72
இருவரும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்து இரு தினங்கள் ஆகியிருந்தது. ஸ்ரீகாந்திற்கு மதிய நேர வேலை மதியம் 12 மணிக்கு கிளம்பி இரவு 12 மணிக்கு வீடு வருவான்.மதுவிற்கோ காலை 7 மணிக்கு கிளம்பி இரவு 8 மணிக்கு வருவாள்.
திருமணத்திற்கு முன்பு வரை ஆறு மணிக்கு எழுந்திருப்பவள் குளித்துத் தயாராகி மரகதம் வைத்திருக்கும் பையை என்ன ஏதெனகூடத் தெரியாமல் அப்படியே எடுத்துச் சென்றுவிடுவாள்.
ஆனால் இப்போதோ ஐந்து மணிக்கு எழுந்து இருவருக்குமாய் காலை டிபன் மதிய உணவு என அனைத்தையும் செய்து தயாராவதற்குள் ஒரு வழி ஆகியிருந்தாள்.
இதில் இன்னும் கொடுமை இருவருக்குமான நேரம் என்ற ஒன்றே இல்லாமல் போனதுதான்.காலை அவள் கிளம்பும் நேரம் ஸ்ரீகாந்த் உறங்கிக் கொண்டிருப்பான்.இரவு இவள் விழித்திருந்தாலும் அவன் வந்த பத்து நிமிடத்தில் எல்லாம் தூங்கி விழுவாள்.
அந்த வார இறுதியில் ஸ்ரீகாந்திடம் புலம்பித் தீர்த்தாள் மது.”ஸ்ரீகா சத்தியமா கடுப்பா இருக்கு என்ன லைஃப் இது..ரொம்பவே மெஷின் லைஃபா போகுது..ஐ மிஸ்ட் யூ அ லாட்..”
“ஆமா டா மது..ஆபீஸ்ல வேற முக்கியமான டெலிவரி இஷ்யூ போய்ட்டு இருக்கு உயிரை எடுக்குறாங்க..நாம ஒழுங்கா பேசியே ஒரு வாரம் ஆச்சு இல்ல..”
“ம்ம் ஆமா நானெல்லாம் இவ்ளோ வேலை பார்ப்பேன்னே இப்போ தான் தெரியுது..எங்கம்மா எல்லாம் தெய்வம்..சத்தியமா என்ன குழம்பு வைக்கணும்னு யோசிச்சே மூளை குழம்புது..இதுல உங்கம்மா வேற டெய்லி கால் பண்ணி என் புள்ளைக்கு இதை பண்ணி குடு அதை பண்ணி குடுனு..நீ கல்யாணத்துக்கு முன்னாடி தனியா தான சமைச்சு சாப்ட எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம் தான?”
“நீ வேற பாதி நாள் சமைக்க மாட்டேன்..ஹோட்டல் சாப்பாடு தான்..அம்மாகிட்ட சொன்னா அதுக்கும் கத்துவாங்களேனு சொல்ல மாட்டேன்..அதனால நா எக்ஸ்பர்ட் எல்லாம் இல்லை வெளில சொல்றாத..”
“அடப்பாவிங்களா ஏமாத்தி கல்யாணம் பண்ணிடாங்களா??”
“அடியேய் கத்தி சொல்லாத யாராவது கேட்டா தப்பா நினைச்சுற போறாங்க..சரி என் பொண்டாட்டி இவ்ளோ பாவமா பேசுறதுனால நாளைக்கு அவளை அவுட்டிங் கூட்டிட்டு போலாம்னு இருக்கேன்..உன் சமையல்ல இருந்து உனக்கு விடுதலை..”
“தேங்க் யூ டா புருஷா..”
“இந்த தேங்க்ஸ் எல்லாம் பத்தாது வேற ஒண்ணு இருக்கு..”,என்றவன் அவளை உள்ளே இழுத்துச் சென்றான்.
மறுநாள் விடுமுறை அது மட்டுமில்லாமல் வெளியே செல்லலாம் என கூறியிருந்ததால் ஒருவித உற்சாகத்தோடே எழுந்தாள் மது.தனக்கான காபியை குடித்துவிட்டு கணவனிற்கு எடுத்துச் செல்ல அதற்குள் எழுந்திருந்தவன் ஆபிஸ் காலில் இருந்தான்.
