பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்

ஏதின்மை கோடி உறும்

மு.வ விளக்க உரை: அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பை விட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும்.

எக்ஸ்க்யூஸ் மீ?”, என்றவளின் கோபம் மேகனை பாதித்ததாய் தெரியவில்லை.

“நான் கேட்டது புரியலையா?”

“புரிஞ்சுது. அதனால தான் இந்த ரியாக்ஷன்.”

“அப்போ பதில்?”

“அதைக் கேட்க நீங்க யாரு?”, என்ற விடியலின் கேள்வியில் மேகனின் இதழோரம் சிறிய புன்னகை.

“யாருமில்லை.”

“அப்படின்னா?”

“தெரிஞ்சுக்கணும்னு தோணுச்சு.”

“என்னோட தனிப்பட்ட வாழ்க்கைல ஆர்வம் காட்டுற அளவுக்கு நம்ம ரெண்டு பேருக்கும் நடுவில் எதுவும்  இல்லையே.”

“இதுவரை இல்ல.”

அவன் கூறிய அந்த வார்த்தைகளில் விடியலின் கோபம் ஒரு நொடி தடுமாறியது. மேகன் எழுந்து அவளருகில் வந்திருந்தான்.

“ரிலாக்ஸ் விடியல் உன்கிட்ட விவரம் கேட்கணும்னு தான் கேட்டேன். இன்ட்ராகேட் பண்ணல.”

“ஆனா உங்க கேள்வி அப்படி இல்ல.”

“சரி. அடுத்த தடவை உனக்கு ஏத்த மாதிரி கேக்குறேன்.”, என்றதில் அவள் அவனை முறைத்தாள்.

“அடுத்த தடவை சந்திப்போம்னு நீங்க  எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க?”, மேகனின் முகத்தில் மீண்டுமாய் ஒருவித புன்னகை.

“பிகாஸ்… நீ இப்போ போகணும்னு நினைச்சாலும், உனக்குள்ளே இன்னும் ஒரு கேள்வி இருக்கு.”

“என்ன?”

“நான் ஏன் உன்னை இங்கே வரச் சொன்னேன்னு நீ கேட்கவே இல்லையே.”, என்றதில் விடியல் அமைதியாக அவனைப் பார்த்தாள்.

“அதுக்கான பதில் உனக்கு இப்போ வேண்டாம்னா… அடுத்த தடவை சொல்றேன்.”

“இங்கே பாருங்க மேகன். உங்க இன்டென்ஷன் என்ன?”, என்றவள் அவனை நேர்பார்வை பார்த்திருந்தாள்.

“இதுவரை தப்பான எந்த நோக்கமும் இல்ல நிச்சயமா..”

“க்ரேட்.. ஏற்கனவே நாம பார்த்துருக்கோம் உங்களை எனக்குத் தெரியும் இது மட்டும் தான் இப்போ நான் இங்கே வந்ததுக்கு காரணம்.

மத்தபடி உங்க மேலேயோ உங்க ஸ்டேட்டஸ் மேலேயோ எனக்கு ஒரு துளி கூட இன்ட்ரெஸ்ட் இல்ல.

என்னை அந்த மாதிரி நீங்க நினைச்சுருந்தா ஐ அம் சாரி நான் உங்களுக்கு செட் ஆக மாட்டேன்.”

“…”

“வரேன். தேங்க்ஸ் ஃபார் தி காபி..”, என்றவள் கதவில் கை வைக்க மேகனின் குரலில் மீண்டுமாய் கோபத்தோடு அவனை ஏறிட்டாள்.

“சோ விஜய் உங்க பேமிலி ப்ரெண்ட் அதைத் தவிர எதுவும் இல்ல. அப்படி தான?”

“உங்ககிட்ட இதை எதிர்பார்க்கலை மேகன்.”, என்றவள் அங்கிருந்து வெளியேறியிருக்க மேகனின் முகத்தின் புன்னகை நிலைத்திருந்தது.

வெளியில் வந்தவளுக்கு மனம் பொறுக்கவே இல்லை. எப்படி தன்னிடம் அந்த மாதிரி கேட்கலாம் என்று நினைக்க நினைக்க இன்னுமாய் கோபம் ஏறியது.

