ஞாயிற்றுகிழமை காலையிலேயே கீதா பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தார்..

மோகன் தன்னாலான சின்ன சின்ன உதவிகளை செய்தபடி இருக்க அங்கு ஷரவந்தியோ நகத்தோடு சேர்த்து விரலையே கடித்து துப்பிவிடுவது போல் இருந்தாள்..

ஹே ஷரவ் எதுக்கு இப்படி இல்லாத மூளையே போட்டு பிச்சுகிட்டு இருக்க??-ஷரவன்..

டேய் வேண்டாம்டா உன்கூட சண்ட போடுற மூட்ல நா இல்லஒழுங்கா போய்டு..

அவளருகில் வந்து அமர்ந்தவன்,ஏண்டி இவ்ளோ அலுத்துக்குற அவர பிடிச்சுருக்குனா பிடிச்சுருக்கு சொல்லு இல்லனா வேண்டாம்நு சொல்லிடு என் உன்ன நீயே வருத்திக்குற..

இதுதான்டா பிரச்சனையே என்னசுத்தி எல்லாருமே நல்லவங்களா இருக்கீங்க

அண்ணாவும் என் விருப்பம்தான் முக்கியம்நு சொல்றாரு நீயும் என்ன புரிஞ்சு எனக்காக பேசுற அப்பா அம்மாவும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்கதான் இருந்தாலும் நீங்கலா பாத்து வைக்குற மாப்பிளைய விடவா நா நல்ல செலக்ட் பண்ணிற போறேன் அதான்டா அவர்ட்ட என்ன சொல்லனு தெரியாம இருக்கேன்..

அவளின் மனவோட்டத்தை புரிந்தவன்,சரி உனக்கு அவர பிடிச்சுருக்கா இல்லையானு என்கிட்ட சொல்லு மத்தத நா பாத்துகுறேன் நீ அவர்ட்ட பேசவே வேணாம்..

என்னடா பண்ண போற???

நா கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு??

பிடிக்கலநு சொல்றதுக்கு ஒரு காரணமும் இல்லதான்..பேசின வர நல்லவரா தான் தெரியுது…ஆனாலும்…

அம்மா தாயே விடு இது போதும் நானே பாத்துக்குறேன்..

நீ விரலை கடிச்சு துப்புரத கண்டினியூ பண்ணு என கண்ணிமைக்கும் நேரத்தில் வெளியேறியவன் அடுத்து சென்று நின்றது தன் தமையனிடம்..

அண்ணா அவளுக்கு பிடிச்சுருக்குதான் ஏனோ அவளே அவள குழப்பிக்குறா??

நாம எதாவது பண்ணிணாதான் உண்டு என விஷயத்தை சொல்ல அடுத்த சில நிமிங்களில் நடக்க வேண்டியதை திட்டமிட்டு கொண்டனர்..

கார்த்திக் சஹானாவை அழைக்க அழைப்பு ஏற்கப்பட்டு அமைதி நிலவியது..

ஹலோ சஹி..ஆர் யு தேர்..??

சில நிமிடங்களுக்கு பின் சின்னதாய் ஒரு ம்ம்ம் கேட்க,சஹி என்ன பண்ற நீ உடம்பு சரியில்லையா??

கார்த்திக்க்க் ஏன் இப்படி எர்லி மார்னிங் கால் பண்ணி என்னென்னவோ கேட்குற என அரைகுறை தூக்கத்தில் உளற..

அடிப்பாவி மணி ஒன்பதாவது இது எர்லி மார்னிங்கா??ஒரு நிமிஷம் பயந்தே போய்ட்டேன்..

எங்க வீட்டுக்கு வர ஐடியா இருக்கா இல்லையா??

ஐயையோ மணி 9ஆ??என்ன கார்த்திக் நீ இப்படி பொறுப்பில்லாம இருக்க சீக்கிரமா எழுப்பி விட்டுருக்கலாம்ல??

எல்லாம் என் நேரம்மா…நீ இங்கதான வர போற இரு கவனிச்சுக்குறேன்..

ஒழுங்கு மரியாதையா சீக்கிரம் கிளம்பி வரவழிய பாரு.. உனக்கு இங்க ரெண்டு சர்ப்ரைஸ் காத்துட்டு இருக்கு..

ஹே கார்த்திக் எனக்கு சஸ்பென்ஸ்லா தாங்காது ப்ளீஸ் ப்ளீஸ் என்னனு சொல்லிடேன் என் செல்லம்ல..

நோ வே மை டியர் நீ இங்க வந்தே தெரிஞ்சுக்கோ பை..

என அழைப்பை துண்டித்து வீட்டு தம்பியோடு சேர்ந்து போட்ட திட்டத்தை செயல்படுத்த சமையலறை நோக்கிச் சென்றான்..

வா கார்த்தி காபி எதுவும் சாப்டுறீயாப்பா??

அதெல்லாம் வேணாம்மா..நா எதுவும் ஹெல்ப் பண்ணவாப்பா??

இல்லடா அதெல்லாம் முடிஞ்சுது-மோகன்..

பாரு பையன் நீ வந்து கேக்குற இந்த சின்ன கழுத எங்க இருக்காநு கூட தெரில நாளைக்கு கல்யாணம் ஆகி மாமியார் வீட்டுக்கு போயும் இப்படியிருந்த என்ன இல்ல தப்பு சொல்லுவாங்க-கீதா

தன் வேலையை சுலபமாக்கிய அன்னையை மனதினுள் கொஞ்சியபடி மெதுவாய் பேச்சை ஆரம்பித்தான்..

ம்மா நீங்க சொன்னவுடனே தான் நியாபகம் வருது நானே உங்க ரெண்டு பேர்கிட்டயும் பேசணும்னு இருந்தேன்..

நம்ம ஷரவ்க்கு ஒரு வரன் வந்துருக்குப்பா..

நல்ல விஷயம்தான் யாருப்பா??உனக்கு தெரிஞ்சவங்களா??

உங்களுக்கும் தெரியும்ப்பா சஹானாவோட அண்ணன் சிவா இருக்காறே அவருதான்ப்பா..

அவரா??அவங்கலா பெரிய இடமாச்சே கார்த்திக் என்ன எதிர்பார்ப்பாங்களோ தெரியலையே?? என கீதா தன் கவலையை கூற

ம்மாமா அவங்களும் சேகர் சார் மாறிதான்ம்மா பணத்தை பெருசா மதிக்குறவங்கயில்ல..

அவரு ஏற்கனவே ஷரவந்திய எங்கேயோ பாத்துருப்பாரு போல அப்போவே பிடிச்சு போய் அவர் அம்மா அப்பாட்டயும் சொல்லிட்டாராம்.

இப்போ தான் அவ என் தங்கச்சிநு அவருக்கு தெரிஞ்சுருக்கு அதான் என்கிட்ட சொல்லி உங்ககிட்ட பேச சொன்னாரு..

பையன் நல்ல பையன்தான்.. குடும்பமும் நம்ம ஷரவ்க்கு ஏத்தமாறி தான் தெரியுது நீங்க என்னப்பா சொல்றீங்க??

ம்ம் எல்லாம் சரிதான்டா ஆனா ஷரவ் மனசுல என்னயிருக்கோ தெரியலையே??

எனக்கு தெரிஞ்ச வர நாம யார சொல்றமோ அவளுக்கு ஓ.கே தான்ம்மா ஜாடை மாடையா பேசி பாத்தேன் அவளுக்குனு தனி ஐடியாலா இருக்குறமாறி தெரில..

மோகன் ஏதோ யோசனையிலிருக்க கீதா,

என்னங்க என்ன யோசிக்குறீங்க??

இல்ல கீதா இப்போதான் பெரியவன் கல்யாணம் முடிவு பண்ணிருக்கோம் அதுக்குள்ள அவளுக்கும்னா எப்படிம்மா சமாளிக்க முடியும்?? அதான் யோசனையா இருக்கு..

அப்பா அதெல்லாம் கவலபடாதீங்க அவளுக்குநு நா கொஞ்சம் சேவிங்க்ஸ் தனியா வச்சுருக்கேன்..

அதுவும் போக ஒரு ஆறேழு மாசம் தள்ளி வச்சுக்கலாம்நு சொன்னா அவங்க ஒத்துப்பாங்கப்பா என கார்த்திக் எடுத்து கொடுக்க,

சிறு புன்னகையுடன்,அப்போ இந்த இடத்தையே முடிச்சுரலாம்நு முடிவு பண்ணிட்டனு சொல்லு என மோகன் கேட்க,

அப்பா அதில்ல சிவா எனக்கு தெரிஞ்சவரு அதுவும் போக சஹானாக்கு அண்ணன் சோ அவருக்கு கொடுத்தா நம்ம ஷரவ் நம்ம கண் பார்வைலேயே இருப்பால்ல..

அதனாலதான் மத்தபடி உங்க முடிவுதான்ப்பா என் முடிவும் என தாழ்ந்த குரலில் கூற மோகன் அவன் தோளை தட்டி உன் தங்கச்சிக்கு உன்னவிட யாரு நல்ல இடமா பாத்துற போறா??

அவங்க வரட்டும் பேசுவோம் என்றவாறு அங்கிருந்து நகர்ந்தார்..கீதாவும் மனநிறைவோடு சிரிக்க கார்த்திக் மனம் லேசானதாய் உணர்ந்தான்..

11 மணியளவில் இரு குடும்பமும் கார்த்திக்கின் வீட்டை வந்தடைய சந்தோஷமாய் வரவேற்றனர் கீதாவும் மோகனும்..

கார்த்திக் தன்னவளைவிட்டு விழி நகர்த்தாமல் நடக்க பொறுமையிழந்த சிவாவோ மாப்ள நீங்க சஹானாவ நாள் பூராகூட இங்கேயே உக்காரவச்சு சைட் அடிங்க மொதல்ல எனக்கு ஒரு முடிவ சொல்லுங்க..

என் தேவியின் தரிசனம் இன்னும் கிடைக்கவில்லையே என அவன் காதை கடித்தான்..

சிவா கவலையே படாதீங்க நல்ல செய்தி உங்க காது தேடிவரும் அதுக்கு முன்னாடி உங்க ஆளு ஹாலை தேடி வருவா போங்க.

என கூறி சிரிக்க..உற்சாகமாய் ஒரு ஹைபை கொடுத்து சென்றான்..

என்ன நீயும் அந்த ஷிவா குரங்கும் அப்பப்போ ஏதோ ரகசியம் பேசுறீங்க என்ன விஷயம்??-சஹானா..

சஹி நம்ம வீட்டு மாப்பிள்ளைய குரங்குனு சொல்லாத என்று கூறி கண்ணடிக்க,

ஒரு நிமிடம் விழித்தவள்..ஹே நினைச்சேன் அந்த ப்ராடு ஷரவ்வ பாக்கும்போதெல்லாம் ஒரு கொசுவட்டம் தெரியுதேநு நெனைச்சேன் ம்ம் அப்படி போகுதா கதை..

இதோ வரேன் என அவனை துரத்த சென்றவளின் போனி டெயிலின் நுனியை பிடித்து இழுத்து நிறுத்தினான் கார்த்திக்..

ஆஆஆ வலிக்குதுப்பா..

ம்ம் எல்லாத்துலயும் அவசரம் வெயிட் பண்ணு உள்ள சீன்னே வேற நீ பாட்டுக்கு எதையாவது உளறி கொட்டாம வேடிக்கபாரு புரியுதா??

அட கார்த்திக் உன்ன என்னவோநு நெனைச்சேன் பின்ற போ..நீ நடத்துப்பா என தலை சாய்த்து கூற..

இதோ வரேன் என ஒரு அடி முன் வைத்தவனுக்கு அழகு காட்டி முன்னே சென்றாள் சஹானா..

உள்ளே அனைவரும் சென்று அமர ஷரவந்தி அனைவருக்கும் ஜுஸ் கொண்டு வந்து கொடுத்தாள் தப்பி தவறியும் சிவாவை நிமிர்ந்து பார்க்கவில்லை..

அவள் அப்படியே உள்ளே செல்ல எத்தனிக்க சிவாவின் தாய் கங்கா அவளை தன் அருகில் அமர்த்திக் கொண்டார்..

கீதாவும் மோகனும் தங்களுக்குள் அதை குறித்து கொண்டனர்.. சில நேர பொதுவான உரையாடலுக்குப் பின் மோகன் மெதுவாய் விஷயத்தை ஆரம்பித்தார்..

கார்த்திக் காலைல தான் விஷயத்தை சொன்னான்..

என பொதுப்படையாய் ஆரம்பிக்க,என்ன விஷயம் சம்மந்தி என சேகர் தொடர,

வந்து எங்க ஷரவந்திய சங்கர் சார் பையனுக்கு பேசுற விஷயமா தான் என கூற சேகரும் துளசியும் குழப்பமாய் பார்க்க நிலைமை உணர்ந்த சங்கரோ அட ஆமா சேகர் நானே உற்கிட்ட சொல்லனும்னு நினைச்சேன் இவங்க முடிவு தெரியாம வீணா விஷயத்தை பெருசாக்க வேண்டாமேநு விட்டுட்டேன்..

என கோர்வையாய் முடிக்க சிவாவோ மனதுக்குள் குத்தாட்டம் போட்டவாறு கார்த்திக்கை பார்த்து புன்னகைத்தான்..

ஷரவந்தி காரமாய் ஷரவனை பார்க்க அவனோ தனக்கும் இதற்கும் சம்மந்தமேயில்லை என்பது போல் வேறெங்கோ பார்த்து கொண்டிருந்தான்..

சரி நேரடியாவே பேசிருவோம் ஷரவந்திய எங்கவீட்டு மருமகளா ஆக்கிக்க ஆசைபடுறோம் நீங்க என்ன சொல்றீங்க முக்கியமா ஷரவந்தி என்ன சொல்றா என பட்டென்று போட்டு உடைத்தார் சங்கர்..

எங்களும் சம்மதம்தான் என்றவாறு மோகன் ஷரவந்தியை பார்க்க சிறு தலையசைப்போடு குனிந்து கொண்டாள்..

அதன்பின் நிறைவாய் எங்க ஷரவந்திக்கும்தான் என்று முடிக்க கங்கா தன் வருங்கால மருமகளை வாஞ்சையாய் அணைத்து கொண்டார்..

ஷரவந்திக்கோ சிவாவை எப்படி எதிர் கொள்வது என படபடப்பாய் இருந்தது..

அதன்பின் திருமணா பேச்சுகள் தொடர சிறியவர்கள் அனைவரும் நாசூக்காய் கழண்டு கொண்டனர்..

அனைவரும் மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க சிவாவின் நிலையறிந்த ஷரவனோ சரிப்பா புது ஜோடிகள் இருக்குற இடத்துல எனக்கு வேலையில்ல சாப்பிடுறப்போ மீட் பண்ணுவோம் பை என நிற்காமல் சென்றுவிட்டான்..

சஹி நீ வா நா உனக்கு ஒண்ணு காட்டனும் என அழைக்க அவளோ டேய் அண்ணா ஷரவ் பாக்கதான் அமைதி நிஜத்துல என்னவிட மோசம் பாத்து நடந்துக்கோ சொல்லிட்டேன்..

என சீரியஸாய் கூற ஏய்ய்ய் என கையில் கிடைத்த எதையோ தூக்கி அவள் மேல் எறிந்தாள் ஷரவந்தி..