முதலில் சாதாரணமாய் அதை எடுத்துக் கொண்டவள் தன் வேலைகளை கவனிக்கச் சென்றாள்.ஒரு மணி நேரம் கழித்து வந்து பார்க்க அப்போதும் போனை கீழே வைத்தானில்லை..பத்தாததற்கு ஆபீஸ் லேப்டாபை வேறு எடுத்து வைத்திருந்தான்.
பத்து மணிக்கு கிளம்பலாம் என அவன் கூறியிருக்க ஒன்பதரை மணி வரையுமே பல்கூட தேய்க்காமல் அப்படியே அமர்ந்திருந்தான்.உச்சகட்ட கடுப்பானவள் சமையலறைக்குச் சென்று வேலையை கவனிக்கத் தொடங்கியிருந்தாள்.
அடுத்த ஒரு மணி நேரம் கழித்து குளித்து தயாராகி வந்தவன்,
“மது டியர் போலாமா??”
“எங்க??”
“என்ன கேள்வி இது படத்துக்கு தான்..”
“எத்தனை மணி ஷோ மணி இப்போ என்ன ஆகுது?ஏற்கனவே பாதி படம் போய்ருக்கும் இங்க இருந்து சிட்டிகுள்ள போறதுகுள்ள மீதி படமும் முடிஞ்சுரும்..என்னதுக்கு போகணும்??”
“மது கோவபடாத எதிர்பாராத டிலே இது..சேம் பீல்ட் ல இருக்க உனக்கு தெரியாதா.”
“நாதான் ஒண்ணுமே சொல்லலயே எங்கேயும் போக வேணாம்னுதான் சொல்றேன்..”
“சரி படத்துக்கு வேணாம் அட்லீஸ்ட் லஞ்ச் க்கு வெளில போலாம் வா..”,எனும்போதே அவன் போனில் அழைப்பு வர ஆத்திரமாய் அவனை முறைத்தவள்,
“அப்படியே ஆபீஸோடேயே போய்ருங்க..சாப்பாடும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம்..”என்றவள் மற்றொரு அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள்.
காலை அவன் மீதிருந்த கோபத்தில் சாப்பிடாமல் இருந்தவளுக்கு பசி வயிற்றை கிள்ள மதிய நேரமாய் கிட்சனிற்குச் சென்றவள் என்ன செய்வதென பாத்திரத்தை உருட்ட அவளுக்காக புலாவ் ரெய்தா செய்து வைத்திருந்தான் ஸ்ரீகாந்த்.
அடுத்த நொடி கோபமெல்லாம் வடிந்து போக தட்டோடு தங்களறைக்குச் சென்றவள் வாசலில் நின்றவாறே,
“யாரோ சமைக்கவே தெரியாதுனு சொன்னாங்க?”
“ம்ம் சமைச்சத சாப்ட்டு பாத்துட்டு அப்பறம் சொல்லு நா சொன்னது உண்மையா பொய்யானு..அம்மாடி எவ்ளோ கோவம் வருது உனக்கு..”
“சாரி ஸ்ரீகா எனக்கே கொஞ்சம் ஆச்சரியம் தான் இவ்ளோ கோவமெல்லாம் நா படமாட்டேன்.ஏன்னு தெரில இன்னைக்கு ப்ளான் சொதப்பினதுல மூட்அவுட்.”
“வீக்கெண்ட் அதுவுமா மூட் அவுட்டா நெவர்..நீ சாப்ட்டு முடி அப்பறம் எப்படி மூட் இன் ஆக்குறேன் பாரு..”
“அடச்சை எப்போ பார்த்தாலும் இதேபேச்சு தான்..அடி வாங்காம ஓடிருங்க..”
“சரி சரி என்ன ஆனாலும் நைட் டின்னர் வெளில தான் அப்படியே ஒரு ட்ரைவ் போய்ட்டு வரலாம் மது டியர்.”
“போலாம் போலாம்..சார் ஃப்ரீயா இருந்தா..”,என்றவள் இருந்த பசியில் தட்டிலிருந்ததை ஒரு கைப் பார்த்தாள்.
சாய்ந்திரத்திற்கு மேல் அவன் கூறியவாறே அவளை வெளியே அழைத்துச் சென்று வந்தான்.இப்படியாய் நாட்கள் நகர அன்று ஊதிய நாள்.திருமணத்திற்கு பிறகு வரும் முதல் சம்பளம்.அன்று இரவு அவனுக்காக விழித்திருந்தவள் சம்பளத்தைப் பற்றி கூறிவிட்டு அதில் ஒரு பகுதியை தன் பெற்றோருக்கு அனுப்புவதாய் கூறினாள்.
“ஓ..ஆனா நமக்கே கமிட்மெண்ட் இருக்கே மது..ஹோம் லோன் வேற போய்ட்டு இருக்குல..”
“ம்ம் கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தே லோன் போகுது தான ஸ்ரீகா..இப்போ என்னோட சம்பளம்ங்கிறது அடடட் அமௌண்ட் தான..அப்பறம் என்ன பிரச்சனை.”
“பிரச்சனைனு சொல்ல வரல.. மாமா இன்னும் சர்வீஸ்ல தான் இருக்காரு சோ இன்னும் கொஞ்சம் கம்மியான அமௌண்ட் குடுனு சொல்றேன்.எப்படியிருந்தாலும் நாம செய்யாம அவங்களுக்கு யாரு செய்ய போறா சொல்லு..”
“என்னங்க..என் அம்மா அப்பாகிட்டயே நா கணக்கு பார்க்க முடியுமா..இப்போ வர அவங்க ஒரு ரூபா கூட கேக்கல ஆனா செய்ய வேண்டியது என் கடமை இல்லையா..நானே கம்மியா தான் சொல்றேன் அதுலயே இப்படி கணக்கு பாக்குறீங்களே?”
“இதுக்கு மேல இதுல ஆர்க்யூமெண்ட் வேண்டாம் மது நா சொல்றத சொல்லிட்டேன் அப்பறம் உன் இஷ்டம்..என்ன இருந்தாலும் அது உன் பணம் நா தலையிட விரும்பல..”
“என்னங்க இது உன் பணம் என் பணம்னு என்ன பேச்சு இதெல்லாம்..இப்போ என்ன நீங்க சொல்ற அமௌண்ட் குடுக்கணும் அவ்ளோ தான குடுத்துறேன்..இந்த பேச்சை இதோட விடுங்க..”
“மது நமக்காக யோசிச்சு தான் டா சொல்றேன் தப்பா எடுத்துக்காத..அப்பறம் முக்கியமா இதை பத்தி எங்கம்மா கிட்ட எதுவும் சொல்லிறாத..கண்டிப்பா எதாவது சொல்லுவாங்க..”
“இது வேறயா..நல்ல கூட்டத்துல வந்து சிக்கிருக்கேன்..நானா எதுவும் சொல்ல மாட்டேன்.நீங்க உளறாம இருந்தா சரி..”
மறுநாள் காலையில் நெட் பேங்கிங் மூலம் பணத்தை ட்ரான்ஸ்வர் செய்திருந்தாள்.வைரவனுக்கு அமௌண்ட் க்ரெடிட் மெசேஜ் வந்ததும் அவர் மரகதத்திடம் விஷயத்தை கூற மரகதம் மதுவை அழைத்தார்.
“சொல்லு மா எப்படியிருக்க இந்த வாரமும் செம வேலை அதான் உன்னோட ஒழுங்காவே பேச முடில..”
“உன் காசுல சாப்டுற நிலைமைக்கு நாங்க இன்னும் வரல மது..”
“ம்மா என்ன லூசு மாதிரி பேசுற என்னாச்சு??”
“யாரை கேட்டு நீ அப்பாவுக்கு பணம் அனுப்பின..”
“இதென்ன கேள்வி கல்யாணத்துக்கு முன்னாடி நா குடுத்துட்டு இருந்ததுதான..”
“அது அப்போ இப்போ நீ அந்த வீட்டு பொண்ணு மாமியாருக்கு அனுப்பாம எனக்கு ஏன் அனுப்பிருக்க?”
“ம்மா என்ன பேசுற நீ..அவங்களுக்கு தேவையானதை ஸ்ரீகா பாத்து பண்ணிட்டுதான் இருக்காரு நானும் ஒண்ணும் சொல்றது இல்ல.இது என் சம்பாத்தியம் நா கஷ்டப்பட்டு உழைக்குறது..அதை யாருக்கு கொடுக்கணும்னு எனக்கு தெரியும்..”
“மது..சின்ன புள்ளை மாதிரி பேசாத..நீ அனுப்புற காசை வாங்கி போட்டுக்குறதெல்லாம் கேவலமான விஷயம்..மாப்பிள்ளை என்ன நினைப்பாரு அதைவிட முக்கியமா சம்மந்தி வீட்ல என்ன நினைப்பாங்க..எங்களால யார் முன்னாடியும் கூனிக் குறுகி நிக்க முடியாது..”
“ம்மா உனக்கு பைத்தியம் தான் பிடிச்சுருக்கு..எந்த காலத்துல இருக்க நீ..கஷ்டபட்டு படிக்க வச்சு வேலைக்கு அனுப்பி பாதிலேயே கல்யாணம் பண்ணி அனுப்பிட்டு அந்த குடும்பத்துக்கு மட்டுமே உழைச்சு கொட்டுனு சொல்லுவியா..
இங்க பாரு நானும் ஸ்ரீகாவும் பேசி முடிவெடுத்துதான் இதை பண்றோம்..நீ என்ன சொன்னாலும் மாசா மாசம் இந்த பணம் உன் அக்கவுண்ட்க்கு வரும் அதை என்ன பண்ணுவியோ உன் இஷ்டம் இன்னொரு தடவை இப்படி எதாவது பேசிட்டு இருந்த நா பேசவே மாட்டேன் சொல்லிட்டேன்..போனை வை மா முதல்ல..”
மதுவிற்கு ஐயோவென்று இருந்தது.பணத்தை கொடுப்பதற்குள் அவனிடம் ஒரு போராட்டம்..கொடுத்த பின்பு இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.பெண்ணாய் பிறந்து திருமணம் செய்யும் ஒரே குற்றத்திற்காக இத்தனையை தாங்க வேண்டுமா?ஒரே மாதத்தில் என் பெற்றோருக்கே நான் அந்நியமாகிப் போவேனா!!எத்தனை விசித்தரம் பெண்களின் வாழ்வு என நினைத்து விரக்தி புன்னகை மட்டுமே புரிய முடிந்தது அவளால்.
இப்படி ஒவ்வொன்றும் புது புது பாடங்களை பயிற்றுவித்துக் கொண்டிருந்தது மதுவிற்கு. திருமணமாகி இரண்டு மாதங்கள் முடிந்திருந்த நிலையில் எதோ கோவிலுக்குச் சென்று வருமாறு ஸ்ரீகாந்தின் அம்மா அவளிடம் கூற இன்று போக முடியாத சூழல் ஆதலால் நான்கு நாட்கள் கழித்துச் செல்வதாகக் கூறினாள்.
“ஏன் மது இந்த தடவையும் நல்ல சேதி எதுவும் இல்லையா?”
“என்ன அத்தை கல்யாணம் ஆகி இரண்டு மாசம் தான ஆகுது..அதுகுள்ள இப்படி கேக்குறீங்க?”
“ம்ம் என் அக்கா மருமக எல்லாம் கல்யாணம் முடிஞ்ச மறுமாசமே பிள்ளை உண்டாய்ட்டா தெரியுமா?”
“அத்தை அவங்க ஊர்ல இருக்காங்க..நாங்க இங்க ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்குறதே சனி ஞாயிறுல தான்..அப்படியிருக்க அவங்களோட போய் கம்பேர் பண்ணிட்டு இருக்கீங்களே?”
“அப்படியில்ல மது நீங்க எல்லாம் நேரம் காலம் பாக்காம வேலை வேலைனு ஓடுறவங்க அதனால தான் கேட்டேன்.எதுக்கும் டாக்டர்கிட்ட செக் அப் பண்ணி பாரு எந்த பிரச்சனையும் இல்லையானு தெரிஞ்சா நல்லதுதான..”
அன்று இரவு ஸ்ரீகாந்த் வரும் வரையுமே விழித்திருந்தவள் இருட்டில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.
“போச்சா இன்னைக்கு என்ன புது பிரச்சனை?”
“ஆமா எனக்கு வேற வேலையே இல்ல புதுசு புதுசா பிரச்சனை பண்றேன்..”
“ஏன் டீ வந்ததும் வராததுமா ஆரம்பிக்குற என்னனு சொல்லு?”
தனக்கும் மாமியாருக்குமான உரையாடலை பற்றி கூறிவிட்டு மீண்டும் அழ ஆரம்பித்திருந்தாள்.
“உங்கம்மா சொல்றத பார்த்தா எனக்கு குழந்தை பெத்துக்க தகுதியில்லனு சொல்றாங்களா?”
“ஐயோ ஷப்பா ஏன் டீ ரொம்ப போட்டு யோசிக்குற அவங்க எல்லாம் ஊர்காரங்க அப்படிதான் பேசுவாங்க..நீ ஏன் மண்டையில் ஏத்திக்குற..விடு நாளைக்கு நா பேசும் போது அவங்ககிட்ட சொல்லி புரிய வைக்குறேன்.
மறுநாள் மது வேலைக்கு கிளம்பிய பின் வழக்கம்போல் தாமதமாய் எழுந்தவன் குளித்துவிட்டு வந்து காலை உணவை உண்ண ஆரம்பிக்க அவன் தாய் அழைத்தார்.
“ம்ம் சொல்லு மா..”
“என்னடா குரலே சரியில்ல..உடம்பு சரியில்லையா?”
“ம் அதெல்லாம் நல்லா தான் இருக்கு..நீ நேத்து மதுகிட்ட என்ன சொன்ன??”
“என்ன டா கேள்வியெல்லாம் பயங்கரமா இருக்கு?”
“சும்மா என்னை எதாவது சொல்லாதம்மா..நீ கேட்டது தப்பு தான அவ உக்காந்து அழறா..எங்களுக்கான நேரமே இன்னும் ஒழுங்கா கிடைக்கல அதுக்குள்ள குழந்தை குட்டினு பெத்துகிட்டு லைஃப்ல கொஞ்சம் கூட என்ஜாய் பண்ண முடியாது?”
“டேய் இதெல்லாம் ஒரு காரணமா குழந்தையை பெத்து கையில கொடுத்தா நா வளர்க்க போறேன்.அதுக்கப்பறம் நீங்க ஊரை சுத்துங்க இல்ல உலகத்தை சுத்துங்க.யாரு வேணாம்னு சொல்றது?”
“அதான நீ சொன்னதையே தான் சொல்லுவ என்னவோ போங்க மனுஷனுக்கு நிம்மதியே இல்லாம போச்சு..இன்னொரு தடவை அவகிட்ட எதையாவது கேட்டு வைக்காத..”,என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டு வேலைக்குத் தயாரானான்.
இப்படி நாளொரு பஞ்சாயத்தும் பொழுதொரு சண்டையுமாய் வாழ்க்கை உச்சகட்ட கடுப்பில் சென்றது ஸ்ரீகாந்திற்கு.இத்தனை மைல் தூரத்தில் இருந்தே இந்த நிலைமை எனில் ஒரே வீட்டில் இருந்தால் அவ்வளவுதான் என்று நொந்துகொள்ளாமல் இருக்க முடியவில்லை.
இதற்கிடையில் தலை தீபாவளி என பிறந்த வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று மரகதமும் வைரவனும் தீபாவளி சீர் கொண்டு வந்து கொடுத்து இருவரையும் அழைத்துச் சென்றனர்.
அன்று இரவு போனில் தன் மாமியாரிடம் அதைக் கூற அவரோ,
“எல்லாம் சரிதான் உன் அம்மா வீடு வெளியூர்ல இருந்தா பரவால்ல உள்ளூர் தான நினைச்சா போய் பாத்துக்கலாம்.ஆனா இங்க தான் வர முடியாது அதுவும் போக தீபாவளிக்கு ஸ்ரீகாந்த் இல்லாம வீடே வெறிச்சுனு இருக்கும்..”
“சரி அத்தை நா அவரை உங்ககிட்ட பேச சொல்றேன்”,என்றவள் போனை வைத்துவிட்டு ஸ்ரீகாந்திற்கு அழைத்தாள்.
“சொல்லு மது..”
“என்னத்த சொல்றது என்னை கடுப்பேத்துறது தான் உங்கம்மாவோட வேலையா..தீபாவளிக்கு நாம எங்க வீட்டுக்கு போறோம் அவ்ளோதான் சொல்லிட்டேன்..”
“ஏய் என்ன டீ விஷத்தையே சொல்லாம தைய தக்கானு குதிச்சுட்டு இருக்க..என்ன பஞ்சாயத்து இப்போ?”
விஷயத்தை அவனிடம் கூறிவிட்டு அவள் அமைதிகாக்க,”கடவுளே என்ன தான் பிரச்சனை யாரை சரி பண்ணணும்னு எனக்கு ஒண்ணும் புரில.அவங்க எதுக்கு சம்மந்தமே இல்லாம இப்படி பேசுறாங்க?”
“வேற என்ன நா எங்கம்மாவோட போய் கொஞ்சி குலாவிட கூடாதுங்கிற வயித்தெறிச்சல் தான்..”
“சரி நீ ஆரம்பிக்காத நா பேசிக்குறேன்..நைட் வந்துட்டு நாம இதைபத்தி பேசுவோம்..”,என்றவன் அழைப்பை துண்டித்தான்.
மதுவிற்கோ கோவம் தலைக்கேறியது.இவர்களுக்கு தேவையானால் சாஸ்திரம் சம்பிரதாயமெல்லாம் ரொம்ப ரொம்ப முக்கியம்.அதே இது நா எங்கம்மா வீட்டுக்கு போறதுனா வலிக்குதா..மாமியார் ஆனாலே ரெண்டு கொம்பு முளைச்சுருமா என்ன..
அதன் பிறகு இந்த விஷயத்திற்காக ஒரு வாக்குவாதம் முடிந்து மது தன் வீட்டிற்கு தீபாவளிக்குச் செல்ல முடிவானது.ஆனால் இதில் நிஜமாகவே ஸ்ரீகாந்த் நிலைமை தான் பாவமாக இருந்தது.இரண்டு பக்கமும் மாட்டிக் கொண்டு முழித்தான்.அதற்காகவாவது அமைதியாய் இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் மதுவால் சில நேரங்களில் முடியாமல் போனது.
இருவரும் தீபாவளிக்கு முந்தைய நாள் இரவே மதுவின் வீட்டிற்கு வந்துவிட மறுநாள் அதிகாலையிலேயே கங்கா ஸ்நானம் முடித்து புது உடை உடுத்தி ஸ்ரீகாந்தோடு சேர்ந்து வெடி வெடித்துக் கொண்டிருந்தாள்.
தன் மகனின் அலைப்பேசிக்கு அழைத்தவர் இருவருக்குமாய் வாழ்த்து கூற மதுவும் பதிலுக்கு வாழ்த்துரைத்தாள்.
“என் மருமக குரலே இன்னைக்கு தான் இத்தனை சந்தோஷமா இருக்கு..அம்மா வீட்டுல இருக்குற பூரிப்பா..”,என வாழைப்பழத்தில் ஊசி இறக்கினாற் போன்று நக்கல் அடித்துவிட்டு போனை வைத்தார்.
இருந்த அத்தனை உற்சாகமும் வடிந்து போனவளாய் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சமையலறைக்குள் சென்று மரகதத்தோடு அமர்ந்து கொண்டாள்.
“என்ன டீ இப்போதான சந்தோஷமா வெடி வெடிக்க போன அதுகுள்ள ஏன் முகம் இப்படி ஆயிடுச்சு?”
“ம்ம் சந்தோஷமா இருந்தாதான் சிலருக்குப் பிடிக்காதே..”
“என்ன டீ பெரிய மனுஷி மாதிரி பூடகமா எல்லாம் பேசுற என்ன விஷயம்?”
“நீ வேற கடுப்பேத்தாத மா..என் மாமியாருக்கும் எனக்கும் செட்டே ஆக மாட்டேங்குது.எதாவது சொல்லிட்டே இருக்காங்க.ஒண்ணுமில்ல தீபாவளிக்கு இங்க வர்றதுக்கு கூட ஒரு ஆர்க்யூமெண்ட் போச்சு..
பாவம் மா ஸ்ரீகா நடுவுல மாட்டிகிட்டு முழிக்குறாரு.அவரை நினைச்சாலே கஷ்டமா இருக்கும் அவருக்காகவே பல நேரத்துல வாயை மூடிகிட்டு பொறுத்துப் போறேன்.ஆனா அதையும் மீறி என்னை பொறுமையிழக்க வச்சுறாங்க..”
“மது நீயே பிரச்சனையும் சொல்ற அதனால யாரு பாதிக்கப்படுறானும் சொல்ற..அப்பறம் எதுக்கு இத்தனை குழப்பம் உனக்கு..சரி நா எனக்குத் தெரிஞ்ச ஒருத்தங்களை பத்தி சொல்றேன்.அதை கேட்டுட்டு அதை விட உன் கஷ்டம் பெருசா சின்னதானு சொல்லு.”
“எங்க ஊர்ல ஒரு பாட்டி இருந்தாங்க அவங்களுக்கு மூணு பசங்க மூணு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சாங்க ரெண்டு பேரு வேலை விஷயமா வெளியூர் போய்ட்டதால தன்னோட இருக்குற பையன்னா அவங்களுக்கு ஒட்டுதல் அதிகம்.
அப்படியிருக்க அவங்களுக்கு கல்யாணம் ஆனப்பறம் அந்த பொண்ணை போட்டு ஒரு வழி ஆக்கினாங்க.பையன் வேலைக்கு போனப்பறம் அத்தனை வேலையையும் அந்த பொண்ணை தான் செய்ய சொல்லுவாங்க. சரியா சாப்பாடு போட மாட்டாங்க. இராத்திரி எவ்ளோ லேட்டா அவங்க ரூம்க்கு அனுப்ப முடியுமோ அவ்ளோ வேலை கொடுப்பாங்க..அவளுக்குனு கையில் ஒரு ரூபா கூட இருக்காது.புருஷன் வாங்குற மொத்த சம்பளத்தையும் அப்படியே அம்மா கைல கொடுத்துருவாரு.
அவருக்கே தேவைனா கூட அவங்க அம்மா கொடுத்தாதான் உண்டு.அந்தளவுக்கு அவங்க ராஜ்ஜியம் தான் வீடுக்கே.அப்படி நிலைமைல அவங்க மருமகளுக்கு எதிரா பண்ற இதெல்லாம் அவங்க பையனுக்குத் தெரியாம தான்.அவனுக்குத் தெரிஞ்சா எங்க தனிக்குடித்தனம் போய்ருவானோனு பயம்.
அதே நேரம் அந்த மருமகளும் எதையும் புருஷன்கிட்ட சொல்ல மாட்டாங்க.யாரும் எதுவும் சொல்லனாலும் அந்த பையனுக்கு ஓரளவுக்கு வீட்டு நிலைமை தெரிஞ்சுதான் இருந்தது.இருந்தாலும் அம்மாவை எதிர்த்து பேச பயம் தயக்கம்.
ஆக மொத்தத்துல அவங்க ரெண்டு பேர் வாழ்க்கைக்குள்ளேயும் மொத்தமா இருந்தது அந்த பொண்ணோட மாமியார் தான்.சரி இதை பத்தி நீ என்ன நினைக்குற சொல்லு?”
“இதுல என்னத்த சொல்றது..சுத்த சேடிஸமா இருக்கு.இப்படி என்ன பண்ணாலும் வாயை மூடிட்டு இருப்பாங்களா.அந்த ஆளுக்காவது அறிவு வேணாம் அப்படி அம்மாகிட்ட தப்புனு எதிர்த்து பேச கூட தைரியமில்லாதவங்க எல்லாம் ஏன் கல்யாணம் பண்ணிக்குறாங்க.நானா இருந்தா அந்த மாமியாரை ஒரு கை பார்த்துருப்பேன்.”
“ம்ம் சரி இந்த கதையும் உன் கதையும் ஒண்ணா இருக்கா?”
“ச்ச இது கொடுமைகார மாமியார் கதை மா..என் மாமியார் அப்படியெல்லாம் இல்ல.கொஞ்சம் நச்சு அவ்ளோ தான்.”
“அதை தான் நானும் சொல்றேன்.நா சொன்ன கதை யாரோ ஒருத்தருக்கு நடந்த கதை இல்ல.எண்பது தொண்ணூறுகள் வரை பாதிக்கு மேல மாமியார் இப்படிதான் இருந்தாங்க.மருமகளால தன் புருஷன்கிட்ட மனசுவிட்டு பேசகூட முடியாது.அப்போ அதெல்லாம் சாதாரணம் கூட.
ஆனா இந்த காலத்துல அத்தனை மோசமா யாரும் இல்லனு தான் சொல்லுவேன்.மே பி கிராமங்கள்ல இதெல்லாம் நடக்கலாம்.ஆனா உங்களை மாதிரி படிச்சு வேலைக்கு போற பொண்ணுங்க எல்லாம் ஒண்ணு தனிக் குடித்தனம் இல்ல ஃபாரின்ல செட்டில் ஆய்டுறீங்க.
சொந்தகாரங்களை பார்க்க போற மாதிரி தான் மாமியார் மாமனாரையே பாக்க போறீங்க.அப்படியிருக்க எதோ ஒரு வார்த்தை சொல் கூட பொறுத்துக்க முடிலனா எப்படி மது?
அதுக்காக கொடுமைபடுத்தினாலும் பொறுத்து போக சொல்லல.உன் மாமியாரை பொறுத்தவரை நீயே சொல்ற அவங்களுக்கு இருக்குறது தன் பையனை எங்க நீ பிரிச்சுருவியோங்கிற ஒரு சின்ன பயம்.
அதை அப்பப்போ அவங்க பேச்சு செயல்ல காட்டிறாங்க..அதுக்காக ரொம்ப போட்டு நீ மைண்டை ப்ரஷர் பண்ணிக்காத..மாப்பிள்ளையோட சண்டை போட்டு அவரையும் கஷ்டபடுத்தாத..உங்களுக்கான நேரமே கம்மி அதுலயும் இப்படி முகத்தை தூக்கி வச்சுகிட்டு சண்டை போட்டுகிட்டு நல்லாவா இருக்கு.
மாப்பிள்ளையும் தங்கமானவரு அவருக்காக நீ கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ மது.அவங்க என்ன சொன்னாலும் அதை பெரிய விஷயமாக்கி மாப்பிள்ளை கிட்ட கொண்டு போய் பிரச்சனை க்ரியேட் பண்ணாத.
இது பொதுவா கல்யாணம் ஆன புதுசுல எல்லாருக்கும் வர்ற பிரச்சனைதான் அதாவது பொண்டாட்டி நா பெருசா அம்மா நா பெருசானு நடத்துற ஒரு உரிமை போராட்டம்னு வச்சுகோயேன்.
ஆனா ஒரு ஆணுக்கு எப்பவும் அம்மா அம்மா தான் பொண்டாட்டி பொண்டாட்டி தான்.அதை அவங்க புரிஞ்சுக்கவே நாள் தேவைப்படும் அப்படியிருக்க உங்களுக்கு டைம் ஆகாதா..
அம்மா சொல்றதெல்லாம் பொறுமையா யோசிச்சு பாரு உனக்கே தெளிவு கிடைக்கும் மதும்மா.”
“ம்மா நீ எப்பவும் போல இப்பவும் சூப்பர் மாம்னு ப்ரூவ் பண்ணிட்ட நீ சொல்றதெல்லாம் புரிஞ்சும் புரியாத மாதிரி தான் இருக்கு இருந்தாலும் கண்டிப்பா இம்ப்ளிமெண்ட் பண்ண ட்ரை பண்றேன்.தேங்க் யூ சோ மச் மா.”,என்றவள் அன்னையை குழந்தையாய் கட்டிக் கொண்டாள்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
1 comment
Super💕