131
காலை ஏழு மணியளவில் திருநெல்வேலி ஸ்டேஷன் வர பெரியவர்களை திருமணத்ததிற்கு அழைத்து விடைபெற்று கூபேவின் வெளியே வர நிர்பயா அவனின் கைப்பற்றிக் கொண்டாள்..
“அடடா அந்த ரௌடிகளுக்கு கூட பயப்படல என் குடும்பத்துக்கு இவ்ளோ பயமா??”,என நக்கலடித்தவன் அவள் கையை இன்னும் அழுத்தமாய் பற்றத் தவறவில்லை..
தமிழின் அம்மா அப்பா அண்ணா வந்திருப்பதை பார்த்து நிம்மதியடைந்தவள் மூவரையும் பார்த்து சிநேகமாய் சிரித்து ஆண்களை பார்த்து கைக் கூப்பினாள்..
வெற்றி தலையசைத்து சிரிக்க கேசவன் சிறு தலையசைப்போடு நகர்ந்தார். சரோஜாவை கண்டதும் போய் சிறுபிள்ளையாய் கட்டிக் கொண்டவளை பார்த்தவனுக்கு மனம் கனிந்தது..
“ஹலோ உங்க புள்ளைனு ஒருத்தன் ஆறடில நிக்குறானே கண்ணுக்கு தெரியுதா??”
“தம்பி இது வெறும் ட்ரெய்லர் தான்..இனி நம்மயெல்லாம் கண்டுக்கவே மாட்டாங்க வா வா வேலையப் பாப்போம்”, என வெற்றி அவனை அழைத்துச் சென்றான்..
பத்து நிமிடத்தில் வீட்டை அடைய காரை விட்டு இறங்கியவளை அப்படியே நிற்கச் சொல்லிவிட்டு சரோஜா உள்ளே சென்றார்.
இருவரையுமாய் சேர்த்து நிற்க வைத்து ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்பினார்..
வீடுகள் நிறைந்த அகலமான தெரு பறவைகளின் ஓசையும் ஓரிரண்டு வாகன ஓசை தவிர வேறு இரைச்சல் இல்லாமல் அழகாய் இருந்தது..
வாசல் கதவை தாண்டியவுடன் திறந்த இடத்தை தாண்டி திண்ணையோடு கூடிய உள்கதவு வராண்டா அதை தாண்டி ஹால் அதன் இடபுறமாய் ஓர் அறை.
அதை தொடர்ந்து ஸ்டோர் ரூம் இருக்க ஹாலிலிருந்து உள்ளே செல்ல டைனிங் ஹாலோடு கூடிய கிட்சன் இருந்தது.. ராஜி வீட்டை சுற்றி காட்டிவிட்டு அவளிடம் ,
“மாடில உங்க ரூம் நிர்பயா.. லக்கேஜ்லா அங்கேயே வச்சுக்கோ.. நீ போய் ரெடி ஆய்ட்டு வா தம்பி இங்க கீழேயே குளிச்சுப்பாங்க..”, எனக் கூற ஹாலில் வந்து தன் பெட்டியை எடுத்தவள் வெளியே வர தமிழ் யாரிடமோ போனில் பேசிவிட்டு திரும்பினான்..
“ஃபீல் ஃப்ரீ நிரு..நீ போய் ரெடி ஆய்ட்டு வா..”, என்றவாறு அவள் படியேறும் வரை நின்றான்.
வாசலில் இருந்த திறந்த இடத்திலிருந்து மாடிக்குப் படி கட்டுகள் செல்ல உள்ளே கதவை திறந்தாள். அங்கு பெரிய ஹாலும் இரு அறைகளும் இருக்க ராஜி கூறிய அறைக்குச் சென்று குளித்து உடைமாற்றி வந்தாள்..
தயக்கமாய் கீழே வர அங்கு ஒரு படை பட்டாளமே இருப்பதை கண்டு செய்வதறியாமல் நின்றாள்.
அதற்குள் சரோஜா அவளருகில் வந்து கைப்பிடித்து அவர்களிடம் அழைத்துச் சென்றார்..
“மதினி இவதான் கல்யாண பொண்ணு பேரு நிர்பயா..”,எனக் கூற அனைவருக்கும் பொதுவாய் வணக்கம் வைத்தாள்…
“நல்லாயிருக்கியா??ஒழுங்கா சாப்பிட மாட்டியோ இப்படி முருங்கைக்காய்க்கு கை கால் முளைச்ச மாதிரி இருக்கியே போலீஸ்காரன எப்படி சமாளிக்க போற??”, என ஒரு பாட்டி கூற வெடிச் சிரிப்பு எழுந்தது. நிர்பயா பாவமாய் சரோஜாவை பார்க்க,
“அத்தை போதும் போதும் அவளுக்கு தமிழே கொஞ்சம் தான் தெரியும் இதுல நீங்க நம்ம பக்க பாசைல பேசுனா கிழிஞ்சுது..
பாவம் பசியோட இருக்கா சாப்ட்டு வரட்டும் “,என விளையாட்டு போல் கூற,
“அது சரிதான்..போ போய் சாப்டு பொண்ணே இங்க பக்கத்துல தான இருக்கோம் வெயில் தாள அப்பறமா வரோம்”, என்றவாறு அனைவரும் கிளம்பினர்..
டைனிங் டேபிளில் அவளை அமர வைத்தவர் அனைவரையும் சாப்பிட அழைக்க தமிழ் அவன் தந்தை தமையனோடு வந்தமர்ந்தான்.
பெண்கள் இருவரும் பரிமாற நிர்பயா தானும் அவர்களோடு சாப்பிடுவதாய் கூற,
பரவால்லம்மா நீ சாப்டு டயர்டா தெரியுற பாரு என கேசவன் கூற மறுக்க தோன்றாமல் அமர்ந்து உண்ண ஆரம்பித்தாள்..
ஏனோ கேசவனை பார்க்கும் போதெல்லாம் ஒருவித பயம் கலந்த மரியாதை தோன்றியது அவளுக்கு. அந்த நினைவோடேயே மெதுவாய் சாப்பிட,
“இங்க பாரும்மா..”என்ற அவர் குரலில் நிமிர்ந்தாள்..
“இது இனி உன் வீடு ஏன் ரொம்ப அன்கம்பர்டபிளா பீல் பண்ற..நாங்க எல்லாரும் உன்கூட இருக்கோம் அப்பா அம்மாவா நானும் சரோஜாவும் இருக்கோம்..
தைரியமா சந்தோஷமா இருக்கனும்..உன் கஷ்டகாலமெல்லாம் முடிஞ்சுதுனு நினைச்சுக்கோ..
போனவங்க வரப்போறதில்ல.. ஆனா அவங்க உனக்காக இத்தனை உறவுகளை குடுத்துருக்காங்கல..
நல்லாயிருக்கனும் நீங்க ரெண்டு பேரும் அதான் எங்களுக்கும் வேணும் அவங்களும் விரும்புவாங்க..
சரியா??”,எனும்போதே கண்ணில் நீர் திரண்டு வழியே சரோஜா ஒருபுறமும் ராஜி ஒருபுறமுமாய் அவள் தோள்தட்டி சமாதானபடுத்தினர்..
சற்றே தன்னை தேற்றியவள்,தேங்க்ஸ்ப்பா..என கேசவனை பார்க்க பாச தலையசைப்போடு சாப்டு என செய்கை செய்தார்.
அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த தமிழை அவள் பார்க்க என்னவென பார்வையால் கேட்டவனை விழி அகல பார்த்து இடவலமாய் தலையசைத்து குனிந்து கொண்டாள்..
உணவு முடிந்து ஆண்கள் ஹாலுக்குச் செல்ல நிர்பயா பெண்களோடு சமையலறையில் அமர்ந்தாள்..
“நிர்பயா நா ஊர்ல இருந்து கிளம்பும் போதே என்ன சொல்லிட்டு வந்தேன் சந்தோஷமா ஊருக்கு வானு சொன்னேனா இல்லையா??இப்படியா அழறது??”
“அம்மா நிஜமாவே இந்த பாசத்துக்கு நா தகுதியானவ தானா??”
“என்ன பேச்சு இது??”
“இல்லம்மா நிஜமாவே இதெல்லாம் கனவு மாதிரி இருக்கு..
உங்க பையன் என்னை கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொன்னதே பெரிய விஷயம் இதுல நீங்களும் அண்ணியும் இப்படி எனக்காக உங்க ஹஸ்பெண்ட்ஸ்கிட்ட கூட என்ன விட்டு கொடுக்காம..”, எனும்போதே குரல் தழுதழுக்க,
ராஜி அவளை அதட்டினாள், ”இங்க பாரு முதல்ல அழறத நிறுத்து.. பழசையெல்லாம் மறந்துருனு அத்தை சொன்னாங்களா இல்லையா??
இனி இதுதான் உன் குடும்பம் இதுதான் உன் வாழ்க்கை..
நடந்ததுல உன் தப்பு என்ன இருக்கு நிர்பயா??ஆம்பள திமிருல அந்த நாய் பண்ணிணதுக்கு நீ எதுக்கு வாழ்க்கை புல்லா தண்டனை அனுபவிக்கனும்..
நீ அதையே நினைச்சு நினைச்சு தம்பிய கஷ்டப்படுத்தாத..நானும் கவனிச்சுட்டு தான் இருக்கேன் தம்பி உனக்காக ஒவ்வொரு விஷயத்துலயும் எவ்ளோ பாத்து பாத்து பண்றாருனு..
அப்படியிருக்கும் போது நீ இப்படி வருத்தப்பட்டா அது அவனுக்கு எவ்ளோ கஷ்டத்தை கொடுக்கும்..
தம்பிக்கு அடுத்ததா உனக்கு புல் சப்போர்டா நானும் அத்தையும் இருக்கோம்.. இதைவிட உனக்கு என்ன வேணும் சொல்லு..
கல்யாண பொண்ணா அழகா ரெடியாகி சிரிச்ச முகமா வா பாக்கலாம்..”,என தோள் தட்டி அனுப்பி வைத்தாள்..
மாடிக்குச் சென்றவளுக்கு அவள் பேச்சின் அர்த்தம் புரிந்தது..
எக்காரணத்திற்காகவும் தமிழ் மனம் நோகும்படி நடந்துவிட கூடாது..
கடவுளே கொடுத்த வாழ்க்கையை தன் குழப்பத்தால் அழித்துவிட கூடாது என மீண்டும் மீண்டும் தனக்குள் பதிய வைத்துக் கொண்டவள் முகம் கழுவி லேசாய் ஒப்பனை செய்து தலையை விரித்து நடுவில் மட்டும் கிளிப் போட்வாறு துப்பாட்டாவை சரி செய்து கிளம்ப எத்தனிக்க சரியாய் அறைகதவு தட்டும் ஓசைக் கேட்டது.
முகத்தில் ஒட்டிய புன்னகையோடு கதவை திறந்தவள் அங்கு தமிழை சற்றும் எதிர்பார்க்கவில்லை..
அவளை பார்த்தவனோ விசிலடித்தவாறு கைகளை மார்பின் நடுவே கட்டியவாறு கதவில் சாய்ந்து நின்றான்..
“வாவ் யார் இது புதுசா இருக்கு??என் அழுமூஞ்சி பொண்டாட்டிய யாராவது பாத்தீங்களா”, என அறைக்குள் தேடுவதாய் நடிக்க, வழக்கம் போல் வெட்கத்தில் முகம் சிவக்க நின்றவளை சிறு இடைவெளிவிட்டு அவள் பக்கவாட்டு சுவரில் ஒரு கையை ஊன்றியவாறு நெருங்கி நின்றான்..
“கல்யாண பொண்ணுக்கு கல்யாண களை வந்திடுச்சு போல??”,என மென்குரலில் கேட்டான்..
அவனை விழி உயர்த்தி பார்த்தவள் எதிர்கொள்ள முடியாமல் மீண்டுமாய் தலைசாய்த்துக் கொண்டாள்..
“இப்படியே இரு நிரு..ரொம்ப அழகாயிருக்க..”,என உச்சந்தலையில் இதழ்பதித்து நகர்ந்தவனை கைப்பிடித்து நிறுத்தியவளை ஆச்சரியமாய் அவன் பார்க்க,
“ரொம்ப நாளுக்கப்பறம் இந்த சிரிப்பு என் முகத்துல வர்றதுக்கு முழு காரணமும் நீங்க மட்டும்தான் செல்வா தேங்க் யூ சோ மச் “,என அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்..
இதை சற்றும் எதிர்பாராதவன் மென்மையாய் அவளை தன்னோடு சேர்த்துக் கொண்டான்..
இந்த நொடி இது நிச்சயம் அவளுக்கு தேவை என தோன்றியது.. அவளாய் விலகும் வரை தன் அணைப்பிலேயே வைத்திருந்தவன் அவளை மேலும் சீண்டாமல்,
“ வா நிரு அண்ணி உன்னை கூப்பிட்டாங்க.. நா போறேன் நீ ரெடி ஆய்ட்டு வா “, என கன்னம்தட்டிச் சென்றான்..
கீழே வந்தவனை ராஜி குறும்பாய் பார்க்க,
“அண்ணி இதோ வந்துட்டேயிருக்கா..”
“நல்லவேளை தம்பி எங்க உங்கள கூட்டிட்டு வர ஆள் அனுப்பனுமோனு நினைச்சேன்..”, என்றதை காதில் வாங்காதவனாய் போனை எடுத்துக் கொண்டு நகர்ந்தான்..
அடுத்ததாய் வந்தவளை பார்த்த ராஜிக்குமே நிறைவாய் இருந்தது.
”ம்ம் இப்போ தான தெரியுது தம்பி கீழே வர ஏன் லேட் ஆச்சுனு..திரும்பு கொஞ்சம்..”, என்றவாறு தன் கையில் வைத்திருந்த மல்லிச் சரத்தை அவள் தலையில் வைத்துவிட்டு திருப்பியவள் திருஷ்டி கழித்து தன் கண் மையை எடுத்து அவள் காதருகில் வைத்தாள்.
தேவதை மாதிரி இருக்க வா என உள்ளே அழைத்துச் சென்றாள்..
சரோஜாவோ மென்மையாய் அணைத்து நெற்றியில் முத்தம் கொடுத்தார்..
“என் அழகுப் பொண்ணே இப்டி இருக்க வேண்டிவளா இத்தனை நாளும் அழுதுவடிஞ்ச முகத்தை வச்சுட்டு இருந்த..
எவ்ளோ அழகாயிருக்க தெரியுமா?? எனக்கு தெரிஞ்சு தமிழ் அங்க இங்க நகரமாட்டான் போ..”,என கன்னம்கிள்ளி சிரிக்க,
“அத்தை நீங்க ஒரு தீர்க்க தரிசி..கரெக்ட்டா சொல்றீங்களே”, என நிர்பயாவை இடித்தாள்..
பெண்ணவளோ மனம் நிறைந்து தன்னை மறந்து போனாள்..இப்படியாய் மதியம் வரை பொழுது கழிய மாலை காபியை கொடுத்தவாறு சரோஜா,
“நிர்பயா அக்கம் பக்கத்துல இருக்குறவங்கலா உன்னை பாக்க வருவாங்க உன் ரூம் பீரோல புடவையெல்லாம் வச்சுருக்கேன் பாரு அதுல எதையாவது எடுத்துக் கட்டிக்கோ..
அப்பறமா நா தலைவாரி பூ வச்சு விடுறேன்..சரியா போம்மா..”
“ம்மா..அது வந்து..”
“என்னடா??”
“எனக்கு புடவை கட்டத் தெரியாதும்மா..”
“அடடா நானே நினைச்சேன்.. சரி பரவால்ல நீ ரூம்க்கு போ நா வந்து கட்டிவிடுறேன்..”
அவரே வந்து அழகாய் அவளை அலங்கரித்து தலைவாரி அரிசி பின்னல் இட்டுவிட்டார்..
“உன் முடி நீளத்துக்கு இது நல்லாயிருக்குடா..நீங்க ஊருக்கு போற வர நாதான் உனக்கு அலங்காரம் பண்ணிவிடுவேன் சரியா..
எனக்கு பெண் குழந்தைனா ரொம்ப பிடிக்கும்.. ராஜிக்கு கல்யாணம் ஆன புதுசுல கூட நாதான் அவளுக்கு தலைபின்னி விடுவேன்..
அப்பறம் அவளுக்கும் வேலை குழந்தைனு சரியா இருக்கும் நேரம்.. இப்போ நீ வந்துட்ட..
உனக்கு எங்க ஊர் பழக்கமெல்லாம் தெரியாதில்ல..
நாளைக்கு பூச்சடை வச்சு பின்னிவிடுறேன் ரொம்ப அழகா இருக்கும்”, என அவளோடு பேசியவாறே கைநிறைய இருந்த பூச்சரத்தை சூட்டி விட்டார்..
என் கண்ணே பட்ரும் போல இருக்கு..சரி நா கீழே போறேன் நீ வா என்றவாறு அவர் கீழிறங்க,
கண்ணாடியில் தன்னை பார்த்தவளுக்கு அவளையே அடையாளம் தெரியவில்லை..
அத்தனை அழகாய் நேர்த்தியாய் அவள் ஒருபோதும் தன்னை தயார்படுத்திக் கொண்டதில்லை..
திருமண களை என்பது இதுதானோ எனத் தோன்ற அனைத்தும் சரியாய் இருப்பதை உறுதிபடுத்திக் கொண்டு கீழே இறங்கினாள்..
ஹாலில் கேசவனும் வெற்றியும் அமர்ந்திருக்க தமிழ் இல்லாததை உணர்ந்து நிம்மதியெழ இருப்பினும் மனதோரம் எங்கோ வருத்தம் எட்டிப்பார்த்தது உண்மை..
சரோஜாவை தேடி கிச்சனிற்கு செல்ல அங்கு தமிழ் தீவிரமாய் ஏதோ சமைத்துக் கொண்டிருந்தான்..
ஒரு நொடி அதிர்ந்தவள் சத்தம் எழுப்பாமல் நகர எத்தனிக்க,
“என்ன புதுப் பொண்ணே ரெடி ஆய்ட்டியா “,என தலை திருப்பாமல் கேட்க அப்படியே நின்றுவிட்டாள்.
மறுபுறம் பதில் வராமல் இருக்க திரும்பியவன் கண்ணிமைக்க மறந்து நின்றான்..
அழகிய டார்க் பிங்க் நிற மைசூர் சில்க் புடவையில் கருநீல நிற பார்ட்டரோடு அழகாய் அளவாய் ஒப்பனை செய்து நின்ற விதத்தில் அச்சு அசல் திருநெல்வேலி பெண் சாயலிலேயே இருந்தது..
“மாமியாரும் மருமகளும் பின்றீங்களேம்மா..ஒரு மணி நேரமா ரெண்டு பேரையும் காணாம போகும்போதே நினைச்சேன்..
ம்ம் சரி வா உக்காரு பால் கொழுக்கட்டை பண்ணிருக்கேன் சாப்டுறியா??”
“அப்படினா??”
“அப்பப்போ நீ ஒரு ரசகுல்லாங்கிறத மறந்துரேன்.. அது ஒரு ஸ்வீட் இந்தா சாப்ட்டு பாரு..”
“அப்பாக்கு அம்மாக்கு??”
“எல்லாரும் அப்பறம்தான் சாப்டுவாங்க நீ எடுத்துக்கோ நா வெற்றிக்கு குடுத்துட்டு வரேன்”, என அவன் நகர,
“செல்வா..”
“ம்ம்”
“புடவை எப்படியிருக்கு??”
“ஐயோ காலையிலே இருந்து ஷாக் மேல ஷாக் குடுக்குற நிரு..ரொம்ப ரொம்பபபப அழகாயிருக்கு..
மீதியை மாடிக்கு வந்து சொல்றேன் “, என கண்ணடித்துச் சொல்ல சட்டென திரும்பி அமர்ந்து கொண்டாள்..
மாலை நேரமும் ஒவ்வொருவராய் அவர்களை பார்க்க வர காலையில் போன்று அல்லாமல் ஓரளவு சிரித்த முகத்தோடு பதிலளித்தாள்..
அனைவருமே அவளை பற்றி நல்லவிதமாக சரோஜாவிடம் பெருமையாய் பேசிவிட்டுச் சென்றார்கள்…
“சரோஜா மருமக பொண்ணு ரொம்ப நல்லா பேசுறாளே..நா கூட வடநாட்டு புள்ளயாச்சே எப்படியிருக்குமோனு நினைச்சேன்..
நம்ம தமிழுக்கு ஏத்த ஜோடி தான்..”,என நெருங்கிய உறவினர் ஒருவர் கூறிச் செல்ல அவருக்கு நிம்மதியாய் இருந்தது..
காதல் திருமணம் என்பதே ஊர் பக்கத்தில் பெரிய விஷயம் அதிலும் மொழி பழக்கவழக்கம் என அனைத்துமே ஒத்துப்போகாத ஒரு பெண்ணை திருமணம் செய்வது என்பது ரொம்பவே பெரிய விஷயம்.
தமிழ் யார் பேச்சை பற்றியும் கவலைபடுபவன் இல்லை.. அதனால் தான் நிர்பயாவை திருமணம் செய்வதில் உறுதியாய் இருந்தான்..
ஆனால் சரோஜாவிற்கும் கேசவனுக்கும் அது அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை..
ஆயிரம் பேர் ஆயிரம் கேள்வி கேட்க அவரவருக்கு ஏற்ற பதில் கூறி அவர்களை பகைத்து கொள்ளாமல் இதுவரை கொண்டு வந்துள்ளனர.
ஆக அனைவரும் நிறைவாய் பேசியது அவர்களை பொறுத்த வரையில் மிகப் பெரிய விஷயம் தான்..
இரவு உணவு முடித்து அனைவரும் உறங்கச் செல்ல தமிழ் வெற்றியின் அறையிலும் ராஜி குழந்தையோடு நிர்பயா அறையிலும் படுத்துக் கொண்டாள்..
சிறிது நேரம் பேசிவிட்டு அசதியில் ராஜி உறங்கிவிட நிர்பயாவிற்கு உறக்கம் வர மறுத்தது..
புரண்டு புரண்டு படுத்தவள் குழந்தை எழுந்து விடுமோ என்றெண்ணி மெதுவாய் எழுந்து வெளியே வந்தாள்..
ஹாலை தாண்டிய கதவை லேசாய் திறந்து வைத்தவாறு வெளியே மொட்டை மாடிக்குச் செல்லும் படிகளில் அமர்ந்தாள்..
சற்று நேரத்தில் போன் பேசுவதற்காக வெளியே வந்தவன் கதவு திறந்திருப்பதை கண்டு வெளியே வர படிகளில் அமர்ந்து எங்கோ பார்த்துக் கொண்டிருப்பவளை பார்த்து,
“ஓய் தூங்கலயா??”
“இல்லங்க தூக்கம் வரல..”
“என்னாச்சு புது இடமே அதனாலயா?? “,என்றவாறு அவளிற்கு கீழே இரண்டு படி தள்ளி அமர்ந்தான்..
“அப்படினு இல்ல எப்பவுமே நைட் தூக்கத்தை கஷ்டப்பட்டு கொண்டு வந்து தான் தூங்குவேன்..
எதை எதையோ போட்டு குழப்பிப்பேன் ஆனா இன்னைக்கு தூங்காம இருக்குறதுக்கு முழு காரணமும் சந்தோஷம் மட்டும் தான்..
இந்த ஊர் இந்த குடும்பம் இந்த மக்கள் இப்படி எல்லாமே ரொம்பவே அழகா தெரியுது…”
“ம்ம் பரவால்லையே இவ்ளோ பேசுற சரி இதெல்லாம் மட்டும்தான் காரணமா நா இல்லையா??”
சட்டென அமைதியானவள் ஒன்றும் கூறாமல் இருக்க,
”என்ன பதிலே காணும்??”
“நா என் வாழ்க்கைல கிடைச்ச சந்தோஷத்த பத்தி தான பேசிட்டு இருக்கேன்..
அதுல நீங்க எப்படி வருவீங்க.. என் வாழ்க்கையே நீங்க தான “, என மென்குரலில் கூறியவளை தலைசாய்த்து பார்த்தவன் ஒன்றும் கூறாமல் சிரித்தான்..
“சரி உனக்கு தூக்கம் வர்றதுக்கு ஒரு வழியிருக்கு..
சாயந்திரம் என்கிட்ட நீ ஒரு கேள்வி கேட்டியே நாகூட மாடிக்கு… அதுக்கு பதில இப்போ சொல்லட்டுமா”, என ரகசியமாய் கேட்க,
அந்த இருளிலும் தன் முகம் சூடேறுவதை அறிந்து விடுவானோ என்றெண்ணியவள் எனக்கு தூக்கம் வருது உள்ளே போலாமா என வேறெங்கோ பார்த்தப்படி கேட்டாள்..
சத்தமாய் சிரித்தவன், ” நாதான் சொன்னேனே.. சரி வா, போய் ஒழுங்கா தூங்கு புரியுதா??குட் நைட்”, என அவளுக்கு வழிவிட்டு நின்றவனை கடந்து செல்லும் வரையிலுமே மூச்சு வாங்கியது பெண்ணவளுக்கு…
வந்து படுத்தவளுக்கு சந்தோஷத்தாலும் நிம்மதியாலும் தூக்கம் கண்களை தழுவியது..
காலை அனைவருமே எழுந்திருக்க நிர்பயாவை பற்றி ராஜியிடம் சரோஜா கேட்டார்..
“அவ நல்ல தூக்கத்துல இருந்தா அத்தை சரி எழுப்ப வேண்டாமேநு விட்டுடேன்..”, காபியை பருகிய படியே வந்தவன்,
“நைட் அவ ரொம்ப நேரம் தூங்கலம்மா தற்செயலா பாத்தா வெளில உக்காந்திருந்தா அப்பறம்தான் தூங்க போனா..”
“ஓஓ புது இடமில்லையா அதனால இருக்கும் சரி நீ போய் அவள எழுப்பிட்டு வா தமிழ்..
நாம குலதெய்வ கோவிலுக்கு போனும் உங்கப்பா ரெடி ஆய்ட்டாருனா மத்தவங்கள ஒரு வழி ஆக்கிடுவார்..
ராஜி நீ வாம்மா பூஜை தட்டு ரெடி பண்ணணும்”, என்று கூறிச் சென்றார்..
அவளுக்காக காபி கலந்து எடுத்துச் சென்றவன் கதவை திறக்க கட்டிலின் ஓரத்தில் சுவரோடு ஒன்றிக் கொண்டு குழந்தையாய் உறங்குபவளை எழுப்ப தோன்றாமல் நின்றான்..
பின் மெதுவாய் கட்டிலில் அமர்ந்து அவள் தோள்தட்டி எழுப்ப அடுத்த நொடி எழுந்து கொண்டாள்..
பதறி எழுந்தவளை பார்த்தவனுக்கு மனம் ஏதோ செய்ய அதை மறைத்து அவளிடம்,
“குட் மார்னிங் நிரு.. ரிலாக்ஸ் நா தான்..”
நீண்ட மூச்செடுத்தவள், ”சாரிங்க ரொம்ப லேட் ஆய்டுச்சா.. குட் மார்னிங்..”, என்றவாறு தலையை கோதி சரி செய்தாள்..
“லேட்லா ஆகல நாம இன்னைக்கு குலதெய்வம் கோவிலுக்கு போறோமாம் அதான் எழுப்பினேன்டா..
இந்தா காபி சாப்ட்டு குளிச்சு ரெடி ஆய்ட்டு வா ம்ம் என்றவாறு எழுந்தவன் டேக் கேர் நிரு”, என உச்சியில் இதழ்பதித்துச் சென்றான்..
மனம் அவளையே சுற்றி வந்தது..எந்தளவு மனம் ரணப்பட்டிருந்தால் எதிர்பாராத சிறு தொடுதலுக்கே இந்த அளவு பயந்து போவாள்..
தான் வந்திருக்க கூடாதோ என்று கூட தோன்றியது..
அவன் தாய் சொன்னது நினைவிற்கு வர,எல்லாத்தையும் ஏத்துக்க அவளுக்கு டைம் தேவைப்படும் தமிழ், தனக்கு தானே சமாதானம் கூறிக் கொண்டான்..
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
3 comments
Nice update
Nice ud ma
Super💕