70
மரகதத்தின் பேச்சை கேட்ட பின்பு மது சற்றே தெளிவாகி இருந்தாள்.மாமியார் எதுவும் கூறினால் கூடகஷ்டப்பட்டுஅமைதி காத்தாள்.முக்கியமாய் ஸ்ரீகாந்திடம் எதைப் பற்றியும் வாயே திறக்கவில்லை.
அப்படியிருந்த நாட்களின் வித்தியாசத்தை கண்கூட உணர்ந்திருந்தாள்.ஒவ்வொரு நாளும் ஒருவித புத்துணர்ச்சியோடு எந்தவித கடுகடுப்பும் இன்றி நிம்மதியாகவே கழிந்தது.இது இருவருக்குமான புரிதலை இன்னுமே அதிகரித்திருந்தது.
“என்ன மது டியர் இப்போ எல்லாம் எதோ வித்தியாசமா தெரியுதே?”
“அப்படியா எனக்கு ஒண்ணும் தெரிலயே!”,எ.றவள் நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.
“இல்ல சும்மா இருக்குற உன்னை நானே குழப்ப கூடாதுதான்.இருந்தாலோம் கேக்காம இருக்க முடில.அம்மாவோக்கும் உனக்கும் எதுவும் சண்டையா?”
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே ஏன் கேக்குறீங்க?”
“இல்ல ஒரு வாரமா இரண்டு பேரும் எந்த பிரச்சனையும் பண்ணாம என்ன நிம்மதியா வச்சுருக்கீங்களே அதான் இது எதாவது புயலுக்கு முன் வரும் அமைதியோனு டவுட்.”
“ம்ம் நல்ல டவுட்..நான்தான் இனி தேவையில்லாத விஷயத்தை எல்லாம் மைண்ட் பண்ணிக்க வேண்டாம்னு முடிவு எடுத்துருக்கேன் ஸ்ரீகா..அதான்.”
“புரில மது எதை பத்தி சொல்ற?”
“இல்லங்க நமக்கான நேரமே கம்மியா இருக்கு அதுலயும் உக்காந்து சண்டை போட்டுட்டுஇருக்க வேண்டாம்னு தான்.அத்தை எதுவும் சொன்னாலும் பெருசா எடுத்துக்கல.
அதோட ரிசல்ட் இந்த ஒரு வாரமா நானுமே கொஞ்சம் ரிலாக்ஸ்டா பீல் பண்றேன்.நீங்களுமே மத்த நாளை விட எனர்ஜிடிக்கா தான் தெரியுறீங்க.சோ அதை அப்படியே கன்ட்டினியூ பண்றேன்.என்ன சொல்றீங்க?”
“நிஜமாவே ரொம்ப பெரிய விஷயம்தான் மது டியர்.எது எப்படியோ என் தலையை உருட்டாத வரை எனக்கு நிம்மதி.”
“அதான எப்பவுமே சேஃபர் சைட்ல இருக்கணும் பெ.ப்பபெக்ட் புருஷன் தான் நீங்க..”
அதன் பின்னான நாட்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் பத்து மணி நேர உழைப்பு வார இறுதியில் ஔட்டிங் ஹோட்டல் வீக்கெண்ட் டிரிப் என பொழுது சுகமாய் கழிந்தது.
திருமணமாகி ஆறு மாதங்கள் கடந்திருந்த நிலையில் மதுவிற்கு ஒரு வாமாகவே ஒருவித களைப்பாய் இருந்தது.வேலைப்பளு அதிகமாய் இருப்பதுதான் காரணம் என அப்படியே விட்டுவிட்டாள்.
அன்று காலை எழும்போதே தலை வலிப்பதாய் உணர்ந்தவள் அப்படியே படுத்துக் கொண்டாள்.அவள் கிளம்பும் நேரத்தில் வழக்கமாய் விழிப்பவன் விழித்துப் பார்க்க அருகில் படுத்திருந்தவளை கண்டு பதறிப்போனான்.
“ஹே மது என்னாச்சு ஆபீஸ் போகல?”
“இல்லங்க என்னவோ போல இருக்கு.அதான் அப்படியே படுத்துட்டேன்.”
“ஓ.சரி காபி தரேன் டா சாப்ட்டு ஹாஸ்பிட்டல் வேணா போய்ட்டு வந்துரலாம்.”
“இல்லங்க கொஞ்ச நேரம் தூங்கினாலே சரியாய்டும்னு நினைக்குறேன்”,என்றவள் அப்படியே விழி மூடிக் கொண்டாள்.
சற்று நேரம் கழித்து மரகதம் அவளை அழைத்திருக்க ஸ்ரீகாந்த் எடுத்து பேசினான்.
“என்ன மாப்ள நீங்க பேசுறீங்க?மது ஆபீஸ் போலயா?”
“இல்ல அத்த அவளுக்கு உடம்பு முடிலனு லீவ் போட்டுட்டா என்னனு தெரில நாலஞ்சு நாளாவே டயர்டாதான் இருக்கா.”
“ஓ.நீங்க அவகிட்ட போனை கொடுங்களேன் ஒரு நிமிஷம்.”
மெதுவாய் அவளை எழுப்பியவன் போனை அவளிடம் கொடுக்க,”சொல்லுமா..”
“மதும்மா நாள் தள்ளிப் போயிருக்கா?”
“ம்மா நானே உடம்பு முடிலனு இருக்கேன் என்ன கேக்குற நீ?”
“மது தூக்கத்துல உளறாம கொஞ்சம் தெளிவாய்ட்டு பதில் சொல்லு..”
அதன் பிறகே அவர் கேள்வியின் அர்த்தம் புரிந்தவளுக்கு ஒரு நொடி அதிர்ந்துதான் போனாள்.
“ஆமா மா..ஆனா..”
“மது கண்ணா எல்லாம் நல்ல செய்தியா தான் இருக்கும் மெடிக்கல்ல கிட் வாங்கி செக் பண்ணிட்டு சொல்லு நாம டாக்டரை பாத்துட்டு வந்துரலாம்.செக் பண்ணிட்டு முதல்ல மாமியாருக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லு.வச்சுட்றேன்.”
போனை வைத்தவள் ஸ்ரீகாந்தை பார்த்து திருதிருவென முழிக்க அவனோ ஒன்றும் புரியாதவனாய்,”என்ன டி ஏன் இப்படி முழிக்குற?”
“ஸ்ரீகா நா கன்சிவா இருக்கேன்னு நினைக்குறேன்..”
“ஹே மது..”,என்றவன் அவள் கன்னம் தாங்கிக் கொண்டான்.
“இதுக்குத் தான் கொஞ்சம் வெயிட் பண்ணலாம்னு சொன்னேன் ஸ்ரீகா..”
“மது..இதெல்லாம் நாம முடிவு பண்ற விஷயம் இல்ல.கடவுள் கொடுக்குற கிப்ட் டா.எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் இல்லாம தவிக்குறாங்க.இதுக்கு மேல எதையும் நெகட்டிவா யோசிக்காத ப்ளீஸ்.”
“அதென்னவோ உண்மைதான் ஸ்ரீகா நமக்கே நமக்கான குட்டி பாப்பா..கொஞ்சம் எக்ஸ்சைட்மெண்டாவும் இருக்கு.”
“லவ் யூ டீ பொண்டாட்டி.அம்மாகிட்ட போன் பண்ணி சொல்லலாம்.”
“இருங்க பர்ஸ்ட் மெடிக்கல்ல ப்ரெக்னென்ஸி கிட் வாங்கிட்டு வாங்க கன்ஃபார்ம் பண்ணிட்டே சொல்லுவோம்.”
“அதுவும் கரெக்ட் தான் டா நீ படுத்துக்கோ நா போய் வாங்கிட்டு வரேன்.”,என்றவன் அருகில் இருக்கும் மெடிக்கல் ஷாப்பிற்கு சென்று வாங்கி வந்து வீட்டிலேயே கருதரிப்பை உறுதி செய்தார்கள்.
அந்த ஒருநொடி தயக்கத்தை தாண்டி மதுவிற்குமே மனம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.ஸ்ரீகாந்த்தின் தாயிடம் விஷயத்தை கூற அவருக்கோ மகிழ்ச்சி தாளவில்லை.உடனே கிளம்பி வருவதாய் கூறினார்.
மாலையில் மரகதமும் வைரவனும் மகளைப் பார்த்துவிட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கர்பத்தை உறுதி செய்து தேவையான மருந்துகளை வாங்கி வந்தனர்.
“மது கொஞ்ச நாளைக்கு பஸ் ட்ராவல் எல்லாம் வேணாம்.லீவு போடு.இல்ல வொர்க் ப்ரம் ஹோம் எடு முதல் மூணு மாசம் ரொம்பவே கேர்புல்லா இருக்கணும்.”
“ம்ம் சரிம்மா நா பி எம்கிட்ட பேசுறேன்..”
அதன்பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு மதுவிற்கும் ஸ்ரீகாந்திற்கும் இவு உணைவை தயார் செய்து கொடுத்துவிட்டுச் சென்றனர்.
“மது டியர் அம் சோ சோ ஹேப்பி..தேங்க் யூ பார் திஸ் வொண்டர்புல் கிப்ட்..”
“அடடாஅன்பை பொழியுறீங்களே ஷப்பா முடில..இனி பத்து மாசத்துக்கு எனக்கு ஜாலி தான்..”
“அடிப்பாவி இத்தனை நாள் மட்டும் நா என்ன உன்னை கொடுமை படுத்தினேனா??”
“அப்படினு சொல்ல முடியாது இருந்தாலும் சொல்லலாம்..”
“சொல்லுவ டீ சொல்லுவ..”,என்றவன் அவளை அடிப்பதாய் விளையாட்டாய் கை ஓங்கிச் சிரித்தான்.
அடுத்த இரு தினங்களில் மார்னிங் சிக்னஸ் அதிகமாகவே இருந்தது மதுவிற்கு.வெறும் வயிற்றில் வாந்தி எடுப்பவளை பார்த்தவனுக்கு பயம் வந்து அப்பிக் கொண்டது.முதல் வேலையாய் தன் அன்னையை அழைத்தவன்,
“அம்மா குழந்தை குழந்தைனு கேட்ட இல்ல இப்போ இன்னும் இங்க வராம என்ன பண்ற..அவ அவ்ளோ கஷ்டப்படுறா..என்னால தனியா பாத்துக்க முடிலமா..”
“டேய் நீ தான வெள்ளிக் கிழமை கிளம்பி வர சொன்ன..சரி நா இன்னைக்கே பஸ்ல டிக்கெட் போடுறேன்.”
அன்று இரவே கிளம்பி மறுநாள் சென்னை வந்தவரை ஸ்ரீகாந்த் சென்று ஸ்டேஷனி. இருந்து அழைத்து வந்தான். வந்தவர் மருமகளுக்கு என அத்தனை அத்தனை வாங்கி வந்திருந்தார்.
“நம்ம ஊரு கீரை அத்தனை நல்லது இங்க எல்லாம் ப்ரெஷ்ஷா கிடைக்குமோ என்னவோ அதான் வாங்கிட்டே வந்துட்டேன்.அப்பறம் இது மாதுளை சிரப் வாமிட்டிங் அதிகமா இருக்குனு சொன்னானேனு வாங்கிட்டு வந்தேன்.
எப்போ எல்லாம் வயிறு பிரட்டுற மதிரி இருக்கோ இதை ஒரு ஸ்பூன் சாப்ட்டா கொஞ்சம் கன்ட்ரோலா இருக்கும்.பழமெல்லாம் வாங்கிருக்கேன் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடுக்கோ..வேற என்ன சாப்பிடணும் போல இருக்கோ சொல்லு வாய்க்கு நல்லதா சமைச்சு தரேன்.சரியா நா போய் குளிச்சுட்டு வந்து டின் பண்றேன் நீ படுத்துக்கோ..”
என்றவர் எழுந்து செல்ல மதுவோ வாயை பிளந்து அமர்ந்திருந்தாள்.நமட்டுச் சிரிப்பு சீரித்தவாறே அவளருகில் வந்த ஸ்ரீகாந்த்,
“பாத்து டீ வாய்க்குள்ள ஈ போய்ட போகுது..”
“ஸ்ரீகா நம்ம அத்தையா இது..ஒரே நாள்ல இப்படி மாறிட்டாங்க..என் கண்ணை என்னாலேயே நம்ப முடிலயே..”
“இத்தனை கொழுப்பு ஆகாது டீ உனக்கு நல்லா பாத்துகிட்டாலும் கிண்டல் பண்ணா என்ன பண்றது?”
“சரி சரி நோ டென்ஷன் புருஷா..சும்மா கலாய்ச்சேன்..என்ன இருந்தாலும் ஒரு குழந்தைங்கிறது வாழ்க்கையே மாத்திடும்ங்கிறது எவ்ளோ பெரிய உண்மை இல்ல..”
“உண்மைதான் மது.ஆம்மாவே சின்ன குழந்தையாட்டம் இப்டியெல்லாம் பண்றதை பாத்தப்போ எனக்கும் அதான் தோணிச்சு.சரி நீ ரெஸ்ட் எடு நா அவங்களுக்கு எதுவும் தேவைனா எடுத்து கொடுத்துட்டு வரேன்.”
மதுவும் ஆபீஸில் பேசி பத்து நாட்கள் விடுமுறையும் அதன் பின் பத்து நாட்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் வாங்கியிருக்க சற்று நேரம் கண்ணயர்ந்தாள்.அதன் பிறகு அன்றைய நாள் அமைதியாய் கழிய மறுநாள் ஸ்ரீகாந்த் வேலைக்குச் சென்ற பிறகு அறையிலேயே இருப்பது ஒரு மாதிரி இருப்பதாய் தோன்ற ஹாலில் டீவி பார்த்துக் கொண்டிருந்த மாமியாரோடு வந்து அமர்ந்தாள்.
“என்ன மது தூங்கலயா?”
“இல்லத்த தூக்கம் வரல.ஒரு மாதிரி கடுப்பா இருக்கு அதான்.”
“ம்ம் இந்த நேரத்துல இது சகஜம்தான்.நல்ல பாட்டெல்லாம் கேளு.சுந்தரகாண்டம் வாங்கி படிக்கலாம்.குழந்தைக்கு ரொம்ப நல்லது.நம்ம வீட்டு குட்டிக் கண்ணனும் வயித்துக்குள்ள இருக்கும்போதே எல்லாம் தெரிஞ்சுகட்டும்.”,
“என்னத்த கண்ணன்னு முடிவே பண்ணிட்டீங்களா?பொண்ணா இருந்தா என்ன பண்ணுவீங்க?”
“மது எங்க குடும்பத்துல எல்லாருக்குமே முதல் குழந்தை பையன் தான்.அதுல எந்த மாற்றமும் இல்ல.அதனால உனக்கும் பையன் தான்.”
“என்ன இவ்ளோ சீரியஸா எடுத்துக்குறீங்க அத்தை.ஒரு பேச்சுக்கு சொன்னேன்.”
“பேச்சுக்கு கூட எதையாவது உளற கூடாது.என்ன வசனம் பேசினாலும் பையன் குழந்தைனா உசத்திதான்.அதுவும் இந்தகாலத்துல எல்லாம் ஒரு புள்ளையோட நிறுத்திக்குறாங்க..அப்படியிருக்க பெண் குழந்தை பிறந்தா என் புள்ள வாழ்க்கை புல்லா அதுக்கு சீர் செஞ்சுட்டே இருக்க வேண்டியதுதான்.”என்று புலம்பியவாறே தனதறைக்குச் சென்றுவிட மதுவிற்கோ பகீரென்று இருந்தது.
“இதென்ன இப்படி பேசுறாங்க.இந்த காலத்துல கூட இப்படி நினைக்குறவங்க இருக்காங்களா !!எந்த குழந்தையா இருந்தாலும் வலி பொறுத்து ரத்தம் சீந்தி தான பெத்துக்க போறோம்.இவங்க பேசுறத பார்த்தா ஒரு வேளை பெண் குழந்தை பிறந்தா என்ன பண்ணுவாங்களோ தெரிலயே..”,என தனக்குள் எதை எதையோ சிந்திக்க ஆரம்பித்திருந்தாள்.
காலை தான் கிளம்பும் போது இருந்த உற்சாகம் இப்போது மனைவியிடம் இல்லாததை கண்டு ஸ்ரீகாந்த் என்னவென கேட்க ஒன்றுமில்லையென கூறிவிட்டாள்.
கிட்டதட்ட பத்து தினங்கள் கடந்திருக்க ஸ்ரீகாந்தின் தாயால் அதற்கு மேல் அங்கு இருக்கை முடியவில்லை.
“என்னதான் சொல்லு நம்ம ஊரு நம்மஊரு தான்.எப்படிதான் நாள் மொத்தமும் வீட்டுக்குள்ளேயே இருக்கீங்களோ.அப்பாவும் தங்கச்சியும் வேற எப்போ வருவ எப்போ வருவனு கேட்டுட்டே இருக்காங்க.இப்போதான் மதுவுக்கு வாட்மிடிங் பரவால்லையே நா ஊருக்கு போய்ட்டு ஒரு மாசம் கழிச்சு வரேன் டா.”
இதையே புராணமாய் பாட ஆரம்பித்திருந்தார்.ஒரு அளவுக்கு மேல் பொறுக்க மாட்டாமல் ஸ்ரீகாந்தே அவர்களை கிளம்புமாறு கூறிவிட்டான்.தன்னால் முடிந்ததை காலையில் அவளுக்கு செய்து கொடுத்தான்.
மரகதத்தை அழைக்கலாம் என்றால் வைரவன் ஏற்கனவே சர்க்கரை நோயாளி வேளாவேலைக்கு அவர்தான் பார்த்து அத்தனையும் செய்ய வேண்டும்.மதுவை அச்கு விடலாம் என்றால் வளைகாப்புக்கு முன்னர் அப்படியெல்லாம் அனுப்கூடாது என ஒரு ஆர்பாட்டம்.
வெறுத்துப் போனவளாய் மது தானே சமாளித்துக் கொள்வதாய் கூறிவிட்டாள்.நான்காவது மாதத்தில் இருந்து மொத்தமாகவே நார்மல் ஆகியிருந்தாள்.விடுப்பும் முடிந்து வேலைக்குச் சென்று வந்தாள்.
அதன் பின்னான நாட்கள் தாய்மைக்கே உரிய பூரிப்போடு கடந்தாலும் அதையும் தாண்டிய வேலைப் பளு அவளை ஒரு வழியாக்கியது.மதிம் ஒரு பத்து நிமிடம் ஆபீஸிலேயே இருந்த நேப் அறையில் சென்று ஓய்வெடுத்து வருவாள்.
8 மணி நேர வேலை மூளையையே ஒரு வழியாக்கியது.காலையும் மாலையும் பேரூந்தில் செல்லும் நேரம் அவளுக்கும் குழந்தைக்குமானது.காதில் இயர்போனைப் போட்டு கந்தசஷ்டி கவசம் கேட்டவாறு குழந்தையோடு பேசி வருவாள்.
முதல் ஸ்கேன் முதல் அசைவு என அத்தனை அத்தனை சுகங்களும் பேரூந்திலும் அலுவலகத்திலுமே..வார இறுதிகளில் மட்டுமே கணவன் மனைவிக்கான நேரமாய் இருக்க அவளை அழை.துக் கொண்டு எங்காவதுது சென்று வருவான்.அந்த இரு தினங்களும் சமைக்க வேண்டாமென ஹோட்டல் சாப்பாடு சில நேரங்களில் பர்கர் பீட்ஸா இப்படியாய் பொழுது கழிந்தது.
எட்டாம் மாத இறுதியில் வளைகாப்பிற்கு ஏற்பாடு செய்து மதுவை தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள் சென்று அவளை பார்த்து வருவான் ஸ்ரீகாந்த்.
தாய் வீட்டிற்குச் சென்று வேலையும் விடுப்பு எடுத்ததே மது சற்று தேறியிருந்தாள் நான்கு நாட்களில் அவளை பார்க்க வந்த ஸ்ரீகாந்தே ஆச்சரியப்பட்டான்.
“ஹே மது சடனா வெயிட் ஏறினமாதிரி இருக்கியே வயிறுகூட பெருசா தெரியுது..”
“ஆமா ஸ்ரீகா ஆபீஸ் போகாம கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கு.அது மட்டுமில்லாம பொண்ணுனா வயிறு பெருசா இருக்கும்னு பாக்குவங்க எல்லாம் சொல்றாங்க.”
!அதெல்லாம் கூடவா இருக்கு?”
“ம்ம் அதெல்லாம் நிறைய சொல்றாங்க பெரிய வயிறு இருந்தா பொண்ணாம்..குட்டியா குடுவை மாதிரி இருந்தா பையனாம்.இப்படி ஏதேதோ சொல்றாங்க..ஹே ஒரு நிமிஷம் இரு..”
“குட்டிம்மா அப்பாவ பார்க்குதுக்கு எழுந்துட்டீங்களா?அப்பாக்கு ஹாய் சொல்லலாமா?”,என்று பேசியவாறே அவன் கையை எடுத்து வயிற்றின் மீது வைக்க உள்ளிருந்து அந்த பிஞ்சு கை ஸ்ரீகாந்தின் கையை உரைசிச் சென்றது.
ஒரு நொடி பதறியவனாய் சட்டென கையை எடுத்தவன் அவளை அப்படியே பார்த்திருக்க அவன் கேள்வி உணர்ந்தவளாய் சிரித்தவாறே,
“நம்மை குட்டிக்கு நீ ஆபீஸ்ல இருந்து வர்ற டைம் நல்லா தெரிஞ்சுருக்கு ஸ்ரீகா டெய்லி இந்த டைம் ஆனா உள்ள ஒரே ஆட்டம்தான்.அதுகுள்ளயே தூங்கி எழுந்துறாங்க.ஒரு ஹாஃவ் அன் அவைர்க்கு ஆட்டம் போட்றாங்க நல்ல..சரியான அப்பா புள்ளையா வருமோ என்ன மாதிரியே?!”
“மது கையெல்லாம் நடுங்குது எனக்கு இப்போவே இத்தனை தெரியுமா குழந்தைக்கு.புல்லரிக்குது டீ..அப்படியே நா பீல் பண்ணேன் நம்ம குழந்தையை..”
“ம்ம் மாசம் ஆயிடுச்சுல அதின் நல்லாவே மூவ்மெண்ட் தெரியுது இங்க பாரு..”,என்றவள் வயிற்றை லேசாய் வருட அவள் நைட்டியை தாண்டியுமே அதன் அசைவு அப்பட்டமாய் தெரிந்தது.
அப்படி இப்படியாய் பிரசவ தினமும் வர நீர்குடம் உடைந்துவிட்டதென மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அத்தனை மாதமுமே நார்மல் டெலிவரிக்கு தான் வாய்ப்புகள் அதிகம் என கூறியிருந்த நிலையில் இப்போது கடைசி நிமிடத்தில் வந்து சிசேரியன் செய்தே அக வேண்டிய கட்டாயம் என கூறிவீட ஸ்ரீகாந்தோ பயந்துவிட்டான்.
இருந்தும் வேறு வழியில்லை என்று உணர்ந்தவனாய் கையெழுத்திட்டு கடவுளை வேண்டி நின்றான்.லேசாய் குழந்தைக்கு கொடி சுற்றியிருந்ததால் சற்று தாமதமாகவே ஆப்ரேஷன் முடிந்து அவர்களின் தேவதையை இவ்வுலகிற்கு கொண்டு வந்தனர்.
மயக்கம் தெளிந்தவள் குழந்தையை தேட அழகிய குட்டி தேவதையாய் தன்னருகில் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தாள்.
“ரொம்ப பயந்துட்டேன் டீ லேட் ஆக ஆக உயிரே போய்டுச்சு..”
“ம்ம் கன்சிவ் ஆன உடனே ஒரு செகண்ட்னாலும் நெகட்டிவா யோசிச்சுட்டனே அதான் இத்தனை கஷ்டமோனு தோணுது ஸ்ரீகா..”
“லூசு மாதிரி எதாவது பேசாத மது..உடம்பை கெடுத்துக்காத..நல்லா ரெஸ்ட் எடுக்கணும் இனிதான்..”
“அத்தை என்ன சொன்னாங்க??!”
“ரொம்ப சந்தோஷம் அவங்களுக்கும் நாளைக்கு எல்லாரும் வர்றாங்க பாப்பாவை பாக்குறதுக்கு..”
“ஓ..”
“சரி ரொம்ப பேசாம தூங்கு டா கொஞ்சம்..”,என்வன் மனைவியின் அருகிலேயே அமர்ந்து கொண்டான்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
1 comment
Super💕