பாத்தல எதாவது வம்பு பண்ண கையில கிடைக்குறத எடுத்து தூக்கி அடிச்சுருவா பாத்துக்க என கேப்டன் குரலில் கூற அவள் வாய் மூடி உள்ளே அழைத்து சென்றான் கார்த்திக்..

விடு கார்த்திக் பப்ளிக்ல இப்படியா பிகேவ் பண்றது சிவா என்ன நினைப்பான்..

ம்ம்ம் என்ன தெய்வம்நு நினைப்பாரு ஏன் நீ இப்படியிருக்க நாம பாத்துக்குறதே அதிசயம் இதுல நீ அங்க நின்னு மொக்க போட்டுட்டு இருக்க..

ஆமால்ல அதுவும் கரெக்ட்தான் சரி ரெண்டாவது சர்ப்ரைஸ் என்ன??சொல்லு சொல்லு??

அதான உன் காரியத்துல கரெக்ட்டாயிருப்பியே.. சரி கண்ண மூடு..

எதுக்கு??

எதையாவது சொன்னவுடனே செய்றியா நீ எல்லாத்துக்கும் எதிர் கேள்வி கேட்காத.. சொல்றத செய்..

ம்ம்ம் இப்போவே ஆர்டர் போட ஆரம்பிச்சுட்ட சரி சீக்கிரம் என்னனு சொல்லு..

கண்மூடி நின்றவளின் தோளில் ஏதோ புரள கைகளால் தடவியபடியே கண்களை திறந்தவள் அந்த அழகிய புடவையை கண்டு கண் விரித்தாள்..

அழகான வைலட் நிற பட்டு தங்க சரிகைகளோடு அவள் நிறத்திற்கு பாந்தமாய் அழகாயிருந்தது..

வாவாவாவ்வ்வ் எனக்கு இந்த கலர்தான் பிடிக்கும்நு உனக்கு எப்படி தெரியும்??

ம்ம் அதெல்லாம் நீ சொன்னாதான தெரியும் இது எனக்கு பபிடிச்ச கலர் அதனாலதான் எடுத்தேன்.. என்ன பிடிச்சுருக்கா??

ம்ம்ம் ஐ லவ்ட் திஸ் தேங்க் யூ புஜ்ஜுப்பா…

அவள் பேச்சை ரசித்தவன் சரி இததான் நம்ம என்கேஜ்மெண்ட்க்கு நீ கட்ற ஓ.கே வா???

ம்ம்ம் ஷுவர் கட்டிட்டா போச்சு சரி சரி வா போலாம் ஸ்வீட்டீ சமையலை ஒரு புடி புடிக்கனும்னு காலைல வேற சாப்டாம வந்துட்டேன் வா வா கீழே போலாம்..

ஏய் இரு இரு என்ன ரியாக்ஷன் இது??உனக்காக நானே பாத்து பாத்து செலெக்ட் பண்ணி கிப்ட் சர்ப்ரைஸா வாங்கிட்டு வந்தா நீ சாப்ட்றத பத்தி பேசிட்டு இருக்க.. என்ன பண்ணலாம் உன்ன??

அதான் நல்லாயிருக்குநு சொல்லிட்டனே வேறன்ன கார்த்திக்??

அவளை ஆர்வமாய் ஓரு பார்வை பார்க்க அதன் அர்த்தம் புரிந்தவளோ சட்டென திரும்பி கொண்டாள் அடுத்த அடி அவள் எடுத்து வைக்க எத்தனிக்க அவள் கையை இறுக்கி பிடித்தான்..

நா கேட்டதுக்கு இன்னும் பதில் வரல சஹி??அவன் குரல் இன்னும் மென்மையாய்..

மெதுவாக திரும்பியவள் அவனை ஏறிடாமல் அப்படியே நிற்க பிடித்திருந்த கையை சற்று முன்னோக்கி இழுத்தான்..

மறுக்காமல் முன் வந்தவள் தன்னவன் மேல் இரு கைகளையும் வைத்தவறு நெருங்கி நிற்க அவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள்..

ஏன்டா அப்படி பாக்குகுற??-கார்த்திக்..

சட்டென அவனை முன்னிழுத்து நெற்றியில் அழுத்தமான முத்தத்தை பதித்து இந்த தடவை கண்டிப்பா இந்த புடவைய நமம்ம நிச்சயதார்த்தத்துக்கு தான் கட்டுவேன் கார்த்திக் என்று கூறி மீண்டும் நெற்றியில் இதழ் பதித்தாள்..

கார்த்திக் ஒரு கணம் அதிர்ந்தாலும் அதை மறைத்து சஹி என அழைக்க,

போதுமா இப்போ வா போலாம் இதுக்கு மேல எதுவும் கிடைக்காது கல்யாணத்துக்கு அப்பறம்தான் வா ஒழுங்கா என்றவாறு அவள் செல்ல அவள் முத்தமிட்டு பேசிய நொடி அதே குரல் அதே பார்வை அது நிச்சயமாய் இந்த சஹியுடையது இல்லை என அவனறிவான்..

இருப்பினும் அப்படி ஒன்றை அவனால் ஏற்கவும் முடியவில்லை அப்படியே விடவும் முடியவீல்லை.. அவள் கூறியதன் அர்த்தமென்ன விளங்கவில்லை..

ஷரவன் வந்து அவனை உலுக்கும் வரையில் அப்படியே நின்றிருந்தான்..

அங்கு ஷரவந்தியோ தன் துப்பட்டாவின் நுனியை ஆராய்ந்து கொண்டிருந்தாள்..

அவளாக பேசுவாள் என காத்திருந்த சிவாவோ பொறுமையிழந்தவனாய் அவனே ஆரம்பித்தான்..

ஷரவ் ஆல்ரெடி என் லைவ்ல ரெண்டு வருஷத்த உன்ன பாக்காம வேஸ்ட் பண்ணிட்டேன் இனியும் ஒரு செகண்ட் கூட வேஸ்ட் பண்ண விரும்பல..

சொல்லு என்ன கல்யாணம் பண்ணிக்க உனக்கு  சம்மதம் தான??

தயக்கமாய் ஒரு பார்வை அவளிடம்..என்ன கூறவென தெரியாமல் இமைதுடிக்க நின்றவளின் கைகளை சட்டென எடுத்து தன் கைகளில் வைத்தவன்,

சொல்லு ஷரவ் இதேமாறி வாழ்க்கை பூரா இந்த கை கோர்த்து நடக்க சம்மதமா இல்லையா??

ஏன் இத்தனை தடவ கேக்குறேன்னா நா உனக்கு குடுத்த டைம் ரொம்ப கம்மினு எனக்கே தெரியும் சோ இன்னும் யோசிக்கனும்னாலும் யோசி பட் எந்த ஒரு கட்டாயத்தினாலேயும் நீ என்ன ஏத்துக்க கூடாது உன் விருப்பம் எனக்கு ரொம்ப முக்கியம்..

சட்டென கையை உருகி கொண்டவள் கண்டிப்பா யோசிக்கனும் ரெண்டு வருஷமா என்ன தேடாமயே இருந்ததுக்கு என்ன பணிஷ்மெண்ட் தரலாம்நு யோசிக்கனும் என்று கண்சிமிட்டி கூறி கீழே ஓடிவிட்டாள்..

தேங்க் யு டீச்சர்ம்மா என்று விசிலடித்தபடியே அவளை பின் தொடர்ந்தான் சிவா..

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

2 comments

Kavi Natarajan October 15, 2026 - 9:16 am

💞💞💞💞💞

Padmasubramanian October 15, 2026 - 9:55 am

டீச்சர்ம்மா, சிவாவிற்கு ஓகே சொல்ல எவ்ளோ யோசனை பண்றீங்க?

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode