அந்த க்ரைம் ப்ராஞ்ச் அலுவலகமே பரப்பரப்பாய் இருந்தது..அங்கு பரபரப்பு புதிதில்லை எனினும் இன்றைய பரபரப்பிற்கு காரணம் தமிழ்ச்செல்வன்…

தமிழ்ச்செல்வன் IPS..அசிஸ்ட்டண்ட் கமிஷ்னர் ஆப் போலீஸ் க்ரைம் ப்ராஞ்ச்..

ஐந்துக்கும் மேற்பட்ட என்கௌண்டர்கள்..நான்கு முறை டிரன்ஸ்வர்..லஞ்சம் வாங்காத நேர்மையானவன்..

தப்பிற்கு ஒருபோதும் துணைபோகாதவன்..இப்பொழுதும் கண்ட்ரோல் ரூம் பிரிவிலிருந்து மாற்றப்பட்டு ஆறுமாதத்திற்குப் பின் மறுபடியும் க்ரைம் டிபார்ட்மெண்ட்டிற்கு வருகிறான்..

அய்யாசாமி அந்த ரெக்கார்ட்லா ரெடி தான??சார் வந்தப்பறம் கையை பிசைஞ்சுட்டு நிக்க கூடாது எல்லாம் சரியா இருக்குல??-ஹரிஷ்.

“எல்லாம் ரெடி சார் நா போய் இன்னொரு தடாவை செக் பண்ணிட்றேன்..”

என உள்ளே சென்றவர் அங்கிருந்த கான்ஸ்டபளிடம்,என்யா இன்னைக்கு என்ன நம்ம ஐயா இவ்ளோ பரபரப்பா இருக்காரு??வர்றவரு கோபகாரரோ??

சாமி நீ இப்போ தான வந்துருக்க எல்லாம் போக போகப் புரியும்..நம்ம புது ACPயும் ஹரிஷ் சாரும் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் தான் ஆனா ட்யூட்டில அத காட்டிக்க மாட்டாங்க..ரெண்டு பேருமே திருநெல்வேலிகாரங்க..

ஒண்ணா படிப்ப முடிச்சு க்ரைம் ப்ரண்ஞ் தான் வேணும்னு வந்தவங்க..

ஹரிஷ் சாருக்கு கல்யாணம் ஆன கொஞ்சநாள்ல ஒரு எண்கௌண்டர் போய்ருந்தப்போ கன் ஷூட் ஆகி ரொம்ப சீரியஸான நிலைமைல ஹாஸ்பிட்டல அட்மிட் பண்ணாங்க அவங்க வைப் ரொம்ப பயந்துட்டாங்க நம்ம ACP தான் கூடவேயிருந்து அவரை பாத்துகிட்டாரு..

அதிலிருந்து ஒரு ப்ரெண்டா அவரை எண்கௌண்டர் ப்ளான்ல இன்வால்வ் பண்றதில்ல..ரெண்டு பேரும் சேர்ந்து போனா எதிர்ல இருக்குறவனுக்கு எமன் கண்முன்னாடி இருக்கான்னு அர்த்தம்..

அதனாலேயே அடிக்கடி டிரான்ஸ்வர் ஆக்கிட்டேயிருப்பாங்க..அவரு மறுபடியும் நம்ம ப்ராண்ஞ்ச்கு வர்றதுக்குள்ள ஹரிஷ் சார் யாரைத் தூக்கனும்னு டீடெய்ல் எடுத்துருவாரு..

வேணா பாரு இப்போ நீ எடுக்குற பைல்ல இருக்குறவனுக்கு இன்னும் ஒரு மாசம்தான் இந்நேரம் கெடு வச்சுருப்பாரு..

எனும்போதே வெளியே கார்சத்தம் கேட்க அவசரமாய் அனைவரும் வெளியே சென்றனர்..

கார் கதவைத் திறந்து இறங்கியவனுக்கு அனைவரும் சல்யூட் அடிக்க மரியாதையை ஏற்று பதிலுக்கு தலையசைத்துச் சென்றான்..

ஆறடி உயரம் போலீஸிற்கே உரிய கட்டுமஸ்தான தேகம் சீறாய் திருத்தப்பட்ட முடி முறுக்கு மீசை என பார்ப்பவர்கள் நிச்சயம் நின்று மரியாதை அளிக்கவேண்டிய ஒரு உருவம்..

டேபிளின் முனையில் ஒற்றைக் காலைத் தூக்கி அமர்ந்தவன் அனைவரிடமும் பொதுவான விசாரிப்புகளை நடத்த.என்ன அய்யா கண்ணு எப்படி இருக்கீங்க??

ஸ்ஸ் சார் நல்லாயிருக்கேன் சார்..

20 வருஷ சர்வீஸ்ல 10 தடவைக்கும் மேல டிரான்ஸ்வர்..ம்ம் எப்படியிருக்கு இந்த புது இடம்.??

நல்லாயிருக்கு சார்..

நா வந்துட்டேன்ல இனி அமோகமா இருக்கும் பாருங்க என்றவாறு எழுந்தவன் ஹரிஷின் தோள்பற்றி இழுத்து தனதறைக்குச் சென்றான்..

என்ன சாமி வாயடைச்சு நிக்குற??

குமாரு நீ சொன்னதவிட 100 மடங்கு துடிப்போட இருக்காரேயா..என்னபத்தியே இவ்ளோ பேசுறாருனா கேஸ்ல மாட்றவன் தொலைஞ்சான்.அங்கு உள்ளே,

எனன்னடா குடும்பஸ்தா எப்படியிருக்க??லைட்டா பேமிலி பாக்லா ஃபார்ம் ஆகுறமாதிரி இருக்கு என வயிற்றில் பஞ்ச் செய்தான்..

ஏன்டா பேசமாட்ட அண்ணணும் தங்கச்சியுமா சேர்ந்து என்ன எங்கேயும் போகவிடாம உக்கார வச்சுட்டு இப்போ கிண்டல் பண்றியா??

விடு மச்சான் என் தங்கச்சி செய்ற பிரியாணிக்காகவே நீ என்ன வேணா பண்ணலாம்..ஆப்ட்ரால் தொப்பைதான வந்துட்டு போகுது விடு..

ம்ம் பேசுவடா பேசுவ இருடி இந்த வருஷத்துக்குள்ள அம்மாகிட்ட சொல்லி உனக்கு கல்யாணத்தை பண்ணல நா என் பேரை மாத்திக்குறேன்..

ம்ம் அடப் போடா பொண்ணுங்கள பாத்தா எனக்கும் ஆகல என்னப்பாத்தா பொண்ணுங்களுக்கும் ஆகமாட்டேங்குது..

துப்பாக்கிய எடுத்தோமா தப்பு பண்றவன பொட்டுநு போட்டோமாநு இருக்கனும் அதைவிட்டுட்டு இந்த கையில பூங்கொத்து தூக்கிட்டு துப்பட்டா பின்னாடி ஓட்றதெல்லாம் நமக்கு வேணாம்..

ஏன்டா காமெடியகூட எதுக்கு இப்போ இவ்ளோ விரைப்பா பேசிட்டு இருக்க??வர வர நீ ஒரு சிட்டி ரோபோவா மாறிட்டு இருக்க..

சரி ஷாலினி எப்படியிருக்கா??இப்போ எத்தனாவது மந்த்??

ம்ம் நல்லாயிருக்காடா..7வது மாசம்   அடுத்தவாரம் சீமந்தம் இருக்கு ஒழுங்கா வந்து சேரு அவ உன்னைதான் ரொம்ப எதிர்பார்ப்பா..

இப்போலா அவ பேமிலிய ரொம்ப மிஸ் பண்றா..அதனால சீமந்தத்துக்கு அப்பறம் அப்பா அம்மாவ இங்கேயே தங்க சொல்லிருக்கேன்..

ம்ம் பாவம் சின்ன பொண்ணு தான அதுவும் இந்தமாதிரி நேரத்துல எவ்ளோபேர் இருந்தாலும் அவங்க அம்மா மாதிரி வருமா..

அவங்க பேரண்ட்ஸ் ரெண்டு பேருமே இறந்து அவ துடிச்சதைப் பாத்தத நினைச்சா இப்பவும் கஷ்டமாயிருக்கு..

நல்லவேளையா நம்ம கண்லபட்டா..நிறையவே இழப்பை சந்திச்சுட்டா டா அதனாலதான் உன்மேல உயிரா இருக்கா..

வெளில நா உன்ன கிண்டல் பண்ணாலும் அவளுக்காக தான் உன்னை எதிலையும் இன்வால்வ் பண்ண மாட்றேன்..கொஞ்சம் வருஷம் போட்டும் அவளே புரிஞ்சுப்பா..

உண்மைதான் தமிழ்..அவ அம்மா அப்பாவோட இழப்பு அவளை மொத்தமாவே உடைச்சுருச்சு..கொஞ்சம் கொஞ்சாமா அவ தேறி வந்துருக்கானா நீயும் ஒரு முக்கிய காரணம்..

அவளுக்காக மட்டும்தான்டா நானும் எல்லாத்தையும் விட்டுக் கொடுத்து போய்ட்டு இருக்கேன்..

சரி அதெல்லாம் ஈவ்னிங் பேசுவோம் நா போய் நீ கேட்ட பைலை எடுத்துட்டு வரேன் என வெளியே செல்ல தன் இருக்கையில் பின் சாய்ந்து சோம்பல் முறித்து தன் சிஸ்டத்தை உயிர்பித்தான் தமிழ்..

தமிழ்ச்செல்வனின் குடும்பம் நடுத்தரவார்க்கம்…தந்தை கேசவன் வங்கி உழியராய் இருந்து ஓய்வு பெற்றவர்..தாய் சரோஜா குடும்பத்தலைவி..

அண்ணன் வெற்றிமாறன் சிறிய அளவில் பிஸினஸ் செய்து வருகிறான்..

அவன் மனைவி ராஜி பள்ளி ஆசிரியை இவர்களுக்கு காவியா என்ற 5 வயது செல்லமகள்..

இவ்வளவுதான் தமிழின் உலகம் .வேலைப்பளுவின் காரணமாய் அவ்வளவாய் ஊருக்குச் செல்ல மாட்டான் அவன் தந்தை நண்பர் ஒருவரால் சென்னையில் எப்போதோ வாங்கிய சிறிய வீட்டை ஓரளவு ரெணோவேட் செய்து அங்கே தங்கியிருந்தான்..

குழந்தையின் விடுமுறை காலத்தில் அனைவரும் வந்து ஒரு மாதம் தங்கிவிட்டு செல்வர்..

தமிழுக்கு வயது 30ஐ தொட்டிருக்க இரண்டு வருடங்களாகவே திருமணப் பேச்சு கிடைக்கும் போதெல்லாம் அடிபட்டுக் கொண்டேயிருந்தது..

ஆனால் ஏனோ அவனுக்கு திருமணம் என்ற ஒன்றைப் பற்றி சிந்தனையே இல்லாமல் இருந்தது..விருப்பமில்லாமல் பெரியவர்களுக்காக திருமணம் செய்வதில் துளியும் நாட்டமில்லை..

ஹரிஷ் அந்த பைலோடு உள்ளே வந்தான்..இந்தா தமிழ் இதுதான் நம்மோட இப்போதைய டார்கெட்..பேரு குணா..வடசென்னைல பெரிய கை..கஞ்சா,கள்ளகடத்தல்னு 30க்கு மேல கேஸ் இருக்கு ஆனா ஒரு சாட்சி கூட இல்ல..

இதெல்லாம் பத்தாதுனு அவன் ஏரியா பசங்கள வச்சு லவ் பண்றமாதிரி நடிச்சு பொண்ணுங்கள வீட்டவிட்டு வர வச்சு கடத்த முயற்சி பண்ணிருக்கான்..

கடைசி நேரத்துல ஏதோ காரணத்துக்காக ப்ளான் ஸ்டாப் பண்ணிட்டான்..ஆனா ஒரு பொண்ண மட்டும்..

17 வயசு பொண்ணுடா இவனுங்களெல்லாம் இன்னும் உயிரோட இருக்குறத பாத்தாதான் கடவுள் நம்பிக்கையே குறையுது..

ம்ம் ஏன் கவலைப்படுற அதான் என்ன அனுப்பிடாரே நம்பி கடவுளை கும்பிடு..நீ கடைசியா சொன்ன ஒரு விஷயத்துக்காகவே இனி அவன் இந்த பூமில இருக்கக் கூடாது..என்ற குரலில் சிங்கத்தின் கர்ஜனனை இருந்தது..

தமிழ் எந்தளவு நேர்மையானவனோ அதேயளவு கோபகாரனும் கூட தனக்கு சரியென தோன்றுவதை சட்டென செய்து முடிப்பவன்..

அதை யாரும் குறை கூறி தப்பாக பேசினால் அவர் யாராய் இருந்தாலும் அதற்கு மேல் அதை மாற்றிக் கொள்ள மாட்டான்….

ஏனெனில் தன் மேல் அத்தனை நம்பிக்கை வைத்திருந்தான்.. எக்காலத்திலும் நல்லவர்களுக்கு தன்னால் ஒரு தீமையும் நடக்காது என பலமாக நம்பினான்..

அதுதான் அவனின் பணியிட மாற்றத்திற்கான முக்கிய காரணமும்..

அடுத்து வந்த ஞாயிற்றுக்கிழமை ஷாலினிக்கு சீமந்தத்திற்காக வேண்டியவற்றை வாங்க ஹரிஷ்ஷோடு சென்றிருந்தான்..

விடுமுறை தினம் ஆதலால் அந்த ஷாப்பிங் மாலில் கூட்டத்திற்கு குறைவில்லாமல் இருந்தது..

ஹரிஷ் ஆர்டர் கொடுத்திருந்த வளையலுக்காக காத்திருக்க தமிழ் அவனிடம் பத்து நிமித்தில் வருவதாய் கூறிச் சென்றான்..

நான்காவது தளத்திலிருந்த அந்த புடவை கடைக்குச் செல்வதற்காக லிப்ட்ற்கு காத்திருக்க லிப்ட் கதவு திறந்து உள்ளே சென்றான்..

25 வயது மதிக்கதக்க ஒரு பெண் உள்ளேயிருக்க கண்டும் காணாமல் உள்ளே வந்தவனுக்கு ஏனோ அந்த பெண்ணின் நடவடிக்கையில் வித்யாசம் தோன்ற அவள்புறம் நோக்கினான்..

அவள் இவனை பார்ப்பதை தவிர்த்து மறுபுறம் திரும்பிவாறே பதட்டத்தோடு நின்றாள்..எதுவும் ப்ரச்சனையாய் இருக்குமோ என தோன்ற,

ஹலோ எக்ஸ்க்யூஸ் மீ ஆர் யூ ஓகே?என கேட்க அவளோ இன்னுமுமாய் தன்னை சுவரோடு அப்பிக் கொண்டாள்..

அதற்குள் அவன் இறங்க வேண்டிய தளம் வர தோளைக் குலுக்கியவாறு அவன் வெளியே வர ஓடாதகுறையாய் அவனை கடந்து அவளும் விறுவிறுவென சென்றுவிட்டாள்..

அதன்பின் அதைப்பற்றி மறந்தும் போனான்..ஷாலினிக்காக அழகிய பட்டுப்புடவை ஒன்றை பரிசாய் வாங்கி முடித்து ஹரிஷோடு சேர்ந்து கிளம்பினான்..

அன்று காலையிலேயே ஹரிஷ் வீட்டிற்கு வந்திருந்தவன் ஷாலினியோடு சேர்ந்து அவனை மிரட்டிக் கொண்டிருந்தான்..

என்னடா IPS என் தங்கைய ஒழுங்கா பாத்துக்குறமாதிரி தெரிலயே??இளைச்சு போனமாதிரி இருக்காளே என்ன விஷயம்??பயம் விட்டுப் போச்சா??

ம்ம் ஆமாடா எல்லாம் என் நேரம் உங்க ரெண்டு பேரையும் தனியாவே சமாளிக்குறது கஷ்டம் இதுல சேர்த்து வேறயா??

ம்ம் இன்னும் மூணே மாசம் சிங்க குட்டி மாதிரி என் குழந்தை வந்து எனக்காக சப்போர்ட் பண்ணும் அப்போ இருக்குஉங்க ரெண்டு பேருக்கும்..

ம்ம் வரட்டும் அப்பறம் அவனோ அவளோதான் எங்க கூட்டணியோட ஹெட்டா இருப்பா பாரு..

அண்ணா விடுங்கண்ணா அவரு என்னவோ சொல்லிட்டு போறாரு நாதான் இப்போவே ட்ரெய்ணிங் குடுக்குறேனே டோண்ட் வொரி..சரி நீங்க எப்போ கல்யாணசாப்பாடு போடபோறீங்க??

அட எங்கம்மா என் நண்பனுக்கு அமைஞ்சாமாதிரி எனக்கும் ஒரு நல்ல பொண்ணு அமையும்நு பாக்குறேன் ம்ம் எங்க??

டேய் டேய் போதும் இவ்ளோ ஐஸ் வைக்கலனாலும் உனக்கு பிரியாணி போடுவா அதுக்காக ஒரேடியா ஐஸ்மலையை தூக்கி அவ தலைல வைக்காத என் குட்டிபாப்பாக்கு ஜல்ப்பு பிடிச்சுர போகுது..

இப்படியாய் அன்றைய சீமந்தம் நல்லமுறையில் முடிய தமிழ் அங்கிருந்து கிளம்பும் போது மணி இரவு பத்தை தாண்டியிருந்தது..

அங்கிருந்து மெயின் ரோட்டிற்கு வந்திருந்தவனின் கண்களில் மறுபடியும் அவள் தென்பட்டாள்..

சாலையோர பஸ் நிறுத்தத்தில் அமர்ந்து இருபுறமும் திரும்பி பஸ்ஸை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்..ஆள்நடமாட்டம் வேறு கம்மியாய் இருக்க ஒரு போலீஸ் அதிகாரியாய் அவளருகில் சென்று விசாரித்தான்..

ஹலோ பஸ்க்காகவா வெயிட் பண்றீங்க??வீடு எங்க??யாரும் வருவாங்களா??

இத்தனை கேள்விக்கும் வாயைத் திறக்காமல் விறுவிறுவென எழுந்து நடக்க ஆரம்பித்தவளை பார்த்தவனுக்கு அடக்க முடியாத கோபம் எழுந்தது இருப்பினும் புதியவனிடம் அவள் விவரங்களை கூற விரும்பாமல் செல்கிறாள் என்பது உறைக்க தன்னை தானே கட்டுப்படுத்திக் கொண்டு பைக்கில் மெதுவாய் அவளருகிலேயே சென்றான்..

அவளோ கண்களில் நீர்கோர்க்க ப்ளீஸ் ஏன் என் பின்னாடி வரீங்க..தயவு செஞ்சு போய்டுங்க என கைக் கூப்பிநின்றாள்..

சரியாய் போலீஸ் ஜீப் ஒன்று அந்த நேரத்திற்கு வர அவர்களை கண்டு நின்றது யாரும்மா நீ என்ன பண்ற என்றவாறே அருகில் வந்த இன்ஸ்பெக்டர் அவனைப் பார்த்ததும் சல்யூட் அடித்து என்னாச்சு சார் என கேட்க அவள் முகம் சற்றாய் தெளிவுற்றது..

தெரில நாராயணன் பஸ்க்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க தனியா சேவ் இல்லேயேநு கேட்டுட்டு இருந்தேன்..

நீங்க அந்த ஆட்டோவ மடக்குங்கஎன கைகாட்ட அதன் டிரைவரிடம் இவங்க எங்க இறங்கனும்னு கேட்டு விடுருங்க விட்டுட்டு இதோ இது என் நம்பர் கால் ண்ணி சொல்லனும் புரியுதா??

உன் நம்பர் சொல்லு என அதையும் வாங்கிக் கொண்டு அவளைப் பார்க்க விறுவிறுவென சென்று ஆட்டோவில் ஏறிக் கொண்டாள்..

அதன்பின் அவன் வீட்டிற்கு வந்து உடைமாற்றி அமர டிரைவர் போன் செய்து இறக்கிவிட்ட இடத்தைக் கூற அது ஒரு பெண்கள் விடுதி என தெரிந்து கொண்டான்..

அடுத்து வந்த இரண்டு வாரங்களும் தமிழுக்கு அவன் கேஸ் வேலையோடு சரியாய் இருக்க ஊன் உணவு மறந்து அலைந்து கொண்டிருந்தான்..

அனைத்து ஏற்பாட்டையும் முடித்திருந்தவன் குணாவை குறி வைக்கும் நாளுக்காக காத்திருந்தான்..

அப்படியாய் ஒரு தினத்தில் அவனை பார்ப்பதற்காக யாரோ வந்திருப்பதாய் கான்ஸ்டபிள் கூற உள்ளே அனுப்புமாறு பணித்தான்..

ஹரிஷும் அவனோடு உள்ளேயிருக்க கதவு திறக்கும் ஓசையில் இருவருமே யாரென பார்க்க வந்திருந்தவளை பார்த்து தமிழின் பார்வை விரிந்தது..

அவன் நிச்சயமாய் அவளை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பதை அந்த பார்வை உணர்த்தியது..

மெதுவாய் உள்ளே வந்தவள் ஹரிஷை பார்த்து தயங்கி நிற்க,ஹரி நீ வெளில வெயிட் பண்ணு நா கூப்ட்றேன் என்றவனை ஒரு மார்க்கமாய் பார்த்து நகர்ந்தான் அவன் நண்பன்..

“வாங்க உக்காருங்க என்ன விஷயம்?”என இருக்கையில் பின்சாய்ந்து அமர்ந்தான்.

“சார் அது தேங்க்ஸ் சொல்லிட்டு போலாம்னு வந்தேன்..”

ஒரு தேங்க்ஸ்க்காக இவ்ளோ தூரம் வந்தீங்களா?ஆச்சரியமான விஷயம் தான்.. நேர்ல கேட்டாலே வாயை திறக்க மாட்டீங்க.. எனிவே தேங்க்ஸ் சொல்லியாச்சுல கிளம்புங்க..

“சார்.. ஒரு சின்ன உதவி வேணும்..”

“என்ன சொல்லுங்க என்னால முடிஞ்சா கண்டிப்பா செய்றேன்..”

வந்து எனக்கு ஒரு வேலை வாங்கித் தர முடியுமா??எனக்கு இங்க யாரையும் தெரியாது..யாரையும் நம்பி உதவி கேட்கவும் முடில.. உங்களால முடியுமோனு தோணிச்சு அதான்..

ம்ம் சரி என்ன படிச்சுருக்கீங்க??உங்க டீடெய்ல்ஸ் எதாவது சொல்லுங்க?ஒண்ணுமே தெரியாம நா எந்த மாதிரியான வேலையை தேடுறது??

என அவன் முடிப்பதற்குள் தன் கையிலிருந்த பைலை அவனிடம் நீட்டினாள்.. அதை வாங்கிப் பிரித்தவனின் கண்கள் அவள் பெயரின் மேல் கவனத்தை செலுத்தியது..நிர்பயா..

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

5 comments

Kavi Natarajan August 21, 2026 - 8:37 am

Nice start
New story ah ma

😍😍

ஸ்ரீ August 21, 2026 - 9:45 am

Rerun ka..

Kiruthika M August 21, 2026 - 12:25 pm

Intha story enku rmba pudikum ka neraiya vaati padichirkan 😍

srichitra August 21, 2026 - 1:23 pm

Nice start

suganyavel August 22, 2026 - 7:47 pm

Nice👍

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode