121
அடுத்த ஒரு வாரமும் அவன் அவளை தொந்தரவு செய்யவில்லை..அவளுக்கு தனிமையில் யோசிக்க நேரம் கொடுத்தான்..
அதே நேரம் அவளை ரகசியமாய் நோட்டமிட்டு கொண்டு தான் இருந்தான்..
வழக்கம்போல் அவள் ஆபீஸ் செல்வதும் வருவதுமாய் இருப்பதை தெரிந்து மனசு லேசானது..
வேறு எந்த முடிவும் எடுக்க மாட்டாள் என்ற உறுதியே அப்போதைக்கு அவனுக்கு போதுமானதாய் இருந்தது..
நிர்பயாவோ இதைப்பற்றி யாரிடம் பேசவென்று தெரியாமல் தனக்குள்ளேயே குழம்பித் தவித்தாள். அதற்கு விடையும் அவளைத் தேடியே வந்தது..
அன்று விடுமுறையாய் இருக்க வழக்கம்போல் தன் மனக்கவலையை இறக்கி வைக்க அந்த இறைவனைத் தேடி கோவிலுக்குச் சென்றாள்..
தரிசனத்தை முடித்து பிரகாரத்தில் அவள் அமர, நிபயா..நிபயா என குழந்தையின் குரல் கேட்டு திரும்ப அங்கு தமிழின் அண்ணன் மகள் காவியா அவள் தாயோடும் பாட்டியோடும் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தாள்..
சிநேகமாய் அவர்களைப் பார்த்து சிரித்தவள் குழந்தையை கையில் தூக்கி முத்தமிட ராஜி அவளிடம்,
”சரியான வாலு நாங்ககூட உன்னை கவனிக்கல இவதான் பாத்து கூட்டிட்டு வந்தா “,என்றவாறு அங்கே அமர்ந்நதனர்..
“எப்படியிருக்கீங்க ஆன்ட்டி?? நீங்க எப்படியிருக்கீங்க அக்கா??”
“எங்களுக்கென்னம்மா நல்லாயிருக்கோம்..நீ எப்படியிருக்க அதுக்கப்பறம் வீட்டுக்கு வரவேயில்ல.”.
“அன்னைக்கு வந்தப்போ நீங்க இல்லயே..”,என்றவள் அப்படியே வாயை மூடிக் கொள்ள ராஜி மாமியாரை அர்த்தமுள்ள பார்வை பார்த்து சிரித்தாள்..
“போன வாரத்துல சொல்றியா நாங்க எல்லாரும் திருப்பதி போய்ருந்தோம்மா..இரண்டு நாள்ல வந்துட்டோம்.
அங்கிளும் என் பெரிய பையனும் ஊருக்கு கிளம்பிட்டாங்க..நாங்க தான் பாப்பாக்கு லீவ்னு கொஞ்சநாள் இருக்கலாம்னு இருக்கோம் அடுத்தவாரம் கிளம்பிடுவோம்..”
“ஓ..அப்படியா ஆன்ட்டி”, என்றவளின் மனதில் வேகமாய் ஒரு யோசனை தோன்ற அதை செயல்படுத்த முடிவு செய்தாள்..
செல்வாவின் வாழ்க்கைக்கு இதுதான் நல்லது என எண்ணியவள் அவரிடம்,
”ஆன்ட்டி உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்..”
“என்னம்மா சொல்லு..”
“அது வந்து..உங்க பையன் கல்யாணத்தை பத்தி..தப்பா எடுத்துகாதீங்க..”
“அட கல்யாண பொண்ணே அதபத்தி பேசும் போது தப்பா நினைக்க என்ன இருக்கு?? என்ன அத்தை சரி தான??”, என ராஜி சிரிக்க..
“அக்கா..”
“ஏன்ம்மா பயப்படுற தமிழ் எங்ககிட்ட ஏற்கனவே சொன்னான் நீதான் இன்னும் சம்மதம் சொல்லலனு சொன்னான்..போலீஸ்காரனாச்சேனு பயப்படுறியா??”
“அய்யோ ஆன்ட்டி அதெல்லாம் இல்ல..அவரை மாதிரி ஒரு போலீஸை பாக்குறது ரொம்ப கஷ்டம்..அதில்ல ப்ரச்சனை..ஆனா நா உங்க பையனுக்கு ஏத்தவ இல்ல அதை சொல்லதான்..”
“ஏன்ம்மா அப்படி சொல்ற உனக்கு என்ன கொறச்சல் அழகில்லயா அறிவில்லயா..ஏன் இப்படி சொல்ற..”
“அதுமட்டும் இருந்தா போதுமா ஆன்ட்டி…ஒரு பொண்ணுக்கு எது முக்கியமோ அதையே இழந்தப்பறம் இது ரெண்டைவச்சு என்ன ஆன்ட்டி பண்றது”, என அழத்தொடங்க..
ராஜியும் சரோஜாவும் அதிர்ச்சியாய் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ள..ராஜி தான் தன்னை தேற்றியவாறு அவளிடம்
“நிர்பயா நீ என்ன சொல்ற???”
“ஆமாக்கா நா காட்டுல இருக்குற கள்ளிச்செடி என்னை போய் துளசிச் செடியா மாத்த நினைக்குறாரு உங்க தம்பி..
அது நடக்க முடியாத ஒரு விஷயம்னு அவருக்கு புரிய மாடேங்குது..நீங்களாவது அவருக்கு புரிய வைங்க ப்ளீஸ்..”
“இந்த விஷயம் தமிழுக்கு????”
“தெரியும் ஆன்ட்டி சொல்லிட்டேன் ஆனாலும் அவரு முடிவ மாத்திக்க மாட்றாரு..நீங்க எடுத்து சொல்லுங்க ஆன்ட்டி நா வரேன்”, என்றவாறு விறு விறுவென வெளியே சென்றுவிட்டாள்..
பெண்கள் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை..இபப்படி ஒரு கொடுமையை அவர்கள் அச்சிறிய பெண்ணின் வாழ்வில் எதிர்பார்த்திருக்கவில்லை..
வீட்டிற்குச் சென்றவர்கள் தமிழுக்காய் காந்திருந்து அவனிடம் விஷயத்தை கேட்க முதலில் மழுப்பியவன் நிர்பயாவே கூறியது தெரிந்தபின் வேறு வழியின்றி மேலோட்டமாயாய் விஷயத்தை கூறினான்..
“அம்மா..அவகிட்ட கல்யாண பேச்சை ஆரம்பிச்சது நான்தான்..இப்போ அவளை விட்டுட்டு போறேன்னு சொல்றது துரோகம் இல்லையாம்மா..
அதுவும் போக ஏதோ ஒரு நாய் பண்ண தப்புக்கு இவ வாழ்க்கை புல்லா இப்படி அழுதுட்டு இருக்கனுமா சொல்லு??
டீவிலயும் பேப்பர்லயும் இப்படி நியூஸ் கேள்விபடும் போது அந்த பொண்ணுங்களுக்காக எவ்ளோ வருத்தப்படுறோம்..
இப்போ நம்மள ஒருத்தியே பாதிக்கப்படும் போது அவளை ஏன்ம்மா ஒதுக்கி வைக்கனும்..
இந்த விஷயத்தை கேக்குறதுக்கு முன்னாடி வரகூட ஒருவித பாசம்தான் இருந்தது அவ மேல ஆனா எப்போ அவ என்னை மதிச்சு இவ்ளோத்தையும் சொன்னாளோ அந்த நிமிஷம் இனி என் வாழ்க்கைல அவளை தவிர வேற பொண்ணுக்கு இடமில்லனு முடிவு பண்ணிட்டேன்ம்மா..
இதுக்கு மேல இதுல யோசிக்க ஒண்ணுமில்ல ..”,என்றுகூறிச் சென்றுவிட்டான்..
அதன்பின் சரோஜா ராஜியிடமும் சரி தமிழிடமும் பேசவில்லை.. மறுநாள் தமிழிடம் கூறி நிர்பயாவை வீட்டிற்கு வரச் சொன்னார்..
ராஜிக்குமே இதில் தலையிட தயக்கமாய் இருந்தது..
இப்படி ஒரு சூழலில் மாமியாரை மீறி எதுவும் பண்ணவும் முடியாது என தோன்ற அமைதியாய் இருந்துவிட்டாள்..
கூறிய நேரத்திற்கு நிர்யா அவன் வீட்டிற்கு வந்து காலிங் பெல்லை அழுத்த அவனே வந்து திறந்தான்..
அவனது பார்வை எதுக்கு உனக்கு இந்த தேவையில்லாத வேலை எனும் பொருள் தாங்கியிருக்க அதை கவனியாதவாறு உள்ளே சென்றாள்..
சரோஜாவும் ராஜியும் ஹாலில் அமர்ந்திருக்க தயக்கமாய் அவரெதிரில் சென்று நின்றாள்..
இப்படி உக்காரும்மா எனக் கூற சென்று அமர்ந்தாள்..அதற்குள் உள்ளே வந்தவன் அவளைவிட்டு சற்று நகர்ந்து அமர்ந்தான்..
என்னவாயினும் தான் அவள்புறம்தான் என்பதாய் இருந்தது அவன் தோரணை…
“நேத்து எல்லாத்தையும் என்கிட்ட சொன்னதும் நல்லதுக்குதான்ம்மா..
இல்லனா அவசரப்பட்டு கல்யாண ஏற்பாடெல்லாம் பண்ணிருப்போம்..சரி இப்போ சொந்தகாரங்க யாராவது இருக்காங்களா?? இல்ல தனியா தான் இருக்கியாம்மா??”
“அப்படிலா யாரும் இல்ல ஆன்ட்டி எனக்கு யாரையும் தெரியாது..”
“ஓ..நல்லது அப்போ நீ எனக்கு ஒரு சத்தியம் பண்ணி தரணும்மா..”
மூவருமே என்ன நடக்கிறது என புரியாமல் முழிக்க தமிழ் ஏதோ கூற வாயெடுக்க சரோஜா அதற்குள்,
”நா உன்கிட்ட பேசல தமிழ் அமைதியா இரு..நீ சொல்லும்மா..”
“இந்த நிமிஷம் எனக்கு தெரிஞ்ச என்னை மதிச்சு பேச இருக்குற ஒரே பெரியவங்க நீங்க தான் நீங்க என்ன சொன்னாலும் கேக்குறேன்..சொல்லுங்க..”
“எங்க மூணு பேருக்கும் தெரிஞ்ச உன்னுடைய கடந்தகாலம் இனி யாருக்கும் தெரியகூடாது..நீ இதபத்தி யார்கிட்டேயும் பேச மாட்டேன்னு சொல்லு..”
விரக்தி சிரிப்பு உதட்டில் உதிக்க ,”இதென்ன பெருமைபடுற விஷயமா ஆன்ட்டி எல்லார்கிட்டேயும் போய் சொல்லிட்டு இருக்க இவருக்கு நல்ல லைப் அமையனும்ங்கிற எண்ணத்துல தான் உங்ககிட்டேயே சொன்னேன் இதுக்கு மேல எதுக்கு அத பேச போறேன் நானே மறக்க நினைக்குற விஷயம் அது..”
“புரியுது நிர்பயா ஆனா நா சொல்றது இப்போ என்கிட்ட சொல்றதுக்கு ஒரு காரணம் கிடைக்குற மாதிரி நாளைக்கும் எதாவது நடக்கலாம் அந்த நிலைமைலயும் நீ சொல்ல கூடாதுன்னு தான் நா சொல்றேன்..”
“சத்தியமா இனி இதை சொல்லமாட்டேன் ஆன்ட்டி..”, மென்மையாய் சிரித்தவர்,
”சரி இப்போ சொல்லு என் பையன் தமிழை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா???”, என நிதானமாய் கேட்டார்..
தமிழும் ராஜியும் அடுத்த நொடி அவரருகில் சென்று அவர் கைப்பற்றிக் கொண்டனர்.. நிர்பயாவோ நடப்பது புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்..
“தேங்க்ஸ்ம்மா..நா எதாவது தப்பா பேசிருந்தா மனசுல வச்சுக்காத..”
“பரவால்லடா..உன்னால மட்டும் தான் அவ லைப்ப மாத்தமுடியும் அதுக்கு நா தடையா இருக்க மாட்டேன் தமிழ்..”
“ஆன்ட்டி..”
“இங்க பாரு கண்ணம்மா.. உனக்கு நடந்தது மிகப் பெரிய கொடுமைதான்..அநியாயம்தான் ஒத்துக்குறேன்..
ஆனா இதுல உன் தப்பு என்னடா இருக்கு எதுக்காக உன் வாழ்க்கைய முடிச்சுக்க நினைக்குற..
நீ நடந்தத மறைச்சு புது வாழ்க்கை தொடங்கினாதான் தப்பு..சம்மந்தப்பட்ட நாங்களே தெளிவா இருக்குறப்போ நீ ஏன் உன்னை குழப்பிக்குற..
இப்படி பொண்ணு மேல கைவைக்குறவன பாத்த இடத்துலயே சுட்டு போடுற தண்டனை இன்னும் வராம இருக்குறத நினைச்சே இந்த நாட்டல யாரும் வெக்கபட மாட்றாங்க..
நல்லா வாழறதுக்கு நீ ஏன்டா வெக்கபடனும்..
ஒரு பொண்ணுக்கு நடந்த தப்புக்கு அப்போவே தண்டனை குடுத்து மறுபடியும் தப்பு நடக்காம பாத்துக்க முடியாத இந்த சமூகம் தான்டா வெக்கப்படனும்..
உனக்கு அம்மா அப்பா அக்கா அண்ணாணு அத்தனை உறவையும் தமிழ் மூலமா கடவுள் குடுக்குறாருனு நினைச்சுக்கோ எங்களை நம்பி வந்தப்பறம் நீ முழுவதுமா எங்க பொறுப்பு என கன்னம் தடவ இறுகப் பற்றிக் கொண்டு கதறினாள்..
நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த ராஜிக்கும் தமிழுக்குமே கண்கலங்கி விட்டது..
யாரும் யாருக்கும் ஆறுதல் கூறும்படியான நிலையில் இல்லை..சிறிது நேரத்தில் சரோஜாவே அவளை தேற்றி அமர வைத்து,
”இன்னொரு முக்கியமான விஷயம் இந்த விஷயம் நம்ம நாலு பேரை தாண்டி யாருக்கும் தமிழ் அப்பாக்கு கூட தெரியகூடாது..புரியுதா??”
“ஆன்ட்டி..அது..”
“இங்க பாரு இது என்னோட முடிவு.. அவர் இத தப்பா எடுத்துப்பாரோனு நா மறைக்க நினைக்கல..
அவரையோ வெற்றியையோ பாக்கும்போது உனக்கோ உன்னை பாக்கும்போது அவங்களுக்கோ எந்த தர்மசங்கடமும் வரகூடாது அதுக்காக தான் சொல்றேன்..
ராஜி எங்க வீட்டு மூத்த பொண்ணுணா நீ எங்க வீட்டு கடைசி பொண்ணு அவ்ளோதான்..ராஜி நீயும்..”,
“அத்தை இந்த விஷயத்துல பொண்ணுக்கு பொண்ணே எதிரியா இருந்தா வாழறதுக்கே அர்த்தமில்ல அத்தை..
நா இதை இந்த நிமிஷத்தோட மறந்துட்றேன்..நீங்க ஆக வேண்டியத பாருங்க..”
“அம்மா எல்லாம் சரி இன்னமும் சம்மதம் சொல்ல வேண்டியவங்க வாயத் தொறக்கலயே “,என தமிழ் அவளை நேர்ப்பார்வை பார்க்க..
அவள் ஒன்றும் கூறாமல் அமர்ந்திருந்தாள்.. அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணியவர்களாய் ராஜியும் அவரும் வெளியே சென்றுவிட, அவளருகில் சிறிது இடைவெளி விட்டுஅமர்ந்தான்..
சட்டென எழுந்தவள் சென்று ஜன்னல் அருகில் நின்றுகொள்ள அவனும் சென்றான்..
“எப்போ கல்யாணத்தை வச்சுக்கலாம்???”
தவிப்பாய் அவனை பார்த்தவள்,
” வேண்டாம் செல்வா இது எனக்கு வேண்டாம் “,என கண்கலங்கி பின்னே நகர தன் கையை நீட்டி அவள் கையை பிடிக்க அவன் முன்னேற, வேண்டாம் செல்வா.. இன்னும் அழுகை நிற்கமால் வழிந்தது.
இரு கைகளையும் தன் கரங்களால் பிடித்தான் தன்னை மறந்து அவன்மேல் சாயப் போனவள் மீண்டும் அவனிடம் விழிகளால் கெஞ்ச அவள் பின்தலையை பிடித்து தன்னோடு சேர்த்துக் கொண்டான்..
அவன் சட்டையை பிடித்தவள் அப்படியே கதறி தீர்த்தாள்.. அவனுக்குமே கண்ணில் நீர் கோர்த்திருந்தது..
அவளாய் அழுகையை நிறுத்தும் மட்டும் பொறுமை காத்தவன் அதன்பின் அவளை பிரித்தெடுத்து கண்களை துடைத்து,
”இனி நா இருக்கேன் உனக்கு வேற எதையும் யோசிக்காத புரியுதா..?? போ போய் முகத்தை துடைச்சுட்டு வா”, என உள்ளே அனுப்பி வைத்தான்..
அவர்கள் இருவரும் வந்தவுடன் இருவரிடமும் விடைபெற்று அவனைப் பின் தொடர்ந்தாள்..
நேராய் ஒரு துணிக்கடை வாசலில் வண்டியை நிறுத்த என்ன கூறவென தெரியாமல் திருதிருவென முழித்தவளை உள்ளே வருமாறு ஜாடைகாட்டிச் சென்றான்.
பெண்கள் பிரிவில் சென்று அமர்ந்தவன் தினசரி உபயோகத்திற்கு சுடிதாரும் இரண்டு புடவையும் எடுத்துக் கொள்ளுமாறு கூற..
“அதெல்லாம் எதுக்கு வேண்டாமே என்கிட்ட இருக்குறதே போதும்..”
“ம்ம் உன்கிட்டதான அப்படியே நிறைய வச்சுருக்குற மாதிரி பேசாத அழுது வடிஞ்சமாதிரி நாலு ட்ரெஸ்..
ஒழுங்கா எடுத்துக்கோ இது எப்பவோ நினைச்சது தான் ஆனா எப்பவுமே ஒரு பொண்ணுக்கு ட்ரெஸ் வாங்கி தர்றதாயிருந்தா ஒண்ணு அவ அப்பா அண்ணணா இருக்கனும் இல்ல புருஷனா இருக்கனும்..
அதனாலதான் எதுவும் சொல்லாம விட்டுட்டேன்.. எடுத்துட்டு வா நா வெயிட் பண்றேன் “,என போனை எடுத்துக் கொண்டு சற்று தள்ளிச் சென்றான்..
அப்போதும் மனசு ஒரு நிலையிலில்லாமல் ஏனோதானோவென சுடிதார்களைப் பார்க்க அங்கிருந்த விற்பனை பெண்ணோ,
”என்ன மேடம் எங்க வீட்டுகாரங்கலா நாங்க ட்ரெஸ் எடுக்க போறோம்னு சொன்னாலே மிரண்டு போவாங்க..
சார் உங்க விருப்பத்துக்கு எடுக்க சொல்லியும் நீங்க இப்படி விருப்பமே இல்லாதமாதிரி பாத்துட்டு இருக்கீங்க”, என சிரிக்க பதில் கூற தெரியாமல் சிரித்து வைத்தவள் பத்து நிமிடத்தில் தேவையானவற்றை எடுத்து பிலிங்கிற்கு வந்தாள்..
அதை வாங்கிக் கொண்டு அவளை வீட்டில் இறக்கி விடச் சென்றவன் அவளே சாவி கொண்டு திறப்பதை பார்த்து,
”யாரும் இல்லையா??”
“இல்ல எல்லாரும் வெளில போறதா சொன்னாங்க அதான் என்கிட்ட சாவி குடுத்துட்டு போய்ட்டாங்க..”
ஓ என்றவன் பைக்கை நிறுத்தி விட்டு அவளோடு வர ,
”கொஞ்சம் தண்ணி வேணும் குடிக்க..”
இதோ எடுத்துட்டு வரேன் என்றவள் உள்ளே செல்ல வாசலை ஒட்டிய ஹாலில் அமர்ந்தான்.. டம்ளரை வாங்கி பருகியவன்,
”கொஞ்சம் உக்காரு நா உன்கிட்ட பேசனும் “,என எதிரிலிருந்த சேரை காட்ட மறுபேச்சு பேசாமல் அமர்ந்தாள்..
“ஒண்ணுமில்ல ஜஸ்ட் சொல்லனும்னு தோணுது..இதுவர நீ இப்படி அமைதியா சோகமா இருந்ததெல்லாம் போதும்..
இனி எல்லாரையும் மாதிரி சகஜமா இருக்க ட்ரை பண்ணு..
மனசை சந்தோஷமா வச்சுக்க ட்ரை பண்ணு..அண்ட் அட்லீஸ்ட் என்கிட்ட மட்டுமாவது நீ நீயா இருக்க முயற்சி பண்ணு..
ஸ்கூல் டிச்சர பாக்குறமாதிரி பயப்படுறது இல்ல விலகி போறது இதெல்லாம் வேணாம்.. அதிகபட்சம் அன்னைக்கு காபி ஷாப்ல என்னைப் பாத்தவுடனே கர்ட்டஸிக்காக ஒரு சிரிப்பு சிரிச்சே அது போதும்..
இதெல்லாமே நம்ம கல்யாணம் நடக்குற வர நீ மாத்திக்க வேண்டியது.. அதுக்கப்பறம் உன்னை முழுசா மாத்ற பொறுப்பு என்னோடது..
அண்ட் நா கொஞ்சம் இப்படிதான் ஒரு மாதிரி ரஃவ்வாவே இருந்து பழகிட்டேன் இனி கண்டிப்பா மாத்திக்க ட்ரை பண்றேன்..
சரி நா கிளம்புறேன்.. எதுவாயிருந்தாலும் கால் பண்ணு சரியா.. நா அப்பாகிட்ட பேசிட்டு உனக்கு அப்டேட் சொல்றேன்..பை..” அனைத்திற்கும் சிறு குழந்தையாய் தலையாட்டி வைத்தாளே தவிர வேறெதுவும் கூறவில்லை..
தன் வீட்டிற்கு வந்தவன் சரோஜாவைத் தேட உள் அறையில் இருப்பதை உணர்ந்து சென்று அவர் மடியில் படுத்துக் கொண்டான்..
“என்னடா கொஞ்சல் அதிகமா இருக்கு??”
“ம்மா நீ எவ்ளோ பெரிய விஷயம் பண்ணிருக்கனு உனக்கு புரியுதா?
அதுவும் நம்மள மாதிரி நடுத்தற குடும்பத்துல ஒரு அம்மாவா நீ எடுத்த டெஸிஷன் பெரிய விஷயம்மா..”
அப்படி எதுவுமேயில்ல தமிழு..ஒரு பொண்ணா இதை செய்றதுல தப்பு இல்லனு தோணிச்சு அதான் பண்ணிணேன்..
எல்லா காலத்துலயும் பெண்களுக்கு எதிரா எதாவது இருந்துட்டுதான் இருந்துருக்குப்பா..
அந்த காலத்துல உடன்கட்டை ஏறுதல்ங்கிற பேர்ல புருஷன் போய்ட்டா அந்த பொண்ணையும் சாகடிக்குறது..
அடுத்த அடுத்த காலத்துல புருஷனை இழந்துட்டா வெள்ளைபுடவை குடுத்து ஒரு ஓரமா உக்கார வச்சாங்க..
இதெல்லாம் ஒரு சமூகமே சேர்ந்து இது இப்படிதான்னு முடிவு பண்ணி வச்ச விஷயங்கள் இதையே அந்தகாலத்து பெண்கள் தூக்கி எறிஞ்சு மாத்திருக்காங்க..
அப்படியிருக்கும் போது இப்போ நடக்குற இதெல்லாம் என்னஅசிங்கம்டா.. ஆண் இனமே வெட்கி தலை குனிய வேண்டிய யுகம்டா இது..
லவ் லவ்னு டார்ச்சர் பண்ணாங்க அதுக்கப்பறம் அந்த பொண்ணு ஒத்துக்கலனா அவ மேல ஆசிட் அடிச்சாங்க அதுக்கப்பறம் எனக்கில்லாதவ யாருக்கும் கிடைக்க கூடாதுனு கொலை பண்ணவே துணிஞ்சாங்க..
இப்போ வன்முறைங்கிறத தாண்டி அவங்க பரம்பரைக்கே பாவத்தை பண்றாங்க..
முன்னப் பின்ன தெரியாத பொண்ணு மேல கை வைக்குற உரிமைய யாரு குடுக்குறாங்க இவங்களுக்கெல்லாம்..
இவன் பண்றத தான நாளைக்கு இவனோட அம்மாவோ அக்கா தங்கையோ ரோட்ல போறப்போ மத்தவங்க பண்ணுவாங்க.. அந்த எண்ணம் ஏன்டா வரமாட்டேங்குது..
இவனுங்க திமிரு எடுத்து பண்ற தப்புக்கு தண்டனை வாழ்க்கை முழுசும் பாதிக்கப்பட்ட அந்த பொண்ணுக்கா??
இந்த நிலைமை மாறணும்டா அவங்க மாத்துவாங்க இவங்க மாத்துவாங்கனு வேடிக்கை பாக்குறதவிட நாமளே ஆரம்பிச்சோம்ங்கிற திருப்தி நமக்கு கிடைக்கும் அது போதும்டா…
அந்த பொண்ணு நேத்து கோவில்ல விஷயத்தை சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம அதே நேரம் உன் வாழ்க்கை நல்லாயிருக்கனும்னு தன்னைப்பத்தின உண்மையை போட்டு உடைச்சப்போ மனசு கனத்து போச்சுடா..
உடலளவிலேயும் மனசளவிலேயும் எவ்வளவு ரணம் இருந்திருக்கும்..
நெஞ்சே பதறது தமிழு..இனி அவளுக்கு எல்லாமுமா இருந்து அவளை நல்லா பாத்துக்கோடா..
அவ குடும்ப வாழ்க்கைக்கு எல்லா விதத்திலேயும் தயாராக நாள் ஆகும்டா..
நீதான் புரிஞ்சு அவளுக்கு ஆதரவா இருக்கனும்..எந்த ஒரு நேரத்துலயும் அந்த பொண்ணு நாம இங்க வந்திருக்க கூடாதோநு நினைச்சுர கூடாது..
அதுதான் உன் வாழ்க்கைல பெறப்போற மிகப் பெரிய வெற்றி..சரியாப்பா??
அம்மா..உனக்கு புள்ளையா பொறந்ததுல நா ரொம்ப ரொம்ப பெருமை பட்றேன்ம்மா..
நீ சொன்ன எல்லாத்தையும் நா கண்டிப்பா புல்பில் பண்ணுவேன்..தேங்க் யூ சோ மச்..நீ அப்பாகிட்ட பேசும்மா..
ரொம்ப நாள் தள்ளி போட வேணாம்..அவ எப்போ எப்படி மாறுவானே தெரியாது.என மேலும் தேவையானவற்றை அவரோடு பேசிக் கொண்டிருந்தான்..
அன்று இரவு படுக்கச் சென்றவன் தற்செலாய் மொபைலை எடுக்க அவளுக்கு எஸ்எம்எஸ் அனுப்பத் தோன்ற ஹாய் என அனுப்பிவிட்டு பதிலுக்காக காத்திருந்தான்..
பத்து நிமிடம் களித்து சொல்லுங்க,என பதில் மெசெஜ் வந்தது..
“சாப்டியா??என்ன பண்ற??”
“ம்ம் சாப்டேன்..புக் படிச்சுட்டு இருக்கேன்..”
“ஓ..புக்ஸ் படிப்பியா??என்ன மாதிரியான புக்ஸ்??”
“தமிழ் பேச தான் வரும் படிக்க அவ்ளோ வராது.. இங்கிலீஷ் நாவல்ஸ் தான் படிப்பேன்.. இப்போ ரூம்மேட் ஒரு நாவல் குடுத்தாங்க அதை படிச்சுட்டு இருக்கேன்..”
“ம்ம்ம்..”
“உங்ககிட்ட நா ஒண்ணு கேக்கவா???”
“என்ன சொல்லு??”
“கண்டிப்பா இதெல்லாம் தேவையா செல்வா??நீங்க ஏன் இன்னொரு தடவை உங்க முடிவை மாத்திக்கிறத பத்தி யோசிக்க கூடாது..”
இதழோரம் தோன்றிய சிரிப்போடு பதில் அனுப்பினான்..
”யா கண்டிப்பா யோசிக்கனும் நீ இப்படியே பேசிட்டு இருந்தா எவ்ளோ சீக்கிரம் கல்யாணம் பண்ணணும்னு யோசிக்கனும்..”
அதற்கு பதில் வராமலிருக்க,
” என்ன ஆளக் காணும்??”,என இவனே அனுப்பினான்..
“ம்ம் இருக்கேன் சொல்லுங்க..”
ஏனோ நேரில் அவனிடம் அவள் பேசுவதைவிட இதில் இன்னமும் இலகுவாய் பேசுவதாய் அவனுக்கு தோன்றியது..
இனி தினமும் இதை செயல்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவன் மேலும் பேச்சை வளர்த்தான்..
இரவு வெகுநேரத்திற்கு பின் உறங்கியதால் கண்சிவக்க தயாராகி வந்தவனை பார்த்த ராஜி தொண்டையை செருமியவாறு
“ம்ம் என்ன தம்பி கண்ணெல்லாம் சிவந்துருக்கு நைட்டெல்லாம் தூங்கல போல..”, என சிரிக்க,அவர் குடுத்த காபியை கையிலெடுத்தவாறே,
“அட நீங்க வேற அண்ணி அதே புராணம் தான் போன்லயும் இது சரி வராது நீங்க யோசிங்கநு..
ஷப்பா இந்த பொண்ணுங்கள சமாளிக்குறது கஷ்டமாதான் இருக்கு இப்போ தான் தெரியுது அப்பாவும் மாறனும் மறுபேச்சு பேசாம ஏன் தலையாட்றாங்கனு..”
“தம்பி நீங்க டைம் கிடைக்குறப்போ அவளை வெளில எங்கேயாவாது கூட்டிட்டு போங்களேன்..
கொஞ்சம் பாசிட்டிவ்வா பேசுங்க..அவளுக்கும் அதுதான் தேவை இப்போ..”
“ம்ம் அப்படிங்குறீங்க..லேடிஸ் சொன்னா கரெக்ட்டாதான் இருக்கும் பண்ணிட்றேன்”, என்று கூறி சிரித்தவாறே வேலைக்கு கிளம்பினான்..
அன்று முழுவதும் அந்த சிந்தனையே தலையில் சுற்றிக் கொண்டிருக்க அதற்கு மேல் பொறுக்கமாட்டாமல் மாலை வேளையில் அவளை அழைத்தான்.
“ஆபீஸ்ல இருந்து கிளம்பிட்டியா??”
“இல்ல இப்போதான் கிளம்ப போறேன் என்னாச்சு??”
“சரி ஒரு 10 மினிட்ஸ் வெயிட் பண்ணு நா வரேன் பை..”
சொன்னபடியே அடுத்த பத்தாவது நிமிடம் அவள் அலுவலக வாசலுக்குச் சென்று அவளை அழைத்தான்.. அவனருகில் வந்தவள் மெதுவாய்..
“வந்து..”
“என்னாச்சு??”
“இல்ல நானே போய்க்குறேன்..”
“ஏன் என்னாச்சு??”
“அது அது ரூம் மேட்ஸ் யாராவது பாத்தா..”
“பாத்தா???”
கிண்டல் பண்ணுவாங்க.. லேசாய் அவள் முகம் சிவந்ததை கண்டவனின் முகத்தில் புன்னகை அரும்பியது..
“ஏன் என்ன சொன்னாங்க??”
“இல்ல நேத்து நாம பேசிட்டு இருக்கும் போதே வந்துட்டாங்களாம் நம்மள பாத்தவுடனே உள்ளே வராம பக்கத்துல காபி ஷாப்ல வெயிட் பண்ணிட்டு இருந்தாங்களாம்.”, என எங்கோ பார்த்தபடி கூறியவளை பார்த்தவன் பற்கள் தெரியவே சிரித்தான்.. சரி வா..
“??”
“நாம வீட்டுக்கு போகல போதுமா ஏறு..”
மீண்டும் அவள் கேள்வியாய் பார்க்க,”என்ன நம்பி வாழ்க்கை புல்லா என்கூட வரப்போற இப்போ ஒரு ஒன் அவர் வர மாட்டியா??வா..”, என்றவாறு அவளை முதன்முதலாக பார்த்த அந்த மாலுக்கு அழைத்துச் சென்றான்..
முதலில் புட் கோர்ட்டிற்கு அழைத்துச் சென்று அவளுக்கு சாப்பிட வேண்டியவற்றை கேட்டு வாங்கிக் கொடுத்தான்..
“ஹவ் வாஸ் யுவர் டே??”
“ம்ம் வழக்கம்போல தான்..மேனேஜர் எஸ்கலேஜன் பெருசா சொல்ற அளவு ஒண்ணுமில்ல என்றவாறு சாப்பிட ஆரம்பித்தவள் ஏதோ தோன்ற,
“உங்களுக்கு???”
உன்னை மாதிரியே தான் அக்யுஸ்ட் லத்தி டென்ஷன்.. வேறென்ன.. சரி அதான் உனக்கும் இந்த டைம்ல ஆபீஸ் முடிஞ்சுருமேனு தான் கால் பண்ணேன்.
உன்னை பத்தி சொல்லிட்ட என்னை பத்தி தெரிஞ்சுக்க தோணலயா உனக்கு??
ம்ம் முக்கியமா ஒண்ணு கேக்கனும்னு நினைச்சேன் எதை வச்சு என்னை இவ்ளோ நம்புற??ஷாலினி கூப்டாங்கிறதுக்காக என் வீடு வர வந்த??
அது..அது..
சொல்லு நா ஒண்ணும் நினைச்சுக்க மாட்டேன் என அவளையே பார்த்திருக்க,
வந்து என்னை பொறுத்தவரைக்கும் ஒரு பொண்ணு எந்த ரத்த சம்மந்தமும் இல்லாத ஒருத்தர நம்புறானா அவரு நிச்சயமா நல்லவரா தான் இருக்க முடியும்..
முதல் தடவை நாம மீட் பண்ணப்போ அவங்க உங்கள அண்ணா அண்ணானு அவ்ளோ உரிமையா கூப்டப்பவே உங்க மேல முழு நம்பிக்கை வந்துருச்சு..
ப்பார்ரா அமைதியா இருக்கனு நினைச்சா இவ்ளோ யோசிப்பியா..
ம்ம் ஷாலுவ பத்தி பேசினவுடனே தான் நியாபகம் வருது நா இன்னும் நம்ம கல்யாண விஷயத்தை அவங்ககிட்ட சொல்லல..நீதான் அவகிட்ட சொல்ற..
நானா??எதுக்கு அதெல்லாம்..
ம்ம் அன்னைக்கு நீ அவகிட்ட பேசினதுக்கு அவ எவ்ளோ வருத்தப்பட்டா தெரியுமா??
அதுமட்டுமில்லாம இந்த கல்யாணத்தை முதல்ல இருந்தே விருப்பப்பட்டது அவதான்.. சோ அவகிட்ட நீதான் சொல்லனும்..எப்போ போலாம்னு சொல்லு நானே கூட்டிட்டு போறேன்..ஓ.கே வா??
ம்ம் சரி..
உனக்கு ஜாப் போற இன்ட்ரெஸ்ட் இருக்கா இல்லை எதாவது மேல படிக்குறியா???
இல்ல கல்யாணத்துக்கப்பறம் வீட்லயே இருக்கேன்னு சொன்னாலும் ஓ.கே தான்.நீ சொல்றதுதான்..
அதப்பத்தி நா ஏதுவும் யோசிக்கலயே..
இன்னும் டைம் இருக்கு பொறுமையா யோசிச்சு சொல்லு..
ஆனா ஒண்ணு இப்படியே கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லிட்டேயிருந்தா தனிக் குடித்தனம் வேற நா ரொம்ப பாவம்மா..
என் நிலைமையும் கொஞ்சம் மைண்ட்ல வவச்சுக்கோ என்ன சரியா??
லேசாய் மென்னகைத்தவள் வழக்கம்போல் தலையாட்ட அவளைப் போன்றே அவனும் தலையசைத்து சிரித்தான்..
“ஹப்பா அட்லீஸ்ட் இது பெட்டர் குட்..சரி வா கிளம்பலாம் அல்ரெடி கமிஷ்னர பாக்றதுக்கு போறதுல 15 மினிட்ஸ் லேட் “,
என அசால்ட்டாய் கூறியவனை அதிர்ச்சியாய் பார்க்க கண்ணடித்து எழுந்தவன்,
“நோ ப்ராப்ளம் பொண்டாட்டியா கமிஷ்னரானு பாத்தா வைப்தான் பர்ஸ்ட் இல்லயா.. போலாம் என தலையசைத்து அவளை அழைத்துச் சென்றான்..
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
1 comment
👌👌👌👌👌👌👌👌👌