விஜய்க்கு அழைத்து காரை மாலின் வாசலுக்குக் கொண்டு வரச் சொல்லி விட்டு நின்றிருந்தவளின் கைப்பேசி சத்தத்தில் அதைப் பார்க்க மேகனிடமிருந்து தான் குறுஞ்செய்தி வந்திருந்தது.

“என்னோட கடைசி கேள்விக்கு பதில் எஸ் தான்னு எனக்குத் தெரியும்.

பட் உண்மையாவே எஸ்ஸா இருந்தா நாளைக்கு மார்னிங் பத்து மணிக்கு ஹோட்டல் பார்க்ல நாம மீட் பண்ணலாம்.”, என்றதைப் படித்தவளுக்கு மனதிற்குள் ஒருவித பயம் சூழ்ந்தது.

ஏதோ யோசனையோடே நின்றிருந்த விடியலின் கவனத்தைக் கலைத்தவனாய் அவளை காரில் ஏறுமாறு கூறினான் விஜய்.

அவன் ஏதோ பேசிக் கொண்டிருக்க விடியலுக்கோ எதுவும் காதில் ஏறவில்லை. தலை வலிப்பதாய் கூறி நேராக வீட்டிற்கே சென்று விட்டிருந்தாள்.

வீட்டிற்கு வந்து நேராய் அறைக்குள் அடைந்து கொண்டவளுக்கு மேகனின் முகம் தான் நினைவில் நின்றது.

என்ன முயற்சி செய்கிறான் என்று யோசித்து யோசித்து உண்மையாகவே தலை வலி வந்திருந்தது.

உண்மையை நிருபிக்க நான் ஏன் போக வேண்டும்? அதெல்லாம் தேவையில்லை என்ன செய்து விடுவான் என்று தனக்குத் தானே ஆறுதல் கூறிக் கொண்டாள்.

மறுநாள் மணி பத்தை நெருங்க நொடிக்கொரு முறை கடிகாரத்தைப் பார்த்த வண்ணம் தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தாள் விடியல்.

கடிகாரம் பத்தைத் தொட்டிருந்த போது அவளது கைப்பேசி ஒலியெழுப்ப தூக்கி வாரி போட அவசரமாய் அதை கையில் எடுத்திருந்தாள். அவன் தான் அழைத்திருந்தான்.

அழைப்பை ஏற்காமல் கைப்பேசியையே அவள் பார்த்திருக்க அழைப்பு நின்று மீண்டுமாய் ஒலித்தது.

தான் எடுக்காத வரை விட மாட்டான் என்று உணர்ந்து அழைப்பை ஏற்று காதில் வைத்தாள் விடியல்.

“மேலே கான்ப்ரென்ஸ் ரூமுக்கு வா.”, என்றதோடு அழைப்பைத் துண்டித்திருந்தான்.

ஏனோ அந்த குரலின் ஆளுமை அவளை பணிந்து செல்லவே வைத்தது.

இரு கைகளையும் தலையில் வைத்து அமர்ந்து விட்டிருந்தாள்.

என்ன நடக்கப் போகிறது எதற்காக இவன் தன்னை சுற்றி வருகிறான் என்று பலவிதமான எண்ணங்கள் அவளது பயத்தை அதிகரித்திருந்தன.

அதற்குள் அடுத்த அழைப்பு அவளை மேலுமாய் பதட்டமடைய வைத்திருக்க வேகமாய் எழுந்து வெளியே வந்தவள் மின்தூக்கியில் பன்னிரெண்டாவது தளத்தின் எண்ணை அழுத்தி விட்டு காத்திருந்தாள்.

மொத்த தளமும் காலியாய் இருக்க பார்த்திபன் இவளுக்காக கதவைத் திறந்து விட தன்னைப் பற்றி அவன் என்ன நினைப்பான் என்ற எண்ணம் எழுந்ததில் இருந்த பயம் கரைந்து கோபம் வந்திருந்தது.

“உங்களுக்கு என்ன பிரச்சனை மேகன்?”, என்று வந்தவளுக்கு முதுகு காட்டி நின்றிருந்தவன் பொறுமையாய் திரும்பினான்.

“என் பேச்சுக்கு மரியாதை கொடுக்கலைனால் எனக்கு கோவம் வரும் விடியல்”, என்றவனின் குரலும் பார்வையும் முதுகுத் தண்டை சில்லிட வைத்தது விடியலுக்கு.

“நீ வரமாட்டனு எனக்குத் தெரியும். அதனால தான் நான் இங்கே வந்ததே ஆனால் அதை ஏத்துக்க முடியல. ப்ளடி மேன் ஈகோ..”, என்றவன் உதடு வளைத்தான்.

“!!!”

“லீவ் தட்.. உட்காரு..”, என்றவன் நாற்காலியைக் காட்ட எதுவும் பேசாமல் அவள் அமர அவளருகிலேயே மேசை மேல் லேசாய் அமர்ந்த படி அவளை ஏறிட்டான் மேகன்.

“நேத்து நான் அப்படி கேட்டுருக்க கூடாது. ஐ அம் சாரி..”, என்றதில் வியப்பில் விழி விரித்திருந்தாள் பெண்ணவள்.

இப்போது தான் ஈகோவைப் பற்றி பேசினான் அடுத்த நொடி தன்னிடம் மன்னிப்பு கேட்கிறான் என்ன நடக்கிறது என்பதாய் அவனைப் பார்த்திருந்தாள்.

“உன்கிட்ட தான் பேசுறேன்.”

“ஹாங்.. அது பரவால்ல.. விஜய் எங்களோட ஃபேமிலி ப்ரெண்ட் மட்டும் தான்.”, என்றதில் மேகனின் கண்கள் லேசாய் ஒளிர விடியலுக்கோ மனதில் தான் ஏன் இதைக் கூறினோம் என்று யோசித்திருந்தாள்.

“ஏன் ரொம்ப டென்ஷனா இருக்க? முதல் தடவை பார்த்த விடியல் இப்படி இல்லையே?”

“நீ பண்றதுக்கெல்லாம் பயம் பிபீ எல்லாம் தன்னால ஏறுது டா பாவி..”, என்றவள் மனதினுள் பொறுமினாள்.

“உங்களுக்கு என்ன வேணும் மேகன்? எதுக்காக இதெல்லாம்?”

“எனக்கும் தெரியலை. பட்..”, என்றவன் அப்படியே நிறுத்த விடியலின் மனதில் இரயில் வண்டி ஓடும் சத்தம்.

“ஐ திங்க் ஐ லைக் யூ..”

“!!!”

“இன்னும் முடிவு பண்ணல. அதுக்கு முன்னாடி உன்கிட்ட தெரிஞ்சுக்க வேண்டிய ஒரே விஷயம் இது மட்டும் தான். அதனால தான் கேட்டு கன்பார்ம் பண்ணிக்கிட்டேன்.”

“!!!”

“ஏன் இப்படி முழிக்குற? இந்த கண்ணு என்னை என்னவோ பண்ணுது..”, என்றதில் பட்டென விழி தாழ்த்தியிருந்தாள் விடியல்.

“உன்னோட இந்த டென்ஷன் தான் என்னை இன்னும் உன் பக்கம் வர வைக்குது..”

“மேகன் நான்.. நான் கிளம்புறேன்..”

“ஃபைன்.. சோ இனி கால் ஆர் மெசெஜ்க்கு பதில் வரும் ரைட்?”

“இது.. இதெல்லாம் எனக்கு ஒத்து வராது..”

“ஏன்?”, என்ற அவனது அலட்சிய கேள்வியில் சற்றே தன்னை நிதானப்படுத்திக் கொண்டவளாய்,

“இன்னைக்கு தேதிக்கு டேட்டிங், பென்ஞ்சிங், Situationship எல்லாம் சர்வ சாதாரணமா இருக்கலாம். பட் எனக்கு இதெல்லாம்..”

“பழகி பார்க்குறது பிடிச்சா கன்ட்டினியூ பண்றது இதெல்லாம் எனக்கு செட் ஆகாது. ஜஸ்ட் ஒன் ஸ்பார்க் இவங்க தான்னு நம்ம மனசுக்கு தோணணும்.

அந்த ஒரு நம்பிக்கையில் வாழ்க்கையை அவங்களோட தொடங்கணும். சோ ப்ளீஸ்.. என்னை இதுக்கு மேல தொந்தரவு பண்ணாதீங்க..”

“அந்த ஸ்பார்க் உனக்கு என் கண்ணைப் பார்த்த அடுத்த செகெண்டே வரல?”, என்றவனின் பார்வை அவளைத் துளைத்தெடுத்தது.

“அது.. அதெல்லாம்..”

“இன்ஃபேக்ட் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணதே அந்த தடுமாற்றம் தான். அண்ட் ஐ லவ் இட்..”, என்றதில் பெரும் பதட்டம் விடியலிடத்தில்.

“யூ ஆர் டிஃபரெண்ட் விடியல். உன்னை மாதிரி யாரையும் நான் இதுவரை மீட் பண்ணதில்ல. ஐ திங்க் திஸ் வில் வொர்க்..”

“ப்ளீஸ் மேகன்.. ஐ காண்ட் ஹேண்டில் திஸ்.. நான் கிளம்புறேன்.”

“எல்லாரோட மைண்டையும் படிக்கிறவளுக்கு என் மைண்ட்  ஏன் புரியல?”, என்றதற்கு விடியல் அமைதியாகவே இருக்க மேசையிலிருந்து எழுந்து கொண்டவனாய்,

“பைன். நீ கிளம்பு.”, என்றிட எதுவும் பேசாமல் வேகமாய் அங்கிருந்து வெளியேறி இருந்தாள்.

மனம் சமன்படவே மறுத்தது. ஒருவித நடுக்கம் அவளது கரங்களில். இதெல்லாம் எங்கு போய் முடியப் போகிறது என்று நினைத்து தவித்தாள்.

எப்படியோ கீழ் தளத்திற்கு வந்தவள் தந்தை பார்க்கும் முன் தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

அவளை வெகு நேரமாய் காணாமல் தேடிய விஜய் அவள் வேகமாய் அறைக்குள் நுழைந்ததைப் பார்த்து விட்டு கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தான்.

“விடியல் நீங்க ஓகே தான?!”

“ஆங்!! யா பைன் விஜி..”, என்றவளின் முகம் தெளிவில்லாமல் இருக்க தயக்கம் இருந்தாலும் மீண்டுமாய்,

“விடியல் எதுவும் பிரச்சனையா?”

“இல்ல.. இல்ல விஜி.. ஐ அம் ஓகே.”, என்றவள் பெயருக்கு புன்னகைத்து வைக்க அதற்கு மேல் வற்புறுத்த முடியாமல் கிளம்பியிருந்தான்.

மேகன் பேசிய அனைத்தையும் விட அவன் தனது தடுமாற்றத்தை உணர்ந்து கொண்டதாய் கூறியது தான் அவளை உள்ளுக்குள் ஏதோ செய்தது.

அன்றைய தினம் அவனின் கண்களைச் சந்திக்க முடியாமல் தடுமாறியது நிஜம். ஆனால் அடுத்த நொடியே அதை மறைத்து சாதாரணமாய் இருப்பதாய் காட்டிக் கொண்டாள்.

அப்படியிருந்தும் அவன் அவளைக் கண்டு கொண்டதை நினைக்க மெலிதான புன்னகை எட்டிப் பார்த்தது.

அவன் ஏதோ ஒரு ஆர்வத்தில் இதெல்லாம் செய்கிறான் நாட்போக்கில் சரியாகி விடுவான் என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டவளுக்குத் தெரியவில்லை அவன் எடுக்கும் முடிவில் நிலையாய் நிற்பவன் என்று.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

6 comments

MalarMurugan September 6, 2026 - 8:08 am

விடியல் 🤗🤗🤗😘😘😘
ஆனாலும் மேக் நீ இப்படி கேட்டுருக்க வேண்டாம் 😏😏

Kiruthika M September 6, 2026 - 8:18 am

Adeii Meg ena da imbutu athiradi ah yerangita

Kavi Natarajan September 6, 2026 - 8:19 am

💞💞💞💞💞💞

EswariSkumar September 6, 2026 - 10:20 am

விடாக்கண்டனா இருப்பான் போல 😛😛😛😛

Mrs Beena loganathan September 6, 2026 - 12:59 pm

ஒரு நொடி பார்வையில்
ஒருமுறை தடுமாறினேன்
ஒவ்வொருநாளும் நான்
ஒரே மாதிரி தடுமாறுகிறேன்…..

உன் பார்வை என்னை
உள்ளுக்குள் வதைக்கிறது
உன்னுடன் ஒரு வார்த்தை
உள்ளுக்குள் தித்திக்கிறது….

srichitra September 6, 2026 - 1:45 pm

Nice

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode