0
அந்த ஏழு நாட்களும் எப்படி நகர்ந்ததென தெரியவில்லை நிர்பயவிற்கு..
மனமெங்கும் சந்தோஷம் மட்டுமே நிறைந்திருக்க அதை நினைத்தவாறே படுக்கையிலிருந்து எழக்கூட தோன்றாமல் படுத்திருந்தாள்..
லேசாய் திரும்பி படுத்தவன் கண்விழிக்க, கண்விழித்திருக்கும் தன்னவளை கண்டு தூக்கம் தெளிந்தான்..
“என்னாச்சு நிரு தூங்கல???”
“இல்லப்பா முழிப்பு வந்துடுச்சு.. ஆனா எழுந்துக்க தோணல..”
“என்னாச்சு உடம்பு எதுவும் டயர்டா இருக்கா???”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல.. இன்னைக்கு நாம ஊருக்கு கிளம்பனும்ல.. அதான்.. எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணுவேன்.. முக்கியமா அம்மாவ..”
“அடடா..இப்படி ஒரு மருமகள உலகத்துல பாக்கவே முடியாது போ..
சரி உண்மையை சொல்லு இவங்கள விட்டு வர கஷ்டமா இருக்கா இல்ல இந்த போலீஸ்காரன தனியா சமாளிக்கனுமேனு பயமா இருக்கா???”
“ச்சச்ச அப்படிலாம் இல்லங்க..”
“ம்ம் சரி சரி ரொம்ப யோசிக்காம போய் எனக்கு ஒரு காபி மட்டும் எடுத்துட்டு வரியா??”
ஐயோ சாரி இதோ டூ மினிட்ஸ் எடுத்துட்டு வரேன்ங்க என எழுந்து கீழே சென்றவளை பார்த்தவனுக்கு அவளின் மனநிலை நன்றாகவே புரிந்தது..
இருப்பினும் என்றாவது ஒருநாள் அந்த நிலைமையை எதிர் கொள்ளத்தான் வேண்டும்.. அதற்காக தான் சீக்கிரமாகவே சென்னைக்கு கிளம்புவதும்..
அவள் மகிழ்ச்சியாய் இருப்பதாய் இருந்தாலும் தாங்கள் இருவர் மட்டுமே இருக்க போகும் இடத்தில் அவள் மனது எப்படியிருக்கும் என சொல்ல முடியாது..
சரோஜாவிடமும் பேசியிருந்தான்.. அவரும் நிர்பயாவிடம் பேசுவதாய் கூறியிருந்தார்..
எல்லாம் நல்லதாய் இருக்க கடவுளை வேண்டியவன் அன்றைய நாளை எதிர்கொள்ள தயாரானான்..
மதிய உணவிற்கு மேல் தமிழ் வேண்டியவை சில வாங்குவதற்காக கடைக்குச் செல்ல நிர்யா சரோஜாவையே சுற்றி வந்தாள்..
அவள் மனவோட்டம் புரிந்தவர் அவளையும் அழைத்து டைனிங் டேபிளில் அமர்ந்தார்..
“என்ன நிர்யா ஏன் காலைலயிருந்து என்னவோ போலயிருக்க என்னாச்சு???”
“ம்மா நீங்களும் எங்ககூட சென்னை வாங்களேன்.. கொஞ்ச நாள் இருந்துட்டு வரலாம்..”
“ஏன்டா என்னாச்சு??தமிழ் எதுவும் சொன்னானா??”
“ஐயோ அதெல்லாம் இல்ல அம்மா.. எனக்கு தான் நீங்க கூட இருந்தா கொஞ்சம் தைரியமா இருக்கும் போல தோணுது..”
இங்க பாரும்மா..எதை நினைச்சும் மனசை குழப்பிக்காத.. உன் மனசு எனக்கு புரியாம இல்ல..
ஆனா உங்க ரெண்டு பேருக்கும் இந்த தனிமை கண்டிப்பா தேவை..
ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்க ரொம்ப உதவியா இருக்கும்..அதுமட்டுமில்லாம தமிழை நினைச்சு நீ எதுக்காகவும் பயப்பட வேணாம்..
என்னை விட அவன் உன்னை நல்லாவே பாத்துப்பான்..
நீயும் அவனைப்பத்தி தெரிஞ்சுக்க நிறையவே இருக்கு..டெய்லி நா போன் பண்றேன்..
ம்ம் இங்க அப்பாவையும் தனியா விட்டுட்டு வர முடியாது இல்ல..ராஜியும் வேலைக்கு போக ஆரம்பிச்சுருவா..
சரியா இதெல்லாத்தையும் மீறியும் உனக்கு அங்க போனபிறகு என்னை பாக்கனும்னு தோணிணா சொல்லு கண்டிப்பா வரேன்..
என்ன சரியா??கொஞ்சமா சிரிக்கலாமே.. ம்ம் என தாடைப்பிடித்து கிள்ளி சிரித்தார்..
இரவு ஒன்பது மணியளவில் இருவருமாய் காரில் கிளம்ப அனைவருமாய் விடைகொடுத்து அனுப்பினர்..
சிறிது தூரத்திற்கு அவள் ஒன்றுமே பேசாமல் வர தமிழே பேச்சை ஆரம்பித்தான்..
“ஏ ரசகுல்லா நா அவ்ளோ மோசம் இல்ல..இப்படி முகத்தை தொங்கப் போட்டு வரியே..
நா வேணா உன்னை இங்கேயே விட்டுரவா கொஞ்ச நாள் இருந்துட்டு வரியா???”
“ம்கும்..வேண்டாம்..சும்மா ஏதோ நியாபகத்துல இருந்தேன்ப்பா..”
ம்ம் சரி நீ வேணா தூங்கு நிரும்மா..எனக்கு ஒண்ணும் ப்ராப்ளமில்ல..என அவன் கூற மறுப்பேதும் கூறாமல் விழி மூடிக் கொண்டாள்..
அதிகாலையிலேயே சென்னையை அடைய தமிழ் சோர்வாய் சோபாவில் அமர்ந்தான்..இருங்கப்பா காபி போட்டு தரேன் சாப்ட்டு போய் தூங்குங்க..
“அட உனக்கு காபி போட தெரியுமா பரவால்லையே நா பொழச்சுக்குவேன்”, என சிரிக்க,
“உங்க அளவு இருக்காது சுமாரா போடுவேன்”, என்றவாறு கிட்சனுக்குச் சென்றவள் காபி கலந்து கொண்டு வந்தாள்..வாங்கிப் பருகியவன்,
“ நினைச்சத விட நல்லாவே இருக்கு தேங்க் யூ நிரு.. செம்ம தூக்கம் வருது கொஞ்ச நேரம் தூங்கி எழுந்துட்டு டிபன் பண்ணி தரேன் ஓ.கே யா??”
ஒண்ணும் அவசரமில்லங்க நீங்க போய் தூங்குங்க முதல்ல..
என அனுப்பிவிட்டு குளித்து முடித்து சரோஜா அவர்களுக்காக கொடுத்து விட்டிருந்த தோசை மாவை எடுத்தவள் இட்லி தயார் செய்தாள்..
டப்பாக்களை தேடிப்பிடித்து இட்லி பொடியை எடுத்து டேபிளில் வைத்தவள் வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்..
பாச்லர் வீட்டிற்கே உரிய கோலத்தில் காட்சிளித்த வீட்டை ஓரளவு மாற்றியமைத்தாள்..
அனைத்து கர்டன்களையும் எடுத்து துவைக்க மெஷினில் போட்டு வீட்டை பெருக்கி முடிக்கும் போது மணி காலை ஒன்பதை தொட்டிருந்தது..
தூங்கி எழுந்து வந்தவனின் கண்கள் மாற்றங்களை கவனினிக்க,
“அடடா ஒரு நாலு மணி நேரம் தூங்கிட்டு வர்றதுக்குள்ள வீடே மாறிடுச்சு..
ஏன் ஸ்ட்ரெயின் பண்ணிக்குற நானும் ஹெல்ப் பண்ணிருப்பேன்ல..”
“பரவால்லைங்க தூக்கம் வரல அதான்..சரி நீங்க குளிச்சுட்டு வரீங்களா சாப்டலாம்..இட்லி பண்ணிருக்கேன்..”
“அடடா என்னதிது நா உனக்கு சமைச்சு போட்டு இம்ப்ரஸ் பண்ணலாம்னு பாத்தா இப்படி பண்றியே நிரு..
சரி விடு லஞ்ச் அசத்திருவோம்”, என அவன் எழுந்து செல்ல வழக்கம்போல் அவன் வருவதற்குள் அவனுக்கான அனைத்தையும் எடுத்து வைத்தவள் டைனிங் டேபிளில் அவனுக்காக காத்திருந்தாள்..
இருவருமாய் பேசியபடியே காலை உணவை முடிக்க தமிழ் மதிய உணவு தயார் செய்ய ஆரம்பித்தான்..
அவள் காய் நறுக்கிக் கொடுப்பதும் பாத்திரம் தேய்த்து வைப்பதுமாய் தன்னால் முடிந்ததை செய்து கொடுத்தாள்..
இருவருமாய் கெட் டூ கெதருக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக ஷாப்பிங் செல்ல முடிவு செய்து காரை எடுத்துக் கொண்டு கிளம்பினர்…
இருவருமாய் கலந்து பேசி பாதி நாள் ஷாப்பிங்கிலேயே கழிய நிர்பயாவும் ஓரளவு பழைய நிலைக்கு வந்திருந்தாள்…
மாலை வேளையில் ஹரிஷ் ஷாலினியோடு வந்திருக்க பேச்சிற்கு குறைவில்லாமல் பொழுது கழிந்தது..
“இப்போ எப்படியிருக்கீங்க அக்கா..”
“ம்ம் பரவால்ல நிர்பயா..நா இவரை கல்யாணத்துக்கு போக சொன்னேன் இவருதான் பயந்துட்டு போமாட்டேன்னு சொல்லிட்டாரு..”
“ஷாலு உன்னை இப்படி விட்டுட்டு அங்க வந்திருந்தாலும் அவன் நிம்மதியா இருந்திருக்க முடியுமா சொல்லு..”
“ம்ம் அதுவும் கரெக்ட் தான் அண்ணா..இரண்டு வாரத்துக்கே நிர்பயா ஒரு சுத்து பெருசான மாதிரி இருக்காளே செம கவனிப்பா??”
“ஐயோ நீ வேற என்னை கூட இத்தனை வருஷத்துல இப்படி பாத்துகிட்டது இல்ல..
மாமியாரும் மருமகளும் என்னமா கொஞ்சிட்டு இருந்தாங்க தெரியுமா..”
“டேய் நீ ஒருத்தனே போதும் குடும்பத்தை பிரிக்க..ஏன்மா ரொம்ப படுத்துறானா சொல்லு ஒரு வழி ஆக்கிடுவோம்”, என ஹரிஷ் சிரிக்க,
“இப்போதைக்கு பரவால்லண்ணா இதுக்கப்பறம் கண்டிப்பா சொல்றேன் “,என நகைத்தவளை ஷாலினி ஆச்சரியமாய் பார்த்தாள்..
அதன் பிறகும் வெகு நேரம் பேசிவிட்டு இருவரும் கிளம்ப நிர்பயா தமிழுக்கு இரவு உணவை பரிமாறினாள்..
கிட்சனை க்ளீன் செய்து நிர்பயா வர ஹாலில் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்தவன் தன் பக்கத்தில் கைகாட்டி அமர சொல்ல வந்தமர்ந்தாள்..
“நிரு இன்னைக்கு ஷாப்பிங் நல்லா போச்சுல..வேற எதுவும் வாங்க வேண்டியது இருந்தாலும் நோட் பண்ணிக்கோ நாளைக்கு போய் வாங்கிக்கலாம்..”
ம்ம் சரிப்பா..மெதுவாய் தன்னவளின் தோள் சுற்றி கை போட்டவன் ஆதரவாய் தோள்பற்றி தன்னோடு சாய்த்து கொண்டான்..
இன்னுமா உங்க மாமியாரை மிஸ் பண்ற??என குறும்பாய் கேட்டான்..
“கிண்டல் பண்ணாதீங்க..”
“நா ஏன் கிண்டல் பண்றேன் நீ தான் பேக்ரவுண்ட்ல வயலின் வாசிச்சுட்டே சுத்ற..
சென்னை வந்ததும் மறுபடியும் என் அழுமூஞ்சி பொண்டாட்டி வந்துட்டா போலேயே..”
“சாரிங்க..டூ டேஸ்ல சரி ஆய்டுவேன் ஏன்னு புரில நா ஏன் இப்படி இருக்கேன்னும் தெரில..”
“ரிலாக்ஸ் டேக் யுவர் டைம்..பட் டூ டேஸ் தான் நா குடுக்குற டைம்”, என கண்ணடித்தவன் சரி ரொம்ப லேட் ஆச்சு தூங்கலாமா என கேட்க அவனை விட்டு வேகமாய் எழுந்தவளை இடைபிடித்து தூக்கி தனதறைக்குச் சென்றான்..
“ஐயோ என்ன இது நான் வரேன் விடுங்க..”
நீ தான் டூ டேஸ் டைம் கேட்ட நாயில்லயே ஒழுங்கா வா பாக்கலாம் இல்ல கீழே போட்டுருவேன் என குலுக்க சட்டென அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள்..
வழக்கம்போல் தன்னை விட்டு விலக்காமல் அவளை சாய்த்து கொள்ள ஒன்றும் கூறாமல் அப்படியே உறங்கியும் போனாள்..
மறுநாள் சீக்கரமாகவே எழுந்தவள் வீட்டை இன்னுமாய் தன் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைத்தாள்…
வீட்டை ஒருமுறை பார்த்தவள் திருப்தியாய் உணர தமிழை எழுப்பச் சென்றாள்..
வழக்கம்போல் அவன் அவளை சீண்டியவாறே எழுந்தமர கன்னத்தை காடியவாறு அவளை ஓரப்பார்வை பார்க்க லேசாய் முகம் சிவந்தவள் இதழ்பதித்து வெளியே சென்றுவிட்டாள்…
“வாவ் ரசகுல்லா வீடேயே சூப்பரா மாத்தீட்ட…சரி சொல்லு என்ன டிபன் பண்ணலாம்..”
“வேண்டாம்ப்பா நானே பண்றேன் உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க உங்களை வேலை செய்ய வைக்குறது ஒரு மாதிரி இருக்கு..”
“நோ பார்மாலிட்டீஸ் நிரு..”
“ப்ளீஸ்ப்பா..”
சரி உன் இஷ்டம் என்ன பண்ணாலும் சாப்டுறேன்..
அண்ட் நானும் ஹெல்ப் பண்ணுவேன் என்றவாறு சமையலை தொடங்க இதற்கு அவனையே சமைக்க சொல்லியிருக்கலாம் எனும் அளவிற்கு அவளிடம் எதாவது வம்பு செய்து கொண்டேயிருந்தான்..
இருவருமாய் சாப்பிட்டு முடித்து பார்ட்டிக்கான மெனு தயார் செய்ய தொடங்க,நான்கைந்து பதார்த்தங்கள் முடிவு செய்து,
“எந்த ஹோட்டல சொல்லலாம்ங்க.. இவ்ளோ கம்மியா டெலிவர் பண்ணுவாங்களா??தெரிலயே..”
“ஏன் பண்ணாம தமிழ்செல்வன் மெஸ்ல கண்டிப்பா பண்ணுவாங்க..”
“என்ன??????நீங்க பண்ண போறீங்களா??”
“எதுக்கு இவ்ளோ ஷாக் ஆகுற நிரு??அக்சுவலா நாம இன்வைட் பண்ணிருக்க எல்லாரும் என் பேட்ஜ் மேட்ஸ்தான்..
ஒருத்தர் மட்டும் சீனியர் எல்லாரும் வீட்டுக்கு வர்றதே வீட்டு சாப்பாடுக்காக தான்.. சோ நோ வொரீஸ் அதெல்லாம் ஜமாய்ச்சுடலாம்..”
ஆவலாய் சிறு பயத்தோடு அவள் எதிர்பார்த்த நாளும் வந்தது..
காலை முதலே இருவரும் பரபரப்பாய் வேலைகளை கவனிக்க நான்கு மணியளவில் டின்னர் வேலைகளை ஆரம்பித்தனர்..
வெஜ் புலாவ்,கோபி 65,பன்னீர் பட்டர் மசாலா,சப்பாத்தியோடு கடையில் வாங்கிய ஜாமூனும் தயாரானது..
வேலை செய்த அலுப்பு நீங்க குளித்து வந்தவர்கள் தங்களுக்கான உடையை எடுக்க நிர்பயா அழகான அனார்கலி சுடிதாரை கையிலெடுத்தாள்..
“ரசகுல்லா நா ஒரு டிசைனர் புடவை எடுத்து குடுத்தேனே அதை கட்டிக்கோ ரொம்ப நல்லாயிருக்கும்..”
அது..அதெல்லாம் வேண்டாம்ங்க..சுடிதாரே..என்றவள் அவன் பார்வையை கண்டு வாயை மூடிக் கொண்டாள்..
வழக்கம்போல் கண்களை மூடியவாறு அவளுக்கு புடவையை கட்டிவிட தலைக்கு குளித்திருந்ததின் காரணமாய் அவள் தலைமுடி ஈரம் சொட்ட விரிந்திருக்க முந்தானையை சுற்றி எடுப்பதற்காக குனிந்தவனின் முகத்தில் இருதுளி தண்ணீர் சொட்ட தன்னை மறந்து சட்டென விழிதிறந்தவன் தன்னவளின் அருகாமையில் ஒரு நொடி மனம் மறந்துதான் போனான்..
பெண்ணவளோ என்ன செய்வதென அறியாமல் திரும்பிக் கொள்ள அவனின் கரம் அவள் இடைசுற்றிப் பரவியது..
இதழ்கள் கழுத்து வளைவில் கவிதை வரைய நடுக்கத்தோடு அவன் புறம் திரும்பியவளின் கழுத்தின் கீழே இருந்த காயத்தை கண்டவன் சட்டென உணர்வு பெற்றான்..
அவள் கண்களின் கண்ணீரை அப்போதுதான் கவனித்தவன் சட்டென விலகி புடவையை சரிசெய்துவிட்டு,
‘ஏ நிரு என்னடி இது கழுத்துல எப்போ என்ன நடந்தது இப்டி வடுவா மாறியிருக்கு”, என பதற இன்னுமாய் அவள் அழ ஆரம்பித்திருந்தாள்..
எதை நினைத்து அவள் பயந்தாளோ அதை நடத்திவிட்டோமே என்ற குற்றவுணர்வு மேலெழும்ப செய்வதறியாமல் தவித்தவன்,
“சாரி நிரு வேணும்னு பண்ணல ரியலி சாரி.. அழறத நிறுத்து முதல்ல அதான் சாரி சொல்றேன்ல..”, என அவன் பாணியில் மிரட்ட நினைத்ததை போல் அழுகை மட்டுப்பட்டது..
“முதல்ல நா கேட்டதுக்கு பதில் சொல்லு என்ன காயம் அது???”
“கடவுள் எனக்கு நடந்த அசிங்கத்திற்கு கொடுத்த வாழ்க்கை பரிசுப்பா..”, என மீண்டும் அழ ஆரம்பித்திருந்தாள்..
அவள் கூறியதன் அர்த்தம் புரிந்தவனுக்கு அந்த முகம் தெரியாத அரக்கனின் மேல் கொலைவெறி எழுந்தது..
என்ன மாதிரியான ஜென்மம் அதெல்லாம் என வெறுப்பு தோன்றியது..
இதெல்லாம் உங்களுக்கு தேவையா செல்வா..நடந்ததை நீங்களே மறக்க நினைச்சாலும் இந்த காயங்கள் உங்களுக்கு அதை நியாபக படுத்திட்டேதான் இருக்கும்..
உடம்பு மொத்தமும் ரணம் செல்வா இதையெல்லாம் உங்களுக்கு நா எப்படி சொல்றது..
அதை நினைச்சு தான் மனசுகுள்ள தவிச்சு தவிச்சு நொந்துட்டு இருக்கேன்..என மீண்டுமாய் அவன் மீது சாய்ந்தே அழுது தீர்த்தாள்..
சில நொடிகளில் நினைவிற்கு வந்தவன் அவளை கட்டாயமாய் பிரித்தெடுத்து ஆறுதல் கூற அவளோ எதையும் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை..
தன்னை நினைத்தே அறுவறுப்பு அடைந்தவாறு அவள் போக்கில் பேசிக் கொண்டே இருக்க அவள் கன்னம் பற்றியவன் சிறிதும் யோசிக்காது அவள் இதழை சிறைப்பிடித்திருந்தான்..
சில நொடிகளில் விடுவித்தனை ஆற்றாமையோடு அவள் பார்க்க,
தயவுசெஞ்சு அப்படி பாக்காத டீ..நானும் ஆம்பளதானு காட்றதுக்காக பண்ணல நீ பேசுறதெல்லாம் கேக்க முடில உன்னை நீயே இப்படி குறைச்சு பேசுறத கேட்டுட்டு சும்மா இருக்க சொல்றியா..நீ என் பொண்டாட்டி..
அதை தாண்டி எல்லாத்தையும் மறந்துடுனு ஆயிரம் தடவை சொல்லிட்டேன்..
எப்போவோ ஒரு கோர விபத்து நடந்து அதுல செத்து பொழச்சு வந்தேனு நினைச்சுக்கோ..
மத்த எதுவும் உன் மனசுல இருக்க கூடாது..இப்போ சொல்றேன் இனி நீயா வந்து முழுமனசோட என் பொண்டாட்டிங்கிற உரிமையோட என் பக்கத்துல வராத வர விளையாட்டா கூட நா உன்னை தொடமாட்டேன்..
இது உன் மேல ப்ராமிஸ் நிரு..
எனக்கு என்கூட சந்தோஷமா வாழ விரும்புற நிர்பயா தான் வேணும்..
எங்க சுத்தினாலும் கடைசில அதே விஷயத்துல வந்து நிக்காத..
இப்பவும் எனக்கு உன் மேல இருக்குற காதல் நூலளவும் குறையல ஆனா இது உனக்காக நா குடுக்குற டைம்..
உடம்போட காயங்கள் அப்படியே இருக்கலாம் ஆனா உன் மனக் காயத்துக்கு கண்டிப்பா நா மருந்தா இருப்பேன்..
அதை நீ புரிஞ்சுக்குற நாள் சீக்கிரமே வரும் நிரு..நீ ரெடி ஆய்ட்டு வா நா வெளில வெயிட் பண்றேன் என நிற்காமல் சென்றுவிட்டான்..
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!