ல ப்ராக்ட்ஸ்லா பண்ணி பாக்குறேன் பட் உன்கிட்ட பேசினாலே கார்த்திக்நு கூப்டதான் வருது என்ன பண்றது??என பாவமாய் கேட்க..

சஹி உனக்கு எப்படி கூப்ட பிடிச்சுருக்கோ அப்படி கூப்பிடு கஷ்டப்பட்டுலா நீ மாத்திக்க வேணாம்..

வாடா போடாநு கூப்பிடாம இருந்தா சரி அதுவும் அப்பா அம்மா முன்னாடி நமக்குள்ள நோ பார்மாலிட்டீஸ்..

என்ன புரியுதா என தலையசைத்து அவன் கேட்க கார்த்திக் அங்க பாரேன் என அவள் கூற சட்டென திரும்பியவனின் கன்னத்தில் இதழ்பதித்து ஓடிவிட்டாள்..

ஒரு நொடி அக்கம்பக்கம் பார்த்தவன் யாருமில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டுநிம்மதிப் பெருமூச்சு விட்டவாறே அவளை பின்தொடர்ந்தான்..

அவர்களிருவரும் வருவதற்குள் சிவா ஷரவந்தியை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றிருக்க பெரியவர்கள் நால்வரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்..

தன்னவளை கண்களால் அளந்தவாறே தன் அன்னையிடம் கிளம்பலாமா மா??

போலாம்ப்பா..சம்மந்தி குலதெய்வ பூஜை பத்தி சொன்னாரு அடுத்தவாரத்துல நாள் எதுவும் நல்லாயில்ல அதனால அதுக்கடுத்த வாரம் போய்ட்டு வந்துருவோம்..

ம்ம் சரிப்பா அப்படியே பண்ணிரலாம்..சரி நீங்க எல்லாரும் கிளம்புங்க நானும் சஹானாவும் இன்விடேஷன் டிசைன் பாத்துட்டு வந்துரோம்..

நானே கொண்டு வந்து விட்டுறேன் மாமா சீக்கிரம் வந்துருவோம்..சஹானா ஆச்சரியமாய் பார்க்க பெரியவர்கள் தங்களுக்குள் சிரித்தவாறே அவர்களை அனுப்பி வைத்தனர்..

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

4 comments

Kavi Natarajan October 16, 2026 - 5:12 pm

💞💞💞💞💞💞

suganyavel October 16, 2026 - 7:00 pm

Lovely😊 lovely😊

Padmasubramanian October 16, 2026 - 7:41 pm

சைட் அடிச்ச பொண்ணயே கொன்னுருவேன்ன்னு மிரட்டுற சஹி. அவனை யாருக்கும் விட்டு கொடுக்கவே மாட்டாள்.

srichitra October 16, 2026 - 8:48 pm

Nice

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode