296
அவள் வெளியே சென்ற அடுத்த நொடி ஹரிஷ் ஆவலாய் உள்ளே நுழைந்தான்..
“மச்சான் சொல்லவேயில்ல.. யார்ரா அது??”
“ஏன்டா நீ வேற?? ஒரு தடவை ரோட்ல பாத்து ஹெல்ப் பண்ணேன் போலீஸ்னு தெரிஞ்சவுடனே ஹெல்ப் கேட்டு வந்துருக்கா வேலை வேணுமாம்.. வேற ஒண்ணுமில்ல நீயா கதைகட்ட ஆரம்பிச்சுடாத..போய் பொழப்ப பாரு..”
என்றவன் அவள் கொடுத்த பைலை தன் டேபிளின் ஓரத்தில் வைத்துவிட்டு வேலையை பார்க்க ஆரம்பித்தான்..அடுத்த ஒரு வாரமும் அதைப்பற்றி மறந்தே போனான்..
தற்செயலாய் ஒரு நாள் வேறு பைலை இழுத்தவனின் கண்களில் அவள் கொடுத்தது பட அதை எடுத்துப் பிரித்து பார்த்தான்..
நிர்பயா வயது 24 சொந்த ஊர் மும்பை..படிப்பு பி.எஸ்.சி கணிணிஅறிவியல்..சிறிது நிமிடம் அதையே பார்த்திருந்தவன் ஏதோ தோன்ற தன் மொபைலை எடுத்து யார் நம்பரையோ தேடினான்..
நம்பர் கிடைத்துவிட அதற்கு அழைத்து மறுமுனையில் பேசியவரிடம் விவரத்தை கூற அவர் அவளை நேர்காணலுக்கு வரசொல்லுமாறு கூறினார்..
அவள் பயோடேட்டாவிலிருந்த நம்பருக்கு அழைத்து விஷயத்தை கூற எண்ணி காத்திருக்க முழு அழைப்பு முடிந்து நின்றுவிட்டது..
இன்னும் ஒருமுறை முயற்சி செய்ய எண்ணி மீண்டும் அழைக்க ஹலோ என மெதுவாய் அவள் குரல் கேட்டது..
“ஹலோ நா தமிழ்ச்செல்வன் பேசுறேன்..ஏசிபி..”
“ஹலோ சார் சொல்லுங்க புது நம்பரா இருந்ததால எடுக்கல சாரி சொல்லுங்க” என பயந்து பயந்து பேசினாள்..
“பரவால்ல உங்க ஜாப் விஷயமா பேசதான் கால் பண்ணேன்..எனக்கு தெரிஞ்ச ஒரு கம்பனில சொல்லிருக்கேன் நாளைக்கு இன்டர்வியூக்கு வர சொல்லிருக்காங்க..பட் ரெக்கமண்டேஷன்லா கிடையாது..
உங்க பெர்பாமன்ஸ் பொறுத்து ஜாப் கிடைக்கும்.. இந்த நம்பருக்கு டீடெய்ல்ஸ் டெக்ஸ்ட் பண்றேன்..நாளைக்கு போய் பாருங்க.. வச்சுட்றேன்” என பதிலுக்கு காத்திராமல் வைத்துவிட்டான்..
ஏனோ அவள் குரல் தனக்குள் பாதிப்பை ஏற்படுத்துவதாய் தோன்றியது அவனுக்கு..எப்போதுமே ஒரு சோகமும் வருத்தமும் அந்த குரலில் இருப்பதை உணர்ந்தான்..
அது அவனுள் தாக்கத்தை ஏற்படுத்தவதாகவும் இருந்தது..
கேட்ட உதவியை செய்தாயிற்று இனி அவளோடு பேச வேண்டிய அவசியமிறாது என தலையை சிலுப்பியவாறு தன் வேலையை கவனிக்க .ஆரம்பித்தான்..
இருப்பினும் ஏனோ மறுநாள் அந்த நேரத்தில் அவள் அங்கு சென்றிருப்பாளோ வேலை கிடைத்திருக்கோமோ கிடைத்திருக்காதோவென ஆயிரம் எண்ணங்கள் அவனுக்குள் சுழன்று கொண்டேயிருந்தன..
அவனை அதிக நேரம் சோதிக்காமல் அவளே அவனை அழைத்திருந்தாள்..
“ஹலோ சார் நா நிர்பயா பேசுறேன்..”
“ஆங் சொல்லுங்க இன்டர்வியூ என்னாச்சு??”
“வேலை கிடைச்சுருச்சு சார் நெக்ஸ்ட் மன்த் ஜாய்ன் பண்ண சொல்லிருக்காங்க ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார்..”
“ஓ..குட்..ஆல் த பெஸ்ட்..எதுவும் ஹெல்ப் வேணும்னா தயங்காம கால் பண்ணுங்க..பை..”
ஹரிஷ் மெதுவாய் உள்ளே வந்து கைகட்டி நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்..
“என்ன மிஸ்டர் தமிழ்செல்வன் எம்ப்ளாய்ண்மெண்ட் எக்ஸ்சேஞ்ச்லா எப்போ ஆரம்பிச்சீங்க??”
“உனக்கு வேற வேலையே இல்லையாடா??”
“ம்ம் என்ன பண்றது மச்சான் உன்னை மாதிரி ரெண்டு மூணு வேலை தெரிஞ்சா பரவால்ல எங்க..ம்ம்”
“என்ன வேணும் உனக்கு?”
“டேய் ரொம்ப நடிக்காத ஒண்ணுமேயில்லாமயா அவளுக்கு வேலை வாங்கி கொடுத்துருக்க..இதையே வேற யாரும் கேட்டுருந்தா பண்ணிருப்பியா?”
ஹரிஷ் என்னால முடிஞ்ச உதவியா இருந்தா கண்டிப்பா பண்ணிருப்பேன்..அவ ஐடி லைன்ல படிச்சுருந்தா எனக்கு தெரிஞ்சவரு இருந்தாரு சொன்னேன் அவ்ளோ தான்..வேற ஒண்ணுமில்ல..
“ஓ.கே ஓ.கே நம்பியாச்சு..”
என்றவாறு அவன் வெளியே சென்றுவிட தமிழ்க்கே சற்று யோசனையாய் தான் இருந்தது ஏனோ அவளுக்காக உருகுகிறோமோ என்று தோன்றியது..
இனி இதை வளரவிடக் கூடாது இத்தோடு மறந்து விடுவது நல்லது என தனக்கு தானே கூறிக் கொண்டான்..
அனைத்துமே அடுத்து அவளை பார்க்கும் வரைதான்..பதினைந்து நாட்களுக்குப் பிறகு ஹரிஷ் ஷாலினியை அழைத்துக் கொண்டு செக் அப்பிற்கு செல்ல,வரும்போது லஞ்ச் வெளியே சாப்பிடலாமென தமிழையும் அழைத்திருந்தான்..
கடைசி நிமிடத்தில் மருத்துவமனையில் லேட்டாகி விட தமிழ் ஹோட்டலுக்கு வந்து காத்திருப்பதாய் கூறினான்..பார்க்கிங்கில் பைக்கை நிறுத்தி விட்டு வந்தவனை நோக்கி அவள் வந்து கொண்டிருந்தாள்..
“ஹலோ சார்..”
“ஹாய் நிர்பயா ரைட்.. எப்படியிருக்கீங்க?”
“நல்லாயிருக்கேன் சார்.. ரொம்ப தேங்க்ஸ் சார் வேலைல ஜாய்ன் பண்ணிட்டேன் 3 டேஸ் ஆகுது..”
“நோ ப்ராப்ளம்.. என்ன இந்த பக்கம்?”
“இங்க பின்னாடி தான் என் ஹாஸ்ட்டல் உள்ளே வர்றப்போ உங்களை பாத்தேன் அதான்..”
“ஓ இங்க இருந்து ஆபீஸ் ரொம்ப டிஸ்டன்ஸ் ஆச்சே எப்படி போறீங்க?”
“பஸ்தான் சார்..அங்க இருக்குற கேள்ஸ் பிஜில தங்கிருக்காங்க நெக்ஸ்ட் வீக் ஷிப்ட் ஆய்டுவேன்..அண்ட் ஐ அம் சாரி…”
“எதுக்கு??”
“இல்ல பர்ஸ்ட் ரெண்டு தடவையும் நீங்க யாருனு தெரியாம.. ஐ அம் சாரி..”
“தட்ஸ் ஓ.கே தெரியாதவங்க கிட்ட அப்படி இருக்குறது நல்லதுதான்..”, எனும்போதே ஹரிஷ் வந்துவிட மனதிற்குள் நொந்து கொண்டான்.
“ஐயோ இவன் பாட்டுக்கு எதையாவது உளறிடுவானே..”
அதற்குள் ஷாலினி அவர்கள் அருகில் வந்து விட,” அண்ணா லேட் ஆய்டுச்சு நீங்க வந்து ரொம்ப நேரம் ஆச்சா?? ஆமா இவங்க யாரு??”
“இல்லடா இப்போ தான் வந்தேன்..இவங்க பேரு நிர்பயா..இங்கதான் பக்கத்துல ஹாஸ்ட்டல இருக்காங்க..தெரிஞ்சவங்க..”அதற்குள் ஹரிஷ் ஷாலினியிடம் கண்ஜாடை காட்ட,
ஷாலினி அவளிடம், ”ஹாய் என் பேரு ஷாலினி இவரு என் ஹஸ்பெண்ட் ஹரிஷ்.. ஃப்ரீயா இருந்தா வாங்களேன் லஞ்ச் ஜாய்ன் பண்ணலாமே..”
“இல்ல பரவால்ல மேம்.. அதெல்லாம் வேண்டாம் நா கிளம்புறேன்..”
“என்ன மேம் மா??பேர் சொல்லியே கூப்டுங்க.. அண்ணாவே பேசுறாங்கனா நீங்க இனி என் ப்ரெண்ட் வாங்க வாங்க”, என கைப்பிடித்து இழுத்துச் செல்ல, தமிழ் ஹரிஷை முறைத்தான்..
”டேய் நா என்னடா பண்ணேன் என்ன ஏன் முறைக்குற??”
“நல்லா பண்றீங்கடா புருஷனும் பொண்டாட்டியும்..போ போ..”
நால்வரும் ஏசி ஹாலில் சென்று அமர நிர்பயாவோ தயக்கத்தோடேயே அமர்ந்திருந்தாள்..
ஷாலினி இயல்பாய் சென்று ஹரிஷின் அருகில் அமர்ந்து கொள்ள தமிழ் வேறு வழியின்றி அவளருகில் அமர்ந்தான்..
“ஏன் நிர்பாயா ஏதோ டென்ஷனாவே இருக்கீங்க.. இந்த போலீஸை பாத்து பயப்படுறீங்களோ??அதெல்லாம் ஆப் டியூட்டில தான் இருக்காங்க பீல் ப்ரீ..”-ஷாலினி.
அதற்கும் அரைகுறையாய் சிரித்து வைத்தாளே தவிர பதில் பேசவில்லை.. வேண்டியதை ஆர்டர் செய்ய அவள் ஒன்றும் கூறாமலிருக்க ஷாலினியே அவளுக்கும் ஆர்டர் செய்தாள்..
“அப்பறம் உங்களை பத்தி சொல்லுங்க நிர்பயா?? சொந்த ஊர் எது??அம்மா அப்பாலா எங்க இருக்காங்க??”
“ஆங்ங் எனக்கு நேடிவ் மும்பை..அம்மா அப்பா இப்போ உயிரோட இல்ல..அதான் நா இங்க வந்துட்டேன்..”
“ஓ அம் சாரி..கவலபடாதீங்க இனி நாங்கயெல்லாம் இருக்கோம் உங்களுக்கு..ஒரு காலத்துல உங்க நிலைமைதான் எனக்கும் இப்போ பாத்தீங்களா??
இதே மாதிரி உங்க லைப்பும் மாறும் தைரியமா இருங்க” என கையை பிடித்து தேற்றினாள்..
“தேங்க் யூ என சிரித்தவள் வந்த உணவை அரைகுறையாய் வாயில் போட்டோக் கொண்டு..நா கிளம்புறேன்..
சாரி ஹாஸ்ட்டல்ல தேடுவாங்க தப்பா எடுத்துக்காதீங்க” என அனைவருக்குமாய் பொதுவாய் கூறிவிட்டு திரும்பிகூட பாராமல் சென்றுவிட்டாள்.. தமிழோ உச்சகட்ட கோபத்தில் இருந்தான்..
“ஷாலும்மா இது உனக்கு தேவையா பாரு எப்படி போறானு..ஏன்டா உனக்கு இந்த தேவையில்லாத வேலை..
அவ எப்பவுமே இப்படிதான்.. அவளுக்காக தோணினா பேசுவா இல்ல நிக்க கூட மாட்டா..”
“அண்ணா ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க..அவங்க நிலைமை என்னவோ நா தான் கொஞ்சம் ஓவரா க்ளோஸா மூவ் பண்ணிட்டேன் சாரி..”
“ஹே ஷாலு அதெல்லாம் ஒண்ணுமில்ல அவ எப்பவுமே இப்படிதான் பண்றா இதுல உன் தப்பு ஒண்ணும் இல்ல விடு.”
என பேச்சை வளர்க்காமல் சாப்பிட ஆரம்பித்தான்.. அவர்கள் இருவரையும் அனுப்பிவிட்டு பைக்கை எடுத்தவன் அவள் கூறிய ஹாஸ்ட்டல் வாசலில் சென்று நின்றான்.
அவனை கண்டதும் வாட்ச்மேன் பதட்டமாய் ஓடிவர நிலைமை உணர்ந்தவன் சமாதானமாய் அவரிடம்,
” இங்க நிர்பயா..”
“ஆமா சார் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் உள்ள போனாங்க.”
“ஆங் அவங்க தான் நா அவங்க ப்ரெண்டு தான் கொஞ்சம் கூப்பிட முடியுமா??”
இதோ சொல்றேன் சார் என அவர் ஓட, எதிரே தெரிந்த சிறிய பூங்காவில் அவளுக்கு தெரியுமாறு சென்று அமர்ந்தான்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் வெளியே வந்தவளை பார்த்தவனுக்கு ஒரு நொடி கோபம் தணிந்தது..
அழுதிருப்பது அவள் முகத்திலேயே தெரிந்தது. கொஞ்சமாய் கோபத்தை அடக்கியவன் அவள் அருகில் வர அந்த கல் பெஞ்சின் மறு ஓரத்தை காட்டி அமருமாறு கூற ஓரமாய் அமர்ந்தாள்..
“என்ன நினைச்சுட்டு இருக்க நீ??ஏதோ எனக்கு தெரிஞ்ச பொண்ணாச்சேநு ஷாலினி உன்ன சாப்ட கூப்டா அதுக்காக நீ இப்படி பாதிலேயே மூஞ்சில அடிச்சா மாதிரி எழுந்து வருவியா??
அப்போ உனக்கு ஹெல்ப் பண்றதுக்கு மட்டும் என்ன தேடி வருவ..
என் மேல நம்பிக்கை இருந்ததால தான என்னை தேடி வந்த அப்போ அந்த நம்பிக்கைக்கு உண்மையா இருக்ககூணும் தான..
எப்போ பாத்தாலும் இன்செக்கியூர்டாவே இருந்தா உனக்கு உதவி பண்ண கூட யாரும் வர மாட்டாங்க..”என அவன்போக்கில் வறுத்தெடுக்க..
“சாரி சா..”
“போதும் உன் சாரி வெங்காயம் எல்லாம்..வாய தொறந்தா சாரி இல்ல தேங்க்ஸ் தான் சொல்லுவியா அதுக்கு மேல பேசினா நாங்க உன்னை அப்படியே கடிச்சு முழுங்கிருவோமா??
லூக் இனியாவது மத்தவங்களை மதிச்சு நடக்க கத்துக்கோ.”.என்றவன் விறுவிறுவென வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட பெண்ணவளோ என்னகூறவென தெரியாமல் வாயடைத்து நின்றாள்..
அலுவலகத்திற்கு வந்தவனுக்கோ சில நிமிடங்கள் ஒரு வேலையும் ஓடவில்லை..கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டோமோ..
ஏற்கனவே அழுத மாதிரி இருந்ததே..நா வேற ச்சச்ச இந்த கோபம் வந்தா கண்ணு மண்ணு தெரியாம கத்திட்றேன்..
ஹரிஷ் சொல்றது கரெக்ட் தான் கோபைத்தை கொஞ்சமாவது குறைச்சுக்கனும்.. எனும்போதே அலுவல் நிமித்தமான அழைப்பு வர அப்போதைக்கு அதை விட்டுச் சென்றான்.
அடுத்து வந்த நான்கு நாட்களுக்கும் தமிழுக்கு வேறு எதைப்பற்றியும் சிந்திக்கும் நிலையிருக்கவில்லை..
அன்று அந்த குணாவை குறி வைத்து அவனை சுற்றிப் பிடித்திருந்தினர்..ஹரிஷ் ஆயிரம் முறை எச்சரித்திருந்தான்..
அவனை கைது பண்ணுவதுதான் முக்கியம் எக்காரணம் கொண்டும் அவனை கொன்றுவிட கூடாது ஏற்கனவே தமிழுக்கு ஹ்யூமன் ரைட்ஸ் கவுன்சிலில் இருந்து ஆயிரம் ப்ரஷர் இதில் இவனையும் கொன்றுவிட்டால் நிச்சயம் பணிமாற்றம் உறுதி..
தற்போது அந்த இடத்தில் குணா ஒருவனோடு நின்று பேசிக் கொண்டிருக்க நேரெதிரில் 100 அடி தூரத்தில் ஒரு கட்டிடத்தினுள் தமிழ் மேலும் இருவரோடு நின்றிருந்தான்..
ஹரிஷ் அதன் மறுபுறமும் மேலும் இரண்டு பேர் அவனின் அருகிலேயே அவனுக்கு தெரியாத வண்ணம் நின்றிருந்தனர்..
ஹரிஷ் அவனை பிடித்து விட சரியான நேரம் என சைகை காட்ட சட்டென தன் துப்பாக்கியை எடுத்து அழுத்த தோட்டா அந்த குணாவின் நெஞ்சில் துளைத்து வெளியேறியது..
ஹரிஷ் அதிர்ச்சியாய் தமிழை பார்க்க கண்ணடித்து தன் கூலர்ஸை மாட்டியவாறு உள்ளே மறைந்தான்..
அத்தனை ஆர்பாட்டமும் முடிந்து ஹரிஷ் யார் கண்ணிலும் படாமல் அந்த பில்டிங்கிற்குள் வர தமிழ் தன் மொபைலில் கேம் விளையாடிக் கொண்டிருந்தான்..
“டேய் என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல நா தான் அவ்ளோ தூரம் சொன்னேன்ல.. ஏன்டா ஏன்டா நீ இப்படியிருக்க??”
“ஹரி இது மட்டும் தான் கரெக்ட்னு எனக்கு தோணுது..இதுக்கு மேல எந்த பொண்ணுக்கும் இவனால பிரச்சனையில்லாம இருக்கும் தான..
ப்ரீயா விடு மச்சி வா போலாம் செம்மயா பசிக்குது” என்று செல்பவனை திருந்தாது இதெல்லாம் எனும் பார்வை பார்த்துச் சென்றான் ஹரிஷ்..
அன்றைய அசதியில் நல்ல உறக்கத்திலிருந்தவனை போனின் அழைப்பு எழுப்பியது.
கண்ணை திறக்காமலே போனை தடவி எடுத்து காதில் வைத்தவன் எதிர்முனையின் குரல் கேட்டு தூக்கம் தெளிந்தான்..
“ம்ம் சொல்லு..”
“……”
“எதுக்கு??”
“……”
“சரி வரேன்..”
எழுந்து அமர்ந்தவனுக்குள் ஏதோ சிந்தனை ஓட அதை தள்ளிவிட்டு கிளம்ப தயாரானான்.
சொன்ன நேரத்திற்கு அந்த காபி ஷாப்பிற்கு வந்தவனை முகத்தில் மலர்ந்த மென்னகையோடு வரவேற்றாள் நிர்பயா..
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
2 comments
💞💞💞💞💞
Super💕